குறள் 23
பொருள்
நீத்தார் - முனிவர்; துறவியர்.
இருமை - பெருமை; கருமை இருதன்மை; இருபொருள் இம்மை மறுமைகள்.
வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.
தெரிந்து - முழுதும் தெளிந்து / அறிந்து
ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
- நேர்மை
- நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல்.
- சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- ஒழுக்கம், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; தவம், ஆசாரம், சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்;
பூண்டு - சிறுசெடி; உள்ளிப்பூண்டு; சிற்றடையாளம்.
பூண்டார் - சிற்றடையாளம் கொண்டோர்
பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.
பிறங்கு - lines inside the joints of the fingers - விரலிறை,
- III. v. i. shine, glitter, துலங்கு; 2. be lofty, elevated, உயரு; 3. grow full, abundant; 4. sound, ஒலி; 5. come abroad, வெளிப்படு.
பிறங்கு-தல்
piṟaṅku- 5 v. intr. 1. Toshine, glitter, glisten; விளங்குதல்.; To be high,lofty, elevated; உயர்தல். பிறங்குநிலை மாடத்து(புறநா. 69). 3. To be great, exalted, dignified;சிறத்தல். பெருமை பிறங்கிற் றுலகு (குறள், 23).4. To grow full, complete, abundant; மிகுதல்.
பிறங்கிற்று -
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]பெருமை பிறங்கிற்று உலகு.

முழுப்பொருள்
எல்லா இடங்களிலும் நிலவுகின்ற நன்மை தீமை போன்ற இருவகை நிலைகளைத் தெளிவாக உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்து அவ்விடத்தில் அறவழியில் (அதாவது நேர்மையான வழியில், தருமத்தின் வழியில்) செல்வோர் வாழ்வில் உயர்வு பெற்று மாட்சிமை என்கிற சிறப்பு ஒளியாக இவ்வுலகில் வீசும். அதுவே சிறந்தது.
இக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தில் வருகிறது. நீத்தார் என்றால் முனிவர், துறவியர் என்று பொருள். ஆதலால் ஞானம் உடையவர்களின் பெருமை என்று நாம் இங்கு பொருள் கொள்ளலாம்.

”இருமை நோக்குறும் சான்றவர் குழாம்” (கம்ப.கிளைகண்டு 82)
நாஞ்சில் நாடன் உரை
‘இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு ’
என்று. நன்மையும் தீமையும் போல, எல்லா இடத்தும் நிலவும் இருவகை நிலைகளைத் தெளிவாக உணர்ந்து அறவழி நிற்பவரின் சிறப்பு உலகில் ஒளிவீசும் என்பது பொருள். எனவே இருமை என்றால் இரண்டு என்று பொருள். அந்த வரிசையில்
பரிமேலழகர் உரை

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம்பூண்டார் பெருமை - பிறப்பறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.
படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது.
படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது.
மணக்குடவர் உரை
பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.
இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.
இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.
மு.வரதராசனார் உரை
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அற்ப சுகங்களை விலக்கி வாழ்வோரைப் பெருமை சேரும்.
I find the detailed meanings very useful. Can you add a feature to locate a kural in this site? For example if I know the kural number or the chapter I should be able to locate it in this blog.
ReplyDeleteThank you. There are multiple ways to navigate
ReplyDelete1.For Overall Athikaram List - In the Labels section, there is "0 Main Index Posts (3)" label. If you click this, you will get all the athikaram lists. You can click on the athikaram that you want to go.
2. For Athikaram / Chapter specific - In the Labels section, there is a Index 001 label - One can use this and go to the athikaram directly.
3. For Kural, specific, Either go athikaram (using 1 or 2 mentioned above) and click on the kural number. ... Or use the SEARCH BOX at the top of this blog.