Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_110. Show all posts
Showing posts with label Athikaaram_110. Show all posts

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

 

குறள் 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணொடு - கண்ணுடன் 

கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இணை - இசைவு; ஒப்பு இரட்டை உதவி கூந்தல் எல்லை இணைத்தொடை; (வி)சேர்; கூட்டு

நோக்கு - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

ஒக்கின் - ஒக்குதல் - ஒத்திருக்கை; கொப்புளித்தல்; பிற்படவிடல்.

வாய்ச் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

சொற்கள் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.

பயனும் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லை - illai   1. ille இல்லெ 2-3. ille, -(1)le இல்லெ, (-ல்)லெ 1. no (int.) 2. not (neg. v.) 3. isn't it? (with rising intonation); you know! (with falling intonation) tag marker  

முழுப்பொருள்
காதலர் ஒருவர் கண்ணின் பார்வைக்கு ஏற்றவாரு மற்றொருவரின் (அப்பார்வைக்கான) இசைவுக் கொண்ட கண் நோக்க ஒத்திருந்தால் அவர்கள் கண்களின் மூலம் பேச துவங்கிவிட்டார்கள் என்று அர்த்தம். அவர்களின் அகம் கண்களின் மூலமாக பேசுகிறது. அதன் பிறகு அவர்கள் வாய் மூலம் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன? ஏனெனில் அவர்கள் வாய் சொற்களால் பேசி ஒரு பயனுமில்லை. 

கம்பன் இதையொட்டியே மிதிலைப்படலத்தில் (25) வரும், “கண்ணொடு கண்ணினை கௌவி ஒன்றை ஒன்றுண்ணவும்” வரிகளைச் சொன்னான் போலும்.

அதனால் தான் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” என்று எழுதினானோ?

”சொல்லும் ஆடுப கண்ணி னாளே” (தொல்.களவு.23.ந.மேற்)
“தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்
தூமொழி இசைகள் கொண்டொன்று நோக்கி” (திருவாய் 9,9,9)

“கூற்றம் போலுங் கொலைக்கண்ணி னாலன்றி
மாற்றம் பேசுகி லாளை” (கம்ப.எழுத்திப் 36)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல. (நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்: மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின்,இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம்.).

மணக்குடவர் உரை
கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின் வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல. இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

சாலமன் பாப்பையா உரை
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

Thirukkural - Management - Public Speaking - Body Language
Though Valluvar wrote this kural 1100, to refer to the body languagae of lovers, the message is applicable to body language of everyone. Establshing eye contact is important for all on all occasions. Lovers communicate through their eyes. When the eyes of lovers connect, the words they speak do not have any meaning,

When eyes with eyes commingle
What do words avail?

A person's eye are so powerful that they communicate a lot. When there is a connection of the eyes, the words spoken by the mouth do not have any value over the connection of the eyes.

In common practice, if we understand the language of eyes, we will get many clues to the thoughts of the other person. Eyes communicate passionately. Look people in the eyes. Practice the art of establishing eye contact with your audience. Your eyes are magnetic. They command attention and convince your listeners.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

 

குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்.

போலப் - ஓர்உவமவுருபு, போன்று

பொதுநோக்கு - சமநோக்கு; எல்லோரையும்ஒப்பநோக்குகை; விருப்புவெறுப்பற்றபார்வை; இயற்கையாகஅமைந்தஅறிவு.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

காதலார் - காதலர் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி

உள- உள்ளது, யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

முழுப்பொருள்
காதல் வயப்பட்ட பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பொழுது அயலாரைப் பார்ப்பது போல் பார்த்துக்கொள்கின்றனர். அத்தகைய பார்வை காதலர் கண்களுக்கு உண்டுப் போல.

இதில் மூன்று உள்ளது.
1. ஒருவர் மற்றொருவரை பார்ப்பதுப் போல் பார்க்கிறார்கள். ஆனால் அது காதலர் கண்களில் உள்ளது என்பதனால் அது எவ்வளவு இயல்பாக இருப்பினும் அது சாதாரணப்பார்வைகளில் இருந்து தனித்து தெரிவதால் அது காதலின் குறிப்பு என்று அவர்களுக்கே தெரிந்துவிடுகிறது. அதனால் மற்றொருவர் அதனை உணர்ந்துக்கொள்கிறார்.

2. ஒருவரை ஒருவர் காதலிப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதனால் அவர்கள் பொதுவாக பார்ப்பதுப்போல் நோக்கினாலும் அது மற்ற பார்வைகளில் இருந்து தனித்து தெரிவதால் இவர்கள் காதலர்கள் என்ற குறிப்பு மற்றவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் காதலர்கள் காதலை வெளிக்காண்பிக்கூடாது என்று நினைத்தாலும் குறிப்புணர முடியும் இச்சமூகத்தால் என்று நாம் உணரலாம். 

3. காதலர்கள் சராரசியாக நடந்துக்கொண்டதால் சமூகத்தால் உணரமுடியவில்லை என்றும் உணரலாம். ஏனெனில் பின்பு மடலேர்தல் எல்லாம் வருகிறது.  உதாரணமாக எனது கல்லூரி காலங்களில் சில காதல் ஜோடிகள் காதலித்தது பல வருடம் கழித்துத்தான் எங்களுக்கு தெரியும். அவர்கள் காதலித்தப்பொழுது எங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கான எவ்வித குறிப்பும் அவர்கள் பொதுவில் வழங்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் எங்கள் உடன் குழுவாக படிப்பார்கள் (group study), பேருந்துகளில் பயணிப்பார்கள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம். இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.

மு.வரதராசனார் உரை
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

 

குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
அசையியல் - acai-y-iyal   n. அசை¹- +.Slender woman; நுடங்கிய இயல்புடைய பெண் அசையியற் குண்டாண்டோ ரேஎர் (குறள், 1098).  

அசையியற்கு - நுடங்கிய இயல்புடைய பெண்ணிற்கு

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

ஆண்டு  - அகவை; அவ்விடம், Year; வருஷம்

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி.

ஏஎர் - அழகு

யான் - தன்மையொருமைப்பெயர்

நோக்க - ஓர்உவமவுருபு.

நோக்க - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

பசை - ஒட்டும்பசை; பிசின்; சாரம்; ஈரம்; பக்தி; அன்பு; பற்று; இரக்கம்; பயன்; செல்வம்; கொழுப்பு; முழவின்மார்ச்சனைப்பண்டம்; உசவு.

பசையினள் - அன்பு உள்ள அவள்

பைய - மெல்ல

நகும் - நகு-தல் - naku-   6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).  


முழுப்பொருள்
மெல்லிய இயல்புடைய அப்பெண்ணிடம் அழகிய ஒன்று இருக்கிறது. எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? தலைவன் நான் அவளைப் பார்க்கும் பொழுது அவள் அன்பினால் மெல்ல உள்ளூர சிரித்துக்கொள்கிறாள். சரி, இதில் என்ன அழகானது என்று எதனை குறிப்புணர்ந்தாய்? நான் அழகிய ஒன்று உள்ளது என்று சொன்னது அவள் மனதில் உள்ள காதலை. அச்சிரிப்பே அதற்கான குறிப்பு.

எனக்கு ரன் படத்தில் வரும் பேருந்து காட்சி தான் நினைவிற்கு வருகிறது.

ரன் திரைப்படத்தில் வரும் பேருந்து காட்சி - மாதவன் பேருந்தில் ஏறியப்பின்பு மீரா ஜாஸ்மீன் மாதவனை பார்த்து சிரிக்கும் காட்சி
ரன் திரைப்படத்தில் வரும் பேருந்து காட்சி - மாதவன் மீரா ஜாஸ்மீன் உடன் உரையாடும் காட்சி

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள் அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.

மு.வரதராசனார் உரை
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

குறள் 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
செறு-தல் - ceṟu-   6 v. tr. 1. To control,as the senses; to subdue, as the passions; அடக்குதல். ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும் (தேவா.84, 9). 2. To hinder, prevent; தடுத்தல் வரையாவாயிற் செறாஅது (மதுரைக். 748). 3. To be angry with; சினத்தல் அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134). 4. To hate, dislike, detest; வெறுத்தல் செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).5. To cause pain, torment; வருத்துதல் செலினந்திச் செறிற்சாம்பும் (கலித். 78). 6. To overcome;வெல்லுதல். இருநால்வினையுஞ் செற்றவற்கு (திருநூற். 46). 7. To kill, destroy; அழித்தல் புரங்கள்மூன்றுந் தீயெழச் செறுவர் போலும் (தேவா. 476, 3).--intr. To change, as one's mind; வேறுபடுதல் அன்பிற் செறப்பட்டா ரில்லம் புகாமை (ஆசாரக். 80).  

செறாஅச் -  சினம் இல்லாமல் 

சிறு - ciṟu   VI. v. i. same as சிறுகு; 2. v. t. make small, contract, குறை VI.
சிறு - ciṟu   க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. As சிறுகு, used in all its meanings. 2. To show anger, சினக்க. (c.) 3. v. a. To make small, to decrease, குறைக்க. கடுகு சிறுத்தாலுங் காரம் போகுமா? Will the mustard lose its pungency when made smaller, i. e. good men even under ad versity will retain their confidence.

சொல்லும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சிறுசொல் - பழிச்சொல்; இழிச்சொல்

செற்று - நெருக்கம்.
செற்று-தல் - ceṟṟu-   5 v. tr. 1. To kill;கொல்லுதல். (பிங். MSS.) 2. To destroy; அழித்தல் 3. To cut, chisel; செதுக்குதல் (ஈடு, 9, 9,1.) 4. To set, as a jewel; பதித்தல் மணி செற்றுபுகுயிற்றி (கம்பரா. கையடை 5).--intr. 1. Togather in crowds; செறிதல் பெருங்களிறுகள்செற்றிவந்து சேர்ந்தன (சீவக. 277, உரை). 2. Tosink deep; அழுந்துதல் உரத்தினுகிர் செற்றும்வகைகுத்தி (கம்பரா. மகுட. 8).  

செற்றார் - பகைவர்

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

நோக்கும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

அர் - ar   part. 1. Pers. pl. suff.; பலர்பால்விகுதி . அரசர் வந்தனர். 2. Honorific pl. suff.;உயர்வுப்பன்மை விகுதி சம்பந்தர் பாடினர். 3. Anexpletive affixed to some words; பகுதிப்பொருள்விகுதி முன்னர் (குறள், 435).  

உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.

உறாஅர்  - உற்றார் அல்லாதவர்

போன்று - போல

உற்றார் -  உறவினர், சுற்றத்தார்; நண்பர்.

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

முழுப்பொருள்
தோழியிடம் (அல்லது மனதிடம்) தலைவி கூறிகிறாள் என்னை சந்தித்த இவர் நடவடிக்கைகள் விசித்திரமாய் உள்ளதே!! ஏனெனில் இவர் என்னிடம் கோபம் காட்டி பேசவேண்டிய பழிச்சொற்களை கோபம் இல்லாமல் பேசினார். மேலும் பகைவரை பார்ப்பது போன்று என்னை பார்த்தார். இப்படி செய்வதால் நான் உனக்கு நெருக்கமானவன் இல்லை என்பதை வெளியுலகுக்கு மட்டும் உணர்த்தினாரோ? ஏனெனில் முரணான சொற்களும் உடல்மொழியும் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. இவை அவர் எனக்கு நெருக்கமானவராக ஆகவேண்டும் என்று அவர் நினைப்பது போலவே தெரிகிறது. அதற்கான குறிப்பு என்றே நினைக்கிறன். 

கம்பரின் கவிநயம் இதை, “ஊடிய மனத்தினர் உறாத நோக்கினார் ஆடவர் உயிரென அருகு போயினார்” என்று சொல்லும்.

சினிமா உதாரணத்திற்கு என்னை கொஞ்சம் மன்னித்து விடுங்கள்.  தனுஷ் நடித்த "மயக்கம் என்ன" திரைப்படத்தில் கதாநாயகன் கார்த்திக் கதாநாயகியிடம் கோபமாய் நடந்துக்கொள்வான். ஆனால் கதாநாயகிக்கு தெரியும் கதாநாயகன் கார்த்திக் தன்னை காதலிக்கிறான் என்று. இருவரும் இறுதியில் காதலித்து கல்யாணம் செய்துகொள்வார்கள். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“ஊடிய மனத்தினர் உறாத நோக்கினார்
ஆடவர் உயிரென அருகு போயினார்...” (கம்ப.எழுச்சிப்.22)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. (குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.).

மணக்குடவர் உரை
செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும். இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.

மு.வரதராசனார் உரை
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள்
உறாஅதவர்போல் - உறாதவன் - நொதுமலன், பகையும்நட்பும்இல்லாதவன்.

சொலினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்.
செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்

செறாஅர்  - கோபம்கொண்டிருக்கவில்லை

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

ஒல்லை - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு.

உணரப்படும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

முழுப்பொருள்
தலைவியும் தலைவனும் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களுக்குள் உள்ள உறவை பற்றி உறுதியாக தெரியவில்லை. ஆதலால் தோழி தலைவியிடம் தலைவனை பற்றி கேட்டாள். தலைவியியோ தலைவனை அயலார் போல் பகையும் நட்பும் அல்லாதது போல் கூறுகிறாள். அவள் மனதில் தலைவனை பற்றி பகையில்லை. (அதுவே காதலுக்கு அறிகுறி). ஆதலால் இருவருக்கும் இடையே உள்ள உறவை பற்றி மிக விரைவில் அவர்களும் உணர்வார்கள் நாமும் உணர்ந்துக்கொள்ளலாம்.

காதலைப் பொருத்தவரை, “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை அல்ல கலத்தல்” வேண்டும் போலுள்ளது.

உதாரணமாக சொன்னால் “அலைபாயுதே” திரைப்படத்தில் கதாநாயகி ஷாலினி தன்னுடைய அக்காவிடம்(அதாவது தோழி ஸ்தானத்தில் இருப்பவரிடம்) கதாநாயகனை பகைவர் போலும் கூறமாட்டார் உறவுப் போலும் கூறமாட்டார். மாறாக காதல் எல்லாம் பைத்தியகாரத்தனம் வேலை இல்லாதவர்கள் செய்வது என்று பூசி மொழுகுவார். ஆனால் அக்கா குறிப்புணர்ந்துவிடுவார்.



மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.).

மணக்குடவர் உரை
கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும். இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.

மு.வரதராசனார் உரை
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

சாலமன் பாப்பையா உரை
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள்
குறி - அடையாளம்; இலக்கு; குறியிடம்; நினைத்தஇடம்; நோக்கம்; குறிப்பு; மதக்கொள்கை; முன்ன்றிந்துகூறும்நிமித்தம்; சபை; முறை; காலம்; ஒழுக்கம்; ஆண்பெண்குறி; அடி; இலக்கணம்.

குறிப்பு - அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்காமை - நோக்காது இருத்தல்

அல்லால் - மற்றபட்டி

ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

சிறக்கணி - ciṟakkaṇi   VI. v. i diminish, குறை; 2. cast a side look, கடைக்கண்ணால் பார்; v. t. reduce, சுருக்கு.

சிறக்கணித்தல் - கண்ணைச்சுருக்கிப்பார்த்தல்; கடைக்கண்ணாற்பார்த்தல்; அவமதித்தல்.

சிறக்கணித்தாள் - கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்

போல - ஓர்உவமவுருபு

நகும் - நகு-தல்
naku-   6 v. [T. K. nagu.] intr.1. To laugh, smile; சிரித்தல் நகுதற்பொருட்டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice;மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. Tobloom, as a flower; மலர்தல் நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 4. To open or expand;கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை(பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித்தல் பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6.To hoot, as an owl; to sing, as a bird; புள்ளிசைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ 3, 4).--tr.1. To despise; அவமதித்தல் ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome,defeat; தாழ்த்துதல் மானக்க நோக்கின் மடவார்(சீவக. 1866).

முழுப்பொருள்
தலைவி தலைவனை நேராகப் பார்த்து இவ்வுலகிற்கு அப்பட்டமாய்த் தெரியும் அளவிற்குப் பார்க்கமாட்டாள். அப்படி நேராகப் பார்ப்பது தெரிந்துவிட்டால் குறிப்பு வெளிப்படையாகிவிடுமே. குறிப்பு வெளிப்படையாக இருக்க கூடாதல்லவா?  ஆதலால் அவளுடைய ஒருகண்ணால் (கடைக்கண்ணை) கண்ணைச்  சுருக்கிப் பார்த்து உள்ளுக்குள் மகிழ்வாள். இத்தகைய நுட்பமானக் குறிப்புகளை தலைவன் கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தலைவியை உணர முடியும்.  பெண்ணின் நாணத்தைப் பலவிதமாக கண்டு அனுபவித்தாற் போன்று வள்ளுவன் எழுதிய மற்றுமொரு குறள்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும். (சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
குறித்துக் கொண்டு நோக்காமை யல்லது ஒருகால் உடம்பட்டாள் போல நகா நின்றாள். அஃதாவது காமக்குறிப்புடையார்போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல என்றார். இது தன்குறிப்புத் தோன்றாமல் நகுதல் உடன்படுதலாமென்றது.

மு.வரதராசனார் உரை
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்

குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள்
யான் - தன்மையொருமைப்பெயர்

நோக்கும் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

காலை - கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

நிலன் - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை

நோக்கும் நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்காக்கால் - நோக்கவில்லை என்றால் ; பார்க்கவில்லை என்றால்

தான் - தனக்குள்; படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

நோக்கி - கண்களால் நோக்குகை

மெல்ல - மெதுவாக

நகும் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

முழுப்பொருள்
(ஆண்மகன், தலைவன்) நான் அவளை (தலைவியை) பார்க்கும் பொழுது அவள் (பெண்மகள், தலைவி) நாணத்தினால் தலைகுனிந்து அவள் நிலத்தையே நோக்குகிறாள். (ஆணுக்கு நாணம் இல்லை என்பதையும் இங்கே நோக்குக). நான் பார்ப்பதை அவள் பார்க்காததுப்போல காட்டிக்கொள்கிறாள்.

ஆனால் நான் அவளை பார்க்காத பொழுது அவள் என்னை பார்த்து தனக்குள் மெதுவாக சிரித்து மகிழ்கிறாள். அவள் என்னை பார்த்தை நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு சிரிக்கிறாளோ? இல்லை நான் பார்த்தது அவளுக்கு தெரியுமாம் ஆனால் அவள் என்னை பார்த்தது எனக்கு தெரியவில்லை என்று நினைத்து சிரிக்கிறாளோ ?

உண்மையில் இருவருக்கும் இருவர் பார்த்ததும் தெரியும். இருவரும் நடிக்கிறார்கள் ஒருவர்மீதொருவர் கொண்ட வாஞ்சையால். தலைவன் பார்க்கும் பொழுது தலைவி நிலத்தை பார்ப்பதனால் தலைவி தலைவனுக்கு அவன் மீது கொண்ட காதலை அன்பை குறிப்பால் உணர்த்துகிறாள்.  நேரடியாக பார்த்துக்கொண்டால் என்ன? பிறகு சுவாரஸ்யம் இருக்காதே. இதனை நினைத்துப் பின்பு மகிழமுடியாதே. ஊடலின் துவக்கமே இங்குதான் போலும்.

ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையேயானப் பார்வைப் போரை கம்பன் வருணித்ததை பார்ப்போம். இப்பாடலில் இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் கண்களால் கவ்விக்கொள்வதை இரசமாக விவரித்திருப்பார்.

“எண்ணரும் நலத்தினால் இணையள் நின்றுழி 
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று 
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட 
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”

கி.வா.ஜ-வின் ஆய்வு உரையில் சீவக சிந்தாமணியிலிருந்தும், கலித்தொகையிலிருந்தும்மேற்கோளாக கீழ்காணும் வரிகளைக் காட்டுகிறார்.

நேற்று மேற்கோள் காட்டிய கண்ணதாசன் பாடல், இன்றைய குறளுக்கே முற்றிலும் பொருந்துவதாகவும் அமைவதைக் காணலாம்.

“தன்னையான் முகத்தை நோக்கின்தான் முலை முகத்தை நோக்கும்” (சீவக சிந்தாமணி 1626)

“பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்குமற் றியானோக்கின் 
மெல்ல இறைஞ்சுந் தலை” (கலித்தொகை 61-5:6)

கண்ணதாசனின் பாடல்வரிகள் இதே பொருளில்

“உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே”


”இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்றநிற் கண்டு” (அகநா 39:17-8)




மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
(நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும். (மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
யான் தன்னைப்பார்க்குங்கால் தான் நிலத்தைப் பார்க்கும்; யான் பாராத விடத்துத் தான்பார்த்துத் தோன்றாமை நகும். மெல்ல நகுதல்- முகிழமுகிழ்த்தல்.

மு.வரதராசனார் உரை
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை
நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்

குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள்
நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கினாள் - பார்த்தால், கவனித்தாள், விரும்பினாள்

நோக்கி - நோக்கு - கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; 
ஓர்உவமவுருபு.

இறைஞ்சுதல் - தாழ்தல்; கவிழ்தல் வளைதல் வணங்குதல்
வணங்குதல் - நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்.

வணங்குதல் - நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்.

நுடங்குதல் - அசைதல்; துவளுதல்; தள்ளாடுதல்; ஆடுதல்; வளைதல்; நுட்பமாதல்; அடங்குதல்; ஈடுபடுதல்; மெலிதல்.

இறைஞ்சினாள் - வணங்கினாள்; சூழ்ந்துக்கொண்டாள், ஆடினாள், மெலிந்தாள்

அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

அவள் - காதலி; தலைவி; அப்பெண்

யாப்பு - கட்டுகை; கட்டு; செய்யுள்; யாழ்ப்பத்தரிற்குறுக்கேவலிவுறச்செய்யுங்கட்டு; சிறப்புப்பாயிரஇலக்கணம்பதினொன்றனுள்இன்னநூல்கேட்டபின்இன்னதுகேட்கத்தக்கதென்னும்தொடர்பு; அன்பு; உறுதி; சூழ்ச்சி; பொருத்தம்; பாம்பு.

யாப்பினுள் - அன்பினுள்; உறுதியுள்

அட்டுதல் - அழித்தல்; குற்றுதல் இடுதல் அள்ளுதல் எடுத்தல் வடிதல் வடித்தல் சமைத்தல் வார்த்தல் சொரிதல் சுவைத்தல் செலுத்துதல் தானசாசனம்அளித்தல்.

வார்த்தல் - மகப்பால்வார்த்தல் - maka-p-pāl-vārttal   n. மகப்பால் +. Giving milk to infants, anact of charity, one of muppattiraṇṭaṟam, q.v.;முப்பத்திரண்டறங்களுள் அநாதப்பிள்ளைக்குப் பால்வார்த்தலாகிய தருமம். (பிங்.

அட்டிய - வார்த்தல் - aka-p-pāl-vārttal   n. மகப்பால் +. Giving milk to infants, anact of charity, one of muppattiraṇṭaṟam, q.v.;

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

முழுப்பொருள்
நான் பார்த்த இப்பெண் என்னை பார்த்தாள். அவள் என்னை விரும்பினாள். (வெட்கதினால்) அவள் கண் தாழ்ந்தது (நிலத்தை நோக்கியது). அவள் எனக்கு வணக்கம் சொன்னாள். இச்செயல் எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பினை வார்க்கும் நீர் போன்றது. எங்கள் அன்பு வளர்ந்தது. 

இறைஞ்சுதல் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு.  அவற்றுள் 1) வணங்குதல் என்ற சொல்லில் நுடங்குதல் என்ற பொருளை எடுத்துக்கொண்டால், அதற்கு ஈடுபடுதல் என்ற பொருளும், மெலிதல் என்ற பொருளும் அடங்கும். இறைஞ்சினாள் - பெண்னை மட்டும் குறிக்கும் சொல் என்பதால், மெலிதல் என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படி ஆனால் அந்த பெண் காதலினால் மெலிந்தாள்; மெலிதல் என்பது குறிப்புணர்த்துகிறது இங்கே. சற்று யோசித்துப்பார்த்தால், நம்மை நினைத்து ஒரு பெண் மெலிகிறாள் என்றால் அப்பெண்ணுக்கு நம்மீது அன்பு இருக்கிறது என்று தான் பொருளாக நாம் கொள்வோம். அது அவள் மீது நம்மிடம் இருக்கும் அன்பை வளர்கிறது. ஆக இங்கே இறைஞ்சினாள் என்ற சொல்லுக்கு அன்பினால் வாடி மெலிந்தாள் என்று பொருட்கொண்டால் தகும். 2) வணங்குதல் என்ற சொல்லில் சூழ்ந்துக்கொள்ளுதல் என்ற பொருளை எடுத்துக்கொண்டால், அப்பெண் என்னை (அல்லது பெண்ணின் மனம்) சூழ்ந்துக்கொண்டாள் என்று பொருளாகும். அல்லது அவள் கண்கள் என்னை சூழ்ந்துக்கொண்டது என்ற பொருளும் தகும். அவள் பார்வையினாலேயே என்னை சூழ்ந்து அவளுடைய காதலை என்னிடம் வெளிப்படுத்தினாள்.

ஆக இக்குறளுக்கு என்னுள் தோன்றிய இருப்பொருள்களை கீழ்வருமாறு காணலாம்.

1) இப்பெண் என்னை விரும்பிப் பார்த்தால். பார்த்தப்பின்பு அவளுக்கு என்மீது கொண்ட அன்பினால் அவள் வாடினாள், மெலிந்தாள்; இவளுடைய மெலிதல் இவள் காதலை எனக்கு குறிப்புணர்த்தியது. (நானும் இவளை காதலித்ததால்) இச்செயல் எங்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பினை வார்க்கும் (வளர்க்கும். தாய் பால் கொடுக்கும் செயல் எப்படி அன்பை வளர்க்கிறதோ) நீராக ஆயிற்று.

2) இப்பெண் என்னை விரும்பிப் பார்த்தால். பார்த்தப்பின்பு அவளுக்கு என்மீது கொண்ட அன்பினால் அவள் பார்வையே என்னை சூழ்ந்துக்கொண்டது. அப்படி இருந்தது அவளுடைய பார்வை. அவளுடைய காதலை என்னிடம் கண்களால் குறிப்புணர்த்தினாள். (நானும் இவளை காதலித்ததால்) இச்செயல் எங்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பினை வார்க்கும் (வளர்க்கும். தாய் பால் கொடுக்கும் செயல் எப்படி அன்பை வளர்க்கிறதோ) நீராக ஆயிற்று.

அன்பு மிகுந்து காதல்கொண்டோம்.

ஒப்புமை
“வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று” (குறள் 718)

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
(நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. (அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.).

மணக்குடவர் உரை
முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள். அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர். தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.

மு.வரதராசனார் உரை
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.


சாலமன் பாப்பையா உரை

நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது

குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
[காமத்துப்பால், குறிப்பறிதல், களவியல்]

பொருள்
இரு - இரண்டு

நோக்கு -  கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு
நோக்குதல் - கண்காணித்தல்

இவள் - இவளுடைய

உண்கண் - மைதீட்டியகண்

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

ஒரு - ஒரு

நோக்கு - பார்வையில்

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. 

நோக்கு - விருப்பம் (மேலே சொல்ல பட்ட நோக்கு-இன் பொருளை பார்க்கவும்)

ஒன்று - மற்ற ஒரு பார்வை

அந் நோய் - அந்த நோய்யை, துன்பத்தை 

மருந்து - தீருக்கும் மருந்து

முழுப்பொருள்
ஒரு காதல்வயப்பட்ட பெண்ணுடைய மைதீட்டிய கண்ணுக்கு இரண்டு பார்வைகளாம். ஒன்று அவளுடைய உள்ள காதலை குறிக்குமாம். அதாவது காதலனை பிரிந்து இருப்பதனால் வரும் விரக (காமம்/காதல்) வேட்கை உணர்த்தும் பார்வை. அந்த பார்வை காதலனுக்கும் துன்பம் தரும். அதுவே நோய் என்கிறார் திருவள்ளுவர்.

ஆனால் மற்றொரு பார்வையோ இந்த நோயை தீர்க்கும் மருந்தாகவே அமையுமாம். இந்த பார்வையால் அவன் உயிர்த்தெழுந்து செயல்படுவானாம். 

நான் பிரிவால் நோயுற்று இருக்கிறேன். என்னை விரைவில் திருமணம் செய்துக்கொண்டு புணர்ச்சி மகிழுங்கள் என்பதை குறிக்கிறாள் காதலி. குறிப்பால் உணர்ந்த்துவதே இக்குறளின் அழகு

நாஞ்சில் நாடன் உரை
திருக்குறளில் ஒரேயொரு இடத்தில். குறள் எண் 1091. இன்பத்துப் பாலில் குறிப்பறிதல் அதிகாரம்.

‘இரு நோக்கு இவளின் கண் உள்ளது ; ஒரு நோக்கு
நோய், நோக்கு ஒன்று அந்நோய் மருந்து’

பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகவே சொல் பிரித்து, Punctuation போட்டு எழுதியுள்ளேன். என்றாலும் மனது பொறுக்கவில்லை. அத்தனை நயம் மிக்க திருக்குறள் இது. மையுண்ட இவள் வேல் போன்ற, வாள் போன்ற, மீன்போன்ற கண்களுக்கு இரண்டு நோக்குகள் உண்டு. ஒரு நோக்கு காதல் அல்லது காம நோய் செய்யும். மற்றொரு நோக்கு அந்நோய்க்கு மருந்தும் ஆகும். ஒரு பாடல் காலம் கடந்து வாழ்வதற்கு இந்தச் செய்யுள் ஒரு எடுத்துக்காட்டு. மையுண்ட கண்கொண்ட பெண்களுக்கு என்றில்லை, பொய்யுண்ட கண்கொண்ட அருள் விற்பனை செய்யும் சாமியார்களுக்கும் இரு நோக்கு உண்டு. செல்வந்தர்களுக்கு என்று பொன்னோக்கு. அற்ப மானிடர்க்கு என்று புண்ணோக்கு

ஒப்புமை
“செவ்வனேர், நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்” (திருக்கைலாய ஞானவுலா, 78-9)

“...... நஞ்சும் அமிர்தமுமே
போல்குணத்த பொருகயற்கண்” (சீவகசிந்தாமணி 167)

“பிணியும் அதற்கு மருந்தும் பிறழ்ப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே” (திருக்கோவையார், 5)

மேலும்: அஷோக் உரை (நன்றி)
மாணிக்கவாசகரின் திருக்கோவையார் பாடலொன்றில், “பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே”, என்பார். அதாவது, மின்னையும் பாம்பையுமொக்கும் இடையினையும் பெருந்தோளினையும் உடையாளது படைபோலும் கண்கள், பிறழுந்தோறும், பொதுநோக்கத்தாற் பிணியும், உள்ளக் கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு மருந்தும் ஆயின என்பார்.

பின்பு வரப்போகும் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்திலும், இக்குறளை அடியொற்றி, “பிணிக்கு மருந்து பிறமன் அணி இழை தன்நோய்க்குத் தானே மருந்து”, என்பார் வள்ளுவர்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும் , தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம் . தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின் , தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது.]

(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு. (உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.).

மணக்குடவர் உரை
இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம். நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
[தலைமகன் தலைமகள் காதற் குறிப்பை அவள் நோக்கினால் அறிந்தது ]
இவள் உன்கண் இருநோக்கு உள்ளது-இவளுடைய மையூட்டிய கண்கள் என்மீது இருவகையான நோக்குகள் கொண்டுள்ளன; ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒன்று என்னிடத்து நோயைச் செய்வது, இன்னொன்று அந்நோய்க்கு மருந்தாவது.

அழகிற்காகவும் குளிர்ச்சிக்காகவும் தமிழ்ப்பெண்டிர் கண்ணிற்கு மையிடும் பண்டை வழக்குப்பற்றி 'உண்கண்' என்றார். நோய்நோக்கு தலைமகன்மேற் காதற்குறிப்பை வெளிப்படுத்தாத பொதுநோக்கு; மருந்து நோக்கு அதை வெளிப்படுத்தும் சிறப்பு. இதுவரை ஒருதலைக்காதலாகிய கைக்கிளையாயிருந்த காமநிலை, இன்று இருதலைக்காதலாகிய ஐந்திணயாகப் பெயரத்தொடங்கியமை இதனார் கூறப்பட்டது. கண்டே மகிழும் காதலன் இனி உண்டு மகிழும் வாய்ப்பையுங் கண்டான்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
உண்டு விட்டாள் கண்களினால் என் உயிரை இதழமுதம்
          தந்தேனும் காத்தாளா தளிர்க் கொடியாள்  இல்லை இல்லை
கொண்டேன் நான் நோய் அந்த்க் கோல விழிப் பார்வையினால்
          கொண்ட நோய் தீர்த்து விடக் கூடிய  ஒர்   மருந்தில்லை
கண்டு  நின்றார் அனைவருமே கணக்கொன்று சொன்னார்கள்
          கண்மணியாள் பார்வையொன்றே அதைத் தீர்க்கும்  மருந்தென்று
நோய்  தரும்  பார்வையாய் ஒரு பார்வை வைத்துள்ளாள்
          நோய் தீர்க்கும் பார்வையும்  அவளே தான் கொண்டுள்ளாள்

என் ஆதியும் அந்தமும் (நன்றி: கவிப்புயல் இனியவன்)
என்னவளின் பார்வை
நோயும் மருந்தும் 
அவள் கருமை கொண்ட கரு 
விழிப்பார்வை என் உயிரையே 
கொல்லும் பார்வை ...!!!

மறுமுறை பார்வை 
உயிர்த்தெழும் உயிராய் 
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான் 
என் ஆதியும் அந்தமும் ....!!!

மு.வ உரை
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்

சாலமன் பாப்பையா உரை
இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

வேடிக்கையாக சொல்வதுண்டு..இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..இருவருமே வாழ்க்கையே வெறுத்து விட்டது என்றனர்.மூன்றாவது நண்பர் வந்தார்..முதல் நண்பரிடம் வெறுப்பதற்கான காரணம் கேட்டார்..
என் மனைவியுடன் வாழ்ந்து அனுபவித்த துன்பங்களால் வாழ்க்கை வெறுத்துவிட்டது என்றார்.
மற்ற நண்பரிடம் கேட்டார்..
இதுநாள் திருமணமே ஆகாது..மனைவியுடன் வாழமுடியவில்லையே என்று வெறுத்துவிட்டது என்றாராம்/
வள்ளுவனும் இதை அறிந்திருப்பான் போலும்..
அவன் என்ன சொல்கிறான் பார்ப்போம்..

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இவளின் மைதீட்டிய கண்களில் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது..ஒரு பார்வை  காதல் நோயைத் தருகிறது..மற்ற பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை ஆகிறது/.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம்

குறள் 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது.
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.

களவு -> கள்ளத்தனமான; திருட்டுத்தனமான; [தான் நோக்கியவழி நாணி (நாணத்துடன்)​ இறைஞ்சியும் (வணங்கியும்), நோக்காவழி (பார்க்காத நேரத்தில்) உற்று நோக்கியும்] தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று.

கொள்ளும் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

சிறு - சிறிய - ciṟiya   சிறு, (adj.) (சிறுமை) little, small, inferior, சின்ன, Note:- Before a substantive beginning with a vowel சிறு becomes சிற்று.

நோக்கம் - கண்; பார்வை; கிரகநோக்கு; தோற்றம்; உயர்ச்சி; அழகு; காவல்; கருத்து; அறிவு; கவனம்; விருப்பம்; குறிப்பு.

சிறுநோக்கம் -> சிறிய பார்வை; கடைக்கண் பார்வை. இலைமறைவா காய்மறைவாக பார்க்கும் பார்வை.

காமத்தின் - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

செம்பாகம் - சரிபாதி; இனிமை; நல்லபக்குவம்.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்

பெரிது - பெரியது; மிகவும்.

கொள்ளும் -> பார்க்கும் அந்த.
விளக்கம்
கண்ணால் கள்ளத்தனமாக என்னைப் நீ பார்க்கும் அந்தச் சிறிய கடைக்கண் பார்வை.

முழுப்பொருள்
இவள் கண்கள் நான் அவளைப் பார்க்கவில்லை (காணவில்லை) என்று நினைத்துக் கொண்டு, கண்களால் கள்ளத்தனமாக என்னை இவள் பார்க்கும் அந்தச் சிறிய கடைக்கண் பார்வை என்னில் ஈட்டும் இன்பம் காதலினால் (காமத்தினால் - மெய்யுறு புணர்ச்சி) ஏற்படும் இன்பத்தின் சரிபாதியை விடப் பெரியது.

ஒப்புமை
“காசில் காமம் செப்பிக் கண்ணினால் இரப்பார்” (சீவக.2549)
---------------------------------------------------------------------------------------------------------



சாலமன் பாப்பையா உரை
நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காமத்தில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும். ( ​​தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.).

---------------------------------------------------------------------------------------------------------



இயற்கைப் புணர்ச்சி
இயற்கைப் புணர்ச்சி முதலான நான்கு வகைகளிலும் தலைவனும், தலைவியும் சந்தித்துப் பழகும் களவுப் புணர்ச்சி இரு பெரும் திறங்களாக அமையும் என்பது அகப்பொருள் மரபு ஆகும். அவையாவன :-

    1) உள்ளப் புணர்ச்சி
    2) மெய்யுறு புணர்ச்சி

இக்கருத்தை,
உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய (34)
என்ற நூற்பா எடுத்துக் காட்டுகிறது.

1) உள்ளப் புணர்ச்சி
தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல் உள்ளப் புணர்ச்சி எனப்படும். மனம் ஒன்றுபட ஏற்படும் காதல் உணர்வே களவில் முதற்கண் நிகழ்வது.

பழி பாவங்களுக்கு அஞ்சுதலும், தக்கது எது என அறியும் ஆற்றலும் உடையவன் தலைவன். அச்சமும், நாணமும், அறியாமையும் உடையவள் தலைவி.

இருவர்க்கும் உரிய இத்தகு இயற்கைப் பெருங்குணங்கள் காரணமாக இருவருமே முதலில் உள்ளத்தால் இணையும் உள்ளப் புணர்ச்சியை மட்டுமே மேற்கொள்வர்.

2) மெய்யுறு புணர்ச்சி
உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை மெய்யுறு புணர்ச்சி எனப்படும். (மெய் - உடல்)

காலமும் - காரணமும்
மெய்யுறு புணர்ச்சிக்கான காலமும் காரணமும் பற்றியும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

ஒருவரை ஒருவர் காணுதலாகிய காட்சி, வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்புதல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம் சாக்காடு எனச் சொல்லப்படும் பத்துவகையான வளர்நிலைச் செயல்கள் நிகழ நிகழத் தலைவனும், தலைவியும் உடலால் புணரும் மெய்யுறு புணர்ச்சி மேற்கொள்வர்.

பார்வையால் ஓராயிரம் இன்பமா ..? (நன்றி: கவிப்புயல் இனியவன்)
உன்னை பார்க்கும்
போது என்னை பார்க்காதது
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?

நீ கள்ளமாய் என்னை கடைக்கண்
பார்வையால் என்னை பார்த்தது ....?

இன்ப சுகத்தில் இன்பமடி
இதற்கு நிகராய் இந்த உலகில்
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால்
ஓராயிரம் இன்பமா ..?