Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_049. Show all posts
Showing posts with label Athikaaram_049. Show all posts

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

குறள் 489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
எய்தற்கு - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தற்கு - அடைவதற்கு, சேர்வதற்கு, பெறுவதற்கு

அரியது - அரிது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

இயைந்தக் - இயைதல் - பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல்

கால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

அந் - அந்த 

நிலையே - நிலை -  நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

செய்தற்கு  - செய்வதற்கு; செயல் புரிவதற்கு

அரிய -  அரிது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
அம்பை எய்தால் இலக்கை அடைய ஒரு தக்க காலம் வேண்டும்/ இருக்கும். அதுப்போல எய்துவதற்கு / அடைவதற்கு / பெறுவதற்கு அரிய காலம் பொருந்தி வரும் பொழுது அந்நேரத்திலேயே அச்செயலை செய்து அவ்வரியபயனை அடைய வேண்டும். காலம் சாழ்ந்து அச்செயலை செய்தால் இலக்கை அடையமுடியாது. பயனும் கிட்டாது. 

இயைந்தக்கால் என்ற சொல்லை நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். நமது ஆற்றலும் உழைப்பும் திட்டமும் கூர்ந்துநோக்குதலும் கவனமும் ஒருங்கே இருக்கும் பொழுது காலமும் பொருந்தி வரும் பொழுது இலக்கை அடையலாம். வெறும் காலத்தை வைத்து எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது. நாமும் நம் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். வளர்த்துக்கொண்டு இலக்கை நோக்கி உழைக்க வேண்டும். இலக்கை மறக்காமல் அதனைப்பற்றி கூர்ந்துநோக்க வேண்டும். இவை எல்லாம் இருக்கும் பொழுது காலமும் நமக்கு ஒத்துழைக்கும்.

நேரத்தைக் கடக்கவிட்டு பின்னர், “தும்பை (மாட்டைக் கட்டும் கயிறு) விட்டு வாலைப் பிடித்தால்” அரிய வாய்ப்பை நழுவ விட்டதற்கு வருந்த நேரிடும்.

”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற சொலவாடை போல் உள்ளது இக்குறளின் தோற்றம்

“எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயலென்று - வையத்து” (யா.வி.சூ.60.மேற்கோள்)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.
(ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
அண்டை அயலில் பார்த்திருப்பீர்கள். அந்தக் குடும்பம் சாதாரண நிலைமையில் இருப்பதாக உங்களால் அறியப்பட்டிருக்கும். கணவனும் மனைவியும் சேர்ந்து பணிக்குச் செல்வார்கள். மகனும் படிப்பை முடித்து, புதிதாக வேலைக்குச் செல்லத் தொடங்கியிருப்பான். மற்றவர்கள் பார்வையில் ‘சிரம ஜீவனம்தானோ’ என்ற தோற்றம்தான். 

அந்நேரத்தில் உங்கள் பகுதியிலேயே நல்ல வீடொன்று விலைக்கு வந்திருக்கும். யார் அந்த வீட்டை வாங்கப் போகிறவர்கள் என்ற ஆர்வம் உங்களுக்கு. தற்போதைய சூழ்நிலையில் எப்படி முயன்றாலும் உங்களால் அந்த வீட்டை வாங்க முடியாதுதான். நீங்கள் கேள்விப்படும் செய்தி உங்களையே வியப்படைய வைக்கிறது. 

பாடுபட்டுக்கொண்டிருந்த அந்தக் குடும்பம் அந்த வீட்டை விலைக்கு வாங்குகிறது. எப்படி ? அவர்கள் செயலொன்றே கருத்தாகக் கணிசமாகச் சேமித்து வைத்திருந்திருப்பர். கையிருப்பாக இருந்த தங்கங்களை விற்க முனைந்திருப்பர். அங்குமிங்குமாக சீட்டுச் சேர்த்திருப்பர். அவற்றை எல்லாம் திரட்டி அந்த வீட்டை ஒருவழியாக வாங்கி முடித்துவிட்டனர். பார்வையாளர்களாக இருந்த உங்களுக்கும் உங்களைப்போன்ற மற்றவர்களுக்கும் வியப்புத்தான் மிச்சம் !

உலகின் மிகப்பெரிய நிதிநிறுவனங்களில் முதன்மையானது கோல்டுமேன் சாக்ஸ் என்னும் நிறுவனம். அந்நிறுவனத்தில் தாம் முதலிட்டிருக்க வேண்டும் என்று வாரன் பஃபெட் விரும்பினார். ஆனால், அந்நிறுவனப் பங்குகளின் விலையோ உச்சத்தில் இருக்கிறது. அதன் புகழுக்கோ செயல்திறனுக்கோ எந்த இழுக்கும் ஏற்படவில்லை என்பதால் பங்கின் விலை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே சென்றதே தவிர இறங்கவில்லை. 

தாம் கருதும் விலைக்கு வந்தாலன்றி எந்தப் பங்கிலும் முதலிடும் வழக்கம் பஃபெட்டுக்கு இல்லை. அந்நிறுவனப் பங்கை வாங்கும் எண்ணம் அவருக்கு இருக்கிறது என்று தெரிந்தால் மேலும் விலை கூடிவிடும் கூடிவிடும் அபாயமும் சந்தையில் நிலவுகிறது. வாரன் பஃபெட் பொறுமையாகக் காத்திருந்தார். 

2008-இல் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தைப்போன்ற மற்றொரு நிறுவனமான லேமன் பிரதர்ஸ் நிதிச் சந்தைச் சூறாவளியில் சிக்கித் திணறி மஞ்சள் கடிதம் கொடுக்கிறது. லேமனின் பங்கு மதிப்புகள் சுழியமாகின்றன. அதே வேகத்தில் அமெரிக்க நிதி நிறுவனங்கள் அனைத்தின் விலைகளும் அதள பாதாளத்திற்கு வீழ்கின்றன. வாரன் பஃபெட்டுக்குத் தெரியும், இவை ஒரு சுழற்சிதான் என்பதும் மீண்டும் நிலைமை சீர்படும் என்பதும். கோல்டுமேன் சாக்ஸின் பங்குகளை கைக்கடக்கமான விலையில் குவிக்கிறார். இப்பொழுது அவரின் கனவும் காத்திருப்பும் நிறைவேறிவிட்டது. 

இத்தகைய செயல்களை எல்லாம் என்னவென்று அழைப்பது ? செய்வதற்கு எளியவை அல்ல இவை. செய்வதற்கு மிகவும் கடினமானவை. விழிப்புணர்வோடு காலங்கருதாது இறுக்கமாகக் கையைக் கட்டிக் காத்திருக்க வேண்டும். மின்னல் தோன்றுவதுபோல் ஒரு வாய்ப்பு மின்னித் தோன்றும். பாய்ந்துபோய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். அது தோன்றும் தருணத்தை தொடர்ந்து ஆராய்ந்துகொண்டேயிருக்க வேண்டும். 
கொஞ்சம் கண்ணயர்ந்தாலும் வாய்ப்பு காற்றில் கரைந்துவிடும். பத்து நிமிடங்கள் வரிசையொன்றில் காத்திருக்க நேர்ந்தால் நம்மவர்கள் எத்தனை வகையான அலுப்பு சலிப்பான கருத்துகளை உதிர்ப்பார்கள் என்று நாம் அறிவோம். 

அவ்வாறு காத்திருந்து, உரிய காலம் கனிந்ததும் முழு ஆற்றலையும் செலுத்தித் தளரா முனைப்புடன் செய்து முடிக்கும் செயல்களைச் ‘செயற்கரிய செயல்கள்’ என்று வள்ளுவர் அழைக்கிறார். பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருப்பது. காலம் கனிந்ததும் அடித்து நொறுக்குவது. அதுவரை நீங்கள் தடயம் தெரியாமல் காணப்படுவீர்கள். 

எய்தற்(கு) அரியது இயைந்தக்கால் அந்நிலையே 
செய்தற்(கு) அரிய செயல்.

வாழ்க்கையில் எய்துவதற்கு அரிதான ஒன்றை அடைவதற்குரிய வாய்ப்பு அமைந்துவிட்டால் அதை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். செய்துகொண்டிருக்கும் மற்ற சில்லறை வேலைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு அந்த அருஞ்செயலை ஆற்றத் துணிய வேண்டும். ஏனென்றால் அது செய்வதற்கு அரிய செயலாகும். 

அடைவதற்கு அருமையான காலம் அமைந்து வந்துவிட்டால், அதுவே அருமையான செயல்களைச் செய்வதற்கேற்ற நிலைமையாம்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

குறள் 488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
செறுநரைக் - செறுநர் - பகைவர்.

காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

சுமக்க  - சுமத்தல் -  பாரமாதல்; சார்தல்; மிகுதல்:தாங்குதல்; மேற்கொள்ளுதல்; பணிதல்.

இறுவரை - முடிவு; அழியுங்காலம்; பெரியமலை; பக்கமலை; மலையின்அடிவாரம்.

காணின் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

கிழக்காம் - கிழக்காதல் - அழிவடைதல்

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
பகைவரை கண்டால் அவரிடம் அங்கே பணிந்து செல்க. பகைவரின் அழியும் காலம் வரும் பொழுது அவரை அழியவிடுவதே சிறந்தது என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

பகைவரை காணும் பொழுது பணிவது கொழைத்தனம் அல்ல ஏனெனில் 
1) பகைவரைக் காணும் பொழுதெல்லாம் நாம் அறிவை இழந்து கோபட்டுக்கொண்டு வாக்குவாதத்திற்கும் சண்டைக்கும் சென்றால் நாம் நமது ஆத்ம சக்தியை வீண் சண்டைகளில் விரையமாக்குக்கிறோம்.

2) பகைவரைக் காணும் பொழுதெல்லாம் சண்டைப்போடுவது நமது மனதை எப்பொழுதும் பதட்ட நிலையிலேயே வைத்திருக்கும். அது நமது உடலிற்கும் மனதிற்கும் தீமை பயக்கும்.

3) பகைவரைக் காணும் பொழுதெல்லாம் சண்டைப்போடுவது வருங்காலத்தில் இருவரம் பரஸ்பரம் பேசிப் பகையை அறுத்து உறவை வளர்க்க தடையாக இருக்கும். தேவையில்லாமல் பகை வளரும். காலமும் செல்வமும் விரயமாகும்.

4) பகைவருக்கு பதில் பேசாமல் அமைதியாக இருந்தால் பகைவரும் குழும்புவார். அவரும் பதில் பேசாமல் அமைதியாக இருப்பார். அமைதி நிலவும்.

"துஷ்டரைக்கண்டால் தூர விலகு"  என்று ஒரு சொலவாடை உண்டு. இதற்காக தான் போலும். 

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக, இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர்.
('பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.

மு.வரதராசனார் உரை
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

குறள் 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
பொள் - துளை; விரைவுக்குறிப்பு; poḷ   n. பொள்ளு-. Hole; உட்டொளை. (பிங்.); அம்மை கொண்ட உடம்புபோல கொப்புளங்களாக (வியர்வைத் துளிகளால்)

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

ஆங்கே - ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

வேர்த்தல் - வியர்த்தல்; சினத்தல்; அஞ்சுதல்.

வேரார் - வியர்க்கமாடார்கள்

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

பார்த்து - பார்த்தல் - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்

உள் - உள்ளம் -  மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

வேர்ப்பர் -  வேர்த்தல் - வியர்த்தல்; சினத்தல்; அஞ்சுதல்

ஒள்ளி - செம்பொன்; சுக்கிரன்.
ஒள்ளியன் - அறிவுடையோன்; புகழுடையவன்; சிறந்தவன்; நல்லவன்.

யவர் -  அவர் 

முழுப்பொருள்
சினம் ஒருவரை அழிக்கும் தன்மை வாய்ந்தது. முகத்தில் சிரிப்பும் மனதில் மகிழ்ச்சியையும் அழித்துவிடும் சினம். ஆனால் மனிதனுக்கு சினம் சர்வ சாதாரனமாக வரக்கூடியது. தனது மனவலிமையால் சினத்தை கட்டுபடுத்த தெரிந்தவனே அறிவுடையவன்.

ஒருவரை அழிக்கும் தன்மை வாய்ந்த சினம் ஒருவருக்கு (ஒரு அரசருக்கு) வருமானால் அவர் அவ்விடத்திலேயே அந்த சினத்தினால் உடம்பு முழுதும் முத்துமுத்தாக வியர்த்து விட்டு தன் கோபத்தையும் வெளியே காண்பிப்பார் என்றால் அவர் அறிவற்றவர் ஆவார். சினத்தை தணித்து வெளியே காண்பிக்காமல் அகத்தில் வியர்த்து தக்க காலம் பார்த்து பகைவரை வெல்லுதலே அறிவுடையவர்கள் செய்வது. காலம் எல்லாவற்றிற்கும் முக்கியம்.

அப்படியானால் திருவள்ளுவர் மனதில் சினத்தை வைத்துக்கொள்ள சொல்கிறாரா? இல்லை. முதலில் அவர் சொல்லுவது கோபத்தை உடனடியாக காண்பிப்பது அறிவற்ற செயலாகும். ஏனெனில் ஒரு பதறிய நேரத்தில் மனம் சஞ்சலம் பட்டுள்ள நேரத்தில் முடிவெடுப்பது அபாயத்தில் / அழிவில் முடியும். ஆதலால் கோபத்தை தள்ளிப்போடு என்று கூறுகிறார். கொஞ்சம் நேரத்தை வாங்கு. அப்படி சினத்தை தள்ளிப்போட்டால் நீ வெற்றி பெற்றுவிட்டாய். ஏனெனில் சற்று நேரம் கழித்து மனம் அமைதியாக இருக்கிறது. அமைதியாக இருக்கும் பொழுது உனது எதிர்வினை அபாயங்கள் இல்லாமல் அழிவு இல்லாமல் இருக்கும். எதிர்வினை மிக மிக தேவையெனில் மட்டுமே செய்வாய்.

யோசித்துப்பார்த்தால் நாம் பலதடவை நினைப்பது ”கோபத்தில் சொல்லிவிட்டேன், அப்படி சொல்லி இருக்க கூடாது”, “கோபத்தில் செய்துவிட்டேன், அப்படி செய்து இருக்க கூடாது”. ஆதலால் தான் கோபத்தில் இருக்கும் பொழுது எதுவும் செய்யக் கூடாது. 

பொதுவாக இருக்கும் சொலவடையான “பதறாத காரியம் சிதறாது” என்பதன் மற்றொரு வெளிப்பாடே இதுவும்.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”பொள்ளென வியர்த்து” (சீவக.256)

பரிமேலழகர் உரை
ஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார், காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர்.
('பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்' 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார், அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனம் வேர்ப்பர் ஒள்ளியர். வேர்ப்பு பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

சாலமன் பாப்பையா உரை
தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

அருவினை யென்ப உளவோ கருவியான்

குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருஅருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

என்ப - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

உளவோ - இருக்கிறதோ ?
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

கருவி ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள்.

யான் - தன்மையொருமைப்பெயர்

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

செயின் - செய்தால்
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

முழுப்பொருள்
ஒருவர் ஒரு செயலை செய்வதற்கு முன்பு அதனை நன்கு ஆராய்ந்து அதன் பலன்களை அறிந்து அதற்கு தேவையான திறன்கள் கருவிகள் மக்கட்செல்வம் குழு தகவல் பரிமாற்று முறை செயல் திட்டம் / வியூகம் செயல்படுத்து (execution) முறை என்று எல்லா கோணங்களிலும் வலிமையாக இருந்து அவர் அச்செயலை செய்யக்கூடிய தக்க காலத்தில் செய்தால் அவரால் செய்து முடிக்கமுடியாத அரிய செயல் என ஏதும் உண்டோ? 

கருவிகள் என்பதை அகம் மற்றும் புறம் சார்ந்த கருவிகளென்று கொள்ளலாம். பரிமேலழகர் கருவிகளாவன மூவகை ஆற்றலும், நால்வகை உபாயங்கள் (வழி முறைகள்) என்கிறார். அவை என்ன? 

அறிவு, ஆண்மை, பெருமை என்பன ஆற்றல்கள். அறிவும் என்பது எண்ணுதலுக்கும், ஆராய்தலுக்கும் தொடர்புடைய கருவி. ஆண்மை, செயல் துணிவுக்கான ஆற்றலாகிய கருவி. பெருமை என்பது, ஒரு செயலைச் செய்வதால் இன்னவை சாதிக்கப்படும், அது எம்மாலே முடியும் என்கிற சுய மதிப்பீட்டில் கொள்ளும் உவகை; இதுவும் கருவியே. சாமம், பேதம், தானம், தண்டம் என்பவை நான்கு வகையான வழிமுறைகள். அவை இன்சொலும், தன்மையாகப் பேசி செயலாற்றலும்(சாமம்), செயலூக்கிகளாக சிலவற்றைக் கொடுத்தல்(தானம்), ஒதுக்கிவைத்தல், மிரட்டிப் பணியவைத்தல்(பேதம்), தண்டனையைக் கொடுத்து திருத்துதல்(தண்டம்) போன்றவையேயாகும். செயலாற்றலுக்கான கருவிகள் இவைகளே ஆயினும், கருவிகளோடு, தக்க காலமும் அமைந்தாலே இவையும் பயனளிக்கும்.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
“ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண் டாகுமோ” (கம்ப.மந்தரை 19)

பரிமேலழகர் உரை
அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின்.
(கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்

மு.வரதராசனார் உரை
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

சாலமன் பாப்பையா உரை
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

English Meaning - As I taught a kid - Rajesh
Before venturing into a task, one should analyze the task well and also analyze the best time to optimally execute the task and to reap the rewards. If one analyzes the tasks, and with the help of right equipment and tools, if one executes the task at best time, is there any task one cannot achieve?
Analyzing a tasks means  1) research the task well, 2) understand the value of the task, 3) estimate the skills , strengths, tools, equipment's required 4) estimate the resources required and 5) plan the communication mechanism between the members and team etc.  

Questions that I ask to the kid
Explain more on value of task, equipment's and time of execution of task

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

குறள் 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பருவம் காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை.

பருவத்தொடு - தக்க காலத்தில்

ஒட்ட - அடியோடு; கிட்ட; இறுக; அணுக; போல.

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

திருவினைத் - நல்வினை

தீராமை - கொடுமை; கடுந்துரோகம்; பொய்க்குற்றச்சாட்டு; பேரநீதி; வன்மத்தாற்சொல்லுங்கோள்; ஆற்றாமை.

தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்

ஆமை - கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்

ஆர்க்கும் ஆர்க்கை - வாரடை; கட்டுகை; துரும்பு

கயிறு - நூல்முதலியவற்றால்முறுக்கித்திரித்தவடம், பாசம்; மங்கலநாண்; நூல்; சாத்திரம்.

முழுப்பொருள்
செல்வம் நில்லாது விரைந்து சென்றுவிடும் தன்மை வாய்ந்தது. நிலையற்றதாகும். ஈன்ற செல்வதை காக்கவேண்டுமானால் காலத்திற்கு ஏற்ற செயலை காலம் தாழ்த்தாது காலத்தோடு செய்தல் மிக அவசியம். அவ்வாறு செயலை தக்ககாலத்தில் ஒழுகுவது (செய்வது) ஈன்ற செல்வம் தன்னிடம் இருந்து ஓடாமல் தடுக்க உதவும் கயிறு போன்றதாகும்.

ஆமை என்றால் நோய் என்று அர்த்தம். திருவனையான செல்வம் ஒருவரிடம் தீருகிறது என்றால் அவரிடம் ஒரு நோய் இருக்கிறது என்று அர்த்தம். அது செயலின்மை. காலத்தோடு செய்யாது இருத்தல் என்று பொருள். ஆதலால் அந்நோயை கட்டுப்படுத்தும் கயிறே காலத்தோடு செயலாற்றுவதாகும்.

ஒரு விவசாயி காலத்தொடு ஒட்டி பயிரை நடவில்லையென்றால் அவர் பின்பு மழையிற்கு தனது பயிர்களை பலிக்கொடுக்க நேரிடும். 

”பருவத்தே பயிர் செய்” என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி

உங்கள் அறத்தை / கடமையை நாளை அல்லது மற்றொரு நாள் செய்துக்கொள்ளலாம் என்று என்னாது அவ்வப்போது தக்க நேரத்தில் செய்க. அப்படி செய்தால் அது உங்களுக்கு தூணாக துணை நிற்கும். அதேப்போல் பருவத்தே செயல்களை செய்தால் நன்று.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”பருவத்தோ டொத்துவாழ்” (ஆத்திசூடி)
“நல்வினை ஆர்க்கும் கயிறு” (திரி.23)

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-கிராதம்-28 இல் வருணனை பற்றி இப்படி சில வரிகள் வருகின்றன. அதில் பருவம் தவறாது பற்றி குறிப்பிடுகிறார். பருவம் தவறினால் இப்புடவியின் தாளம் தவறும். அதனால் அறம் தவறும். (அறம் செய்தால் தான் பொருள் ஈட்ட முடியும். அறம் தவறினால் பொருளும் தவறும்/தீரும் தானே).

“பருவம் தவறாது மழைபொழிவதும் பனிஎழுவதும் வெயில் விளைந்து மூத்து கனிவதும் இப்புடவியின் தாளம் என்று அவர்களின் தொல்பாடல்கள் சொல்கின்றன. அதை அவர்கள் ருதம் என்கின்றனர்” என்றான் சண்டன். “ஆம். அச்சொல் வேதங்களில் அறமென்னும் பொருளில் அமைந்துள்ளது” என்றான் பைலன். “ருதத்தைக் காப்பவன் வருணன் என்று வேதங்களும் சொல்கின்றன. ஓயா தாளம் திகழும் கடலே நிலத்தின் உயிர்களிலும் விசைகளிலும் திகழும் தாளங்கள் அனைத்துக்கும் அடிப்படை.”

பரிமேலழகர் உரை
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.
'(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)' .

மணக்குடவர் உரை
காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம். இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்.

மு.வரதராசனார் உரை
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

சாலமன் பாப்பையா உரை
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Similar to sowing seeds on time to harvest well, If we do right work on appropriate time our wealth will stay with us. However, if we do not do our work on time, our productivity will get affected and we will loose our wealth. Doing things on time is the tool to save our wealth

Questions that I ask to the kid
What will protect your wealth?
Why should you do your work on time? (it will protect you .. also it will protect your wealth). Is it just wealth? or even for health it is applicable ?(yes.. because health is wealth)

பகல்வெல்லும் கூகையைக் காக்கை

குறள் 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
பகல் - pakal   n. பகு²-. 1. Dividing, separating; பகுக்கை. (பிங்.) நெருநைப் பகலிடங்கண்ணி (புறநா. 249). 2. Middle; நடு (திவா.)3. Middle position, impartiality; நடுவுநிலைமை அகல்வையத்துப் பகலாற்றி (பதிற்றுப். 90, 9).4. Middle or main peg in a yoke;நுகத்தாணி. நெடுநுகத்துப் பகல்போல (பட்டினப்.206). 5. Period of two nāḻikai; முகூர்த்தம் (பிங்.) ஒருபகல் காறு நின்றான் (சீவக. 2200). 6.Half of a yāmam; அரையாமம். அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார் (சிலப். 4, 81). 7. Midday,noon; மத்தியானம் Colloq. 8. [T. pagalu,K. pagal, M. pakal.] Day, day time, as dividedfrom the night; காலைமுதல் மாலைவரையுள்ள காலம் பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா. 8). 9.The morning sun; இளவெயில் பாய்குழை நீலம்பகலாகத் தையினாள் (பரிபா. 11, 96). 10. Day of24 hours; அறுபது நாழிகைகொண்ட நாள் (திவா.)ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் (நாலடி, 169). 11.The day of destruction of the universe;ஊழிக்காலம். துஞ்ச லுறூஉம் பகலுறு மாலை (பதிற்றுப். 7, 8). 12. Sun; சூ 

வெல்லும் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்

கூகையைக் - கோட்டான், பேராந்தை; கூவைக்கிழங்கின்கொடி.

காக்கை - காகம்; அவிட்டநாள்

இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி

வெல்லும் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்

வேந்தர்க்கு - வேந்தர் - சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூன்று தமிழரசர்,
வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை

பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்

முழுப்பொருள்
ஆந்தையானது ஒரு பெரிய பறவை. அது பகலில் உறங்கி இரவில் விழித்திருக்கும் பறவை. அது தன் உடலால் (காக்கையை போன்ற சில பிறவைகளை விட) வலிமையானது. அதனை இரவில் வெல்லுவது மிகவும் கடுமையானது இயலாததும் ஆகும். ஆனால் அத்தகைய ஆந்தையை அதனை விட வலு குறைந்த காக்கை பகல் நேரங்களில் வென்றுவிடலாம். 

அதனைப்போன்று தன்னைவிட பெரிய பகைவரையும் ஒரு நாட்டின் அரசர் வென்றுவிட முடியும். ஆனால் அதற்கான தக்க நேரத்தை திட்டமிட்டு காத்து காலம் வந்தவுடன் வெல்ல வேண்டும்.

ஒப்புமை
இவ்வொப்புமையை கம்பரும், 
“வேந்தர், அற்காக்கை கூகையைக் கண்
   டஞ்சினவாம் என அகன்றார்” (கம்ப.கார்முகப்.23) என்று கம்பராமாயணத்தில் பயன்படுத்தியுள்ளார்.

”கடத்திடைக் காக்கை யொன்றே யாயிரம் கோடி கூகை
இடத்திடை அழுங்கைச் சென்றாங் கின்னுயிர் செகுத்த தன்றே” (சீவக.1927)

“காது கொற்ற நினக்கலாமை பிறர்க்கெவ்வாறு கலக்குமோ...
போது பிற்படல் உண்டி தோர்பொருள் அன்றியின்று புணர்த்தியேல்
யாதுனக்கிய லாத தெந்தை வருந்துதல் என்ன இயம்பினான்” (கம்ப.கார்காலப்.69)


மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது.
(எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும் இது காலமறிதல் வேண்டும் என்றது.

மு.வரதராசனார் உரை
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

Thirukkural - Management - Decision Making
Extreme risk takers may venture into any business. But calculated risk takers will not do that. Calculated risk takers venture into business dealings only when they are confident of the possibility of achieving success. So a high achievement orientation is needed for success in business.

Three critical factors influence the
outcome of a decision. They are: 1) time, 2) place, and 3) strength of the doer. Valluvar employs a simile in Kural 481 to make us understand the importance of right time for decision-making. 

A crow can defeat an owl during the day even though an owl is bigger and stronger than a crow. Daytime is not the right time for an owl to challenge a crow. Similarly, if a king wants to defeat his enemies, he has to look for the right  time.

A Crow can defeat an owl by day:
Kings need the right time to win.

In management concepts and practices, there are two types of errors. One is go error and the other is drop error. Go error is carrying out a decision when the time is not right for carrying that out. Drop error is not carrying out a decision when the time is right for carrying that out. Both executing a task when the time is not favorable and not executing a task when the time is favorable will result in failure. Therefore, the right decision in business is to decide when to execute.

கொக்கொக்க கூம்பும் பருவத்து

குறள் 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்

கொக்கு - ஒருபறவைவகை; மூலநாள்; மாமரம்; செந்நாய்; குதிரை

ஒக்க - ஒருமிக்க, கூட, ஒருசேர, சமமாயிருக்க, நிகர்க்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க.


கூம்பும்  - கூம்புதல் - குவிதல்; ஒடுங்குதல்; ஊக்கம்குறைதல்.

கூம்பு - பாய்மரம்; தேர்மொட்டு; பூவரும்பு (தாழைக்கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49). ); சேறு.

பருவத்து - பருவம் - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அதன் - It's   It's   It's 

குத்து - கைமுட்டியால்தாக்குவது; ஈட்டிமுதலியவற்றால்தாக்குகை; உரலிற்குற்றுதல்; புள்ளி; செங்குத்து; நோவு; பிடி; தெருமுதலியவற்றின்பாய்ச்சல்.

ஒக்க - ஒருமிக்க, கூட, ஒருசேர, சமமாயிருக்க, நிகர்க்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க.

சீர்த்துழாய் - துளசிச்செடி.
சீர்த்தி - cīrtti   s. great fame, renown, கீர்த்தி
சீர்த்த - கோபித்தல்; சிறத்தல்; சமயம்வாய்த்தல்; ஓசைஇலயம்படநிற்றல்

இடத்து - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்

ஒரு செயலை செய்வதற்கு பல ஆயுத்தப்பணிகளை நாம் செய்தாலும் அச்செயலை செய்வதற்கான மிகசரியான தருணத்திற்காக காத்திருத்தல் அவசியமாகும். அதுப்போல ஒரு செயலை செய்யும் பொழுது அதனுடைய பலனை அனுபவிக்க சில காலம் ஆகும் அல்லது பலனை அறுவடை செய்ய சரியான ஒரு காலம் தேவையாகும். 

உதாரணமாக விவசாயிகள் தங்கள் காய்க்குலைகள் (நெர்பயிர்களின் காம்புகள்) கூர்மை அடையும் நேரம் காய்க்குலைகள் அறுவடைக்கு ஆயுத்தமாக இருக்கின்றன என்று அறிவார்கள். உடனே அறுவடையும் செய்வார்கள். பூமொட்டுகள் அரும்பாகி முதிர்ந்து மலராகும் காலத்திற்கு சில காலம் முன்பு அறுவடை செய்வார்கள். இல்லையேல் பூமொட்டு மலராகி அறுவடையும் செய்யமுடியாமல் அறுவடை செய்தாலும் பயனற்றதாய் ஆகக்கூடும். அரும்பு முதிரும் முன்பு அறுவடை செய்தாலும் மொட்டு மலராது. அறுவடை பயனற்றதாகும். ஆதலால் தருணம் மிக முக்கியம். முனைகூர்ந்த கட்டத்தை கூர்த்த இடத்து என்கிறார் திருவள்ளுவர். 

ஆதலால் கொக்கைப் போல் சரியான தருணத்திற்கு பொறுமையாக காத்திருத்தல் வேண்டும் அதேப்போல் ஒரு செயலின் விளைவுகள் முனைக்கொள்ளும் காலகட்டத்தையும் சரியாக நோக்க வேண்டும். அவ்வாறு சரியான காலம் வந்தவுடன் காலம் தாழ்த்தாது உடனே (பாய்ந்து) அறுவடை செய்தால் பலனை முழுமையாக அடையலாம்.  குத்து ஒக்க என்று சொல்வது காலம் தாழ்த்தாது பாய வேண்டும் என்பதை குறிக்கவே கூறப்பட்டுள்ளது.

சரியான காலகட்டத்தில் சரியானவற்றை செய்வதே சிறப்பாகும். பொறுமையாக இருந்து சரியான நேரத்தை கணித்து அதனை கூர்ந்து நோக்கி விளைவுகள் கனிந்தவுடன் (மின்னல்வேகத்தில்) பலனை அறுவடை செய்யவேண்டும்.

“மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்பது ஔவையாரின் மூதுரை, எல்லோரும் அறிந்ததே

பெருங்கதைப் பாடல் ஒன்றும் இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது. தெளிவுரை இல்லாமலே விளங்கும் கருத்து.

ஒடுங்கி இருந்தே உன்னியது முடிக்கும் 
கொடுங்கால் கொக்கின் கோள்இன மாகிச் 
சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி 
வலிகெழு வேந்தனை வணக்குதும் (பெருங் 3.17:61-4)

மேலும்: அஷோக் உரை

கூம்புதல் குவிதல் . குவிதல் ஒடுங்குதல் . மலரின் ஒடுக்கம் அரசரின் வினையொடுக்கத்திற்கு உவம மாயிற்று . 'ஓடுமீனோடியுறு மீன் வருமளவும் - வாடியிருக்குமாங் கொக்கு' ( மூதுரை , 16) தனக் கேற்ற மீன்வரும்வரை அது முன்னறிந்து தப்பாமைப் பொருட்டுத் தவஞ்செய்வான் போல் அசைவற்று நிற்றலும் , அது வந்தவுடனே திடுமென்று கொத்துதலும் , அரசன் காலம் வரும்வரை பகைவர் ஐயுறாவாறு அமைந்திருத்தற்கும் அது வந்தவுடன் விரைந்து வினைமுடித்தற்கும் . சிறந்த வுவமமாயின . இதனால் இருப்பு வினைகளின் இயல்பும் விளக்க மாயின


இந்தக்குறள் ஒருவனுக்குப் புரிகிறதா? பொழிப்புரை தெரிந்துவைத்திருப்பார். கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல சரியான தருணத்துக்காக பொறுமையுடன் காத்திருக்கவேண்டும் என்று அர்த்தம் தெரிந்து வைத்திருப்பதை நான் சொல்லவில்லை. இதில் உள்ள இரு சொற்கள் முக்கியமனாவை. கூம்பும் பருவம். கூர்த்த இடத்து. என்ன பொருள் அதற்கு? ஒரு செயலின் விளைவுகள் முனைகொள்ளும் காலகட்டத்தை கூம்பும்பருவம் என்கிறார். கதிர் கூம்பும் பருவம் காய்க்குலைகள் கூம்பும் பருவம். அது முனைகூர்ந்த கட்டத்தை கூர்த்த இடத்து என்கிறார். இந்த வார்த்தையை எவரும் சொல்லாமல் ஒருவன் அவனே அறிந்தான் என்றால் அவன் கவிதை வாசகன். அவனுக்கு புதுக்கவிதை தினத்தந்தி வாசிப்பதுபோல புரியும்.

பரிமேலழகர் உரை
கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க -மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க.
(மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் குத்து ஒக்க என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம் கூறியவாறாயிற்று.).

மணக்குடவர் உரை
காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க. இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்ய வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

ஊக்க முடையான் ஒடுக்கம்

குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற் கொண்ட எண்ணம்; உண்மை.
உடையான் - உடையவர்கள், உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்
ஒடுக்கம் - அடக்கம்; குறுக்கம்; சுருக்கம்; புழுக்கம்; சிறிதுசிறிதாகக்குறைதல்; நெருக்கமானஇடம்; பதுக்கம்; மறைவிடம்; தனியிடம்; வழிபாடு; முடிவு; ஒன்றில்அடங்குகை; இடைஞ்சல்.
பொரு - ஒப்பு; உவமை; எதிர்த்தடை; poru   I. v. i. fight, போர்செய்; 2. compete; 3. come in collision with, தாக்கு; 4. quarrel, வாதாடு; 5. resemble, ஒப்பாகு; 6. join, unite with, be combined, பொருந்து; 7. dash together as waves, be ruffled, அலைமோது.
தகர் - பொடி; தகர்ந்ததுண்டு; ஆட்டுப்பொது; செம்மறியாட்டுக்கடா; வெள்ளாடு; யாளியின்ஆண்; ஆண்யானை; ஆண்சுறா; மேட்டுநிலம்; பூமி; பலாசுமரம்.
தாக்கு - அடி; போர்; படை; வேகம்; பாதிக்கை; சாதனை; குறுந்தடி; இடம்; பெருக்கல்; நெல்வயல்; பற்று; வளமை; ஆணை; நிலவறை; மிகுசுமை; எதிர்க்கை; எதிரெழுகை.
தாக்கற்குப் - தாக்குவதற்கு - 
பேரும் - பெரிதாக
தகைத்து - tkaittu   A symbolic verb, third per son neuter. It is of a similar nature, it is like, it is fit, தன்மையுடையது. (p.) மன்னுயிரோம்புந்தகைத்தே. It is calculated to protect living souls.
தகை - (வி)தடுத்துவிடு; ஆணையிடு; அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.
தகையாற - to take rest.

முழுப்பொருள்
மனதில் ஊக்கம் உடையவர்கள், ஒரு செயலை செய்ய தேவையான வலிமை உடையவர்கள் ஒரு காரியத்தை தேவையில்லாமல் தள்ளிப்போட மாட்டார்கள். ஆனால் ஒரு தேவையுடனும் தள்ளிப்போடுவார்கள். அவர்கள் அக்காரியத்தை செவ்வென செய்ய ஒரு தக்க காலத்திற்காக அடக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்று பொருளாகும். இது ஒரு ஆட்டுகடா தன் எதிரியை தாக்க சற்று பின்வாங்கும். அவ்வாறு பின்வாங்குவது என்பது முன்னே பாய்ந்து எதிரியை வீழ்த்த தான். 

சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது. அதனால் தான் அதனை இங்கு உதாரணமாக கூறுகிறார் திருவள்ளுவர். 



இதையே கொங்குவேளிர் தாம் இயற்றிய பெருங்கதையில் (3.1:30-31), 
“பாடுபெயர்ந்து இடிக்கும் மேடகம் போல 
அகன்றுபெயர்ந்து அழிக்கும் அரும்பெறல் சூழ்ச்சி” என்கிறார்.

“அடங்கவும் வல்லீர் காலம தன்றேல் அமர்வந்தால்
மடங்கல் முனிந்தா லன்ன வலத்தீர்” (கம்ப.மகேந்திரப்.17)

பொதுவாக புழக்கத்தில் உள்ள மற்றொரு சொலவடை, “புலி பதுங்குவது, பாய்வதற்காகத்தான்”. திறமையுள்ளவர்கள், திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் ஊக்கமிருந்தாலும், தகுந்த நேரத்திலேதான் செயலாற்ற முனைவர். அதற்கு முன்பாக ஒடுக்கத்துடன் அடங்கியே இருப்பர். காண்பவர்களுக்கு, இவர்கள் செயலாற்றப் போகிறார்கள் என்னும் எண்ணம்கூட இருக்காது.

மேலும்: அஷோக் உரை

கீழ்காணும் கந்தர் அனுபூதி பாடல் இக்குறளுக்கு ஏற்ற பாடல் இல்லை என்றாலும் தேவையில்லாமல் நல்ல நேரம் கேட்ட நேரம் (அஷ்டமி, நவமி, பிரதமை, கரிநாள், இராகு காலம், எம கண்டம், சந்திராஷ்டமம்) என்று பல செயல்களை தள்ளிபோடுவதை பற்றி பேசும் பாடல் இது. முழுமையான இறை நம்பிக்கை உள்ளவர்கள் தேவையில்லாமல் காலம் தாழ்த்தமாட்டார்கள் என்று இப்பாடல் கூறுகிறது. 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38

......... சொற்பிரிவு .........

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

......... பதவுரை .........
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

“பீமா, உன் உள்ளம் அலையற்றிருக்கிறது. போரின் இன்பத்தை அறிந்து மகிழ்வுறுகிறது. ஆனால் உனக்கு பின்வாங்கத்தெரியவில்லை. பின்வாங்கக் கற்றுக்கொள்ளாதவன் முழுவெற்றியை அடையமுடியாது. முன்கால் வைக்கும் அதே முழுமையுடன் பின்கால் வைக்க நீ கற்றாகவேண்டும்” என்றார் கிருபர். பீமன் புன்னகையுடன் தலைதாழ்த்தினான்.

பரிமேலழகர் உரை
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.
(உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுது போக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர் தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை? கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள்! இந்தியக் கேப்டனின் ஆண்டு வருமானம் 960 கோடி என்கிறார்கள். பெரிய விலையுள்ளது எப்படி விளையாட்டாக இருக்க இயலும். நம்மைப் பொறுத்தவரை தொலைக் காட்சிப் பெட்டிமுன் உட்கார்ந்து சமயம் கொல்வதும் சாராயக் கடைக்குப் போவதும் ஒன்றேதான். அரசியல் செய்திகளோ, இழவுக்கு வந்தவளைத் தாலி அறுக்கச் சொல்கிறது. சூதும் வஞ்சனையும் கொள்ளையும் குரல்வளை அறுத்தலும் குலத் தொழில் என்றானபிறகு, அவர் வலத்தே போனாலும் இடத்தே போனாலும் அவர் குறியை நம் வாயில் செருகாமற் போனால் போதும் என்றாயிற்று.

பிறகு வேறென்ன செய்வது? திருக்குறளுக்கு எம்மிடம் முப்பது பதிப்புக்களும் உரைகளும் உண்டு. ஆங்கில மொழிபெயர்ப்பாக ஜி.யு.போப், வ.வே.சு. ஐயர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஜி.வி. பிள்ளை என்றும் அறியப்பட்ட கோ.வன்மீகநாதன் நூல்கள் உண்டு.

புத்தக வாசிப்பு என்பது ஒரு Ohsessive Compulsive Disorder போலாயிற்று நமக்கு. Cronical Disease எனவும் கொள்ளலாம். யாம் பிறப்பால் நேர்ந்ததுவும் மனதால் தேர்ந்ததுவும் தமிழ் ஒன்றுதான். தமிழனாய்ப் பிறந்தாலும் வேறொரு மொழிமேல் காதலும் பக்தியும் கள்ளப் புருச வெறியும் நமக்கு இல்லை.

திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்ட, ‘திருக்குறள் சொல் அகராதியும் மூலமும்’ என்றொரு நூலுண்டு எம்மிடம். நூலைத் தேடி வாங்கக் காரணம், திருக்குறளின் 1330 குறட்பாக்களும் பயன்படுத்திய 4310 சொற்களின் பட்டியல் உண்டு அதில், அகர வரிசைப்படி. சொல்லிருக்கும் ஆனால் பொருள் இருக்காது. இஃதோர் அகராதி அல்ல, சொல்லடைவு, சொற்றொகை, அர்த்தமாகவில்லை என்றால் Word Index. இந்த நூலில் திருவள்ளுவர் பயன்படுத்திய அனைத்துச் சொற்களும், அச்சொற்கள் இடம்பெற்றுள்ள பாடல்களும் இருக்கும். சொற்களின் தொகையுடன் திருக்குறளின் மூலப் பாடல்களும் சொற்களுக்குப் பொருள் பாடல்களுக்கு உரையும் இருக்காது.

எடுத்துக்காட்டுக்கு, புழுதி என்ற சொல் 1037வது குறளில் கையாளப்பட்டுள்ளது. பழம் என்ற சொல் 1120 வது குறளில் உண்டு. முலை என்ற சொல் 402 மற்றும் 1087 வது குறள்களில். அனிச்சம் எனும் சொல் 90வது, 1111வது, 1115 வது, 1120 வது திருக் குறள்களில் உண்டு. பாடலின் முதல்தொடர் தெரிந்தால் பாடலைத் தேடிவிடலாம் என்பதல்ல இங்கு. சொல் ஒன்று பாடலில் எங்கேனும் ஆளப்பட்டிருக்கலாம், சொல் தெரிந்தால் பாடலைத் தேடிப் போய்விடலாம். இதைப் போல, சங்க இலக்கியங்கள் என்ற தீவிரமான பொருளில் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் பதினெட்டு நூல்களுக்கும் சொல்லடைவு உண்டு. A word Index For Cankam Literature என்று Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. Institute of Asian Studies வெளியீடு. சங்க இலக்கியச் சொல்லடைவு என்று முனைவர் பெ. மாதையன் தொகுத்த இன்னொரு நூலும் உண்டு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

இவ்வளவு இருந்தும் தமிழனுக்கு அதனால் என்ன? சூப்பர் ஸ்டாரின், உலக நாயகனின் ஒரு சினிமாவின் பெயர் சொன்னால் போதும், தரவுகளைக் கூடை கூடையாகக் கொட்டுவான். எங்களூரில் கொச்சையாக வழங்கப்படும் பழமொழி ஒன்றை இலக்கியத் தரத்தில் சொல் மாற்றி எழுதலாம். கலவி செய்ய அறியாதவனுக்கு ஒன்பதங்குல நீளத்தில் குறி அமைந்து என்ன பயன்?
திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்டுள்ள ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்று தனித்தனியாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று நூல்கள் உண்டு. இந்தப் பதிப்பின் சிறப்பு என்ன என்பீர்களேயானால், இது உரைக்கொத்து என்று கூறப்பட்டதால், பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள், பரிதிலார், காளிங்கர் ஆகிய மூன்று முதன்மை உரையாசிரியர்களின் உரைகள் உண்டு. மேலும் ஜி.வி. பிள்ளை என்ற கோ. வன்மீகநாதனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. இவர் Random Rambbings என்ற தலைப்பில் தன்வரலாற்று நூலொன்று எழுதியவர். இன்று அது பதிப்பில் இல்லை. திருச்சி மோத்தி ராஜகோபால் அன்பளிப்பாகத் தந்த படி ஒன்று உண்டு என்னிடம்.

‘திருக்குறள் உரைக்கொத்து’ வாங்க வேண்டுமானால் நீங்கள் திருப்பனந்தாள் காசித்திருமடம் போய்த்தான் ஆகவேண்டும். ஒரு புத்தகம் தேடுவது என்பது சரவண பவனில் காப்பிக் குடிப்பது போன்றதல்ல.
திருக்குறள் பொருட்பாலின் ‘காலமறிதல்’ எனும் அதிகாரத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். இந்த அதிகாரத்தில் சில நல்ல குறட்பாக்கள் உண்டு, எல்லாமே நல்லவையே , என்றாலும். திரும்பத் திரும்பச் செவி மடுக்கும் குறள்கள். சொல் வணிகம் செய்வோர் ஓயாமல் பயன்படுத்துபவை. ‘பகல் வெல்லும் கூகையைக் காக்கை!’, ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’, ‘கருவியால் காலம் அறிந்து செயல்’, ‘ஞாலம் கருதினும் கைகூடும்’, ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ முதலாயச் சொற்றொடர்கள் இந்த அதிகாரத்தின் குறள்களின் பகுதிகள் என்பதறிக. .

இந்த அதிகாரத்தின் ஆறாவது குறள் வாசித்தபோது, புதியதாய்ப் படிப்பது போலிருந்தது.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
என்பதந்தக் குறள். அடிக்கடி சொல்லக் கேட்டிராத இந்தக் குறளின் பொருள் கீழ்வருமாறு.

பரிமேலழகர்: வலி மிகுதியுடைய அரசன் பகைமேற் செல்லாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு, பொருகின்ற தகர் தன் பகை கெடப் பாய்தற் பொருட்டுப் பின்னே கால்வாங்கும் தன்மைத்து என்றவாறு.

மணக்குடவர்: மன மிகுதியுடையவன் கால வரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும் என்றவாறு.

பரிப்பெருமாள்: மணக்குடவர் உரையைப் போன்றே.

பரிதியார்: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான்; எப்படியென்றால், கிடாயானது பின்வாங்குவது போல என்றவாறு.

காலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற்கோள் உடையவனாகிய வேந்தனானவன், மற்று அதற்கு அடுத்தப் பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன் கண் முயலாது ஒடுங்கி இருக்கின்ற ஒடுக்கமானது எத்தன்மைத்தோ எனின், மேற்கொண்டு நிற்கின்ற பொருகிடாய் பொட்டெனத் தலையொடு தலை முட்டுதல் பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு.

 ‘ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
 தாக்கற்குப் பேரும் தகைத்து’
என்ற மேற்சொன்ன குறளின் உரைகள் மேற்கண்டவை. உரையாசிரியர்களின் காலம் அவர்தம் மொழியையும் தீர்மானிக்கிறது. ஐந்து உரையாசிரியர்களிலும் யாவர்க்கும் முன்னவர் மணக்குடவர். அவர் காலம் பத்தாம் நூற்றாண்டு. பரிப்பெருமாள் காலம் பதினோராம் நூற்றாண்டு. பரிதியார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. காலிங்கர், பரிமேலழகருக்கும் முந்தியவர் என்ற குறிப்பு மட்டுமே உண்டு. பரிமேலழகரின் காலம் பதினான்காம் நூற்றாண்டு என்மனார் அறிஞர்.

நாமிங்கு கையாளும் குறளில், பொரு தகர் என்ற சொற்றொடர் எனக்கு அர்த்தமாகவில்லை. முதலில் பொரு எனில் போர் என்பது தெரிகிறது. தகர் எனும் சொல் மிகப் புதிய சொல்லாக இருந்தது. ஆனால் பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள் என்போர் தகர் என்றால் தகர் என்றே கையாண்டுள்ளனர். அவர்கள் காலத்தில் அல்லது புழங்கு மொழியில் தகர் என்ற சொல் இயல்பாக எங்கும் வழங்கப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம். ஆனால் பரிதியாரும், காலிங்கரும் தகர் எனும் சொல்லுக்குக் கிடாய் என்று பொருள் எழுது கிறார்கள். கிடாய் என்ற சொல்லே கடா என்றும் கிடா என்றும் வழங்கப் பெறுகிறது. ஆட்டுக் கடா, எருமைக் கடா என்பன வழக்கில் உண்டு. கூழைக்கடா என்பதோர் வலசை வரும் பறவை என்பதால் குழப்பிக் கொளல் வேண்டா.

மேலும் தெளிவுக்காக, அண்மைக் காலத்து உரைகள் சிலவும் காணலாம்.

சாமி சிதம்பரனார்: வலிமையுள்ளவன் அடங்கி யிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக, ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும்.

நாமக்கல் கவிஞர்: ஊக்கமுடையவன் (காலம் கருதி கலங்காது) அடங்கியிருப்பது, சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்க பின்புறமாக நகருவதை ஒத்தது.

மேற்கண்ட இரு உரையாசிரியர்களும் தகர் என்ற சொல்லுக்கு ஆட்டுக்கடா என்ற தெளிவான பொருள் தந்துவிடுகிறார்கள். என்றாலும் இன்னும் சில உரையா சிரியர்களிடம் கேட்கலாமே என்று தோன்றியது.

வ.உ. சிதம்பரம் பிள்ளை : (வினை செய்தலின் கண்) ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருத்தல், பொருகின்ற செம்மறிக் கடா (தனது பகைக் கடாவைத்) தாக்குவதற்குப் பின் செல்லும் தன்மைத்து.

தேவநேயப் பாவாணர்: வலி மிகுந்த அரசன் ஊக்கமுள்ளவனாயினும், பகை மேற்செல்லாது, காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

தற்போது தெளிவாகத் தெரிகிறது 486 ஆம் திருக் குறளின் பொருள் என்ன என்பது. எளிய மொழியில் சொன்னால் பதுங்குவது பாய்வதற்கே! ஆனால் என் ஈடுபாடு, இங்குத் தகர் எனும் சொல்லின் மீது. கடாய் என்றும் ஆட்டுக் கடா என்றும் குறிப்பாகச் செம்மறி ஆட்டுக் கடா ‘ என்றும் பொருள் தெளிவாகிறது. ஆடுகளில், எனக்குத் தெரிந்து, வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பை ஆடு, கம்பளி ஆடு எனச் சில இனங்கள் இருக்கின்றன. கிடாய் அல்லது கடா என்றால் எந்த ஆட்டினத்தின் கடாவாகவும் இருக்கலாம். தேவநேயப் பாவாணர், மொழி ஞாயிறு என அறியப்படுகிறவர். அவர் தகர் எனும் சொல்லுக்குச் செம்மறியாட்டுக் கடா என்று பொருள் கொள்கிறார் எனில் அது சாதாரணக் காரியமல்ல. Give the Devil its due என்பார்கள் ஆங்கிலத்தில் செல்லமாக. இனிச் சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் காண்போம்.

Rev. G.U. Pope: The Men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.

Vanmeeganathan: The restraint of a man of great might is like a fighting ram stepping hack in order to charge its opponent.

Kaviyogi Shuddhanandha Bharathi : By self-restraint stalwarts keep fit, Like rams retreating but to Butt.
V.V.S. Iyer: The ram Steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy.

மேற்சொன்ன நான்கு மொழிபெயர்ப்புக்களிலும், தகர் எனும் திருக்குறள் சொல்லின் ஆங்கிலப் பதமாக Ram எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்து ‘ஆங்கிலம் – தமிழ்ச் சொற் களஞ்சியம்’, 1963-ம் ஆண்டில் முதற்பதிப்புக் கண்டது. தலைமைப் பதிப்பாசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். அதன்கண், Ram எனும் சொல்லுக்கு ஆட்டுக்கடா, காயடிக்கப்படாத செம்மறி ஆட்டின் ஆண் எனும் பொருளே தரப்பட்டுள்ளது. எனவே

தேவநேயப் பாவாணரின் துல்லியம் நம்மை வியக்க வைக்கிறது. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் மரபியல்
நூற்பா ,

‘மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த என்ப யாட்டின் கண்ணே !’

என்கிறது. நூற்பாவின் பொருள், ஆட்டினத்தின் ஆண் பாலுக்கு, கிடாய், கிடா, கடா ஆகியனவற்றுக்கு, மோத்தை, தகர், உதள், அப்பர் எனும் சொற்கள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. இன்று இந்தச் சொற்கள் எதுவும், . எந்தப் பிராந்தியத்திலாவது, ஆட்டுக்கடாவைக் குறித்துப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தேடிக் கண்டடைய வேண்டும். தொல்காப்பியத்துக்குப் பேரா சிரியர் உரை, மேற்சொன்ன நூற்பா வரிகளுக்கு, ‘இக் கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய’ என்கிறது.
மோத்தை எனும் சொல்லுக்கு Tamil Lexicon, ஆட்டுக்கடாய், Ram, வெள்ளாட்டுக் கிடாய், Goat எனப் பொருள் தரும். தகர் எனும் சொல்லுக்கோ 1. Sheep, ஆட்டின் பொதுச்சொல் (திவாகர நிகண்டு), 2. Ram, செம்மறியாட்டுக் கடா (திவாகர நிகண்டு), 3. Goat, வெள்ளாடு, 4. ஆண் யாளி, 5. ஆண் யானை, களிறு (பிங்கல நிகண்டு ), 6. Male Shark, ஆண் சுறா (சூடாமணி நிகண்டு) எனப் பொருள் தருகின்றது.

மேலும் தகர் எனும் சொல்லுக்கு, இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாத வேறு சில அர்த்தங்களும் உண்டு. உதள் எனும் சொல்லுக்கு Ram, He – goat, ஆட்டுக் கடா, Goat, Sheep, ஆடு எனும் பொருள்களே குறிப்பிடப் பட்டுள்ளன. அப்பர் எனும் சொல்லுக்கும் Tamil Lexicon, Ram, He-goat, ஆண் ஆடு, ஆண் குரங்கு எனப் பொருள் தருகிறது.

என்ன தெரிகிறது என்றால், மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற சொற்கள் ஆட்டுக்கடாவை – வெள்ளாடோ, செம்மறியாடோ – குறித்தன என்பது. நான்கு சொற்களுக்குமே Lexicon தொல்காப்பிய நூற்பாவை மேற்கோளாகத் தருகின்றது. வெள்ளாட்டுக் கடாக்கள் சண்டையையும், செம்மறிக் கடாக்களின் சண்டையையும் கவனித்துப் பார்த்தவர் அறிவார், செம்மறிக் கடாக்கள் எத்தனை மூர்க்கமாகக் கால்களைப் பின்வாங்கி, முன் பாய்ந்து மண்டையில் மோதும் என்பதை. எனவே தகர் எனில் செம்மறிக் கடா என்பதே பொருத்தமாகத் தெரிகிறது.

இன்று வழக்கொழிந்து போயின எல்லாம். ஆடு எனும் சொல்லும் மாய்ந்து மட்டன் எனும் சொல் ஆட்சிக்கு வந்துவிடும் போலும். மலையாளி, எருமைக்கடாவைப் போத்து என்கிறார். ஆண் யானையைக் களிறு என்கிறார். பசுவின் ஆண்பாலை நாம் காளை என்போம். எருது எனும் சொல் ஒன்றுண்டு. இடபம் எனும் சொல்லோ ரிஷபம் எனும் வடசொல்லின் தமிழாக்கம். எருமை ஒரு இனம் என்றாலும் பெரும்பாலும் பெண்பாலை எருமை என்றும் ஆண்பாலை எருமைக்கடா என்றும் சொல்கிறோம். இனத்தின் பெயரைக் குறித்து, ‘யே எருமை’ என்று வசை விளிப்பதும் உண்டு.

திருக்குறளின் தகர் எனும் சொல் குறித்து இத்தனை எழுத வேண்டியிருக்கிறது. நாளை எவனுமோர் அரை வேக்காட்டு அறிஞன் தக்ரா எனும் சொல்லில் இருந்தே தகர் வந்தது, அது பக்ரா எனும் சொல்லின் திரிபு என்பான், இங்குச் சிலர் மண்டையும் ஆட்டுவார்கள்.

தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் பல சுவையான தகவல்கள் தருகின்றன. பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் இளமைப் பெயர்கள் என்கிறது நூற்பா 1500. ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும், சேவும், சேவலும், இரலையும், கலையும், மோத்தையும், தகரும், உதளும், அப்பரும், போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும் யாத்த ஆண்பால் பெயரென மொழிப என்கிறது நூற்பா 1501.
மேற்சென்று, விளக்கமாகவும் சொல்கிறார் தொல்காப்பியர். பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை, தவழ்வனவற்றுக்கும் அது பொருந்தும். சங்க இலக்கிய நூல்கள் என்று இன்று சொல்லப்படும் நாற்பத்து ஒன்றில் ஒரு நூல் முத்தொள்ளாயிரம். அதன் பாடல்களில் ஒன்று –

 ‘அள்ளல்ப் பழனத்(து) அரக்காம்பல் வாய் அவிழ,
வெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப், புள்ளினம் தம்
கைச்சிறகால்ப் பார்ப்பொடுக்கும்’

என்று நீளும். நீர் நிறைந்த வயல்களில் செவ் வாம்பல், சேதாம்பல், அரக்காம்பல் பின்மாலைப் பொழுதில் மலர்ந்து விரிகின்றன, பறவைகள் வெள்ளம் தீப்பட்டனவோ என மருண்டு தங்கள் குஞ்சுகளைச் சிறகினுள் அணைத்து ஒடுக்கிக்கொண்டன என்பது பொருள். இங்குப் பெறப்படுவது, புள்ளினங்களின் குஞ்சுகளைக் குறிக்கப் பார்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்பது.

‘பேடையும், பெடையும், பெட்டையும், பெண்ணும், மூடும், நாகும், கடமையும், அளகும், மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும், அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே ‘ என்பது நூற்பா 1502. பெண் பாலைக் குறிக்க 13 சொற்கள். அன்னப் பேடை கேட்டிருக்கிறோம். பெண் யானையைக் குறிக்க, பிடி எனும் சொல்லை மலையாளம் இன்றும் ஆள்கிறது. ‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி. வானரம் எனில் ஆண்குரங்கு, மந்தி எனில் பெண்குரங்கு.

மூங்கா, வெருகு, எலி, அணில் இவற்றின் இளமைப் பெயர் குட்டி. அவற்றின் குட்டியைப் பறழ் என்றும் சொல்லலாம். புலிப் பறழ் என்கிறது புலிக்குட்டியை சங்க இலக்கியம். எலிக்குஞ்சு என்கிறோம். பறவைகளின் பார்ப்புகளைக் குஞ்சு என்கிறோம். கிளிக்குஞ்சு, கோழிக் குஞ்சு, எலிக்குஞ்சு. அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை என்கிறோம். தென்னம்பிள்ளை என்றும் சொல்வதுண்டு. பிள்ளை என்பதால் அவை வெள்ளாள இனம் என்று கொண்டாடப்படுகிறது என்பது பொருளில்லை.

வெருகு என்றால் பூனை. வெருகுப் பூனை, புனுகுப் பூனை, கடுவன் பூனை என்கிறோம். பூனையைப் பூசை என்கிறது சங்க இலக்கியம். கம்பனும் பூசை என்பான். மலையாளமும் நாஞ்சில் நாடும் பூச்சை என்னும். மூங்கா என்றால் கீரி. கீரியின் ஆங்கிலச் சொல் Mongoose.

ஆந்தை எனும் பறவையையும் மூங்கா என்பதுண்டு. மூங்கா – Mongoose எனும் பெயர்ச் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

எலி போன்ற, ஆனால் எலி அல்லாத, உயிரினம் ஒன்றை மூஞ்சூறு என்பார்கள். யானைமுகனின் வாகனம். எலி வீட்டில் புகுந்தால் கண்டதையும் கரம்பிச் சேதம் செய்யும் என்று முனைந்து துரத்துவோம், பொறி வைத்துப் பிடிப்போம், விடமிட்டுக் கொல்வோம். ஆனால் மூஞ்சூறை எதுவும் செய்வதில்லை.

‘மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு
ஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய’
என்பது தொல்காப்பிய நூற்பா 1505. ‘பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை’ என்பது அடுத்த நூற்பா. அஃதாவது மேற்சொன்ன நான்கின் குட்டிகளைப் பறழ் எனச் சொன்னாலும் மாறுபாடு இல்லை என்பது.

நாயும் பன்றியும் புலியும் முயலும் ஆயும் காலை குருளை என்பர் என்பதும் மரபியலே! நரிக்குட்டியையும் குருளை என்று சொல்லலாம் என்கிறார். கம்பன், பால காண்டத்தில், நகர் நீங்கு படலத்தில், இராமனை வனம் ஏகவும் பரதனை முடிசூட்டவும் பணிக்கும் கைகேயியை இகழ்ந்து இலக்குவன் கொதித்துப் பேசும்போது,
‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை
வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!’
என்பான். அதாவது சிங்கக் குட்டிக்கு இடும் உணவை, நாய்க்குட்டிக்குப் போட எண்ணினாளே என்பது பொருள்.

விரிவாகப் பலவற்றையும் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நரிக்குட்டியையும் குருளை எனலாம். மேற்சொன்ன ஐந்தின் குட்டிகளைக் குட்டி எனலாம், குருளை எனலாம், பறழ் எனலாம். நாய் அல்லாத ஏனைய பன்றி, புலி, முயல், நரி இவற்றின் குட்டிகளைப் பிள்ளை என்றாலும் தவறில்லை என்கிறார். இன்று தொல்காப்பியர் இருந்தால் இலக்கணம் யாத்திருப்பார், குற்றம், கொலை, வஞ்சம், சூது, வழிப்பறி, வன்புணர்ச்சி செய்வோரையும் தலைவர் என்று சொல்லலாம் என.

ஆடு, குதிரை, மான் இனங்களாகிய நவ்வி, உழை என்பனவற்றின் குட்டிகள் மறி எனப்படும். நாஞ்சில நாட்டில், புதியதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டிகளைத் துள்ளுமறி என்பார்கள். மரக்கிளைகளில் வாழும் குரங்கின் பிள்ளையைக் குட்டி எனலாம். மேலும் குரங்குக் குட்டியை மகவு, பிள்ளை , பறழ், பார்ப்பு என்றும் கூறலாம் என்கிறார். யானை, குதிரை, கழுதை, கடமை, பசு இவற்றின் குட்டியைக் கன்று எனலாம் என்றார்.

எருமைக்கன்று, மரைக்கன்று எனலாம். கவரிமான், கரடி இவற்றின் குட்டிகளைக் கன்று எனலாம். ஒட்டகக் குட்டியை ஒட்டகக் கன்று என்றும், யானைக்குட்டியை யானைக் குழவி என்றும், பசு எருமை இவற்றின் கன்றுகளைக் குழவி என்றும் சொல்லலாம் என்கிறார். கடமை மானின் குழவி, மரைமானின் குழவி எனலாம். ஆனால் மக்களின் இளமைப் பெயராக, குழவி, மகவு என்ற இரண்டு சொற்களுமே வரும், பிற வராது என்கிறார்.

மொழிக்குள் எவ்வளவு சுதந்திரம் பாருங்கள். சுத்தமான காற்றைச் சுவாசிப்பது போலிருக்கிறது. கடற்புரத்தில், அருவிக்கரையில், ஆற்றோரத்தில், மலை முகட்டில், அடர் வனத்துள் நின்று ஆழ்ந்து மூச்சு இழுப்பது போல ஆசுவாசமாக இருக்கிறது.

வைக்கோல் படப்பில் நாய் கிடந்தாற்போல, தானும் கல்லாமல், நமக்கும் கற்றுத்தராமல் கெடுப்பார் இல்லாமலே கெடுத்துவிட்டார்களே மாபாவிகள்!

English Meaning - As I taught a kid - Rajesh
A tenacious person, unnecessarily, would not procrastinate a task. However, even such an ardent and might person too can restrain a while from doing a task like a rampant ram (ram is Bighorn sheep. goat like animal) that withdraws before it pounces. Because certain tasks would need right time to succeed (or else it can lead to failure or can be disastrous). Also, remember this restraining is not to take rest, it is only a preparatory step to defeat the opponent and succeed in the task.  

Questions that I ask to the kid
Why sometimes we should be like a ram (bighorn sheep)? 
Can you restrain a while from doing a task? Why?

ஞாலம் கருதினுங் கைகூடுங்

குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

கருதினுங் (கருதினும்) - எண்ணினாலும், ஆசைப்பட்டாலும், நினைத்தாலும், குறிக்கோள் கொண்டாலும், விழைந்தாலும்,

கைகூடுங்  (கைகூடும்) - நடைவேறும், கிடைக்கும், இலக்கை எட்டுவோம்

காலம் - நேரம், பொழுது, பருவம், சமயம்,  தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்;

கருதி - பார்த்து, எண்ணி, ஆய்வு செய்து

இடத்தாற் (இடத்தான்) - செயல் செய்யும் இடத்திற்கு ஏற்ப / தன்மைக்கு ஏற்ப

செயின் - செய்தால்

முழுப்பொருள்
இவ்வுலகையே ஒருவர் விழைந்தால் அல்லது உலகம் போற்றும் சான்றோன் என்னும் உயரிய இலக்குகளை விழைந்தால் அதனை அவனால் அடைய முடியும். அவனுக்கு கிட்டும்.

ஆனால் அதனை அடைவதற்கு தேவையான செயல்களை நன்கு ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய இடத்தினை ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய சரியான நேரத்தை ஆராய்ந்து இருக்க வேண்டும்.

என்னதான் நாம் நன்றாகச் சிந்தித்துச் சரியான செயல்களைத் தேவையான ஆட்களை வைத்துக் கொண்டு செய்தாலும், அவை முழுமையான வெற்றியடையச் சரியான நேரமும் முறையான இடமும் தேவை.

சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்துச் செய்யும் செயல்கள் இமாலய வெற்றியடைய வாய்ப்பு அதிகம். அதே சமயம், தவறான நேரத்தில் செய்தால் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்.

அப்படி தக்க நேரத்தில் தக்க செயலை தக்க இடத்தில் செய்தால் ஒருவன் விழைந்த இலக்கை அடையலாம். அது இவ்வுலகே ஆனாலும் அடையலாம். 

உதாரணமாக சொன்னால் ”இளமையில் கல்” என்று ஔவையார் கூறியுள்ளார்ர். அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஒரு இளைஞராக இருக்கும் பொழுது நாம் தோற்றாலும் தவறுகள் செய்தாலும் நமக்கு மற்றவர்கள் கற்றுக்கொடுப்பர். அதுமட்டுமின்றி இளைஞராக இருக்கும் பொழுது குடும்பம், பொறுப்பு, போன்ற அழுத்தங்களும் கவனச்சிதறல்களும் இருக்காது. மேலும், ஒரு 35 வயதுக்கு மேல் மேற்படிப்பு படிக்கும் பொழுது நமக்கிருக்கும் உத்வேகமும் அச்சமும் இளைஞராக இருப்பதைவிட குறைவாகவே இருக்கும். ”இளங்கன்று பயமறியாது” என்பது. அதனால் தான் காலம் மிக முக்கியம் என்கிறார் திருவள்ளுவர்.

இன்றைக்கு ஒரு வருடத்தில் உலகெங்கிலும் சராசரியாக ஆறு லட்சம் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இவற்றை நாம் ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்கள் என்கிறோம். அவற்றில் பல நிறுவனங்கள் (கிட்டத்தட்ட 75 சதவிகிதம்!) தோல்வியடைகின்றன. தோல்வியடைந்த இந்த நிறுவனங்கள் தொடங்கிய விஷயம் நன்றாகத்தான் இருக்கும். அவர்கள் துவங்கிய சேவையோ, பொருளோ மிகவும் சிறந்ததாக, உபயோகமாகத்தான் இருக்கும். ஆனால் வெற்றி பெற முடியவில்லை! ஏனென்றால் அவர்கள் சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுக்கத் தவறியதால்!

நேரம், இடம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நாம் “சூழ்நிலை” என்று குறிப்பிடலாம். ஒரு நிறுவனம் தொடங்க வேண்டுமென்றால் பலவிதச் சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும். “அரசியல் சூழ்நிலை என்ன? பொருளாதாரச் சூழ்நிலை மேலோங்கி இருக்கிறதா? சமுதாயச் சூழ்நிலை எப்படி இருக்கிறது?” இது போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அதற்கேற்ப ஆரம்பித்த நிறுவனங்கள் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.

நாம் வீட்டில் நமது பெற்றோரிடம் ஒரு காரியம் சாதிக்கவேண்டும் என்றால் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று பார்க்கிறோம் அல்லவா. ஏனெனில் நேரம் முக்கியம். இது செய்யும் செயலுக்கும் தொழிலுக்கும்  மற்றும் நம் வாழ்வில் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.

எப்படிச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகமோ, செய்ய வேண்டிய நேரத்தில் செய்யவில்லையென்றால் இழப்பும் அதிகம்!

ஒருவர் இளமையில் (ஒரு 23 வயதில்) இருந்து செமித்துக்கொண்டு நன்கு முதலீடு செய்துவந்தால் அவர் 60 வயதில் பெறப்போகும் பயன் மிக மிக அதிகம். ஏனெனில் compound interest அவருக்காக நன்கு வேலை செய்யும். அதுவே ஒருவர் நடுவயதில் (35 வயதில்) சேமிக்க துவங்கினால் அவருக்கு 60 வயதில் பெறப்போகும் பயன் சற்றுக்குறைவாகவே இருக்கும். ஆதலால் எப்போது என்பது மிக முக்கியம்.

முறையாக இளம் வயதிலிருந்து சரியான உணவையும் உடற்பயிற்சியையும் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ”கண்கேட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்” செய்து பயனில்லை. ஒருவருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் வந்த பின்பு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதை விட, இளமையில் இருந்தே நல்ல வாழ்க்கை முறையை பேணுவதும் அவ்வப்போது உடலை கண்காணிப்பதும் (மருத்துவமனைக்குச் சென்று முழுப் பரிசோதனை செய்வதும்) ஒருவருக்கு நன்மை பயக்கும். வரும் முன் காப்பது நன்று அல்லவா! பிரச்சனைகளை துவக்கத்திலேயே கண்டறிந்துக் கிள்ளி எறிவதும் மேல்

எப்படி நாம் சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்வது? அனுபவத்தினால்தான்! நம் அனுபவத்திலோ, நம் துறையில் சாதித்தவர்களைப் பார்த்தோ நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் இல்லையா? தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள்! அயராது உழைப்பவர்களுக்குக் காலம் கனியும்! வெற்றி பெற்றவர்கள் பலரைப் பார்த்து நாம் சொல்வதுண்டு, “சரியான நேரத்தில் அந்த இடத்தில் இருந்தார். அதனால் தான் அது சாத்தியமாயிற்று”, “இடம் பார்த்து அடிப்பது, நேரம் பார்த்து அடிப்பது” என்று வழக்கத்தில் நாம் கூறுவோம்.

When: The Scientific Secrets of Perfect Timing by Daniel H. Pink என்ற ஒரு புத்தகம் எந்த நேரத்தில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். ('இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்.

இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் ; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குரிய வினையை அவன் தகுந்த கால மறிந்து இடத்தொடு பொருந்தச் செய்வானாயின் .

வினை பெரிதாதலின் இடமும் வேண்டியதாயிற்று . உம்மை உயர்வு சிறப்பு .

மு.வ உரை
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா உரை
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

Thirukkural - Management - Decision Making
In management concepts and practices, there are two types of errors. One is go error and the other is drop error. Go error is carrying out a decision when the time is not right for carrying that out. Drop error is not carrying out a decision when the time is right for carrying that out.

Both executing a task when the time is not favorable and not executing a task when the time is favorable will result in failure. Therefore, the right decision in business is to decide when to execute.

If a person wants to conquer the world, he can do that, if he waits for the right time and the right place, assures Kural 484. Kural 48 1 emphasizes the importance of time for execution of a task. Deciding when to execute alone is not enough. In addition to choosing the right time to do a task, choosing the right place to carry out the task influences the outcome of an action.

The whole world is his who chooses 
The right time and  place.

காலம் கருதி இருப்பர்

குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காது 
ஞாலம் கருது பவர்.
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

கருதி - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

இருப்பர் - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

கலங்குதல் - நீர்முதலியனகுழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல்.

கலங்காது - தவறாது

ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

கருது பவர் - எண்ணுபவர்

ஞாலம் - உலகம் 

காலம் கருதி இருப்பர்  - காலத்தை எண்ணி காத்திருப்பவர் 

கலங்காது - கலக்கமடையாது 
ஞாலம் கருது பவர் - உலகத்தை வெல்ல எண்ணி உள்ளவர் .

முழுப்பொருள்
இந்த உலகத்தையே வெல்ல வேண்டும், கைக்குள்  கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், எதை பற்றியும் கலங்காமல், சரியான காலம் வரும் வரை காத்து இருக்க வேண்டும்.

அதாவது, நமது எண்ணம், குறிக்கோளிற்கு ஏற்ற சமயம் வரும் வரை, இடைப்பட்ட துன்ப தருணங்கள், தடைகள் அவற்றை கண்டு கலங்காமல், பொறுமையோடு, நமக்கான சரியான நேரம் வரும் வரை காத்து இருக்க வேண்டும்.

இதற்கு சான்றாக பலவற்றை கூறலாம். 

வரலாற்றில் பல இடங்களில், சரியான  சமயம் வரும் வரை காத்து இருந்து படை எடுத்த மன்னர்கள் எளிதாக வென்றதை காணலாம்.

கொக்கு கூட தனக்கு  சரியான உணவு (உறுமீன்) வரும் வரை, சிறிய மீன்களை விட்டு விட்டு பொறுமையோடு காத்து இருக்கும் என்பதை தான், 

 "ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு"

என்று கூறுவார்கள்.

ஒப்புமை
”காலம் ஈதெனக் கருதிய இராவணன் காதல்” (கம்ப.பிரமாத்திரப்.164)

“இடத்தொடு பொழுதும்ம் நாடி எவ்வினைக் கண்ணும் அஞ்சார்
மடப்பட லின்றிச் சூழும் மதிவல்லார்க் கரிய துண்டோ” (சீவக.1927)

“கருத்துற நோக்கிப் போந்த காலமும் நன்று காதல்
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக் கவதி யில்லை” (கம்ப.விபீடணன்.107)

பரிமேலழகர் உரை
கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.'
(தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.

மு.வரதராசனார் உரை
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

சாலமன் பாப்பையா உரை
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.