Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_095. Show all posts
Showing posts with label Athikaaram_095. Show all posts

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

 

குறள் 950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து
[பொருட்பால், நட்பியல், மருந்து]

பொருள்
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
உற்றவன் - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி.

தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.

தீர்ப்பான் - மருத்துவன்

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

உழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.

உழைச்செல்வான் - நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன்; மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன்.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

அப்பால் - அதன்மேல்; அப்பக்கம்.

நாற்  - நான்கு

கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.
கூற்றே

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை.

முழுப்பொருள்
வைத்திய முறை வெற்றிப்பெற நோயாளி சுகம்பெற முக்கியமான நான்கு கோட்பாடுகளை கூறுகிறார் திருவள்ளுவர்

1. உற்றான் - நோயாளி - முதலில் நோயினை பற்றியும் நோயின் ஆதிவேர்களை பற்றியும் மருத்துவர் கேட்கும் கேள்விக்கு ஒளிவு மறைவு இன்றி நேர்மையாக பதில்க்கூறவேண்டும். நோய்க்கு தரப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் பரித்துரைக்கப்பட்ட காலத்தில் உட்கொள்ளவேண்டும் (பின்பற்ற வேண்டும்). நோய்க்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற தீர்வுகளான வாழ்க்கைமுறை மாற்றங்கள் உடற்பயிற்சிகள போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும். முக்கியமாக மனம் விட்டுவிடாமல் வாழ்க்கையிலும் வைத்தியத்திலும் நம்பிக்கை வைத்து வைத்தியதை எடுத்துக்கொள்ள வேண்டும். 

நோயாளி கொடுக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம். மருத்துவர் என்பவர் குணம் அடைய உதவுவார். அவருடைய பொறுப்பு மருந்துக்கொடுப்பதுடன் முடிந்துவிடுகிறது. நோயாளியே வைத்தியத்தின் வெற்றிக்கு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஏனெனில் அவரே மருந்துங்களையும் தீர்வுகளையும் பின்பற்றவேண்டியவர். தேவையெனில் மீண்டும் பரிசோதனை செய்து சிகிழ்ச்சை முறையில் மாற்றங்களை மருத்துவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

2. தீர்பான் - நோய்க்கு தீர்வு கொடுக்கும் மருத்துவன் வைத்தியத்தில் மிக முக்கிய பங்கு ஆற்றுகிறார். மருத்துவர் தனது தொழிலில் ஆற்றல் மிக்கவராக இருத்தல் வேண்டும். தொழிலில் அனுபவம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மருந்துகளை பற்றிய தெளிவு வேண்டும். மேலும், நோயாளிக்கு நோய் வந்ததின் ஆதியை அறிந்து அதனை நோயாளிக்கு உணர்த்த வேண்டும். 

3. மருந்து - நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தத்தாகும். நோயாளியின் தன்மை, நோயின் குறியீடுகள், நோயின் அளவு, காலம் போன்றவற்றைக் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும். மருந்து என்பது வெறுமென மாத்திரைகளோ, கஷாயங்களோ என்றளவில் நிற்காமல் வாழ்க்கை முறைமாற்றங்களும், மனம் மாற்றங்களும், பழக்கங்கள் மாற்றங்களும் தேவைப்படும்.

4. உழைச்செல்வான் - ஒரு நோயாளிக்கு மிக முக்கிய தேவை வாழ்க்கை மீதான நம்பிக்கை. தன் மீது நம்பிக்கை. மருத்தவத்தின் மீது நம்பிக்கை. அதேப்போல் நோயாளிக்கு உற்சாகமும் தேவைப்படும். அதற்கு நோயாளியுடன் இருப்பவரும் மிக முக்கியமான பங்கு ஆற்றுகிறார். நோயாளியுடன் பக்கத்தில் இருப்பவர் ஆறுதலான வார்த்தைகளை நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை பேசுவது மிக அவசியம். பாறைப்போன்ற பெரிய நோய் ஆனாலும் அது ஒரு கூழாங்கல் போன்ற சின்ன நோய் என்று சொல்லி அவரது மனவலியை குறைக்கவேண்டும். மேலும் உடன் இருப்பவர் நோயாளியை காயப்படுத்தாமல் இருப்பது அவசியம். குறிப்பாக நோயாளியிடம் போனது வந்தது என பழங்கதைகளைப்பேசி மணம் நோகச்செய்யக்கூடாது. 

நோயாளிக்கு தேவையான சூழ்நிலையை உருவாக்கி தருவதும் உழைச்செல்வான் செய்யக்கூடிய மிக நற்செயல்களில் ஒன்று. நோயாளிக்கு நேரத்திற்கு உணவும் மருந்தும் அளிப்பது உடன் இருப்போர் தான். நோயாளியின் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற ஊக்குவிப்பதும் உத்வேகம் ஊட்டுவதும் உடன் இருப்போரின் கடமையாகும். 

நோயாளிதான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று தனது பொறுப்பை துறப்பது தவறு என்று கூட சொல்லலாம். ஆதலால் வீட்டில் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள், பாட்டி, தாத்தா, தம்பி, தங்கை, நண்பர்கள் மற்றும் எல்லா உறவுகளுக்கு மனிதாபிமானத்துடன் பக்க பலமாய் மலையாக இருத்தல் வேண்டும். எதற்கும் அஞ்ச வேண்டாம், நாமாவது இந்நோயாவது ஒரு கைப்பார்த்துவிடலாம் என்ற துணிவை அளிக்கவேண்டும். மேற்சொன்னவை வீட்டில் இருந்து பாதுக்காத்துக்கொள்ளும் உறவுகளுக்கு. 

ஆனால் இன்றோ பல நேரங்களில் மருத்துவ சிகிழ்ச்சையின் தேவையாலும் மற்ற சூழ்நிலைகளாலும் சில சமயம் உறவுகள் கைவிரிப்பதாலும் ஒரு நோயாளில் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலேயே செவிலியர் அல்லது உதவியாளர்களின் மேற்பார்வையிலும் துணையிலும் சிகிழ்ச்சியையும் காலத்தை கடக்கவும் நேரிடகிறது. அப்பொழுது செவிலியர்/உதவியாளரும் நோயாளியுடன் கணிவுடன் பக்கபலமாய் உடன் இருத்தல் அவசியம். உறவுகளுக்கு சொன்ன அனைத்தும் அவர்களுக்கும் பொருந்தும். 

மேற்சொன்ன நான்கும் வைத்தியத்தில் மிக முக்கிய பங்கு ஆற்றுகின்றன. 

ஆயூர்வேத டாக்டர் இல்.மகாதேவன்/இல்.மஹாதேவன் (Ayurveda Dr. L.Mahadevan) அவர்கள் “முதற்கால்” என்றொரு நேர்காணல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
ஒவ்வொரு நோயாளியும் வரும்போது நோயாளியைப் பார்க்கிறார்கள். சாஸ்திரத்தில் இந்தந்த இடத்தில் இப்படி இப்படி சொல்லியிருக்கிறார்கள். இது சாஸ்திரம்; இது என்னுடைய யுக்தி; இது எனக்கு கிடைத்த அனுபவம் என்று மூல பாடத்தையும் எனது அனுபவத்தையும் இணைத்துத் தான் பாடம் எடுக்கிறேன்.” 
அதாவது மருத்துவர்கள் தாங்கள் கற்றதை மட்டும் கருத்தில்கொள்ளாமல், தங்கள் அனுபவத்தையும் ஞானமாக கொண்டு நோயினை அடையாளம் கண்டு, தக்க சிகிழ்ச்சை செய்யவேண்டும், தக்க மருந்துகளை வழங்கவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார், 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.

மு.வரதராசனார் உரை
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

சாலமன் பாப்பையா உரை
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

 

குறள் 949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.

உற்றான் - உற்றவன் - சுற்றத்தான்; நண்பன்; நோயாளி.

அளவும்அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை.

அளவும்அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை 

காலமும் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

கற்றான் -  நூலறிந்த கற்றுச் சிறந்த மருத்துவன்

கருதிச்  - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு நோயாளியின் நோய்க்கு ஒரு மருத்துவர் எவ்வாறு மருந்து கொடுக்க வேண்டும்?

1. நோயாளியின் தன்மையை முதலில் அறிந்துக்கொள்ள வேண்டும். அவருக்கு வேறு ஏதாவது நோய் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். நோயாளியின் உடம்பின் தன்மையை உடம்பு செயல்படும் விதங்களை வைத்தும் அறிகுறிகளை வைத்தும் இன்றையகாலகட்டங்களில் பரிசோதனைகள் மூலமும் அறிந்துக்கொள்ளலாம். நோயாளியின் வயதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

2. நோயின் தாக்கத்தையும் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரு நோய் ஆரம்பகட்டங்களில் இருந்தால் அதற்கு மிதமான மருந்துகளையும் எளிய வாழ்க்கை முறை மாற்றங்களும் உடல்பயிற்சிகளுமே சரி செய்துவிடும். அதுவே நோய் முற்றிய நிலையில் இருந்தால் மருந்துகள் கண்டிப்பாய் எடுத்துக்கொள்ள வேண்டும். நோய்களில் பல படிநிலைகளில் உண்டு அவை. Psychic (மிதமான அறிகுறிகள், நாம் பழகும் முறைகளில் மாற்றம் தென்படும்), Psychosomatic (அறிகுறிகள் அவ்வப்போது வெளிப்படையாகவே தென்படும்), Somatic (அறிகுறிகள் வெளிப்படையாக தொடர்ந்து தென்படும், உள் உறுப்புகள் பாதிப்படைய துவங்கிவிடும்), Organic (நோய் முற்றி பல உறுப்புகள் தீவரமாக பாதிப்படைந்து குணப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும்). இப்படிநிலைகளுக்கு ஏற்றார்ப்போல் மருந்துகள் (அல்லது மருந்துகளின் அளவு) மாறும்.

3. நோய்க்கு மருந்து உட்கொள்ளும் நேரத்தையும் கணக்கில் கொண்டு மருந்து கொடுக்க வேண்டும். சில மருந்துகள் காலையில், மாலையில், மத்திய வேளைகளில் கொடுக்க வேண்டும். சில மருந்துகள் உணவுக்குப்பின் கொடுக்க வேண்டும். சில மருந்துகள் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். இப்படி நோய்க்கு ஏற்றவாரு காலத்தை கருத்தில் கொண்டு மருந்துகளை கொடுக்க வேண்டும். மேலும் மருந்தினை எத்தனை காலம் (வேலைகள், நாட்கள், மாதங்கள்) எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூற வேண்டும். 

மேற்சொன்ன மூன்றையும் கருத்தில் கொண்டு ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு மருந்து கொடுக்க வேண்டும். 

“அறுவை சிகிச்சை வெற்றிகரம், ஆனால் நோயாளி மரணம்” என்ற அளவில் மருத்துவர்கள் செயல்படக்கூடாது. நல்ல மருத்துவரே நல்ல மருந்துமாவார் என்பதைக் கூறும் குறளிது. இக்குறளின் குறிக்கப்படும் கால அளவு என்பது, மருத்துவம் செய்ய ஏற்ற நேரத்தையும், இருக்கின்ற கால அளவையும் குறிப்பதாகும். காலம் தாழ்த்திச் செய்வதோ, அல்லது காலத்திற்கு முன்பாகவே செய்வதோ, இரண்டுமே மருத்துவத்தில் தவிர்க்கப்பட வேண்டியன.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. (ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன்.

மு.வரதராசனார் உரை
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

Thirukkural - Management - Health - Counsel for Physicians
Valluvar gives further counsel to medical practitioners through Kural 949. A learned physician should consider the capacity, both physical and mental, of the patient to withstand the treatment, the severity of the disease and the duration of the disease and treat the disease accordingly. This is also the sole responsibility of a learned physician.

A doctor should treat taking account 
Of the patient, the illness rind the time.

Valluvar has communicated through many Kurals his counsel to us that an individual has more responsibilities for preventing the occurring of diseases and curing them than a physician has. Your health is in your hands.

English Meaning - As I taught a kid - Rajesh
In this kural, Thiruvalluvar describes how to prescribe medicines
1. Understand the patient's nature. Understand whether the patient has any hereditary diseases in his family, the patient has any other diseases, the medicines (if any) currently taken by the patient, the lifestyle of the patient, the patients body vitals through clinical tests
2. Understand the patient's disease and its effect on the patients' body. Understand the stage of the disease in the patient (i.e., stage 1,2,3,4). Understand whether it is psychic, psychosomatic, somatic, organic etc
3. While prescribing the medicines, understand the amount of medicine, time interval between medicine and the timing of the medicine given, the total time duration of the medicine given.  Also understand that delaying the medicine would also increase complications of the disease.

Questions that I ask to the kid
Explain the process of prescribing a medicine or cure.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

 

குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம்.

நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

தணிக்கும் - தணித்தல் - ஆற்றுதல்; குறைத்தல்; புதைத்தல்; தாழ்த்தல்; தீர்த்தல்; தண்டித்தல்; அவித்தல்; பொறுத்தல்.

வாய்  - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

வாய்ப்பச் - வாய்த்தல் - சித்தித்தல்; உறுதியாய்நிகழ்தல்; ஏற்றதாதல்; சிறத்தல்; நன்கமைதல்; செழித்தல்; மதர்த்தல்; சேர்தல்; திரட்டுதல்.

செயல் -  தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்

ஒருமுறை ஒரு நோய் வந்தால், வந்த நோய் என்ன காரணத்தினால் வந்தது என்று அறிந்துகொண்டு, அந்த முறையில் மீண்டும் அந்நோய் வராமல் தடுக்கின்ற அறிவும் அது சார்ந்த கல்வியும் பெற்றாக வேண்டும்.

பலர் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வாகப் போதை மருந்துகளை நாடுகின்றனர். ‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்பதற்கிணங்க அவருக்கு ஏதாவது மனச்சோர்வோ மனக்கசப்போ குடும்பப் பிரச்சினையோ இருந்தால், முதலில் அதைத் தீர்க்க முயலவேண்டும்.

நோயில் இருந்து மீள்வதற்குச் சரியான வழிகாட்டுதலும், ஆறுதலும் முக்கியமாக மாறவேண்டுமெனும் மாறவேண்டுமெனும் தீவிரமான தீர்க்கமான உள்நோக்கமும் இருக்கவேண்டும். 

நோயை நன்கு அறிந்து அந்த நோய்க்கான மூலக்காரணமும் அறிந்து அதைத் தணிக்கும் வழியை அறிந்து சரியாகச் செயல்பட வேண்டும். இல்லையெனில் இந்த மாதிரி நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டு அல்லற்படுவர்.

நோய் என்பதை வராமல் தடுப்பதே எல்லோருக்கும் உகந்ததாகும். ஆனால் நோய் வந்துவிட்டால்? அந்நோய்க்கு எவ்வாறு மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று இக்குறளில் கூறுகிறார் திருவள்ளுவர்.

1. பல நோய்களுக்கு பல அறிகுறிகள் உள்ளன. ஆதலால் அறிகுறிகளை அறிந்துக்கொண்டு நோய் என்னவென்ற தெளிவு மிக வேண்டும். இன்றைய நாட்களில் பல பரிசோதனைகள் வந்துவிட்டன. அவற்றை செய்து எது நோய் என்று கண்டறிய வேண்டும். ஒரு மருத்துவர் நோயாளியுடன் பொறுமையாக உரையாடி நோயின் அறிகுறிகளை, அதன் தாக்கத்தை, அது எவ்வளவு நாட்களாக அறிகுறிகளை கொடுதுக்கு கொண்டு இருக்கிறது, நோயாளிக்கு வயது என்ன போன்று பலவற்றை அறிந்துக்கொண்டு நோய் பற்றி முழுவதுமாய் அறிந்துக்கொள்ள வேண்டும்.

2. நோய் ஆதி என்ன? நோயின் அறிகுறிகள் நமக்கு தென்படுவதால் நோய் அன்றில் இருந்து தான் நமக்கு வந்துள்ளது என்றில்லை. நோயின் ஆதிவேர் பலநாட்கள் முன்பு பலகாரணங்களால் இருக்கலாம். உதாரணமாக ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவருடைய உயர் இரத்த சர்க்கரை அளவோ காரணம் என்று கூறிவிட முடியாது. உயர் இரத்த சர்க்கரை என்றென்பது ஒரு அறிகுறியே. ஒருவருக்கு உயர் இரத்த சர்க்கரை என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் 1) உடல் உழைப்பு இல்லாமல் கொழுப்பின் அளவு இரத்ததில் சர்க்கரையின் அளவு உயரக்குடும் 2) ஒருவருக்கு அதிக மன அழுத்தம் இருந்தால் ஆவர் சரியாக தூங்காமலும் அளவுக்கு அதிகமாக உண்ணும் வழக்கம் கொண்டவராகவும் இருக்கலாம்.  

அதுப்போல் உணவு பழக்கவழக்கம் உணவின் தன்மைக்கூட காரணமாக இருக்கலாம். உடம்பில் உள்ள வாத, பித, கப தோஷங்களில் சமநிலை குளைந்து இருக்கலாம். அதேப்போல் நமது முக்குணங்களான தமஸிக்க, ராஜஸிக்க, சாத்விக்க குணங்களில் ஆரோக்கியமற்ற மாற்றங்கள் இருக்கலாம். 

பல நோய்களுக்கு அதன் ஆதிவேர் அவரவர் மனங்களில் உண்டு. யோகத்தில் ஐந்து கோஷங்கள் உண்டு அன்னமயகோஷா, விஜினமயகோஷா, மனோன்மயகோஷா, ப்ராணமயகோஷா, ஆனந்தமயகோஷா. இவ்வைந்து கோஷங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோஷங்களில் ஒருவருக்கு நோயின் ஆதிவேர் இருக்கலாம். 

சில நோய்கள் பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூறியுள்ள யம நியமங்களை பின்பற்றாததனால் கூட இருக்கலாம். (யம நியமம் என்றால் வாழும் முறை என்று எளிமையாக கூறலாம்)

இதுப்போன்று பல காரணங்கள் இருக்கலாம். இதற்கு உண்மையான காரணம் என்னவென்று ஆராயவேண்டும். நோயின் ஆதியை அறிந்து அதற்கு வைத்தியம் பார்த்தால் நோயினை பெருமளவு குணப்படித்த முடியும் (முழுவதுமாக குணப்படுத்த முடியாவிட்டாலும்). ஆனால் நோயின் ஆதியை அறிந்துக்கொள்ளாமல் வேறும் நோய்க்கு வைத்தியம் பார்த்தால் நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்த மட்டுமே வைத்தியம் செய்ய முடியும்.

3. ஒரு நோய்க்கு ஒரு மருந்து என்ற பொதுப்படையான முறை தவறானது. ஒவ்வொருவருக்கும் நோயின் தன்மைப்பொருத்தும் நோயின் ஆதிவேரைப்பொருத்தும் மருந்தும் தீர்வும் மாறுபடும். நோயினை பற்றியும், நோயின் வீர்யத்தை பற்றியும், நோயாளியின் உடம்பு  மற்றும் மனதின் நிலைகளை பற்றியும் அறிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாரு நோயினை தணிக்கக்கூடிய (குறைக்கக்கூடிய) சிறந்த தீர்வுகளை மருந்துகளை நோயாளியின் நோய்க்கு என ஆராய்ந்து ஒரு மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும். 

4. மருந்துகளையும் தீர்வுகளையும் அறிந்து சொன்னால் மட்டும் போதாது. மருந்துகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும், மற்ற தீர்வுகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும், வாழ்க்கை முறைகளை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் ஒரு மருத்துவர் கூறவேண்டும். மேலும், ஒருதடவை தீர்வு கொடுத்துவிட்டால் அத்துடன் நோய் தீர்ந்துவிடும் என்றில்லை, (மருத்துவர்-) குறிப்பிட்ட சிலகாலம் கழித்து நோயாளி மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். முன்னேற்றங்கள் உண்டா இல்லையா என்று ஆராய்ந்து அதற்கேற்றவாறு மருந்துகளையும் தீர்வுகளையும் மாற்றவேண்டும் எனில் மாற்றவேண்டும்.

மேற்சொன்னா முறையில் ஒரு மருத்துவர் ஒரு நோயாளிக்கு வைத்தியம் பார்க்கவேண்டும். நோயாளியும் இதனை உணர்ந்து வைத்தியத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். ஒரு மருந்தில் எல்லாவற்றிக்கும் தீர்வு வேண்டும் என்ற பிழையான அர்த்தமற்ற புரிதல் அல்லாத எதிர்ப்பார்ப்புகளை வைத்துக்கொள்ள கூடாது.

மேலும் மேற்சொன்ன இந்தமுறை உடலில் நோய் என்றில்லை, மனநோய்க்கும் பொருந்தும். அவ்வளவு ஏன், உறவுகளில் உள்ள பிரச்சனைகளுக்கும், நிர்வாகத்தில், செயலில் உள்ள பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும்.

ஆயினும் பொதுவாக ஒரு மனிதன் சமநிலை இழக்கும் பொழுது தனது கடமைகளை செய்யாத பொழுது இயற்கை அதற்கு ஒரு எதிர் ஆற்றலாக நோயினை உண்டு செய்யும். அதனை புரிந்துக்கொண்டு வாழ்கைய முறையாக வாழ்ந்து நோய் வராமல் காத்துக்கொள்வதே சிறந்தது.

தணிக்கும் வாய்நாடி என்பது தொன்மையான இந்திய மருத்துவமுறைகளாம் ஆயுர் வேதம், சித்த வைத்தியம் போன்றவற்றில் விரிவாக, ஒவ்வொரு நோய்க்கும் சொல்லப்பட்டுள்ளன. உதிரம் நீக்கல், அறுவை, மற்றும் சுடுதல் போல பல வழிகளை இம்முறைகளை அம்மருத்துவ நூல்களை படிப்போர் அறிவர்.

பழங்குடிகள் நோய் வந்து சிகிச்சை பெறுவதைவிட நோய் வராமலேயே தடுப்பதற்கு முன்னுரிமை தருகிறவர்கள். எனவே, அவர்களுடைய சாப்பாட்டிலேயே மூலிகைகளின் பயன்பாடு இருக்கிறது. 

இத்குறளின் கருத்தை நற்றிணை மற்றும் நீலகேசி பாடல் வரிகள் இவ்வாறு கூறுகின்றன.

“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது 
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல” (நற்றிணை 136:2-3)

“நோயைத் துணிந்தே உறுநோய்முதல் நாடி அந்நோய்க்கு 
ஆய மருந்தே அறிந்தூட்டும்” (நீலகேசி 723)

“நோய்முதல் நாடின்” (பெருங்.1.35:58)
“நோய் முதல் உரைப்ப” (பெருங் 36:294)

மேலும்: அஷோக் உரை


ஒரு காலத்தில் நான் மஞ்சரி மாத இதழில் தி.சா.ராஜு எழுதுவதை விரும்பி வாசித்துவந்தேன். குறிப்பாக ஓமியோபதி மருத்துவம் பற்றி அவர் எழுதுபவை அரிய வாழ்க்கைச் சித்திரங்களாக இருந்தன. ஒரு பெண்ணுக்கு பல ஆண்டுகளாக காலில் புண் ஆறவில்லை. பலர் மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. அவளுக்கு மறதியும் அவ்வப்போது கொஞ்சம் வலிப்புச் சிக்கலும் இருந்தது. அதனால் திருமணமும் ஆகவில்லை.

ராஜு அவள் சூழலை விரிவாக ஆராய்ந்து அவள் அச்சக ஊழியர் என்பதை கண்டடைகிறார். அவளுடைய புண் வழியாக ஈயம் உள்ளே செல்கிறது. அதுதான் அவளுடைய உளச்சிக்கலுக்கும் வலிப்புக்கும் காரணம். அதை கண்டுபிடித்தபின் எளிதில் சிகிச்சைசெய்து அவளை மீட்கிறார். வாழ்க்கையில் இருந்தே நோய் உருவாகிறது. வாழ்க்கையை ஆராயாமல் நோயை கண்டுபிடிக்க முடியாது என்று அவர் அக்கட்டுரையில் சொல்லியிருந்தார்

நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
நோயும் நோய் முதலும் (Chapter 24)
“பிணியெனப் படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையில் திரிந்து உடம்பு இடும்பைப் புரிதல்” - மணிமேகலை

நோய் என்பது என்ன?
நொய்தல் - நொய் - நோய்; நொய்தல் என்றால் தளர்ச்சி அடைதல் அல்லது நலிதல் என்பது பொருள். நம் உடம்பு இயல்பாக இருக்கவேண்டிய நல்நிலையிலிருந்து மாறுபட்டு, நலிந்திருக்கும் நிலையினையே நோய் என்கிறோம். “இயல்பிலிருந்து வேறுபட்டு இயற்கைக்கு மாறாக உடம்பிற்கு ஊறுவிளைவித்தலே நோய் எனப்படும்” என்று நம் பழந்தமிழ் இலக்கியம் மணிமேகலை பகருகின்றது.

நோய் முதல்
நோய் எவ்வாறு உண்டாகிறது? பலர் பலவகையாகக்கூறினும் நோய் தோன்றுதற்கான மூலம் இறுதியாக அறியப்பட்டுவிட்டது.

நம் உடலில் நுண்ணிய உட்கூறுகளை வளமூட்டி வளர்க்கும் திறனுடையது இயல்பான இயற்கை உணவே. அந்த இயற்கை உணவு நம் உடலுக்குக் கிடைப்பதில்லை; நாம் உணவைச் சமைத்து விடுகிறோம். அதனால் உணவின் வளமூட்டும் தன்மை சிதைந்து, உணவே நஞ்சாக, நின்று கொல்லும் நஞ்சாக - மாறிவிடுகிறது. சமையல் உணவுகளும், செயற்கைப் பண்டங்கள் கலந்து பருகும் பொருள்களும், நஞ்சே உருவான வேதிப்பு மருந்துகளும் (இரசாயன மருந்துகளும்) புகட்டப்படும் உடல், தன்னுள் குவியும் நஞ்சின் மிகுதியினால் நாளடைவில் நலியும் நிலையே நோய் என்பதாகும்.

நோய்நீக்க
அவ்வாறு நலிவுற்ற உடம்பில், மேலும் அவ்வண்ணம் நஞ்சு மலியாமல், இயல்பான நிலைக்கு இயற்கையின் துணையோடு உடம்பைக் கொணர்தல் நோய் நீக்கமாகும். இவ்வழியைவிடுத்து மக்கள் இன்று மேற்கொண்டுள்ள எல்லா மருத்துவ முறைகளும் தற்காலிகமாகத் தடுப்பன போலத் தோன்றினும் முடிவில் மிகத் துயரமான நிலைக்கு நம்மைக் கொண்டு சொல்லும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நோய் ஒன்றே
இன்று மருத்துவ அறிவியிலால் குறிக்கப்படுகின்ற ஆயிரக்கணக்கான நோய்கள் எல்லாம் உண்மையில் ஒரே நோயே. நோய் ஊட்டும் நச்சுப்பொருள் தலையில் இருந்தால் ஒரு பெயர், கண்ணில் இருந்தால் ஒரு பெயர், மூக்கில் இருந்தால் ஒரு பெயர், பல்லில் இருந்தால் ஒரு பெயர், வாயிலிருந்தால், தொண்டையில் இருந்தால், நுரையீரலில் இருந்தால், நெஞ்சாங்குலையில் இருந்தால் சிறுநீரகத்தில் இருந்தால், குடலில் இருந்தால், காலில் இருந்தால் ஒரு பெயர். இவ்வாறு நம் உடம்பின் ஆயிரக்கணக்கான கூறுகளில் ஏதேனும் ஒன்றில் நஞ்சு இருக்குமாயின், அதற்குத் தனித்தனிப் பெயரிட்டு, தனிமருந்து, தனிமருத்துவம் கூறி நம்மை மயக்கிப் பிழைக்கிறது மருத்துவம்.

நோய்நீக்கு நெறியும் ஒன்றே
நோயும் ஒன்றானால், நோயை முற்றிலும் நீக்கும் உண்மை நெறியும் ஒன்றாகவேதான் இருக்கும். அந்த உண்மை நெறி இயற்கை நெறியே. கனிகளை மட்டுமே உணவாகக் கொண்டால், எந்தப் பெயரால் அழைக்கப்படும் நோயிலிருந்தும் நாம் எளிதில் உண்மையாக முழுநலம் அடைவோம். கனிகளை மட்டுமே முழு உணவாகக் கொள்வதால் சமையல் உணவால் குவியும் நஞ்சு நிறுத்தப்பட்டு முன்பே சேர்ந்துள்ள நஞ்சு நம் கழிவு உறுப்புகளால் படிப்படியாக நீக்கப்படுகிறது. முற்றிலும் கழிவு நீக்கப்பட்ட பிறகு உடம்பு இயல் நிலை எய்தி முழு நலத்துடன் திகழ்கிறது.

சமையல் உணவு உண்ணுதல் நிறுத்தப்பட்டதும் நம் உடலில் நஞ்சு குவித்தலும் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் உண்ணா நோன்பு, கதிரவன் ஒளியில் காய்தல், தூய காற்றில் தோய்தல், இனிய நீரைப் பெரிதும் பருகுதல், பல தடவை தீராடுதல் ஆகிய செயல்களால் நம் உடம்பை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்யவேண்டும். அதன்பின் கனி உணவையே உண்பதால், உறுப்புகள் உறுபொருள் எய்தி உறுதியுற்று, நம் உடல் நோயுறா நன்னிலையில் என்றும் இருப்பதாகிறது. 

மனிதனையும், அவனால் செயற்கையாக வளர்க்கப்படும் உயிர்களையும் தவிர ஏனைய உயிர்கள் யாவும் எவ்வளவு இன்பமாக இயற்கையில் தோய்ந்து வாழ்கின்றன என்பதை, நோயற்ற நல்வாழ்வு வாழ்கின்றன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மீன்கள், பறவைகள், விலங்குகளுக்குச் சமையல் அறைகள் இல்லை; மருத்துவமனைகள், மருந்தகங்கள் இல்லை; மருத்துவ அறிவியலும் இல்லை; இவையில்லாத அவற்றின் வாழ்விலே எத்துணை இன்பம்! அப்பப்பா... எத்துணை மகிழ்வு! அவை எங்கே? நாளும் நலியும் நாம் எங்கே?

இன்பமே எந்நாளும்; துன்பமில்லை!
இயற்கை உணவை மட்டும் உண்பதால், இயற்கை வாழ்வு வாழ்வதால் நாமும் அவைபோல் ஆகலாம். இது இயலும் செயலே. இந்த வாழ்க்கை முனிவர்க்கு மட்டும் உரியதன்று; உள்ளத் துணிவு கொண்டார் அனைவருக்கும் உரியது. இத்தகைய உயரிய வாழ்விற்கு வேண்டுவது ஒன்றே ஒன்று. அது துணிவான உள்ளம்; நல்வாழ்வை நோக்கிய துணிவான உள்ளம். அத்தகைய உள்ளம் உடையவர்கள் இனி எந்நாளும் எதற்கும் நலியத் தேவையில்ல்லை. மலிந்த இன்பத்தால் மங்கல வாழ்வு வாழலாம்.

சற்று இமைதாழ்த்தி புவியை நோக்கிய யமன் “ஆ!” என அலறியபடி எழுந்துவிட்டார். “நாரதரே, என்ன இது? இங்குள்ள கொடுநரகங்களிலும் இத்தகைய பெருந்துன்பம் இல்லையே?” என்றார். “ஆம், இங்குள்ளவர்கள் தாங்கள் துன்பம்கொள்வது ஏன் என்று அறிந்தவர்கள். அது நெறியே என ஏற்றவர்கள். மூலம் அறியா துன்பம் நூறுமடங்கு விசைகொண்டது. முடிவறியா துன்பம் ஆயிரம் மடங்கு விசைகொண்டது. வணங்கிக்கோர தெய்வமொன்றில்லா துயரோ பன்னீராயிரம் மடங்கு கொடியது” என்றார் நாரதர்.

இளைய யாதவர் “பாஞ்சாலரே, நோயல்ல, நோய்மூலமே உசாவப்படவேண்டியது. உங்களில் எழுந்த ஐயமே அதற்குரிய வேர் எங்கோ உள்ளது என்பதை காட்டுகிறது” என்றார். “

பரிமேலழகர் உரை
நோய் நாடி - மருததுவனாயினான் ஆதுரன்மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி - பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க. (காரணம் : உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன் - நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு. 'அது தணிக்கும் வாய'¢ என்றார். 'கழுவாயும் உள' (புறநா.34) என்றார் பிறரும். பிழையாமை - பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.) .

மணக்குடவர் உரை
நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க. இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இது பழமொழி ஆனால்
இன்று நோய் இல்லாத வாழ்வதே கடினம் என்றாகிவிட்டது, இதற்கு முதன்மை காரணம், இன்று எல்லாம் வணிகமயம், மருத்துவம் உட்பட.
சரி முதலில் நம்முடைய “நோய்” என்ற தமிழ் சொல்லுக்கு பொருள் காணலாம்.

நோய் : + ந் பெறுவது(Receive) + ஓ பிரிவது Separate + ய் கணிப்பது identify

நோ என்ற ஒலி, “விலகி இருத்தல்” என்று பொருள் தரும்,
இங்கே நோய் என்பது நம்மை வருத்தக்கூடியது நம் உடல் அந்த நிலையில் எதையும் விரும்பாது, அத்தகைய நிலையில் இருப்பது நோய்.

அடுத்தது வள்ளுவரின் ஒரு குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
MuVa Urai.
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

நோய் நாடி: சரியாக நோய் இது தான் என கண்டறிவது.

நோய் முதல் நாடி : நோயின் காரணத்தையும் கண்டறிவது, இதை பலர் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை ஏனென்றால் இது பெரும்பாலும் மாற்ற கடினமான ஒன்று, உதாரணம் நம்முடைய வாழ்க்கை மற்றும் உணவு முறைகள்.

அது தணிக்கும் வாய் நாடி : சரியான நோய்க்கான மருந்துக்களையும் அதை போக்கும் முறைமைகளை கண்டறிவது.
வாய்ப்ப செயல் : சரியாக பின்பற்றி நோய் நிலையிலிருந்து மீள்வது.

இப்போது உலகமெங்கும் இந்த கொரோனா என்ற பீதி, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் மக்களை தனிமை படுத்தச்சொல்லி வேகமாக இயங்கி கொண்டிருந்த உலகம் இப்போது கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என முடிவெடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, எங்கே சமூகத்தொற்று வந்துவிடுமோ, என்ற அச்சம் யாவரையும் முடக்கி வைத்துள்ளது.
என்னை பொறுத்தவரை இது தேவை இல்லாத அச்சம், இந்த அச்சம் நம் நவீன மருத்தவ முறையில் இருந்து தான் வருகின்றது அவர்கள் இன்று வரை இந்த நோய்க்கான ஒரு சரியான தீர்வை கொண்டுவரவில்லை இதற்கு பல காரணங்களை கூறலாம். முதன்மையானது இது ஒரு வைரஸ் கிருமியால் வருவது, வைரஸ் கிருமிக்கு மருந்து கிடையாது. அதாவது வைரஸால் பாதிக்கப்பட்டால் நம் உடம்பு நம்முடைய எதிர்ப்பு சக்தியால் மட்டுமே அதில் இருந்து வெளி வரவேண்டும். சரி வைரஸ் என்பது என்ன அது உயிரினமா அது எங்கிருந்து நம்மை வந்தடைகின்றது ஏன் நம்முடைய செல்களை மாற்றம் அடையச்செய்து பெருகி நம்முடைய எதிர்ப்பு சக்தியை சோதிக்கின்றது, இவை எல்லாம் இன்றளவும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்ற ஒரு தனி பகுதி, அதனுள் நாம் போகவேண்டாம்.

நாம் இங்கு சிந்திக்க வேண்டியது இந்த எதிர்ப்பாற்றல்,
ஏன் சிலருக்கு மட்டும் இந்த நோய் தாக்குதல் தீவிரமடைந்து மரணம் வரை போகின்றது, ஏன் சிலர் இதனால் எந்த தாக்குதலுக்குண்டான அறிகுறியே இல்லாமல் இருக்கின்றனர், இங்கே நம்முடைய சோதனை முறைகள் எல்லாம் 100% சரி என்ற யூகத்தில் நாம் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் மட்டுமே பெரிய காரணி என்ற வகையில், இந்த எதிர்ப்பாற்றல் ஒருவருக்கு எப்படி வருகின்றது?

இந்த இம்முனிட்டி எனப்படும் எதிர்ப்பாற்றல் பல வித காரணங்களால் நமக்கு கிடைக்கின்றன, சிறுவயது முதல் நம்முடைய பழக்கங்கள், இயற்கை உணவு முறை, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறை, அதனால் நமக்கு கிடைக்கும் சமநிலை வாழ்க்கை முறை, உணவிற்கு ஏற்ற உடல் உழைப்பு இன்னும் பல, நம்முடைய மூதாதையரிடம் இருந்து வந்த ஜீன்களும் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

வருமுன் காக்கும் வழிமுறைகள்

சில நோய்கள் தவிர்க்கமுடியாதவை, இருந்தாலும் நாம் ஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் நோய்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ளலாம், இன்னும் நம் உடலில் உள்ள இயற்கையான எதிர்ப்பாற்றலை கொண்டு அதில் இருந்து மீண்டு வரலாம்.

தூய்மை:
இயற்கை சுழற்சியே நம் பூமியை உயிர்களின் உறைவிடமாக மாற்றுகின்றது, பிறப்பு இறப்பும் இந்த சுழற்சியில் ஒரு அங்கம். உழைப்பு உணவு உறக்கம் என நம் வாழிவியலிலும் சுழற்சி தேவை அதுவே நம்மை தூய்மைப்படுத்திக்கொள்ள நமக்கு உதவும். இந்த சுழற்சிக்காகவே பல வித இறை சடங்குகளை நம் முன்னோர்கள் பின்பற்றினர் , இப்பொழுதுள்ள தேவைக்காக நாம் பகுத்தறிந்து காரணத்தோடு செயலாற்றலாம், நம் வாழ்க்கையின் நெடுநாள் தேவைகள் நம்முடைய மறுமை(நம்முடைய சன்னதியரின்) தேவைகள் நமக்கு புலப்படுவதில்லை அதற்கு சில வித நம்பிக்கைகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

சூரிய ஒளி நம் உடலை புதுப்பிக்கின்றது, நமக்கு புத்துணர்வை தரும், ஒரு நாளில் சில மணி நேரங்களாவது நாம் வெளியில் வந்து நல்ல காற்றும் சூரிய ஒளியும் பெறுவது நமக்கு இன்றிமையானது. அடுத்த முக்கியமான உயிர் நாடிகளில் ஒன்று நீர். நீரானது நிலையானது அல்ல, அதனாலேயே அது நீர்(ந் + ஈ + ர் receive + give away + transfer). பூமியின் பருவ நிலைக்குக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கும். நீர் தண்ணீராக, பனிக்கட்டியாக, நீர்-ஆவியாக இப்படி மாற்றம் ஆகிகொண்டே இருக்கிறது, இந்து மா கடலில் ஆவியாகும் நீர் இமய மழையில் பணியாக மழையாக விழுந்து கங்கையாக மீண்டும் கடலுக்கே வந்து சேரும். நீரால் புறத்தூய்மை பெறலாம் என்று வள்ளுவர் கூறுகின்றார் , ஆம் நம்முடைய உடலும் உடைமைகளும் மற்றும் நம் பூமியை தூய்மை ஆக்க நீர் ஒரு சிறந்த அருமருந்து.

இயற்கை சுழற்சிக்கு வழிவிடுவதே தூய்மை.

நம் உணவு

நம் உணவை பெரும்பகுதியாக உண்போம், ஆம் நம் உணவு, நாம் இருக்கும் இடத்தில் விளையும் உணவு, அது அசைவம் சைவம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, தென்னகத்தில் நாம் ஆப்பிளையும் ஓட்ஸையும் கோதுமையும் தேடி போகவேண்டாம், இங்குள்ள உணவே நமக்கு ஆரோக்கியம், மற்றவைகளை ருசிக்காக குறைவாக புசிக்கலாம். நாம் அயல்நாடுகளில் இருந்தால் அந்தந்த நாட்டில் எது விளைகின்றதோ அதில் சிறந்த இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்து உண்போம்.

இயற்கை உணவு

இன்று எல்லாவற்றிலும் மனிதனின் பேராசை கலந்துவிட்டது, ஆம் நாம் உண்ணும் உணவிலும், நம் பேராசை எவ்வளவு குறைவாக உள்ளதோ அதுவே இயற்கை உணவு என்று கொள்ளலாம், பிராய்லர் கோழிகள், அதிகமான ரசாயனம் அடிக்கப்பட்டு வளர்ந்த தானியங்கள், இயற்கை சுழற்சி இல்லாத இடங்களில் விளைந்த பொருட்கள் எல்லாமே நமக்கு பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.

மனஅழுத்தம் மற்றும் நேர்மையான சிந்தனைகள்

இன்றய உலகத்தில் நமக்கு பலவிதமான தேவைகள் அதில் முக்கியமானது பணம், அதற்காக நம்முடைய நேரத்தில் பெரும் பகுதியை செலவழிக்கின்றோம், இன்றய சமூகம் நம்மை அதை நோக்கியே பயணம் செய்ய தூண்டுகிறது. ஆனால் அது மட்டுமே குறிக்கோள் என்று செல்பவர்களுக்கு மன அழுத்தம் மட்டுமே மிஞ்சும். அதனால் நமக்கு வயது முதிர்வில் வரும் நோய்கள் இன்றே வந்து நிற்கும். பெரும்பான்மையாக நிகழும் இருதய நோய்களுக்கு மன அழுத்தம் மட்டுமே பெரிய காரணி என்று கண்டறிந்துள்ளனர்.

தமிழில் செல்வம் என்று சொல் ஒன்றுள்ளது, செல்வம் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது பொருட்செல்வம், ஆனால் அது மட்டுமல்ல இன்னும் உடல் நலம், கல்வி அல்லது ஞானம் என்று இப்படி செல்வங்களில் பல உள்ளது, பதினாறு பெற்று.. என பதினாறு செல்வங்களாக வகை படுத்துவர். செல்வத்திற்கு இன்னொரு பெயர் திரு என்று கூறலாம்.. திரு என்றால் தெய்வ நிலையை குறிப்பது..என் ஓலி ஆராய்ச்சிப்படி திரு என்றால் நிலைத்து நிற்பது, என்று பொருள் தரும். அதாவது எல்லாம் சேர்ந்த நிலை.. வடமொழிகளில் திரி அல்லது மூன்று என்ற சொல்லை நினைவிற் கொள்ளலாம். டிரினிட்டி என்று ஆங்கிலத்தி கூறுவார். ஆம் அந்த மூன்றும் சேர்ந்தது தான் இறை நிலை அல்லது முழுமை பெற்ற நிலை. என்பது பல மதங்களில் உள்ள கோட்பாடு
நாம் திரு நிலைக்கு நம்மை கொண்டு செல்ல இந்த வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் ஒன்றை பிறர்க்கு தன்னலமில்லாமல் கொடுத்து பெறவேண்டியதாக உள்ளது, அதற்கு இறைநம்பிக்கை அல்லது நான் எனும் அகந்தையை நீக்கி பொதுநலமாக சிந்தித்தல் அவசியமாகின்றது.

மருத்துவம் மகத்தானது, நவீன மருத்துவம் அளவற்ற முன்னேற்றம் அடைந்துள்ளது.. இருந்தாலும் நோய்களுக்கு பஞ்சமில்லை, எல்லா இடத்திலும் நன்மையும் தீமையும் புதைந்து தான் இருக்கிறது.. நாம் ஒவ்வொருவரும் தேடுவது நமக்கு கிடைக்கின்றது, ஆம் நாம் அதற்குரிய விலை கொடுத்து தான் ஆகவேண்டும் அது புரிவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.

நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,


நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாக மருத்துவம் செய்ய வேண்டும்.

ஆனால், நவீன மருத்துவம் என்ன செய்கிறது, எப்படி அது பிரபலப்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நவீன மருத்துவத்தின் கவனம், அதன் தோற்றத்திலிருந்து இன்று வரை பலவிதமான நவீன மருந்துகளைப் பரிந்துரைப்பதன் மூலம் "நோய்களின் அறிகுறிகளுக்கு சிகிச்சை' அளிப்பதாகவே உள்ளது. உண்மையான விஞ்ஞான அர்த்தத்தில், ஒரு நோயின் அறிகுறிகளுக்கு மட்டும் பெரும்பாலும் சிகிச்சையளிப்பது விவேகமற்றது. சிகிச்சைக்கும் (TREATMENT), நோய் குணமாவதற்கும் (CURE) முற்றிலும் வித்தியாசம் இருக்கிறது. நோயின் மூல காரணத்தை அறிந்து அதை குணப்படுத்தாத எந்த மருந்தும் நோயின் அறிகுறிக்கான சிகிச்சையே தவிர, அது உண்மையான நோயை உருவாக்கிய காரணிகளை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அல்ல.

ஒரு மருந்தைக் கொடுத்து, அந்த மருந்தினால் நோய் குணமாகிவிட்டது என்ற நிலை வருமானால், அது நோயைக் குணமாக்கும் மருந்து. நோயை குணமாக்காத எந்த மருத்துவத்தாலும் எவ்விதப் பலனும் இல்லை. அப்போது தான் மாற்று மருத்துவத்திற்கு, மருந்தில்லா மருத்துவத்திற்கு நாம் செல்ல வேண்டும். இதை எப்படி தீர்மானிப்பது- முடிவெடுப்பது?

ஓர் உதாரணத்தை நாம் பார்க்க வேண்டும்.

மாட்டு வண்டியில் பூட்டி, நன்றாக உழைக்கும் மாடு ஒரு நாள் படுத்துக்கொள்கிறது. அதனால் எழ முடியவில்லை என்றால் அது எதனால் படுத்திருக்கிறது என்று அறிந்து அதன் நோயைத் தீர்க்கும் மருந்து கொடுத்தால், அந்த நோய் சரியானதும் தானாக எழுந்து நடக்கும். ஆனால் அதை விடுத்து உடனடியாக மாட்டை வண்டியில் பூட்டி ஒட்ட வேண்டும் என்று சாட்டையால் அடித்தால், அது வலிதாங்காமல் எழுந்துவிடும். சாட்டையால் அடித்தால் மாடு எழுந்து நடக்கும் என்பது தான் சரியான நடவடிக்கை என்று நினைத்து, அது தான் நோய் தீர்க்கும் முறை என்று கருதுவதைப் போன்றதுதான், நோயின் அறிகுறிக்கு மருந்து கொடுப்பது. 100 மாட்டை சாட்டையால் அடித்தாலும், 1000 மாட்டை சாட்டையால் அடித்தாலும் அவை எழுந்து நடக்கும்; ஒடும். 1000 மாட்டிற்கு பரிசோதனை பண்ணிவிட்டோம்; எனவே சாட்டையடிதான் மாட்டிற்கு வந்த நோய்க்கு தீர்வு என்று சொல்வதை எப்படி ஏற்க முடியாதோ அப்படித்தான் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்வதையும் ஏற்க முடியாது. அதாவது, நோய்கேட்டு, அதன் அறிகுறிகேட்டு, நோயின் அறிகுறியை நீக்கும் மருந்து கண்டது நவீன மருத்துவம் என்ற எண்ணம் பெரும்பாலும் நிலவுகிறது. அதில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறியவேண்டும்.

அவசரச் சிகிச்சை தேவையான நேரத்தில், தேவையான அறுவைச் சிகிச்சை செய்து நோய் திரும்ப வரவில்லை என்ற நிலையிலும், விபத்தினால் ஏற்படும் ஊனம் குணமாகிற போதும், அந்த அறுவைச் சிகிச்சையினால் நல்ல பலன் கிடைக்கிறது என்றால், அறுவை சிகிச்சையில் நவீன மருத்துவம் தான் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சையினால் நிரந்தர ஊனம் ஏற்படும் நிலையில் இருக்கிறது என்றால் அதனால் எவ்வித பலனும் இல்லை. இது ஒரு சில அறுவை சிகிச்சைகளுக்குப் பொருந்தும்.
நவீன மருத்துவத்தில், சில நேரம் கூடுதலான அளவில் மருந்துகளைப் பரிந்துரைப்பதின் மூலம், பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை அது உருவாக்குகிறது. பெரும்பாலான நோயாளிகள் நவீன மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளிலிருந்து எந்த வித ஆரோக்கிய முன்னேற்றத்தையும் பெற மாட்டார்கள். ஆனால் மருந்து மட்டும் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒரு வேளை அது வாழ்நாளை அதிகரிக்கும். ஆனால் அது ஆரோக்கியமானதா?

ஒரு சில நோய்களுக்குக் கடைசி வரை மருந்து எடுக்க வேண்டும் வேறு வழியில்லை என்று எப்போது சொல்கிறார்களோ, அந்த மருந்துகள் நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்கான மருந்துகளாக இல்லை. குறிப்பாக சில நீரழிவு நோயாளிகள், இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்து, மருந்து மாற்றி எடுத்து, அதன் அளவைக் கூட்டியும், குறைத்தும் எடுத்து வந்தும் நோய் குணமாகாமல், நோய் முற்றி அடுத்த, அடுத்த நிலைக்கு நோய் முற்றி கொண்டே செல்லுமே தவிர, அது குணமாவதில்லை என்ற நிலை காணப்படுகிறது. புகழ்பெற்ற கோச்ரேன் ஒத்துழைப்பின் (Cochrane Collaboration) இணை நிறுவநர் பீட்டர் கோட்ஷே, உலகத்திலேயே இதய நோய் மற்றும் புற்றுநோய்க்குப் பிறகு உலக அளவில் மரணத்திற்கு மிகவும் பொதுவான 3 -ஆவது காரணம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் (Prescribed Medicine) தான் என்று குற்றம்சாட்டுகிறார். நவீன மருத்துவம் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார்.

இங்கிலாந்தில், வயது வந்தவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் குறைந்தது ஒரு மருந்திலும், கால் பகுதியினர் குறைந்தது மூன்று மருந்துகளையும் உட்கொள்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில், மருந்துகளின் பயன்பாடு 47% அதிகரித்துள்ளது. நவீன மருத்துவம் என்று அழைக்கப்படுவது உண்மையாயின், அது நோய் குணமாவதற்கான தீர்வுகளை அளிக்கிறது என்றால், மருந்து உட்கொள்ளும் மக்கள் தொகையில் இவ்வளவு பெரிய அதிகரிப்பு ஏன்? அவற்றிலும் பல மருந்துகளை ஏன் வாழ்நாள் முழுவதும் எடுக்கும் நிலை காணப்படுகிறது? பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, ஆரோக்கியமற்ற அதிகமான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் வயதான மக்கள் தொகைதான் ஒரு நல்ல அரசுக்கு அச்சுறுத்தலே தவிர, ஆரோக்கியமாக இருக்கும் வயதான மக்களுக்கு ஆகும் செலவு அல்ல.

பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் ஓர் அதிர்ச்சிகரமான அறிக்கை, அடுத்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிக அளவில் உயரும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நவீன வாழ்க்கைமுறையும், மருத்துவமும் உலகை எங்கே அழைத்துச் செலுத்துகிறது? வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நோய்களின் மூல காரணத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, மக்கள் நீண்டகால நன்மைக்கான ஓரளவு நோய் தீர்க்கும் வாய்ப்பை மட்டுமே வழங்கும் மருந்துகளை நாடுகின்றனர். அந்த நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளிலிருந்து சில பக்க விளைவுகளை அனுபவிக்கிறார்கள். மருந்துகளிலிருந்து சிறிய நீண்ட கால ஆரோக்கியத்தை அனுபவிப்பதற்காக அவர்களின் வாழ்க்கைத் தரம் மோசமடைகிறது என்று பலர் கூறுவதைக் காணலாம். நவீன மருத்துவ முறையை அதிகமாக நம்புவதே இதற்குக்
காரணம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தல், உண்ணா நிலை, எதிர்கால நோய்க்கான ஆபத்தை குறைப்பது மட்டுமல்லாமல் அது வாழ்க்கைத் தரத்தில் நேர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது.

healthjournalism.org ஒரு தரவை பதிவு செய்திருக்கிறது, அதில் Public Citizen's Health Research Group இன் இயக்குநர் Dr. மைக்கேல் ஏ காரோமி M.D. சொல்கிறார்: ""பார்மா மருந்து கம்பெனிகள் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் செயல்பட்டதின் காரணமாக பல்லாயிரக்கணக்கான கோடிகளில் அபராதம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்கு, கடுமையான சட்டங்களை இயற்றி, அதை ஊழலுக்கு இடம் கொடுக்காமல் அமல்படுத்தினால் மட்டுமே நவீன மருந்துகளின் தவறான உபயோகம் தடுத்து நிறுத்தப்படும்'' என்கிறார். ஊழல் இல்லாமல் ஒரு காரியம் நடக்குமா, அது அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள், மக்களின் உணர்வுகளை அறிந்தவர்கள் நாட்டிற்கு தலைமை ஏற்றால் மட்டுமே சாத்தியம். சரி, அது நடக்கும் போது நடக்கட்டும். இப்போது மருந்துகள் எப்படி தவறாக உபயோகப்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது நோய்க்கான மருந்து என்று நிரூபிக்கப்படாத மருந்துகளைச் சந்தைப்படுத்தி விற்பனையில் ஈடுபடுத்துதல், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்கு ஆஃப்-லேபிள் மருந்துகளை அறிமுகப்படுத்தி சந்தையில் விற்பது, மருந்தின் மனித பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கைகளை, எதிர்மறை தரவை வெளியிடத் தவறியது, மருந்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை மறைத்து கூறுதல் போன்றவை என்று அறிக்கை கூறுகிறது.

1991-2017 - ஆம் ஆண்டில், நவீன மருந்துகளின் தவறான பரிந்துரை மற்றும் தவறான சந்தைப்படுத்துதலுக்கு மட்டும், அமெரிக்க ஃபெடரல் மற்றும் மாநில அரசுகள் இணைந்து, 412 மருந்து நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக சுமார் 39 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 2.80 லட்சம் கோடி) அபராதம் விதித்திருக்கிறது. இந்த காலகட்டத்தில், கிளாக் சோஸ்மித்க்லைன் மற்றும் ஃபைசர் முறையே 7.9 பில்லியன் டாலர் (ரூ 56,000 கோடி ரூபாய் மற்றும் 4.7 பில்லியன் டாலர் (ரூ 33,000 கோடி ரூபாய்) நிதி அபராதங்களில் அதிக கட்டணம் செலுத்தியது - மேலும் வேறு எந்த நிறுவனத்தையும் விட அதிகமான அபராதத்தொகையை (முறையே 32 மற்றும் 34 மருந்துகளுக்கு) செலுத்தியவர்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஃபார்மா நிறுவனங்களின் பல நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களைக் கைது செய்த வழக்குகளும் உள்ளன - எடுத்துக்காட்டாக, இன்சிஸ் என்ற மருந்து நிறுவனத்தின் நிறுவுநர், நிறுவனத்தின் ஃபெண்டானில் ஸ்ப்ரே, சப்ஸிûஸ பரிந்துரைத்ததற்கு ஈடாக லஞ்சம் மற்றும் கிக்பேக் கொடுத்ததாக 2016 மற்றும் 2017- இல் கைது செய்யப்பட்டார். இந்த சக்திவாய்ந்த ஓபியாய்டு புற்றுநோய் நோயாளிகளின் வலியைக் குறைப்பதற்கான சிகிச்சையளிப்பதற்காக மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இந்த மருந்துகளை மற்ற நோயாளிக்களுக்கும் பரிந்துரை செய்தற்கு மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் கூட பணவலிமை கொண்ட மருந்து கம்பெனிகள் தங்கள் சக்தியை தவறாகப் பயன்படுத்தும் போது, சட்டத்தின் ஆட்சி கொண்டு அதைத் தடுக்க முடியவில்லை எனும்போது, இந்தியப் பாரம்பரிய மருத்துவம், இந்த பெரிய நவீன மருந்து நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட முடியுமா? கண்டிப்பாக முடியாது.
மூன்றாவதாக, சமீபத்திய ஆய்வுகளின்படி, அமெரிக்காவில் மருத்துவப் பிழைகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக ஆண்டுதோறும் 2.51 லட்சம் இறப்புகள் நடைபெறுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளன. மருத்துவப் பிழைகள் மரணத்திற்கு 3 - ஆவது முக்கிய காரணியாகின்றன. கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற வளர்ந்த நாடுகளை விட மருத்துவப் பிழை விகிதங்கள் அமெரிக்காவில் அதிகம். அதே நேரத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான மருத்துவப் பிழைகள் மட்டுமே பதிவாகி அது வழக்கிற்கு வருகின்றது.

மருத்துவப் பிழைகளால் ஒவ்வோர் ஆண்டும் 138 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுவதாக WHO எச்சரித்தது. ஒவ்வொரு ஆண்டும் 2.6 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் மருத்துவப் பிழைகளால் ஏற்படுகின்றன. நோயறிதலில் பிழைகள், மருந்து பரிந்துரைகள் மற்றும் சிகிச்சையில் பிழைகள் மற்றும் மருந்துகளின் பொருத்தமற்ற பயன்பாடு ஆகியவை பல நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள் என்று WHO நோயாளி-பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். நீலம் திங்க்ரா குமார் தெரிவிக்கிறார். பல மருத்துவமனைகள் அவர்கள் செய்த தவறுகளை மறைக்கின்றன. WHO அறிக்கை நடுத்தர மற்றும் குறைந்த பொருளாதார நிலை கொண்ட நாடுகளில் ஏற்படும் மருத்துவப் பிழைகளை மட்டுமே குறிக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 80% ஆகும். வளர்ந்த நாடுகளில் கூட, ஒவ்வொரு 10 நோயாளிகளில் ஒருவர் மருத்துவத் தவறுகளுக்குப் பலியாகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தவறான மருந்துப் பரிந்துரைகள் தொடர்பான பிழைகளுக்கு மட்டுமே உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு 42 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ 3 லட்சம் கோடி) செலவாகின்றன.

உலகளாவிய அளவில் மேற்கண்ட அனைத்து கடுமையான குறைபாடுகள் இருந்தபோதிலும், 19ஆம் நூற்றாண்டில் கடந்த 200 ஆண்டுகளுக்குள் பிறந்த நவீன மருந்துவ முறை (ALLOPATHY) உலகெங்கிலுமுள்ள அனைத்து நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகளையும் முறியடிக்கும் வல்லமை பெற்றிருக்கிறது. அதன் அறிமுகத்திலிருந்து, இன்றும் வரை கூட இது பல மருந்துகளைக் கண்டறிந்து நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சையை மட்டும் அதிகமாக நம்பியுள்ளது. நோயைக் குணப்படுத்தும் அளவிற்கு நவீன மருந்துகள் உருவாக்கத்தில் அதிகமாக முன்னேறவில்லை. ஒரு சில உயிர் காக்கும் மருந்துகளை தவிர.

மறுபுறம், பாரம்பரிய மருத்துவ முறைகள் பல ஆயிரம் ஆண்டுகளில் ஆரோக்கியமான மற்றும் வலுவான உலகத்திற்கும், பல ஆயிரம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தலைமுறைகளைக் காப்பாற்றுவதற்கும் பொறுப்பாக இருந்திருக்கிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற கொள்ளை நோய்களும், இரண்டு உலக போர்களும் தான் நவீன மருத்துவத்தின் உலகளாவிய வீச்சிற்கு வித்திட்டன.

இன்றைக்கு நவீன மருத்துவம் இல்லை என்றால், உலகம் இல்லை என்று உலகம் நம்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது! ஆனால் நவீன மருத்துவமான அலோபதிக்கு முன்னர், தலைமுறை, தலைமுறைகளாக பாரம்பரிய மருந்துகள் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியுமா? முரண்பாடாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரிய மருத்துவத்தை "மாற்று மருந்து'என்று அழைக்கப்படும் நிலை இருக்கிறது. பன்னாட்டு மருந்துத் துறையின் பணவலிமைக்கும், சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரத்திற்கு இருக்கும் வல்லைமை பாரம்பரிய மருந்துகளை ஓரங்கட்டும் நிலைதான் இருக்கிறது.

Thirukkural - Management - Health - Counsel for Physicians
A universal complaint  today is that medical practitioners do not spend considerable time to diagnose diseases and prescribe right medications.  Valluvar has anticipated this crisis and has given his counsel to physicians through Kural 948. 

Diagnose with Care, discover the cause, 
And find and apply the remedy.

Diagnose thoroughly to find the complications of the disease, track the causes for that disease -  that includes the complication, the duration of the disease
-  decide on the methods or procedures to cure the disease and treat the disease accordingly. Curing a disease is a process. Any process demands attention, concentration, and time. Unfortunately, medical practitioners are so pressed for time that they cannot spare considerable time to listen to their clients, probe deep into the causes, and suggest right remedies.

English Meaning - As I taught a kid - Rajesh
In this kural, Thiruvalluvar describes the process of diagnosis
1) Understand and diagnose the disease in patients from their symptoms, complications of the disease (today's) clinical test, patients lifestyle, patients habits etc 2) Probe deep and identify the root cause(s) of the disease because it can be a lifestyle problem, food intake, habits, stress, life events etc 
3) Identify and suggest the right remedies, methods or procedures to cure the disease and treat the disease accordingly because many diseases cannot be cured by a single medicine or in single instance. There can be multiple cures available. Perhaps an integrated approach of modern medicine and traditional medicine can also be effective. Hence, identify the right remedy 
4) Diligently execute the curing process. Because curing a disease is a process that demands attention, concentration, time, discipline, consistency and diligence.

Questions that I ask to the kid
Explain the process of diagnosis of a disease

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

குறள் 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
[பொருட்பால், நட்பியல், மருந்து]

பொருள்
தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அன்றித் - அல்லாமல்

தெரிதல் - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

தெரியான் - அறியாமல் 

பெரிது - பெரிது, மிகவும்;  peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

இன்றிப் - இல்லாமல்

படும்படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
ஒருவர் வயிற்றின் பசிக்கும் உடல் உழைப்பிற்கும் ஏற்றவாறே உணவு உண்ண வேண்டும். ஆனால் பசியின் அளவிற்கு அல்லாமல் உணவையும் உணவு உண்ணும் காலத்தையும் ஆராயாமல் தன் உடல்நிலை உடலுழைப்பு பற்றிய தெளிவு இல்லாமல் அளவுக்கு அதிமாக உணவை உட்கொண்டால் அவருக்கு நோயும் அளவுக்கு அதிகமாக உண்டாகும். நோயின் தாக்கமும் அளவுக்கு அதிகமாக இருக்கும். 

முதுமொழிக் காஞ்சி (8:7), “உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது” என்பதும், ஆத்திச் சூடி, “மீதூண் விரும்பேல்” என்பதும் இக்குறளின் கருத்தையொட்டி, உணவை மிகுந்த அளவில் உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்துத்தவேதான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம். இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.


நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
”ஒவ்வொரு மனிதனுகும் தேவையானது தூய காற்று, தூய நீர், தூய எண்ணம், தூய அறிவு” என்றார். “உப்பை உபயோகிக்காதீர்கள், ‘மருந்து சாப்பிடுவது இல்லை’ என்ற சூளுரை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாயை வெட்கமில்லாமல்  தின்னாதீர்கள். சுடுசோற்றைக் காட்டிலும் பழைய சோறே நல்லது. நெல்லை முளைகட்டி வறுத்து, இடித்து, அவலாக்கி உண்டால் நன்மை; தீமை விளைவிக்காது. பொரி, நெல் பொரி சாப்பிடலா என்றார்கள். மேலும் புலாலை விடுங்கள். அது புண்நச்சு; புத்தியைக் கெடுத்து விடும். கொடியவனாக்கி விடும்” என்றார்.

எண்ணெயில் பொரித்த வடை, போண்டா, காரசேவு, பக்கோடா முதலியவைகளைச் சாப்பிடாதீர்கள், பாலை அதிகமாகப் பருகாதீர்கள்” என்றார். “காபி, டீ குடிக்காதீர்கள். எண்ணெயில் பொரித்த அப்பளத்தைத் தவிர்த்து விடுங்கள்” என்றார். “ஆரஞ்சு, திராட்சை, இளநீர், வெந்நீரில் வந்த வாழைக்காய் அவியல், சுட்ட அப்பளம் முதலியன சாப்பிடலாம்” என்றார்.

”உணவே மருந்து. மருந்தே உணவு” என்றார். வாழைக்காயைப் பொரியலாகச் செய்து சாப்பிட வேண்டாம் என்றார். “மிளகாயைத் தண்ணீரில் ஊறப்போட்டு, அந்தத் தண்ணீரைக் காயில் தெளித்துக் காரத்திற்காக உபயோகியுங்கள்’ என்றார். காய்ச்சிய தண்ணீர் கூடாது என்றார். நெருப்பில் கையை வைத்தால் சுடுவதுபோல் இயற்கை நெறியை தவிர்ப்பவர் துன்பத்தை அனுபவிப்பர் என்றார். தரையில் மணல் பரப்பி அதன் மேல் நீர் நிரப்பிய மட்பாண்டத்தை வைத்து, அதனுள் துணியில் முடிந்து வைத்துள்ள வில்வ இலையைப் போட்டு ஊற வைத்து அந்த நீரை வடிகட்டிக் குடிநீராக அருந்தலாம் என்றார். ‘தேங்காயை உடைத்த பின் அப்போதே சாப்பிடுங்கள். காலையில் உடைத்ததை மாலையில் சாப்பிடாதீர்கள். புதுமையாக உண்ணுங்கள். நாள் பட்ட பழத்தைச் சாப்பிட வேண்டாம்” என்றார். அளவோடு தண்ணீர் வைத்து வடிகட்டாமல் பொங்கலாக சமைத்து சாப்பிடுங்கள் என்றார். தண்ணீர் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரை அருந்துங்கள் என்றார்

காலை 10 அல்லது 11 மணிக்கு தேங்காயும், மதியம் கதிரவன் ஒளியில் இருந்த பின்மாலை கால் அல்லது அரைமூடி தேங்காய், பழம் சாப்பிட வேண்டும் என்றார். ஒருமுறை உண்டபின் குறைந்தது 8 அல்லது 10 மணி பொறுத்து அடுத்த வேளை உணவைச் சாப்பிட வேண்டும் என்றார். தேங்காய், வாழைப்பழம் எப்பொழுதும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். எனவே சிவசைலம் ஆசிரமத்துக்கும் வரும் விருந்தினர்களுக்கும் தேங்காய், வாழைப்பழ உணவு தான் பரிமாறுகிறோம் என்றார். 

நாட்டுவாழை, கற்பூரவாழை முதலியவற்றை 2 மாதக் குழந்தைக்கும், இறக்கும் தறுவாயில் இருப்பவருக்கும் கொடுக்கலாம் என்றார்.

'பருப்பு வகைகளே உடம்புக்குக் கெடுதி செய்யும். பருப்பு சீக்கிரம் அழுகக் கூடியது. சக்தி அளிக்க வல்லது அல்ல பருப்பு’ என்றார். பல்வலிக்கு 2 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் பறந்து போகும் என்றார். உப்பு, உறைப்பு தவிர்த்தால் கை, கால் வலி போகும் என்றார்.

'வறுமை வரும்போது உள்ளம் கெடுவதில்லை நச்சுத் தன்மை தான் கெடுக்கின்றது. வளமான வாழ்வினை வாழ்கின்றவர்கள் தான் சூழ்ச்சியால் வஞ்சனையால் ஏமாற்றுகின்றனர். இயற்கை வாழ்வில் வறுமையில்லை. ஒரு வாழைப்பழம், ஒரு துண்டு தேங்காய போதும், குறைத்து உண்பது வாழை வளப்படுத்தும். இதைத்தான் திருமூலர் “உண்டி சுருங்கில் உபாயம் பலஉள” என்கிறார்.

’மனிதன் தேவைக்கு அதிகமாக உண்கிறான். ஆசைப் பேய் பிடித்து அலைகிறான். ஒருவருக்கொருவர் ஏமாற்ற நினைக்கின்றனர். தூய நீர், தூய காற்று ஒருவனை நல்லவனாக்குகிறது. நல்ல சூழலில் சான்றோர்களுடன் வாழ்பவர் நல்லவர். காரம், உப்பு, இறைச்சி, மீன், முட்டை, சமைத்த அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகா. மனிதன் எதை உண்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான். எனவே அடிப்படை மாற்றம் தேவை. உள்ளத்தை, உணர்வைக் கெடுக்கின்ற உணவைத் தவிர்த்தல் வேண்டும். மதுப்பானம், காபி, தேநீர் விடுவிக்கப்படல் வேண்டும்.” என்றார்.


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

குறள் 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
[பொருட்பால், நட்பியல், மருந்து]

பொருள்
மாறுபாடு - பகைமை; வேறுபடுதல்; ஒவ்வாமை; புரட்டு

இல்லாத - இல்லை, வறுமை

உண்டி - உணவு; சோறு இரை பறவை விலங்கு இவற்றின்உணவு; உண்டிச்சீட்டு; கருவூலம் மாற்றுச்சீட்டு; காணிக்கைப்பெட்டி; கோயிலுக்குக்கொடுக்கும்பணம்; நுகர்ச்சி கொட்டைக்கரந்தை

மறுத்து - மறுபடியும்; மேலும்.
மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல்.

உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

ஊறுபாடு - துன்பம்; தீமை; புண்படுகை; காயம்; சேதம்.

இல்லை - இல்லை

உயிர்க்கு - இந்த உயிருக்கு, இந்த பிறவியிற்கு

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையல்லாத உணவினை உண்ணும் அளவிற்கு மேல் செல்ல மறுத்து அளவாக உண்டால் உணவினால் எவ்வித துன்பமும் இல்லை அவ்வுயிர்க்கு.

இக்குறளில்  இரண்டு விஷயங்களை காணலாம்
1. உடலிற்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாத உணவை உண்ண கூடாது
2. உடலுக்கு ஏற்ற உணவானாலும் அளவாகவே உண்ணவேண்டும்.

ஆயூர்வேத டாக்டர் இல்.மகாதேவன்/இல்.மஹாதேவன் (Ayurveda Dr. L.Mahadevan) அவர்கள் “முதற்கால்” என்றொரு நேர்காணல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
பொதுவாக நோய்களுக்குத் தான் பத்தியம். சேராங்கொட்டை போன்ற மருந்துகள் பயன்படுத்தும்போது அரிதாக மருந்திற்கும் பத்தியங்கள் உண்டு. நோய்களுக்குப் பத்தியம் மிக மிக முக்கியம். தொடக்க காலத்தில் நான் பத்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என சொல்லிக்கொண்டு இருந்ததுண்டு. ஆனால் இப்போது பத்தியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். ஆட்டோ இம்யூன் நோய்கள், அதாவது முடக்குவாதம் (rheumatoid) போன்ற, நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலின் சில திசுக்களுக்கு எதிராகச் செயல்படும் நோய்களுக்கெல்லாம் பத்தியம் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். பத்தியம் என்ற வார்த்தைக்கு சிகிச்சை என்று பொருள். ஸ்ரோதஸ்களுக்கு உகந்தது பத்தியம். இப்பொழுது ஆங்கில மருந்துகளிலுமே பத்தியம் பின்பற்றுகிறார்கள். சிறுநீரக நோயில் பொட்டாசியம், உப்பு சேர்க்கக் கூடாது, புரதத்தைக் குறைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள், சர்க்கரை நோயில் பிரக்டோஸ், மாவுச்சத்து உட்கொள்ளக் கூடாது என்கிறார்கள். தைராய்டு சுரபி குறைவாகச் சுரக்கும் நிலையில் முட்டைக்கோஸைச் சாப்பிடக் கூடாது. நன்மை பயக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும், தீமை பயக்கின்ற உணவுகளை நிறுத்த வேண்டும். இதுவே பத்தியம். ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று அன்றே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். அது மட்டுமல்ல; ’மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ எனும் குறள் பத்தியத்தைத்தானே உணர்த்துகிறது. பத்தியம் என்பது மறுத்து உண்ணல்தானே?

மேலும்: அஷோக் உரை

உணவை எப்படி உண்ண வேண்டும் என்பதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு - சொல்வளர்காடு-30-இல் ஒரு பகுதி இப்படி விவரிக்கிறது.

ஆனால் மறுநாள் காத்யாயனி “தந்தையே, எனக்கு யாக்ஞவல்கியர் முனிவரையே மணமகனாகப் பாருங்கள்” என்றாள். காத்யாயனர் வியந்து நோக்க “வேதத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களுக்கு பிறிதொரு தூய்மை தேவையில்லை என்று நேற்று உணர்ந்தேன்” என்றாள். “அவர் தன் தேவைக்குமேல் ஒரு பருக்கையும் உண்ணவில்லை. இலையில் ஒரு பருக்கையும் எஞ்சவைக்கவில்லை. ஒவ்வொரு கவளம் சோறும் பிறிதொன்று போலவே இருந்தன. ஒவ்வொரு கையசைவும் வாயசைவும் ஒருமைகொண்டிருந்தன. ஒவ்வொரு துளி உணவிலும் முற்றிலும் சுவையுணரப்பட்டது. உண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே” என்றாள்.

“ஆம், அவர் உணவில் சுவைகொண்டவர். ஊனுணவை விரும்பி உண்பவர் என்று சொல்லப்படுகிறது” என்றார் காத்யாயனர். காத்யாயனி புன்னகைத்து “நான் அவருக்கு வைத்த ஒரு கூட்டில் உப்பும் புளிப்பும் சேர்க்கவில்லை. வேப்பெண்ணையையே கலந்திருந்தேன். பிறிதொன்று இனியது. அவர் முகத்தில் இரண்டுக்கும் வேறுபாடே தெரியவில்லை. இரண்டிலும் சுவையறிந்தவர் பிரம்மத்தையே உண்கிறார்” என்றாள்.

நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
வள்ளுவர் இக்குறளுக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்

இம்மணிக்குறளை வையகம் வாழ நல்கினார். இயற்கைக்கு மாறுபாடி இல்லாத இயற்கை உணவினை அறிந்து, பிற உணவுகளை மறுத்து, அந்த இயற்கை உணவையே உண்பாரேயாயின் மக்கள் இனத்திற்கு மட்டுமன்றி எவ்வுயிருக்குமே என்றும் ஊறுபாடு-துன்பம்-துயரம்-நோய்-நொடி-சிதைவு-சீரழிவு எவையும் உண்டாகா என்று இக்குறள்  தெரிவிக்கின்றது. 

மாறுபாடு இல்லா உண்டி - 1) இயற்கைக்கு மாறுபடாத 2) உடலுக்கு மாறுபடாத 3) காலத்திற்கு மாறுபடாத 4) இடத்திற்கு மாறுபடாத உணவு - இயற்கை உணவே

அந்தந்த இடங்களில் அந்தந்தப் பருவங்களில் கிடைக்கும் உடலுக்க்கு ஏற்ற இயற்கை உணவுகள் - கனிகள் - காய்கள்.

மறுத்து - (1) அளவோடு (2) உண்ணா நோன்போடு - இயற்கை உணவுகளை அளவோடும் இடை இடையே உண்ணா நோன்போடும்.
உண்ணின் - ஐயப் பொருளில் அதன் கடினம் சுட்டியது. நன்மையின் உயர்வும் சுட்டியது.

ஊறுபாடு - உண்டாகிய, உண்டாகின்ற, உண்டாகும் துன்பங்கல் - தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் துன்பங்கள் - நோய்கள்.
உயிர்க்கு - மக்களுக்கு மட்டுமன்றி, எல்லா உயிர்க்கும் இந்நெரியே நோயற்ற வாழ்வை நல்கும்


மேலும்
இயற்கை வாழ்வே இனிய நல்வாழ்வு!
தேங்காய் வாழைப்பழம் சிறந்த மனித உணவு!
கனிகளை உண்டு பிணியின்றி வாழ்வோம்!
வெயிலில் தோய்க! மழையில் நனைக!
காற்று மிக சிறந்த நுண் உணவு!
ஒரு வேளை ஒரு வகை கனியே உயர்வு!
உண்ணா நோன்பு உயரிய மருந்து!
மருந்துகள் யாவும் நச்சுப் பொருள்களே!
உப்பு ஒரு கூட்டு நஞ்சு!
ஒரு வேளை உண்பான் யோகி!
இரு வேளை உண்பான் போகி!
- புலவர் திரு.மு.இராமகிருட்டிணன்
- உலக நல்வாழ்வு ஆசிரமம் , சிவசைலம், திருநெல்வேலி


பரிமேலழகர் உரை
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது. (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.

மு.வரதராசனார் உரை
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

குறள் 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அற்றது - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

அற்றது -  செரித்த பின் / சீரணமானப் பின்

அறிந்து - அளவு அறிந்து
அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கடைப்பிடித்து - கடைப்பிடித்தல் - உறுதியாகப்பற்றுதல்; தெளிவாய்அறிதல்; விடாதொழுகுதல்; மறவாதிருத்தல்; சேர்த்துவைத்தல்

மாறு - (வி)குணி; ஒன்றைமற்றொன்றாக்கு; வேறாக்கு; மாற்று.
மாறு - வேறுபாடு; பகை; ஒவ்வாதது; ஒப்பு; இறந்துபாடு; பிறவி; பதிலுதவி; பதில்; துடைப்பம்; மிலாறு; பருத்திமுதலியவற்றின்தூறு; எதிர்; பதிலியாகக்கொள்ளுவது; பிரம்பு; விதம்; காரணப்பொருளுணர்த்தும்ஓர்இடைச்சொல்.

அல்ல - இல்லை

துய்க்க - துய்த்தல் - புலன்களால்நுகர்தல்; உண்ணுதல்; நூல்நூற்றல்; நாடகச்சந்திஐந்தனுள்இறுதியானது.

துவரப் - மிக; முழுதும்

பசித்து - பசித்தல் - பசியெடுத்தல் - பசியுண்டாதல்
பசி - உணவுவேட்கை; வறுமை; தீ.

முழுப்பொருள்
உடம்பை பேண நம் உணவு பழக்கவழக்கத்தில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகள் என்னென்ன ?

1. முந்தைய வேளை உண்ட உணவு முழுவதுமாக செரிமானம் ஆகிவிட்டதா என்பதை அறிந்து உண்ண வேண்டும்

2. நாம் உண்ணும் பொழுது நமது வயிற்றின் அளவிற்கும் பசியின் அளவிற்கும் நம் உடலுழைப்பின் அளவிற்கும் ஏற்றளவு உண்ணவேண்டும். அதேப்போல உணவின் தன்மை சூழலின் தன்மை (உதாரணமாக: தட்பவெட்பம். கோடைக்காலத்தில் உடம்புக்கு குளிர்ச்சித்தரும் உணவுகளை) அறிந்து உண்ணவேண்டும்

3. நல்ல உணவுகளையும் நல்ல உணவுப்பழக்கங்களையும் வாரத்தில் ஓரிருநாள் என்று அல்லாது எல்லா நாட்களும் எல்லா வேலையும் விடாதொஒழுக/கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் சில நாட்கள் சில வேலைகள் அதிக சாப்பிட நேரும். அப்படி அதிகம் சாப்பிட்டால் அதனை அடுத்தவேளை குறைத்துசாப்பிட்டு சரிக்கட்டவேண்டும்.

4. உண்ணும் நேரம், அளவு, கால இடைவெளி இவற்றை (பெரும்பாலும்) மாறாமல் வேறுபாடு இல்லாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

5. வயிற்றுக்கு தேவையெனில் அதனை அறிவிக்கும் ஆற்றல் வயிறை விட வேறெதெற்கும் இல்லை. பசியை போன்ற ஒரு சமிஞை வேறு இல்லை. உணவை பார்க்கும் தோறும் நினைக்கும் தோறும் உண்ண கூடாது. ஆரோக்கியமான வாழ்விற்கு நன்கு பசித்த பின்பு (அதவாது பசிக்க துவங்கிய உடனே என்றில்லாமல் நன்கு பசித்தபின்பு) மட்டுமே உண்ண வேண்டும்.

மேற்சொன்னவற்றை உணவை உண்பதற்கான நெறிகள் என கொண்டு கடைப்பிடிக்கவேண்டும்.

“பசித்துப் புசி” என்றொரு சொலவடை உண்டு. அதனை வலியுறுத்துவதே இக்குறள்

மேலும்: அஷோக் உரை


உணவை எப்படி உண்ண வேண்டும் என்பதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு - சொல்வளர்காடு-30-இல் ஒரு பகுதி இப்படி விவரிக்கிறது.

ஆனால் மறுநாள் காத்யாயனி “தந்தையே, எனக்கு யாக்ஞவல்கியர் முனிவரையே மணமகனாகப் பாருங்கள்” என்றாள். காத்யாயனர் வியந்து நோக்க “வேதத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களுக்கு பிறிதொரு தூய்மை தேவையில்லை என்று நேற்று உணர்ந்தேன்” என்றாள். “அவர் தன் தேவைக்குமேல் ஒரு பருக்கையும் உண்ணவில்லை. இலையில் ஒரு பருக்கையும் எஞ்சவைக்கவில்லை. ஒவ்வொரு கவளம் சோறும் பிறிதொன்று போலவே இருந்தன. ஒவ்வொரு கையசைவும் வாயசைவும் ஒருமைகொண்டிருந்தன. ஒவ்வொரு துளி உணவிலும் முற்றிலும் சுவையுணரப்பட்டது. உண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே” என்றாள்.

“ஆம், அவர் உணவில் சுவைகொண்டவர். ஊனுணவை விரும்பி உண்பவர் என்று சொல்லப்படுகிறது” என்றார் காத்யாயனர். காத்யாயனி புன்னகைத்து “நான் அவருக்கு வைத்த ஒரு கூட்டில் உப்பும் புளிப்பும் சேர்க்கவில்லை. வேப்பெண்ணையையே கலந்திருந்தேன். பிறிதொன்று இனியது. அவர் முகத்தில் இரண்டுக்கும் வேறுபாடே தெரியவில்லை. இரண்டிலும் சுவையறிந்தவர் பிரம்மத்தையே உண்கிறார்” என்றாள்.

பரிமேலழகர் உரை
அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. (அற்றது அறிந்து என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.).

மணக்குடவர் உரை
முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க. மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.

English Meaning - As I taught a kid - Rajesh
The principles we should follow while eating are: 
1. Assess whether the food intake during previous meal/snack has digested completely and there is hunger
2. Consume food according to the appetite, amount of physical work we do, nature of the food, climatic/seasonal conditions in which you live
3. Regularly/daily consume healthy balanced diet that has appropriate amount of nutrients, vitamins, minerals, carbs, fat, protein, electrolyte salts etc. Sometimes, in a party or festival, we might end up more. In those cases, compensate overeating by fasting the next meal
4. Maintain or be consistent in eating time, food quantity, time interval between meals/snacks.
5. Body knows when it needs energy/food. Body indicates by hunger. Hence, eat only when you have hunger. Don't eat whenever your think or whenever you see food. 

Questions that I ask to the kid
What are the principles we should follow while eating?

அற்றால் அளவறிந்து உண்க

குறள் 943
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அற்றால் - (உணவின்) தன்மை அறிந்து

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

உண்க - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி


பெறுதல்  - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெற்றான் - பெறுவான்

நெடிது - நீண்டது; தாமதம்.

உய்க்கும் - உய் - uy   II. v. i. live, subsist, சீவி; 2. prosper, flourish, தழை; 3. escape from danger, தப்பு; 4. obtain heavenly bliss, ஈடேறு, உய்வு, உய்தி, v. ns. enjoyment of life, prosperity, felicity, salvation.

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை
ஆறு - āṟu   s. a river நதி; 2. a way, road வழி; 3. morality, virtue அறம்; 4. the manner of doing a thing, விதம். 5. result, பயன்.

முழுப்பொருள்
முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். பல ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தி உள்ளன. பலரின் எடைக்குறைப்பிற்கு முக்கிய காரணம் உணவுமுறையே என்று. உணவு முறை 80% எடைக்குறைப்புக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி 20% எடைக்குறைப்புக்கு வழிவகுக்கும்.






பல உரைகள் அற்றல் என்றால் முன்பு உண்ட உணவு செரித்தாலும் என்ற பொருளில் இக்குளுக்கு விளக்கம் அளித்துள்ளன. அதாவது, முன்பு உண்ட உணவு செரித்தாலும் பின்பு உண்ணப்போகும் உணவின் செரிமானத்திற்கு ஏற்ப அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் நீண்டநாள் தழைக்கும் ஆரோக்கியான உடம்பு நமக்கு பயனாக கிட்டும் என்கிறது விளக்கம்.

ஆனால் எனக்கு சற்றுவேறுமாதிரி தோன்றுகிறது. (பி.கு : பிற குறள்களில் பசி வந்த பிறகு சாப்பிட சொல்கிறார். அதுமட்டும் இன்றி இந்த குறளில் கூட அளவு அறிந்து என்கிறார். ஆதலால் அளவு என்பது நம் பசியினையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும். ஆதலால் இங்கு அற்றால் என்றால் (அற்று''ன் பொருளான) தன்மை என்ற பொருளே பொருந்தும் என்று எனக்கு படுகிறது) அற்று என்றால் அத்தன்மையது. ஆதனால் உணவின் தன்மையை முதலில் அறிந்துக்கொள்ள சொல்கிறார் திருவள்ளுவர். 

மேலோட்டமாக சொன்னால் உணவின் புரதம் (Protein), கொழுப்பு (Fat) (அவற்றுள் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று இரு வகைகள் உள்ளன. இன்னும் சொல்லபோனால் Mono saturated fat, Poly saturated fat, saturated fat, trans fat, omega-3 fatty acid) என்று வகைகள் உள்ளன), மாசத்து (Carbohydrates), நார்சத்து (Fiber) விகிதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் (Vitamins) கனிமச்சத்துக்கள் (Minerals) போன்ற சத்துக்கள், உணவு நம்மேல் கொள்ளக்கூடிய தாக்கம் பயன், அதிகமாகவோ அல்லது குறைவாகுவோ உண்டால் அவ்வுணவு உடலுக்கு கொடுக்கக்கூடிய உபாதைகள் ஆகியவற்றை அறிந்து உண்ணவேண்டும். உணவின் செரிமானத்தன்மையையும் அறிந்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக அரிசி போன்றவை மிக எளிதில் செரிமானம் ஆகிவிடும். சர்க்கரை ஆறுபோல் வேகமாக பாயும். அதனால் நாளடைவில் Insulin Resistance பாதிப்படையும்.  ஆதலால் அவை நீரழிவு நோய்க்கு வழிவகுக்கும். அதுவே காய்கரிகள், சிறுதானியங்கள் உட்டச்சத்தும் நார்சத்தும் மிகுந்தவை. ஆதலால் அவை மிக மெதுவாக செரிமானம் ஆகும். அது இரத்ததில் சர்க்கரையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக விடும். அதனால் உடலில் Insulin resistance நன்றாக இருக்கும். வெள்ளை சர்க்கரை ஒரு அமிலம். அது உடலில் பசித்தன்மையை வளர்த்துவிடும். அதனால் ஒருவர் அடிக்கடி சாப்பிடுவார். உடல் கெடும். 

சித்த வைத்தியம் ஆயுர்வேதம் ஆகிய முறைகளில் வாதம், பித்தம், கபம் என்று மூன்று தோஷங்கள் உள்ளன. ஒவ்வொரு தோஷத்திற்கும் தன்மைகள் மாறும். ஒவ்வொரு உணவிலும் அதில் உள்ள மூன்று தோஷங்களில் அளவு மாறுபடும். 

சித்த வைத்தியம் ஆயுர்வேதம் ஆகிய முறைகளின்படி உணவின் சுவைகள் ஆறு. அவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு. இனிப்பு - தசையை வளர்க்கின்றது; புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது; கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது; உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது; துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது; கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது. (இக்கட்டுரையின் கடைசியில் அறுசுவை உணவுகளைப் பற்றி விரிவாக குறியுள்ளேன்.உபயம்: விக்கிப்பீடியா).

அதுமட்டும் இன்றி இம்மண்ணில் பட்டினியால் இறப்போரைவிட, முறையற்ற உணவுப்பழக்கத்தால் இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். உணவுப்பழக்கத்தால், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் உண்டாகும் நச்சுகளை வெளியேற்றத் தெரியாமலும் பலர் இறக்கிறார்கள்.

உடலுள் இருக்கும் இறைவனின் வடிவான அக்னிக்கு ஆஹுதியாகக் கொடுக்கப்படுவதே உணவு. இந்த உடல் அன்னத்தினாலானது. ஆயுர்வேதத்தில் உணவு உட்கொள்ளும் விதிமுறைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்தான் அடுத்து உண்ண வேண்டும், பசியில்லாமல் உண்ணக்கூடாது, இரைப்பையை நான்கு பாகங்களாக பிரித்தால், அதில் இரண்டு பாகத்திற்கு திட உணவுகளையும், ஒரு பங்கிற்கு திரவ உணவுகளையும் உட்கொண்டு மற்றொரு பங்கை காலியாக விடவேண்டும். அதிவேகமாகவோ, அதிமந்தமாகவோ உட்கொள்ளக்கூடாது. முதலில் இனிப்பு பண்டங்களும், பின்னர் மற்ற சுவை உணவுகளையும் உண்ண வேண்டும், இறுதியாகவே கசப்பான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். நம் பாரம்பரிய உணவு முறையில் உண்ணும்போது, தொடக்கத்தில் இனிப்பான உணவுகளை உண்பதால் வாத தோஷம் சமனடைகிறது, அடுத்ததாக புளிப்பு சுவையை அடிநாதமாக கொண்ட சாம்பார் ரசம் போன்ற உணவுவகைகள் அக்னியை தூண்டி பித்தத்தை முறைபடுத்துகின்றன, இறுதியாக கபத்தை சமன் செய்ய மோர் உதவும். 

உணவைக் கலோரியாக மட்டும் கருதாமல், வயிற்றுப் பையைக் குலுக்கி நிறைப்பதாக மட்டும் கருதாமல், தீட்டி வைத்திருக்கும் நாவுக்குத் தீனியாக மட்டும் நினைக்காமல் அதையோர் மருந்தாகக் கொண்டால் நோயற்ற வாழ்வை நாம் வாழலாம்.

ஆதலால் உணவின் தன்மையை முழுவதுமாக அறிந்து உண்ண வேண்டும். 

உணவின் தன்மை அறிந்து உண்டால்மட்டும் போதாது. அவ்வுணவு எவ்வளவு உண்ணவேண்டும் என்ற அளவு தெரிந்து உண்ண வேண்டும். இந்த அளவானது வயது, இடம், தட்பவெட்பம், ஆரோக்கியத்தின் நிலை, உடல்உழைப்பின் அளவிற்கு ஏற்ப மாறும். ஆதலால் இவற்றிற்கு ஏற்றவாறு உணவின் அளவு அறிந்து உண்ணவேண்டும். இவ்வாறு உணவின் தன்மை அறிந்து அளவு அறிந்து உண்டால்  நீண்ட நாள் தழைக்க கூடிய ஆரோக்கியமான உடம்பு பயனாய் கிடைக்கும். ஆரோக்கியமான உடம்பு இருந்தால் நோய் இன்றி வாழலாம். அப்படி வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். ஆரோக்கியமான உடம்பே இங்கு பயன்.

இங்கே வள்ளுவர் நோயினை பற்றி கூறவில்லை, ஏனெனில் கவலை இருந்தால் அது உடம்பை தாக்கும். மனநோய் வந்து உடம்பை கெடுக்கும். உடம்பு என்பது அடித்தளம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதால் சுவரான உடம்பை எப்படி வளர்க்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

உடம்பு சரியாக இல்லையென்றால் அதுவே நமக்கு மனநோயை உண்டாக்கி உடம்பை மேலும் வலுவிழக்கச்செய்யும்.ஆதலால் உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்போம்.

மேலும்: அஷோக் உரை

மேலும்
”உடல் வலு மருந்து” (புயலிலே ஒரு தோனி / ப.சிங்காரம்)

பரிமேலழகர் உரை
அற்றால் அளவறிந்து உண்க - முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அளவு அறிந்து அளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது - இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாலது ஈது ஒன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். 'பெற்றால்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க. அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.

மு.வரதராசனார் உரை
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.


இனிப்புச் சுவை (sweet)
மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை (Sour)
உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை (Pungent)
பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

உவர்ப்புச் சுவை (Salt)
தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.

இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.

உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

துவர்ப்புச் சுவை (Astringent)
இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.

இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

வாழைக்காய், மாதுளை,நாவல் பழம், மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை (Bitter)
அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

Thirukkural - Management - Health - Counsel for Individuals
When Kural 942 insisted on the method of taking food, Kural 943 insists on the quantity of food taken. Our body requires food, but overeating loads the stomach and that leads to diseases. It is true that the number of people who die because of overeating is more than the number of people who die because of starvation. If you eat a limited quantity food as required by your body, after the food already eaten is thoroughly digested, you can protect your body from diseases for a long time. Health is a wealthy possession. Eating food sensibly is one of the best methods to possess that wealthy possession.

Past food digested eat in measure 
And so tive long.

English Meaning - As I taught a kid - Rajesh
We should focus on long term result (good health) vs short term pleasure (taste). Without any aversion to any of 6 different tastes we should eat all kinds of food.

Questions that I ask to the kid
How should you eat? What is the benefit?
What should you know about food?
What is your goal of your eating?
Can you avoid tasty altogether? what can you about it?

மிகினும் குறையினும் நோய்செய்யும்

குறள் 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று
[பொருட்பால், நட்பியல், மருந்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மிகினும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.

குறையினும் - குறைதல் - சிறுகுதல்; இடம்பொருள்ஏவல்முதலியவற்றால்தாழ்தல்; பற்றாமற்போதல்; அரைகுறையாதல்; விலையேறும்படிபண்டம்அருகுதல்; எழுத்துக்கெடுதல்; வருந்திஉயிரொடுங்குதல்; குறைவுற்றுவருந்துதல்; ஊக்கங்குன்றுதல்; தோல்வியுறுதல்; அழிதல்.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

நூலோர் - நூலாசிரியர்; கற்றோர்; அமைச்சர்; பார்ப்பனர்.

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய் குடலிறக்கம், விரைவாதம்) (cf. balin. Hernia); சிறியகாலவளவுவகை; வாதமாகிய வாயு முதலாகிய
முதலா - முதல்

எண்ணிய - எண்ணிக்கை

மூன்று - மூன்று மூலக்கூறுகளாம் வாதம், பித்தம், கபம் போன்றவை

வாதம் - உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு; காண்க:வாதநோய்; வாதநாடி; பத்துவகைவாயு; காற்று; சொல்; வாதம்முதலியவற்றால்ஒருபக்கத்தைஎடுத்துக்கூறுகை; தருக்கம்; உரையாடல்இரசவாதவித்தை; வில்வமரம்.

பித்தம் - ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை; பித்தம் என்னும் பிணிக்கூறு; மயக்கம்; பைத்தியம்; கூத்தின்வகை; மிளகு; மண்வெட்டிக்கழுத்து.

சிலேட்டுமம் - உடலிலுள்ள கபக்கூறு

முழுப்பொருள்
நம் உடலில் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.  மருத்துவத்தில், நோயைத் தடுப்பதே முதல் மருந்து. அதற்கு ஒருவர் உடம்பில் இருக்கும் இம்மூன்று மூலக்கூறுகளும் ஒரு நுண்ணிய சம நிலையில் இருக்கவேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா? நோயைத் தடுப்பதற்கான அறிவே முதல் மருந்து. அதையே வள்ளுவரும் உணர்த்துகிறார்.

ஆயூர்வேத டாக்டர் இல்.மகாதேவன்/இல்.மஹாதேவன் (Ayurveda Dr. L.Mahadevan) அவர்கள் “முதற்கால்” என்றொரு நேர்காணல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
பொதுவாக நோய்களுக்குத் தான் பத்தியம். சேராங்கொட்டை போன்ற மருந்துகள் பயன்படுத்தும்போது அரிதாக மருந்திற்கும் பத்தியங்கள் உண்டு. நோய்களுக்குப் பத்தியம் மிக மிக முக்கியம். தொடக்க காலத்தில் நான் பத்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என சொல்லிக்கொண்டு இருந்ததுண்டு. ஆனால் இப்போது பத்தியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். ஆட்டோ இம்யூன் நோய்கள், அதாவது முடக்குவாதம் (rheumatoid) போன்ற, நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலின் சில திசுக்களுக்கு எதிராகச் செயல்படும் நோய்களுக்கெல்லாம் பத்தியம் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். பத்தியம் என்ற வார்த்தைக்கு சிகிச்சை என்று பொருள். ஸ்ரோதஸ்களுக்கு உகந்தது பத்தியம். இப்பொழுது ஆங்கில மருந்துகளிலுமே பத்தியம் பின்பற்றுகிறார்கள். சிறுநீரக நோயில் பொட்டாசியம், உப்பு சேர்க்கக் கூடாது, புரதத்தைக் குறைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள், சர்க்கரை நோயில் பிரக்டோஸ், மாவுச்சத்து உட்கொள்ளக் கூடாது என்கிறார்கள். தைராய்டு சுரபி குறைவாகச் சுரக்கும் நிலையில் முட்டைக்கோஸைச் சாப்பிடக் கூடாது. நன்மை பயக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும், தீமை பயக்கின்ற உணவுகளை நிறுத்த வேண்டும். இதுவே பத்தியம். ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று அன்றே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். அது மட்டுமல்ல; ’மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ எனும் குறள் பத்தியத்தைத்தானே உணர்த்துகிறது. பத்தியம் என்பது மறுத்து உண்ணல்தானே?



இதை பற்றி விரிவாக ஆயுர்வேத மருத்துவர் சிவராமன் விகடனில் எழுதியதை கண்டிப்பாக கீழ் காணுங்கள்
வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி!  - நலம் நல்லது - டாக்டர் சிவராமன் (நன்றி: விகடன்)
`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?’, `ஒருவேளை `வாத’க் குடைசலாய் இருக்குமோ’, `நெஞ்சில் `கபம்’ கட்டியிருக்கு...’ என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

வாதம் பித்தம் கபம்

`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான்

`மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’

- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார்.

பழங்குடிகள் நோய் வந்து சிகிச்சை பெறுவதைவிட நோய் வராமலேயே தடுப்பதற்கு முன்னுரிமை தருகிறவர்கள். எனவே, அவர்களுடைய சாப்பாட்டிலேயே மூலிகைகளின் பயன்பாடு இருக்கிறது. 

வாதம், பித்தம், கபம் 
வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.

வாத சம்பந்த பிணிகள்
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.

பித்த சம்பந்த பிணிகள்:
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.

சிலேத்தும சம்பந்த பிணிகள்
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

கீரை
தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!

* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்.

* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும்.


மிளகு
* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.

* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

எலுமிச்சை

* சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது.

வாதம், பித்தம், கபம் - இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல்கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்.

மேலும்: 
ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்! நலம் நல்லது-10! மருத்துவர் கு.சிவராமன் #DailyHealthDose

மேலும்
”உடல் வலு மருந்து” (புயலிலே ஒரு தோனி / ப.சிங்காரம்)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[பழவினையானும் காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும் ; அவற்றுள் பழவினையான் வருவன அதன் கழிவின்கண் அல்லது தீராமையின் அவை ஒழித்து , ஏனைக்காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின் திறம் கூறுகின்றார் . காரணங்களாவன உணவு செயல்களது ஒவ்வாமையாகலின் , பிணிகளும் காரணத்தான் வருவனவாயின.]

மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும் - ஆயுள்வேத முடையரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும் ('நூலோர் எண்ணிய' எனவே, அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின். அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றுஉம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க் கூறுப.) .

மணக்குடவர் உரை 
உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.

மு.வரதராசனார் உரை
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

Thirukkural - Management - Health
The old wise adage is 'Health is wealth.’ I prefer, based on my personal experience, observations, and the experiences shared by others, ‘Health is better than wealth,' to ‘Health is wealth.' That thought is indisputably true in the present day context. One of the major challenges for individuals, organizations  and nations 
is the challenge of health. Health care spending is not only a concern but also a major expense for a family, a company, and a nation.

There are complaints, especially in today's context, that there are more diagnoses, costlier treatments, and breakthrough medicines but there is less health. Though medical breakthroughs are taking place, new diseases are being diagnosed every day. Life expectancy, for sure, has increased and so is disability. People live long with disability. In olden days, people lived long and died short. But today people live short and die long. Here are Valluvar's counsels for the challenges of better health.

Let us get an understanding  of health. “Health is the state of being well and free from illness in body or mind. It is the condition of a person's body or mind,” (Oxford ñdvnnced Learner's Dictionary, 1996).

Valluvar has provided his prescription for a healthy living. His prescriptionis affordable; it is without side effects and within our control.

Thirukkural - Management - Health - Counsel for Individuals
Valluvar advices individuals to have knowledge of human body through Kural 941. This Kural gives a reference to Ayurvedha. Ayurvedha has studied the importance of balance of Vata, Pita, and Kapha for better health. Valluvar says that there will be disease in the body, if there is any change in the levels of these three. An increase or decrease of any one of these three causes disease. Therefore, disease is an outcome of an imbalance. So is the case with PH 7 factor, that is., alcoholic and acidic balance in the body. Similarly, when LDL (Low Density Lipoproteins) is high and HDL (High Density Lipoproteins) is low, there will be complications in the body. 

Three things beginning with wind, say the experts,
In excess or lacking cause disease.

Therefore, it is an individual's responsibility to maintain the balance of the above-mentioned things to lead disease free life. Knowledge of the requirements and the current condition of health will help us monitor our health.

English Meaning - As I taught a kid - Rajesh
Health is wealth. But one becomes unhealthy when one lets disease develop in this body. In Ayurveda, it is mentioned that three elements Vata, Pita, Kapa are primary indicators of one's health. If any of these three indicators reduce or increase in the body, it results in an imbalance in the body leading to disease. Depending on the intensity and time period of imbalance, the disease can onset immediately or build over a period of time. Therefore, it is an individual's responsibility to maintain the balance of the above-mentioned things to lead disease free life. Knowledge of the requirements and the current condition of health will help us monitor our health. Medicine world suggest that health has multiple components such as body, mind, soul, environment (house, locality, workplace) etc.  This prescription for a healthy living is affordable; it is without side effects and within our control.

Questions that I ask to the kid
What is essential to maintain the health disease free?
When disease develops in body?