Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_008. Show all posts
Showing posts with label Athikaaram_008. Show all posts

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

குறள் 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]
 
பொருள்
அன்பின் - அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

வழியது - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

உயிர்நிலை - உடல், உயிர்தங்கும்இடம்; உயிரின்உண்மைவடிவம்; பிராணாயாமம், உட்கருத்து

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

நிலை  - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இலார்க்கு - இல்லாதவர்க்கு 

என்பு  - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்

தோல் - சருமம்; உடம்பின்; மேலுள்ளதோல்'புறணி; விதையின்மேற்றோல்; கேடகம்; துருத்தி; மெல்லென்றசொல்லால்விழுமியபொருள்பயப்பச்செய்யும்நூல்; புகழ்; அழகு; சொல்; யானை; தோல்வி; நற்பேறின்மை; உடம்பு; பக்கரை; மூங்கில்.

போர்த்த - போர்த்தல் - தரித்தல்; மூடுதல்; சூழ்தல்.

உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

முழுப்பொருள்
அன்பின் வழியில் ஒருவர் இருப்பார் என்றால் அவரிடத்தில் உயிர் தங்குகிறது என்று அர்த்தம். உயிர் இல்லை என்றால் அவ்வுடம்பு ஒரு பிணத்திற்கு சமம். ஆதலால் அன்பு இல்லாத ஒருவன் எலும்புக்கூட்டை தோல் போர்த்திய ஒரு உடம்பு என்றே நினைப்பர் மக்கள். அந்தப் பிணத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. பிணம் துர்நாற்றம் அடிக்கும். கிருமிகள் மொய்க்கும். எதிர்மறை சிந்தனைகள் மேலெழும் ஆதலால் பிணம் சுற்றி இருப்பவர்களுக்கு கேடு விளைவிக்கும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

மு.வரதராசனார் உரை
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அன்பற்ற மனிதன் உயிரற்ற உடலே.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
புறம்பு - puṟampu   n. புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்
 
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

எல்லாம் - முழுதும்

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

யாக்கை - கட்டுகை; உடம்பு.

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

இலவர்க்கு - இல்லாதவர்க்கு 

முழுப்பொருள்
அகத்தின் உறுப்பு என்றால் அது அன்பு தான் என்றென்கிறார் திருவள்ளுவர். ஒருவர் அகத்தில் அன்புடன் இருந்தால் தான் அவர் உயிருடன் வாழ்கிறார். அப்படி அன்பு இல்லை என்றால் மற்ற உறுப்புகள் புறத்தில் இருந்தும் என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அன்பு இல்லையென்றால் இல்லறம் சிறக்காது. 

1) புற உறுப்புகள் என்று  ஐம்புலன்களானமே  மெய் (உடல்) கண் செவி வாய் மூக்கு ஆகியவற்றால் நுகரும் இன்பம் இன்பம் அல்ல. உண்மையான அன்பு இருந்தால் அகத்தால் உணரும் இன்பமே இன்பம்.

2)புறம் என்றால் நம்மை சுற்றியுள்ள ஆடம்பரங்கள் - பெரிய வீடு, வேலையாட்கள், தங்க நகைகள், பகட்டான உடைகள், ஊர் சுற்ற ஊர்திகள் (கார்), வெளிநாட்டு பயணங்கள், வங்கிகளில் அதிக பணம், பல சொத்துக்கள்.  இவற்றை நுகர்வது ஐம்புலன்கள் தான்.  

உண்மையான அன்பு இல்லை என்றால்  புறவயமான ஆடம்பரங்கள் இருந்தும் பயனில்லை. உதாரணமாக வீட்டிலே எல்லா ஆடம்பரமும் இருந்தும் மனதில் உண்மையான அன்பு இல்லை என்றால் நம்மிடம் நமது கணவனோ மனைவியோ கூட இருக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாக புறவயமான ஆடம்பரங்கள் இருந்தாலும் உண்மையாக மனதார பேச ஒருவர்க்கூட நம்மிடம் இல்லை என்றால் அதற்கு காரணம் நம் மனதில் அன்பு இல்லை என்பது தான் என்றால் பின்பு இந்த ஆடம்பரங்களால் என்ன பயன் ?

(நாம் அன்புடன் இருந்தும் மற்றவர்கள் நம்முடன் இல்லாமல் இருக்க வேறு சில காரணங்கள் இருக்கலாம். அது அவர்களின் குறையாக இருக்கலாம். அவற்றை நமது குறையாக இங்கு சொல்லவில்லை)
 
மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
‘யாக்கைக்
கென்பிற்சிறந் தாயதோர் ஊற்றமுண் டென்னலாமே
அன்பிற்சிறந் தாயதோர் பூசனை யார்கணுண்டே” (கம்ப.கடல் தாவு 61)

பரிமேலழகர் உரை
யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

மணக்குடவர் உரை
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

மு.வரதராசனார் உரை
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..

சாலமன் பாப்பையா உரை
குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அன்பில்லாதவர் அழகாயிருந்தாலும் எடுபட மாட்டார்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

இல்லா - இல்லாத 

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வாழ்க்கை  - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

வன்பாற்கண் - வன்பார் - இறுகியபாறைநிலம்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

வற்றல் - வடிகை; வறளுகை; உலர்ந்தது; உலரவைத்தகாய், இறைச்சிமுதலியஉணவு.

மரம்  - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை

தளர்ந்து - தளிர்தல் - துளிர்த்தல்; தழைத்தல்; செழித்தல்; மகிழ்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
அகத்தில் அன்பு இல்லை என்றால் அத்தகைய உயிர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா ? பாலைநிலத்தில் வற்றிய மரம் மீண்டும் தளிர்விடும் என்பதுபோல் இருக்கும். 

நாம் கவனிக்க வேண்டியவை 
1. அகத்தில் (மனதில்) அன்பு இருக்க வேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர். வெளிவேஷத்திற்கு அல்ல. 

2. உயிர் வாழ்க்கை என்றென்கிறார். அதாவது எல்லா உயிர்களுக்கும் இது பொருந்தும். மனிதனுக்கும் மட்டும் அல்ல. 

3. வற்றல் மரம் - அதாவது எல்லா மரங்களும் ஈரத்தன்மையுடன் தான் இருக்கும். அன்பு இருக்கும். ஆனால் மரத்தில் ஈரத்தன்மை குறைந்தால் மரம் பட்டுப்போய்விடும். அதாவது அன்பு குறைய குறைய வாழ்வின் பசுமை/மகிழ்ச்சி குறையும். சரியான தட்பவெட்பநிலைகள் இருந்தும் இலைகள்  துளிர்க்காத மரங்கள் உயிர் அற்ற மரம். 

பட்டுப்போன மரம் நிழல் கூட தராது. ஆதலால் அதன் கீழே நிழலுக்கு கூட ஒதுங்க முடியாது. அம்மரம் இந்த பூமிக்கு பாரம். அதுப்போல மனதில் அன்பு இல்லாதவர்கள் உயிர் இல்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களிடம் அன்பு துளிர்க்கும் என்று எதிர்பார்க்க கூடாது. 

பூதத்தாழ்வார், “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்” என்றார். அன்பெனும் விளக்கிலே, ஆர்வமென்னும் நெய்யை ஊற்றி, இன்பத்தோடு, நெகிழ்ந்த சிந்தையோடு,  ஞானச் சுடர்விளக்கேற்றினாலே நலமுள்ள வாழ்வு; அது நாராயணனுக்கு மட்டுமல்ல, நானிலத்தோர் எல்லோருக்கும்தான்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.).

மணக்குடவர் உரை
தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.

மு.வரதராசனார் உரை
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அன்பற்ற வாழ்க்கை அர்த்தமற்றது.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

குறள் 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
அறத்திற்கே - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியார் - அறிய மாட்டார்கள்.; அறியாதவர்கள் 

மறத்திற்கும்  - மறம் - வீரம்; கோபம்; பகை; வலிமை; வெற்றி; போர்; கொலைத்தொழில்; யமன்; கெடுதி; பாவம்; கலம்பகத்தின்ஓர்உறுப்பு; மறவர்குலம்; மயக்கம்.

அஃதே - அஃதாவது

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

முழுப்பொருள்
அறத்திற்கு அன்பே துணை என்று மட்டும் சொல்லுவோர் அறியாதவர்கள். ஏனெனில் மறத்திற்கும் அன்பே துணையாக இருக்கும். மறம் என்றால் கோபம், பகை என்ற பொருள்களும் உண்டு. ஆதலால் உன்னிடம் ஒருவன் கோபமாக நடந்தாலோ அல்லது பகையோடு இருந்தாலோ அவரிடம் அன்பு செலுத்துவதே மருந்தாக அமையும். 

நோய் வராமல் எச்சரிக்கையை இருப்பது சாலச்சிறந்தது. ஆனால் நோய் வந்துவிட்டால், "நோயிற்கு மருந்தே துணை". "பித்தத்திற்கு இஞ்சி நல்லது" என்றால் பித்தம் நீங்க இஞ்சி நல்லது. நோய் நீங்க மருந்து உதவும். ஆதலால் மறம் (கோபம், பகை) நீங்க  அன்பு மருந்தாக உதவும்.

அன்பு செலுத்தினால் தான் பகை நீங்கும். அப்படியில்லையேல் பகை இருந்துக்கொண்டு முகத்தில் சிரிப்பும் மனதில் மகிழ்ச்சியும் நீங்கிவிடும். பகைக்கு பகை செய்தால் ஒன்றுக்கு ஒன்று என்று நீண்டுக்கொண்டுப்போகுமே தவிர முடியாது. பகையோட பிரச்சனை என்ன என்றால் எதிராளி மட்டுமல்ல தானும் நிம்மதியின்றி பகையுள்ளவறை வாழ நேரிடும்.

ஆதலால் ஒருவன் தவறு செய்தால் துவக்கத்தில் இறங்கிச்சென்று அன்பு செலுத்து. ஆனால் அவன் மாறவில்லையென்றால் அதற்கான நிவாரணம் வேறு. குறள் 469 "நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை" என்று திருவள்ளுவர் அதற்கு விடை கூறியிருக்கிறார். 

"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே" என்பது ஆன்றோர் வாக்கு.  அன்பின் வழிநின்றலே அறச்செயல்கள் செய்வதற்கு துணையாகும் என்பது எல்லோரும் அறிவதே. ஆனால் அன்பின் வழிநிற்றல் அறச்செயல்களுக்கு மட்டுமே துணையென்பது அறியாதோரின் கூற்று.  அன்பினால் மறவழியோரையும் மாற்றி நல்வழியில் ஆற்றுபடுத்தக்கூடும் என்பதாலேயே, மறத்திற்கும் அன்பே துணை.

“வாய்மையே வெல்லும்”, என்ற கூற்று எல்லோரும் விரும்பும், சத்திய வாக்கு. ஆனால், எத்துணை பேர் நம்பும் வாக்கு? அதற்கு எத்தனைப் பொறுமை தேவைப்படுகிறது?  இக்கூற்றும், பகவத்கீதையில் காணும், “கடமையைச் செய் – பலனை எதிர்பாராதே”  என்பதும், அன்புக்கும் பொருந்தும். எதிர்வினை எதிர்பார்ப்போடு செய்யப்படும் எதுவும், பண்டமாற்று வணிகம்தான். அன்பைகூட எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் போதுதான், அதன் முழுவீச்சும் பிறரை சென்றடைகிறது; அதனால் பகைகொண்டோர், மற்றும் மறவாழ்வினர் மனங்களும் மாறுகிறது

‘அன்பாய் இரு ஆனால் ஏமாளியாய் இராதே’ என்ற சொல்வழக்கு ஒன்றுண்டு.  “ராமக்ருஷ்ண பரம ஹம்ஸரின்”, “ பாம்பும், துறவியும்” குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது



ஒரு வயல்வெளியில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த வழியாகப் போவோர் வருவோரை எல்லாம் அது கொத்தியது. அதனால் அந்த வழியாகச் செல்வதற்கே மக்கள் அஞ்சினர். ஒருநாள் துறவி ஒருவர் அந்த வழியில் சென்றார். அந்தப் பாம்பு அவரையும் கொத்துவதற்குச் சீறிக்கொண்டு வந்தது. அதைக் கண்டு வருந்திய துறவி இறைவனின் பெருமையை அதற்க்கு விளக்கி, "எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது" என்று அஹிம்சைத் தத்துவத்தைக் கூறி அதை நல்வழிப்படுத்தினார். பின் தன் வழியே சென்று விட்டார். 

சில வருடங்கள் சென்றன. துறவி மீண்டும் அந்த வழியாக வந்தார். தான் உபதேசித்த அந்தப் பாம்பு எப்படி இருக்கிறது என்பதைக் காண விரும்பினார். தன பற்றின் அருகே அந்தப் பாம்பு குற்றுயிரும் குலையிருமாகக் கிடந்தது. அதைப் பார்த்த துறவி மிகவும் வருந்தினார். "அடடா! ஏன் எப்படி ஆகிவிட்டாய்?" என்று அன்போடு அதனிடம் கேட்டார். அதற்கு அந்தப் பாம்பு, "நீங்கள் கூறியதையே நான் பின்பற்றினேன். யாருக்கும் துன்பம் தராமல் அமைதியாக வாழ்ந்தேன். அதனால் சிறுவர்கள் என்னைக் கல்லால் அடித்தனர். வாலைப் பிடித்துச் சுற்றித் தரையில் வீசினர். கம்பால் அடித்தனர்" என்று சொல்லி வருத்தப்பட்டது. 

பாம்பு சொன்னதைக் கேட்டதும் துறவி, "முட்டாள் பாம்பே, உன்னைக் கடிக்க வேண்டாம், யாருக்கும் துன்பம் தர வேண்டாம் என்றுதான் கூறினேன் ஒழிய, யாரிடமும் சீறக்கூடாது என்று கூறவில்லையே! நீ சீறியிருந்தால் அவர்கள் உன்னருகில் வந்திருப்பார்களா? யாரையும் கொல்லக் கூடாது. ஆனால் தற்காப்புக்காக அச்சுறுத்தலாம்" என்று கூறினார். பாம்பும் தன் தவறை உணர்ந்து கொண்டது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”அற்பின் நின்றன அறங்கள்” (கம்ப.நாட்டுப் 59)


இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம் நாம் நம் ஆசிரியர்களை இயல்பாக நினைவுகூர்கிறோம். நான் நித்ய சைதன்ய யதியை நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நம் ஆசிரியர்கள் நம்மிடம் அடிப்படை விஷயங்களைப் பற்றியே உரையாடுகிறார்கள். இல்லை, அவர்கள் எதைப்பற்றி உரையாடினாலும் அதெல்லாம் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன.

நித்யா ஒருமுறை குருகுலம் வழியாக நடந்துகொண்டிருந்தார், கீழே சமையலறையில் யாரோ டீ போடும் வாசனை. ‘அங்கே டீ போடுகிறவன் முன்னரே தண்ணீரில் சீனியைப் போட்டுவிட்டான். டீ சுவை கெட்டுவிட்டது’ என்றார் நித்யா. சுவையறியும் மூக்கு. அவரது எல்லாப் புலன்களும் உலகச்சுவைக்காகத் திறந்திருந்தன. ஒரு நல்ல அவியல் வைக்கத்தெரியாதவனால் எப்படி அத்வைதத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று கேட்டவர் அவரது குரு.

இது ஓர் அன்றாட விஷயமாக இருக்கலாம். ஆனால் நித்யா தொடர்ந்துசென்றார்.  ‘அப்பா தன் பிள்ளைக்கு பொம்மையைக் கொடுத்து பத்திரமாக விளையாடு என்று சொல்வது போல இந்த உலகம் நமக்களிக்கப்பட்டிருக்கிறது. இதை நம் உச்சம் வரை சென்று அறிவதும் அடைவதும் நம் கடமை. இந்த உலகில் இருந்து மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் அடைவதென்பது மனிதனின் சலுகை அல்ல. மனிதனின் உரிமைகூட அல்ல. அது அவன் கடமை, பொறுப்பு.’

அடிப்படை விஷயங்களை அன்றாடவாழ்க்கையின் எந்தப்புள்ளியில் இருந்தும் தொடங்கலாம் என்று நித்யா சொல்வதுண்டு. எதை நாம் ஆழமாக வினவிக்கொண்டாலும் அது அடிப்படை வினாவாக ஆகும். ஓர் அடிப்படை வினாவை எழுப்பிக்கொள்வது எப்படி? நித்யா அதை எப்படிச்செய்வார்? அவரது அருகிருந்து அதை நான் கவனித்திருக்கிறேன். அதுவே நான் அவரிடம் பெற்ற கல்வி.

நித்யா அந்தச் சொல்லையே முதலில் கவனிப்பார். அதுதான் ஆணிவேர். நாம் சாதாரணமாக ஒன்றைச் சிந்திக்கும்போது அதன் சமகால, அன்றாடப் புழக்கத்தைக்கொண்டே புரிந்துகொள்ள முயல்வோம். அறம் என்ற சொல்லுக்கு இன்று இங்கே என்ன அர்த்தம் என்பதே நம் கேள்வியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாகப்போனால் அதன் வரலாற்றுப்புலம் சார்ந்து யோசிப்போம். வரலாறென்பது நம் கண்ணுக்கெட்டியதூரம் வரைதான். மொழி அதற்கும் அப்பால் செல்கிறது. அடிவேர் வரை செல்கிறது. ஆகவேதான் தத்துவத்தில் மொழியை எப்போதும் சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்கிறார்கள்.

அது ரஸ்ஸலின் வழி. இந்திய ஞானமரபில் நெடுங்காலமாக மீமாம்சகர்கள் அதையே கடைப்பிடித்தனர். அதற்கு வியாகரணம், சந்தஸ் என்னும் இரு முறைகளை வைத்திருந்தனர். இலக்கணம், ஒலியமைதி. ஒரு அறம் என்ற உருவகம் ஒரு ‘பேக்கேஜ்’. அதில் அறம் என்னும் சமூக அமைப்பு, சமூக ஆசாரம், சமூக நம்பிக்கை ஆகியவை உள்ளன. அவை எல்லாம் அச்சொல்லில் அடங்கியிருக்கின்றன. அச்சொல் அவற்றைக் கட்டும் பொட்டலமல்ல. அந்தக் கருதுகோள் ஒரு மரம் என்றால் அதன் விதை அது.

‘இவ்ளோ பெரிய விமானத்துக்கு எப்டிடா பெயிண்டடிப்பாங்க?’ என்று ஒரு பைத்தியம் கேட்டபோது ‘மேலே போறப்ப சின்னதாயிடும்ல. அப்ப அடிச்சிருவாங்க ‘ என இன்னொரு பைத்தியம் பதில் சொன்னதாகச் சொல்வார்கள். எதுவும் கொஞ்சம் மேலே, கொஞ்சம் தூரத்தில் சென்றால் சிறிதாகிவிடுகிறது. எளிமையாகக் கையாளக்கூடியதாக ஆகிவிடுகிறது. காலத்தில் பின்னகரும்போது விடைகள் கைக்கடக்கமாக ஆகிவிடுகின்றன. காலத்தில் பின்னகர சொல் ஒன்றே சுட்டுவழி.

சொல் என்பது சிலை, பொருள் என்பது தெய்வம். அளவிடமுடியாத ஒன்று அளவிடக்கூடியதாக நம்முன் அமர்ந்திருக்கிறது. காளிதாசன் சொன்னார் ‘சொல்லும்பொருளும் போல அமைந்தவர்கள் பார்வதிபரமேஸ்வரர்’ என. பிரிக்கமுடியாதவர்கள். ஒருவருக்கொருவர் ஊக்கவிசையானவர்கள்.

நித்யாவின் வழிமுறைப்படி நானும் அறம் என்ற சொல்லையே எடுத்துக்கொள்கிறேன். எந்தக் காலத்தில் இச்சொல் தமிழில் புழக்கத்தில் வந்தது? மொழியாராய்ச்சியில் அச்சொல்லை நோக்கிக் கேட்கவேண்டிய முதல்வினா அது காரணப்பெயரா இடுகுறிப்பெயரா என்பதே. காரணப்பெயர் என்றால் அது பின்னாளில் இங்கே வந்தது.

உதாரணமாக, புரட்சி. பாரதி உருவாக்கிய சொல்லாட்சி. பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய அரசியல் கிளர்ச்சிகளில் இருந்து பிறந்தது. முழுமையான மாற்றம், ஒட்டுமொத்தமான மாற்றம், தலைகீழான மாற்றம் என்பதைச் சுட்டுகிறது. புரள்வது என்ற சொல்லின் நீட்சியாக வந்தது. நாம் படிப்படியான மாற்றத்தையே அறிந்திருக்கிறோம். புரட்சி நமக்கு ஒரு புதிய செய்தியே.

இடுகுறிச்சொற்கள் அக்கருத்துக்கு இடப்பட்ட ஒலிக்குறிப்புகள் மட்டுமே. ஒரு குழந்தை உடலும் உயிருமாகப் பிறப்பதுபோலக் கருத்து சொல்லும் பொருளுமாகவே மானுட மனதில் உருவாகிறது. அதற்கு சொல்லால் பெயரிடப்படுவதில்லை. அந்தச் சொல்லே அதைக் கொண்டு செல்கிறது, விரியச்செய்கிறது.

இடுகுறிச்சொற்களை ஆராயும்போது சிறந்த வழி என்பது அச்சொல்லின் அருகே உள்ள சொற்களை கவனிப்பது. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி அதற்கு மிகச்சிறந்த சாதனம். அதன் அகரவரிசை நமக்கு ஒரு சொல் கூடவே கொண்டுவரும் பிற சொற்களை சுட்டிக்காட்டி அபாரமான மனவெளிச்சங்களை அளிக்கிறது.

அறம் என்ற சொல்லின் அருகே அமர்ந்த சொல் அறுதல். அதுவே அதன் மொழிமூலமாக இருக்கலாம். அற்றம் என்றால் இறுதி. அற்றுபடி என்றால் திட்டவட்டம். அதாவது அறுத்துச் சொல்லுதல், வரையறைசெய்து சொல்லுதல், கடைசியாகச் சொல்லுதல் என்ற தொனியில் இச்சொல் பிறந்திருக்கலாம்.

அறம்பாடுதல் என்கிறோம். பெரும் துன்பப்பட்ட கவிஞன் அதற்குக் காரணமானவர் அழியும்படியாகப் பாடும் பாடல். நந்திவர்ம பல்லவனை அவன் சகோதரன் அறம்பாடிக் கொன்றான் என்று நம் தொன்ம மரபு சொல்கிறது. அங்கே வரும் அறம் என்பது தர்மம் அல்ல. எதிக்ஸ் அல்ல. அது இறுதிதான். அறப்பாடுதல், அறும்படி பாடுதல். அற்றம் வரும்படி பாடுதலே அங்கே அறமாக சொல்லப்படுகிறது.

அறம் என்பது இதுதான். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக்கொண்ட நடத்தைகள். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம்.

நாம் நம் மொழிமரபில் அறம் என்ற சொல்லின் பிறப்புச்சூழலைப் பார்க்கையில் சங்க காலம் கண்ணுக்கு முன்விரிகிறது. புறநானூற்றுக்காலம் என்பது பெருங்குடி மன்னர்களான மூவேந்தர் சிறுகுடிமன்னர்களான வேளிர்களை, கடல்சேர்ப்பர்களை, குறவமன்னர்களை அழித்தொழித்துப் பேரரசுகளை உருவாக்கும் போர்ச்சூழல் என்பதுதான் வரலாறு. சங்கம் மருவியகாலத்தில் முடியுடை மூவேந்தர் மட்டுமே எஞ்சுகிறார்கள். அந்தப்போர்ச்சூழல் எல்லாவகை வன்முறையையும் அனுமதிக்கிறது.

எரிபரந்தெடுத்தல் என்று சங்க இலக்கியம் பேசும் போரழிவுகள் கொடூரமானவை. எதிரிநாட்டுப்பெண்கள் அறுத்தெறிந்த தாலிகள் சாலைகளில் மலையாகக் குவிகின்றன. புகை நகரை மூட பெண்களின் கண்ணீரில் யானைக்கால் வழுக்குகிறது. எதிரிநாட்டு ஊருணிகளை யானை வைத்து அழிக்கிறார்கள். வீடுகளை எரிக்கிறார்கள். எதிரி மன்னனின் பல்லைக்கொண்டுவந்து சுவரில் பதிக்கிறார்கள்.எல்லாமே அறம்தான்.

இன்றைய நம் அறவுணர்ச்சி கூசுகிறது. ஆனால் அறம் என்பது மெல்லமெல்ல சமூகத்தால் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு கருத்து என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அறம் என்ற கருத்து ஒரு சிறு மக்கள் குழுவில் உருவாகிறது. அது அவர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஒரு குடும்பத்துக்குள் உருவாகும்போது அது குடும்ப அறம். குடும்பம் குலமாக ஆகும்போது அது குல அறம். குலம் நாடாக ஆகும்போது அது அரசியல் அறம். நாடுகள் மானுடமாகும்போது மானுட அறம்.

சங்ககாலத்தில் நாம் காண்பது குல அறங்கள் அரசியலறங்களாகத் திரளும் ஒரு பெருநிகழ்வை. போர்வெறியைக் கொண்டாடக்கூடிய, கொலையை கொள்ளையை அனுமதிக்கக் கூடிய, சங்ககாலத் தமிழ்ச்சமூகம் கொஞ்சம்கூட அனுமதிக்காத ஒன்றுண்டு. நன்னன் என்பவன் செய்த பெண்கொலை. ஒரே ஒரு பெண்ணைக் கொன்ற நன்னன் என்ற குறுநில மன்னனைப் புலவர்கள் மீண்டும் மீண்டும் சாபமிட்டுப் பாடியிருப்பதைக் காணலாம். தன் மக்களாலேயே நன்னன் ஒதுக்கப்பட்டான். ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்றே வரலாற்றில் அறியப்பட்டான்.

அது மானுட அறம். என்னதான் இருந்தாலும் ஒருபோதும் செய்யக்கூடாத விஷயம் அது என தமிழ்ச்சமூகம் நினைத்தது. அவ்வாறு ஒரு சமூகம் நினைப்பவற்றின் அளவு பெருகப்பெருக அச்சமூகம் மானுட அறம்நோக்கி நகர்கிறது. கால-இட-சூழலை மீறிய அறத்தையே நாம் ‘அறம்’ என்கிறோம்.சங்கப்பாடல்களில் பொருண்மொழிக்காஞ்சியில் மானுட அறம் நோக்கிய தேடலை, விவாதத்தைக் காண்கிறோம். ஆனால் சங்கம் மருவிய காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அந்த அறத்தை வந்தடைந்திருப்பதைக் காணலாம் . அரைசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக வரும் அறம் என்பது அதுவே.

அந்த அறம் ஒரு பலிவாங்கும் போர்க்கடவுளாக உருவாகி வந்திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரக் காலகட்டத்தில் பெருமன்னர்கள் உருவாகிவிட்டிருந்தனர். அவர்கள் கட்டற்ற அதிகாரமுள்ளவர்கள். குறுங்குடிமன்னர்கள் குல அறத்தால், ஆசாரமரியாதைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் பெருங்குடிமன்னனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவன் தவறுசெய்தால் தட்டிக்கேட்பது எது? அதுவே அறம். மானுட அறம். கூற்றாக அது வந்து வாசலில் நிற்கும் என்கிறார் இளங்கோ.

அதையே வள்ளுவர் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்றார். அந்த அறம் நோக்கி நம் சமூகம் நகர்ந்ததை நாம் வள்ளுவர் வழியாகப் பார்க்கிறோம். அறன் வலியுறுத்தல் என்று வள்ளுவர் சொல்வது மானுட அறத்தையே. இல்லறம் துறவறம் என்னும் சிறிய அறங்களுக்கு அப்பால் கோபுர உச்சிபோல மானுட அறம் எழுகிறது.

அறத்துக்கு மாற்றாக மறத்தைக் கூறும் ஒரு வழக்கம் நம்மிடம் உள்ளது. ஆனால் சங்ககாலத்தில் மறம் உயர்ந்த விழுமியமாகவே இருந்தது. அது அறத்தின் எதிர்மறைச்சொல் அல்ல. மறுத்தல், மறுத்து நிற்றல் என்பதே மறம். அது வன்முறை என்றும் ஆகவே அறத்துக்கு எதிரானது என்றும் கண்டவர் வள்ளுவர். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை என அந்த எதிரீட்டை அவர்தான் உருவாக்கினார். அது அவரது சமண அறம்.

அந்தத் தேடலின் உச்சியில் கம்பராமாயணம் நிகழ்ந்தது. அறத்தின் மூர்த்தியான் என கம்பன் ராமனைச் சொல்கிறான். ராமனின் குணம் அல்ல அறம். ராமன் அறத்தின் உடல்வடிவம். அறம் ராமனைவிட மேலானது. தருமம் பின் இரங்கி ஏக என்று சொல்லும்போது கம்பன் அதை ஒரு தனி இருப்பாக, தனி ஆளுமையாக உருவகிக்கிறான். அதுவே நம் மரபின் உச்சகட்ட அறத்தரிசனம்.

நாம் நினைப்பதுபோல நம் மன்னர்கள் முற்றதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அவர்களைக் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் சான்றோர் அவைகள் இருந்தன. சிற்றரசர்சபைகள் இருந்தன. தமிழகத்தின் மாபெரும் முடிமன்னனாகிய ராஜராஜனே சிற்றரசர் சபைக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நீங்கள் பொன்னியின் செல்வனிலேயே வாசிக்கலாம். கொடும்பாளூர் வேளார்கள், பழுவேட்டரையர்கள் என அந்த சபையில் பல சிற்றரசர்கள் இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து மன்னனைத் தலைவனாக அங்கீகரிக்கவேண்டும்.அவ்வாறு அங்கீகாரம் பெற்றவனே மன்னன்.ஆகவேதான் அவனுக்குக் குலசேகரன் — குலங்களைத் தொகுத்தவன்– என்ற அடைமொழி உள்ளது. குல அறத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பழைய மன்னன் மானுட அறத்தால் ஆளப்படுபவனாக ஆவதையே நாம் இலக்கியங்களில் காண்கிறோம்.

என் அண்ணா பொதுவாகக் குடும்பத்திற்குள் உதவிகள் செய்யக்கூடியவனாக இருந்தார். என் அம்மாவுக்குத் தோழியாக இருந்த ஒரு பெண்மணிக்கு அவர் உதவிகள் செய்வதுண்டு. படுகிழவி. ஒருமுறை அண்ணா சென்றபோது அவள் பழைய சாக்கைப் போர்த்திக்கொண்டு இருப்பதைக் கண்டார். உடனே ஒரு கம்பிளியை வாங்கிக்கொடுத்தார். அடுத்தமுறை போனபோது கிழவி அதே சாக்கைப் போர்த்திக்கொண்டிருந்தாள். ‘என் மூத்தமகனின் பிள்ளை தரையிலே கிடக்கிறது. அதற்குக் கொடுத்துவிட்டேன்’ என்றாளாம்.

அண்ணா இன்னொரு கம்பிளி வாங்கிக்கொடுத்தார். ஆனால் மறுமுறை செல்லும்போது அதுவும் இல்லை. ‘மகளுக்குக் கம்பிளி இல்லை. அவளுக்குக் கொடுத்தேன்’ மூன்றாம் முறையும் கம்பிளி வாங்கிக்கொடுத்தார். அதுவும் ஒரே வாரத்தில் ஒரு பேரனுக்குக் கொடுக்கப்பட்டது. அண்ணா சொன்னார் ‘ஆயிரம் முறை வாங்கிக்கொடுத்தாலும் இப்படித்தான் நடக்கும்…பிறந்தநாள் முதல் தனக்கென எதையும் தேடாத வாழ்க்கை…குழந்தையாக இருக்கும்போதே குழந்தை வளர்க்க ஆரம்பித்திருப்பாள்…அந்த நாள் முதல் அன்னைதான். கொடுத்துத்தான் பழக்கம்.’

அது குல அறம். தன் குலத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை. அதற்குமேல் ஓர் அறம் உண்டு. அதுவே மானுட அறம். என் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள டீக்கடையில் அய்யப்பண்ணன் என்பவர் டீ குடிக்க வருவார். நூறுவயது தாண்டியவர். விவசாயி. அய்யப்பண்ணனுக்கு பொய்கையாறு அணை இன்று இருக்கும் இடத்தில் வயல் இருந்தது. அங்கே செல்ல புலியூர்க்குறிச்சியில் பஸ் இறங்கி எட்டுமைல் நடக்கவேண்டும்.

அய்யப்பண்ணன் ஓட்டலில் நுழைந்து காலையுணவு சாப்பிடப்போகும்போது பஸ் வந்துவிட்டது. அடுத்த பஸ் மதியம்தான். ஆகவே பாய்ந்து ஏறிவிட்டார். கையில் தூக்குப்போணியில் பழையது இருக்கும் தைரியம். மதியம் வரை வெயிலில் வேலைசெய்துவிட்டு பசிவெறியுடன் சாப்பிட வரும்போது பார்த்தால் ஒரு நாடோடி அவரது போணிச்சோற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அருகே நின்ற கம்பைப் பிடுங்கிக்கொண்டு அய்யப்பண்ணன் ஓடி வந்தார்.

நாடோடிக்கும் பயங்கரமான பசி போல. அவன் போணியை வழித்து நக்கிக்கொண்டிருந்தான். பசியாறிய முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தான். ‘எப்டி நான் அவன அடிப்பேன்…பசியாறின மொகத்தில உள்ளது மகாலச்சுமியில்லா?’ என்றார் அய்யப்பண்ணன் என்னிடம். அய்யப்பண்ணனின் அந்த மனவிரிவே மானுட அறம்.

நண்பர்களே, மானுட வரலாறென்பது அறத்தின் பரிணாம வளர்ச்சிதான்.

பரிமேலழகர் உரை
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.

மு.வரதராசனார் உரை
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்: ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அறமும் வீரமும் அன்பின் விளைவே.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

உற்று -  uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).  uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதிசெய்யும்பொருள்(தொல். சொல் 301).  


அமர்ந்த  - அமர்-தல் - amar-   [T. amaru, K. amar.]4 v. intr. 1. To abide, remain, be seated;இருத்தல். (கந்தபு. கடவு 12.) 2. To become still ortranquil; அமைதியாதல். காற்றமர்ந்தது. 3. To rest,repose; இளைப்பாறுதல் 4. To settle, be deposited, as a sediment, become close and hard,as sand by rain; படிதல் 5. To rest upon, asa javelin on the person; பொருந்துதல் (பு. வெ 4, 5.) 6. To flourish, to be abundant; பொலிதல் (திவா.) 7. To be extinguished, as a lamp;அணைதல். விளக்கானது . . . காற்றினால் அமருமாபோலே(குருபரம். 305). 8. To be suitable; ஏற்றதாதல்.குலத்துக் கமர்ந்த தொழில் 9. To be engaged, settled,as a house; திட்டமாதல். 10. To becomeestablished, as in a work; அமைதல் வேலையில்அமர்ந்தான்.--v.tr. 1. To wish, desire; விரும்புதல் (குறள், 92.) 2. To resemble; ஒப்பாதல் (விதான.குணா. 38.) 3. To do, perform; செய்தல் நீயிவணமர்ந்தன யாவுந் தூதர் கூற (கந்தபு. முதனாட்--. 60). 4.To get close to; நெருங்குதல் அமரப் புல்லும் (திருக்கோ. 372).

வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்

வையகத்து - வையகம் - மண்ணுலகம்; விலங்குஇழுக்கும்வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநா

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

உற்றது - நேர்ந்தது,  நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்

எய்தும் -  நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும்

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

முழுப்பொருள்
இந்த வையகத்தில் வாழ்ந்து இன்பத்தை அடைந்தவர்கள் அதன் பயனாக அடையும் பெருமை / செல்வம் / வீடுபேறு என்பது யாது ? 

வாழும் இவ்வாழ்விலே இந்த உலகத்திலேயே இன்பத்தையும் சொர்க்கத்தையும் அமைத்துக்கொள்ள முடியும். இந்த உலகத்திலேயே சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடிந்தவர்க்கு எந்த உலகத்திலும் சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடியும். இங்கே சொர்க்கத்தை அமைத்துக்கொள்ள முடியாதவர் வேறு எங்கும் அமைத்துக்கொள்ள முடியாது. 

இல்லறத்தில் தான், மனைவி/கணவன், மக்கள், உறவினர்கள், சுற்றத்தார்கள், விருந்தினர்கள், ஊர் மக்கள், பொதுவாக மனிதர்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்தி பொலிவடைவதை (அல்லது அன்பு செலுத்த விரும்புவதை) வாழ்வில் நெறியாக வழக்கமாக கொண்டவர் இன்பம் எய்துவார். அவர் வையகத்தில் வாழ்ந்த பயனாக வீடுபேறு அடைவார். இல்லையென்றால் அடையமாட்டார்.

ஓரிரு நாள் அன்பு செலுத்துவது அல்ல வாழ்வின் நெறியாக என்பதை தெளிவாக வழக்கு என்னும் சொல் மூலம் அடிக்கோடிடுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.

வரதராசனார் உரை
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
இன்ப வாழ்வென்பது அன்பினால் வருவது.

அன்புஈனும் ஆர்வம் உடைமை

குறள் 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

ஈனும் - īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97).

ஆர்வம் - அன்பு; விருப்பு நெஞ்சுகருதினபொருள்கள்மேல்தோன்றும்பற்றுள்ளம்; பக்தி ஏழுநரகத்துள்ஒன்று.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

ஈனும் -  īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97).  

நண்பு - அன்பு; உறவு; நட்பு.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

நாடா - நாடாமல் - தேடிச்செல்லாமல் வரும்

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

முழுப்பொருள்
ஆர்வத்துக்கு அன்பு என்று ஒரு பொருள் உண்டா என்ன? 

நன்றாக உண்டு. அதுவும் வெறும் அன்பு அல்ல, மிகுந்த அன்பு, முதிர்ந்த அன்பு. அன்பின் முதிர்ந்த நிலைதான் ஆர்வம். 

பெரியாழ்வார் பாடுகிறார்: 
‘மார்வம் என்பதோர் கோயில் அமைத்து,
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூ இட வல்லார்க்கு 
அரவதண்டத்தில் உய்யலும் ஆமே.’ 

நெஞ்சிலே கோயில் கட்டி, அங்கே தெய்வத்தை வைத்து அன்பைப் பூவாகப் போட்டால் போதும். ஒரு பய நம்மை அசைக்கமுடியாது!

பிறர் மீது நாம் மனதார அன்புடன் பழகினால் அன்பு செலுத்தினால் அது பிறர் மீது மிகுந்த அன்பையும் விருப்பத்தையும் உண்டாக்கும். ஏனெனில், அன்புடையார் நெஞ்சத்து வன்மமும் பகையும் இல்லாது ஒழியும் ஆதலால், அவரிடத்தில் யாருமே நட்புகொள்ளல் எளிது. அப்படிப்பட்ட இருவர் கொண்ட அன்பானது அவ்விருவருக்குள் ஒரு நட்பினை அன்பினை உறவினை உருவாக்கும். அத்தகைய நட்பானது உறவென்பது நாடாமல் நாம் கொண்ட சிறந்த அணிகலனாகும்.

வாழ்வில் அழகிய அன்பான உறவுகளை போல சிறப்பானது வேறு ஏதும் இல்லை என்பதையும் இங்கு கவனிக்கவும்.

கி.வா.ஜ ஆராய்ச்சிக் குறிப்பில் - கவிராஜ பண்டிதர் ஆர்வம் என்ற சொல்லுக்கு சந்தோஷம் என்று கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி எனில் அன்பு ஈனுவது சந்தோஷம் என்னும் செல்வத்தை. அச்செல்வம் நட்பு எனும் இனிமைய நாடாமல் ஈனும் என்பது பொருள். 

அன்பும் ஆர்வம் பற்றி ஒரு ஒப்புமை
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” (இரண்டாந் திருவந்தாதி,1) 

2008 ஆஸ்கார் விருது ஏற்புரையில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுவார் என் வாழ்நாள் முழுக்க அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் நான் அன்பை தேர்ந்தெடுத்தேன், அதனால் தான் இங்கு இருக்கிறேன்.  (All my life I had a choice between hate and love. I chose Love, And I am here - AR Rahman).

”ஆர்வம் உடைமை”
இன்று (13-Mar-2021) இக்குறளை தோழியின் மகளுக்கு கற்பிப்பதற்காக மறுபடியும் வாசித்தப் பொழுது இச்சொல் ”ஆர்வம் உடைமை” என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மிகப்பெரிய திறப்பாகவும் அமைந்தது. ஏனெனில். ஆர்வம் என்பது ஒரு உடைமை என்ற புதியக்கோணத்தில் பார்த்தேன். யோசித்துப்பார்த்தால். அது உண்மை. ஏனெனில் ஒருவருக்கு ஆர்வம் இருந்தால் அவர் சோர்வு இல்லாமல் கற்றுக்கொண்டே இருப்பார். அவருடைய அறிவு அகலாமாகவும்(விஸ்தாரமாகவும்) ஆழமாகவும் வளரும். இப்படி ஆர்வத்துடன் இருப்பவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டு செயலூக்கத்துடன் செய்துக்கொண்டே இருப்பர். வாழ்க்கையில் முன்னேறுவர். செயலுக்கு தேவை ஊக்கம். அவ்வூக்கம் இங்கு ஆர்வத்தில் இருந்து வருகிறது. ஆதலால் ஆர்வம் ஒரு உடைமை / செல்வம். 

நான் Amazon நிறுவனத்தில் சில காலம் வேலை செய்தேன். அங்கு “Learn and Be curious” என்ற தலைமைப்பண்பு கட்டாயம். (மேலும்: Leadership Principle (Amazon's 14 Leadership Principles) காண்க). 

சரி, இக்குறளில் ஆர்வம் எப்படி ஒரு உடைமை? நாம் பிறரிடம் (எதிரி அல்லது அந்நியர் என்றால் கூட) அன்பு செலுத்தினால் அவர் நம்முடைய அன்பை உணர்ந்து நம்மேல் ஒரு கட்டத்தில் ஆர்வம் (அன்பு) செலுத்தக்கூடும். சிறிதளவு மரியாதையாவது கொடுப்பர். அந்த ஆர்வமே செல்வம். அதுவே உடைமை. அது அன்பு செலுத்துவதால் வருகிறது.




மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.).

மணக்குடவர் உரை
அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.

மு.வரதராசனார் உரை
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வீட்டில் தொடங்கி உலகெலாம் விரிவது அன்பின் இயல்பு.

English Meaning - As I taught a kid - Rajesh
Kindness yields interest from others.This interest ultimately yields friendship which you didn't approach for. Hence, one should be kind to others irrespective of whether they are friend or enemy.  On a side note,we can learn from this thirukkural that curiosity (for people, knowledge) is an asset.

Questions that I ask to the kid
What does kindness/ love/ affection yield? (curiosity/interest->friendship)

அன்போடு இயைந்த வழக்கென்ப

குறள் 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
அன்பு தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

அன்போடு - அன்புடன்

இயை - அழகு; புகழ், இசைப்பு (junction, union), பொருந்து, வாழை
இயைதல் - பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல்
இயைந்த - இணங்கிய, பொருந்திய, நிரம்பிய

வழக்கு - vaḻakku   n. வழங்கு-. 1. Moving, passing to and fro; இயங்குகை. வழக்கொழியாவாயில் (பு. வெ. 10, முல்லைப். 4). 2. (Gram.) Usage,of two kinds, viz., ulaka-vaḻakku, ceyyuḷ-vaḻakku; உலகவழக்கு செய்யுள்வழக்கு என்ற இருவகை வழக்குக்கள். வழக்கெனப் படுவ துயர்ந்தோர்மேற்றே (தொல். பொ. 647). 3. (Gram.) Usage inrespect of words in literature and in speech, oftwo classes, viz., iyalpu-vaḻakku, takuti-vaḻakku;இயல்புவழக்கு தகுதிவழக்கு என்ற இருவகை வழக்குக்கள். (நன். 266, மயிலை.) 4. Customs, manners,ancient practice; பழக்கவொழுக்கம். வாய்மையுடையார் வழக்கு (திரிகடு. 37). 5. Way, method;நெறி. அன்புற் றமர்ந்த வழக்கென்ப (குறள், 75). 6.Justice; நீதி. வழக்கன்றுகண்டாய் (திவ். இயற். 2,19). 7. Litigation; நீதிஸ்தலத்திற்செய்யும் வியாச்சியம். Mod. 8. Legal procedure; விவகாரம்.9. Dispute, controversy; வாதம். 10. Bounty,liberality; வண்மை. உடையான் வழக்கினிது (இனி.நாற். 3).

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

ஆர் - நிறைவு; பூமி கூர்மை அழகு மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி ஆரக்கால் தேரின்அகத்தில்செறிகதிர்; அச்சுமரம் செவ்வாய் சரக்கொன்றை அண்மை ஏவல் பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப்பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

உயிர்க்குயிர் - uyirkkuyir   n. id. +. God,who is the soul of the soul; கடவுள் உயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்கோயில் (தேவா. 575, 4).  

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

ஆருயிர் - அருமை + உயிர்

என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்
என்போடு - என்பு உடன்

இயைந்த - இணங்கிய, பொருந்திய, நிரம்பிய

தொடர்பு - தொடர்கை; நட்பு; உறவு; நியதி; ஒட்டுகை; பாட்டு; பரம்பரைத்தொடர்பு; வரிசை; காரணகாரியசம்பந்தம்.

முழுப்பொருள்
வழக்கு என்றால் வாழ்க்கை நெறி, வாழ்வு என்று நாம் கொள்ளலாம். அதுப்போல என்பு என்றால் எலும்பு, உடம்பு என்று நாம் கொள்ளலாம். தொடர்பு என்றால் உறவு என்ற பொருளில் இங்கு கொள்ளவேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் ஒரு உவமையை மற்றொன்றுக்கு உதாரணமாக காட்டுகிறார் திருவள்ளுவர்.

உயிருக்கு உடல் எதுப்போன்றதோ அதுப் போன்றதே அன்புக்கு வாழ்க்கை யாகும் என்கிறார் திருவள்ளுவர். அதாவது, இவ்வுலகத்தில் உயிர் இருக்கும் பொழுது தான் அவ்வுடலிற்கு மதிப்பு. உயிர் பிரிந்த அடுத்த கணம் அவ்வுடலினை பிணம் என்றே நாம் அழைப்போம். பிணம் என்பது வேகு விரைவில் அழிய கூடியது, அருகில் இருப்போருக்கு தூர்நாற்றம் அடிக்கக்கூடியது. கேட்டை கொடுக்கும்.

ஆதலால் அன்புடன் இணங்கிய வாழ்க்கையே பொருள் கொண்டது. அன்பில்லாத வாழ்க்கை என்றால் அது பிணத்திற்கு சமம். பிணம் சமூகத்திற்கு கேட்டை விளைவிக்கும். மக்கள் அதனை உடன் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

ஔவையும் “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று கூறியதைக் கருதவேண்டும். கவிராஜ பண்டிதர் என்பாரின் உரையும் இக்கருத்தை அடியொட்டியே வருகிறது.  மணிமேகலையில், “அன்புடை ஆருயிர் அரசர்க்கருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய்” (25:170-171) என்று வருவதும் இதுபொருள் பற்றியே.

ஒப்புமை
”அன்புடை ஆருயிர் அரசர்க் கருளிய
என்புடை யாக்கை இருந்தது காணாய்” (மணி. 25:170-71)

”என்பென்ப தியாக்கை என்ப துயிரென்ப திவைகள் எல்லாம்
பின்பென்ப அல்ல வேனும் தம்முடை நிலையிற் பேரா
முன்பென்ப உளவென் றாலும் முழுவதும் தெரிந்த வாற்றால்
அன்பென்ப தொன்றின் தன்மை அமரரும் அறிந்த தன்றால்” (கம்ப. மருத்து.4)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.).

மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.

மு.வரதராசனார் உரை
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உயிரும் உடலும்போல, அன்பும் வாழ்வும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம், அருள், பக்தி, கருணை,பக்தி,நேசம் , பாசம் 

இலார் - இல்லாதவர்

எல்லாம் - எல்லா பொருள்களும்

தமக்கு - தனக்கு மட்டும்

உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர்

அன்பு - அன்பு

உடையார் - உடையவர்கள்

என்பும் - என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்

உரியர் - உரிமை உண்டு

பிறர்க்கு - மற்றவர்களுக்கு 

முழுப்பொருள்
மனிதர்களிடம் அன்புடைய நெஞ்சங்களை பற்றி பேசுகிறார் திருவள்ளுவர். பிறரின் பால் துளியும் அன்பு இல்லாதவர்கள் தன்னுடைய செல்வங்களையும் தனக்கு பெற்றோர்வழி வந்த செல்வங்களையும் தனது தனது என்று தனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடுவர். தன் உற்றார் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என்று ஒரு இம்மியளவும் உதவாதவர்கள். இவர்களுக்கு இயற்கையின் மீதும் சிறிதும் அன்பு இல்லாதவர்கள். இயற்கை வளங்களை சூரையாடுவது, அழிப்பது, மாசு படுத்துவது என்று அனைத்தையும் செய்யக்கூடியவர்களே. ஆதலால் தான் திருவள்ளுவர் இவர்களை அன்பிலார் எல்லாம் தமக்குரியர் என்கிறார்.

ஆனால் பிறர் மீது, பிற உயிர்கள் மீது, இயற்கையின் மீது அன்பு கொண்டவர்கள் தன்னுடைய எல்லா செல்வங்களும் மற்றவர்களுக்கு என்று மட்டும் இல்லாமல் தன் உடம்பும் கூட மற்றவர்களுக்கு என்று எண்ணுபவர்கள். உள்ளத்தால் மட்டும் அன்பு செலுத்தாமல் தன் உடம்பால் கூட அனைத்து உழைப்பையும் கொடுத்து அன்பு செலுத்துவார்கள். தான் வாழ்வது தனக்கான ஒன்றாக இல்லாமல் பிறர்க்காக வாழ்வதே சிறந்தது என்று எண்ணி வாழ்பவர்கள்.

இதனால் தான் வள்ளுவர் பின்பு 



உதாரணமாக: ததீசி முனிவரின் முதுகெலும்பு வஜ்ராயுதமாக மாறியதை பார்ப்போம்.

புராணங்களிலே, இந்திரன் வஜ்ராயுதத்தைப் பெற்ற வரலாறு பேசப்படுகிறது. விருத்திராசுரனை வதைக்க, வலிமைமிக்க ஆயுதம் இந்திரனுக்குத் தேவைபட்டபோது, திருமாலின் வழிகாட்டுதலில், மிகவும் தவவலிமையும், சற்றும் ஆசை, பொறாமை இல்லாமல் தனக்கென வாழா தகைமை உடைய ததீசி முனிவரின் முதுகெலும்புக்கே அவ்வலிமை உண்டென்பதை அறிந்து, அவரைச் சென்றடைந்து வேண்டவும், அவரும் சற்றும் தயங்காது, தன் உயிரைமாய்த்துக்கொண்டு, அவ்வெலும்பை இந்திரனுக்கு ஈந்ததார். அவ்வெலும்பைக்கொண்டு வஜ்ராயுதம் என்கிற வலிமைமிக்க ஆயுதத்தை உருவாக்கிக்கொண்டான் இந்திரன்.

இந்திய அரசின் உயர்ந்த விருதான “பரம் வீர் சக்ரா”வில் உயர்ந்த தியாகத்துக்கும், வலிமைக்கும் அடையாளமாக, தீயசக்திகளை அழிக்கும் வலிமைமிக்க ஆயுதமான இவ்வெலும்பினால் செய்யப்பட்ட வஜ்ராயுதத்தின் படமே உள்ளது என்பது அறியப்படவேண்டிய செய்தி.

Param-vir-chakra-medal.png
(பரம் வீர் சக்ரா விருதின் பதக்கம்)

எழுத்தாளர் ஜெயமோகன் உரை (சுட்டியைத் தட்டவும்)
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

என்பது ஒரு நீதியே அல்ல, ஒரு பெரும் மானுடக் கனவு மட்டுமே. மானுடத்தை இன்று வரை இயக்கி வரும் ஒரு மகத்தான இலட்சியக் கற்பனை. இவ்வெல்லையை சென்று தொடுவதனால் தான் குறள் நீதி நூலாக அல்லாமல் பேரிலக்கியமாக ஆகிறது.

மேலும்: அஷோக் உரை

 1999 இல் ஒருமுறை நான் ஏதோ பேருந்து நிலையத்தில் ஒரு குமுதம் வாங்கினேன். காத்திருந்து சலித்து அதில் உள்ள எல்லா வரிகளையும் வாசித்தேன். அதில் ஒரு கதை கந்தர்வன் எழுதியது.

ஒர் இளம்பெண்ணை அவளைவிட சிறுவயது இளைஞன் ஒருவன் பேருந்தில் கூட்டிச்செல்கிறான். கூடவே ஒரு கைப்பிள்ளைக்காரி. பிள்ளை இந்தப்பெண்ணின் பிள்ளை போல் இருக்கிறது. கூட்டமில்லாத இரவுப்பயணம். பெண் நிலைகொள்ளாமல் இருப்பதை எல்லாரும் கவனிக்கிறார்கள். அவள் ஏறும்போதே அரைமயக்கத்தில் இருப்பது போல் இருக்கிறாள். முந்தானையைகூடப் பிள்ளைக்காரி ஒருத்தி தூக்கித் தூக்கி விடவேண்டியிருக்கிறது. பெண் ஏதோ முனகுகிறாள், அழுவதுபோல ஒலி எழுப்புகிறாள்.

சட்டென்று அந்தப்பெண் எழுந்து கூச்சலிடுகிறாள் ”பாவிகளா பொய் சொல்லாதிங்கடா… கண்ணு அவிஞ்சு போயிடும்டா . காளி கேப்பாடா உங்களை.வெட்டோடை காளி கேப்பாடா உங்களை” அந்த இளைஞனும் கைப்பிள்ளைக்காரியும் அவளை சமாதானம் செய்கிறார்கள். வலுவாக இழுத்து அமரச்செய்கிறார்கள்.

டிரைவரின் முதுகைப்பாத்து ”இபப்டித்தானே வந்தான், நான் அவன்கிட்ட பேசவே இல்லியே…டேய் பாவிகளா…வெட்டோடை காளி கேப்பாடா” இளைஞன் அந்தப்பெண்ணை இழுத்து அமரச்செய்து ரகசியமாக அதட்டுகிறான். அவள் கைகளை முரட்டுத்தனமாகப் பிடித்து முறுக்கி அடக்குகிறான்.

ஆனால் அவள் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறாள். மீண்டும் கூச்சல் ”நான் உத்தமிடா, நான் பத்தினிடா” அவளை அமரச்செய்ய இளைஞனால் முடியவில்லை. அவள் முந்தானை இழுபட எழுந்து நின்று பெருங்குரலில் ”டேய் நான் உத்தமிடா..பத்தினிடா நான்”என்று கூவுகிறாள்

இளைஞன் அவளை மாறி மாறி செவிட்டில் அறைந்து இழுத்து அமரச்செய்கிறான். அடி அவள் மேல் படவேயில்லை என்பது போல அவள்” மாத்திரையைப்போட்டு என்னை சாவடிக்கப் பாக்கிறியா? ஏண்டா என்னை அடைச்சு வைக்கிறே? டேய் நான் பத்தினிடா” என்றாள். அவன் அடிக்கிறான், இழுத்து அமரச்செய்துவிட்டு மீண்டும் மூர்க்கமாகத் தாக்குகிறான்.

பேருந்தில் இருப்பவர்கள் அனைவருமே சங்கடம் கொள்கிறார்கள். அந்தப்பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்று தெரிகிறது. டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு எழுந்து வந்து ”மேலூரிலே இருந்து உசுரை எடுக்குது சத்தம்” என்று அதட்ட இளைஞன் சங்கடமாக மன்னிப்புக் கோரும் பாவனையில் பார்க்கிறான். ”இப்படியெல்லாம் பொது பஸ்ஸிலே கூட்டிட்டு வரலாமா? மத்தவங்களுக்குக் கஷ்டம்ல?” என்று ஒருவர் கேட்கிறார்

அவள் தம்பிதான் அந்த இளைஞன். பிள்ளைக்காரி அவன் மனைவி. அக்காவை மதுரையில் இருந்து கூப்பிட்டுக்கொண்டு செல்கிறார்கள். ”எப்பவும் மாத்திரை சாப்பிட்டா தூங்கிடுவாங்க…இன்னைக்கு சாப்பிட மாட்டேன்னு சொல்றாங்க” என்கிறான் இளைஞன். அவர்கள் புதுக்கோட்டையில் இறங்குகிறார்கள். வீடுவரைக்கும் டாக்ஸியில் போகப் பணமில்லை. ஆட்டோ வைக்கலாமா என்று யோசிக்கிறார்கள். அந்தப்பெண் ‘டேய் பத்தினிடா…நான் பத்தினிடா” என்று அலறுகிறாள். பேருந்து நகர்கிறது.

அந்த நள்ளிரவில் எனக்கு வேர்த்துவிட்டது. அன்று என்னிடம் செல்பேசி இல்லை. இருந்திருந்தால் தமிழகத்திலுள்ள அத்தனை நண்பர்களையும் கூப்பிட்டு சொல்லியிருப்பேன். தமிழின் மகத்தான சிறுகதைகளில் ஒன்று இது. சிறுகதை என்ற வடிவம் எதற்காக உள்ளதோ அதைப் பயன்படுத்திக்கொண்ட ஆக்கம்.

அந்தப்பெண்ணின் கதை என்ன? எதற்காக அவள் அப்படிக் கதறுகிறாள்? மாபெரும் அநீதி ஒன்றின், ஆற்றமுடியாத துயரம் ஒன்றின் கதை புதைந்து கிடக்கிறது இந்த சிறு நிகழ்ச்சியில். ஏதோ உடம்பிலிருந்து வெட்டுப்பட்டு நம் பாதையில் கிடந்து அதிரும் உயிருள்ள தசைத்துண்டு போல இருந்தது அந்தக்கதை.

நான் ஊருக்கு வந்ததுமே குமுதத்துக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதி அக்கதை ஒரு சாதனை என்று சொன்னேன். என் நண்பரும் வாசகருமான ஒருவருக்கு எழுதிக் குமுதத்திலும் விகடனிலும் கந்தர்வன் எழுதிய எல்லாக் கதைகளையும் எடுத்துத் தரச்சொன்னேன். பல கதைகளில் தமிழின் பெரும் கதைசொல்லி ஒருவரைக் கண்டு கொண்டேன்.

கந்தர்வனின் விலாசத்தைத் தேடி அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அவர் எழுதிக்கொண்டிருப்பவை தமிழின் மாபெரும் சிறுகதைகள் என்று சொன்னேன். அவர் எனக்கு பதில் ஏதும் போடவில்லை. அடுத்து விகடனில் கந்தர்வனின் இன்னொரு சிறந்த கதையான ‘தாத்தாவும் பாட்டியும் ‘ வந்திருந்தது.

கச்சிதமான சிறிய கதை அது. இரு கதாபாத்திரங்கள். தாத்தா நித்யகல்யாண ஆசாமி. எந்தப்பொறுப்பும் இல்லாதவர். சொத்தை அழித்த சொகுசுக்காரர். தன் சாப்பாடு, தன் சௌகரியங்கள் அல்லாமல் எதைப்பற்றியும் கவலை இல்லாதவர். பாட்டி அவர் மீது நீங்காத பிரியம் கொண்ட மனைவி. அந்தப் பிரியமே அவரை அப்படி வைத்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அந்தப்பிரியம் பாட்டிக்கு அத்தனைபேர் மீதும் இருக்கிறது.

ஆகவே சொத்து பங்கு வைக்கும்போது மகன்களும் மகள்களும் அம்மா என்கூட வந்து இருக்கட்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். ஆனால் யாருமே தாத்தாவைத் தங்கள் கூடவே வைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. அவரைப்பற்றிய பேச்சே எழுவதில்லை என்பதைப் பஞ்சாயத்தார் கவனிக்கிறார்கள்.

பிள்ளைகள் எல்லாருமே நல்ல நிலையில் இருக்கிறார்கள். கடைசிப்பெண் மட்டும்தான் கஷ்டப்படுகிறார். அவள் கணவன் ராசு மைத்துனன்களுக்கு எடுபிடியாக இருந்து வசைகள் வாங்கியே தன் ஆளுமையை இழந்து அப்பிராணியாக ஆனவர். ‘அப்பத்தா நீ யாருடன் இருக்கிறாய்?’ என்று அம்மாவிடம் கேட்கிறார்கள். அம்மா ‘ராசு கூட இருக்கேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறாள். பிள்ளைகளுக்குப் பேரதிர்ச்சி. ராசு வீட்டில் ஒழுங்காக சாப்பாடே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ராசு முகம் மலர்கிறது. அம்மா பிடிவாதமாக இருக்கிறாள்.

அப்பாவுக்கு பிள்ளைகள் சேர்ந்து ‘சவரட்சணை’ செலவு கொடுப்பது என்று முடிவாகிறது. தாத்தா காதில் கைவைத்து எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன் தேவைகளைச் சொல்கிறார். மாதம் ஒரு பிள்ளை அல்லது பெண் அவரைப் பராமரிக்க வேண்டும். காலையில் ஒரு தேக்சா வெந்நீர் குளிப்பதற்கு.குளியல் பொருட்கள் எல்லாம் தேவை. காலைப்பலகாரம் ஐந்து சூடான இட்டிலிகள், தொட்டுக்கொள்ளும் வகையறாக்கள். மதியம் வாழை இலையில் சூடான சோறும் குழம்பும் இரு தொட்டுக்கொள்ளும் விஷயங்களும். இரவும் அதேபோல சுடுசோறும் குழம்பும் பொரியலும். இதைத்தவிர டீ காபி முதலியவை. கைச்செலவுக்கு காசு. ராசு சித்தப்பா வீட்டில் அம்மா தங்குவதனால் அவருக்கு விதிவிலக்கு.

தாத்தா குடும்பத்தின் எந்தக் கஷ்டத்தையும் கண்டுகொள்பவரல்ல. உடம்பெங்கும் விபூதி சார்த்தி திண்ணைச்சுவர் முழுக்க சாமிபடங்கள் மாட்டி எந்நேரமும் பூஜையில் இருப்பார். அவர் தங்கியிருந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு டைபாயிடு கண்டு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் தாத்தா ஆருத்ரா தரிசனத்துக்கு திரு உத்தர கோச மங்கை போகவேண்டுமென்று பாடிக்காட்டிக்கொண்டிருக்கிறார். கோபமடைந்த மகன் பூஜைப்பொருட்களை அள்ளி முற்றத்தில் வீசிவிடுகிறான். ஆனால் அதற்கும் சேர்த்து தாத்தா அபராதம் போடுகிறார்

படிப்படியாக விவசாயம் நொடிக்கிறது. குடும்பங்களில் பட்டினி கிளம்புகிறது. ஆனாலும் தாத்தாவுக்கு அவரது சேவைகள் கிடைத்தாகவேண்டும். அவருக்கு மட்டுமாக கைப்பிடி அரிசியும் உளுந்தும்போட்டு அரைத்து ஐந்தே ஐந்து இட்டிலி சுட்டு கொடுத்துவிட்டுப் பிள்ளைகளுக்குக் கஞ்சியும் களியும் கொடுக்கிறார்கள்.அவர் இட்டிலி சாப்பிடுவதைப் பிள்ளைகள் எட்டிஎ ட்டிப் பார்க்கின்றன.

எந்தப்பட்டினியில் இருந்தாலும் சரியான வேளைக்கு தாத்தாவுக்குச் சாப்பாடு தேவை. சாப்பிடக்கூப்பிட்டால் உரக்க ‘நான் தயார்’ என்று கத்துவார். அந்த சொற்றொடரே அவருக்கு அடைமொழியாக ஆகிவிட்டது. நீண்டநாள் உயிர்வாழ்வதற்காக தாத்தா வெங்காயத்தை நசுக்கி சாப்பிட்டு அந்த வாசனையுடன் இருக்கிறார்.

மறுபக்கம் பாட்டி ராசு குடும்பத்தின் பட்டினியைப் பங்கிட்டுக்கொள்கிறாள். ராசு சித்தப்பா பகல் முழுக்க அரிசிக்கு பணம் தேடி அலைந்து ஏமாந்து திரும்புகிறார். சித்தி முகம் வீங்கி அமர்ந்திருக்க பாட்டி சோளத்தையோ கம்பையோ மிச்சம் பிடித்திருந்ததை வைத்து கூழ் காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறாள். அந்த வீட்டில் எப்போதும் களியும் கூழும்தான். பிரிந்துபோன மற்ற வீடுகளில் எப்படியோ சாப்பாட்டுக்கு ஒப்பேற்றி விடுகிறார்கள். ரங்கூனில் இருக்கும் பிள்ளைகள் வீடுகள் செழிப்பாகவே இருக்கின்றன. அவர்கள் நயந்தும் பயந்தும் பாட்டியைக் கூப்பிட்டுப் பார்க்கிறார்கள். பாட்டி மறுத்துவிடுகிறார்.

எந்நேரமும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாதநாராயண மரத்தடியில் அமர்ந்திருக்கும் பாட்டி ”உங்க தாத்தா ஊரிலே இருக்காரா?” என்று எங்கோ இருப்பவரைக் கேட்பது போல தாத்தா பற்றி விசாரிக்கிறாள். உண்ணாமல் வைத்து பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்து தொடர்பட்டினியால் நைந்து பாட்டி இறக்கிறாள். ‘ஒருவருஷம் கூழுமட்டும் குடிச்சா தாங்குமா’ என்கிறார் வைத்தியர். பாட்டியைத் திண்ணைக்கு கொண்டுவந்துபோடுகிறார்கள். பிள்ளைகள் அலறியடித்து வந்து கூடுகிறார்கள். பால்தயிர் கலந்து ஊட்டுகிறார்கள். ஹார்லிக்ஸ் புட்டிகள் ஆரஞ்சு ஆப்பிள்கள் வந்திறங்குகின்றன…பாட்டி அவற்றைப் பார்க்காமலேயே செத்துப்போகிறாள்.

கல்யாணமரணம். ஆகவே கொட்டு பேண்ட் மேளத்துடன் இழவு எடுக்கிறார்கள். பதினாலு ஊர் அழைப்பு உண்டு. உள்ளே ஏதோ சடங்கு நடக்க தற்காலிகமாக மேளங்கள் நின்றன. அந்த அமைதியில் யாரோ யாரையோ அழைக்க தன்னைத்தான் அழைப்பதாக எண்ணிக்கோண்டு திண்ணையில் எந்தக்கவலையும் இல்லாமல் இருந்த தாத்தா ‘நான் தயார்’ என்று கூவுகிறார்

கந்தர்வனின் இந்தக்கதையில் இரு குணச்சித்திரங்கள் வாழ்க்கையின் இரு துருவங்கள் போல எதிரெதிராக நிற்கின்றன. இந்த விசித்திரமான முரணுக்கு எந்த விளக்கமும் வாழ்க்கையை வைத்துச் சொல்லிவிடமுடிவதில்லை. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று வள்ளுவர் கூட அந்த வியப்பையே பதிவுசெய்துவிட்டுச் செல்கிறார்.



ஒப்புமை
”பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர்வரை யன்னே” (புறநா 108:5-6)

“நெகுதற் கொத்த நெஞ்சம் நேயத் தாலே யாவி
உகுதற் கொத்த வுடலும் உடையேன்” (கம்ப.நகர்ங்கு 60)

பரிமேலழகர் உரை
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர்; அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையாரோ பிறிதின் கிழமைப்பொருள்களை மட்டுமன்றித் தற்கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன் படுத்துவர்.

பிரிநிலையேகாரமும், 'உரியர்' என்னும் வினைக்கேற்ற 'எல்லாவற்றாலும்' 'என்பாலும்' என்னும் கருவி வேற்றுமையுருபுகளும் தொக்கன. எலும்பு என்பதன் மரூஉவான 'என்பு' சினையாகுபெயர் . உம்மை சிறப்பும்மை , உடம்பைப் பிறர்க்கு உதவிய அன்பிற்கு, தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த செம்பி ( சிபி ) என்னும் சோழ வேந்தன் கதை எடுத்துக் காட்டாகக் கூறப்பெறும். ஆயின், அதனினும் சிறந்த எடுத்துக்காட்டு, தன் தம்பியால் தன் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிற்போய்த் தங்கியிருந்த குமணன், தன்னைப்பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன்தலையை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தம்பியிடங் காட்டிப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்ததாகும். இதை,

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
நாடிழந் ததனினு நனியின் னாதென
வாள்தந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்

என்று (புறம்.165 ) அப்புலவர் பாடியதினின்று அறிந்து கொள்க. இனி, பாரி தன்னையும் பரிசிலர்க்குத்தர அணியமாயிருந்ததும் இத்தகைய செயலாம்.

"பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு 
பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னான் அவர்வரை யன்னே".

என்று ( புறம்.108 ) கபிலர் பாடியிருத்தல் காண்க.

மணக்குடவர் உரை
அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.

மு.வரதராசனார் உரை
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சுயநலவாதிகளிடம் அன்பைத் தேடாதீர்கள்.

பொருள்: அன்பு இல்லார் எல்லாம் தமக்கே உரியர் - அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரியர் ; அன்பு உடையார் என்பும் பிறர்க்கே உரியர் - அன்பினை உடையவர் (தம்) உடம்பையும் பிறர்க்கே உரியர்.

அகலம்: இல்லார் என்பதன் லகர வொற்றும், ஏகார மிரண்டும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. என்பு என்பது ஆகு பெயர், அதனை உடைய உடம்பிற்கு ஆயினமையால். பிறர்க்கே-பிறர்க்காகவே. உரியர்‡உடையர். நச்சர் பாடம் ‘உரிய பிறர்க்கு’.

கருத்து: அன்புடையார் தமது உடைமைகளை யயல்லாம் துன்புற்ற பிறர்க்கு வழங்குவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
There are only two kinds of people says Thiruvalluvar
1) Loveless people hold everything to themselves. They will hold all their wealth, their ancestors wealth etc They won't give even a grain of sand to others. Love is not just w.r.t people it is even w.r.t nature. For e.g., People who don't have any love for nature would loot the nature wealth (mines), pollute the nature(air, river, oceans, underground  water, land) and destruct the nature (forests, mining areas) through many means. 
2) Those who are filled with love bear even their bones for others. 
Unfortunately, the world is not full of people with Love. 

In this Kural, Thiruvalluvar paints a great ambition for humanity. i.e. World filled with people who are filled with love. 

Questions that I ask to the kid
What are the two types of people in this world?
What is the great ambition that Thiruvalluvar paints for humanity?

என்பி லதனை வெயில்போலக்

குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]

பொருள்
என்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்

இலதனை - இல்லாத உடல் தனை

வெயில் - சூரியவெளிச்சம், சூரியவெப்பம், கதிரவன்; ஒளி.

போலக்  - போன்று

காயுமே - பயனின்மை, வஞ்சனைவிதை, பக்குவப்படாதவிளைபொருள்கள், முதிராதுவிழுங்கரு, அழிக்கும்; தீய்க்கும்

அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம்; அருள்; பக்தி; நேசம்; கருணை; தயை; பாசம்

இலதனை - இல்லாதவனை

அறம் -  தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

முழுப்பொருள்
எலும்பு இல்லாத உயிர் என்றால் நாம் புழுவை சொல்லலாம். புழுக்கள் பூமிக்கு அடியில் மண்ணில் வாழ்பவை. அவை பொதுவாக வெளியே வராது. அப்படி தலைகாட்டினால் வெயிலின் வெட்பம் ஏற ஏற அது வெப்பத்தினால் காய்ந்து அழிந்துவிடும். 

அதே போல மற்ற உயிரிடத்தில் நேசம் / அன்பு / பாசம்/ பற்று/ தயை / கருணை இல்லாத உயிர்களை / அன்பர்களை கொன்று விடும் அறம் / தருமம் / நேரம்.

இங்கே நாம் காண வேண்டிய மற்றோன்று என்னவென்றால் பூழுக்களை கொல்வது வெயிலின் வேலை அல்ல. புழுக்களாகவே வெளியே வரும் பொழுது அழிந்து விடும். அது போல் இந்த சமூதாயத்தில் இணைந்து வாழ வேண்டும் என்றால் மற்ற மானுடர் மீது அன்பு வேண்டும். அன்பு துளியும் இல்லையே இந்த சமூதாயத்தில் வாழ முடியாது. சமூதாயம் அழித்து விடும். 

மேலும்: அஷோக் உரை (நன்றி)
“அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற்றாவதும்” என்பது சிலப்பதிகார மூன்று முக்கிய கருத்துக்களில் ஒன்று. 

அரசியலில் அறம் தவறியதாலேயே பாண்டிய மன்னனுக்கு, அதுவே அவனையும் கொன்று, அதன் காரணமாக அவன் மனைவியும் உயிர் துறந்து, மதுரையும் எரியுண்ண காரணமாகிப் போனது. 

மனைவியின் சிலம்பு களவாடப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக, தான் அரசனாய், எல்லா குடிகளிடமும், தன் மனைவியுட்பட ஒரே அளவில் அன்பு கொண்டிராமல், அதன்காரணமாக, ஆராயாமல், ஒருதலை சார்பாக, கோவலன் கொலையுண்ணக் காரணமாக இருந்ததாலேயே,  பாண்டியனும், மதுரையும் அழிந்தன.


எலும்பில்லாத புழுக்கூட்டமானது, வெயில் காயும்போது, வெளியில் வந்து, வெயிலின் சூட்டிலே கருகி மடியும். அதே போன்றே, அன்பில்லாத உயிர்கள் அறவழி நில்லாதொழிவர் எனவே, அவர்களும் அதன்கண்ணே துன்புறுவர் என்று கூறப்பட்டுள்ளது

 அன்பின்மையால் என்ன நேரும்  தெரியுமா? எலும்பற்ற உயிர்களை வெயிலின் சூடு அழிப்பதைப் போல, அன்பில்லாத உயிர்களை அறத்தின் வெப்பம் சுட்டழித்து விடும். 


மேலும்: தினத்தந்தி (நன்றி)
உயிர் பிரிந்துவிட்டால் அழகான உடலுக்கு எவ்வாறு மதிப்பு இருப்பதில்லையோ, அதுபோல தலை, கை, கால், மார்பு, வயிறு உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்கள் அனைத்தும் சரியான இடத்தில் இல்லாவிட்டால், வடிவமற்ற உடலுக்கும் முழுமையான மதிப்பும், முக்கியத்துவமும் இருக்காது. 

அதனால் நம் உடலுக்கு ஒரு அழகான வடிவத்தைக் கொடுக்கும் எலும்புகள் உடலின் மிக முக்கியமான அங்கம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உதாரணமாக, உலக உயிர்களுக்கு அன்பின் இன்றியமையாமையை வலியுறுத்த எண்ணிய திருவள்ளுவர், தமது திருக்குறளில் உள்ள அன்புடைமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள, பின்வரும் குறளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

'என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்'. 

அதாவது, எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். ஆக, எலும்பு என்னும் உடல் பாகம் இல்லாத புழுவை வெயில் கூடக் காய்ந்து வருத்தும் என்று கூறுவதன் மூலம் உடலுக்கு எலும்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளார் திருவள்ளுவர். 

மேலும்: Interesting Tamil Poems (நன்றி)
எலும்பு இல்லாததை வெயில் எப்படி காயுமோ, அதுபோல் அன்பு இல்லாததை அறம் காயும். அது கோனார் தமிழ் உரை.

இதை சொல்ல வள்ளுவர் எதற்கு...பரிமேலழகர் எதற்கு. 

எலும்பு இல்லாதது எது ? புழு. புழுவிற்கு எலும்பு கிடையாது. சில பூச்சிகளுக்கு எலும்பு கிடையாது. 

இந்த புழுவை வெயில் எப்படி வாட்டி எடுக்கும் ? கொதிக்கும் சிமெண்டு தரையில் ஒரு மண் புழுவை போட்டுப் பாருங்கள். அது என்ன பாடு படும் என்று பாருங்கள். 

அது அந்த வெயிலை விட்டு வேகமாக விலகி போக நினைக்கும். அதால் முடியாது. அதனால்   ஊர்ந்து ஊர்ந்து தான் போக முடியும். ஊரும் போது உடல் எல்லாம் வெயில் எரிக்கும். தகிக்கும். என்ன செய்யும் ? ஓட முடியுமா ? முடியாது ? சிறிது நேரத்தில் தண்ணீர் தவிக்கும். எங்கு போய் குடிப்பது ? கடைசியில் அது வெயிலில் சுருண்டு இறந்து போகும் 

இரண்டாவது, நாம தூக்கி வெயிலில் போட வேண்டும் என்று இல்லை. வெயில் குறைவாக இருக்கும் போது , அந்த புழுவே வெளியே  வந்து உலாத்தும்...கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏறும்போது , அது சூட்டில் வாடும். அது போல அன்பு இல்லாதவன் தானே வந்து தவறு செய்வான். இராவணை கொல்லவா இராமன் கானகம் போனான். அன்பில்லாத அந்த அரக்கன், தானே வலிய  வந்து தவறிழைத்து அழிவை தேடிக்கொண்டான்.   

மூன்றாவது, வெயில் வருவது புழுவைக் கொல்ல அல்ல. அது பாட்டுக்கு வருது. ஆனால், இந்த புழு அந்த வெயிலின் கொண்டுமை தாங்காமல் வாடுகிறது. அது போல் அறம் பொதுவாய் இருந்தாலும், அன்பில்லாதவர்களை அறம் சுடும்.

மேலும் ஆதிரா

பரிமேலழகர் உரை
என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.).

மணக்குடவர் உரை
என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறம் - அறத் தெய்வம்; அன்பு இலதனை - அன்பில்லாத உயிரை; என்பு இலதனை வெயில் போலக் காயும் - எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

எலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாதவுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். "அறம் பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மாவது" என்றார் இளங்கோவடிகள் (சிலப். பதிகம்.) "அல்லவை செய்வார்க் கறங் கூற்றம்" என்றார் விளம்பிநாகனார் (நான்மணி 83). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவு பற்றி.

பொருள்: என்பு இல் அதனை வெயில் போல அன்பு இல் அதனை அறம் காயும்‡ எலும்பு இல்லாத பிராணியை வெயில் (காய்தல்) போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.

அகலம்: இல்லதனை என்னும் இரண்டும் செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றன. ஏகாரம் அசை.

கருத்து: அன்பு இல்லாதார் துன்பம் உறுவர்.

மு.வ உரை
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அன்பில்லா நெஞ்சத்தை அறம் வாட்டும்.

இன்றைய உலகத்தில் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார்?

உலகின் முதுகெலும்பு அறம்தான். அந்த அறம்தான் அன்பை உருவாக்குகிறது. இதை வேறு வழியிலும் சொல்லலாம். அன்புதான் அறத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் முதுகெலும்பு இல்லாமல் ஒடிந்துவிழும்போல்தான் இருக்கிறது. அறம் இல்லாதது, அன்பு இல்லாதது வீழும். இதைத்தான் மிகச் சரியாக வள்ளுவர் சொல்கிறார், ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்’.

இயற்கை என்பது அறம், நீதி, அநீதி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் மனிதர்கள் தங்கள் வாழ்வின் தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டவை. இயற்கையின் படைப்புகளில் தனியொரு இனமாக நாம் விரிவடைந்துவிட்டோம் எனும்போது, நமது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கென்று ஓர் ஒழுங்கு தேவைப்படுகிறது.

ஒற்றையடிப் பாதைக்கென்று போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ தேவையில்லை. ஆனால், வாகன நெரிசல் மிகுந்திருக்கும் அண்ணா சாலையில் போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ இல்லையென்றால் என்னவாகும் என்று நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதல்லவா? இப்படியொரு கட்டத்துக்கு மனித குலம் வந்துவிட்டபின் அன்பும் அறமும் மிகமிக இன்றியமையாத தேவைகளாகிவிட்டன. அவைதான் நமது வாழ்க்கையின் மையம். அவற்றிலிருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ அவ்வளவு அழிவுகளை நாம் சந்திக்கிறோம். அறம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்துக்கு அறத்தின் அவசியத்தை எடுத்துக்காட்ட காலந்தோறும் ஓர் உதாரணம் தேவைப்படுகிறது. நம் காலத்தின் மகத்தான உதாரணம் காந்தி.

அறத்துக்கும் சமரசம் சார்பென்ப…

காந்தி காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, தங்கள் துறைகளில் மட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்வில் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் / கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பெரிய களத்துக்கு வரும்போது ஏகப்பட்ட சமரசங்கள் செய்துகொண்டு ‘அறத்துக்கும் சமரசம் சார்பென்ப’ என்ற இலக்கணத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான் ஏராளம். மிகப் பெரிய அளவுக்கு அறத்தைக் கடைப்பிடிப்பது, பரிசோதிப்பது மிகவும் கடினம். சுயநலம், உயிர் பயம், அடுத்தவர் நலன்கள், முரண் கருத்துகள், தன்னைப் பற்றித் தவறான அபிப்பிராயம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம், பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிடும் நிலை, அதனால் தனது நலனும் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் நலனும் பாதிக்கப்பட்டுவிடக் கூடும் என்ற அச்சம் இப்படி ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் காரணங்களில் சிலவற்றுக்குத் தற்காலிக நியாயமும் இருக்கிறது.

தனிமனித வாழ்விலும், தொடக்க கால சமூக/அரசியல் வாழ்விலும் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரிய களத்தில் இறங்கும்போது என்னவாகிறார்கள்? அவர்கள் அறத்திலிருந்து பிறழ்ந்து சரிவதன் குறியீடுதான் நம்முடைய தலைவர்களின் வீழ்ச்சி. இதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக சேவகர்கள், போராளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று பலருமே அடங்குவார்கள். நல்ல காரியங்கள் செய்பவர்கள்கூட சமரசம் செய்துகொண்டால் மேலும் நன்மை கிடைக்கலாம் என்பதற்காக அறத்திலிருந்து பிறழ்வது நிதர்சனம். அதாவது, நன்மைக்காக அறம் பிறழ்தல். இதுதான் அறத்தின் இடத்தை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. அதாவது, நன்மைக்கும் அறத்துக்கும் தொடர்பில்லை என்ற பெரும்பாலானோரின் எண்ணத்தை இது உறுதிப்படுத்துகிறது.

அறத்தைக் கடைப்பிடிப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன. ஆனால், தான் நம்பிய அறத்துக்காகவே வாழ்ந்து, அந்த அறத்துக்காகவே கொல்லப்பட்ட ஒருவர்தான் காந்தி. அறத்துக்கு ஒவ்வொருவரும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். காந்தி வைத்த பெயர் சத்தியம். அதைத்தான் இறுதி வரை கடவுளாக நினைத்து வழிபட்டார். அவரது ‘ராமன்’கூட ‘ராமாயண ராமன்’அல்ல. சத்தியத்தின் அவதாரமாக அவரே வரித்துக்கொண்டவர்தான் அந்த ராமன். அதேபோல் சத்தியத்தின், அறத்தின் போரில் தனக்குக் கிடைத்த மகத்தான முன்னுதாரணம் என்பதால், ஏசுவின் மீது அவ்வளவு வாஞ்சையாக இருந்தார் காந்தி. அதனால்தான் புனித பீட்டர் ஆலயத்தில் ஏசுவின் சொரூபத்துக்கு முன்பு கண்ணீர் மல்க நின்றார் காந்தி. இறுதியில் ஏசு சந்தித்த முடிவையே காந்தியும் சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமில்லை.

காந்தியின் அளவுக்கோ அல்லது காந்தியை விடப் பெரிய அளவிலோ களத்தில் இறங்கியவர்கள் வரலாறு நெடுக ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், காந்தி அளவுக்கு அறத்தை ஆயுதமாகக் கொண்டு, பெரிய பரிசோதனைக் களத்தில் இறங்கியவர்கள் வெகு சிலரே. தன் உடலை, தன் வாழ்க்கையை, தன் குடும்பத்தை, இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் ‘நான்’, ‘தான்’ என்ற சொற்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்குகின்றனவோ அவற்றையெல்லாம் பலிகொடுக்கத் தயாராகத்தான் அவர் களமிறங்கினார். பலிகொடுக்கவும் செய்தார். இவ்வளவு பெரிய பலியைக் கொடுத்ததால்தான் அவர் எல்லோருக்கும் மேல் உயர்ந்து நிற்கிறார். இந்தத் தியாகங்களால் கிடைக்கும் உன்னத ஸ்தானத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் அதை இழக்கத் தயாராக இருந்ததும், அந்த ஸ்தானத்தைப் பலிகடாவாக ஆக்கியதும்தான் எல்லாவற்றிலும் பெரிய காரியம். தன் வாழ்நாள் முழுவதும் கர்ணன் செய்திருந்த தானங்களின் மொத்தப் பலனையும் வரமாகக் கேட்ட கிருஷ்ணனுக்குச் சற்றும் யோசிக்காமல் அதைத் தானமாக அளித்து, மேலும் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்த கர்ணனின் செயலுக்கு ஒப்பாக இதைக் கூறலாம்.

சமரசம் இல்லாத சத்தியம்

இந்தியாவின் சுதந்திரம் என்ற ஒரு நல்ல காரியத்துக்காக அறம் என்ற விஷயத்தைச் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று காந்தி நினைத்தார். அதன் விளைவுதான், முன்னுதாரணமே இல்லாத ஒரு பாதையை இந்திய சுதந்திரப் போராட்டம் தேர்ந்தெடுத்தது. அதன் விளைவுதான், உலகமே இந்தியாவையும் காந்தியையும் தங்களுக்கான முன்னுதாரணங்களாகத் தேடிவருவது. அறத்தின் உச்சபட்ச வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவின் பிரதிநிதியான ஒபாமாவின் இந்திய வருகையைக்கூட நாம் இப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

சமரசம் இல்லாமல் சத்தியத்தை இடைவிடாது பரிசோதித்து அடைந்த வெற்றிதான் காந்தியம். தனிமனிதராகத் தான் மட்டும் ஈடுபடாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதில் ஈடுபடுத்தினார். நவீனக் கண்டுபிடிப்பான வை-ஃபைக்கு காந்திதான் முன்னோடி (wi-Fi: கம்பியில்லா முறையில் ஒரு பகுதியில் உள்ள கணினிகளையோ கைபேசிகளையோ இணைக்கும் அமைப்பு). இந்தியாவின் ‘வை-ஃபை’யாக காந்தி இருந்தார். தனது பரிசோதனையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துக்கொண்டார். இந்தியர்கள் தங்களின் நிறை குறைகளோடு அந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டார்கள். மக்களின் குறைகளைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. தானே நிறைய குறைகளைக் கொண்ட ஒருவர்தான் என்ற எண்ணம் அவருக்கு இறுதிவரை இருந்தது. பிறருடைய குறைகளுக்காகவும், தன்னிடம் இருப்பதாக அவர் நம்பிய குறைகளுக்காகவும்தான் அவர் தன் வாழ்க்கையைப் பலிகொடுக்கத் தயாரானார். அறத்தின், சத்தியத்தின் போரில் தன்னைப் பலிகொடுக்கத் தயாராக எப்போதும் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அவருடைய படுகொலைக்கு முன்னால் ஐந்து முறை அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்தும்கூடத் தனக்கென்று எந்தப் பாதுகாப்பையும் அவர் ஏற்றுக்கொள்ளாதது இதற்கு உதாரணம். எந்த எளிய மனிதரும் அவரைச் சந்தித்துவிட முடியும். இந்த ஒரே ஒரு அளவுகோலை நமது உள்ளூர், இந்திய, உலகத் தலைவர் களுக்கு வைத்துப்பார்த்தாலே போதும் காந்தியின் இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது நமக்குப் புரிந்துவிடும்.

காந்தியோடு உரையாடுவோம்

காந்தியை நேசிப்பவர்கள் ஏராளமாக இருப்பதைப் போல் அவரை வெறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காந்தியைக் கடவுளாக வழிபடுவது ஆபத்தானது என்றால், அவரை முற்றிலுமாகத் தூக்கியெறிவது அதைவிடப் பல மடங்கு ஆபத்தானது. அவரே சொன்னதுபோல் அவரை நாம் மகாத்மாவாக ஆக்க வேண்டாம்; நமது தாத்தாவாக உணர்ந்தாலே போதும். நம் தாத்தாவுடன் எதையும் நாம் உரையாட முடியும். அவரை மறுத்தும் அவருடன் உரையாட முடியும். அந்த உரையாடலின் இறுதியில், ஒன்று, நாம் அவரை அதிக அளவுக்கு நேசிப்பவர்களாக மாறிவிடுவோம். அல்லது, அவரை எதிர்ப்பதற்கான வலுவை அவரிடமிருந்தே நாம் பெறுவோம். எனவே, காந்தியை வழிபடுவதைவிட, தூக்கியெறிவதைவிட அவருடன் தொடர்ந்து உரையாடுவோம்.

இதற்காகத்தான் ஆஷிஸ் நந்தி இப்படிச் சொல்கிறார்: “காந்தியைவிடச் சத்தியம் மகத்தானது. நீங்கள் காந்தியை மறந்தால், அவர் வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில், வேறு வடிவங்களில் எழவே செய்யும். அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்க விடாது. அவரது போதாமைகள், தவறுகளைக் கூறி அவரை நாம் கீழிறக்கிவிட முடியாது. ஏனெனில், மனித குலத்தின் அடிப்படையான அகத் தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்டவை அவரது எண்ணங்கள்.”

- ஆசை,