Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label W - நாஞ்சில் நாடன். Show all posts
Showing posts with label W - நாஞ்சில் நாடன். Show all posts

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

குறள் 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
தோன்றின் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

புகழொடு - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

தோன்றுக - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.
 
அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
இலார் - இல்லை என்றால்; இல்லாதவர் 

தோன்றலின்  - தோன்றுவதை விட 

தோன்றாமை  - தோன்றாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
தோன்றுதல் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றில் இக்குறளுக்கு தகுந்த பொருள் கண்காணவெளிப்படுதல், அறியப்படுதல் மற்றும் உண்டாதல். 

பிறத்தல் என்ற பொருள் இக்குறளுக்கு அவ்வளவாக பொருந்தாது ஏனெனில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் புகழுடன் தோன்ற முடியாது. வெறும் அரசர்களின் குடும்பத்திலும் பிரபலங்களின் குடும்பத்திலும் பிறப்பதால் மட்டுமே புகழுடன் பிறக்க முடியும்.  

ஆதலால் தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார் என்ற பொருளும் சாலப் பொருந்தும். 

ஒருவர் இவ்வுலகில் வெளியே குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ கண்காணவெளிப்பட்டாலோ அல்லது அறியப்பட்டாலோ அவர் புகழுடன் தோன்றுக / அறியப்படுக என்று கூறுகிறார். அதாவது ஒருவர் அவருடைய குணத்திற்காக அறத்திற்காக தன் வேலையில் நிபுணத்துவத்திற்காக புகழுடனும் பெருமையுடனும் விளங்கவேண்டும். அதுவே அவருக்கு சிறந்தது. இந்நாட்டிற்கு சிறந்தது. அவரை பார்த்து பலர் (சிலராவது) மன உந்துதல் அடைந்து முன்னேறுவர். ஒருவர் புகழுடன் இருப்பதால் அவர் இவ்வுலகிற்கு நன்மை செய்தவராக இருப்பார். பொதுவான வழக்கிலிருக்கிறார்போல், “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்” என்கிற கதையாயிராமல் இருக்கவேண்டும்.

மாறாக ஒருவர் புகழ் இல்லாமல் இருக்கிறார் என்றால் அவர் இகழ்ச்சியுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அறத்திற்கு புறம்பான பாவங்களை தீச்செயல்களை செய்தல், சோம்பித் திரிதல், செயல்களைச் செவ்வெனச் செய்யாது இருந்தால், கடமையை ஆற்றாது இருத்தல் இகழ்ச்சியை பெற்றுத் தரும். ஆதலால் புகழ் இல்லாத ஒருவர் (இகழ்ச்சி உடைய ஒருவர்) இவ்வுலகத்தில் முன்னே கண்காணவெளிப்படாது அல்லது பிறர் முன் அறியப்படாத இருத்தலே சிறந்தது. ஏனெனில் இவர்கள் பலருக்கு கெடுதலை பரப்புவர். இவர்களை பார்த்து சிலர் தவறான பாதையில் செல்வர். செயல்களை, கடமைகளை புரியமாட்டார்கள். இவர்கள் இவ்வுலகத்திற்கு பாரமே. இவ்வுலகமக்களுக்கும் சுமையே. ஆதலால் தோன்றிக் கெடுதலை உருவாக்குவதைவிட தோன்றாமல் இருப்பது நன்மை.

அதனால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் தோன்றுவது என்றால் புகழுடன் தோன்ற வேண்டும். அப்படிப் புகழ் இல்லையேல் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பது நன்மை பயக்கும். அதனால் ஒருவர் வளரும் பருவத்தில் நூல்களைக் கற்று அறிந்துக் கடமைகளை ஆற்றி செயல்களைப் புரிந்துப் புகழ் பெரும் வண்ணம் தன்னை உண்டாக்கிக்கொள்ளவேண்டும். 

சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பதை மற்றுமோரு குறளில் காணலாம். ஆதலால் ஒருவர் தன் வேலையில் செவ்வென செய்யவில்லை என்றால் அவருக்கு புகழ் இல்லை. அவருக்கு இகழ்ச்சியே இருக்கும். அத்தகையவர் வெளியுலகில் நடமாடும் பொழுது அவர் இகழ்ச்சியை மேலும் சந்திக்கக்கூடும். பலர் அவரை ஒரு தவறான முன்னுதாரணமாக காண்பிக்க வாய்ப்பு உண்டு. அதனால் தோன்றாமல் இருப்பது நன்று. உதாரணமாக புகழ் இல்லாத ஒருவர் அவருடைய நண்பர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவரை தவறான விதத்தில் காண நிறைய வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக நண்பரின் மனைவி அல்லது பிள்ளைக்கள். ஏன் அவர் வாழ்வில் தோல்வியுற்று இருக்கிறார்? பெரிய ஆளாக வில்லை என்று பெற்றோர்களிடம் கேட்க வாய்ப்பு உண்டு. அடுத்த முறை செல்லும் பொழுது அவர்கள் இவருக்கு கொடுக்கும் மரியாதையில் மாற்றம் இருக்கலாம். அப்பொழுது மனம் வலிக்கும். அதனால் தோன்றாமல் இருப்பது நன்று எனலாம். 

வள்ளுவரே “குறள் 235 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்  வித்தகர்க் கல்லால் அரிது” என்று சொல்கிறார். ஒரு வேலையில், தன்மையில் திறனோடு அதாவது சிறப்போடு அல்லது புகழோடு இருக்கவேண்டும்.

மருத்துவத் துறையில் நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லா மருத்துவர்களும் எல்லா பண்டுவமும் பார்ப்பதில்லை. “இந்த நோயாளியை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு போய் விடுங்கள்” என்று மருத்துவர்கள் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம். அவர்களுக்கு நோய் பற்றித் தெரியாதென்பதல்ல. ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது புகழ் இல்லாமல் அந்த நோயாளியைக் குணப்படுத்த முடியாதபோது அவர் வேறு மருத்துவரை பார்க்கச் சொல்கிறார். அன்றி அவரே முயன்று நோயாளிக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் என்ன செய்வது. அதனால் தான் “புகழ்” இல்லாத அந்த மருத்துவர் தோன்ற மறுக்கிறார்.

“தோன்றலின் தோன்றாமை நன்று”. தோன்றாமல் இருப்பது இருவருக்குமே நன்மையைத் தரக்கூடும். தோன்றவே கூடாது என்று வள்ளுவர் சொல்லவில்லை. தோன்றாமை நன்று என்றுதான் சொல்கிறார். ஆனால் திருவள்ளுவர் ஒருவரை ஆமைஓட்டில் ஒழிந்துக்கொள்ள சொல்லவில்லை (i.e don't get into the shell). தோர்வடையாமல் நண்பர்களுடனும் நிபுணர்களுடம் பேசி நமது திறமைகளை வளர்த்துக்கொண்டு புகழை ஈட்டவேண்டும். ஏனென்றால் இன்னொரு இடத்தில் “மெய்வருத்தக் கூலி தரும்” என்று சொன்னவர்தானே வள்ளுவர். 

தாமாக முன்வந்து எதைச் செய்வதானாலும், அதற்குரிய திறனோடு முன் வருக. திறனில்லாதவர்கள் முன்வராமலிருப்பது அவருக்க்கும் அடுத்தவருக்கும் நன்மையே தரும். 
 
பிறக்கும் பொழுது எல்லோராலும் புகழுடன் தோன்ற முடியாது என்று முன்னர் கூறியிருந்தோம். ஆயினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெறும் முன் இவ்வுலகிற்கு நன்மை செய்யும் குழந்தை வேண்டி நற்பண்புகள் கொண்ட குழந்தை வேண்டி தவங்களை (நல் எண்ணங்களும், ஒழுக்கமும், அறமும் இங்கே தவம் எனக்கூறலாம்) செய்து (நல்ல எண்ணங்கள் நல்லவற்றை கொடுக்கும்) குழந்தை பெற வேண்டும். குழந்தைகளும் ஓரளவு வளர்ந்த பின்பு (அதுவரையில் பெற்றோர்கள் நன்கு வளர்க்க வேண்டும்) மறுமையில் (அடுத்த பிறவியில்) புகழுடன் தோன்ற இம்மையில் (இப்பிறவியில்) நற்செயல்களை செய்து நற்குணங்களை கொண்டுப் புகழுடன் சிறந்து விளங்க வேண்டும்.  இவ்வாழ்வு நெற்கதிர்ப் பயிர்கள் போன்று ஒரு தொடர் சங்கிலி என்று உணர வேண்டும். நல்ல விதைகளை உற்பத்தி செய்வது நமது கடமை என எண்ணவேண்டும். அதற்கு தான் முதலில் ஒழுங்காக/புகழுடன் இருத்தல் வேண்டும். 

ஒப்புமை
“துறந்தா யாகில் தூயையு மாதி யுலகத்தே
பிறந்தா யாதி யீதல தில்லைப் பிறிதென்றான்” (கம்ப. பள்ளிடை 86)

“மற்றில தாயினும் மலைந்த வானரம்”
இற்றில தாகிய தென்னும் வார்த்தையும்
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேரலால்
முற்றுவ தென்னினிப் பழியின் மூழ்கினோம்” (கம்ப.மந்திரப் 14)

“அறந்தலை...
மறந்தும்நன் புகழலால் வாழ்வு வேண்டலன்” (கம்ப. விபீடணன் 18)

மேலும்: அஷோக் உரை

கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்களின் ”அழிந்த பிறகு ...” (தமிழில் எம்.சித்தலிங்கையா) நாவலில் இப்படிச் சில வரிகள் வருகிறது 
அவர் (யசவந்தராயர்) என் வாழ்க்கையில் பொறித்துச் சென்ற நினைவு என்றென்றும் என் கைக்கு எட்டக்கூடியது. அதை நான் இருத்திக்கொள்ளலாம் அல்லது மறந்தும்விடலாம். ஒரு மனிதனின் அடையாளம் நீடிப்பதோ அல்லது அழிவதோ அவனுடைய வாழ்க்கையினால்தான். அந்த வாழ்க்கை நம்முடைய நினைவுகளுக்கு உயிர் ஊட்டி, நம் வாழ்க்கையின் மூலம் அழியாது நின்று, கலந்து தொடர்ந்தால், அதுவே மறுபிறப்பாகும் என்று எனக்குப் பட்டது. 

பரிமேலழகர் உரை
தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்).

மணக்குடவர் உரை
பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை
பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உரை (சுட்டியைத் தட்டவும்)
தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார். 

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

குறள் 196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பாராட்டுவானை - பாராட்டு - புகழ்ச்சி; அன்புசெய்தல்; விரித்துரைக்கை; பகட்டுச்செயல்; கொண்டாடுதல்.

மகன் - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன்.

எனல் - என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

மக்கட் - மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

பதடி - பதர்; உமி; பயனின்மை; வில்.

எனல் - என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

முழுப்பொருள்
பதடி:
நெற்பயிர்களில் சில மணிகளில் நெல் போன்று பயிர் இருக்கும் ஆனால் உள்ளே அரிசி இருக்காது. உள்ளே அதிகம் அரிசியை வைத்திருக்கும் கதிர் வளைந்து குனிந்து நிற்கும். உள்ளே ஒன்றும் இல்லாத பதடி நிமிர்ந்து நிற்கும். கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இதுவே வித்தியாசம். நெற்கதிரை வெட்டும் பொழுது அரிசி உள்ள கதிர்களை வெட்டிவிட்டு, பதர்களை புறம் தள்ளுவார்கள். நெற்பயிரோடு பிறக்கின்ற பதரை நீக்கிவிட்டு நெல்லை மட்டும்தான் நாம் கொள்கிறோம். நெல் அறுவடைக்குப் பிறகு, பதரடித்தல் என்று சொல்லுவார்கள்.

அதுப்போல மனிதர்களுக்குள்ளேயும் நற்பயிர்களும் உண்டு பதர்களும் உண்டு. அளவுக்கு அதிகமாக தேவையில்லாத விஷயத்தை, ஒருவருக்கும் அறம் பொருள் இன்பம் என்று பயன் இல்லாதவற்றை ஒருவன் பேசினால் அவனை பதர்/பதடி என்கிறார் திருவள்ளுவர். ஆதலால் பயனில்லாது பேசுவோரை மனிதன் என்று மக்கள் அழைக்க கூறாதே பதடி என்றே சொல் என்று உத்தரவிடுகிறார் திருருவள்ளுவர். மனிதர்கள் போல் நிற்கும் ஒரு போலி (பொய்).

ஒரு முழுமையான நெல் விதை விதைத்தால் முளைக்கும். ஆனால், பகடி என்பது மண்ணில் பொட்டால் மக்கி அழியும். நினைவில் கொள்க.


 
பதடி / பதர்
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

எப்பயனும் விளைவிக்காத சொற்களைத் தூக்கிக் கொண்டாடித் திரிகிறவனை, மனிதன் என்று மதிக்காதே; மனிதப் பயிரில் மணியாக உருப்பெறாத பதர் என்று ஒதுக்கு. பார தீரமான நமது அரசியல்காரர்களை, வீரப் பிரதாபக் கோஷங்கள் போடும் எழுத்துக்காரர்களை நாம் என்னென்பது?

Thirukkural - Management - Communication - Meaningful Speech
If a person appreciates one whose words and speeches are meaningless, do not call that person a human being.  That person is useless as he appreciates something useless. He is similar to chaff among grains as that is of no use to anybody, derides Kural 196.

Call him not a man but chat
Who indulges in empty speech.

English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar says that the one who speaks vain words (that doesn't benefit anyone) should not be called man/women/human and he/she should be called/considered as chaff/husk/scum. Because, a chaff doesn't have any grain it and it is useless. It is not consumed rather it is removed and deposited on the ground as it can only decay and cannot germinate. 

Questions that I ask to the kid
Who is considered a chaff/ husk / scum? Why?
How do we consider a person speaking vain words?

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

குறள் 759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செய்க - செய்ய வேண்டும்
செய்க - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

பொருளைச் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

செறுநர் - பகைவர்

செருக்கு - cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

அறுக்கும் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

எஃகு - மிக்க கூர்மை உடையதாம் (பகைவருக்கருளும் நன்னெஞ்சைப் பற்றி பாரதியும் கூறுவர்); கூர்மை; உருக்கு; ஆயுதப்பொது; வேற்படை; கத்தரிகை; கத்தி; மதிநுட்பம்; வேல்.

அதனிற் - அதனை விட ; அதை விட

கூரியது - கூர்மை - ஆயுதங்களின்கூர்; நுட்பம்; சிறப்பு; கல்லுப்பு; வெடியுப்பு.

இல் - வேறில்லை ; இல்லை

முழுப்பொருள்
பொருள், செல்வம் ஆகியவை நிலையற்றவை என்று நிலையாமை அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் அதே திருவள்ளுவர் இங்கு பொருளை ஈட்டு என்கிறார்.  ஆனால் திருவள்ளுவர் "செய்க பொருளை" என்ற ஒரு அழகான வலிமையான  வார்த்தையை கட்டளையாக பயன்படுத்துகிறார். 

ஒருவன் தன்னுடைய செயலின் மூலம் அற வழியில் பொருளை ஈட்ட வேண்டும். செயல் செய்து பொருளை ஈட்டுவாய் என்றால் அதுப்போல் பகைவரின் செருக்கை (ஆணவத்தை) அறுக்கவல்ல மிக கூர்மையான ஆயுதம் வேறு இல்லை. செயலுக்கே இங்கு மதிப்பாகும்.

செயல் என்பது மனிதனின் தீய குணங்களான சோம்பல் மறதி அழுக்காறு ஆகியவற்றை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும். செயலாற்றுபவனுக்கு செயலில் மட்டுமே கவனம் இருக்கும்.

மேலும் பொருள்/பணம் கூர்மையான ஆயுதமும் ஆகும் என்பதையும் வள்ளுவர் கூறுகிறார். நாம் ஈட்டிய பொருளினால் நமக்கு செருக்கு வந்தால் அது நம்மையே அறுத்துவிடும் என்பதையும் நினைவில் கொள்க. பொருள் தான் பிறரின் செருக்கை அறுக்க வேண்டுமே தவிர. நாம் செருக்குக் கொண்டு மற்றவர்களை காயப்படுத்தவோ ஏளனம் செய்யவோ கூடாது. ஏனெனில் “குறள் 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்”.

"அறம், பொருள், இன்பம், வீடு" என்பது மனிதன் தரிக்க வேண்டிய நான்கு வேடங்கள். அவன் தன் கடமையை (அறத்தை) செய்து, பொருளை ஈட்டினால் தான் அவனால் இன்பத்தை அனுபவிக்க முடியும், வீடுபேறு நோக்கி செல்ல முடியும். பொருள் இல்லையெனில் தன்னுடைய அறத்தையும் / கடமையையும்  ஆற்ற முடியாது  இன்பமும் பெறமுடியாது.

உங்கள் குடும்பத்தை பேணவும் நீங்கள் வழி நடத்தும் நிர்வாகத்தையும் குழுவையும் பேணவும் சீராக வழிநடத்தவும் பொருள் மிக அவசியம். அத்தியாவசியம். ஆதலால் பொருள் ஈட்டு என்கிறார் திருவள்ளுவர். 

பொருள் ஈட்டுவதை ஒரு ஆக்கசக்தியாக வைத்துக்கொண்டால் அதில் தவறில்லை. (வள்ளுவர் செய்க பொருளை என்றுதான் சொல்கிறார். மனிதனிடம் இருந்து பிடுங்கு என்று கூறவில்லை. )

பகைவரை வெல்ல பொருள் சேர்
பெரிய செல்வம் இருந்தால், பெரிய இடங்களில் இருப்பவர் நட்பு கிடைக்கும். அப்படிப்பட்ட நம்மை , நம் பகைவர்கள் (இன்றைய காலகட்டங்களில் பொறாமைக்கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள்) ஒன்றும் செய்ய மாட்டார்கள். 

கத்தி இருக்கிறதே, அது பொருள்களை வெட்டும். குணத்தை வெட்டுமா? எதிரியின் பகை உணர்ச்சியை வெட்ட  எந்தக் கத்தியைக் கொண்டு போவது? நம்மிடம் நிறைய பொருள் இருந்தால், அது எதிராளியின் செருக்கை, ஆணவத்தை அறுக்கும் என்பதால், செல்வத்தை கூரிய கத்தி என்றார் வள்ளுவர். செருக்கு என்ற குணத்தை அறுப்பதால் அது கூரிய கத்தி. 

எதிராளியின் செருக்கை அடக்க வேண்டும் என்றால் நிறைய படி, பலப் பல பட்டங்கள் வாங்கு, படை திரட்டு, என்றெல்லாம் சொல்லவில்லை. செல்வத்தைச் சேர்.  பகை ஒடுங்கும் என்கிறார். 


நன்மக்கள் தம்மக்கள். ஆதலால் அவர்களும் நம் பொருள் என்று உணர்க.
நாம் எவ்வளவு பொருள் ஈட்டிப் எதிரியின் செறுக்கை அறுக்கலாம். ஆனால் அவை எல்லாம் சிறிது காலத்திற்கு மட்டும் தான் என்பதையும் நிலைவில் கொள்க.  நமது உண்மையான பொருள் நமது பிள்ளைகளை. அவர்களை சான்றோன் ஆக்குவது நமது கடமை.


7/G ரெய்ன்போ காலனி (7/G Rainbow Colony) திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். “இனி எவனாவது கேப்பான் யேன் உன் பையன் தண்டமா இருக்கான்னு”. அந்தக் காட்சியையும், அதில் வரும் மேற்சொன்ன வசனத்தையும், “தம்பொருள் என்பதம் மக்கள்”, “செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்” திருக்குறள்களையும் தொடர்புப்படுத்திப் பார்த்தால் நமக்கான கடமைகளில் தெளிவுப் ஏற்படுவது உறுதி.




ஆனால் எவ்வளவு பொருள் சேர்த்தாலும் கீழ்க்காணுபவற்றை நினைவில் கொள்க
தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார்

மற்ற மாந்தரின் மகிழ்வும் துன்பமும் தனக்கு நேர்ந்ததுபோல் உணர்பவனே வாழும் மனிதன். மற்றையான் செத்தவனும் நிகரானவன்

நாம் வாழ்வில் செய்கின்ற செயல்களினாலே அவற்றை செய்யும்விதத்தாலே அவற்றை செய்யும் நேர்மை, உழைப்பு, தொழில் நேர்த்தி, தரம் ஆகியவற்றால் நமது சிறப்பும், பெருமையும் மாறும். நமது மதிப்பு நாம் செய்யும் தொழிலில் உள்ள நேர்மையில், உழைப்பில், நேர்த்தியில், செயல் தரத்தில் அடங்கியுள்ளது.

கலித்தொகைப் 11:2-4 பாடலொன்று, “பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்…… தருமெனப் பிரிவெண்ணி பொருள்வயிற் சென்றநங் காதலர்” என்று இக்குறளின் கருத்தையொட்டி, காதலன் பிரிந்து சென்ற நோக்கத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாம் சீவக சிந்தாமணி 497, “செய்கபொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும் எஃகுபிறி தில்லை” என்று குறளின் சொற்களை ஒட்டியே சொல்லுகிறது.

கீழே மேற்கோளாக இடப்படும் பழமொழிப்பாடல், தன்னைத்தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்கச் செயல் என்கிறது; மேலும் அப்பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப் பொருளினைக் கொடுத்தால், அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாரே உளர் என்று வினவுகிறது! வேலாற் குத்துதலைவிட, காணிப்பொருளால் குத்துவதே வலிமையானது என்று சொல்லி, “பணம் பாதாளம் வரைக்கும் பாயும்” என்ற கூற்றை அடிக்கோடிடுகிறது. இன்றைய அரசியல் மற்றும் வணிக, மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளும் இக்கருத்தையொட்டியே அமைந்திருப்பதைக் காண்கிறோமே!

தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேல்குத்தின்
காணியின் குத்தே வலிது (பழமொழி 32)

”செறுவோர் செம்மல் வாட்டலும் ...
இல்லிருந் தமைவோர்க் கில்லென் றெண்ணி” (அகநா 231.1-3)

“நண்ணார்த் தெறுதலும்
தற்செய்வான் சென்றார்த் தரூஉம்” (கார் நாற்பது 7)

மேலும்: அஷோக் உரை

"பணக்காரக் குண்டிக்குத் தடுக்குப் போடுவா” என்பர் ஊரில், செல்வந்தர்களைத் தாங்குவதைப் பார்த்து. ஆளாளே வந்து, ‘சாப்டாச்சா?’ என்பார். நல்வழியிலோ, புன் வழியிலோ செல்லும் சேர்த்தால் போதும். உலகமே கைகூப்பிப் பின்தொடரும். ஒதுக்கமாக ஒன்றுக்குப் போனால்கூட, வேட்டியை ஒதுக்கி, பிடித்துக் கொடுப்பார்கள். வயிறெரிந்து வள்ளுவர் சொல்கிறார்... 

‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்'

என்று. பொருள் தேடுங்கள், எதிரிகளின் எகத்தாளத்தை அறுத்து எறியும் கூரிய ஆயுதம் அதனை விடச் சிறந்தது வேறு ஏதும் இல்லை என்பது விளக்கம். 

“அவ்வளவு தொலைவு சென்று அவர்கள் ஈட்டும் பொருள்தான் என்ன?” என்று தரையில் அமர்ந்திருந்த மேய்ப்பன் கேட்டான். பச்சைக்கண்களும் ஒடுங்கிய கன்னமும் சுருக்கங்கள் செறிந்த முகமும் கொண்டிருந்தான். முதுமைகொண்ட சோனக வணிகன் கையில் மதுக்குவளையுடன் “எந்த வணிகமும் பொருளை எண்ணி தொடங்கப்படுவதில்லை. நேர்நோக்கில் பொருள் மட்டுமே வணிகனின் எண்ணத்தில் உள்ளது. ஆனால் பொருள் என்பதற்கே மீறல், கடந்து செல்லல் என்பது உட்பொருள். எண்ணிப்பாருங்கள், உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் பொருள் தேவைகொண்டவன் பொருள் விழைவதே இல்லை. எவராயினும் பொருள் விழைவதே பிறிதொன்றென ஆகவும் தானும் பிறரும் வகுத்த எல்லைகளிலிருந்து வெளியேறவும்தான்” என்றான்.

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் (எதற்கு இத்தனை நூல்கள்?
எழுத்தாளர் ஜெயமோகன் அறம் பொருள் இன்பம் வீடு என்று சமநிலை பேணவேண்டும் என்று வலியுருத்துபவர். ஒருவர் தேவைக்கான பொருளை கண்டிப்பாக ஈட்டியாக வேண்டும் என்று கூறுபவர். அதுவே மற்ற செயல்களை செய்ய நமக்கு தேவையான் சுதந்திரத்தை கூறுபவர். அவர் இக்கட்டுரையில் கூறியுள்ள கீழ்க்காணும் கருத்து உவப்பாக உள்ளது. நாம் ஈட்டும் பணம், சந்தானம் (நன்மக்கள். நன்மக்கட் பேறு. தம்பொருள் என்பதம் மக்கள்)  போன்றவற்றைப் போல அறிவையும் பொருளாக கருதி அதனையும் ஈட்டி செறுநர் செருக்கறுக்கும் விதமாக பயணித்தால் நாம் எவ்வளவும் முன்னேறுவோம். வாழ்வுக்கும் எவ்வளவு பொருள்.

”துளித்துளியாக மானுடம் தன் அறிவை சேர்த்து திரட்டி புறவயமாக ஒன்றாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த மானுட அறிவின் பிரம்மாண்டப் பெருக்கில் ஒரு துளியென தானும் சேர விரும்புவதைப்போல மகத்தான பிறிதொன்றுண்டா என்ன?

அன்றி, வேறு எது பொருள் உள்ள செயல்? திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து பொருளீட்டுவதா? அதை பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு செத்துத் தொலைவதா? அர்த்தமற்ற கட்டிடங்களைக் கட்டி எழுப்பி, அவற்றை வாழ்நாள் சாதனை என்று  எண்ணிக்கொள்வதா? சேர்த்து வைத்த பணத்தை வங்கிக்கணக்கில் அடிக்கடி எடுத்துப்பார்த்து மனம் மலர்வதா? என் எதிரியைவிட நான் ஒரு படி மேலாக ஆகவேண்டும் என்னும் விழைவால் இரவுபகலாக வேலைசெய்வதா? வெல்ல வெல்ல புதிய எதிரியை கண்டடைந்து காரட்டை தொடரும் குதிரைபோல நெஞ்சடைக்க வாழ்நாள் முழுக்க ஓடி களைத்து விழுந்து சாவதா? வேறெதை அர்த்தமுள்ள செயல் என்று சொல்வீர்கள்?”

மேலும்
எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஓட்டல் முதலாலியாவும் மலையாளியாகவும் நடித்த முத்துராமன் ஒரு வசனம் பேசி இருப்பார்

ஏண்டா மாது! எந்தா கொள்கை எண்டேனு அறியானோ? பேராசைப் பிடிச்சவனை பணம் கொண்டு ஜெய்க்கோ



தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான்அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம். பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது, பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை. அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது. பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு. இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார். காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.

பரிமேலழகர் உரை
பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. இது பொருளீட்டல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்.

English Meaning - As I taught a kid - Rajesh
We have studied that money, wealth, materials are not permanent. They are transient in nature. They can come and go anytime. So, one should not go behind wealth.

At the same time, in this Kural, Thiruvalluvar says that make money. But how much? Earn wealth as much as that your enemies, competitors, relatives ego is melted. There is no other sharp weapon other than money that can kill jealousy. In away it makes other humble and stay grounded. Also remember, this money has to be earned in ethical ways only.

It doesn't mean we can hurt others with our money. It doesn't mean, be pompous. Money is essential to have a balanced life and lead family. One has to do duties life and one has to do work in order to earn money. Only then, one will be able to lead a happy life.

Questions that I ask to the kid
How much wealth should you earn?

வீழும் இருவர்க்கு இனிதே

குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]

பொருள்
வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

இருவர்க்கு - தலைவன் தலைவி இருவருக்கும் 

இனிதே - இனிது  - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் ; இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு

போழப் - போழ்தல் - பிளவுபடுதல்; பிரிவுபடுதல்; பிளத்தல்; ஊடுருவுதல்; அழித்தல்.

போழப்படா - புக முடியாத

படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய.  

முயக்கு - முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.

முழுப்பொருள்
காதலில் ஆசையாக வீழ்ந்த இருவருக்கு எது இனிது தெரியமா? கலவி / புணர்ச்சி. எப்படிப்பட்ட புணர்ச்சி? மெல்லிய காற்றுக்கூட (வளிகூட)  இவர்களுக்கு நடுவே(இடையே) புகமுடியாத அளவுக்கு (போழப்படா) இவர்கள் இரண்டுபேரும் முயங்கி இருப்பது. புணர்ச்சியில் இன்பம் கொள்கிறார்கள். கலவி கொள்ளும் பொழுது  காற்றுக்கூட இவர்களின் நடுவே இல்லாமல் இவர்கள் ஒருமையாகி விடுகிறார்கள்.

ஆதலால் கல்யாணத்திற்கு முன்பு இருவர் கலவி கொள்வது முற்றிலும் இயற்கையானதே என்பதை நாம் இங்கு அறியலாம். அது தவறில்லை. அக்காலகட்டத்தில் அது இயற்கையென  எண்ணியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். பின்பு ஒழுக்க நெறிகள் மக்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம். அதனால் தான் இன்று கல்யாணத்திற்கு முன் கலவி என்பததை தவறாக பார்க்கின்றார்கள்.

அகநானூற்றுப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

“மெய்யில் தீரா மேவரு காமம்” (அகநா 28:1)
“வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப்புலந் துறையும் கழிபெருங் காமத்து” (அகநா 361:5,6)

எனக்கு ஸ்பீடு(வேகம்/speed) எனும் 1994 ஆண்டு வெளிவந்த ஆங்கில/Hollywood படம் நினைவுக்கு வருகிறது. திரைப்படத்தில் இறுதியில் வரும் வசனம் / உரையாடல் கீழே. இதில் கலவி மூலமாக உறவை நிச்சயம் செய்து கொள்ளலாம் என்பதை கூறிக்கொள்கிறார்கள்.
Jack:
I have to warn you, I've heard relationships based on intense experiences never work.

Annie:
OK. We'll have to base it on sex then.

Jack:
Whatever you say, ma'am.

(Speed Movie - Intense Relationship Scene Link from 0:49)

மேலும்: அஷோக் உரை

மைதுனம் பற்றிப் பகர்ந்தபின், காமத்துப் பாலின் இன்னொரு குறள் சொல்லாமல் கட்டுரையை முடிப்பதா என இருமனதாக இருக்கிறது. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்துக் குறள், காதலர் இருவர் சம்மந்தப்பட்ட குறள் அது. காதலன் என்ற சொல்லுக்கு பகரமாக நீங்கள் தோழன் – தோழி, தலைவன் -தலைவி, நாயகன் – நாயகி, கணவன் – மனைவி, Partner, Pair, Mate, சேர்ந்து வாழ்பவர் என்று எதையும் பொருத்திக் கொள்ளலாம்.

‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு’

எப்போதுமே அளபெடை பயன்படுத்தப்படும் திருக்குறள் உச்ச பட்சக் கவித்துவத்துடன் இருக்கும். வளி என்றால் காற்று. போழப்படா என்றால் புக முடியாத, முயக்கு என்றால் மைதுனம். காமத்தில் வீழ்ந்த இருவருக்கு, வளி இடை போழப் படா முயக்கு இனிதே. காற்றுக்கூட இடை புகமுடியாதபடி உடல்களின் நெருக்கம் கொண்ட கலவி இனிது. யாருக்கு அந்தக் கலவி இனிது? காதலில் வீழ்ந்த இருவருக்கு இனியது. காதலில் வீழ்ந்த நாயகி – நாயகன் இருவருக்கும் நுண்ணிய மெலிய தென்றல் காற்றுக்கூட இடையே நுழைய முடியாத அளவிலான இறுக்கமான உடற்சேர்க்கை மிக இனிமையானது. அப்போது அவர்கள் இருவர் அல்ல, ஒருவர். அந்தக் கலவி நிலை இருமையல்ல, ஒருமை.

பயனில பல்லார்முன் சொல்லல்

குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லாதவற்றை

பல்லார் - pallār   pron. பல்¹. Many persons; பலர் பல்லா ரகத்து (குறள், 194).  

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல். 

சொல்லல் - சொல்வது; கூறுவது

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

இல - இல்லாதவற்றை

நட்டார் - நண்பர்; உறவினர்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

செய்தலின் - செய்வது; செய்தலை காட்டிலும்

தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

முழுபொருள்
நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் துன்பம் தருபவற்றை (இன்பம் அல்லாதவற்றை) செய்வது கேடு, தீயது. அது நமக்கு துன்பத்தை தரும். அதனை காட்டிலும் தீயது பலர் (பல அறிவுடையோர்) கூடியுள்ள ஒரு இடத்தில் முன் நின்று பிறருக்கு பயன் அற்ற சொற்களை கூறுவது, பயன் அற்ற செய்திகளை பேசுவது, சம்பந்தமில்லாத வற்றை பேசுவது. இத்தகையது அவர்களுக்கு மட்டும் தீது அல்ல. நமது ஆற்றலையும் நேரத்தையும் நாம் வீண் அடித்துக்கொண்டு இருக்கிறோம். ஆதலால் நமக்கும் தீதாகும்.

ஏனெனில் பலர்கூடி இருந்தால் அங்கே உள்ள ஆற்றல் மிக அதிகம். அதைப்போன்ற ஒரு நிகழ்வை ஒருங்கினைப்பது கடினமாகும். அவ்வாற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். அதனை பயன் இல்லாமல் சிதைப்பது நன்மையை தவறவிட செய்வதனால் வரும் பாவம்/ துன்பம் ஆகும்.

ஏன் நண்பர்களையும் உறவினர்களையும் இங்கே திருவள்ளுவர் கூறவேண்டும்? ஏனெனில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இழைத்த தீங்கை சரி செய்ய மன்றாடியாவது மறுவாய்ப்பை நம்மால் பெற முடியும். அவர்களும் ஒருவர் அல்லது ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் ஒரு சபையில் அல்லது ஒரு தளத்தில் பலர் இருப்பார்கள். அவர்களுடைய நேரத்தை நம்மால் திருப்பித் தரமுடியாது. ஒரு பத்து அல்லது இருபது பேரிடம் சென்று சரி செய்வதே பெரும்பாடாக இருக்கும். அதற்குமேல் இருந்தால் அது முடியாது என்றே சொல்லலாம். மேலும் சரிசெய்வது செய்த தவறை நியாயப்படுத்தாது.

இது ஃபஸ்புக் / முகநூல் (Facebook) போன்ற தளங்களில் மக்கள் வெட்டி அரட்டை அடித்து கூச்சல் போடுவதும் அடங்கும் என்பதே எனது கருத்தாகும்.



மேலும்: அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.

மு.வரதராசனார் உரை
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

பலர் கூடி இருக்கும் அவையில், அல்லது பல்லோரும் வாசிக்கும் பருவ இதழில், வலைத்தளத்தில், முகநூலில் யாருக்கும் எவ்விதப் பயனும் தராத சொற்களைப் பேசுதல் என்பது, நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர்களுக்குத் தகாதன செய்வதை விடவும் தீமையானது.

English Meaning - As I taught a kid - Rajesh
It is more harmful to speak vain /useless words in front of many people, than to do contemptible deeds to your friends and family. Because it is difficult to organize large people. Hence, if we are mindless about the precious time in front of large gathering and waste it, then it will result in a very bad reputation and we will not get another chance to talk in front of large gatherings. It might reduce our other opportunities for growth as well. 

Doing contemptible deeds to family and friends is certainly wrong but at least for the sake of relationship one can yield their forgiveness once. But large gatherings will not easily forgive us for our vain speech. 

Questions that I ask to the kid
Why is vain speech in front of others more harmful than bad deeds to friends?

ஊக்க முடையான் ஒடுக்கம்

குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற் கொண்ட எண்ணம்; உண்மை.
உடையான் - உடையவர்கள், உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்
ஒடுக்கம் - அடக்கம்; குறுக்கம்; சுருக்கம்; புழுக்கம்; சிறிதுசிறிதாகக்குறைதல்; நெருக்கமானஇடம்; பதுக்கம்; மறைவிடம்; தனியிடம்; வழிபாடு; முடிவு; ஒன்றில்அடங்குகை; இடைஞ்சல்.
பொரு - ஒப்பு; உவமை; எதிர்த்தடை; poru   I. v. i. fight, போர்செய்; 2. compete; 3. come in collision with, தாக்கு; 4. quarrel, வாதாடு; 5. resemble, ஒப்பாகு; 6. join, unite with, be combined, பொருந்து; 7. dash together as waves, be ruffled, அலைமோது.
தகர் - பொடி; தகர்ந்ததுண்டு; ஆட்டுப்பொது; செம்மறியாட்டுக்கடா; வெள்ளாடு; யாளியின்ஆண்; ஆண்யானை; ஆண்சுறா; மேட்டுநிலம்; பூமி; பலாசுமரம்.
தாக்கு - அடி; போர்; படை; வேகம்; பாதிக்கை; சாதனை; குறுந்தடி; இடம்; பெருக்கல்; நெல்வயல்; பற்று; வளமை; ஆணை; நிலவறை; மிகுசுமை; எதிர்க்கை; எதிரெழுகை.
தாக்கற்குப் - தாக்குவதற்கு - 
பேரும் - பெரிதாக
தகைத்து - tkaittu   A symbolic verb, third per son neuter. It is of a similar nature, it is like, it is fit, தன்மையுடையது. (p.) மன்னுயிரோம்புந்தகைத்தே. It is calculated to protect living souls.
தகை - (வி)தடுத்துவிடு; ஆணையிடு; அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.
தகையாற - to take rest.

முழுப்பொருள்
மனதில் ஊக்கம் உடையவர்கள், ஒரு செயலை செய்ய தேவையான வலிமை உடையவர்கள் ஒரு காரியத்தை தேவையில்லாமல் தள்ளிப்போட மாட்டார்கள். ஆனால் ஒரு தேவையுடனும் தள்ளிப்போடுவார்கள். அவர்கள் அக்காரியத்தை செவ்வென செய்ய ஒரு தக்க காலத்திற்காக அடக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்று பொருளாகும். இது ஒரு ஆட்டுகடா தன் எதிரியை தாக்க சற்று பின்வாங்கும். அவ்வாறு பின்வாங்குவது என்பது முன்னே பாய்ந்து எதிரியை வீழ்த்த தான். 

சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது. அதனால் தான் அதனை இங்கு உதாரணமாக கூறுகிறார் திருவள்ளுவர். 



இதையே கொங்குவேளிர் தாம் இயற்றிய பெருங்கதையில் (3.1:30-31), 
“பாடுபெயர்ந்து இடிக்கும் மேடகம் போல 
அகன்றுபெயர்ந்து அழிக்கும் அரும்பெறல் சூழ்ச்சி” என்கிறார்.

“அடங்கவும் வல்லீர் காலம தன்றேல் அமர்வந்தால்
மடங்கல் முனிந்தா லன்ன வலத்தீர்” (கம்ப.மகேந்திரப்.17)

பொதுவாக புழக்கத்தில் உள்ள மற்றொரு சொலவடை, “புலி பதுங்குவது, பாய்வதற்காகத்தான்”. திறமையுள்ளவர்கள், திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் ஊக்கமிருந்தாலும், தகுந்த நேரத்திலேதான் செயலாற்ற முனைவர். அதற்கு முன்பாக ஒடுக்கத்துடன் அடங்கியே இருப்பர். காண்பவர்களுக்கு, இவர்கள் செயலாற்றப் போகிறார்கள் என்னும் எண்ணம்கூட இருக்காது.

மேலும்: அஷோக் உரை

கீழ்காணும் கந்தர் அனுபூதி பாடல் இக்குறளுக்கு ஏற்ற பாடல் இல்லை என்றாலும் தேவையில்லாமல் நல்ல நேரம் கேட்ட நேரம் (அஷ்டமி, நவமி, பிரதமை, கரிநாள், இராகு காலம், எம கண்டம், சந்திராஷ்டமம்) என்று பல செயல்களை தள்ளிபோடுவதை பற்றி பேசும் பாடல் இது. முழுமையான இறை நம்பிக்கை உள்ளவர்கள் தேவையில்லாமல் காலம் தாழ்த்தமாட்டார்கள் என்று இப்பாடல் கூறுகிறது. 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38

......... சொற்பிரிவு .........

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

......... பதவுரை .........
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

“பீமா, உன் உள்ளம் அலையற்றிருக்கிறது. போரின் இன்பத்தை அறிந்து மகிழ்வுறுகிறது. ஆனால் உனக்கு பின்வாங்கத்தெரியவில்லை. பின்வாங்கக் கற்றுக்கொள்ளாதவன் முழுவெற்றியை அடையமுடியாது. முன்கால் வைக்கும் அதே முழுமையுடன் பின்கால் வைக்க நீ கற்றாகவேண்டும்” என்றார் கிருபர். பீமன் புன்னகையுடன் தலைதாழ்த்தினான்.

பரிமேலழகர் உரை
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.
(உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுது போக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர் தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை? கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள்! இந்தியக் கேப்டனின் ஆண்டு வருமானம் 960 கோடி என்கிறார்கள். பெரிய விலையுள்ளது எப்படி விளையாட்டாக இருக்க இயலும். நம்மைப் பொறுத்தவரை தொலைக் காட்சிப் பெட்டிமுன் உட்கார்ந்து சமயம் கொல்வதும் சாராயக் கடைக்குப் போவதும் ஒன்றேதான். அரசியல் செய்திகளோ, இழவுக்கு வந்தவளைத் தாலி அறுக்கச் சொல்கிறது. சூதும் வஞ்சனையும் கொள்ளையும் குரல்வளை அறுத்தலும் குலத் தொழில் என்றானபிறகு, அவர் வலத்தே போனாலும் இடத்தே போனாலும் அவர் குறியை நம் வாயில் செருகாமற் போனால் போதும் என்றாயிற்று.

பிறகு வேறென்ன செய்வது? திருக்குறளுக்கு எம்மிடம் முப்பது பதிப்புக்களும் உரைகளும் உண்டு. ஆங்கில மொழிபெயர்ப்பாக ஜி.யு.போப், வ.வே.சு. ஐயர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஜி.வி. பிள்ளை என்றும் அறியப்பட்ட கோ.வன்மீகநாதன் நூல்கள் உண்டு.

புத்தக வாசிப்பு என்பது ஒரு Ohsessive Compulsive Disorder போலாயிற்று நமக்கு. Cronical Disease எனவும் கொள்ளலாம். யாம் பிறப்பால் நேர்ந்ததுவும் மனதால் தேர்ந்ததுவும் தமிழ் ஒன்றுதான். தமிழனாய்ப் பிறந்தாலும் வேறொரு மொழிமேல் காதலும் பக்தியும் கள்ளப் புருச வெறியும் நமக்கு இல்லை.

திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்ட, ‘திருக்குறள் சொல் அகராதியும் மூலமும்’ என்றொரு நூலுண்டு எம்மிடம். நூலைத் தேடி வாங்கக் காரணம், திருக்குறளின் 1330 குறட்பாக்களும் பயன்படுத்திய 4310 சொற்களின் பட்டியல் உண்டு அதில், அகர வரிசைப்படி. சொல்லிருக்கும் ஆனால் பொருள் இருக்காது. இஃதோர் அகராதி அல்ல, சொல்லடைவு, சொற்றொகை, அர்த்தமாகவில்லை என்றால் Word Index. இந்த நூலில் திருவள்ளுவர் பயன்படுத்திய அனைத்துச் சொற்களும், அச்சொற்கள் இடம்பெற்றுள்ள பாடல்களும் இருக்கும். சொற்களின் தொகையுடன் திருக்குறளின் மூலப் பாடல்களும் சொற்களுக்குப் பொருள் பாடல்களுக்கு உரையும் இருக்காது.

எடுத்துக்காட்டுக்கு, புழுதி என்ற சொல் 1037வது குறளில் கையாளப்பட்டுள்ளது. பழம் என்ற சொல் 1120 வது குறளில் உண்டு. முலை என்ற சொல் 402 மற்றும் 1087 வது குறள்களில். அனிச்சம் எனும் சொல் 90வது, 1111வது, 1115 வது, 1120 வது திருக் குறள்களில் உண்டு. பாடலின் முதல்தொடர் தெரிந்தால் பாடலைத் தேடிவிடலாம் என்பதல்ல இங்கு. சொல் ஒன்று பாடலில் எங்கேனும் ஆளப்பட்டிருக்கலாம், சொல் தெரிந்தால் பாடலைத் தேடிப் போய்விடலாம். இதைப் போல, சங்க இலக்கியங்கள் என்ற தீவிரமான பொருளில் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் பதினெட்டு நூல்களுக்கும் சொல்லடைவு உண்டு. A word Index For Cankam Literature என்று Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. Institute of Asian Studies வெளியீடு. சங்க இலக்கியச் சொல்லடைவு என்று முனைவர் பெ. மாதையன் தொகுத்த இன்னொரு நூலும் உண்டு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

இவ்வளவு இருந்தும் தமிழனுக்கு அதனால் என்ன? சூப்பர் ஸ்டாரின், உலக நாயகனின் ஒரு சினிமாவின் பெயர் சொன்னால் போதும், தரவுகளைக் கூடை கூடையாகக் கொட்டுவான். எங்களூரில் கொச்சையாக வழங்கப்படும் பழமொழி ஒன்றை இலக்கியத் தரத்தில் சொல் மாற்றி எழுதலாம். கலவி செய்ய அறியாதவனுக்கு ஒன்பதங்குல நீளத்தில் குறி அமைந்து என்ன பயன்?
திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்டுள்ள ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்று தனித்தனியாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று நூல்கள் உண்டு. இந்தப் பதிப்பின் சிறப்பு என்ன என்பீர்களேயானால், இது உரைக்கொத்து என்று கூறப்பட்டதால், பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள், பரிதிலார், காளிங்கர் ஆகிய மூன்று முதன்மை உரையாசிரியர்களின் உரைகள் உண்டு. மேலும் ஜி.வி. பிள்ளை என்ற கோ. வன்மீகநாதனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. இவர் Random Rambbings என்ற தலைப்பில் தன்வரலாற்று நூலொன்று எழுதியவர். இன்று அது பதிப்பில் இல்லை. திருச்சி மோத்தி ராஜகோபால் அன்பளிப்பாகத் தந்த படி ஒன்று உண்டு என்னிடம்.

‘திருக்குறள் உரைக்கொத்து’ வாங்க வேண்டுமானால் நீங்கள் திருப்பனந்தாள் காசித்திருமடம் போய்த்தான் ஆகவேண்டும். ஒரு புத்தகம் தேடுவது என்பது சரவண பவனில் காப்பிக் குடிப்பது போன்றதல்ல.
திருக்குறள் பொருட்பாலின் ‘காலமறிதல்’ எனும் அதிகாரத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். இந்த அதிகாரத்தில் சில நல்ல குறட்பாக்கள் உண்டு, எல்லாமே நல்லவையே , என்றாலும். திரும்பத் திரும்பச் செவி மடுக்கும் குறள்கள். சொல் வணிகம் செய்வோர் ஓயாமல் பயன்படுத்துபவை. ‘பகல் வெல்லும் கூகையைக் காக்கை!’, ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’, ‘கருவியால் காலம் அறிந்து செயல்’, ‘ஞாலம் கருதினும் கைகூடும்’, ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ முதலாயச் சொற்றொடர்கள் இந்த அதிகாரத்தின் குறள்களின் பகுதிகள் என்பதறிக. .

இந்த அதிகாரத்தின் ஆறாவது குறள் வாசித்தபோது, புதியதாய்ப் படிப்பது போலிருந்தது.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
என்பதந்தக் குறள். அடிக்கடி சொல்லக் கேட்டிராத இந்தக் குறளின் பொருள் கீழ்வருமாறு.

பரிமேலழகர்: வலி மிகுதியுடைய அரசன் பகைமேற் செல்லாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு, பொருகின்ற தகர் தன் பகை கெடப் பாய்தற் பொருட்டுப் பின்னே கால்வாங்கும் தன்மைத்து என்றவாறு.

மணக்குடவர்: மன மிகுதியுடையவன் கால வரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும் என்றவாறு.

பரிப்பெருமாள்: மணக்குடவர் உரையைப் போன்றே.

பரிதியார்: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான்; எப்படியென்றால், கிடாயானது பின்வாங்குவது போல என்றவாறு.

காலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற்கோள் உடையவனாகிய வேந்தனானவன், மற்று அதற்கு அடுத்தப் பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன் கண் முயலாது ஒடுங்கி இருக்கின்ற ஒடுக்கமானது எத்தன்மைத்தோ எனின், மேற்கொண்டு நிற்கின்ற பொருகிடாய் பொட்டெனத் தலையொடு தலை முட்டுதல் பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு.

 ‘ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
 தாக்கற்குப் பேரும் தகைத்து’
என்ற மேற்சொன்ன குறளின் உரைகள் மேற்கண்டவை. உரையாசிரியர்களின் காலம் அவர்தம் மொழியையும் தீர்மானிக்கிறது. ஐந்து உரையாசிரியர்களிலும் யாவர்க்கும் முன்னவர் மணக்குடவர். அவர் காலம் பத்தாம் நூற்றாண்டு. பரிப்பெருமாள் காலம் பதினோராம் நூற்றாண்டு. பரிதியார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. காலிங்கர், பரிமேலழகருக்கும் முந்தியவர் என்ற குறிப்பு மட்டுமே உண்டு. பரிமேலழகரின் காலம் பதினான்காம் நூற்றாண்டு என்மனார் அறிஞர்.

நாமிங்கு கையாளும் குறளில், பொரு தகர் என்ற சொற்றொடர் எனக்கு அர்த்தமாகவில்லை. முதலில் பொரு எனில் போர் என்பது தெரிகிறது. தகர் எனும் சொல் மிகப் புதிய சொல்லாக இருந்தது. ஆனால் பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள் என்போர் தகர் என்றால் தகர் என்றே கையாண்டுள்ளனர். அவர்கள் காலத்தில் அல்லது புழங்கு மொழியில் தகர் என்ற சொல் இயல்பாக எங்கும் வழங்கப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம். ஆனால் பரிதியாரும், காலிங்கரும் தகர் எனும் சொல்லுக்குக் கிடாய் என்று பொருள் எழுது கிறார்கள். கிடாய் என்ற சொல்லே கடா என்றும் கிடா என்றும் வழங்கப் பெறுகிறது. ஆட்டுக் கடா, எருமைக் கடா என்பன வழக்கில் உண்டு. கூழைக்கடா என்பதோர் வலசை வரும் பறவை என்பதால் குழப்பிக் கொளல் வேண்டா.

மேலும் தெளிவுக்காக, அண்மைக் காலத்து உரைகள் சிலவும் காணலாம்.

சாமி சிதம்பரனார்: வலிமையுள்ளவன் அடங்கி யிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக, ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும்.

நாமக்கல் கவிஞர்: ஊக்கமுடையவன் (காலம் கருதி கலங்காது) அடங்கியிருப்பது, சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்க பின்புறமாக நகருவதை ஒத்தது.

மேற்கண்ட இரு உரையாசிரியர்களும் தகர் என்ற சொல்லுக்கு ஆட்டுக்கடா என்ற தெளிவான பொருள் தந்துவிடுகிறார்கள். என்றாலும் இன்னும் சில உரையா சிரியர்களிடம் கேட்கலாமே என்று தோன்றியது.

வ.உ. சிதம்பரம் பிள்ளை : (வினை செய்தலின் கண்) ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருத்தல், பொருகின்ற செம்மறிக் கடா (தனது பகைக் கடாவைத்) தாக்குவதற்குப் பின் செல்லும் தன்மைத்து.

தேவநேயப் பாவாணர்: வலி மிகுந்த அரசன் ஊக்கமுள்ளவனாயினும், பகை மேற்செல்லாது, காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

தற்போது தெளிவாகத் தெரிகிறது 486 ஆம் திருக் குறளின் பொருள் என்ன என்பது. எளிய மொழியில் சொன்னால் பதுங்குவது பாய்வதற்கே! ஆனால் என் ஈடுபாடு, இங்குத் தகர் எனும் சொல்லின் மீது. கடாய் என்றும் ஆட்டுக் கடா என்றும் குறிப்பாகச் செம்மறி ஆட்டுக் கடா ‘ என்றும் பொருள் தெளிவாகிறது. ஆடுகளில், எனக்குத் தெரிந்து, வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பை ஆடு, கம்பளி ஆடு எனச் சில இனங்கள் இருக்கின்றன. கிடாய் அல்லது கடா என்றால் எந்த ஆட்டினத்தின் கடாவாகவும் இருக்கலாம். தேவநேயப் பாவாணர், மொழி ஞாயிறு என அறியப்படுகிறவர். அவர் தகர் எனும் சொல்லுக்குச் செம்மறியாட்டுக் கடா என்று பொருள் கொள்கிறார் எனில் அது சாதாரணக் காரியமல்ல. Give the Devil its due என்பார்கள் ஆங்கிலத்தில் செல்லமாக. இனிச் சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் காண்போம்.

Rev. G.U. Pope: The Men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.

Vanmeeganathan: The restraint of a man of great might is like a fighting ram stepping hack in order to charge its opponent.

Kaviyogi Shuddhanandha Bharathi : By self-restraint stalwarts keep fit, Like rams retreating but to Butt.
V.V.S. Iyer: The ram Steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy.

மேற்சொன்ன நான்கு மொழிபெயர்ப்புக்களிலும், தகர் எனும் திருக்குறள் சொல்லின் ஆங்கிலப் பதமாக Ram எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்து ‘ஆங்கிலம் – தமிழ்ச் சொற் களஞ்சியம்’, 1963-ம் ஆண்டில் முதற்பதிப்புக் கண்டது. தலைமைப் பதிப்பாசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். அதன்கண், Ram எனும் சொல்லுக்கு ஆட்டுக்கடா, காயடிக்கப்படாத செம்மறி ஆட்டின் ஆண் எனும் பொருளே தரப்பட்டுள்ளது. எனவே

தேவநேயப் பாவாணரின் துல்லியம் நம்மை வியக்க வைக்கிறது. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் மரபியல்
நூற்பா ,

‘மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த என்ப யாட்டின் கண்ணே !’

என்கிறது. நூற்பாவின் பொருள், ஆட்டினத்தின் ஆண் பாலுக்கு, கிடாய், கிடா, கடா ஆகியனவற்றுக்கு, மோத்தை, தகர், உதள், அப்பர் எனும் சொற்கள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. இன்று இந்தச் சொற்கள் எதுவும், . எந்தப் பிராந்தியத்திலாவது, ஆட்டுக்கடாவைக் குறித்துப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தேடிக் கண்டடைய வேண்டும். தொல்காப்பியத்துக்குப் பேரா சிரியர் உரை, மேற்சொன்ன நூற்பா வரிகளுக்கு, ‘இக் கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய’ என்கிறது.
மோத்தை எனும் சொல்லுக்கு Tamil Lexicon, ஆட்டுக்கடாய், Ram, வெள்ளாட்டுக் கிடாய், Goat எனப் பொருள் தரும். தகர் எனும் சொல்லுக்கோ 1. Sheep, ஆட்டின் பொதுச்சொல் (திவாகர நிகண்டு), 2. Ram, செம்மறியாட்டுக் கடா (திவாகர நிகண்டு), 3. Goat, வெள்ளாடு, 4. ஆண் யாளி, 5. ஆண் யானை, களிறு (பிங்கல நிகண்டு ), 6. Male Shark, ஆண் சுறா (சூடாமணி நிகண்டு) எனப் பொருள் தருகின்றது.

மேலும் தகர் எனும் சொல்லுக்கு, இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாத வேறு சில அர்த்தங்களும் உண்டு. உதள் எனும் சொல்லுக்கு Ram, He – goat, ஆட்டுக் கடா, Goat, Sheep, ஆடு எனும் பொருள்களே குறிப்பிடப் பட்டுள்ளன. அப்பர் எனும் சொல்லுக்கும் Tamil Lexicon, Ram, He-goat, ஆண் ஆடு, ஆண் குரங்கு எனப் பொருள் தருகிறது.

என்ன தெரிகிறது என்றால், மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற சொற்கள் ஆட்டுக்கடாவை – வெள்ளாடோ, செம்மறியாடோ – குறித்தன என்பது. நான்கு சொற்களுக்குமே Lexicon தொல்காப்பிய நூற்பாவை மேற்கோளாகத் தருகின்றது. வெள்ளாட்டுக் கடாக்கள் சண்டையையும், செம்மறிக் கடாக்களின் சண்டையையும் கவனித்துப் பார்த்தவர் அறிவார், செம்மறிக் கடாக்கள் எத்தனை மூர்க்கமாகக் கால்களைப் பின்வாங்கி, முன் பாய்ந்து மண்டையில் மோதும் என்பதை. எனவே தகர் எனில் செம்மறிக் கடா என்பதே பொருத்தமாகத் தெரிகிறது.

இன்று வழக்கொழிந்து போயின எல்லாம். ஆடு எனும் சொல்லும் மாய்ந்து மட்டன் எனும் சொல் ஆட்சிக்கு வந்துவிடும் போலும். மலையாளி, எருமைக்கடாவைப் போத்து என்கிறார். ஆண் யானையைக் களிறு என்கிறார். பசுவின் ஆண்பாலை நாம் காளை என்போம். எருது எனும் சொல் ஒன்றுண்டு. இடபம் எனும் சொல்லோ ரிஷபம் எனும் வடசொல்லின் தமிழாக்கம். எருமை ஒரு இனம் என்றாலும் பெரும்பாலும் பெண்பாலை எருமை என்றும் ஆண்பாலை எருமைக்கடா என்றும் சொல்கிறோம். இனத்தின் பெயரைக் குறித்து, ‘யே எருமை’ என்று வசை விளிப்பதும் உண்டு.

திருக்குறளின் தகர் எனும் சொல் குறித்து இத்தனை எழுத வேண்டியிருக்கிறது. நாளை எவனுமோர் அரை வேக்காட்டு அறிஞன் தக்ரா எனும் சொல்லில் இருந்தே தகர் வந்தது, அது பக்ரா எனும் சொல்லின் திரிபு என்பான், இங்குச் சிலர் மண்டையும் ஆட்டுவார்கள்.

தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் பல சுவையான தகவல்கள் தருகின்றன. பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் இளமைப் பெயர்கள் என்கிறது நூற்பா 1500. ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும், சேவும், சேவலும், இரலையும், கலையும், மோத்தையும், தகரும், உதளும், அப்பரும், போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும் யாத்த ஆண்பால் பெயரென மொழிப என்கிறது நூற்பா 1501.
மேற்சென்று, விளக்கமாகவும் சொல்கிறார் தொல்காப்பியர். பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை, தவழ்வனவற்றுக்கும் அது பொருந்தும். சங்க இலக்கிய நூல்கள் என்று இன்று சொல்லப்படும் நாற்பத்து ஒன்றில் ஒரு நூல் முத்தொள்ளாயிரம். அதன் பாடல்களில் ஒன்று –

 ‘அள்ளல்ப் பழனத்(து) அரக்காம்பல் வாய் அவிழ,
வெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப், புள்ளினம் தம்
கைச்சிறகால்ப் பார்ப்பொடுக்கும்’

என்று நீளும். நீர் நிறைந்த வயல்களில் செவ் வாம்பல், சேதாம்பல், அரக்காம்பல் பின்மாலைப் பொழுதில் மலர்ந்து விரிகின்றன, பறவைகள் வெள்ளம் தீப்பட்டனவோ என மருண்டு தங்கள் குஞ்சுகளைச் சிறகினுள் அணைத்து ஒடுக்கிக்கொண்டன என்பது பொருள். இங்குப் பெறப்படுவது, புள்ளினங்களின் குஞ்சுகளைக் குறிக்கப் பார்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்பது.

‘பேடையும், பெடையும், பெட்டையும், பெண்ணும், மூடும், நாகும், கடமையும், அளகும், மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும், அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே ‘ என்பது நூற்பா 1502. பெண் பாலைக் குறிக்க 13 சொற்கள். அன்னப் பேடை கேட்டிருக்கிறோம். பெண் யானையைக் குறிக்க, பிடி எனும் சொல்லை மலையாளம் இன்றும் ஆள்கிறது. ‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி. வானரம் எனில் ஆண்குரங்கு, மந்தி எனில் பெண்குரங்கு.

மூங்கா, வெருகு, எலி, அணில் இவற்றின் இளமைப் பெயர் குட்டி. அவற்றின் குட்டியைப் பறழ் என்றும் சொல்லலாம். புலிப் பறழ் என்கிறது புலிக்குட்டியை சங்க இலக்கியம். எலிக்குஞ்சு என்கிறோம். பறவைகளின் பார்ப்புகளைக் குஞ்சு என்கிறோம். கிளிக்குஞ்சு, கோழிக் குஞ்சு, எலிக்குஞ்சு. அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை என்கிறோம். தென்னம்பிள்ளை என்றும் சொல்வதுண்டு. பிள்ளை என்பதால் அவை வெள்ளாள இனம் என்று கொண்டாடப்படுகிறது என்பது பொருளில்லை.

வெருகு என்றால் பூனை. வெருகுப் பூனை, புனுகுப் பூனை, கடுவன் பூனை என்கிறோம். பூனையைப் பூசை என்கிறது சங்க இலக்கியம். கம்பனும் பூசை என்பான். மலையாளமும் நாஞ்சில் நாடும் பூச்சை என்னும். மூங்கா என்றால் கீரி. கீரியின் ஆங்கிலச் சொல் Mongoose.

ஆந்தை எனும் பறவையையும் மூங்கா என்பதுண்டு. மூங்கா – Mongoose எனும் பெயர்ச் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

எலி போன்ற, ஆனால் எலி அல்லாத, உயிரினம் ஒன்றை மூஞ்சூறு என்பார்கள். யானைமுகனின் வாகனம். எலி வீட்டில் புகுந்தால் கண்டதையும் கரம்பிச் சேதம் செய்யும் என்று முனைந்து துரத்துவோம், பொறி வைத்துப் பிடிப்போம், விடமிட்டுக் கொல்வோம். ஆனால் மூஞ்சூறை எதுவும் செய்வதில்லை.

‘மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு
ஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய’
என்பது தொல்காப்பிய நூற்பா 1505. ‘பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை’ என்பது அடுத்த நூற்பா. அஃதாவது மேற்சொன்ன நான்கின் குட்டிகளைப் பறழ் எனச் சொன்னாலும் மாறுபாடு இல்லை என்பது.

நாயும் பன்றியும் புலியும் முயலும் ஆயும் காலை குருளை என்பர் என்பதும் மரபியலே! நரிக்குட்டியையும் குருளை என்று சொல்லலாம் என்கிறார். கம்பன், பால காண்டத்தில், நகர் நீங்கு படலத்தில், இராமனை வனம் ஏகவும் பரதனை முடிசூட்டவும் பணிக்கும் கைகேயியை இகழ்ந்து இலக்குவன் கொதித்துப் பேசும்போது,
‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை
வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!’
என்பான். அதாவது சிங்கக் குட்டிக்கு இடும் உணவை, நாய்க்குட்டிக்குப் போட எண்ணினாளே என்பது பொருள்.

விரிவாகப் பலவற்றையும் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நரிக்குட்டியையும் குருளை எனலாம். மேற்சொன்ன ஐந்தின் குட்டிகளைக் குட்டி எனலாம், குருளை எனலாம், பறழ் எனலாம். நாய் அல்லாத ஏனைய பன்றி, புலி, முயல், நரி இவற்றின் குட்டிகளைப் பிள்ளை என்றாலும் தவறில்லை என்கிறார். இன்று தொல்காப்பியர் இருந்தால் இலக்கணம் யாத்திருப்பார், குற்றம், கொலை, வஞ்சம், சூது, வழிப்பறி, வன்புணர்ச்சி செய்வோரையும் தலைவர் என்று சொல்லலாம் என.

ஆடு, குதிரை, மான் இனங்களாகிய நவ்வி, உழை என்பனவற்றின் குட்டிகள் மறி எனப்படும். நாஞ்சில நாட்டில், புதியதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டிகளைத் துள்ளுமறி என்பார்கள். மரக்கிளைகளில் வாழும் குரங்கின் பிள்ளையைக் குட்டி எனலாம். மேலும் குரங்குக் குட்டியை மகவு, பிள்ளை , பறழ், பார்ப்பு என்றும் கூறலாம் என்கிறார். யானை, குதிரை, கழுதை, கடமை, பசு இவற்றின் குட்டியைக் கன்று எனலாம் என்றார்.

எருமைக்கன்று, மரைக்கன்று எனலாம். கவரிமான், கரடி இவற்றின் குட்டிகளைக் கன்று எனலாம். ஒட்டகக் குட்டியை ஒட்டகக் கன்று என்றும், யானைக்குட்டியை யானைக் குழவி என்றும், பசு எருமை இவற்றின் கன்றுகளைக் குழவி என்றும் சொல்லலாம் என்கிறார். கடமை மானின் குழவி, மரைமானின் குழவி எனலாம். ஆனால் மக்களின் இளமைப் பெயராக, குழவி, மகவு என்ற இரண்டு சொற்களுமே வரும், பிற வராது என்கிறார்.

மொழிக்குள் எவ்வளவு சுதந்திரம் பாருங்கள். சுத்தமான காற்றைச் சுவாசிப்பது போலிருக்கிறது. கடற்புரத்தில், அருவிக்கரையில், ஆற்றோரத்தில், மலை முகட்டில், அடர் வனத்துள் நின்று ஆழ்ந்து மூச்சு இழுப்பது போல ஆசுவாசமாக இருக்கிறது.

வைக்கோல் படப்பில் நாய் கிடந்தாற்போல, தானும் கல்லாமல், நமக்கும் கற்றுத்தராமல் கெடுப்பார் இல்லாமலே கெடுத்துவிட்டார்களே மாபாவிகள்!

English Meaning - As I taught a kid - Rajesh
A tenacious person, unnecessarily, would not procrastinate a task. However, even such an ardent and might person too can restrain a while from doing a task like a rampant ram (ram is Bighorn sheep. goat like animal) that withdraws before it pounces. Because certain tasks would need right time to succeed (or else it can lead to failure or can be disastrous). Also, remember this restraining is not to take rest, it is only a preparatory step to defeat the opponent and succeed in the task.  

Questions that I ask to the kid
Why sometimes we should be like a ram (bighorn sheep)? 
Can you restrain a while from doing a task? Why?

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்

குறள் 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]

பொருள்
நீத்தார் - முனிவர்; துறவியர்.

இருமை - பெருமை; கருமை இருதன்மை; இருபொருள் இம்மை மறுமைகள்.

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

தெரிந்து - முழுதும் தெளிந்து / அறிந்து
ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
- நேர்மை
- நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல்.
- சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- ஒழுக்கம், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது;  தவம், ஆசாரம், சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்;

பூண்டு - சிறுசெடி; உள்ளிப்பூண்டு; சிற்றடையாளம்.
பூண்டார் - சிற்றடையாளம் கொண்டோர்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

பிறங்கு -  lines inside the joints of the fingers - விரலிறை,

     - III. v. i. shine, glitter, துலங்கு; 2. be lofty, elevated, உயரு; 3. grow full, abundant; 4. sound, ஒலி; 5. come abroad, வெளிப்படு.
பிறங்கு-தல்
piṟaṅku-   5 v. intr. 1. Toshine, glitter, glisten; விளங்குதல்.; To be high,lofty, elevated; உயர்தல். பிறங்குநிலை மாடத்து(புறநா. 69). 3. To be great, exalted, dignified;சிறத்தல். பெருமை பிறங்கிற் றுலகு (குறள், 23).4. To grow full, complete, abundant; மிகுதல்.

பிறங்கிற்று - 

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
எல்லா இடங்களிலும் நிலவுகின்ற நன்மை தீமை போன்ற இருவகை நிலைகளைத் தெளிவாக உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்து அவ்விடத்தில் அறவழியில் (அதாவது நேர்மையான வழியில், தருமத்தின் வழியில்) செல்வோர் வாழ்வில் உயர்வு பெற்று மாட்சிமை என்கிற சிறப்பு ஒளியாக இவ்வுலகில் வீசும். அதுவே சிறந்தது.


இக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தில் வருகிறது. நீத்தார் என்றால் முனிவர், துறவியர் என்று பொருள். ஆதலால் ஞானம் உடையவர்களின் பெருமை என்று நாம் இங்கு பொருள் கொள்ளலாம்.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”இருமை நோக்குறும் சான்றவர் குழாம்” (கம்ப.கிளைகண்டு 82)

நாஞ்சில் நாடன் உரை
‘இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு ’

என்று. நன்மையும் தீமையும் போல, எல்லா இடத்தும் நிலவும் இருவகை நிலைகளைத் தெளிவாக உணர்ந்து அறவழி நிற்பவரின் சிறப்பு உலகில் ஒளிவீசும் என்பது பொருள். எனவே இருமை என்றால் இரண்டு என்று பொருள். அந்த வரிசையில்

பரிமேலழகர் உரை
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம்பூண்டார் பெருமை - பிறப்பறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது.

மணக்குடவர் உரை
பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.
இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

சாலமன் பாப்பையா உரை
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அற்ப சுகங்களை விலக்கி வாழ்வோரைப் பெருமை சேரும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய

குறள் 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பொருள்
சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

யார்க்கும் - எவருக்கும்
யார் - யாவர், எவர்
யார்க்கும் - எல்லோருக்கும் , எவருக்கும், அனைவருக்கும்

எளிய - எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.

அரிது - அருமை; பசுமை

அரியவாம் - அரிதானது ; கடினமானது

சொல்லிய சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

வண்ணம் - நிறம்; சிததிரமெழுதற்குரியகலவை; சாந்துப்பொது; அழகு; இயற்கையழகு; ஒப்பனை; குணம்; நன்மை; சிறப்பு; கனம்; வடிவு; சாதி; இனம்; வகை; பாவின்கண்நிகழும்ஓசைவிகற்பம்; சந்தப்பாட்டு; காண்க:முடுகியல்; பண்; இசைப்பாட்டு; மாலை; செயல்; எண்வகை.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் எனக் கூறுவது எல்லோருக்கும் எளிது. ஆனால் அதை சொல்லியபடி செய்து முடிப்பது மிகவும் கடினம். வெறும் வாய்சொல்லில் பேசிவிட்டு செயலில் கவனம் செலுத்தவில்லை என்றால் அவரை இவ்வுலகம் “வாய்ச்சொல் வீரர் அடி” என்று கூறும். அட்டைக்கத்தி என்றும் கூறலாம். அதனால் தான் “குறள் 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்று கூறினார்கள். செயல் என்பது கடினமானது, அதனால் செயல் புரிந்தவருக்கு பெருமை. வெறும் பேச்சை பேசியவர்களுக்கு ஒரு புகழும் இல்லை. ”Free advice"கொடுப்பவர்களை நமக்கு பிடிக்காது. ஏனெனில் பெரும்பாலும் அத்தகையவர்கள் அச்செயலை செய்து இருக்க மாட்டார்கள்.

நம் குழந்தைகளுக்கு நாம் ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், முதலில் நாம் அதை செய்ய (பின்பற்ற) வேண்டும் (சிலவற்றை செய்யக்கூடாது). Practice what you preach என்பார்கள்.  சொற்களைவிட செயல் வலிமை வாய்ந்தது (Actions speak louder than words). 

அதனால் தான் 
என்று முன்பே கூறியிருந்தார் திருவள்ளுவர்.

மேலும், 
குறள் 1046
என்பதை நினைவில் கொள்க. நாம் செயல் வீரர் இல்லை என்றாலோ அல்லது நாம் ஒன்றை பின்பற்றி முன்னேற்ற பாதையிலோ அல்லது பலனை பெறவில்லை என்றாலோ நாம் நல்லதையே சொன்னால் நாம் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள். மேடையில் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். வெற்றிப் பெற்றோரும், சான்றோரும், பெரியோரும் சொல்வதையே மக்கள் கேட்பர். ஆனால் அவர்கள் செயல் புரிந்தவர்கள்.

ஆனால் பேச்சு என்பது ஒரு கலையும் கூட. இன்று பேச்சு (Communication Skill)திறன் என்பது எல்லா இடங்களிலும் தேவைப்படும் ஒன்று. ஆனால் பேச்சு நின்றால் என்ன மதிப்பு? செயலிலும் செய்து வெற்றிகரமாக முடித்தால் தான் மதிப்பு. உதாரணமாக உயிர்காப்பீட்டு திட்டம் (Insurance Agent) ஒருவர் என்னிடம் வந்து என்னிடம் ஒரு பொருளை (insurance policies) விற்றார். அதற்காக தொடர்ந்து பேசிக்க்கொண்டு இருந்தார். அப்பொருளை பற்றிய உயர்ந்த எண்ணங்களை விதைத்தார் (high returns) ஆனால் அப்பொருளில் பிரச்சனை என்ற உடன் அவர் மிக மெதுவாக செயல்பட்டார். எனக்கு அப்பொருளின் வந்த லாபமோ மிக மிக குறைவு (one of the lowest returns). அதன் பிறகு நான் அவரிடமோ அல்லது மற்றவர்களிடமோ அதுப்போன்ற ஒரு பொருளை வாங்கவே இல்லை. ஏனெனில் இவர்களின் பேச்சுவது ஒன்று நடப்பது(செயல் படுவது) ஒன்று. இது insurance agent என்றில்லை. எல்லா Sales/marketing க்கும் பொருந்தும். Sales Marketing என்றில்லை எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். I.T-யில் வாய் கிழிய பேசலாம். ஆனால் செயலில் (வெற்றிகரமாக code செய்தால்) தான் மதிப்பு. இல்லை என்றால் வேலையை விட்டு தூக்கிவிடுவர்.

சொல்லிற்கும் வலிமை உண்டு. ஆனால் சொல்லில் நின்று விடாமல் செயலில் காண்பிக்க வேண்டும். ஒருவர் 100 சுய முன்னேற்ற புத்தகங்களை படிக்கலாம். படித்துவிட்டு உபதேசம் கூறலாம். ஆனால் அவற்றை நடைமுறையில் செயல்படுத்தினால் தான் பலன் கிடைக்கும். செயல்வீரரையே இவ்வுலகம் மதிக்கும்.

வீட்டில் பல தடவை நம்மைப் பார்த்து கூறுவர் “சும்மா பேசாத, செயல்ல காட்டு. அப்புறம் பார்க்கலாம்” என்று. ரஜினி முத்து திரைப்படத்தில் “நான் சொல்றதத்தான் செய்வேன், செய்றதத்தான் சொல்வேன்” என்று கூறும் வசனம் மிக பிரபலம் என்பதற்கு காரணம் செயலின் வலிமை. அதே சமயம் ரஜினி பல ஆண்டுகளாய் நகைப்பிற்கும் விமர்சனத்திற்கும் ஆளானதற்கு காரணம் அவரது அரசியல் வருகை பேசிலேயே இருந்தது. ஆனால் 2020 அது ஒரு முடிவுக்கு வந்தது.

இக்குறளின் மூலம் இரு கிளை கருத்துகளை அறியலாம்.

1. செயல் திட்டம் தீட்டும் பொழுதே அதை நன்கு ஆராய்ந்து, செய்து முடிக்க கூடிய திட்டமாக தீட்ட வேண்டும். எளிதாக சொல்லி விட்டு பின்பு அதை முடிக்க சிரமப்படாமல் இருப்பதை தவிர்க்கலாம். அதனால் தான்
குறள் 467

2. மற்றவர்களின் செயலை எளிதாக விமர்சனம் செய்யாமல் ,அதை நாம் செய்தால் எவ்வளவு கடினம் ஆக இருக்கும். என்ன என்ன தடங்கல்களை சந்திக்க வேண்டும் என்று உணர்ந்து பேச வேண்டும்.

கம்பர் இராமயணத்தின் அரசியல் படலத்தில்(44) இவ்வாறு கூறுகிறார்: “உரைசெயற் கெளிதுமாகி அரிதுமாம் ஒழுக்கில்”. 

”நெடுமொழி மன்னர் நினைக்குங் காலை” (புறநா.54:9)
“ஞாங்கர் நெடுமொழி பயிற்றி” (புறநா 376:22)

புறநானூற்றுப் பாடலொன்றில் (178:7-9), பாண்டியன் கீரஞ்சாத்தன் என்னும் குறுநில மன்னனின் வீரத்தைப் போற்றும் ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், 
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின் 
கள்ளுடைக் உள்ளூர்க் கூறிய 
நெடுமொழி மறந்த சிறுபேராளர்” என்பார். 

வேலும் வாளும் வீசி விளையாடும் போர்களத்தில் ஊருக்குள் இருந்தபடி, மது உண்ட மயக்கத்தில் வீரம் பேசித் திரிந்தவர்கள், போர் வந்து விட்டபோது, பகைவரை எதிர்கொள்ள முடியாது பயந்து ஓட நினப்பவர்கள் என்று சிலரை இழந்து சொல்லுகிறார், இக்குறளின் கருத்தையொட்டி. (வெருவரு ஞாட்பின் – அச்சம்தரு போர்களத்தில்)

மேலும்: அசோக்  உரை

பரிமேலழகர் உரை
சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.

மு.வரதராசனார் உரை
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

சாலமன் பாப்பையா உரை
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பது வினைத்திட்பம் அதிகாரத்துத் திருக்குறள். அதைச் செய், இதைச் செய், அதைச் செய்வேன், இதைச் செய்வேன், அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிய காரியம். ஆனால் அவர் சொன்னபடி அவரே செய்தல், அவர் எதிர்பார்த்தபடி எதிராளி செய்தல் என்பதெல்லாம் மிக அரிதான காரியம்.

Thirukkural - Management - Learning
Valluvar anticipated the difficulties and challenges we would face in the process of learning and prepared us through Kural 664.

It is easy for anyone to talk, 
But hard to act thereon.

The meaning of that Kural is: anybody can tell or advise others what to do  and how to do things.  However, the challenge is in practicing whatever one advises others to practice. That is one of the reasons New Year resolutions do not last longer. The English saying ‘Said is easier than done' is in line with this thought. Therefore, do not just be a person of words, but also be a person of deeds. 

Demonstrate by doing whatever you promise to do so that people will accept your principles and practice that themselves. That is an example for exemplary leadership.