A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.
Search This Blog
Disclaimar
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்
தீப் - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.
பால - தரக்கூடியவற்றை
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
பிறர் - Outsiders, strangers;அன்னியர்.; அயலார்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
அற்க - வேண்டாம்
செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்
நோய்ப் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.
பால - விளையும்
தன்னை - தன்னைப் பற்றி; தான்; தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
அடல் - வலிமை; வெற்றி போர் கொலை பகை மீன்வகை.
வேண்டாதான் - வேண்டாதவன்
முழுப்பொருள்
பகை, கொலை, துன்பம் ஆகியவற்றை நோயென கருதி அவற்றை விரும்பாதவன், பிறருக்கு தீயச்செயல்களை தீது விளைவிக்கும் செயல்களை செய்யக்கூடாது. ஏனெனில் நீ பிறருக்கு செய்த தீச்செயல் உண்மையிலேயே தீவினை. அத்தீவினை உன்னை வந்து தாக்கும். ஆதலால் உன்னை தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் பிறருக்கு தீயவற்றை செய்யாதே.
நீ ஒன்றை அருவருத்தால் அதனை மற்றவர்களுக்கு கொடுக்காதே. நீ பிறருக்கு ஒன்றை கொடுத்தால் அதனை பிறர் உனக்கு கொடுக்க நேரிடும். அதனை ஏற்க ஆயுத்தமாக இருக்கு.
தமக்கு துன்பம் வரும் என்ற சுயநல காரணத்துக்காகவாவது, பிறருக்குத் தீமை செய்யாதே.
கலித்தொகைப் பாடல் : “ஈதலின் குறைவு காட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல” என்று கூறும். அறனறிந்து ஒழுகிய தீதிலான் என்று சொல்வதோடு நில்லாமல், அதனால் வருவது செல்வம் என்றதனால் அதுவே தீவினையற்று இருத்தலுக்கு ஒரு ஊக்கியாகிறது. அதேபோல, தீவினை செய்வதால் துன்பம் வரும் என்பதால் தீவினை விலக்கலுக்கு ஊக்கியாகிறது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.).
மணக்குடவர் உரை
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.
மு.வரதராசனார் உரை
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து
இலன் - இல்லை; இல்லாதவன்
தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.
அற்க - வேண்டாம்
செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்
செய்யின் - மீறி செய்தால்
இலன் - இல்லை; இல்லாதவன்
ஆகும் - நடக்கும்; ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்
மற்றும் - மேலும்; மீண்டும்.
பெயர்த்து - பின்னும்
பெயர்த்தல் - போக்குதல்; நிலைமாறச்செய்தல்; அப்புறப்படுத்துதல்; திருப்பிப்போடுதல்; பிடுங்கல்; கெடுத்தல்; ஒடுங்கிக்கொள்ளுதல்; பிரித்தல்; மீட்குதல்; வசூலித்தல்; செலுத்துதல்; விடுத்தல்.
முழுப்பொருள்
நீ வறுமையில் இருக்கிறாய் என்பதற்காக வறுமையை போக்கப் பிறருக்குத் தீயனவற்றைச் செய்யாதே. அப்படித் தீயனவற்றைச் செய்தால் நீ இன்னும் வறுமையாகிவிடுவாய்.
உதாரணமாக நீ செல்வத்தில் வறுமையாக இருந்தாலும் உன்னுடன் உன் கல்வி, உறவினர்கள் மதிப்பு என்று மற்ற செல்வங்கள் இருக்கும். ஆனால் நீ தீயவற்றை பிறருக்கு செய்தால் உன் கல்வியும் உறவினர்களும் என்று மற்ற செல்வங்களும் உன்னைவிட்டுப்போய் நீ மேலும் வறுமையில் சிக்கீத் தவிப்பாய். வரும் பிறவிகளிலும் நீ வறுமையில் தவிப்பாய். சென்றப்பிறவியில் செய்த தீவினைக்காகத் தான் இந்த பிறவியில் கஷ்டப்படுகிறாய். ஆதலால் இப்பிறவியிலும் தீவினை செய்து அடுத்தபிறவியிலும் கஷ்டப்படாதே.
குற்றம் செய்கின்றவர்கள் குற்றம் செய்வதற்கு ஒரு சப்பைக்கட்டு காரணம் வைத்திருப்பர் (உதாரணமாக மறந்து செய்துவிட்டேன், கோபத்தில் செய்துவிட்டேன், அவன் செய்ததால் நானும் செய்தேன், வறுமையில் செய்துவிட்டேன், வீட்டில் கஷ்டம்). இக்காரணங்கள் எல்லாம் பொய். கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தாங்கினால் தான் தருமம் பழக முடியும். சிலர் நினைப்பதுபோல் தருமம் தானாக வந்து மடியில் விழாது. ஆனால் தருமம் என்பது பல பிறவிகளுக்கு வந்து உன்னை காக்கப்போகிறது. உனக்கு துணைவரப்போகிற தருமத்திற்காக நீ கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும். ஆதலால் வறுமை வந்துவிட்டது என்று தயவு செய்து பிழை செய்யாதே.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.
மு.வரதராசனார் உரை
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
சாலமன் பாப்பையா உரை
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
அறிவினுள் எல்லாந் தலையென்ப
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
அறிவினுள் - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
எல்லாம் - முழுதும்
தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
என்ப - என்று சொல்லப்படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல்.
தீய - தீமையான; போலியான.
செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்.
செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்
செறுதொழில் - தீச்செயல்.
செறுவார்க்கும் - தீச்செயலை செய்வார்க்கும்
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்யா - இயற்றாமல் இருத்தல்
விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9); ஊற்றுகை (Pouring); குற்றம்.
முழுப்பொருள்
நாம் பெறக்கூடிய அறிவென்பது இவ்வுலகில் பல. ஆனால் அவற்றினுள் எல்லாம் சிறந்தது எது தெரியுமா? நமக்கு தீயவற்றை செய்யும் பகைவர்க்குக்கூட தீயவற்றை கெடுதலை செய்யாது இருத்தல்.
ஏன் பகைவர்க்குக்கூட என்று சொல்ல வேண்டும் ? பகைவரிடம் தான் நமக்கு உச்சகட்ட கோவம் வரும். ஆனால் அவருக்கு கூட நாம் கெடுதல் செய்யக்கூடாது என்றால் நமது நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது நமக்கு தீயது செய்தால் நாம் அதை மறந்து கடந்து செல்வதே சிறந்தது என்பதை சொல்லாமல் சொல்கிறார். நண்பரும் உறவினரும் பகைவராய் மாறினால்க்கூட இக்குறள் பொருந்தும் யார்க்கும் தீது செய்யாதே என்று.
ஏன் அறிவினுள் எல்லாம் சிறந்தது இது? ஏனெனில் பிறருக்கு தீயவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டால் அது நமது நிம்மதியை சிதைத்துவிடும். அதுப்போல தீது நமக்கு வேறேதும் இல்லை. ஆதலால் பிறருக்கு (அவர் நமக்கு தீது செய்யும் பகைவரானாலும்க்கூட) தீது செய்யக்கூடாது என்பதே நாம் பெறக்கூடிய அறிவினுள் எல்லாம் சிறந்தது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.
மு.வரதராசனார் உரை
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்பது பாவச்செயல், கொடுஞ்செயல். அதனை செய்வது தீவழிபாடு ஆகும். அதன் ஊற்றுக்கண் என்பது செருக்கு. அதாவது அகங்காரம் ஆகும். நான் என்னும் அகங்காரம். நம்மை யாரும் எதுவும் கேட்க முடியாது, நாம் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற அகங்காரம் ஆகும்.
அத்தகைய அகங்காரத்தையும் தீவினைகளையும் கண்டு அதனை செய்யவும் அஞ்சுவார்கள் உயர்ந்த பண்புகளையும் மாண்புகளையும் உடைய சான்றோர்களும் பெரியோர்களும். ஆனால் தீவினை செய்பவர்கள் தீவினையை கண்டு அஞ்சமாட்டார்கள்.
தீவினைகளை அஞ்சுவதால் அவர்கள் அகங்காரம் தன்னை அண்ட விடாமால், தீவினை செய்யாமல் உயர்கிறார்கள். அதனாலே அவர்கள் விழுமியார்.
தன்னைத்தான் காதல னாயின்
தன்னைத், தான் - சுயம்
துன் - துர் - tur a prefix signiffing difficult, bad, evil, ill (opp. to சற், சன்). Before a consonant the ர் is often changed into a homogeneous letter (as in துஷ் கிருத்தியம், துன்மார்க்கம்,; துன்னாற்றம்).
ur
துன் - s. A prefix used in combination signifying evil, ill, bad, deficient; it is often changed to ற், before the hard let ters, to ன் before the soft, as துன்மார்க்கம். Before இடையினம், there is no change. Sometimes ர் is dropped and the relative letter takes its place--as துச்சரிதம், ஒருபசர்க் கை. (See துஷ்.) W. p. 414. DUR.
பால் - குழவி, குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப் பொருள்; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற்பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ்; பிரித்துக் கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு; இடையர் குறும்பர்களின் வகை.
ஆனால் நம்மை நாம் அவ்வளவு எளிதாக உயர்வாக எண்ணிக்கொள்வது இல்லை. ஆதலால் நாம் நம்மை காதலிப்பது இல்லை. ஏன் என்றால் நமக்கு தெரியும் நாம் செய்த தவறுகள் எண்ணவென்று. ஆதலால் நம்மை நாம் அவ்வளவு நேசிப்பதில்லை.
நம்மை நாம் நேசிக்கவேண்டும் என்றால் நம்மை பற்றிய உயர்வான எண்ணங்களே நம்மிடம் இருக்க வேண்டும். நம்மை பற்றிய கீழ்மைகள் நம்மிடம் இருக்க கூடாது. கீழ்மை செய்தால் தான் கீழ்மையான எண்ணங்கள் வரும். ஆதலால், தன்னை தான் நேசித்துக்கொள்வதற்கு தனக்கும் சரி பிறர்க்கும் சரி துன்பம் தரும் செயல்களை சிறிதளவாயினும் ஒருபொழுதும் செய்யக்கூடாது. தனக்கு தன்பம் தருவது என்பது உடலை பேணானது, மனதை பேணானது, எண்ணங்களை பேணாதது, நேரத்தை போற்றிப் பேணாதது, ஒழுக்கத்தைப் பேணாதது, அறத்தை பேணாதது, அடக்கத்தைப் பேணாதது என்று பலவற்றை சொல்லலாம். பிறர்க்கு தீங்கு என்பது உடல் முதல் மனம் வரை செய்யப்படும் தீங்கு பலவற்றை சொல்லலாம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க
தீயவை தீய பயத்தலால் தீயவை
குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
[அறத்துப்பால்ம, இல்லறவியல், தீவினையச்சம்]
பொருள்
தீயவை – தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.
தீய – தீமையான; போலியான
பயத்தலால் – பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.
தீயவை – தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.
தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.
தீயினும் – சுட்டு பொசுக்கி நீராக்கிவிடும் வெந்தீயைக் காட்டிலும் கொடியதாகச் சுடுமென
அஞ்சுதல் - பயப்படுதல்
அஞ்சப்படும் – பயப்படப்படும்
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தீமை பயக்கும் செயல்கள் பழிச் செயல் என்றும் பாவம் என்றும் வழங்கப்படுகின்றன. செயல்கள் எதிலும் தீமை என்பது இல்லை. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றால் எண்ணம், சொல், செயல்கள், ஆகிய மூன்றுவகை வினைகளை ஆற்றுகிறோம். எந்த வினையானாலும் தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும் பிற்காலத்திலும், உடலுக்கும், மனத்துக்கும் துன்பம் எழாதபடி அளவோடும் முறையோடும் காத்துக் கொண்டால், அதுவே அறவழியாகும், நல்வினைகள் ஆகும். அவ்வாறன்றி நமது செயல் தனக்கோ பிறர்க்கோ, உடலுக்கோ மனத்துக்கோ துன்பம் விளைக்குமேயானால் அதுவே பழிச்செயல். இத்தகைய தீய செயல்கள்தான் துன்பத்தை விளைவித்து இறைஞானம் பெறுவதைத் தடை செய்கிறது. தீயைக் கண்டு எவ்வாறு அஞ்சியும், ஒதுங்கியும் நிற்கிறோமோ அதுபோல தீய விளைவுகளையும் கண்டு அஞ்சிச் செயலாற்றி நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று கூறுகிறது இந்தக் குறள்
மேலும்: அஷோக்
ஆத்திச்சூடி
இயல்பு அலாதன செய்யேல்.
அழகு அலாதன செய்யேல்.
கீழ்மை அகற்று
நன்மை கடைப்பிடி
நுண்மை நுகரேல்
தீவினை அகற்று
நைவினை நணுகேல்
குணமது கைவிடேல்
கெடுப்பது ஓழி
கோதாட்டு ஒழி
கௌவை அகற்று
மனம் தடுமாறேல்.
மோகத்தை முனி.
வேண்டி வினை செயேல்.
வெட்டெனப் பேசேல்.
உத்தமனாய் இரு.
வாது முற்கூறேல்.
முனைமுகத்து நில்லேல்.
மூர்க்கரோடு இணங்கேல்.
துன்பத்திற்கு இடம் கொடேல்.
சூது விரும்பேல்
செய்வன திருந்தச் செய்
நிலையில் பிரியேல்
பிழைபடச் சொல்லேல்.
தூக்கி வினை செய்.
சுளிக்கச் சொல்லேல்
கொள்ளை விரும்பேல்
ஞயம்பட உரை
கடிவது மற.
ஔவியம் பேசேல்
இணக்கம் அறிந்து இணங்கு
வஞ்சகம் பேசேல்.
நன்றி அம்மன் தரிசனம்
எனக்கு தர்மம் எதுவென்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் என் மனம் தர்மவழி செல்ல மறுக்கிறது. அதர்மம் எதுவென்று நன்கு அறிந்திருந்தும் என்னால் அதர்மத்தை விட்டு விலக முடியவில்லை. என்னுள் மிகவும் சக்திவாய்ந்த ஏதோவொன்று இருந்துகொண்டு என்னை தர்மத்தைச் செய்யவிடாமலும் அதர்மத்தைச் செய்யும்படியும் தூண்டுகிறது” - என்று துரியோதனன் தன் தீய செயல்களை நியாயப்படுத்துகிறான்.
பாபத்தின் பயன் துன்பம் என்று மனிதன் நன்கு அறிவான். இப்பொழுது ஆற்றும் பாபச்செயல் இன்பமாக இருந்தாலும் இனிய பயனைத் தந்தாலும் பிற்காலத்தில் நிச்சயம் துன்பம் விளைவிக்கும். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது உறுதி. காரியகாரண சம்பந்தம் உடனே வெளிச்சமாகாவிட்டாலும் பாபச்செயலின் விளைவிலிருந்து மனிதன் தப்ப முடியாது. ஏனெனில் ‘அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.’ இயற்கையின் நியதி இதுவே. ஆகையால் தீவினை தவிர்க்கப்படவேண்டும். பாபச் செயல்கள் செய்ய அஞ்சவேண்டும். திருவள்ளுவரும் ‘தீவினையச்சம்’ பற்றி குறிப்பிடுகையில்
தீயினும் அஞ்சப் படும் தீயவை தீய பயத்தலால் தீயவை
என்று கூறுகிறார்.
மாறாக அறம் செய்ய விரும்ப வேண்டும். அறவழி நடப்பவன் பயமறியமாட்டான்.
இதையேதான், ‘அறம் செய விரும்பு’ என்று தன் ஆத்தி சூடியில் முதல்வரியிலேயே சொன்னார் ஔவை மூதாட்டி.
ஆயினும் ஒரு நோயாளி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தும் சபலப்பட்டு தகாத, உடலுக்கு ஒவ்வாத உணவை உண்டு விடுவது போல மனிதன் தெரிந்தே ஏன் தவறு செய்கிறான் என்பது அர்ஜுனனின் கேள்வி.
பரிமேலழகர் உரை
தீயவை தீய பயத்தலான்-தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்; தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.
விளக்கம்
(பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம்.
தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.
மணக்குடவர் உரை
தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.
மு.வரதராசனார் உரை
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
சாலமன் பாப்பையா உரை
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தீமை தீயினும் கொடிது என்பதால் செய்யாதே.
வ.உ.சிதம்பரனார் உரை
தீயவே தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்
பொருள்: தீய தீயவே பயத்தலால் - தீ வினைகள் தீய பயன்களையே விளைத்தலால், தீயவை தீயினும் அஞ்ச படும்-(ஒருவன்) தீய வினைகளைத் தீயினும் மிக அஞ்ச வேண்டும்.
அகலம்: தீயானது தீயவும் நல்லவும் பயத்தலானும், தீய வினை தீயவே பயத்தலானும், தீய வினைகளைத் தீயினும் அஞ்ச வேண்டும் என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘தீயவை தீய’. அது பிழைபட்ட பாடம், ‘ஏ’ இன்றியமை யாத தாகலான்.
நன்றி: Moving Moon
உலகினில் வாழும் எவ்வோர்
.. உயிர்க்குமே உதவா வண்ணம்
நலமெலாம் அழிக்கும் தீதால்
.. நன்மைகள் கிடையா தென்றும்;
பலவித அழிவைத் தூண்டும்
.. பண்பிலார் செய்தீஞ் செய்கை
அலைதழல் தீயின் மேலாய்
.. அளவிலா அச்சம் சேர்க்கும்
நன்று: தமிழர் வாழ்வியல் கருவூலம்
தனக்கு இன்பம் தரும் என்று எண்ணி ஒருவன் ஒருவன் செய்யும் தீய செயல்கள் பின் தீமையே தருதலால் அத்தகைய தீயசெயல்கள் நெருப்பைக் காட்டிலும் கொடியன என்று அஞ்சி அவற்றை விலக்க வேண்டும் .
Thirukkural - Management - Values
Be a person of values, as a person is known for and by his values. “Values,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 1319), “are morals or professional standards of behavior, principles.” “Values are relatively permanent desires that seem to be good in themselves,” (Stoner, 1995). Keep away from bad things as indulging in bad things brings more bad things to one's life. Valluvar warns us through Kural 202 that bad things, events or people are feared more than fire as the damage caused by bad things is more dangerous and irreversible. Bad things do more harm or damage than fire. People with values will not do valueless things. So, value people with value more than people without values.
Fear evil more than fire
As sin tends to sin.