A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.
Search This Blog
Disclaimar
This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes.
The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection.
Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.)
Wherever possible, I have provided due credit and source links.
If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பசப்புறுபருவரல். Show all posts
Showing posts with label பசப்புறுபருவரல். Show all posts
நயப்பித்தார் - நயப்பி-த்தல் - nayappi- 11 v. tr. Caus. ofநய¹-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல் தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.)
நல்கு - nalku III. v. t. desire, long for, விரும்பு; 2. bestow, grant, ஈ; 3. favour, கடாட்சி.
என்னை அவர்மேல் விரும்பச்செய்தவர், என்னை விரும்பியவர் எனக்கு இன்பம் தந்தவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதனால் நான் துன்பநோயால் வாடுகிறேன். பசலைநோய் என்னை வாட்டுகிறது. ஆனால் என்மேல் அன்பு நல்காதவரை தூற்றுவார்கள் எனில் அதைவிட இப்பசலைநோயை நானே பெற்றுக்கொண்டேன் என்றப் பெயரை பெறுதல் நன்றே என்று தலைவி கூறுகிறாள். ஏன் அது நன்று? ஏனெனில் அப்பிரிவுக்கு சம்மதித்தவள் அவள் தானே. மேலும் ஆயிரம் இருந்தாலும் தன் தலைவனை பிறர் ஏசுவதை தலைவி விரும்பவில்லை.
(தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று. ('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.).
மணக்குடவர் உரை
பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின். இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.
சாலமன் பாப்பையா உரை
என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.
நயப்பித்தார் - நயப்பி-த்தல் - nayappi- 11 v. tr. Caus. ofநய¹-. 1. To induce to love or desire; விரும்பும்படி செய்தல் தலைமகனை நயப்பித்துக் கொள்கையில்(ஐங்குறு. 88, உரை). 2. To persuade, winanother's consent, secure compliance orapproval; சம்மதப்படுத்துதல். (W.) 3. To rendercheap, cheapen; மலிவாக்குதல். (W.) 4. Toimprove, benefit; பயன்படுத்துதல். (W.)
1. தலைவியின் மேனியில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிறமாற்றத்திற்கு காரணம் தலைவனின் பிரிவு. ஏனெனில் அவரை விரும்பச்செய்தவர் அவரே. ”அப்பிரிவால் நான் பசலைநோயால் அவதிப்படுகிறேன். நான் இப்படி துன்பப்பட்டாலும், இப்பிரிவால் அவர் நல்ல நிலைமையில் இருக்கிறார் என்றால் எனக்கு அதுப்போதும். இப்பசலை நோயை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தலைவி கூறுகிறாள்.
2. தலைவியின் மேனியில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிறமாற்றத்திற்கு காரணம் தலைவனின் பிரிவு. ஏனெனில் அவரை விரும்பச்செய்தவர் அவரே. ”அப்பிரிவால் நான் பசலைநோயால் அவதிப்படுகிறேன். ஆனால் இப்பிரிவிற்கு காரணமான அவரை இவ்வுலகமோ நல்லவர் என்றுப் போற்றுகிறது. உண்மையில் என்னிடம் காதலை உண்டுப்பன்னியது அவர் தான். அதனை இவ்வுலகம் மறந்துவிட்டதா அல்லது அறியவில்லையா? அவரை நல்லவர் என்று நினைத்து ஏமாந்து இப்பிரிவை சந்தித்ததற்கு தண்டனையாக நான் இப்பசலைநோயை ஏற்கிறேன்” என்று தலைவி கூறுகிறாள்.
இவ்விரு பொருள்களில், முதல் பொருளே பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில், ஒருவர் மற்ற ஒருவரிடம் ஏமாந்ததாக என்னினால் அதன்பின் அவரிடம் காதல் இருக்காது. பின்பு எப்படி பசலைநோய் வரும்? பொதுவாக பிரிவு வரும் என்பதை பெண்கள் அறிவர். ஆனாலும் காலம் அவர்களுக்கு கைகொடுக்கும் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வர். அது தலைவன் ஏமாற்றுவதாக ஆகாது.
புடைபெயர்ந்தேன் - புடைபெயர்-தல் - puṭai-peyar- v. intr. id. +. 1. To change in condition or position; to become topsy-turvy or overturned; நிலைமாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34).2. To go beyond; to trangress limits; வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி.10). 3. To move, change place; அசைதல். நாப்புடைபெயராது (மணி. 23, 16). 4. To do anaction; தொழிற்படுதல். 5. To rise up, get up;எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்கயாகப். 240).
அவ் - அந்த
அளவில் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்
முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் - “என் தலைவனை தழுவிக்கொண்டு இன்பமாய் இருந்தேன். ஆனால் ஒரு கணம் அவரைவிட்டு விலகிவந்தேன். அவ்வளவுதான். இச்சந்தர்ப்பத்திற்காகதான் காத்திருந்ததுப்போல் இப்பசலைநோய் என்னை அள்ளிக்கொண்டுவிட்டது. இப்பசலைநோய் என்மேல் படர்ந்து நான் துன்பத்தில் வாடுகிறேன்”. அதாவது தலைவனை விட்டு சற்று அசைந்தாலும் துன்பம் வந்துவிடுகிறது. இங்கே காணவேண்டியது சற்று அசைந்தாலும்/விலகினாலும் பிரிவு தரும் துன்பம் என்னும் அம்சம்.
தலைவியின் அனுமதியுடன் தலைவியை அள்ளிக்கொண்டு தழுவி புணர்ந்த தலைவனோ இன்பத்தை தந்தான், ஆனால் பிரிவின் பொழுது தலைவியை அள்ளிக்கொண்ட பசலைநோயோ துன்பத்தையே தருகிறது. இவ்வித்தியாசம் தான் நாம் காணவேண்டிய மற்றோரு முக்கியமான அம்சம் இங்கு
(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது. ('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.).
மணக்குடவர் உரை
முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை. இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.
சாலமன் பாப்பையா உரை
முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
விளக்கு - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை; சோதிநாள்.
விளக்கு - viḷakku III. v. t. polish, brighten, துலக்கு; 2. illustrate, explain, விளங் கச்செய்; 3. sweep, பெருக்கு; 4. solder, பொடிவை.
அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை
பார்க்கும் - பார்த்தல் - pār- 11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்
இருளே - இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்
பிரிவால் வாடும் தலைவி கூறுகிறாள் "விளக்கில் எண்ணெய் வற்றிப்போயோ அல்லது திரி தீர்ந்தோ விளக்கின் ஒளி குன்றி அழியும்பொழுது இருள் வந்து உடனே சூழ்ந்துவிடும். விளக்கு அணைவதற்காகவே காத்திருந்தது போலவே சற்றும் தாமதிக்காமல் இருள் உடனே பற்றிக்கொள்ளும். அதுப்போல என் தலைவன் என்னை தழுவும் பொழுது எப்பொழுது பிரிவான் தழுவதலில் இருந்து நீங்குவான் என்று இந்த பசலை நோய் காத்திருந்தது போல, அவர் பிரிந்த உடன் என்னை வந்து இப்படி வதைக்கிறதே. அதாவது தலைவன் பிரிந்து போருக்கு என்று அல்ல சாதாரணமாக பிரிந்தாலே அவளால் தாங்க முடியவில்லை.
பகலும் இரவும் இருமை. அதுப்போல வெளிச்சமும் இருளும். அதுப்போல இந்த தலைவனுடன் கூடலும் இந்த பசப்பு நோயும் இருக்கிறது என்று தலைவி கூறுவதாகவே இருக்கிறது. கூடலில் இன்பமாய் இருப்பவள் பசப்பு நோயில் துயர்கொண்டு இருக்கிறாள்.
இவள் சொல்வதை பார்த்தால் அணையாவிளக்கு போல நீங்கா தழுவுதல் உண்டோ/சாத்தியமோ?
(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.).
மணக்குடவர் உரை
விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
குறள் 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது
[காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்]
பொருள் உவக்காண்- uvkkāṇ adv. At that time, அப் பொழுது. 2. There, in that place, அவ்விடம். (குறள்.) (p.) உவக்காணெங்காதலர்செல்வார். Lately when my husband left me-- ; உங்கே, உவ்விடம்; உங்கேபார்
எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
ஊர்வது - ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல். முழுப்பொருள் உவக்காண் என்பது இறந்தகாலத்தை குறிக்கும் ஒரு சொல். தலைவி (காதலி) சொல்கிறாள் திருமண உடன்படிக்கைக்கு முன்பான நாட்களில் அவ்வவ்ப்போதுதான் நானும் தலைவனும் ஒன்றுகூடுவோம் /சந்தித்துக்கொள்வோம். அப்பொழுதே தலைவன்(காதலன்) என்னை (காதலி) பிரிந்து சென்றாலே என் மேனி மேல் பசப்பு நோய் ஊர்ந்து பரவிவிடும். ஆதலால் இப்பொழுது திருமண உடன்படிக்கை ஆன பின்பு நாங்கள் இருவரும் ஒன்றாய் ஒரே வீட்டில் வாழும் காலங்களில் கேட்கவாவேண்டும்? அவர் என்னைவிட்டு பிரிந்து சென்றால் பசலை என் மேனி மேல் பரவுதலை பற்றி கேட்கவே வேண்டாம். என்னால் தாங்க முடியாது.
காதலன் நீங்கப் பசலைப்பூத்ததை தம் தோழிக்குச் சொல்லும் குறுந்தொகை வரிகளும் உண்டு.
5) அவர், தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே” (கலி.130:20-21)
“முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391)
“நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினும் நுணுகும் நல்லார்” (சீவக.1880)
மேலும்: அஷோக் உரை பரிமேலழகர் உரை
(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? ('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.). மணக்குடவர் உரை
எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய். இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது. மு.வரதராசனார் உரை
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.
சாலமன் பாப்பையா உரை
முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம். முழுப்பொருள்
தலைவி தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது அப்பிரிவை சமாளிக்க அவள் கையாண்ட முயற்சிகள் என்றால்
1) தலைவனைப் பற்றியே மனதார நினைத்துக்கொண்டு இருந்தாள். அவர்கள் ஒன்றாக பழகிய காலங்களை அசைப்போட்டுக் கொண்டிருந்தாள் அவர்கள் ஒன்று சேர்ந்து வாழப்போகிற காலங்களை கற்பனை செய்துக்கொண்டிருந்தாள்
ஆனால் அவள் முயற்சிகள் அவளை வஞ்சித்துவிட்டது. ஏனென்றால் இவள் செய்வதெல்லாம் பசப்பு / பாசாங்கு. ஏமாற்றுவேலை. அவள் உள்ளுக்குள் ஆழ்மனதில் தலைவனின் பிரிவினால் வாடுகிறாள். அத்துன்பம் அவள் மேல் பசலை நோயாக படர்ந்துவிட்டது. உண்மை வெளிவந்துவிட்டது.
மேலும்: அஷோக் உரை பரிமேலழகர் உரை
('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.). மணக்குடவர் உரை
யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.
சாலமன் பாப்பையா உரை
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.
ஊரும் - ஊர்-தல் - ūr- 4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல் கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல் வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunloosed, relaxed; கழலுதல் அவிர்தொடி யிறையூர(கலித். 100). 6. To itch; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது.--tr. 1. To mount; ஏறுதல் பாசடும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர்(ஐங்குறு. 101). 2. To ride, as a horse; to drive,as a vehicle; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோடூர்ந்தானிடை (குறள், 37).
காதலர் / தலைவன் பிரிந்து இருக்கும் பொழுது காதலி / தலைவி மீத பசலை என்னும் நோய் வந்து விடுகிறது. இந்த நோய் அவர்/காதலர் தந்தது. இந்த பசலை நோய் காதலர் தந்தது என்னும் பெருமையால் அல்லது குணத்தினால் அது தலைவி மேனி முழுவதும் விருப்பி படர்ந்துவிடுகிறது. அவர் தரும் எதுவாக இருந்தாலும் இந்த உடம்பு ஏற்றுக்கொள்ளும் அது நோயாக இருப்பினும்.
பி.கு: பொதுவாக நோய் என்பது ஒரு பாகத்தை மட்டும் தாக்கும். ஆனால் இந்த பசலை உடல் முழுவதும் படர்ந்து இவ்வுலகிற்கு என் மனவருத்தத்தை காட்டிவிடுகிறதே.
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.).
மணக்குடவர் உரை
காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.
சாலமன் பாப்பையா உரை
இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
பசந்த - பசந்து - pacantu n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior kind of Mango fruit; உயர்ந்த மாம்பழம் உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.
என் - என்னுடைய
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.
யார்க்கு - யாரிடம் சென்று
உரைக்கோ- சொல்லுவேன்
பிற - மற்றவர்கள்
முழுப்பொருள்
நான் ஆசையாய் காதலித்த என்னை ஆசையாய் காதலித்த என் காதலருக்கு அவர் கேட்ட பிரிவுக்கு உடன்பட்டேன். ஐயோ! நான் அப்போது உடன்பட்டேன் தவிர இப்படி ஆகும் என்று எனக்கு அப்போது தெரியாது. இவர் பிரிவால் நான் இப்பொது கொண்ட பசலை நிறத்தை (பசலை நோய்) யாரிடம் போய் சொல்வேன்?
பி.கு: அப்படியே சொன்னாலும் பயனுண்டோ? இல்லை. பிரிவுக்கு என் காதலரே மருந்து. ஆதலால் யாரிடம் சொன்னாலும் அவர்களின் ஆறுதல் என்னை சமாதானமும் செய்யாது.
[அது, பசப்புற்ற பருவரல் என விரியும்.அஃதாவது, பசப்புறுதலானாய வருத்தம். இதனைப் 'பந்தெறிந்த வயா' (கலித், குறிஞ் .3) என்பதுபோலக் கொள்க. பசப்பாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப் பெறாதவழி நிகழ்வதாகலின், கண் விதுப்பு அழிதலின்பின் வைக்கப்பட்டது .]
(முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்? ('பிற' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள்.).
மணக்குடவர் உரை
காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன். இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.
மு.வரதராசனார் உரை
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?.
சாலமன் பாப்பையா உரை
என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?.
பசந்தாயிருத்தல், v. noun. Being pleasing, attractive, engaging to the sight.
பசலை - அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை.
'பசந்தாள் இவள்' - தலைவனின் பிரிவால் தலைவி வருத்தம் கொண்டு உடல் வேறு நிறம் பூண்டது
என்பது - என்று கூறுவாட்
அல்லால் - மற்றபட்டி
‘இவளைத் - இந்த அழகு தலைவியை
துறந்தார் அவர்’ - விட்டு விட்டு பிரிந்து இந்த வருத்த நிலைக்கு கொண்டு வந்த அந்த தலைவனை
என்பார் இல் - என்று பழிப்போர் யாரும் இல்லையே
முழுப்பொருள்
இவள் அழகினால் தலைவன் மேல் காமம் கொண்டாள். இப்பொழுது பிரிவைக்கூட தாள முடியாமல் மற்றவர்கள் அறிந்துக்கொள்ளும் அளவிற்கு வாடியுள்ளாள் (தேக நிறம் மாறியுள்ளதாம்). அதாவது பிரிவால் வாடி இருக்கிறாளாம். என்று ஏசூவார்களாம் சுற்றத்தில் உள்ளவர்கள்.
ஆனால் இந்த அழகிய பெண்ணை பிரிந்து துறந்து விட்டு சென்று விட்டானே இந்த நோய் நிலைமைக்கு காரணமான இந்த (பாவி :) ) தலைவன் என்று யாரும் தலைவனை குறை சொல்ல மாட்டார்களாம். ஐயோ என்ன அவலம் இது. ஒருத்தரை மட்டும் குறை சொல்கிறது இவ்வுலகு.
('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.).
மணக்குடவர் உரை
இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
இவள் பசந்தாள் என்பது அல்லால்- இவள் காதலர் வரும்வரை ஆற்றியிராது பசலை கொண்டாள் என்று என்னைப் பழிப்பதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல்- இவளை அவர் கைவிட்டுப் போய்விட்டாரென்று அவரைக் குறை கூறுவார் இவ்வுலகத்துஒருவருமில்லை.
தன்னையே கடிதல் பற்றிப் புலக்கின்றாளாதலின்,'என்பார்' என அயன்மைபடுத்திக் கூறினாள்.
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கலந்திருந்தான் கனிந்திருந்தேன் கைகள் தமக்கிடையில்
பிணைந்திருந்தேன் விட்டுப் பிரியாமை வேண்டி நின்றேன்
நோய் - வியாதி, துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு, நோ
பசலை - அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை.
தந்து - தருதல்
முழுப்பொருள்
என்னை பிரிந்து செல்லும் பொழுது என் காதலர் என் மேனி அழகினையும், நாணனத்தினையும் கொண்டு சென்றார். அவர் இல்லாமல் எனக்கு ஏது அழகு ? அவரை காணாமல் நான் எப்படி வெட்கபடுவேன் ? என் நினைவாக என் அழகினையும் அவர் முன் நான் நாணி வெட்கம்கொண்ட சித்திரங்களை மனதில் எடுத்து கொண்டு சென்றாரோ ?
அதற்கு பதிலாக அவர் எனக்கு கொடுத்தது காமநோயும் (துன்பம்), பசலையும் தான். இந்த காமநோய் என்பது அவரது பிரிவினில் அவரை நினைத்து நான் கொண்ட மன வருத்தம். அவர் இல்லாமல் என் மேனியில் வேறுபட்ட (காம) நிறம் ஒன்று பூண்டு உள்ளது.
இங்கு கைமாறு என்று கூறப்பட்டுள்ளது. கைமாறு என்பது கொடுத்த உடன் திரும்ப பெருவது. ஆதலால் இங்கு தலைவனை பிரிந்த உடனேயே தலைவிக்கு பசலையும் நோயும் அவளை ஆட்கொண்டதாக பொருள்.
தலைவியின் பசலை நோயை தலைவன் வந்து தொட்டாலே ஒழிய தீராது.
அழகும் வெட்கமும் நோயிற்கும் பசலைக்கும் ஈடாகாது (எதிர்நிரை அணி). ஆதலால் அவர் மறுபடியும் வந்து எனது அழகினையும் நாணத்தினையும் தந்தால் தான் (என்னை தொட்டால் தான்) இந்த நோயும் பசலையும் தீரும் என்று குறிப்பு அறியலாம்.
- நோய் என்று வார்த்தைக்கு குற்றம் என்று பொருள் கொண்டால் - பிரிந்தவர் இன்னும் வரவில்லை - ஆக அவரை பிரிய விட்டது எனது குற்றம் என்றும் கூட கொள்ளலாம். ஆதலால் தான் இந்த நோயில் அவள் வாடுகிறாள்.
'அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.
விளக்கம்
(எதிர் நிரல் நிறை. 'அடக்குந் தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா,' என்பதாம்.)
நோயும் பசலையும் கைம்மாறாத் தந்து- நம் காதலர் நம்மைவிட்டுப் பிரியும் போதே இக்காம நோயையும் பசலையையும் எதிரீடாகத் தந்துவிட்டு; சாயலும் நாணும் அவர் கொண்டார்-என் மேனியழகையும் நாணையும், தம்முடன் கொண்டுபோய் விட்டார்.
அவர் திரும்பி வந்தாலொழிய என் மேனியழகும் நாணும் திரும்பாவென்பதாம்.சாயலுக்குப் பசலையும் நாணுக்கு நோயும் ஈடாதலால் எதிர்நிரனிறை.
மணக்குடவர் உரை
மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து. மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமைற் கூறியது.
சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.
மு.வ உரை
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரிவருத்தனை யணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே
--(தண்டியலங்காரம், 87)
பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர். அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
--(திருக்குறள், 1183)
இது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.
பாடல்பொருள்
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
அணிப் பொருத்தம்
இப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.
சாயல், நாண் என்ற சொற்களுக்கு ஏற்ப பசலை, நோய் என்ற சொற்களை வரிசைப்படக் கூறாமல் முறைமாற்றி அமைத்துள்ளமையால் எதிர் நிரல் நிறை அணி ஆகும்.
குறுந்தோகையும் பசலையும் சினிமாவும்
1) காதல் கோட்டை
பாடல்: மொட்டு மொட்டு மலராத மொட்டு
2) என் ஸ்வாசகாற்றே
பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய்
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
நூல்: குறுந்தொகை (#27)
பாடியவர்: வெள்ளிவீதியார்
சூழல்: பாலைத்திணை : காதலியைப் பிரிந்து செல்கிறான் காதலன். ‘இந்தத் துயரத்தை இவள் எப்படித் தாங்குவாளோ!’ என்று தோழி கவலைப்படுகிறாள். அவளுக்குக் காதலி சொல்லும் பதில் இது
(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)
நல்ல பசுவின் இனிமையான பால். அந்தப் பாலைப் பசுவின் கன்று குடிக்கவேண்டும், அல்லது அது பாத்திரத்தில் கறக்கப்பட்டு மற்றவர்களுக்காவது பயன்படவேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் அது தரையில் சிந்தினால் வீண்தானே?
அதுபோல, தேமல் படர்ந்த என் பெண்மையும் மாந்தளிர் நிற அழகும் எனக்கும் பயன்படவில்லை, என்னுடைய காதலனுக்கும் இன்பம் தரவில்லை. பசலை படர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.
(மேலே உள்ள கன்றும் பாடலுக்கு மற்றுமொரு விளக்கம். நன்றி: மாதவிப் பந்தல்)
நல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும்! இல்லை கலத்தில் கறக்கணும்! ஆனா இப்படி நிலத்தில் வீணே வழிகிறதே!
எனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வரியுள்ள அல்குலும் (பெண் உறுப்பும்), பசலையால், வீணே அழிந்து உழல்கிறதே!
(*அல்குல் = இடுப்பு (அ) பெண்ணுறுப்பு, அவ்வக் கவிதையில் இடத்துக்கு ஏற்றாற் போல்)
பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனைகள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு! ஆனால் பெண்கள்? = வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!
அதிலும் உறுப்பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!