குறள் 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.).
மணக்குடவர் உரை
தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.
மு.வரதராசனார் உரை
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
முழுப்பொருள்
ஒருவர் தவத்தில் இருக்கும் பொழுது (தவத்தின் துவக்கத்தில் எடுத்த சங்கல்பத்தில் இருந்து விலகி) மறைவாக தவத்திற்கு ஒவ்வாத / தீய / பயனற்ற செயல்களை செய்வது தவத்திற்கு எதிரானது ஆகும். அப்படி செய்வோர் தவத்தின் பலனை அடையமாட்டார்கள். இது ஒரு வேடன் புதரில் மறைந்து பறவையை பிடிப்பதை போல ஆகும். அதாவது வேடன் என்பவன் பறவையை சரியாக குறிவைக்க வேண்டுமென்றால் அவனுக்கு நல்ல காட்சியும் தன்னை சுற்றி இடர்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். முழுக்கவனமும் பறவையின் மீது இருத்தல் வேண்டும். ஆனால் புதருக்குள் சென்றால் பறவையை பற்றிய காட்சியும் தெரியாது புதர் தரும் இடர்களான அரிப்பு வெம்மை பூச்சிக்கடி ஆகியவை கவனத்தை திசை திருப்பும். மனதை ஒருமுக படுத்தமுடியாது. அதனால் பறவையை குறிவைத்துப் பிடிக்கமுடியாது.
அதுப்போல தவத்தில் இருந்து மறைவாக தீய செயல்களையும் பயனற்ற செயல்களையும் செய்தல் தவத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பி தவத்தின் இலக்கை அடையமுடியாதபடி செய்துவிடும்.
ஆதலால் தவத்தில் ஈடுபடும் பொழுது தவத்தை தவிர வேறு எதிலும் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
தவ - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.
மறைந்து - மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.
அல்லவை - தீயவை; பயனின்மை.
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
புதல் - தூறு; ஒருபுல்வகை; மருந்துப்பூண்டு; அரும்பு; புருவம்.
மறைந்து - மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.
வேட்டுவன் - பாலைநிலத்திற்குரியவன்; வேட்டைக்குச்செல்வோன்; குறிஞ்சிநிலத்தலைவன்; குளவி; மகநாள்.
புள் - பறவைப்பொது:வண்டு; கணந்துட்பறவை; பறவைநிமித்தம்; அவிட்டநாள்; கைவளை; மதுபானம்; கிட்டிப்புள்.
சிமிழ்த் - செப்பு; திமில்; cimiẕ VI. v. t. tie, fasten, கட்டு; 2. entrap, catch, பிடி.
அற்று - அதுப்போல ; ஆகும் ; அத்தன்மையது
முழுப்பொருள்
ஒருவர் தவத்தில் இருக்கும் பொழுது (தவத்தின் துவக்கத்தில் எடுத்த சங்கல்பத்தில் இருந்து விலகி) மறைவாக தவத்திற்கு ஒவ்வாத / தீய / பயனற்ற செயல்களை செய்வது தவத்திற்கு எதிரானது ஆகும். அப்படி செய்வோர் தவத்தின் பலனை அடையமாட்டார்கள். இது ஒரு வேடன் புதரில் மறைந்து பறவையை பிடிப்பதை போல ஆகும். அதாவது வேடன் என்பவன் பறவையை சரியாக குறிவைக்க வேண்டுமென்றால் அவனுக்கு நல்ல காட்சியும் தன்னை சுற்றி இடர்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். முழுக்கவனமும் பறவையின் மீது இருத்தல் வேண்டும். ஆனால் புதருக்குள் சென்றால் பறவையை பற்றிய காட்சியும் தெரியாது புதர் தரும் இடர்களான அரிப்பு வெம்மை பூச்சிக்கடி ஆகியவை கவனத்தை திசை திருப்பும். மனதை ஒருமுக படுத்தமுடியாது. அதனால் பறவையை குறிவைத்துப் பிடிக்கமுடியாது.
அதுப்போல தவத்தில் இருந்து மறைவாக தீய செயல்களையும் பயனற்ற செயல்களையும் செய்தல் தவத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பி தவத்தின் இலக்கை அடையமுடியாதபடி செய்துவிடும்.
ஆதலால் தவத்தில் ஈடுபடும் பொழுது தவத்தை தவிர வேறு எதிலும் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
இது துறவறத்தில் தவம் என்றிலை, வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பாக தவமாக எண்ணிச் செய்யும் பெருஞ்செயல்களுக்கு பொருந்தும். பெருஞ்செயல்களை செய்யும் பொழுது அவற்றை தவம் போன்று சலனங்கள் இல்லாமல் மிக கவனமாக (ஒரு razor focusஉடன்) செய்ய வேண்டும். தேவையில்லாத சலனங்களை வைத்துக்கொள்ள கூடாது. உதாரணமாக சினிமா பார்ப்பது, சமையல் செய்வது, ஊர் சுற்றுவது, கோயில்களுக்கு போவது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, அல்மாரியை ஒழுங்கு செய்வது, போனில் பேசிக்கொண்டு இருப்பது. இவை முற்றிலும் தவறு அல்ல. ஆனால் ஓய்வுக்காக ஒரு நாளைக்கு 10-15 நிமிடம் இளைப்பாருவது வேறு. ஆனால் 1-2 மணிநேரம் பார்ப்பது (binge eating, binge watching etc.,) என்பது வேறு. ஒருவன் 95% சதவிகிதம் எடுப்பதற்கும் 98% சதவிகிதம் எடுப்பதற்கும் வித்தியாசம் கவனம் தான்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் GMAT exam-க்கு படிக்கும் பொழுது முதல் தடவை கணிதத்தில் 51இற்கு 48 எடுத்தேன் (அது உலக அளவில் 84 percentile). நான் முதல் தடவை பரிட்சை எழுதிய பொழுது அவ்வளவு கவனமாக எழுதவில்லை. என் செயல்கள் அலைப்பாய்ந்துக்கொண்டு இருந்தது. அதுவே இரண்டாவது முறை நான் எழுதியபொழுது சுமார் 50 நாட்கள் ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்று தொலைக்காட்சி, சினிமா போன்று எவ்வித சலனமும் இன்றி இருந்தேன். என் கவனம் முழுவதும் பரிட்சைக்கு ஆயுத்தமாவதில் தான் இருந்தது. அவ்வாறு தயார் செய்து இரண்டாவது முறை எழுதியதில் நான் 51இற்கு 50 மதிப்பெண்கள் எடுத்தேன் (அது உலக அளவில் 96 percentile). இதற்கு முக்கிய காரணம் கவனம் சிதறாமை.
அதேப்போல் என்னுடைய நண்பரின் அண்ணன் ஒரு பெரிய நரம்பியல் நிபுணர். அவரை சுமார் 2008ஆம் ஆண்டில் சந்தித்தேன் என்று நினைக்கிறேன். அப்பொழுது பேச்சு போன்-இற்கு ஆகும் செலவைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். அவர் சொன்னார் நான் இந்த ஆண்டு ஒரு 3000 ரூபாய்க்கு கட்டணம் செலுத்தினேன். ஆனால் ஒரு 100 ரூபாய்க்கு தான் பேசினேன். அப்படியா? எனக்கெல்லாம் மாதம் 300 ரூபாய்க்கு கட்டணம் செலுத்தினாலும் பத்தாது. தீர்ந்துவிடும் என்று. அவர் சொன்னார், போன் இருப்பதற்காக பேசிக்கொண்டே இருப்பதா? அவ்வளவு பேச வேண்டாம். அவர் சொன்னது எனக்கு அப்பொழுது புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து தான் புரிந்தது. அவர் நேரத்தை கவனமாக சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்தி இருக்கிறார். நண்பர்களுடன் பேசுவது அரட்டை அடிப்பது என்று நேரத்தை விரயம் செய்யவில்லை. அதனால் தான் அவர் தொடர்ந்து மேற்படிப்புகள் படித்து பெரிய ஒரு மருத்துவராக இருந்தார். அந்த excellence-ஐ தன் வாழ்வில் பெற்றதற்கு காரணம் எவ்வித கவனச் சிதறலும் இல்லாமல் தன் தொழிலையும் படிப்பையும் தவம் போல் செய்தார் அவர்.
சரி, அதெப்படி கவனம் சிதறாமல் இருப்பது? திருவள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா?
சரி, அதெப்படி கவனம் சிதறாமல் இருப்பது? திருவள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா?
சொல்லியிருக்கிறார். ”குறள் 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா”. உனது ஆசைகளும் சலனங்களும் உன்னை வஞ்சிக்கும் என்பதை அறிக. ”குறள் 34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற”. அவ்வாசைகளும் சலனங்களும் வெறும் சத்தங்கள் என்று அறிக. அவற்றிக்கு பொருள் இல்லை. ”குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” அச்சலனங்களும் ஆசைகளும் வேண்டாம் வேண்டாம் என்று அவற்றை துறந்தால் உங்களுக்கு இன்பமே என்று உணர்க. இவ்வாறு செய்தால் தவத்தை சிறப்பாய் செய்யலாம்.
சரி, (தவம் அல்லவற்றை, அதாவது) இச்சைகளை எப்படி அழிப்பது?
மேற்சொன்ன மூன்று குறள்களுமே உதவும். ஆனால் இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ”ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்” பற்றி அறிந்துக்கொள்க. எழுத்தாளர் ஜெயமோகனின் ”ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்” என்ற கட்டுரையில் இருந்து அப்புராணம் பற்றிய சிறு குறிப்பு இங்கே
ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம்:
அந்த அசுரனின் ஒவ்வொரு துளி குருதியும் ஒரு தனி ரத்த பீஜாசுரனாக முளைக்கும். அவனிடம் அம்பிகை போர்புரிய புகுந்தபோது அவள் ஆயுதத்தால் அவன் தாக்கப்பட்டபோதெல்லாம் பலவாக வளர்ந்தான். ஆகவே அம்பிகை இரண்டாக பிரிந்தாள். ஒரு அம்பிகை ரத்த தாகம் மிக்க ஒரு பூதமாக ஆனாள். அவள் இன்னொரு தெய்வீக அம்பிகை விட்ட அம்புகளால் ரத்த பீஜாசுரன் கொட்டிய குருதியை தன் நாவால் நக்கிக் குடித்தாள். அசுரன் அழிந்தான்.
நம் தாய்தெய்வ உருவகத்தில் இருந்து அம்பிகை என்ற பெருந்தெய்வம் உருவாகி வந்தது அதன் வரலாற்றுப்பின்னணி. ஆனால் இக்கதை ஆழமான ஒரு தத்துவக் குறியீடு. தியான மரபில் மிக முக்கியமானது. அடிப்படை இச்சைகளுடன் நேருக்குநேராக நின்று போர் புரிய முடியாது என்று சொல்கிறது இது. போர்புரியும்தோறும் அது பெருகும். ஆகவே நம் போதமே இரண்டாக பிரியவேண்டியிருக்கிறது, அம்பிகையாகவும் பூதமாகவும். தியானம் பழகியவார்களுக்கு மேலும் புரியும்.
இப்படித்தான் நாம் புராணங்களைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் புராணங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நமக்கு பௌராணிக மரபு அழிந்தது. புராணத்தை தத்துவத்துடன் இணைத்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் பெரும் புராணிக சொற்பொழிவாளர்கள் இல்லாமல் ஆனார்கள்.
விளைவாக புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது. இன்று எந்தக்கோயிலில் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர் அவருக்கு தோன்றிய ஓர் அற்புதக் கதையை சொல்வார். பல கதைகள் மக்குத்தனமாகவே இருக்கும்.
ஒப்புமை
”தவம்மறைந் தல்ல செய்வார்” (பெரிய.திருஞான 697)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.).
மணக்குடவர் உரை
தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.
மு.வரதராசனார் உரை
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தியானத்துக்கு உவமை
தியானத்துக்கு முண்டக உபநிடத்திலே ஒரு சிறந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. ‘தியானம் செயபவன் வில்லாளி. குருவிடத்திலே அடைந்த வேதாந்த ஞானமேவில். தியானம் செய்பவனுடைய ஆத்மாவே அம்பு. அம்பாகிய ஆத்மாவை - அதாவது, தன் உள்ளத்தை வில்லில் வைத்து நாணை இழுக்க வேண்டும். நாணை இழுப்பதென்றால் ஏகாக்கிரசித்தத்துடன் தான் அடைந்த ஞானத்தை உபயோகித்துத் தியானிப்பது. நாணை நன்றாக இழுத்துக் குறிபார்க்க வேண்டும். பரமாத்பாவே குறியாகும். நல்ல வில்லாளி வில்லை வளைக்கும் போது குறியும் அம்பும் ஒரு நேரில் அமையச் செய்கிறான். அந்த நிலையில் அம்பு குறியில் மறைந்து போகிறடு. பரம்பொருளைத் தியானம் செய்பவன் அவ்வாறே தன் ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றாகவே காண வேண்டும். தியானம் செய்யும் காலத்தில் பரமாத்மாவில் மன் ஆத்மா முற்றிலும் அத்துவிதீயமாகப் போகல் வேண்டும்.
English Meaning - As I taught a kid - Rajesh
While you are doing a penance (work) if you are discreetly or directly indulging in non-penance actions then it will not yield you any result. Because, it is similar to a hunter trying to aim a bird by hiding inside a hay. Hitting a bird needs skill, focus, complete view and also no distractions. Haywires distracts a person and doesn't give complete view. Similarly when doing a penance (work), discreetly or directly indulging in non-penance actions will distract. For e.g., the difference between a person getting 99% and 95% (or 80%) lies in these small small things.
Questions that I ask to the kid
What if I do discreetly or directly indulge in non-penance things when I do a penance work? How would you relate to?
Can I do non-penance stuffs when I am in penance? If not why?
What does a hunter hiding inside a hay and aiming a bird signify?
No comments:
Post a Comment