குறள் 982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு
நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்
குணநலம் - பண்புகளின் / குணங்களின் சிறப்பே, பெருமையே
சான்றோர் - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.
நலன் - nalaṉ s. poetical change of நலம்.
சான்றோர் நலனே - சான்றோரின் சிறப்பு
சான்றோர் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன்
பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.
பிறநல - (குணங்கள் அல்லாது) மற்ற புற அழகெல்லாம், அது அல்லாமல் உறுப்புகளின் அழகு
எந்நலத்து - எவ்வகை சிறப்பிலும்
உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.
உள்ளதும் அன்று - சேர்ந்தது இல்லை
முழுப்பொருள்
ஒருவரின் பண்புகள், குணங்கள் மட்டுமே ஒருவரை சான்றோராக ஆக்கும் மற்ற புற நலம் எல்லாம் எவ்வகையிலும் சிறப்பு சேர்க்காது. நற்பண்பே சான்றோரின் சிறப்பு அவையல்லாமல் வெறும் உறுப்புகளின் அழகு எவ்வகை சிறப்பிலும் சேர்ந்ததில்லை
என்பதையும் நினைவில் கொள்க
If a man conquer in battle a thousand times a thousand men, and if another conquer himself, he is the greatest of conquerors. - The Buddha, The Dhammapada
நாம் நம்மை ஆள வேண்டும். அதுவே குணநலனை தரும். நமது உணர்வுகளை நாம் தான் அதிகாரம் செய்யவேண்டும். அதாவது அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். நம் உணர்வுகள் நம்மை கட்டுபடுத்தக் கூடாது. நாம் நமது உணர்வுகளை நமது மூளையில் இருந்துப் பெறுகிறோம். நமது மூளை ஐம்புலங்களில் இருந்து அவற்றைப் பெறுகிறது. ஆதலால் நாம் நம் மூளைக்கு என்னக்கொடுக்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். கோபம், காமம், பேராசை, பொச்சாப்பு, போன்ற உணர்வுகளுக்கு நாம் அதிபதியாக இருக்க வேண்டும். அவ்வுணர்வுகள் நம்மை ஆளக்கூடாது.
பி.கு:
நலம்புனைந்துரைத்தல்’ என்ற அதிகாரத்திற்கு ’அழகின் சிறப்புரைத்தல்’ என்று பொருள். 'நலம்’ என்ற சொல் சிறப்பு, அழகு என்று பொருட்களிலும் வருகிறது.
பிறநலம் - இங்கு பிற என்ற சொல் உடலைக்குறிக்கிறது.
உதாரணம்
எனக்கு உதாரணமாக தோன்றுவது மகாத்மா காந்தி அவர்கள். அவருடைய ஆடையோ பெரும்பாலும் அரை நிர்வானமான் ஒரு எளிமையான விவசாயின் ஆடையாக தான் இருக்கும். அவரின் தங்கும் இடமும் எளிமையாக தான் இருக்கும். அவர் பயணப்படும் ரயில்களும் முன்றாம் வகுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அவர் கடைப்பிடித்த பண்புகள் குணங்கள் அவரை ஒரு மகாத்மாவாக ஒரு தலைசிறந்த சான்றோராக ஆக்கியது. ஆக பிற புற அழகெல்லாம் அவரை சான்றோராக ஆக்கவில்லை என்பது புரிகிறது.
அதேவேலையில், நாம் இலங்கை அதிபர் மஹேந்த சிங் ராஜபக்ஷேவை பார்த்தால் தூய வெண்ணிற ஆடையில் ஒரு புத்த துறவிப்போல் காட்டிக்கொள்வார். ஆனால் அப்பாவி இலங்கை ஈழ தமிழர்களை கொன்று குவித்ததில் அவர் பங்கு சொல்ல வார்த்தைகள் பத்தாது.
மேலும் புற நலங்கள் தான் ஒருவரை சான்றோர் ஆக்குவது என்றால் எத்தனையோ அழகான நடிகர் நடிகைகள் இந்நாட்டை ஆளத் தகுதி வாய்ந்தவர்களாவர். ஆனால் அவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையே தொலைத்து உள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் ரசிகர்களால் கொண்டப்படுகிறார் மற்றும் சான்றோர்களால் போற்றபடுகிறார் என்றால் அவருடைய ஸ்டையிலையும் (பாணி) மீறி அவர் பண்புகள் தான் காரணம். அவ்வளவு புகழிலும் அவர் அன்பாகவும் எளிமையாக உள்ளார்.
பரிமேலழகர் உரை
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.
விளக்கம்
(அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப்பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள் பொதுவகையான் கூறப்பட்டன.)
மு.வ உரை
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
சாலமன் பாப்பையா உரை
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
மணக்குடவர் உரை
சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்: குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று. இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.
நல்ல குணத்தின் அழகுதான்
நல்லவர் நலன் ஆகுமே
வேறு எந்தச் செயலிலும்
நல்லவர் நலம் இல்லையே
நல்ல செயலில் மட்டுமே
நல்லவர் எண்ணம் செல்லுமே
தீமையான செயல்களில்
அவர்கள் மனம் செல்லாது.
மனிதனின் குணங்கள் மனிதனை உயர் மனிதனாக்குகின்றன.
மனிதனின் எண்ணங்கள், சொற்கள், செயல்கள், பழக்கங்கள், குணங்கள் நிர்ணயிக்கின்றன.
நற்குணங்களை தன்வயப்படுத்திக் கொண்டால், நல் மனிதர்களாக நாளும் வாழ இயலும்.
அதனால்தானோ வள்ளுவர்,
‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்’ என்கிறார்.
ஆனால் குணங்கள் அமைவதற்குப் பல காரணிகள் உள்ளன. கருவமைப்புப்பதிவுகள், பெற்றோரின் குணநலன்கள், சூழ்நிலை, கல்வி, சமுதாயம்,தொடர்பு கொள்ளும் மனிதர்கள், ஒழுக்க, பழக்க, வழக்கங்கள், நட்பு, தொழில், வாய்ப்புகள் எனப் பட்டியல் நீளும்.
சிறு வயது முதற்கொண்டு சீரிய பண்பு நலன்களை பழக்கமாக்கி விட்டால், வாழ்வு முழுவதும் அவை தொடரும். உயர் மனித மவளமே சமுதாய வளமாகும். மனிதவள உயர்விற்கு அத்தகைய மகத்தான குணங்களே வேண்டும்.
‘கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே! – சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’
என்ற பழமொழிகள் அவற்றை உறுதிப்படுத்தும்.
‘குணநலம் சான்றோர் நலனே’ என்பது வள்ளுவர் வாய்மொழி.
அத்தகைய குணங்களை, அவற்றை கைக்கொள்ளுதின் மூலம் நாம்பெற இருக்கின்ற மேம்பாட்டினை காண்போம்.
அனபு, கருணை, இரக்கம், தொண்டு, தானம், தவம், ஒழுக்கம், கடமை, ஈகை, வாய்மை, தூய்மை, நேர்மை, ஆக்கம், ஊக்கம், நல்நோக்கம், பணிவு, துணிவு, கனிவு, அடக்கம், அறிவு, அருள், உணர்வு, நல்நட்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம்… அவசியமான குணங்கள் தொடரும்.
இத்தனை குணங்களையும் மனிதன் பெற்ற, வாழ்வில் கைக்கொள்ள வாழ்நாள் போதுமா?
விடைகாண இயலாத வினா.
ஆனால், ஒவ்வொன்றும் மற்றொன்றோடு நேரிடையாகவும், முறைமுகமாகவும் இணைந்துள்ளதைக் காணும்போது சாத்தியம் என்றே தோன்றுகிறது.
அதிலும் முக்கியமான ஒரு சிலவற்றை கடைப்பிடித்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டால் மற்றவை தானே ஒட்டிக்கொள்ளும்.
முதலாவதும், முக்கியமானதுமான அன்பை எடுத்துக் கொள்வோம்.
வழக்கில் மிக அதிகமாகப் பயன்படுத்தும் சொல்லாக இருந்தாலும், உண்மையில் உயரய குணமாய்க் கைக்கொளப்படுவது வெகு குறைவே.
அன்பு எனபதற்குப் பல விளக்கங்கள் தரலாம்.
வள்ளுவர் முதற்கொண்டு வைரமுத்து வரை மேற்கோள் காட்டலாம்.
ஆனால் அன்பை உணர வேண்டுமே! வாழ்வின் உயிர் மூச்சாக்க் கொள்ள வேண்டுமே! அன்பே நான், நானே அன்பு என்று வாழ்ந்து காட்ட வேண்டுமே.
அன்பெனும் தெய்வீக்க் குணத்தால்
மனித சமுதாயம் மலர்ச்சி அடையும்.
மனத வளம் மேம்பாடு அடையும்
என்று நிரூபிக்க வேண்டும்.
அன்பாய் வாழ்ந்தவர்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.அன்பில் தோந்தவர்களை தொழுது பார்க்க வேண்டும்.
அன்பை உணர்ந்து
அன்பாய் மலர்ந்து
அன்பாய் ஆன ஆத்மாக்களின் வாழ்வு வளம் பெற்றதை உணர்ந்து வாழ வேண்டும்.
அன்பு என்பது என்ன?
அன்புடையார் எல்லாம் உடையார் என்றார்களே எப்படி?
அன்பே தெய்வம் என்று சொல்லப்படுகிறதே..
அப்படியானால் அன்பானவர் தெயவீகமானராக அல்லவா இருக்க வேண்டும்.
அப்படி ஒவ்வொருவரும் இருந்தால், உலகமே அன்பு மயமானதாக, தெய்வீகமானதாக மாறிவிடாதா!
அப்படி வாழ்கின்ற மனித சமுதாயம் எல்லாம் முடையதாக வளம் நிறைந்ததாக அல்லவா இருக்கும்.
நினைவே சுகமாக இருக்கிறதே.
அப்படிப்பட்ட அன்பு என்பது என்ன?
எப்படி இருந்தால் அன்பாய் இருப்பதாக அர்த்தம்?