Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label குடிமை. Show all posts
Showing posts with label குடிமை. Show all posts

நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்

 

குறள் 960
நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உடைமை - uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).
உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் (நகை) உரிமை உரியவை

வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.

வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

வேண்டுக - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

யார் - யாவர், எவர்
யார்க்கும் - எல்லோருக்கும் , எவருக்கும், அனைவருக்கும்

பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம்

முழுப்பொருள்
ஒருவருக்கு நன்மைகளான இன்பம் புகழ் பயன் உயர்வு நல்வாழ்வு அறம் ஆகியவை வேண்டும் என்றால் அவர் நல்லன அல்லாதவற்றை தீயவற்றை செய்ய வெட்கப்படவேண்டும். ஆதலால் நலம் வேண்டும் என்றால் நாணம் உடைமையாக வேண்டும். 

நற்குடியில் பிறந்த ஒருவர் அக்குடியில் பிறந்ததனால் பல பயன்களை பெற்று இருப்பார். (முன்வினைப் பயன்களாலும் அவர் தாய் தந்தையர் வேண்டியதாலும் அவர் இக்குடியில் பிறந்தார்). ஆனால் அக்குடியில் பிறந்ததனாலேயே அவர் பெரியோர் என்று நினைத்துக்கொள்ள கூடாது. மற்றவர்கள் கீழோர் என்று நினைக்கக்கூடாது. எல்லோரும் சமம் என்ற பணிவு என்றென்றும் வேண்டும். பணிவு இல்லையேல் அது அக்குடிக்கு அவர் ஈட்டித்தரும் (சம்பாத்தித்து தரும்) அவப்பெயர் ஆகும். 

ஒரு நற்குடியில் பிறந்தோம் என்ற எண்ணம் வேண்டும். ஆனால் அதனை அக்குடியின் பெயரை காப்பாற்ற அல்லது மேலும் உயர்த்த பாடுபடவேண்டுமே தவிர போலி கௌரவமும் தேவையற்ற அகங்காரமும்/செருக்கும் கூடாது. 

ஆதலால் இவன் நற்குலத்தைச் சேர்ந்தவன் என்கிற பேர் நிலை பெற வேண்டுமாயின், தம்மில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று வேற்றுமை பாராட்டாது, பணிவுடன் நடக்கின்ற மனமும், எண்ணமும் வேண்டும்.

இதையேதான், “எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்” என்று ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் வள்ளுவர். 

”நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று”

நாலடியார் பாடலொன்று, 
“இருக்கை எழலும், எதிர்செலவும் ஏனை 
விடுப்ப ஒழிதலோடு இன்ன குடிப்பிறந்தார் 
குன்றா ஒழுக்கமாக் கொண்டார்” (நாலடி 143)
என்று பணிவுடைமையை குடிப்பிறந்தார்க்கு ஒழுக்கக் கூறாகச் சொல்லுகிறது. 

மற்றொரு பாடலில்,
“................நல்கூர்ந்த மக்கட்கு 
அணிகலம் ஆவது அடக்கம்- பணிவில் சீர் 
மாத்திரையின்றி நடக்குமேல் வாழுமூர் 
கோத்திரம் கூறப்படும்” என்கிறது நாலடியார் (241).

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யாரக்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. (நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

 

குறள் 959
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
நிலத்தில் - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

கிடந்தமை - கிடக்கை - படுக்கைநிலை; படுக்கை; படுக்குமிடம்; பூமி; பரப்பு; இடம்; உள்ளுறுபொருள்.
கிடத்தல் - படுத்திருக்கும்இருக்கைவகை.
கிட - ஒருநிகழ்காலஇடைநிலை.
கிட - kiṭa   VII. v. i. lie, lie down, lie along, rest, படு; 2. be in a state, exist, இரு; 3. remain தரித்திரு; 4. (as an auxiliary) be possible or appropriate as in அவன் செய்யக்கிடப்ப தொன்றுமில்லை.

கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

காட்டும் - காட்டு-தல் - kāṭṭu-   5 v. tr. Caus. ofகாண்-. [M. kāṭṭu.] 1. To show, exhibit, display;காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 2.To reveal, disclose, set forth; அறிவித்தல் காணாதாற் காட்டுவான் (குறள், 849). 3. To demonstrate,prove; நிரூபித்தல் நிறைமொழி மாந்தர் பெருமைநிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 4. Toremind; நினைப்பூட்டுதல் முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8).5. To offer to a deity; நிவேதனஞ்செய்தல்.ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும் (S.I.I. iii,102). 6. To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள், 706). 7. To create, bring topass; உண்டாக்குதல் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி (சிலப். 19, 17). 8. To introduce;அறிமுகஞ்செய்வித்தல். செவ்வழியுள்ளத் தோனைக் காட்டுதி தெரியவென்றான் (கம்பரா. அனுமப். 23). 9. Toapply, as incense or perfume to the hair; நறுமணமுதலியன ஊட்டுதல் ஆவிகாட்டி . . . சோர்குழல் (கம்பரா.  

காட்டும் - காட்டு-தல் - kāṭṭu-   5 v. tr. Caus. ofகாண்-. [M. kāṭṭu.] 1. To show, exhibit, display;காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 2.To reveal, disclose, set forth; அறிவித்தல் காணாதாற் காட்டுவான் (குறள், 849). 3. To demonstrate,prove; நிரூபித்தல் நிறைமொழி மாந்தர் பெருமைநிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 4. Toremind; நினைப்பூட்டுதல் முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8).5. To offer to a deity; நிவேதனஞ்செய்தல்.ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும் (S.I.I. iii,102). 6. To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள், 706). 7. To create, bring topass; உண்டாக்குதல் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி (சிலப். 19, 17). 8. To introduce;அறிமுகஞ்செய்வித்தல். செவ்வழியுள்ளத் தோனைக் காட்டுதி தெரியவென்றான் (கம்பரா. அனுமப். 23). 9. Toapply, as incense or perfume to the hair; நறுமணமுதலியன ஊட்டுதல் ஆவிகாட்டி . . . சோர்குழல் (கம்பரா.  

குலத்தில் - குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.

பிறந்தார் -- பிறந்தவர்கள்
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

வாய்ச்  - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
நிலத்தில் உள்ளே விதைக்கபட்ட விதையின் தன்மையை விளைந்த பயிர் காட்டிவிடும். ஏனெனில் விதைத்தது தானே முளையும். வெண்டக்காய் விதைத்தால் வெண்டக்காய் தானே முளைக்கும், கத்திரிக்காய் முளைக்காது அல்லவா? அதேப்போல் விதை நன்றாக இருப்பின் நிலத்தின் இயல்பும் முக்கியம். அது நன்னிலமா புன்னிலமா என்பதனை விதை எவ்வாறு வளர்ந்து செழிப்பாய் வளர்கிறது என்பதை வைத்து கூறிவிடலாம்.

அதுப்போல் நற்குடியில் பிறந்தவர் என்றால் அவருடைய சொற்களே அதனை காட்டிவிடும்.  ஒருவரின் பேச்சிலேயே அவருடைய குடியின் சிறப்பை அறியலாம். ஆதலால் சொல்லிலும் (மற்றும் செயலிலும்) நமது குடியின் சிறப்பு விளங்கிவிடும். ஒருவர் நற்குடியில் பிறந்து இருக்கலாம், ஆனால் அவர் தவறான ஒரு சூழலில் வளர நேரிட்டால் அவர் குடியின் மாண்புகளை மறந்து தவறானவற்றை கற்று தவறானவற்றைப் பேசக்கூடும். ஆயினும் அது குடியின் பெயருக்கு குந்தகம் விளைவிக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும். (கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.).

மணக்குடவர் உரை
வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.

மு.வரதராசனார் உரை
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

சாலமன் பாப்பையா உரை
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

 

குறள் 958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
நலத்தின்- நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நார் - மட்டைமுதலியவற்றின்நார்; கயிறு; வில்லின்நாண்; பன்னாடை; கல்நார்; அன்பு.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று.

தோன்றின் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

அவனைக் - அவன் - ஆண்பால்சுட்டுப்பெயர்.

குலத்தின்குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

ஐயப்படும்.- ஐயப்படுதல் - சந்தேகப்படுதல்., 

முழுப்பொருள்
புகழ் வாய்ந்த சான்றோர்கள் பலர் உள்ள குடியில் / குலத்தில் பிறந்த ஒருவரிடம் அன்பு அருள் கருணை இருத்தல் வேண்டும். ஏனெனில் அக்குடியில் முன்பு பிறந்தோரிடம் அன்பு இருந்தது. அவ்வழி தோன்றலால் அக்குடியில் பிறந்தோரிடமும் எதிர்ப்பார்க்கப்படும். அது இயல்பானது. சரியானதும் கூட.

ஆதலால் நற்குடியில் பிறந்த ஒருவரிடம் அன்பு இல்லை என்றால் அவர் அக்குடியில் தான் பிறந்தவரா என்று இவ்வுலகத்தில் உள்ளவர்கள் சந்தேகப்படுவர். ஆதலால் ஒரு நற்குடியில் பிறந்தால் அக்குடியில் இருக்கும் நற்பண்புகளை ஏந்தி அதன்படி நடக்க வேண்டும். இல்லையேல் வெளியே தான் அக்குடும்பத்தில் பிறந்தோம் என்று கூறிக்கொள்ளக் கூடாது. குடியின் வழி நடக்கவில்லை என்றால் அவர் பிறந்த குடியை சந்தேகப்படுவர். 

தாமற்பல் கண்ணனார் என்னும் புலவர், சோழன் மாவளத்தானோடு சூதாடிய பொழுது தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில் வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய சோழன் சினமுற்று, அவ்வட்டை அவர் மீது எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து மன்னா உன் செய்கையைப் பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லையே, ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்களே என்று இகழ்கிறார். முதற்பகுதி இக்குறளின் கருத்துக்கு இயைந்து இருப்பினும், பின்னால் அவன் நாணியதையும், அதையே பாராட்டி அப்புலவரே பாடுவதாகவும் அமைந்த புறநானூற்றுப் பாடல் இதோ.

கடுமான் கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே; (புறநா.43:12:5)

நற்குடிப்பிறந்தோர்க்கு ஈரம் என்பது குலத்தைச் சார்ந்த பண்பு என்பதைக் கூறும் முதுமொழிகாஞ்சி வரி
“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் 
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப” (முதுமொழிகாஞ்சி 2:1-2)

“வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்த னேநீ பரதன்முன் தோன்றி னாயே” (கம்ப.வாலிவதை 76)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம். (நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

குறள் 957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
[பொருட்பால், குடியியல், குடிமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்தார் - பிறந்தவர்கள்
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

விளங்கும் - விளங்கு - viḷaṅku   n. Lesser galangal.See சிற்றரத்தை, 1. (மலை.)
விளங்குதாரணத்ததாகுதல் viḷaṅku-tāraṇattatākutal, n. விளங்கு- + உதாரணம் + ஆகு-+. Being furnished with appropriate illustrations, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது. (நன். 13.)

விளங்கு-தல் - viḷaṅku-   5 v. [T. veḷuṅgu,K. beḷagu, M. viḷaṅṅuga.] intr. 1. Toshine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர்விரித்தே (புறநா. 8). 2. To become renowned,illustrious; பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும்

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

விசும்பின் - விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

மதிக் - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

மறு - குற்றம்; களங்கம்; தீமை; அடையாளம்; மச்சம்; பாலுண்ணி; மற்ற.

போல் -  ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

உயர்ந்து - உயர்ச்சி உயரம்; மிகுதியாதல்; விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி

முழுப்பொருள்
நற்குடியில் பிறந்தோர் அக்குடியின் புகழிற்கு களங்கம் விளைவிக்காத வண்ணம் நடந்துக்கொள்ளவேண்டும்.  ஏனெனில், நற்குடியில் பிறந்தோரின் குற்றங்கள் உயரே வானத்தில் உள்ள நிலாவில் தென்படும் களங்கம் போல எல்லோருக்கும் பெரிதாய் தெரிந்துவிடும். அதோ நிலவில் களங்கம் என்று எல்லோரும் ஒரு எடுத்துக்காட்டாக காண்பிப்பர். உதாரணத்திற்க்கு இக்குறளிலேயே நிலவில் உள்ள களங்கத்தை உதாரணமாக கூறுகிறோம் அல்லவா. மற்றவர்களை கூற ஒரு நேரமும் ஆகாது. 

ஆதலால் நற்குடியில் பிறந்தோர் இந்த உலகின் இயல்பு அறிந்து தன் குடியால் பெற்ற நன்மைகளுக்கு கைமாறாக பொறுப்போடு நடந்துக்கொண்டு குற்றங்கள் செய்யாது குடியின் பெருமையை காப்பாற்றவேண்டும்.

நற்குடிப்பிறப்பாளரின் குற்றங்களை மதியின் களங்கத்தோடு ஒப்பு நோக்கும் பல பாடல்கள் உள்ளன, இலக்கியங்களிலிருந்து.

“...பெரியோர்கண் தீமை
கருநரைமேல் சூடே போல் தோன்றும்” (நாலடி.186)

“நிரைதொடி தாங்கிய நீடோள்மாற் கேயும்
உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட் குற்றம்
...... மாயா, நரையான் புறத்திட்ட சூடு” (பழமொழி 48)

”ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படும்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு” (பழமொழி 204)

திங்களைப்போற் சான்றோர் களங்கம் இருப்பினும் வாளா இரார் என்பதால், அவர் அதனினுஞ் சிறந்தவராவர் என்கிறது நாலடியார் பாடலொன்று.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின். (நாலடி 151)

பழமொழிப்பாடலொன்று (258) படித்த மாத்திரத்தில் விளங்குமாறு, 
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் 
மதிப்புறத்துப் பட்ட மறு” என்கிறது.

அறநெறி (161)
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் 
மதிப்புறத்தில் பட்ட மறு” என்கிறது.

மணிமேகலையும் கம்பராமாயாணமும் இதே ஒப்புமையையே கீழ்காணும் பாடல்களிலே கூறுவதைப் பார்க்கலாம்,

வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல
மாசறு விசும்பின் மறுநிறங் கிளர 
                                      (மணிமேகலை 6:2-5 சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை)

வாலி இராமனைச் சாடுவதாக அமைந்த இப்பாடலும் இவ்வுவமையை அழகாகக் கூறுகிறது.

கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ 
                                    (கம்பராமாயணம் வாலிவதைப்படலம் 87)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும். (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

English Meaning - As I taught a kid - Rajesh
One who is born to a family with higher reputation has higher expectations because he/she is from a very well known family. Hence, if he makes a mistake, then his mistake will be visible and discussed by everyone because grey shades in the moon up above our head is seen by all and discussed by all. When one goes to high places one has the responsibility to be careful because his mistakes will be seen by all. 

Questions that I ask to the kid
How are mistakes of a person from a reputed family seen as? why? (because it is above our head in a height)

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குறள் 956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
சலம் - அசைவு; நீர்; சீழ்நீர்; மூத்திரம்; நடுக்கம்; அசையும்அம்புக்குறி; இயங்குதிணை; சுழற்சி; தணியாக்கோபம்; கோபம்; பொய்ம்மை; வஞ்சனை; பட்சபாதம்; தீச்செயல்; மாறுபாடு; போட்டி; முள்ளம்பன்றியின்முள்இலாமிச்சை; பிடிவாதம்.

பற்றிச் - paṟṟi   patti பத்தி 1. about, concerning, regarding (post. + acc.) [2. cvb. of பற்று `hold, adhere to']
paṟṟi   பற்று-. n. See பற்றாசு, 1. (W.)--part. [M. paṟṟi.] Of, about, concerning,respecting, adverting to, referring to; குறித்து.என்னைப்பற்றிக் கவலைப்படாதே.

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி

இல - இல்லாதவற்றை

செய்யார் -  பகைவர்; செய்யமாட்டார்கள்

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அற்ற - அல்லாத; இல்லாத

குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.

பற்றி -  paṟṟi   patti பத்தி 1. about, concerning, regarding (post. + acc.) [2. cvb. of பற்று `hold, adhere to']
paṟṟi   பற்று-. n. See பற்றாசு, 1. (W.)--part. [M. paṟṟi.] Of, about, concerning,respecting, adverting to, referring to; குறித்து.என்னைப்பற்றிக் கவலைப்படாதே.

வாழ்தும் - வாழ்வது
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

என்பார் - என்று கூறுவார்

முழுப்பொருள்
குற்றங்களை செய்யாத அப்பழுக்கற்ற நற்குடியில் பிறந்த ஒருவர் அல்லது குற்றங்கள் செய்யாத அப்பழுக்கற்ற நற்குலமாய் திகழ வேண்டும் என்று கருதி வாழும் ஒருவர் வஞ்சனையாலோ போட்டியாலோ வறுமையினாலோ கோபத்தினாலோ அல்லது மனதில் இருக்கும் சலனத்தினாலோ (சிறு அசைவு) மேன்மையற்ற செயல்களை எப்பொழுதும் செய்யமாட்டார்கள்.

நாலடியார் பாடல் வரிகள் இக்கருத்தை ஒட்டியது.

நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார்; – உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 153)

அதாவது, உடம்பில் நரம்பு மேலே தோன்றும்படி வறுமையெய்தினாராயினும்  மேன்மக்கள் தமது நல்லொழுக்கத்தின் வரம்பு கடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில் தொடர்ந்து செல்லமாட்டார்.


”வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைத்து” (நாலடி 156)

“கள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார் வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர்” (நாலடி 157)

”அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண் டறிவாம்என் றெண்ணி யிராஅர்
..............சான்றோர், கடங்கொண்டும் செய்வார்கடன்” (பழமொழி 216)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.

மு.வரதராசனார் உரை
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

குறள் 955
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
வழங்குவது - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல்

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

வீழ் - மரவிழுது; தாலிநாண்;

வீழ்ந்தக் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பழங்குடி - பழமையானகுடி; வழிவழியாகநிலைபெற்றுவரும்குடி

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

பண்பின் - தம்முடைய பண்பின் காரணமாக

தலைப் - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

இன்று - இல்லை; இந்தநாள்; ஓரசைச்சொல்.

முழுப்பொருள்
வழிவழியாக நிலைபெற்றுவரும் பழமையான நற்குடியில் பிறந்தவர்களுக்கு தங்களுடைய செல்வங்களை கொடையாக கொடுத்து கொடுத்து பெருமளவு குறைந்தாலும் அல்லது சந்தர்ப்பவசத்தால் குறைந்தாலும் அவர்களை நற்பண்பாளர்களாக்கிய கொடைகுணம் அவர்களைவிட்டு என்றும் பிரியாது.

எல்லாப்பழக்கங்களும் நம்மைவிட்டு விலக பல சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் அமையும். ஆனால் கொடைகுணம் என்பது மிகவும் ஆத்மார்த்தமான மனநிறைவை நமக்குஅளிப்பதனால் கொடுக்கும் சுவை நம்மில் தங்கிவிடுகிறது / நிலைபெற்றுவிடுகிறது. அதனால் நம்மில் இருந்து பிரியாது.

இக்குறளின் கருத்தை ஒட்டிய பல நாலடியார் பாடல்களும், பழமொழிப் பாடல்களும் உள்ளன. அவற்றுள் சில

“உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும் 
குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்”  (நாலடி 141)

“எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிபிறந்தவர் 
செய்வர் செயற்பாலவை”  (நாலடி 147)

“செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு 
ஒல்கார் குடிப்பிறந் தார்”  (நாலடி 148)

“செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன” (நாலடி 149)

“எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றவர்” (நாலடி 150)

“கொடைக் கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது” (நாலடி 184)

“செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுவந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 185)

”ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன” (நாலடி 358)

“பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகையார்”  (பழமொழி 96)

“ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர் 
நிற்பவே நின்ற நிலையின் மேல்”  (பழமொழி 119)

“மறம்தி றம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ” (கம்ப.மந்தரை.66)

ஔவையாரின் மூதுரைப் பாடலும் இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.


இப்பாடலின் இரண்டாவது வரியைத் தவிர மற்ற வரிகளெல்லாம், இக்குறளின் கருத்தோடு பொருந்தி இயைவதைப் பார்க்கலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப் பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார். (தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்; அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.).

மணக்குடவர் உரை
வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர். இது பண்புடைமை விடாரென்றது


மு.வரதராசனார் உரை
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

சாலமன் பாப்பையா உரை
தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

அடுக்கிய கோடி பெறினும்

குறள் 954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
அடுக்கிய - அடுக்கு - அடுக்கப்பட்டது; ஒழுங்கு, வரிசை, அடுக்குச்சொல்.

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெறினும் - பெற்றாலும் ; அடைந்தாலும்

குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்தார் - பிறந்தவர்கள்

குன்றுவ - kuṉṟu-   5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல் 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல் குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல் அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

இலர் - இல்லை ;  who are not

முழுப்பொருள்
எண்ணற்ற பல செல்வங்களை ஈன்று பெற்றாலும் வாழ்விலே பொருளாதாரரீதியாக மிக உயர்ந்தாலும் மாட்சிமை பொருந்திய ஒழுக்கத்துடன் வாழும் நல்ல குடியில் பிறந்தவர்கள் எந்நாளும் கேடான செயல்களை, தன் குடியின் புகழை குறைக்க கூடிய செயலை செய்ய மாட்டார்கள்.

இதனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் பிள்ளைகளை நல்வழியில் வளர்ப்பதும் பிள்ளைகளை ஒருகாலம் வரையில் கேடான செயல்களை செய்யாது பார்த்துக்கொள்வதும் பெற்றோரின் கடமையாகும். அவர்களை நல்வழில் வளர்ப்பதும் அவர்களுக்கு நல்ல ஒரு சூழலை கொடுப்பதும் அவர்களின் பொறுப்பாகும். இவற்றையெல்லாம் மீறி குழந்தைகள் சென்றால் அதனுடைய பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள்.

நல்ல குடியில் பிறந்தவர்கள் (மற்ற எல்லோரும்) அதனால் தான் நீத்தார் கடன் செய்வார்கள். இவர்கள் நல்ல நிலையில் இன்று இருந்தால் அதற்கு அவர்களின் பங்கும் உண்டு.

உயர் குடியில் பிறக்கவில்லை என்றாலும் வாழ்வில் உயர்குடி என்ற நிலைக்கு உயர வேண்டும் என்றால் அவர் கேடான செயல்களை செய்யக்கூடாது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”..................தெள்ளி, வடுவான வாராமல் காத்தல்” (திரி.77)


பரிமேலழகர் உரை
அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.).

மணக்குடவர் உரை
பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார். இது சான்றாண்மை விடாரென்றது.

மு.வரதராசனார் உரை
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

சாலமன் பாப்பையா உரை
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

குறள் 953
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.

ஈகை - கொடை; பொன் கற்பகம் இண்டு புலிதொடக்கி காடை காற்று மேகம் கற்பகமரம்; இல்லாமை ஈதல் கொடுத்தல்

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இகழ்தல் - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு
இகழாமை - இகழாதிருத்தல்

நான்கும் - ஆகிய நான்கும்

வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

என்ப - என்பார்கள்; என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

வாய்மைக் - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி

குடிக்கு - குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

முழுப்பொருள்
நல்ல குடும்பம் (நற்குடி) என்றால் என்ன? எந்தக் குடும்பத்தில் மனதாலும் செயலாலும்  பிறரிடத்தில் மலர்ந்த முகத்துடன் எதிர்க்கொண்டு, ஈகை குணம் (கொடையுள்ளம் - கொடை என்றால் பொருள் கொடுத்து உதவுவது மட்டும் அன்றி பிறருக்கு எந்த விதத்திலும் உதவுவது - உதாரணமாக துன்பமான நேரங்களில் அவருடன் இருந்து பிரச்சனையை தீர்க்க உதவுவது, ஆறுதல் கூறுவது) கொண்டு, மனம் வாடாத இனிமையான சொற்கள் பேசி, குற்றம் செய்யாது, அவமதிக்காது இருக்கிறார்களோ அவர்களே உண்மையான மாறாத நற்குடி ஆவார்கள். வெளிவேஷம் போடுவோர்கள் எல்லாம் நற்குடி ஆகமாட்டார்கள்.

இக்குறளையொட்டிய நாலடியார் பாடலொன்று, நல்லார் கூட்டுறவு, இன்சொல்லுடைமை, வறியார்க்கு ஒன்று ஈதல், ஏனை மனத் தூய்மைஎன இந் நற்பண்புகளெல்லாம் உயர்குடிப் பிறந்தாரிடமே அமைந்திருக்கின்றன, என்கிறது.

இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் – கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள. (நாலடி.146)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வாய்மைக்குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர். (பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அங்கமென்று சொல்லுவர்.

மு.வரதராசனார் உரை
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.

Thirukkural - Management - Values
Four things are highly valuable for people with values according to Kural 953. They are: 1) smile-being cheerful, 2) charity-helping others, 3) pleasant words
— words that are pleasing to the hearers and 4) not mocking-not looking down upon others. Definitely, a person with high values will not criticize, scorn, or mock at others.

A smiling face, a generous heart, sweet words and no scorn
Are said to mark the well-born.

It is time we checked whether we practice those four qualities to know whether we are people of high values.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்

குறள் 952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
ஒழுக்கமும் - ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

வாய்மையும் - வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.

நாணும் - நாணம் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்
நாணால் - நாணத்தினால் - வெட்கபடவைக்கும் உணர்வால்

இம் மூன்றும் - இவை மூன்றும்

இழுக்கார் - இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்தார் - பிறந்தவர்கள்

முழுப்பொருள்
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் அவச்சொல்லுக்கு அஞ்சி வெட்கபடுகின்ற செயல்களை செய்ய மாட்டார்கள். ஆதலால் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய முன்றும் குறையும் எந்த ஒரு செயலையும் செய்ய வெட்கப்பட்டு செய்ய மாட்டார்கள்.

ஆக ஒரு குடும்பம் நல்ல குடும்பம் என ஆவது கல்வியினாலோ, பொருள் செல்வத்தினாலோ மட்டும் அல்ல. அவை ஒழுக்கம் (ஒழுக்கமுடைமை), வாய்மை (வாய்மை), நாணம் (நாணுடைமை) ஆகிய பண்புகளின் அடிப்படையில் ஆகும்.

ஒழுக்கம் (ஒழுக்கமுடைமை), வாய்மை (வாய்மை), நாணம் (நாணுடைமை), முறையே, மெய் மொழி மனம் என்னும் முக்கரணம் பற்றியன.

நாலடியார்ப் 142 பாடலொன்று, பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடித்தல் என்னும் இவை மூன்றும் உயர்வு பொருந்திய குடியிற் பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டான காலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா என்று கூறுகிறது. அப்பாடல்:

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது – வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு. (நாலடி.142)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குடிப்பிறந்தார்- நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்முன்றும் இழுக்கார்- ஒழுக்கம் மெய்ம்மை பழிநாணல் ஆகிய முத்திறத்தும் ஒருபோதும் தவறார்.

ஒழுக்கம் முதலிய முன்றும், முறையே, மெய் மொழி மனம் என்னும் முக்கரணம் பற்றியன.

மணக்குடவர் உரை
ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.

மு.வரதராசனார் உரை
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை

குறள் 951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் 
செப்பமும் நாணும் ஒருங்கு.
[பொருட்பால்,  குடியியல், குடிமை]

பொருள்
இல் - இடம், வீடு, இல்லறம், மனைவி, மருத முல்லைநிலங்களின் தலைவியர், குடி;

பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இற்பிறந்தார்கண் - ஊர் போற்றக்கூடிய உயர்ந்த குடியில் பிறந்ததனால் ஒருவர் 

அல்லது - தீவினை; தவிர

இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

அல்லது இல்லை - உயர்ந்தவராவது இல்லை, மாறாக

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

இயல்பாகச் - இயல்பாக, இயற்கையாக 

செப்பம் - செவ்வை; நடுநிலை; சீர்திருத்தம்; பாதுகாப்பு; செவ்வியவழி; தெரு; நெஞ்சு; மனநிறைவு; ஆயத்தம்.
செப்புதல் - சொல்லுதல்; விடைசொல்லுதல்.

செப்பமும் - செம்மை (Straightness, Correctness, Exactness, Smoothness, Uprightness], நடுநிலை

நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று.

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

ஒருங்கு - ஒரு சேர (ஒன்றாக / ஒருங்கே / ஒருகாலத்திலே இருக்கும்
ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு

ஒருங்குதல் - ஒருபடியாதல்; ஒன்றுகூடுதல்; ஒருவழிப்படல்; ஒதுங்குதல்; ஒடுங்குதல்; அழிதல்.

முழுப்பொருள்
ஒருவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்று ஆகாது. அதாவது ஒருவர் பிறக்கும் குடும்பத்தால் உயர்ந்தவர் என்று ஆகாது. 

உண்மையில், ஒருவர் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருத்தால் வேண்டும். அவ்வாறு கருத்தும் பணிவான இனிய சொல்லும் செயலும் அந்த ஒரு முரண்பாண்டும் இல்லாமல் இருத்தல் வேண்டும். இதுவே செப்பம் எனப்பட்டது.

அதைப்போல் பழி பாவங்களுக்கு அஞ்சி (அச்சப்பட்டு) அதன் மீது அருவருப்புக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே நாணம் எனப்பட்டது.

ஒருவர் செப்பமும்(ஒழுக்கம்,நேர்மை, இனிய சொல், பணிவு)  நாணும் (பழிக்கு அஞ்சி) தம்முள் இயற்கையாக ஒருங்கே (ஒரு சேர) உள்ளது போல தன்னை நடத்துக்கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் இருப்பாயின் அவர் உயர்ந்தவர். உயர்குடி. இல்லையே இல்லை.

ஒப்புமை
”நல்லவை செய்யின் இயல்பாகும்....
......குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ” (நாலடி.144)

பரிமேலழகர் உரை
செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இப்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா. 

விளக்கம் 
('இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல. செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம்; பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செப்பமும் நாணும் ஒருங்கு- ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் ஒருசேர; இல் பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை- குடிப்பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்து இயற்கையாகவாகா.

இங்கு இல் என்றது சேக்கிழார் குடிபோலுஞ் சரவடியை அல்லது சேர சோழ பாண்டியர் குடிபோலுங் கொடிவழியை.

"நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி"
(தொல்.கள.23)

என்பதில் 'இல்' கொடிவழியையும் 'குடி' சரவடியையும், 'பிறப்பு' குடும்பத்தையும், 'சிறப்பு' அரசாளற்குரிமையையும் குறிக்கும். செப்பமாவது கருத்து சொல் செயலாகிய முக்கரணமும் தம்முள் முரணாத செம்மை. நாணென்பது பழிபளகம்(பாவம்) பற்றிய அச்சமும் அருவருப்பும் கொண்ட வெட்கம். இவை நல்ல குடிப்பிறந்தார்க்கு இயற்கையாக அமையும். பிறர்க்கு எத்துணைக் கற்பிப்பினும் அமையா.

மணக்குடவர் உரை
உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா. இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது. 

மு.வரதராசனார் உரை
நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை

சாலமன் பாப்பையா உரை
சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

எந்த ஒரு மனிதன், நடுநிலை தவறாமல் நாணயத்தோடு நடக்கிறானோ ? அவன் தான் உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு நாணயம் தவறி, நடுநிலைமையின்றி வாழ்பவன் உயர்ந்த குடியே அன்று. இது தான் திருவள்ளுவர் சொல்ல வந்த கருத்து. பிறப்பால் தாழ்ந்த குடியில் பிறந்தாலும், நேர்மையாக வாழ்பவன் உயர்ந்த குடி தான். இது தான் திருவள்ளுவர் தரும் விளக்கம்.