Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

குறள் 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

உள்ளூர்ப் - ஊர்நடு; சொந்தஊர்; uḷ-ḷ-ūr   n. உள்² +. 1. Heart of atown, interior of a village;

பழுத்தல் - பழமாதல்; முதிர்தல்; மூப்படைதல்; பக்குவமாதல்; கைவருதல்; பருமுதலியனமுற்றுதல்; மனங்கனிதல்; நிறம்மாறுதல்; நன்மையாதல்; செழித்தல்; மிகுதல்; பழுப்புநிறமாதல்; குழைதல்; காரம்முதலியனகொடாமையால்பிள்ளைபெற்றவயிறுபெருத்தல்.

அற்றால்  - (உணவின்) தன்மை அறிந்து

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

படின்படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
ஊரின் நடுவிலே பயன்படுகின்ற மரம் சுவையான பல பழங்களை தருகிறது. சில மரங்கள் நிழலைத்தருகிறது. சில சமயம் இந்த மரத்தை விரும்பாதவர்கள் கூட அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறுவார் அல்லது அம்மரங்களின் கனிகளை உண்ணுவார். பசியுள்ளவர்களுக்கு இந்த மரம் மிகவும் பயனுள்ளதாய் அமையும். ஆதலால் இந்த மரத்தை எல்லோரும் விரும்புவர்.

அதேப்போல எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒப்புரவாளனிடம்  வந்து சேரும் செல்வம் எல்லா மக்களும் குறிப்பாக தேவையுள்ளவர்களுக்கு எல்லா காலமும் பயன்படும்.

நீர் எப்படி அத்தியாவசியம் அதுபோல பழங்கள் ஆடம்பரம் எனலாம். ஆனால் சில சமயம் ஒப்புரவாளன் சில ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக ஊரிலே திருவிழா, அதில் கரகாட்டம், மயிலாட்டம் போன்று நிகழ்ச்சி நடக்கும். அதனை நடத்த செல்வம் வேண்டும். இல்லையெனில் ஊர் வறட்சியை அனுபவிக்கும்.  வாழ்வதற்கான அடையாளம் என்பது திருவிழா. மகிழ்ச்சியாக இருப்பது. இது இல்லாவிட்டால் வாழ்வில் சுவையில்லாமல் போகி விடும். இது சமூதாயத்தை உற்சாகப்படுத்தும். வாழ்வின் லட்சணமாக அமையும்.

இதேபோன்று பழுத்தமரம் பயனாகுதலை கம்பராமாயண மந்திரப்படலப்  (82) பாடல் வரியொன்று இவ்வாறு கூறுகிறது: “பார்கெழு பழுமரம் பழுத்தற்றாகவும்”.

நாலடியார் பாடல்கள், இப்பாடலின் கருத்தினையொட்டி கூறும் பாடல் வரிகளாவன:
“நடுஊருள் வேதிகைச் சுற்றுகோள் புக்க படுபனையன்னர் பலர் நச்ச வாழ்வார்” (நாலடி 96).
“துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் உழைத்தங்கண் சென்றார்க்கு ஒருங்கு” (நாலடி 167)
“பழுமரம்போல் பல்லார் பயந்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன்”(நாலடி 202)
பழமென்ற உவமை, துய்க்கக்கூடியதும், இனிமையானதும், உடலுக்குப் பயனாவது போன்ற குணத்தை உடையதுமாகையால்.  பொதுவிடம் பழுத்த மரம் என்றது, ஒப்புரவு ஒழுகுவாரின் செல்வத்தைப் போன்று எல்லோருக்குமே உரிமையானது, கிடைக்கக்கூடியதுமாம்.

”முன்னூர்ப் பழுனிய கோளியா லத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும்” (புறநா 254.7:9)

“ஞால நல்லறத்தோர் உண்ணும் பொருள்
போல நின்று பொலிவது பூம்பொழில்
சீல மங்கை வாயெனத் தீங்கினி
காலமின்றிக் கனிவது காண்டிரால்” (கம்ப.நாடவிட்ட.18)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பயன்படுமரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும்: பிறரால் விரும்பப்படுவான்மாட்டுச் செல்வ முண்டாயின். இது வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
When a business organization keeps giving back to the society in which that exists and operates, the organization will keep getting a lot of support from the society to give back to the society again. The more an organization gives, the more it gets back in turn. The practice becomes a virtuous cycle.

Valluvar resorts to yet another simile to support his recommendations. The wealth, as explained in Kural 216, with a benevolent person is like a tree that is full of rich and ripe fruits. The tree will be beneficial to others as it is located in the middle of a village.

The wealth of a liberal man
Is a village tree fruit-laden.

A socially responsible person keeps getting more and more resources so that he can distribute that to the people around him. Similarly, an organization that continues to serve the society keeps prospering to give back to the society further.

No comments:

Post a Comment