குறள் 396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
[பொருட்பால், அரசியல், கல்வி]
(For English meaning scroll to the bottom of this post)
பொருள்
தொட்டல் - தீண்டல்; உண்டல்; கட்டுதல்; தோண்டல்.
அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்
அனைய - அத்தன்மையான; ஒத்த.
ஊறும் - உறுகை - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்
தொட்டனைத்தூறும் – தோண்டத்தோண்ட நீர்சுரக்கும்
மணற் - மணல் - பொடியாயுள்ளபிதிர்மண்; மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று
கேணி - கிணறு; சிறுகுளம்; அகழி; தொட்டில்.
மாந்தர்க்குக் - மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்
கற்றல் - கற்கை - படித்தல்.
கற்றனைத்து - அவர்கள் கற்றுக்கொள்ளும் அனைத்தும்
ஊறும் - உறுகை - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
முழுப்பொருள்
ஒரு கிணற்றில் தோண்ட தோண்ட நீர் சுறக்கும். ஆனால் எவ்வளவு தோண்டுகிறோமொ அவ்வளவு நீர்தான் சுறக்கும். நம் முயற்சியின் அளவிற்கு தான் பலனும் இருக்கும். அதுப்போல ஒரு மனிதருக்கு அவர் கற்க கற்க அவரது அறிவு பெருகும். மக்கள் அவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவே அறிவும் வளரும். ஆங்கிலத்தில் இதனை தொடர்க்கல்வி / “continuous learning"என்றுக்கூறுவார்கள்.
ஒரு நூலில் இருந்து ஒரு ஆசிரியரிடம் இருந்து கற்கும் பொழுது நாம் எவ்வளவு உழைப்பையும் முயற்சியையும் போடுகிறோமோ அந்த அளவிற்கு நமது கற்கும் திறனும் மிகும் அறிவும் மிகும். இல்லையென்றால் நுனிப்புல்லை மேய்ந்ததுப் போன்று ஆகிவிடும்.
அதுமட்டுமின்றி நாம் கற்கும் முன்பு கூட நமது உழைப்பு அவசியம் தேவை, அப்பொழுது தான் நாம் ஆசிரியரிடம் இருந்தோ அல்லது பிறருடன் இருந்தோ கற்கும் பொழுது கசடற கற்க முடியும். ஒரு வகுப்பிற்கு செல்லும் பொழுது படிக்கபோகிற பாடத்தைப் பற்றி வாசித்து உணராமல் கற்பதை விட வாசித்து விட்டு செல்லும் பொழுது நாம் கற்கும் அளவே வேறு மாதிரி இருக்கும். அப்பொழுது அறிவோம் நம் உண்மை அறிவே மிகும் என்று. ஆதாவது நாம் வகுப்பிற்கு முன் என்ன கற்றோமோ அதை தான் வகுப்பிற்குப்பினும் கற்று இருப்போம் ஆனால் வகுப்பிற்குபின் அது ஆழமாக வேரூண்றி இருக்கும். அதுவே கற்காமல் வகுப்பிற்கு சென்றால் நாம் கற்பது மிக குறைவாகவே இருக்கும்.
மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி அறிவையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான தனக்கான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். கற்கப்படவேண்டும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.
மணல் கேணியில், தோண்டிய பின், சிறிது காலத்தில் மண் சரிந்து உள்ளே விழும். நீர் கலங்கும். உள்ளே விழுந்த மண்ணை தோண்டி எடுத்து வெளியே போட வேண்டும். அப்போதுதான், அதில் உள்ள நீரை பயன் படுத்த முடியும்.
அது போல, ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் இருக்கும். எப்போதோ , பள்ளியில், கல்லூரியில் படித்தோம், அதுவே போதும் என்று இருந்து விடக் கூடாது. படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
'தூறும்' என்பது ஒரே சொல் தான். இதன் பொருள் 'ஆழமாகுதல்' என்பதாகும். கிணறு முதலானவற்றை ஆழப்படுத்தும் செயலான 'தூர்வாருதல்' என்னும் சொல்லாடல் இன்றும் நம்மிடையே உள்ளது அல்லவா?. தூறிய பகுதியே 'துறை' ஆகும். இது ஆற்றுத் துறை, படித்துறை முதலான அனைத்து நீர்த்துறைகளையும் குறிக்கும். ஆழமாகுதல் என்ற பொருளில் கொண்டால் இப்பாடலின் பொருள் இவ்வாறு வரும். ' தோண்டிய அளவே மணற்கேணி ஆழமாகும். அதைப் போல கற்ற அளவே மாந்தர்க்கு அறிவு ஆழமாகும்'.
நிலத்தில் தோண்டப்படும் கிணறுக்கும் ஆற்று மணலில் தோண்டப்படும் கிணறுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. மணல்கிணறு மிக விரைவாக மூடிக்கொண்டு விடும். அதை அடிக்கடி தோண்டிக்கொண்டே இருந்தால் தான் ஆழமாகவே இருக்கும். அத்துடன் நிலக்கேணியைப் போலன்றி மணற்கேணியைத் தோண்டுவதும் எளிதே ஆகும். அதனால் தான் வள்ளுவர் நிலக்கேணியைக் கூறாமல் மணற்கேணியை அறிவுக்கு ஒப்பாகக் கூறுகிறார். இந்த மணற்கேணியைப் போலத்தான் நமது அறிவும். கல்வி கற்பது என்பது எளிதான செயலே ஆகும். ஆனால் காலத்தின் தேவைக்கேற்ப நல்ல நூல்களைக் கற்றுக் கொண்டிருந்தால் தான் நமது அறிவு மூடிக்கொள்ளாது இல்லையேல் மணற்கேணி போல அறிவு மூடிக்கொள்ள நாம் 'மூடனாகி' விடுவோம். அத்துடன் நாம் கற்கின்ற அளவே நமது அறிவின் ஆழமும் இருக்கும். இக்காலத்துச் சொல்லாடலான ' உனக்கு மண்டையில் என்ன களிமண்ணா இருக்கிறது?' என்பது எதைக் குறிக்கிறது? நிச்சயம் மூடிப்போன அறிவினைத் தான்.
”ஆழமாகத் தோண்டத் தோண்டா ஊறும் நீர்ப்போல” என ஆழத்தை மட்டும் சொல்ல முனைந்திருந்தால் வள்ளுவர் கேணி என்றோ கிணறு என்றோ சொல்லியிருப்பார். ஏனெனில் மணற்கேணியை அதிக நீர்வேண்டி ஆழமாகத் தோண்ட முற்பட்டால் பக்காவட்டிலுள்ள மணல் சரிந்து விழுந்துக்கொண்டே இருக்கும். பக்கவாட்டில் அகலமாக அகழ்ந்துவிட்டு பின் ஆழமாக தோண்டினால் தான் மண்சரியாமல் இருக்கும். மணற்கேணியைப் பொறுத்தவரை ஆழத்திற்கும் அகலத்திற்குமான விகிதம் மணலைப் பொறுத்து சரியாகப் பேணப்படுதல் நன்று. கேணி அல்லது கிணற்றைப் போல செங்குத்து வடிவம் கொண்டதல்ல மணற்கேணி. அது ஒரு அரை நீள்கோள வடிவத்தை தானே அமைத்துக்கொள்ளும். ஊறிய நீரை குவளைக்கொண்டு முகக்கையி சிறிது மண் சரியும். மீண்டும் தோண்டிவிட்டு முகக்க வேண்டும். அந்தச் சிறிய ஊற்றிலிருந்து எத்தனைக் குடங்கள் வேண்டுமானாலும் வடிகட்டப்பட்ட, தூய்மையான, கசடு இல்லாத நீரைப் பெற முடியும். தனி ஒருவரே எந்தப் கருவியுமின்றி கைகளாலேயே இதை தோண்டிவிடமுடியும் என்பது இதன் சிறப்பு.
“கற்றனைத் தூறும் அறிவு” என்பதோடு பொருத்திப் பாருங்கள். கற்றறிதல் ஆழமானதாக மட்டுமின்றி அகலமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் ஆசைப்போலும். அதனாலேயே ஆழமான, செங்குத்தான, பலருடைய உழைப்பின் பயனான கேணியை விடுத்து இந்த எளிய மணற்கேணியைத் தெரிவுசெய்தார் போலும். “கசடறக் கற்க” இது ஒரு வழி போலும். நம் பட்டறிவிலிருந்தே இதற்கான எடுத்துக்காட்டுகளைப் பெற முடியும். பெரிய கண்டுப்பிடிப்பாளர் என அறியப்பட்ட எடிசனும், அவர் வளர்த்த பூனையும் அதன் குட்டிகளும், அவர் கதவில் போட்டுவைத்த மூன்று துளைகளும் செங்குத்து அறிவின் சான்றுகள். தாய்ப்பூனை வந்துசெல்ல ஒரு துளையும், இரண்டு குட்டிகள் வந்து செல்ல இரண்டு துளைகளும் என மூன்று துளைகளை அமைத்த அறிவாளர் அவர். அறிவு அகலமானதாகவும் இருத்தல் வேண்டும்.
மணற்கேணியின் பக்காவாட்டிலும், ஆழத்திலும் தோண்டாடும் அளவிற்கு நீர்நிறையும். அதுப்போல ஆழமாகவும், விரிவாகவும் கற்குந்தோறும் அறிவு நிறையும்.
எல்லோரும் ஞானத்துடன் தான் பிறக்கிறோம். ஆனால் மணல் என்னும் அழுக்கின் தோண்டி எடுத்து நீக்க வேண்டும். அப்பொழுது அறிவு/ஞானம் வரும்.
நினைவில் கொள்க ”கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்” என்பது பழமொழி.
ஆனால். சிலர் இப்படியும் கூறுவர்: “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அதுபோலப் படிப்பு வெற்றிக்கு வழி வகுக்காது.” “எத்தனையோ பேர் படிக்காமல் பெரிய ஆளாகி இருக்கிறார்கள். நம் காமராஜர் இல்லையா? ஆறாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர் நாடு போற்றும் நல்ல முதல்வராக இல்லையா?” “பள்ளியில் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு வகுப்பில் கடைசியாக வந்தவர்கள் முதல் மதிப்பெண் எடுத்தவர்களை விட அதிகமாக முன்னேறியதில்லையா?. இதற்கு பதில்: சில விஷயங்களை நாம் இங்குப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில், விதி விலக்காக உள்ளவர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் வேறு ஏதாவது ஒரு சிறப்புத் திறமை இருந்திருக்கும். அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.உதாரணமாக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மத்திய உணவுத் திட்டமும் இலவசக் கல்வித் திட்டமும் நெ.து.சுந்தரவடிவேல் என்னும் அரசாங்க கல்வி ஆலோசகர் மற்றும் பொதுகல்வி இயக்குனரால் வடிவமைக்கப் பெற்றது. அவர் பல நூல்களை கற்றவர் பல நாடுகள் சென்று அந்த அனுபவங்கள் மூலம் இந்த திட்டத்தை வடிவமைத்தார்.
மேலும் அறிவு என்பது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் பெறுவது அல்ல. அவை வாழ்க்கை பாடமாகவும் அமையக்கூடும். புத்தகங்களைப் படிப்பது பல மனிதர்களின் அனுபவத்தை படிப்பதற்கு சமம். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் இவற்றிடம் இருந்தும் கற்கலாம். ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கு “21 குரு” என்றார். அதில் பூமி, ஆகாயம், புறா, மீன், யானை போன்றவையும் அடக்கம்!.
அறிவு வளர மேலும் மேலும் படிக்க வேண்டும். படித்ததை மறக்காமல் இருக்க, அதன் படி நடக்க, மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.
கம்பராமயணத்தில் (கம்ப்.நகரப்.8)
“நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி
நுணங்கிய நுவலரும் உணர்வே” கம்பர் கூறுவது, கற்றனைத்தூறும் அறிவு என்பதையே!
‘தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்ற வரியை கற்கும்தோறும் அறிவு,தோண்டும்தோறும் ஊற்று என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் வள்ளுவர் மணற்கேணி என்கிறார். தோண்டுவதை நிறுத்தினால் விரைவிலேயே தூர்ந்து இல்லாமலாகி விடும் ஊற்று அது என எண்ணும்போது மேலதிகப் பொருள் சாத்தியமாகிறது.
இவ்வரி வருகிறது “நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. ”
இன்றைய முதலீட்டிய உலகில் பிற அனைத்து துறைகளிலும் சுதந்திரம், தனித்துவம், வணங்காமை, தன்முனைப்பு ஆகியவை ஒருவகைப் பண்புகளாகவே நிலைகொள்கின்றன. கற்றுக்கொள்ளும் இடத்தில் மட்டும் உரிய இடத்தில் வணங்குதலும் உரிய முறையில் பணிதலும் அங்கே அவசியமானவை என்று தோன்றுகிறது. நாம் நமது வணக்கத்தின் மூலம், பணிதலின் மூலம் நாம் நம்து எல்லையைக் காணமுடியும். நமது பலவீனங்களையும் குறை பாடுகளையும் அளந்து அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின்னரே நம்மை நாமே உடைத்து மறுவார்ப்பு செய்ய முடியும்.
நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. அதனூடாகவே வெளியிலிருந்து வரும் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் நம்முள் இடமளிக்க முடியும். அவற்றை நம்முள் நாமே வளர்த்து எடுக்க முடியும் அதனூடாக நாம் வளர்ந்து நாம் பணிந்தவர்களையும் வணங்கியவர்களையும் உண்மையிலேயே நிகரெனக்காணும் இடத்தை அடைய முடியும். கடந்து செல்லவும் கூடும்
ஆனால் நம்மைச்சுற்றி எழுதப்படும் கவிதைகளில் மிகப்பெரும்பாலானவை மிகமிக எளிமையான அன்றாட உணர்வுகளால் ஆனவை. உறவும் பிரிவுமென, அறிதலும் மயக்குமென இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை திரும்ப நமக்கே சொல்பவை. அறிந்தவற்றை அவற்றில் கண்டுகொண்டு, ஆம் நானுமறிவேன் என்று சொல்வதையே இங்கே எளிய கவிதைவாசகர் கவிதையனுபவமென அடைந்துகொண்டிருக்கிறார்கள். உச்சங்கள் என எழும் கணங்களை அடையும் கவிதைகள் அரிதாகிக்கொண்டிருக்கின்றன. மெய்மைநாட்டத்தையும் மெய்மையைத் துறத்தலையும், அறிதலையும் அறிதலின்மையில் அமைதலையும் முன்வைக்கும் ’சற்றே ஆழ்ந்த’ கவிதைகளை எப்போதோதான் வாசிக்க இயல்கிறது.
ஏனென்றால் வாசகர் அறிவை அல்ல, கவிஞனிடமிருந்து தங்கள் அறிதலுக்கொரு சான்றை விரும்புகிறார்கள். அறிந்ததை அறிவதென்பது அறிவல்ல, பலசமயம் அது அறிந்தவற்றைக் கொண்டு கவசங்கள் செய்து அறிதலை தடுத்துக்கொள்ளும் முயற்சிதான். எந்த இலக்கியப்படைப்பும் நாம் சற்றுமறியாத ஒன்றைச் சொல்லப்போவதில்லை. நாம் அறிந்த துளியை பெருக்கி மலையென நிற்கச்செய்வதே இலக்கியத்தின் வழி. நம் புறம் அறிந்தவற்றில் இருந்து நம்மை நம் அகமறிந்தவற்றை நோக்கி படைப்புகள் கொண்டுசெல்கின்றன. அவற்றை உணரும் கூருணர்வு கொண்ட வாசகர் சிலரே எச்சூழலிலும் இருக்க இயலும். ஆகவே பெருவாரியானவர்கள் விரும்புவது ஒருபோதும் கவிதையென ஆவதில்லை. கவிதை ஒரு சூழலின் பொதுரசனையின் எல்லைக்கு நீடுதொலைவு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வழிகாட்டி விண்மீன்.
கேணி என்றால் தண்ணீர் சுரக்கும் கிணறு. கேணி என்பது பெருங்கிணறு எனலாம். பொதுவாக ஆழமாகத் தோண்டப்பட்டு நிலையானக் கட்டுமானத்தால் நிறுத்தப்பட்டிருக்கும். பழங்காலத்தில் கேணிகள் வட்டாமாக இருந்தன. செங்கற்களால் ஆன வட்டாமன கேணிகளை சிந்துவெளியில் இருப்பதாக அகழ்வாராய்ச்சியில் கண்டுப்பிடிக்கபட்டுள்ளன. கேணி நல்ல உறுதியான மண்வாகு அமைந்த நிலங்களில் சாத்தியப்படும்.
ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க (குறுந்தொகை 399)
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் (நற்றினை 92)
தண் கேணிக் தகை முற்றத்து (பட்டினப்பாலை)
நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி (பெரும்பாணாற்றுப்படை)
மணற்பாங்கான இடங்களில் “சுடுமண் உறைக் கேணி” அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கீழடி, காஞ்சிபுரம், கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம், அரிக்கமேடு, புகார், மட்டக்களப்பில் வந்தாறுமூலை என ஏராளமான உறை கேணிகள் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. மணற்பாங்கான இடங்களில் செங்கற்கட்டுமானத்தைவிட சுடுமண் உறைகளை எளிதாக அமைத்துவிட முடியும்.
உறைக் கிணற்றுப் புறச்சேரி (பட்டினப்பாலை)
இவையிரண்டும் நிலை நீர்வாழ் இடங்கள். செங்குத்தான, ஆழமான அமைப்பைக் கொண்டவை. பலரின் உழைப்பும், பொருட்செலவும் கொண்டவை. சில வேளைகளில் உப்பு நீரே கிடைக்கும். நீண்டகாலம் பயனளிக்கும். நீரின்றிப் போனாலோ பாழ்பட்டுப் போனாலோ கைவிடப்பட வேண்டியவை.
மேலே படத்தில் காணப்படும் கூவல் என்றொரு தோண்டப்படும் நீர்நிலையும் சங்க இலக்கியங்களிலே காணக்கிடைக்கிறது. பாலைநிலங்களைக் கடந்துபோவோர், அங்கேயே வாழும் நிலையிலிருப்போர் குடிநீருக்காக மண்ணில் அகழும் சிறு நீர்நிலை இது. பாலைநிலங்களில் தோண்டப்பட்டிருக்கும் கூவல் ஒன்றில் நீர் செம்மண் நிறத்தில், கலங்கி இருந்ததென்று புறப்பாட்டொன்று தெரிவிக்கிறது.
பூவல் படுவில் கூவல் தோண்டிய
செங் கண் சில் நீர் பெய்த சீறில் (புறம் 319)
வெயில் காயும் பரல் கற்களையுடைய பள்ளத்தில் கணிச்சி (குந்தலம்) கொண்டு குழிபறித்த கூவல் ஒன்று இருந்ததை நற்றிணைப் பாடலொன்று அறியத்தருகிறது.
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்க்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் (நற்றினை 240)
கூவலில் நீரை அப்படியே அருந்த இயலாது. அதை வடிகட்டி பின்னரே குடிக்க முடியும். இந்த இரண்டு அன்றி மூன்றாவதாக ஒரு அமைப்பு உண்டு. அது மணற்கேணி. கருப்போருள் உரை செய்கையில் இறையனார் களவியலுரையும், நச்சினார்க்கினியர் உரையும் நெய்தலுக்கான நீர் வரைய்றையில் “மணற்கிணறு” எனக் குறிக்கின்றன. ஆனால், நெய்தலின் மண்வாகு, சுடுமண் உறையின்றி கிணறு அமைக்கபட்டால் குறுகிய காலத்திற்குள் தூர்ந்துவிடும் தன்மையுடையதாய் இருக்கும். இவை வள்ளுவர் சொல்லும் மணற்கேணியாக இருக்க முடியாது.
பூம்புகாரில் கடலோரத்தில் வானகிரியில் உறைகிணறு ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. “கடற்கரை மணலில் குடிநீருக்காக தோண்டப்படுகின்ற கிணறுகள் மண் சரிந்து தூர்ந்து போகாமல் இருக்க கட்ட மண் வளையங்கள் கொண்டு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன”. கொற்கை, நந்தன் மேடு, அரிக்க மேடு ஆகிய பகுதிகளில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனில், வள்ளுவர் சொல்லும் “மணற்கேணி” ஒடும் நீர்வாழிடமான ஆற்றின் கரையோரங்களில் கைகளால் தோண்டப்படும் சிறு குழிகளாகும். ஊற்றுநீர் எடுத்துப் பயன்படுத்துவதே ஏராளமான ஊர்களில் குடிநீருக்கான வழிமுறையாக இருந்தது. புழக்கடைப் பயன்பாட்டிற்கு ஆற்று நீரையோ, குளத்து நீரையோ, கிணற்று நீரையோ எடுத்துக் கொள்வார்கள். ஊற்றுநீரே குடிநீர்.
பழையாற்றங்கரையில் நீண்டகாலமாக மணற்கேணி தோண்டி நீரெடுத்துவந்தது சிலருக்கு நினைவில் இருக்கலாம். அது ஒரு காட்டாறு. எப்பொழுதும் நீர் ஓடிக்கொண்டேயிருக்கும். கோடையிலும் கூட. ஓடும் நீரிலிருந்து இரண்டு முதல் நான்கடிகள் தள்ளி மணலில் கையால் சிறு குழி ஒன்றைத் தோண்டுவார்கள். விளிம்பு மணலை கையால் தட்டித் தட்டி பலப்படுத்திக் கொள்வார்கள். பழையாற்றில் நீர் ஓடிக்கொண்டிருப்பதால் கையால் தோண்டிய அந்தச் சிறுகுழியில் நீர் ஊறிவிடும். ஆற்றின் மட்டத்திற்கு மேலாக நீர் ஊறாது. சிறு குவளை கொண்டு முகந்து குடங்களில் ஊற்றிக்கொள்வார்கள. ஆற்றின் நீர் கலங்கலாக இருந்தாலும் ஊற்று நீர் தெள்ளிய மணலால் வடிகட்டப்பட்டு தூய்மையானதாய் இருக்கும். வேகமாக நீர் நிறைக்க வேண்டுமெனில் என்ன செய்வது? “குழியை ஆழப்படுத்துவோம்” என்று சிலர் நினைக்கலாம். ஆனால் வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை.
இதை அப்படியே “கற்றனைத் தூறும் அறிவு” என்பதோடு பொருத்திப் பாருங்கள். கற்றறிதல் ஆழமானதாக மட்டுமின்றி அகலமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் ஆசைப்போலும். அதனாலேயே ஆழமான, செங்குத்தான, பலருடைய உழைப்பின் பயனான கேணியை விடுத்து இந்த எளிய மணற்கேணியைத் தெரிவுசெய்தார் போலும். “கசடறக் கற்க” இது ஒரு வழி போலும். நம் பட்டறிவிலிருந்தே இதற்கான எடுத்துக்காட்டுகளைப் பெற முடியும். பெரிய கண்டுப்பிடிப்பாளர் என அறியப்பட்ட எடிசனும், அவர் வளர்த்த பூனையும் அதன் குட்டிகளும், அவர் கதவில் போட்டுவைத்த மூன்று துளைகளும் செங்குத்து அறிவின் சான்றுகள். தாய்ப்பூனை வந்துசெல்ல ஒரு துளையும், இரண்டு குட்டிகள் வந்து செல்ல இரண்டு துளைகளும் என மூன்று துளைகளை அமைத்த அறிவாளர் அவர். அறிவு அகலமானதாகவும் இருத்தல் வேண்டும்.
மணற்கேணியின் பக்காவாட்டிலும், ஆழத்திலும் தோண்டாடும் அளவிற்கு நீர்நிறையும். அதுப்போல ஆழமாகவும், விரிவாகவும் கற்குந்தோறும் அறிவு நிறையும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.).
மணக்குடவர் உரை
அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.
மு.வரதராசனார் உரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
சாலமன் பாப்பையா உரை
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.
Thirukkural - Management - Learning
Valluvar is profusely known for resorting to similes to help his readers understand the meaning of his writings. He is great, as his work, in employing them. The process of learning is referred to the process of digging a spring in sandy soil to get water. The more or deeper we dig in sandy soil, the much water we get. Similarly, the more and deeper we learn the better and the sharper will be our wisdom. That is Valluvar's wisdom in Kural 396. The fountain of knowledge keeps flowing as the fountain of water keeps flowing.
A well dug in sand yields water as dug-
So learning wisdom.
The more we know about Thirukkural, the more there is to know. Cardinal Newman said, “Every new reader finds a new meaning in a new reading.” That concept is true with reference to Thirukkural. Every time we read, we become new readers and we find a new meaning in our reading. When we delve deep into Thirukkural, we will evolve as complete people.
English Meaning - As I taught a kid - Rajesh
When we dig a sand-well, we get/gain water. Similarly when we learn, we gain knowledge. If you do not dig the well, sand will come in and you will not get the water. Similarly, if you do not study or revise you will not gain any knowledge.
Learning process is equated to digging in sand-well because
1) Learning process is not accumulation of knowledge as mountain. Rather learning process is like digging information, understanding it and using it.
2) When one digs a sand well, we get both sand particles as well as water. One has to filter out the sand and consume only the water. Similarly, when one learns, we are bound to have mixed understanding. So, one has to analyze and learn without mistakes.
3) The water we gain from a sand well is a just a fraction of water in ocean. Similarly the knowledge we can learn in this world is only a fraction. So, one must not feel egoistic about learning or gaining knowledge. Rather one must be humble enough to learning continuously
4) In sand-well, after taking water, if one stops taking water, after some time, the sand slowly gets into the well again. Thereby the well is now plugged with sand. Similarly, if one stops learning, his/her knowledge gets stagnated or outdated. So, one must always be a learning. Continuously learning is the best
5) In sand well, if we take water and give it to others, there is still water in the well. So is knowledge. If one is sharing knowledge with others, one does not loose knowledge. So, one must always share knowledge with others.
Questions that I ask to the kid
What is knowledge?
How should gain knowledge?
Is knowledge a regular activity? Will knowledge be permanent in your brain? If not why? How can you keep your knowledge fresh?