Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label இடுக்கணழியாமை. Show all posts
Showing posts with label இடுக்கணழியாமை. Show all posts

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

குறள் 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
 (For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்பத்துள் - இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.

விழையாதான் - விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல்

துன்பத்துள் - துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

இலன் -  இல்லை என்று

முழுப்பொருள்
புலன்களால் வரக்கூடிய சிற்றின்பங்களில் இன்பம் (மன மகிழ்ச்சி) காணாமல் அதனை விரும்பாதாவனுக்கு துன்பங்களில் பெரிய துன்பம் வந்தாலும் மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான். ஏனெனில் ”குறள் 369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்” ஏனெனில் ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், மெய்யான இன்பம் இடைவிடாமல் வரும் என்று முன்னர் வள்ளுவர் கூறியதை பார்த்தோம்.

இன்பம் வாசற்கதவைத் தட்டி அணைத்துக்கொள்ள வந்தபோதும், அதில் திளைத்து, தன்னை இழக்காத தகைமை, “தாமரை இலைத் தண்ணீர்” போன்ற நிலை பகவத்கீதை சொல்லும், “கர்ம யோக” நிலை. கண்ணன் காட்டும், “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்பதை வாழ்வியலாக வாழ்ந்து காட்டும் நிலை. அதையே இக்குறளும் சொல்கிறது

நிஷ்காம்ய கர்ம சித்தர்கள்” தாம் துன்புறும் போது அத்துன்பத்தைப் பாராட்டி துன்புற்றதாக நினைப்பதில்லை. இன்புறும் நிகழ்வுகளிலும் இன்பத்தைப் பாராட்டுவதில்லை. புலன் சார்ந்த இன்ப துன்பங்களைப் பாராட்டாதவர்கள் அத்தகையோர்.

"இடுக்கண் உற்ற மனிதனுக்கு இன்பம் அளிப்பது உழைப்பே" என்பதை அறிக.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.).

மணக்குடவர் உரை
இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன். இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வருந்துன்பத்திறகு அழியாதாரைக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who is detached from happiness and doesn't celebrate the happiness even in a happy/success state, can handle difficult times effectively because he will not dwell in pain nor suffer in pain. He will work on his next step (and come out of the difficult times). A person who can successfully detach for happiness has the potential to detach from pain too

Questions that I ask to the kid
Who can (easily) detach themselves from difficulties, pain, sufferings?

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
 
பொருள்
இன்னாமை - இனியவாகாமை; துன்பம், துயரம் தீமை

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

எனக் - என, என்று

கொளின் - கொண்டால்

ஆகும் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

ஒன்னார் - பகைவர்

விழையும் -  விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.

சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

முழுப்பொருள்
துன்பத்தை இன்பம் என்று கொள்ளும் மனப்பக்குவம் ஒருவருக்கு அமையும் என்றால் அவரை அவருடைய பகைவர் கூட மதிக்ககூடிய மதிப்புமிக்கவராக பெருமையுடையவராக கருதுவார்.

துன்பமும் துயரமும் வந்தால் ஓடிவிடாமல் சோர்ந்துவிடாமல் தனக்கு வந்த துன்பத்தை ஒரு சோதனையாக கருதி அச்சோதனையை இன்பமென கருதி அத்துன்பத்துடன் போறாடும் குணம் உடையவர் உண்மையில் வலிமையானவர். வலிமையான எவரையும் பகைவர்க்கூட போற்றுவர். 

அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.

தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெரு நாய்களைப் போல் நாமாகிவிடகூடாது. இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்க கூடாது. 

பிறர் துன்பத்தில் இன்பம் காணுபவர்கள் நிறைந்த உலகம் இது. இதில் தம்முடைய துன்பத்தை இன்பமாகக் கருதுபவரைப்பற்றிய குறளிது.

பொறையுடைமை அதிகாரத்தில் ஏற்கனவே படித்துள்ள ஒரு குறளை நினைவு கூர்தல் நல்லது. அக்குறள்: “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரை பொன்போற் பொதிந்து”. யார் எத்தகு துன்பம் வந்தாலும் பொறுத்திருப்பர்? பொறையுடைமை, அதாவது பொறுமை உள்ளவர்களை, பகைவர்க்கும் அருளும் நன்னெஞ்சினரை எல்லோரும் போற்றுவர்; தண்டிப்பவரை அவ்வாறு செய்யார் என்பதே அக்குறள் சொல்வது

“கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயம்” என்னும் அப்பர் பாடல் கூட அவருக்கு நமச்சிவாயத்தில் இருக்கும் நம்பிக்கையைக் காட்டினாலும், அவர் அதை துன்பமாக உணர்ந்ததைத்தான் காட்டுகிறது. “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் முன்பு சொன்னதும் இதைக் குறித்துதான்.

இன்பம் என்பதெல்லாம் துன்பம் என்ற தத்துவத்தின் மறுபக்கம்தான் துன்பமும் இன்பமே என்ற மனப்பாங்கும், இதுவும் கடந்து போம் என்னும் விலகி நின்று வாழ்க்கை நிகழ்வுகள் இரசித்து இன்புறுவதும். சொல்வது எளிது, கைக்கொள்ளுதல் கடினம். இக்குறளே கூட, துன்பம் என்று உணர்ந்ததை முதலில் சொல்லுகிறது, பின்னர் அதை இன்பமாகக் கொள்வதைக் கூறுகிறது. துன்பம் என்று உணர்ந்த நொடியே இன்பம் இல்லாமல் போகிறதே!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம். (துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின் அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம். மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.

மு.வரதராசனார் உரை
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

குறள் 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
 
பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.

விழையான் - விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல்

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

என்பான் - என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன்.

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை

உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

இலன் -  இல்லை என்று

முழுப்பொருள்
புலன்களுக்கு வரும் இன்பதை விரும்பாதவன் இன்பங்கள் மேல் நாட்டம் இல்லாதவன். அவன் துன்பங்களை இயல்பென நினைப்பான். அத்தகையவனை துன்பங்கள் வருத்த முடியாது. ஆதலால் அவனுக்கு துன்பம் இல்லை. 

இன்பங்களை விழைகிறவன் இன்பத்தின் ருசியை அறிந்தவன், அதற்கு பழக்கபட்டவன். இன்பத்தில் சுகமாய் திளைத்திருப்பான். ஆதலால் துன்பங்களை விரும்பமாட்டான். இன்பம் மெய்யானது இல்லை. இன்பம் நிலையானது இல்லை. ஆதலால் இன்பதை விழையாதே. துன்பமே நிலையானது. அதுவே இயல்பு என்று நினைத்தால் துன்பம் உன்னை வருத்தாது. 

உனக்கு துன்பம் வேண்டாமா? துன்பமே இயல்பென நினைத்து இன்பதை விழையாதே. இன்பத்தை விழைந்தால் துன்பம் உன்னை வருத்தும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

ஏழைகள் பலர் எத்தகைய வறுமையிலும் சோர்வுற்று இருப்பதில்லை ஏனெனில் அவர்கள் துன்பத்தை இயல்பென கருதியவர்கள். ஆனால் வசதிப்பெற்றவர்கள் அவர்களுக்கு ஒரு வசதி இல்லையென்றால் துன்பப்படுவர் வருத்தப்படுவர். 

"இடுக்கண் உற்ற மனிதனுக்கு இன்பம் அளிப்பது உழைப்பே" என்பதை அறிக.

”துன்பம் இல்லாத நிலையே சக்தி”. துன்பம் இல்லை என்றால் சோர்வில்லாமல் சக்தியுடன் வினையாற்றலாம். வினையாற்றினால் பலன் உண்டு.

வேண்டும் வேண்டாமை என்று இல்லை என்றால் இன்பம் வேண்டாம் துன்பம் வேண்டாம் என்று வேண்டாம்  என்ற சமநிலை கொண்டோர்க்கும் என்றும் துன்பம் இல்லை என்றும் குறள் 4-க்கு பொருள் கொள்ளலாம். 

மற்றொரு தொன்மொழியாம் தேவநாகரியில் “ஸ்திதப் ப்ரக்ஞன்” என்னும் சொல், இன்பமும் துன்பம் இரண்டையும் ஒன்றெனவே எண்ணும் திட சித்தத்தினரைக் குறிக்கும். அத்தகையவர்களைப் பற்றியதே இக்குறள். ஆதி சங்கரர் எழுதிய பஜகோவிந்தத் துதியில் 

“சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி” 

என்னும் பாடல் இங்கே நினைவு கூறத் தக்கது. நல்ல ஆன்றோர், சான்றோர்களின் சேர்க்கையினால், வாழ்வின் தத்துவங்களில் உள்ள ஐயங்கள் முற்றிலும் நீங்கும்; ஐயங்கள் நீங்கினால் ஆசைகளும், பற்றுகளும் நீங்கும்; ஆசைகளும், அதனாம் வரும் பற்றுகளும் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம். இத்தகைய யோகநிலையினருக்கு, இன்ப துன்பங்கள் என்ற பாகுபாடுகள் ஏதுமில்லை.

ஒப்புமை
“இன்பம்ம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்கை” (சுந்தரர். எதிகொள்பாடி. 8.)
“அல்லலும் உள இன்பம் அணுகலும் உளவன்றோ” (கம்ப. வனம்புகு. 27)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.).

மணக்குடவர் உரை
இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

சாலமன் பாப்பையா உரை
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

குறள் 627
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இலக்கம் - விளக்கம்; குறிப்பொருள்; நூறாயிரம் எண் எண்குறி; இலக்கு காணுதல்

உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி

இடும்பைக்கு - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்

கலக்கத்தைக் - கலக்கம் - கலங்குகை; மனக்குழப்பம்; துன்பம்; அச்சம்; புத்தித்தெளிவின்மை; அழுகை; ஆரவாரம்.

கையாறாக் - துன்பம் என 
கையாறு - செயலொழிதல்; ஒழுக்கநெறி; துன்பம்.
கையாற்று-தல் - kai-y-āṟṟu-   v. tr. Caus.of கையாறு-. To give or offer relief, as by asubstitute; உதவிசெய்து இளைப்பாறச் செய்தல் Loc.  

கொள்ளாதாம் - கருத மாட்டார் 

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

முழுப்பொருள்
இவ்வுடம்பு நிலையில்லாதது. உடலும் மனமும் வேறு வேறு. பொய் உடம்பு ஒருநாள் அழியப்போவது உறுதி. இதனை அறிந்து தெளிந்த சான்றோர்கள் /அறிவுடையோர் உடம்பிற்கு ஒரு துன்பம் (நோய்) வந்தால் அத்துன்பத்தை துன்பமென கருதமாட்டார்கள். உடலிற்கு வந்த துன்பத்தை உள்ளத்திற்கு கடத்த மாட்டார்கள் ஏனெனில் உள்ளத்திற்கு கடத்தினால் அது உள்ளத்திற்கு மனநோயாக மாறிவிடும். மனநோய் உடலழிவை விரைவுபடுத்தும் அதிக துன்பமும் தரும். 

அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.

பொய் உடம்பு என்றாலும், உடலிற்கு ஒரு இழப்பு வந்தால் அதனை இயற்கையான நல்ல நிலைக்கு திரும்ப எடுத்துச்செல்வது என்பது கடினமான காரியம். அப்படி இருக்கையில், ஒருவன் உடம்பின் துன்பத்தையே துன்பமாக கருதவில்லை என்றால், பின்பு மற்றவையெல்லாம் துன்பமே இல்லை என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது இன்னும் எளிது.

மேலும்: அஷோக் உரை

நாம் துன்பத்தில் இருக்கும் பொழுது நாம் பற்றிக்கொள்ள ஏதாவது ஒன்று போதும். அதைப்பற்றி எழுத்தாளர் போகன் சங்கர் முகநூலில் ஒரு பதிவிட்டு இருந்தார். அது கீழே
எதையாவது பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இருள் ஒரு ராட்சத மிருகம் போல் உங்களை சூழ்ந்துகொள்கையில் பற்றிக்கொள்ள கவிதை போல் வலுவானது எதுவும் இல்லை. கவிதைக்கும் பிற இலக்கிய வடிவங்களுக்குமுள்ள வித்தியாசம் இதுதான்.
கவிதை, எல்லா விளக்குகளும் விண்மீன்களும் மத நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் அணைக்கப்பட்டபிறகும் மிச்சமிருக்கும் ஒளி.
நான் திருஞான சம்பந்தரின் பாடலைப் பற்றிக்கொண்டேன் இன்று.
"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை"
-- போகன் சங்கர்

வலியைப்பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய். வலியைத் தாங்கமுடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்கமுடியும். அதை உணர உணரத்தான் சித்ரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படிக் கடுமையாக ஆவதிலிருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது. 

இதோ என்னைப்போல. நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்… அந்த வெற்றியுணர்வு என்னைப் பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று

முதுமையில் பார்கின்ஸன் நோயால் அவதிப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் நடுங்கும் கைகளால் ஒற்றைவிரலால் தட்டச்சிட்டு நூல்களை எழுதினார். பார்க்கின்ஸன் நோய் பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கையில் உயிர்துறந்தார்.

நான் அறிந்த மகத்தான் பெண்மணிகள் எனில் அது வானவன் மாதேவி மற்றும் வல்லபி என்பேன். அவர்கள் தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்டவர்கள். ஆனால் அவர்கள் ஆற்றிய பணி அரும்பணி. அவர்களை பற்றி ஜெயமோகன் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஒரு உரையில் பேசியுள்ளார். அவை கீழே.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து எடுத்த ஒரு பகுதி உரைநடையாக [குறளிது - நாள் 3 பகுதி 1 @ 44:35 to 48:00]

வானவன் மாதேவி அவர்கள் (2017 ஜனவரியில் இறந்தார்கள்) தசைச்சிதைவு நோயால் பல நாட்கள் அவதிப்பட்டு இறந்துப்போனார்கள்.  ”நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்”. இந்த நாள் தான் மறுநாள் என்று ஒன்றுபோல் காட்டி உயிரை வெட்டிச் செல்லும் வாள் அது உணர்வார் பெறின். அதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் உங்களுடைய உயிரை கொஞ்சம் வெட்டி எடுக்கக் கூடிய ஒரு வாள் அது. நமது ஊர்களில் ஒரு பெரிய வெல்லம் (jaggery) மனையினை வைத்து இருப்பார்கள் குறிப்பாக திருச்செந்தூர் திருவிழாவில். ஒரு நல்ல (nice or soft) வாளினால் அதனை சீவி (வெட்டி) கொடுப்பார்கள் (ஒரு பைசா/ரூபாய் இரண்டு பைசா/ரூபாய் என்று விற்பார்கள். பையன்கள் விளையாட்டாக வாங்கி சாப்பிடுவார்கள்). அந்த வாள் போன்று ஒவ்வொரு நாளும் நீங்கள் கொண்ட உயிர் என்ற வெல்ல கட்டியை சீவி சீவி எடுக்கிறது அந்த வாள்.

(நாள் என ஒன்று) நிகழ்வதே தெரியாமல் ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் உணர்வார் பெறின். பெரும்பாலானவர்கள் அதனை உணர்வது இல்லை. தருமன் யக்ஷனை சந்திக்கும் பொழுது யக்ஷன் கேட்கிறான், இப்பூமியில் மாபெரும் அதிசயம் என்பது என்ன? ஒவ்வொரு நாளும் மானிடர் இறந்துக்கொண்டு இருந்தாலும் நான் மட்டும் கடைசிவரைக்கும் வாழ்வேன் என்று ஒவ்வொருவரும் நினைப்பது போல மகத்தான விந்தையான ஏதும் பூமியில் இல்லை என்று தருமன் பதில் சொல்கிறான். சரியான பதில் என்று யக்ஷன் ஒத்துக்கொள்கிறான்.

(எனக்கு தெரிந்த வரையில் எனக்கு தெரிந்த நபர்களில்/நண்பர்களில்) வானவன் மாதேவி அளவிற்கு அறத்தின் பொருட்டென வாழ்ந்த என்றும் பிறர்க்கென வாழ்ந்த யாரும் கிடையாது. தன் துயரை பிறர் மகழிச்சிக்கென மாற்றிக்கொண்டு வாழ்ந்தார்கள்.  ஏன் அவர்களுக்கு அத்தகைய வாழ்க்கை வாய்த்தது? அவ்வளவு மகத்தான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நிறைவை அடைய முடிந்தது என்றால் அதற்கு காரணம் நாட்கள் எண்ணி தரப்பட்டு இருக்கின்றன என்ற எண்ணம் வானவன் மாதேவி அவர்களுக்கு வந்தது. வானவன் மாதேவி வளரும் பருவத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறார்கள். உயர்நிலை பள்ளியில் கால் தடுக்கி ஒரு நாள் கீழ் விழுகிறார்கள். ஐந்துமுறை கால் தடுக்கும் பொழுது கால் கொஞ்சம் வளைகிறது.  ஒரு மருத்துவர் சொல்கிறார் இது தசைச்சிதைவு நோய். அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள்.

ஐந்து ஆண்டுகள் என்று தெரிந்த உடனே வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களுக்கு பொருள் இல்லாமல் போய்விடுகிறது. சொத்து சேர்க்க வேண்டியதில்லை, பிள்ளைகளை கரைசேர்க்க தேவையில்லை, பேர குழந்தைக்கு கல்யாணம் செய்துவைக்கத் தேவையில்லை.

ஐந்து ஆண்டுகள் தான். அந்த ஐந்து ஆண்டுகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் முக்கியமாகிவிடுகிறது. ஒரு கணம் கூட தனக்கென முக்கியமாகபடவில்லை (வானவன் மாதேவிக்கு). அவ்வளவு மகத்தான வாழ்க்கை அமைய காரணம் நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளினை  (தசையிருக்க நோயை / ஐந்து ஆண்டு என்று) கண்ணால் அவர்கள் பார்த்தது தான்.

திருக்குறளைப் போன்ற ஒரு நூலை படிக்கும் பொழுது யாக்கை (உடம்பு) நிலையாமை பற்றிய அதிகாரத்தை பார்க்கிறோம். என்ன இது ஒரே பண்டார(ம்) தனமாய் இருக்கிறது என்று நமக்கு தோன்றும். ஆனால் வாழ்க்கையை கொண்டாடுவதற்கும்  வாழ்க்கைய அனுபவிப்பதற்கும் வாழ்க்கையை வகுத்துக்கொள்வதற்கும் தான் நாம் நூல்களை (பொதுவாக) படிக்கிறோம்.. இதெல்லாம் கோப்பலங்கள், எல்லாம் அழிந்துப்போய்விடும் என்று ஒருவர் சொல்லும் பொழுது, அதான் தெரிந்ததே வேறு விஷயம் சொல்லு என்று நாம் சொல்வோம்.

ஆனால் இந்த வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த வாள் அதன் நிழல் நம் தலைக்கு மேல் அவ்வப்போது கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. நாம் அனைவரும் செய்யாத ஒன்றை (வானவன் மாதேவி) அவர்களால் செய்ய முடிகிறது என்றால் அதற்கு காரணம் அதனை அவர்கள் உணர்ந்ததனால் தான்.

வானவன் மாதேவி பற்றி
1) வானம்
2) மகத்தான சந்திப்பு
3) அஞ்சலி : வானவன் மாதேவி
4) வானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா
5) வானதி- நினைவுகளினூடாக…
6) நம்பிக்கை மனுஷிகள்  -- காணொளி
7) என் வாழ்வில் ஒரு முக்கிய சந்திப்பு
8) Care for the Future

(குறும்படம் - காணொளி)

பரிமேலழகர் உரை
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று - நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் - தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார். (ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர். காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல், இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினர். இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

சாலமன் பாப்பையா உரை
உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

English Meaning - As I taught a kid - Rajesh
This body is fragile and temporary. Body is false and it would decease one day for sure. The knowledgeable and strong person who has realized that will not take any pain in body or a disease to their mind/heart. Because worrying about physical health will lead to imbalance of mental health which reflect in their work and life as well. 

Questions that I ask to the kid
Should we dwell in pain for any injuries to our physical body? Why?

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

குறள் 625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]

பொருள்
அடுக்கு - அடுக்கப்பட்டது; ஒழுங்கு வரிசை அடுக்குச்சொல்.
அடுக்கி - அடுக்குதல் - அடுக்கல்; ஒன்றன்மேல்ஒன்றாகவைத்தல்; வரிசைப்படவைத்தல்.

வரினும்  - வரிதல் - எழுதுதல்; ஓவியந்தீட்டுதல்; பூசுதல்; மூடுதல்; கட்டுதல்.

அழிவு - கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக

இலான் - இல்லாதவன்

உற்ற - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.

இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம்பட வரும் இரக்கம்; துன்பம் வறுமை

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
வரிசையாக ஒன்றின்பின் ஒன்றாக துன்பங்களும் சோதனைகளும் ஒருவனுக்கு வாழ்வில் வந்தாலும் அதனால் துவண்டு மனஉறுதிக்குன்றாது அடுத்த செயலில் வெற்றிபெற முயற்சித்துக்கொண்டிருப்பவருக்கு துன்பம் வராது. துன்பமே இவனுக்கு தொடர்ந்து துன்பம் கொடுத்து இவனிடம் வெற்றிபெறாது துன்பப்படும்.

தொடர்ந்து நாம் சோதிக்கப்பட்டால் நாம் தொடர்ந்து வலிமையடைய வாய்ப்புகள் உள்ளது என்று பொருள்.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கன்னியாகுமரி நாவலில் வரும் கதாபாத்திரம் விமலா. விமலா கற்பழிக்கபடுகிறாள். அது அவளுக்கு ஒரு துன்பம் என்பதில் ஐயமில்லை. அவள் தன் தந்தையிடம் கூறுகிறாள். அது அவள் தந்தைக்கு ஒரு பிர்ச்சனையில்லை. உலகத்திடம் (சுற்றத்தார், உறவினர்களிடம் மட்ட்டும்) தெரியாதாவாரு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார். மற்றபடி தந்தை விமலாவிடன் கூறுவது நான் உன்னை ஒரு விஞ்ஞானியாக தான் பார்க்க விழைகிறேன். ஆக இந்தக் கற்பழிப்பு தன் கணவருக்கு மட்டுமே யோசிக்க வேண்டிய ஒன்று. மற்றவர்கள் பற்றிக் கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கிறாள். விமலா மேன்மேலும் படித்து விஞ்ஞானியாகிறாள். துன்பத்தை ஒரு சிறிய கோடாக ஆக்க வேண்டும் என்றால் அதை விட விட மிக மிக பெரிய ஒரு வெற்றியை அடைவதே ஒரே வழி. அதாவது துன்பத்தை கடக்க வெற்றியை ஈட்டுவதே வழி.

அதே நாவலில் விமலாவின் காதலன் ரவி இந்த கற்பை பற்றி நினைத்துக்கொண்டு துன்பத்தில் உழன்று தனது வாழ்க்கையை தொலைத்து விடுகிறான்
அங்கரே, மீட்பென்பது தன்னிடமே என சொல்கின்றன வேதமுடிபின் நூல்கள். தானென்றுணர்தலே மெய்மையிலமர்தல். அதன்பொருட்டு கணந்தோறும் வாயில்களை தட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. திறக்கும் கணமும் வாயிலும் ஒருங்கமையும் என்றால் மீட்பு நிகழ்கிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “கணந்தோறும் என நிகழும் ஆயிரம்கோடி அறிதல்களில் ஒன்றில் உள்ளது நமக்கான மெய்மை. அது கல்லில் தெய்வமென எழுந்து நம்மை ஆட்கொள்வதே விடுதலை.”

. “சொல்லுங்கள், எனது மீட்பை எவ்வண்ணம் நான் அடையமுடியும்?” என்றான் கர்ணன். இளைய யாதவர் “அங்கரே, மீட்பு என்பது துயரிலிருந்து விடுதலையை குறிக்கும். எது உங்கள் துயரென்று நீங்களே முற்றறிந்தால் மட்டுமே அதை நோக்கிய முதல் அடிவைப்பு நிகழவியலும்” என்றார். “அதை பிறர் அறியவே முடியாது என்பதே மானுடவிளையாட்டு. ஏனென்றால் அது உணரும்போது உருக்கொள்வது. சொல்லும்போதே உருமாறுவது. வகுக்கையில் மீறிநிற்பது.”

பரிமேலழகர் உரை
அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும். இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

Thirukkural - Management - Managing Stress - Laughter far Stress Reduction
The old and wise saying is ‘misfortunes come not in singles but in battalions.' Misfortunes cheerfully keep visiting a person who invites them. If a person does not get agitated and does maintain his composure and prepare to fight his troubles, his trouble will face trouble from him and run away, assures Kural625. So, do not give a comfortable accommodation to your trouble. Challenge it and drive it away to lead a stress free life.

The man who can defy ceaseless trouble 
Trouble it.

Learn to laugh away your problems. There are laughter clubs,1aughter therapies to fight the negative effects of stress. So much research has been done on the importance of laughter for stress management. Laugh and live well.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

குறள் 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]

பொருள்
வெள்ளத்து - வெள்ளம்  - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை.

அனைய - அத்தன்மையான; ஒத்த.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையான் - உடையவன் ; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

உள்ளத்தின் - உள்ளம் -  மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ள - உண்டாயிருக்கிற; உண்மையான; uḷḷa   adj. உள்¹. 1. Who is, whichis; இருக்கிற. அங்கே உள்ள மனிதன் 2. True,actual; உண்மையான. உள்ள சமாசாரம் இது 

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

கெடும் - கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
கடல் போன்ற நீர்பெருக்கு அளவு மிக பெரிய துன்பம்/சோதனை அல்லது தீமை வந்தாலும் உண்மையான அறிவு ஞானம் உடையவர்கள் அதனை அழித்துவிடுவார். எப்படி? அத்தகையவர்கள் எத்தனை துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொள்ளலாம் என்று தங்கள் உள்ளத்துக்குள்ளே திடமாக நம்புவர். அதற்கு தேவை மனம் கலங்காமை, உறுதி, ஊக்கம், விடாமுயற்சி போன்ற குணங்கள் என்று அறிவர். சோர்வுற்றாது தொடர்ந்து ஒவ்வொரு அடியாக (படிப்படியாக) செயலாற்றுவதே எவ்வளவு பெரிய தடையையும் துன்பத்தையும் கடக்க ஒரே வழி என்று அறிவர். அதன்படி தன்னுடைய உள்ளத்திற்கு ஆணையிட்டு துன்பத்தை அழிப்பார்.

அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.

தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெரு நாய்களைப் போல் நாமாகிவிடகூடாது. இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்க கூடாது. 

“வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்ற குறளில் நீரின் அளவு என்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல், இங்கு பேரழிவை தரக்கூடிய என்னும் பொருளில் வருவது கவனிக்கத்தக்கது. இரண்டு குறள்களிலும் “உள்ளம்” என்பதற்கு “ஊக்கம்” என்ற பொருளிலேயே செய்யப்பட்டிருக்கிறது.

மேலும்: அஷோக் உரை

வரி: 
துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான்
கதை:
 ‘நான் கடவுள்’ படத்தின் படப்பிடிப்பின்போது அதில் நடிக்க ஏராளமான துறவிகள் தேவைப்பட்டனர். துணை நடிகர்களை துறவிகளாகவோ அல்லது அதைப் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவோ நடிக்க வைக்க முடியாது. எத்தனை வேடம் போட்டாலும் அவர்களுடைய கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சினிமா ஒரு காட்சிக் கலை. ஒரு ஏழையை பணக்காரனாக சினிமாவில் நடிக்க வைப்பது மிகவும் கடினம். தோரணைக்கு அப்பால், கண்களுக்கு அப்பால், பாவனைக்கு அப்பால் நமது மனம் உணரக்கூடிய ஏதோ ஒன்று இவர் பணக்காரனல்ல என்று சொல்லிவிடும்.
......
......
......
‘நான் கடவுள்’ படத்தில் பெரும்பாலான துறவிகள் உண்மையிலேயே துறவு வாழ்க்கை கொண்டவர்கள். அவர்களுக்கு நடிப்பில் எந்த ஆர்வமும் இல்லை. பெரும்பாலான நேரம் சும்மாதான் இருந்தார்கள். பணமும் அவர்களுக்குப் பெரிதாக ஈர்ப்பை அளிக்கவில்லை. அவர்களை நடிக்கக் கொண்டு வரும் பொறுப்பை அன்றைய உதவி இயக்குநராக இருந்த தியாகராஜன் எடுத்துக்கொண்டார். தியாகராஜன் அவர்களைச் சந்தித்து பலவிதமாகப் பேசி அவர்களில் ஒருசிலரை நடிக்க கூட்டிக்கொண்டு வந்தார்.

அவர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்கள் பிறரை நடிக்க அழைத்துக்கொண்டு வந்தனர். பிச்சை எடுப்பதுதான் அவர்களுடைய தொழில். காசியின் பெரும்பாலான படித்துறைகளில் அவர்கள் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவர்களுக்கு உணவுக்கு பணம் தேவையில்லை. ஏனென்றால் காசி முழுக்க பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உணவு அளிக்கப்படும். அவர்கள் பிச்சை எடுப்பது பெரும்பாலும் கஞ்சா தேவைக்காக மட்டுமே.

மற்றபடி மருத்துவத் தேவையோ உடைத் தேவையோ உறைவிடத் தேவையோ அவர்களுக்குக் கிடையாது. அவர்களுடைய தேவைக்கு மேலேயே எப்போதும் பணம் கைக்கு வருவது வழக்கம். சினிமா என்ற துறையின் ஆர்வம் காரணமாகத்தான் பெரும்பாலும் அவர்கள் வந்தார்கள். அங்கென்ன நிகழ்கிறது என்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசி சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

படத்தில் அவர்களுடைய நடிப்பு என்பது ஆங்காங்கு அமர்ந்திருப்பதும் கஞ்சா குடிப்பதும் மட்டும்தான். படப்பிடிப்பு இடைவேளையிலே அவர்கள் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தமிழர். சைவ மடாதிபதிகளுக்கு உரிய முறையில் மிகப்பெரிய பாணியில் மிகப்பெரிய சடைமகுடம் ஒன்று வைத்திருந்தார். அந்தச் சடையை அவிழ்த்துவிடும்படி கோரியபோது எழுந்து அவிழ்த்துவிட்டார். அதன் நுனி தரையைத் தொட்டது. தடித்த புகையிலை சுருள்கள் போன்ற சடைமுடி. பாலா அவரை இடுப்பளவு நீரில் இறங்கி நிற்கச்செய்து குளிக்க வைத்தார்.

அவர் அந்த சடையை நீட்டி நீராடிக்கொண்டிருக்கும்போது கேமிரா அவரில் இருந்து தொடங்கி அந்தப் படிக்கட்டைக் காட்டி மேலெழுந்து சென்று படிக்கட்டில் ஏறிச்செல்லும் ருத்ரனைக் காட்டும் அந்தக் காட்சியை பலரும் அந்தப் படத்தில் நினைவு கூரலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் நீராடுவதே இல்லை. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் குளித்ததோடு சரி. அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அருகே இருந்த இன்னொரு துறவியிடம் எங்களுடன் இருந்த நடிகர் சிங்கம்புலி, ‘‘சாமி உங்க கதையை சொல்லுங்க’’ என்று கேட்டார்.

அவர் சாதாரணமாக “சொல்றதுக்கென்ன இருக்கிறது? எல்லாரையும் போலத்தான் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன்’’ என்றார். ‘‘இல்லை சாமி, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. சொல்லுங்கள்’’ என்று கேட்டபோது மிக உணர்ச்சியற்ற, ஆனால் புனைவுத்தன்மை மிகுந்த மொழியில் தன் கதையைச் சொன்னார். அவருக்குத் தென்னிந்தியாவின் ஐந்து மொழிகள் தெரியும். வட இந்தியாவின் இந்தியும் மராத்தியும் போஜ்புரியும் தெரியும். இந்தியா முழுக்க ஐம்பது முறைக்கு மேல் சுற்றி வந்திருக்கிறார்.

வயது எழுபதை ஒட்டி. சாமியாராக ஆகி நாற்பதாண்டு காலமாகிறது. சொந்த ஊர் கடப்பா அருகே ஒரு சின்ன இடம். அங்கே அவருக்கு நிறைய நிலம் இருந்தது. மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். குண்டூர் அருகே கிருஷ்ணா நதிப்பாசனத்தில் மிகவும் வளமான நிலம் அது. விவசாயம் செய்வது அவருடைய பரம்பரைத் தொழில் என்பதால் அதை மிகச்சிறப்பாகவே செய்து வந்திருந்தார். ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண். மனைவியிடம் இனிமையான உறவு இருந்தது. விவசாய வேலைகளைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.

இரண்டு முறை சிவசைலத்துக்குச் சென்று வந்திருக்கிறார். திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசை இருந்தது. ஆனால், விவசாய வேலைகளை விட்டு அதைச் செய்ய முடியாது என்பதனால் அது தட்டிப்போய்க் கொண்டே இருந்தது. மத விஷயங்களில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியலில் எதுவும் தெரிந்து கொள்வதில்லை. நன்றாக வயலில் காலை முதல் மாலை வரை வேலை செய்வதும், வயிறு புடைக்கும்படி சாப்பிடுவதும், தூங்குவதும்தான் அவருடைய வாழ்க்கை.

அதுதான் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமான விஷயம் என்று அவர் சொன்னார். வயிறு புடைக்கும்படி சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு வேலை செய்பவர்கள்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியானவர்கள் என்றார். அவருடைய நிலத்தில் பொன் விளையும் என்று சொன்னார். இன்றைக்கும் அந்த நிலத்தை கண்ணால் பார்க்க முடிகிறது என்றார். அந்த நிலத்தை அவர் நெய்க்கரிசல் என்று சொன்னார்.

‘‘மண்வெட்டியால வெண்ணையை வெட்டுவது போல புரட்டிப்போடலாம். உழுது போட்ட நிலம் ஆயுர்வேத வைத்தியர்கள் வைத்திருக்கும் லேகியம் போல இருக்கும். கால் புதைந்த இடமெல்லாம் வெண்ணையில் பதிந்தது போல். உழுது புரட்டும்போது ஒவ்வொரு அடிக்கும் மண்புழுக்கள் கத்தைகத்தையாக நெளியும். நீரூற்றி உழுது மண் மரமடித்துவிட்டு கரையில் ஏறி நின்று பார்த்தால் பளிங்கால் ஆனது போல் இருக்கும் வயல்’’ என்றார்.

அதன் மேல் சிறிய பறவைகள் வந்து அமர்ந்தால் கூட உடம்பு உலுக்கிக்கொள்ளும். வயலைப் பார்ப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வயல் அருகே சென்று பார்த்துக் கொண்டிருப்பார். வேலை இல்லை என்றாலும் கூட வரப்பிலேதான் அமர்ந்திருப்பார். பாயை அங்கேயே விரித்து படுத்து தூங்கிக்கொள்வதும் உண்டு. வயலை விரும்புகிறவன் அதில் விழுந்துவிடுவான். பெண்ணாசையைவிட பொன்னாசையைவிட மண்ணாசை மிகப்பெரியது என்றார் அவர். பசுமை தழைத்து மேலே வரும் பயிர் வேறு எதையுமே நினைக்கவிடாது.

இரவில் கனவில் கூட அதுதான் வந்து கொண்டிருக்கும். காலை எழுந்ததுமே தண்ணீர் கூட குடிக்காமல் வயலை நோக்கித்தான் ஓடத்தோன்றும். ஒருமுறை அவர் வயல் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. பொன்நிற மணிகள். ஒரு சாண் அளவுக்கு நீளமானவை அவை. மாலையில் காற்று கடந்து செல்லும்போது ஆயிரம் கொலுசுகள் குலுங்கும் ஒலி கேட்டது. அறுவடைக்குத் தயாரான வயல் என்பது பொன்னேதான். கரையில் இருந்து பார்க்கும்போது அந்தி வெயிலில் அது பொன்னைவிட அதிகமான வெளிச்சத்தை, பிரகாசத்தைக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

அறுவடைக்கு ஆட்கள் ராயலசீமாவில் இருந்துதான் வரவேண்டும். அவர்கள் ஒரு பகுதியிலிருந்து அறுவடை செய்துகொண்டே வருவார்கள் அவர்களுக்காக அவர் காத்திருந்தார். அந்த முறை அறுவடை செய்து முடித்த பிறகு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு திருப்பதி சென்று வரவேண்டுமென்று எண்ணியிருந்தார். ஆனால் யாரும் நினைத்திருக்காதபடி வானம் கறுத்து மழை வந்தது. அந்த வருடத்தின் மிகப்பெரிய புயல் அது. மழை வருவதை தெரிந்துகொண்டதும் அவர் மடைகளைத் திறந்துவிடுவதற்காக வயலுக்குச் சென்றார்.

வயலில் அனைத்து மடைகளையும் திறந்து விட்டபிறகு கூட அங்கிருந்து வர மனமில்லாமல் குடையுடன் வரப்பிலேயே நின்று கொண்டிருந்தார். வானமே கிழிந்து தலைமேல் விழுவது போல மழை பொழிந்தது. மிகப்பெரிய அருவிக்கு அடியில் நின்று கொண்டிருப்பது போல. கை நீட்டிப்பார்த்தால் அந்தக் கையைப் பார்க்க முடியாத அளவுக்கு மழைத்திரை. ஆனாலும், வீட்டுக்கு போகத் தோன்றவில்லை. இரவில் நெடுநேரம் வரை அங்கிருந்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்குச் சென்றார்.

பிள்ளைகளை வீட்டுக்குள் செல்லும்படி சொல்லிவிட்டு ஏரியைத் திறப்பதைப் பற்றி பேசுவதற்காக அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றார். கோயிலிலேயே பேச்சு முடிந்து விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏதோ ஓசை கேட்டது. பலர் அலறுவது போன்ற சத்தம். நல்ல இருள். ஓடிச் சென்று ஒரு மண்டபத்தின் மேலேறி பார்த்தபோது அருகிலிருந்த கல்மண்டபங்கள் அனைத்தும் மூழ்கும்வரை வெள்ளம் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தார். கிருஷ்ணா பெருகிக் கரைக்கு வந்துவிட்டது.

தன்னுடைய குடும்பம் என்ன ஆகும் என்று பயம் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. எந்த திசை என்பது கூடத் தெரியவில்லை. ஒவ்வொரு மின்னலுக்கும் தண்ணீர் கூடிக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அங்கேயே நின்று அலறித் துடித்தார். தண்ணீரில் பாய்ந்து நீந்திச் சென்றாலும் கூட தண்ணீரின் ஒழுக்கு அவரை அடித்துச் சென்றது. எங்கோ ஒரு பனைமரத்தில் தொற்றி ஏறி அமர்ந்து கொண்டார். காலையில் பார்த்தபோது பனைமரத்தின் முக்கால் பங்கு அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

சுற்றிலும் தண்ணீர் அன்றி எதுவுமே இல்லை. இரண்டு நாட்கள் பனைமரத்தின் உச்சியிலேயே தொற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார். மூன்றாவது நாள் அவரை படகில் வந்து மீட்டுக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தனர். தன்னுடைய பிள்ளைகள் என்ன ஆயினர் மனைவி குடும்பம் என்ன ஆயினர் என்று தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கூடங்கள் தோறும் கதறியபடி அலைந்தார். அவர்கள் தென்படவே இல்லை. ஏழு நாட்களுக்குப்பிறகு வெள்ளம் முழுமையாக வடிந்து நிலம் முழுக்க சேற்றுப்பரப்பாக மாறியது.

அவர் இறங்கி தன் வீடிருந்த இடத்திற்கு சென்றார். மண்ணில் கட்டப்பட்டிருந்த வீடு இருந்த தடமே தெரியாமல் கலைந்து அழிந்து சென்றுவிட்டிருந்தது. கன்றுகள் இல்லை. அவரது வயலும் சேறால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு ஊர் வயல் வாழ்க்கை இருந்ததற்கான ஒரு சான்றும் இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக சேறு இருப்பது போலிருந்தது அந்தப் பகுதி. அவர் அங்கே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். மனதுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று.

திரும்பி தன் இடுப்பில் கட்டியிருந்த ஆடையை எடுத்து கிழித்து அரை ஆடை மாதிரி கட்டிக் கொண்டார். வடக்கு நோக்கி நடந்தார். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு காசிக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை துறவிதான். திரும்பி ஊருக்குச் செல்லவோ அந்த வயலையோ மண்ணையோ பார்க்கவோ இல்லை.  இயல்பான குரலில் ‘‘இதுதான் தம்பி கதை’’ என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு மின்னல் அடித்தது. அவரை நான் முன்பு பார்த்திருக்கிறேன்.

‘‘நான் உங்களை முன்பு பார்த்திருக்கிறேன். இதே கதையை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ என்று சொன்னேன். ‘‘எப்போது?’’ என்றார். ‘‘நான் இளைஞனாக இருந்தபோது இதே போல வீட்டைவிட்டு வந்து காசியிலே ஒரு துறவி மாதிரி இருந்தேன். படிக்கட்டில் வாழ்ந்திருந்தபோது ஒருமுறை உங்களைப் பார்த்தேன். இதே கதையை சொன்னீர்கள்’’ என்றேன். ‘‘சொல்லியிருப்பேன்’’ என்று அவர் சொன்னார்.

அப்போது சொன்ன அதே உணர்வுகளும் அதே வார்த்தைகளுமாக அதைச் சொன்னார் என்று தோன்றியது. ஒரு தேர்ந்த புனைகதையாளனுக்குரிய கதை நுட்பத்துடன், விவரணைகளுடன் அந்தக் கதை இருந்தது. அதைச் சொல்லிச் சொல்லி அவர் பெரிது பண்ணிக் கொண்டாரா அல்லது அவருக்கு மனதில் வார்த்தை வார்த்தையாக அந்தக் கதை அப்படியே பதிந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது யோசிக்கும்போது அப்படி ஒரு கதையைத் துல்லியமாகச் சொல்ல ஆரம்பிக்கும்போதே அந்தக் கதையிலிருந்து அவர் விலகிவிட்டார் என்று தோன்றியது. அந்தக் கதையை சொல்லும்போது, அது ஒரு மனிதனுடைய கதையாகும்போது அது அவருடைய கதையாக அல்லாமல் ஆகிவிட்டது. துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான். அதைத்தான் இலக்கியம் இன்றுவரைக்கும் செய்து வருகிறது.

 சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. அப்துல் ஷுக்கூர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய ‘நூறு நாற்காலிகள்’ என்னும் நீள்கதை மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப் பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார்.

நான் அமைப்பு சார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப் போல வீண் வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. காரணம், அவர் நடத்தும் டீக்கடையிலேயே அந்தக் கூட்டம் நடக்கும் என்றார். சென்ற சில மாதங்களாக மாதம் ஒருமுறை அந்த டீக்கடையிலேயே ஷுக்கூர் இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்தி வருகிறார். கேரளத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் தலைச்சேரி - கண்ணூர் சாலையில் உள்ள பெடயங்கோடு என்னும் கிராமம் அது.

‘ஜனவரி மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறும். பயணச் செலவு ஏதும் தரமுடியாது. விற்கும் நூல்களின் பணத்தைக்கூட நோயுற்றிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு அளிக்கவிருக்கிறேன்’’ என்றார். அந்த லட்சியவாதம் எனக்குப் பிடித்திருந்தது. ‘‘வருகிறேன்’’ என்றேன். ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது.

என் வழக்கமான பயணத் தோழர்கள் கிருஷ்ணன், ராஜமாணிக்கம் இருவரையும் அழைத்தேன். திருப்பூர் நண்பர் கதிரின் காரிலேயே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதை ஒரு விரிவான பயணமாக ஆக்கிக்கொண்டோம். 2016 ஜனவரி இரண்டாம் தேதி கோவையிலிருந்து  கிளம்பி, மானந்தவாடி அருகே உள்ள இடைக்கல் என்னும் கற்கால பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்துவிட்டு மாலையில் கண்ணனூரில் தங்கினோம். காலையில் கண்ணனூர் கோட்டையைப் பார்த்துவிட்டு ஷுக்கூர் வாழும் பெடயங்கோடு என்னும் ஊரை விசாரித்து வழிதேடிச் சென்றோம்.

பெடயங்கோட்டை அணுகியபின் ஷுக்கூரைப் பற்றி கேட்கவேண்டுமே என நினைத்து பார்த்துக்கொண்டே வந்தோம். பெடயங்கோடு மிகச்சிறிய ஊர். ஆகவே கடந்து சென்றுவிட்டோம். மீண்டும் வழி விசாரித்துத் திரும்பி வந்தோம். அங்கே சாலையோரத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஷுக்கூர் பற்றி கேட்டோம். ஆச்சரியமாக, கடைக்காரர் முகம் மலர்ந்து ‘‘ஷுக்கூர் இக்காவா? தெரியாம இருக்குமா?’’ என்றார். அவர் பெயர் லத்தீஃப். அவரும் ஒரு கவிஞர், மூன்று தொகுதிகள் பிரசுரித்திருக்கிறார். ‘‘அதோ அந்தக்கடைதான். நானும் வருவேன்’’ என்றார்.

நாங்கள் மெல்லச் சென்றபோது சாலையோரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றிருந்த  ஷுக்கூர், எங்களை மறித்து கை காட்டி அழைத்தார். நாங்கள் கடந்து செல்லும்போதே அவர் பார்த்துவிட்டிருந்தார். என் பெயர் எழுதப்பட்ட தட்டி சாலையோரமாக இருந்தது. ‘‘இதுதான் என் கடை’’ என்றார் ஷுக்கூர். சின்னஞ்சிறிய டீக்கடை. நான் இன்னும் சற்று பெரிய கடையை எதிர்பார்த்தேன். அங்கே எப்படி கூட்டம் நடத்துவது என்று தெரியவில்லை. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை.

ஷுக்கூர் சைக்கிளில் மீன் வாங்கிக்கொண்டுவந்து தெருத்தெருவாகக் கூவி விற்கும் தொழிலைத்தான் இருபதாண்டுகளாகச் செய்துவந்தார். அதற்குமுன் மண்வெட்டும் கூலித்தொழிலை பத்தாண்டு காலம் செய்தார். அவரது மகன் துபாயில் வேலைக்குப் போனபின் ஓராண்டாகத்தான் டீக்கடை நடத்துகிறார். பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனால் எளிய வாழ்க்கைக்கு அது போதும் என்றார்.

ஷுக்கூருக்கு ஐந்தாம் வகுப்புதான் படிப்பு. சுயமாக வாசிக்கக் கற்று, அவரே இலக்கியத்தை வந்தடைந்தார். இலக்கியத்தின் அடிப்படைகளை அவருக்கு எவரும் சொல்லித் தரவில்லை, அவரே வாழ்க்கையைக் கொண்டு இலக்கியத்தை அடையாளம் கண்டார். வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.

‘‘நான் மீன் அளவுக்கே புத்தகங்களையும் விற்றிருக்கிறேன்’’ என்றார் ஷுக்கூர். ‘‘ஆரம்பத்தில் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள். ஆனால் என் ஆர்வத்தைப் பார்த்தபின் கம்யூனிஸ்ட்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்’’ என்றார். தான் விற்கும் எந்த நூலையும் முதலில் தானே வாசித்துவிடவேண்டும் என்பது ஷுக்கூரின் நெறி. அந்நூலைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்வார். நூலைப் பற்றி அவரே விரிவாக அறிமுகமும் செய்வார். அவருக்கென ஒரு சிறிய இலக்கிய வாசகர் கூட்டம் உருவாகி வந்தது. அதன்பின்னரே ஷுக்கூர் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.

அடித்தளத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தவர்கள், வழக்கமாக தங்கள் போராட்டங்களைப் பற்றிய கவிதைகளையும் அரசியல் கருத்துக்களையும்தான் எழுதுவது வழக்கம். ஷுக்கூர் எழுதியவை அவரது வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய ஆழமான தத்துவநோக்குள்ள கவிதைகள். நவீனகவிதைகள் அவை. டீக்கடை வைத்தபின் கூடவே பெடயங்கோட்டில் வீடு வீடாக இலக்கியத்தை அறிமுகம் செய்து வருகிறார் ஷுக்கூர்.  என் ‘நூறு சிம்ஹாசனங்ஙள்’ நூலை மட்டும் 450 பிரதிகள் அச்சிட்டு அந்த ஊரில் வெளியிட்டிருக்கிறார். இந்த டீக்கடை இலக்கியம் அவரது கனவுகளில் ஒன்று. இதை ஒரு வகை தனிப்பட்ட தவமாகவே அவர் நினைக்கிறார்.

ஷுக்கூர் இக்காவின் வீட்டுக்குச் சென்றோம். எங்களில் இருவர் சைவர்கள். ‘‘இங்கே அந்த மாதிரி நல்ல சாப்பாடு கிடைக்காதே’’ என்றார் ஷுக்குர். நான் சிரித்துவிட்டேன். நானும் நண்பர்களும் அவர் இல்லத்தில் நெய்ச்சோறும் சிக்கனும் சாப்பிட்டோம். அவரது மனைவியும் திருமணமான மகளும் வீட்டில் இருந்தனர். அவர்களின் சமையல் வடக்கு மலபாருக்கே உரிய மிதமான காரமுள்ள சுவை கொண்டது.
 
ஷுக்கூர் எங்களை அருகில் உள்ள வளைபட்டணம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். நதிக்கரையில் கோயில் கொண்டுள்ள பகவதியின் காவலாளிகளாகக் கருதப்படும் மிகப்பெரிய மீன்கள் நிறைந்த நீர்ப்பெருக்கைப் பார்த்தோம். ‘‘பாதுகாக்கப்பட்ட மீன்கள் இவை. இலக்கியமும் இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும்’’ என்றார் ஷுக்கூர் சிரித்தபடி.

அந்த நதிக்கரையில்தான் படகுகள் வந்து சேரும் படித்துறை இருந்தது. கடலில் இருந்து மீன், படகுகள் வழியாக அங்கே வந்துசேரும். அங்கே அதிகாலையிலேயே சென்று ஏலத்தில் மீனை எடுத்து சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விற்பதுதான் ஷுக்கூரின் வழக்கம். மழைக்காலத்தில் மீன் விற்பது மிகக்கடினம். முழுநேரமும் நனைந்தாகவேண்டும். ஆனால் மீன் சீக்கிரம் அழுகாது. வெயிலில் மீன் அழுகி நஷ்டம் ஏற்படும்.

‘அன்றைக்கெல்லாம் நல்ல மீன் சாப்பிட்டதே இல்லை. மிஞ்சிப் போன அழுகிய மீன்தான் எப்போதும் உணவு’’ என்று ஷுக்கூர் சிரித்தபடி சொன்னார். தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார். ஆகவே அவை எளிய கதைகளாக மாறிவிட்டன. கடந்து வருவதற்கு இலக்கியம் உதவியிருக்கிறது மதியம் இரண்டரை மணிக்குக் கூட்டம். வழக்கமாக முப்பது பேர்தான் வருவார்கள்.

ஆனால் அக்கூட்டம் பற்றி ‘மாத்ருபூமி’, ‘மலையாள மனோரமா’ நாளிதழ்களில் என் நண்பர்களான இதழியலாளர்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தமையால் அன்று நூறு பேர் வந்திருந்தனர். இரு சக்கர வண்டிகளிலும் கார்களிலும் வந்துகொண்டே இருந்தனர். கணிசமானவர்கள் கண்ணனூர், தலைச்சேரி முதலிய நகரங்களிலிருந்து வந்திருந்தனர். கடைக்குள் இடமில்லாமல் பாதிப் பேர் சாலையில் அமர்ந்திருக்க நேரிட்டது.

வாசகர்களுடன் பரவலாக அறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் பலர் கலந்துகொண்டனர். நால்வர் நூலைப் பற்றிப் பேசியபின், நான் சிற்றுரையாற்றி  கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அத்தனை பேரும் அந்நாவலை வாசித்திருந்தனர். அதற்குச் சமானமான பிற நாவல்களுடன் ஒப்பிட்டும் பேசினர். உற்சாகமான உரையாடல். கூரிய மதிப்பீடுகள். மாலை ஆறு மணிக்கு சந்திப்பு முடிந்த பின்னரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இல்லாமல் கேரளத்தில் இலக்கியக்கூட்டங்கள் முடிவடைவதில்லை.

‘‘நவீன இலக்கியத்தை நாங்கள் டீக்கடைகளில்தான் பேசிப் பேசி உருவாக்கினோம்’’ என்றேன். ‘‘முன்பு கேரளத்தில் கம்யூனிசமும் டீக்கடைகளில் உருவானதுதான்’’ என்றார் தாஹா மாடாயி என்னும் விமர்சகர். ‘சிங்கிள் டீ இலக்கியம்’ என்றுதான் நவீன இலக்கியத்தை பழைய இலக்கியவாதிகள் சொல்வார்கள்.

ஏழு மணி வரை அங்கே நின்றபடியே இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு விடைபெற்றுக் கிளம்பினேன். ஷுக்கூர் இக்கா என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘‘முதல் கூட்டத்தை கன்னட எழுத்தாளர் சிவராம காரந்தின் ‘சோமனதுடி’ பற்றி நடத்தினோம். அந்த அளவுக்கு தார்மீக வேகம் உள்ள நாவல் இது. எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என்றார். நான் சம்பிரதாயமாக ஏதும் சொல்ல விரும்பவில்லை. ‘‘இக்கா... மறுபடியும் சந்திப்போம்’’ என்று மட்டும் சொன்னேன்.‘

‘மாத்ருபூமி’ நாளிதழ் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் நிருபரையும் புகைப்படக்காரரையும் அனுப்பியிருந்தது. அவர்களின் காரிலேயே நான் கோழிக்கோடு கிளம்பினேன். அங்கிருந்து எர்ணாகுளம் வழியாக நாகர்கோவில் வந்தேன். திரும்பும் வழி முழுக்க ஒரே விஷயத்தைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இலக்கியமென்பது உணவும் உறைவிடமும் பிற வசதிகளும் அமைந்துவிட்டவர்களுக்கான ஒருவகை கேளிக்கை என்னும் எண்ணம் உள்ளது. மேலும் மேலும் உலகியல் லாபங்களைச் சம்பாதிப்பதற்கு இலக்கியம் எதிரானது என்னும் எண்ணம் உள்ளது.

ஆனால் ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது. இத்தனை வயதில் ஷுக்கூர் இக்கா எதற்காக இப்பணியைச் செய்கிறார்? அடையாளமோ, புகழோ தேடி அல்ல. அது அவர் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை அளிக்கிறது. வெற்றியோ, பணமோ, புகழோ அல்ல... லட்சியவாதமே வாழ்க்கைக்கு இலக்கையும் நிறைவையும் அளிக்கமுடியும். இலக்கியத்தின் சாராம்சமாக இருப்பது லட்சியவாதமே. அதைத்தான் ஷுக்கூர் இக்காவின் கனிந்த முகம் எனக்குக் காட்டியது.

வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.

தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார்.

ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது.

ஒப்புமை
”சொற்றார்கள் சொற்றதொகை யல்லதுணை யொன்றோ
முற்றா முடிந்தநெடு வானினிடை முந்நீர்
இற்றாவி எற்றெனினும் யான்இனி இலங்கை
உற்றால் விலங்கும்இடை யூறென உணர்ந்தான்” (கம்ப.கடல்தாவு.88)

“ஊறுகடி தூறுவன வூறிலறம் முன்னாத்
தேறிலி அரக்கர்புரி தீமையவை தீர
ஏறுவகை யாண்டைய இராமனென வெல்லாம்
மாறுமதின் மாறுபிறி தில்லென வலித்தான்” (கம்ப.கடல்தாவு.89)

பரிமேலழகர் உரை
வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வெள்ளம்போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பயனென்று நினைக்கக் கெடும். இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

இடுக்கண் வருங்கால் நகுக

குறள் 621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடுக்கண்- மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம் படவரும் இரக்கம்; துன்பம் வறுமை
வருங்கால் - வருகின்ற காலத்தில்
நகுக - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.
அதனை- அதனை
அடுத்து - அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.
ஊர்வது - ūr-   4 v. [M. ūr.] intr. 1. Tomove slowly; to creep, as an infant; to crawl,as a snake; நகர்தல் நந்தூரும் புனனாட்டின் (பாரத.கிருட்டிண. 11). 2. To spread, circulate, as blood;to extend over a surface, as spots on the skin;பரவுதல். இவக்காணென் மேனி பசப்பூர் வது (குறள்,1185). 3. To flow, as juice from the sugar-cane; வடிதல் கரும்பூர்ந்த சாறுபோல் (நாலடி, 34).4. To come to close quarters; அடர்தல் வெஞ்சமமூர்ந்தம ருழக்கி (சிலப். 27, 27, அரும்.). 5. To beunloosed, relaxed; கழலுதல் அவிர்தொடி யிறையூர(கலித். 100). 6. To itch; தினவுறுதல். உடம்பெல்லாம் ஊருகின்றது.--tr. 1. To mount; ஏறுதல் பாசடும்பு பரியவூர் பிழிபு . . . வந்தன்று . . . தேர்(ஐங்குறு. 101). 2. To ride, as a horse; to drive,as a vehicle; ஏறிநடத்துதல். சிவிகை பொறுத்தானோடூர்ந்தானிடை (குறள், 37).
அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
ஒப்பது - ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை
இல் - இல்லை

முழுப்பொருள்
இடுக்கண் என்றால் துன்பம். நமக்கு வாழ்வில் துன்பம் வந்தால் அதனை கண்டு சிரிக்க வேண்டும். அப்படி சிரித்து துன்பத்தை கடந்து செல்வதே துன்பத்தை கடக்க சிறந்த வழி. அதனை தவிர வேறொன்றும் இல்லை. அதற்கு மாறாக  மன உளைச்சலுக்கு ஆளாகித் துன்பத்தில் உழன்று சோம்பலுற்று கிடப்பது அழகான செயல் அல்ல அழிவைத் தரக்கூடியது. அது நம்மை துன்பத்திலேயே ஆழ்த்திவிடும். 

வாழ்வில் இன்பம் துன்பம் இயல்பாக வரக்கூடியது என்பதை உணர வேண்டும். துன்பம் நிலையென நினைக்கக்கூடாது. இன்பத்தையும் துன்பத்தையும் மனதில் சமநிலைக்கொண்டு நோக்கவேண்டும்.

மேலும் துன்பத்தில் இருக்கும் பொழுது எதிர்க்காலத்தை நினைத்தோ அல்லது செயலின் முடிவை நினைத்தோ அச்சத்தில் உறைந்துவிடக்கூடாது. ஏனெனில் அச்சம் நமது ஆற்றலை எடுத்துக்கொள்ளும். நம்மை தேங்கச்செய்யும். 

அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.

தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெரு நாய்களைப் போல் நாமாகிவிடகூடாது. இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்க கூடாது. 

ஆதலால் துன்பத்தை கண்டு சிரித்துவிட்டு அடுத்து என்ன செயல் என்று யோசிக்க வேண்டும். ஐயோ நான் இப்படிபட்ட தவறை செய்துவிட்டேன, நான் எப்படிப்பட்ட ஒரு முட்டாள் என்று சுயப்பகடி செய்துக்கொண்டு அடுத்த செயலை நோக்கி செல்ல வேண்டும். துன்பத்தையும், தவறுகளையும் மனதார ஏற்றுக்கொண்டு அதில் இருந்து பாடம் கற்கவேண்டும். அதனை நாம் மனதார ஏற்கவில்லை என்றால் நாம் அத்துன்பத்தில் இருந்து விடுப்பட முடியாது. முன்னேறவும் முடியாது. 

உதாரணமாக சொன்னால் ஒருவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என்றால் அவர் பொதுவாக அவருடைய மேலாளரையோ அல்லது அலுவலகத்தையோ குறை கூறுவார். அதற்கு மாறாக நாம் மறுபடியும் அந்த வேலை கொடுத்தால் அத்தவறு நடக்காத வண்ணம் செய்வோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஆம் என்றால் நாம் ஒரு தவறு செய்து இருக்கிறோம் (அதனால் தான் வெளியேற்றப்பட்டோம்) என்று அர்த்தம். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறை ஒப்புக்கொள்வதே (ஏற்ற்க்கொள்வதே) தவறில் இருந்து வெளிவர முதல் படி. அதில் இருந்து பாடத்தை கற்க வேண்டும். அந்த நிலையை நினைத்து சிரித்துவிட்டு. அடுத்த காரியத்தை நோக்கி செல்ல வேண்டும். மாறாக குறைச் சொல்லிக்கொண்டு இருந்தால் நாம் அந்த துன்பத்தில் இருந்து வெளியே வரமுடியாது.

மேலும் தவறையும் துன்பத்தை ஏற்றுக்கொள்வதால் நமக்கு பணிவும் பக்குவமும் உடன் வருகிறது. பிற்காலத்தில் இன்பங்கள் வந்த அது நிலையானது அல்ல என்பதனால் இன்பங்களுக்கும் வெற்றிக்கும் பெரிய ஆர்பாட்டங்கள் செய்வதை தவிர்ப்போம்.

ஏன் மனதார சிரிக்கவேண்டும்?? அது மனத்திண்மையின் வலிமை என்றுக்கூட சொல்லாலாம். என்னுடைய திறமையின் மீதும் உழைப்பின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஏன் இந்த துன்பத்தையும் தோல்வியையையும் கண்டு வருந்த வேண்டும். மாறாக இவன் துன்பத்திற்கே துன்பம் கொடுப்பவன் ஆயிற்றே என்று துன்பம் நினைக்கும் அளவுக்கு தன்னை பற்றி நினைத்துக்கொண்டு துன்பத்தை பார்த்து சிரித்து துன்பத்தை கடக்க வேண்டும்.  அடுத்த செயலில் முனைப்புடன் ஈடுபட்டு தோல்வியில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் மீளவேண்டும்.  புன்னகைத்துவிட்டு அடுத்து என்ன செயல் என்று யோசிப்பதால் நாம் நமது ஆக்கசக்தி / உத்வேகம் / energy / passion ஏங்கு உள்ளது என்று என்பதை கண்டடையலாம். அதனால் நாம் ஆக்கப்பூர்வமானவற்றை செய்வோம்.

துன்பத்தில் உழலாது நமது வாழ்க்கையை நமது  வரம்பில் (take control of your life) வைத்துக்கொள்ள துன்பத்தை நினைத்து சிரித்துவிட்டு அடுத்த செயலை நோக்கி செல்க.

இத்தகு மனத்திண்மை, “காலா என்னருகே வாடா உனை சற்றே காலால் உதைக்கின்றேன்” என்று பாரதி சொன்னதைப் போன்றது. சீவகசிந்தாமணியில் திருத்தக்க தேவர் கூறும் இவ்வரிகளும் இதே கருத்தைக் கூறுகின்றன. இடுக்கணைக் கண்டு நகுதல் அதை வெட்டுகிற வாள் போன்றதாம்.

இடுக்கண் வந்துற்ற காலை, எரிகின்ற விளக்குபோல
நடுக்கம் ஒன்றானும் இன்றி நகுக, தாம் நக்க போது அவ்

இடுக்கணை அரியும் எஃகாம், இருந்தழுது யாவருய்ந்தார்? (சீவக.509)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இடுக்கண் வருங்கால் நகுக - ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான். (வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான், 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.).

மணக்குடவர் உரை
தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை. இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

Thirukkural - Management - Managing Stress - Laughter for Stress Reduction
Laughter as one of the best stress busters has been proved scientifically. That is why the sage advice is laugh to live well. Many research works have been conducted to prove that laughter can cure diseases. Valluvar anticipated the importance of laughter in mitigating stress. He suggested us a remedy for our stressful life through Kural 621.

Laugh at misfortune-nothing so able
To triumph over it.

Learn to laugh at misfortunes, troubles, and challenges. There is no point and meaning in worrying over worry, as worry will not cure our troubles. If worrying cures our ills and troubles, the easiest and most sought after way to overcome our worries will be by worrying over them. Anyone can do that without any effort. Instead of worrying, laughing at troubles is one of the best ways to fight against stress. 

English Meaning - As I taught a kid - Rajesh
When difficulties and failures come in life, we should laugh at it. We should learn from the mistakes that led to those difficulties/failures. We should laugh at ourselves for making these mistakes. Instead of laughing at and learning from mistakes, if we dwell on the difficult situation, it will put us in depression and we will also stagnate. Hence, laugh and cross the bridge. That bridge is learning. There is no other better way to overcome failure. Also energy is precious. There is no point in draining it uselessly by giving it for worrying/dwelling.

Questions that I ask to the kid
When difficulties come in life, what should you do? Why?

மடுத்தவா யெல்லாம் பகடன்னான்

குறள் 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]

பொருள் 
மடு - maṭu   n. prob. மடு-. Udder, especiallyof a cow; பசு முதலியவற்றின் முலையிடம்.
மடுத்த - மடுத்தல் -  உண்ணுதல்; நிறைத்தல்; சேர்த்தல்; அடக்கிக்கொள்ளுதல்; ஊட்டுதல்; தீமூட்டுதல்; அமிழ்த்துதல்; குத்துதல்; மோசம்பண்ணுதல்; விழுங்குதல்; மயக்குதல்; செலுத்துதல்; இடையூறுஎதிர்ப்படுதல்.
வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.
எல்லாம் - அனைத்தும்
பகடு - பெருமை; பரப்பு; வலிமை; எருது; எருமைக்கடா; ஏர்; ஆண்யானை; தெப்பம்; ஓடம்; சந்து.
அன்னான் - அன்னவன்; அவன், அத்தன்மையன், ஒத்தவன்
உற்ற - உற்று - வந்த
இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம்பட வரும் இரக்கம்; துன்பம் வறுமை
இடர்ப்பாடு - இடர்ப்படுதல்; துன்புறுகை.
உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
மடுத்த என்றால் இடையூறு ஏற்படுதல் என்று பொருள். வாய் என்றால் வழி என்று பொருள். பகடு என்றால் எருது என்று பொருள். வழியேல்லாம் மேடு பள்ளம் என்று இடையூறு ஏற்பட்டாலும் ஒரு எருது அல்லது மாடு அல்லது காளை எவ்வாறு அதனை பொருட்படுத்தாமல் தான் தூக்கிக்கொண்ட சுமையை சுமந்து சென்றுக்கொண்டே இருக்கிறதோ அதே போன்று ஒரு மனிதன் வாழ்வில் ஒரு வினையை செய்யும் பொழுது துன்பங்களும் இடர்களும் வரும்பொழுது அவ்விடர்ப்பாடுகளை தாண்டிச் சென்று அவற்றை உடைத்துச் சென்று இலக்கை அடைய வேண்டும். 

அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.

தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெரு நாய்களைப் போல் நாமாகிவிடகூடாது. இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்க கூடாது. 

எருது இழுக்கும் வண்டிப்பாரத்தை வாழ்க்கைச் சுமைக்கு ஒப்பாய் சொன்னது, சங்கப்பாடல்கள் தொட்டு, இன்றுவரை தொடர்வது. கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பில் இப்பாடலுக்கான உரையிடலில் அவை சுட்டப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் சில:

“அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும்ஆர்ப்பே” (மதுரை.259-60)

“கானற் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், 
ஆரைச் சாகாட்டாழ்ச்சி போக்கும், 
உரனுடை நோன்பகட்டன்ன, எங்கோன்” (புறநானூறு: 60: 7-9)

“அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய 
பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய
வரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும் 
பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ” (புறநானூறு: 90: 6-9)

”குண்டுதுறை இடுமணல் கோடுற அழுந்திய
பண்டிதுறை ஏற்றும் பகட்டினைப் போல” (பெருங்.1.53:53-4)

“நிரம்பாத நீர்யாற் றிடுமணலுள் ஆழ்ந்து
பெரும்பார ஆடவர்போல் பெய்பண்டம் தாங்கி
மருங்கொற்றி மூக்கூன்றித் தாள்தவழ்ந்து வாங்கி
உரங்கெட்டு டுறுப்பழுகிப் புல்லுண்ணா பொன்றும்” (சீவக.2784)

மேலும்: அஷோக் உரை

வரி: 
துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான்
கதை:
 ‘நான் கடவுள்’ படத்தின் படப்பிடிப்பின்போது அதில் நடிக்க ஏராளமான துறவிகள் தேவைப்பட்டனர். துணை நடிகர்களை துறவிகளாகவோ அல்லது அதைப் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவோ நடிக்க வைக்க முடியாது. எத்தனை வேடம் போட்டாலும் அவர்களுடைய கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சினிமா ஒரு காட்சிக் கலை. ஒரு ஏழையை பணக்காரனாக சினிமாவில் நடிக்க வைப்பது மிகவும் கடினம். தோரணைக்கு அப்பால், கண்களுக்கு அப்பால், பாவனைக்கு அப்பால் நமது மனம் உணரக்கூடிய ஏதோ ஒன்று இவர் பணக்காரனல்ல என்று சொல்லிவிடும்.
......
......
......
‘நான் கடவுள்’ படத்தில் பெரும்பாலான துறவிகள் உண்மையிலேயே துறவு வாழ்க்கை கொண்டவர்கள். அவர்களுக்கு நடிப்பில் எந்த ஆர்வமும் இல்லை. பெரும்பாலான நேரம் சும்மாதான் இருந்தார்கள். பணமும் அவர்களுக்குப் பெரிதாக ஈர்ப்பை அளிக்கவில்லை. அவர்களை நடிக்கக் கொண்டு வரும் பொறுப்பை அன்றைய உதவி இயக்குநராக இருந்த தியாகராஜன் எடுத்துக்கொண்டார். தியாகராஜன் அவர்களைச் சந்தித்து பலவிதமாகப் பேசி அவர்களில் ஒருசிலரை நடிக்க கூட்டிக்கொண்டு வந்தார்.

அவர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்கள் பிறரை நடிக்க அழைத்துக்கொண்டு வந்தனர். பிச்சை எடுப்பதுதான் அவர்களுடைய தொழில். காசியின் பெரும்பாலான படித்துறைகளில் அவர்கள் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவர்களுக்கு உணவுக்கு பணம் தேவையில்லை. ஏனென்றால் காசி முழுக்க பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உணவு அளிக்கப்படும். அவர்கள் பிச்சை எடுப்பது பெரும்பாலும் கஞ்சா தேவைக்காக மட்டுமே.

மற்றபடி மருத்துவத் தேவையோ உடைத் தேவையோ உறைவிடத் தேவையோ அவர்களுக்குக் கிடையாது. அவர்களுடைய தேவைக்கு மேலேயே எப்போதும் பணம் கைக்கு வருவது வழக்கம். சினிமா என்ற துறையின் ஆர்வம் காரணமாகத்தான் பெரும்பாலும் அவர்கள் வந்தார்கள். அங்கென்ன நிகழ்கிறது என்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசி சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

படத்தில் அவர்களுடைய நடிப்பு என்பது ஆங்காங்கு அமர்ந்திருப்பதும் கஞ்சா குடிப்பதும் மட்டும்தான். படப்பிடிப்பு இடைவேளையிலே அவர்கள் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தமிழர். சைவ மடாதிபதிகளுக்கு உரிய முறையில் மிகப்பெரிய பாணியில் மிகப்பெரிய சடைமகுடம் ஒன்று வைத்திருந்தார். அந்தச் சடையை அவிழ்த்துவிடும்படி கோரியபோது எழுந்து அவிழ்த்துவிட்டார். அதன் நுனி தரையைத் தொட்டது. தடித்த புகையிலை சுருள்கள் போன்ற சடைமுடி. பாலா அவரை இடுப்பளவு நீரில் இறங்கி நிற்கச்செய்து குளிக்க வைத்தார்.

அவர் அந்த சடையை நீட்டி நீராடிக்கொண்டிருக்கும்போது கேமிரா அவரில் இருந்து தொடங்கி அந்தப் படிக்கட்டைக் காட்டி மேலெழுந்து சென்று படிக்கட்டில் ஏறிச்செல்லும் ருத்ரனைக் காட்டும் அந்தக் காட்சியை பலரும் அந்தப் படத்தில் நினைவு கூரலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் நீராடுவதே இல்லை. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் குளித்ததோடு சரி. அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அருகே இருந்த இன்னொரு துறவியிடம் எங்களுடன் இருந்த நடிகர் சிங்கம்புலி, ‘‘சாமி உங்க கதையை சொல்லுங்க’’ என்று கேட்டார்.

அவர் சாதாரணமாக “சொல்றதுக்கென்ன இருக்கிறது? எல்லாரையும் போலத்தான் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன்’’ என்றார். ‘‘இல்லை சாமி, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. சொல்லுங்கள்’’ என்று கேட்டபோது மிக உணர்ச்சியற்ற, ஆனால் புனைவுத்தன்மை மிகுந்த மொழியில் தன் கதையைச் சொன்னார். அவருக்குத் தென்னிந்தியாவின் ஐந்து மொழிகள் தெரியும். வட இந்தியாவின் இந்தியும் மராத்தியும் போஜ்புரியும் தெரியும். இந்தியா முழுக்க ஐம்பது முறைக்கு மேல் சுற்றி வந்திருக்கிறார்.

வயது எழுபதை ஒட்டி. சாமியாராக ஆகி நாற்பதாண்டு காலமாகிறது. சொந்த ஊர் கடப்பா அருகே ஒரு சின்ன இடம். அங்கே அவருக்கு நிறைய நிலம் இருந்தது. மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். குண்டூர் அருகே கிருஷ்ணா நதிப்பாசனத்தில் மிகவும் வளமான நிலம் அது. விவசாயம் செய்வது அவருடைய பரம்பரைத் தொழில் என்பதால் அதை மிகச்சிறப்பாகவே செய்து வந்திருந்தார். ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண். மனைவியிடம் இனிமையான உறவு இருந்தது. விவசாய வேலைகளைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.

இரண்டு முறை சிவசைலத்துக்குச் சென்று வந்திருக்கிறார். திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசை இருந்தது. ஆனால், விவசாய வேலைகளை விட்டு அதைச் செய்ய முடியாது என்பதனால் அது தட்டிப்போய்க் கொண்டே இருந்தது. மத விஷயங்களில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியலில் எதுவும் தெரிந்து கொள்வதில்லை. நன்றாக வயலில் காலை முதல் மாலை வரை வேலை செய்வதும், வயிறு புடைக்கும்படி சாப்பிடுவதும், தூங்குவதும்தான் அவருடைய வாழ்க்கை.

அதுதான் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமான விஷயம் என்று அவர் சொன்னார். வயிறு புடைக்கும்படி சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு வேலை செய்பவர்கள்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியானவர்கள் என்றார். அவருடைய நிலத்தில் பொன் விளையும் என்று சொன்னார். இன்றைக்கும் அந்த நிலத்தை கண்ணால் பார்க்க முடிகிறது என்றார். அந்த நிலத்தை அவர் நெய்க்கரிசல் என்று சொன்னார்.

‘‘மண்வெட்டியால வெண்ணையை வெட்டுவது போல புரட்டிப்போடலாம். உழுது போட்ட நிலம் ஆயுர்வேத வைத்தியர்கள் வைத்திருக்கும் லேகியம் போல இருக்கும். கால் புதைந்த இடமெல்லாம் வெண்ணையில் பதிந்தது போல். உழுது புரட்டும்போது ஒவ்வொரு அடிக்கும் மண்புழுக்கள் கத்தைகத்தையாக நெளியும். நீரூற்றி உழுது மண் மரமடித்துவிட்டு கரையில் ஏறி நின்று பார்த்தால் பளிங்கால் ஆனது போல் இருக்கும் வயல்’’ என்றார்.

அதன் மேல் சிறிய பறவைகள் வந்து அமர்ந்தால் கூட உடம்பு உலுக்கிக்கொள்ளும். வயலைப் பார்ப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வயல் அருகே சென்று பார்த்துக் கொண்டிருப்பார். வேலை இல்லை என்றாலும் கூட வரப்பிலேதான் அமர்ந்திருப்பார். பாயை அங்கேயே விரித்து படுத்து தூங்கிக்கொள்வதும் உண்டு. வயலை விரும்புகிறவன் அதில் விழுந்துவிடுவான். பெண்ணாசையைவிட பொன்னாசையைவிட மண்ணாசை மிகப்பெரியது என்றார் அவர். பசுமை தழைத்து மேலே வரும் பயிர் வேறு எதையுமே நினைக்கவிடாது.

இரவில் கனவில் கூட அதுதான் வந்து கொண்டிருக்கும். காலை எழுந்ததுமே தண்ணீர் கூட குடிக்காமல் வயலை நோக்கித்தான் ஓடத்தோன்றும். ஒருமுறை அவர் வயல் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. பொன்நிற மணிகள். ஒரு சாண் அளவுக்கு நீளமானவை அவை. மாலையில் காற்று கடந்து செல்லும்போது ஆயிரம் கொலுசுகள் குலுங்கும் ஒலி கேட்டது. அறுவடைக்குத் தயாரான வயல் என்பது பொன்னேதான். கரையில் இருந்து பார்க்கும்போது அந்தி வெயிலில் அது பொன்னைவிட அதிகமான வெளிச்சத்தை, பிரகாசத்தைக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

அறுவடைக்கு ஆட்கள் ராயலசீமாவில் இருந்துதான் வரவேண்டும். அவர்கள் ஒரு பகுதியிலிருந்து அறுவடை செய்துகொண்டே வருவார்கள் அவர்களுக்காக அவர் காத்திருந்தார். அந்த முறை அறுவடை செய்து முடித்த பிறகு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு திருப்பதி சென்று வரவேண்டுமென்று எண்ணியிருந்தார். ஆனால் யாரும் நினைத்திருக்காதபடி வானம் கறுத்து மழை வந்தது. அந்த வருடத்தின் மிகப்பெரிய புயல் அது. மழை வருவதை தெரிந்துகொண்டதும் அவர் மடைகளைத் திறந்துவிடுவதற்காக வயலுக்குச் சென்றார்.

வயலில் அனைத்து மடைகளையும் திறந்து விட்டபிறகு கூட அங்கிருந்து வர மனமில்லாமல் குடையுடன் வரப்பிலேயே நின்று கொண்டிருந்தார். வானமே கிழிந்து தலைமேல் விழுவது போல மழை பொழிந்தது. மிகப்பெரிய அருவிக்கு அடியில் நின்று கொண்டிருப்பது போல. கை நீட்டிப்பார்த்தால் அந்தக் கையைப் பார்க்க முடியாத அளவுக்கு மழைத்திரை. ஆனாலும், வீட்டுக்கு போகத் தோன்றவில்லை. இரவில் நெடுநேரம் வரை அங்கிருந்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்குச் சென்றார்.

பிள்ளைகளை வீட்டுக்குள் செல்லும்படி சொல்லிவிட்டு ஏரியைத் திறப்பதைப் பற்றி பேசுவதற்காக அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றார். கோயிலிலேயே பேச்சு முடிந்து விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏதோ ஓசை கேட்டது. பலர் அலறுவது போன்ற சத்தம். நல்ல இருள். ஓடிச் சென்று ஒரு மண்டபத்தின் மேலேறி பார்த்தபோது அருகிலிருந்த கல்மண்டபங்கள் அனைத்தும் மூழ்கும்வரை வெள்ளம் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தார். கிருஷ்ணா பெருகிக் கரைக்கு வந்துவிட்டது.

தன்னுடைய குடும்பம் என்ன ஆகும் என்று பயம் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. எந்த திசை என்பது கூடத் தெரியவில்லை. ஒவ்வொரு மின்னலுக்கும் தண்ணீர் கூடிக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அங்கேயே நின்று அலறித் துடித்தார். தண்ணீரில் பாய்ந்து நீந்திச் சென்றாலும் கூட தண்ணீரின் ஒழுக்கு அவரை அடித்துச் சென்றது. எங்கோ ஒரு பனைமரத்தில் தொற்றி ஏறி அமர்ந்து கொண்டார். காலையில் பார்த்தபோது பனைமரத்தின் முக்கால் பங்கு அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

சுற்றிலும் தண்ணீர் அன்றி எதுவுமே இல்லை. இரண்டு நாட்கள் பனைமரத்தின் உச்சியிலேயே தொற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார். மூன்றாவது நாள் அவரை படகில் வந்து மீட்டுக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தனர். தன்னுடைய பிள்ளைகள் என்ன ஆயினர் மனைவி குடும்பம் என்ன ஆயினர் என்று தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கூடங்கள் தோறும் கதறியபடி அலைந்தார். அவர்கள் தென்படவே இல்லை. ஏழு நாட்களுக்குப்பிறகு வெள்ளம் முழுமையாக வடிந்து நிலம் முழுக்க சேற்றுப்பரப்பாக மாறியது.

அவர் இறங்கி தன் வீடிருந்த இடத்திற்கு சென்றார். மண்ணில் கட்டப்பட்டிருந்த வீடு இருந்த தடமே தெரியாமல் கலைந்து அழிந்து சென்றுவிட்டிருந்தது. கன்றுகள் இல்லை. அவரது வயலும் சேறால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு ஊர் வயல் வாழ்க்கை இருந்ததற்கான ஒரு சான்றும் இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக சேறு இருப்பது போலிருந்தது அந்தப் பகுதி. அவர் அங்கே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். மனதுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று.

திரும்பி தன் இடுப்பில் கட்டியிருந்த ஆடையை எடுத்து கிழித்து அரை ஆடை மாதிரி கட்டிக் கொண்டார். வடக்கு நோக்கி நடந்தார். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு காசிக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை துறவிதான். திரும்பி ஊருக்குச் செல்லவோ அந்த வயலையோ மண்ணையோ பார்க்கவோ இல்லை.  இயல்பான குரலில் ‘‘இதுதான் தம்பி கதை’’ என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு மின்னல் அடித்தது. அவரை நான் முன்பு பார்த்திருக்கிறேன்.

‘‘நான் உங்களை முன்பு பார்த்திருக்கிறேன். இதே கதையை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ என்று சொன்னேன். ‘‘எப்போது?’’ என்றார். ‘‘நான் இளைஞனாக இருந்தபோது இதே போல வீட்டைவிட்டு வந்து காசியிலே ஒரு துறவி மாதிரி இருந்தேன். படிக்கட்டில் வாழ்ந்திருந்தபோது ஒருமுறை உங்களைப் பார்த்தேன். இதே கதையை சொன்னீர்கள்’’ என்றேன். ‘‘சொல்லியிருப்பேன்’’ என்று அவர் சொன்னார்.

அப்போது சொன்ன அதே உணர்வுகளும் அதே வார்த்தைகளுமாக அதைச் சொன்னார் என்று தோன்றியது. ஒரு தேர்ந்த புனைகதையாளனுக்குரிய கதை நுட்பத்துடன், விவரணைகளுடன் அந்தக் கதை இருந்தது. அதைச் சொல்லிச் சொல்லி அவர் பெரிது பண்ணிக் கொண்டாரா அல்லது அவருக்கு மனதில் வார்த்தை வார்த்தையாக அந்தக் கதை அப்படியே பதிந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது யோசிக்கும்போது அப்படி ஒரு கதையைத் துல்லியமாகச் சொல்ல ஆரம்பிக்கும்போதே அந்தக் கதையிலிருந்து அவர் விலகிவிட்டார் என்று தோன்றியது. அந்தக் கதையை சொல்லும்போது, அது ஒரு மனிதனுடைய கதையாகும்போது அது அவருடைய கதையாக அல்லாமல் ஆகிவிட்டது. துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான். அதைத்தான் இலக்கியம் இன்றுவரைக்கும் செய்து வருகிறது.

 சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. அப்துல் ஷுக்கூர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய ‘நூறு நாற்காலிகள்’ என்னும் நீள்கதை மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப் பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார்.

நான் அமைப்பு சார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப் போல வீண் வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. காரணம், அவர் நடத்தும் டீக்கடையிலேயே அந்தக் கூட்டம் நடக்கும் என்றார். சென்ற சில மாதங்களாக மாதம் ஒருமுறை அந்த டீக்கடையிலேயே ஷுக்கூர் இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்தி வருகிறார். கேரளத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் தலைச்சேரி - கண்ணூர் சாலையில் உள்ள பெடயங்கோடு என்னும் கிராமம் அது.

‘ஜனவரி மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறும். பயணச் செலவு ஏதும் தரமுடியாது. விற்கும் நூல்களின் பணத்தைக்கூட நோயுற்றிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு அளிக்கவிருக்கிறேன்’’ என்றார். அந்த லட்சியவாதம் எனக்குப் பிடித்திருந்தது. ‘‘வருகிறேன்’’ என்றேன். ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது.

என் வழக்கமான பயணத் தோழர்கள் கிருஷ்ணன், ராஜமாணிக்கம் இருவரையும் அழைத்தேன். திருப்பூர் நண்பர் கதிரின் காரிலேயே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதை ஒரு விரிவான பயணமாக ஆக்கிக்கொண்டோம். 2016 ஜனவரி இரண்டாம் தேதி கோவையிலிருந்து  கிளம்பி, மானந்தவாடி அருகே உள்ள இடைக்கல் என்னும் கற்கால பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்துவிட்டு மாலையில் கண்ணனூரில் தங்கினோம். காலையில் கண்ணனூர் கோட்டையைப் பார்த்துவிட்டு ஷுக்கூர் வாழும் பெடயங்கோடு என்னும் ஊரை விசாரித்து வழிதேடிச் சென்றோம்.

பெடயங்கோட்டை அணுகியபின் ஷுக்கூரைப் பற்றி கேட்கவேண்டுமே என நினைத்து பார்த்துக்கொண்டே வந்தோம். பெடயங்கோடு மிகச்சிறிய ஊர். ஆகவே கடந்து சென்றுவிட்டோம். மீண்டும் வழி விசாரித்துத் திரும்பி வந்தோம். அங்கே சாலையோரத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஷுக்கூர் பற்றி கேட்டோம். ஆச்சரியமாக, கடைக்காரர் முகம் மலர்ந்து ‘‘ஷுக்கூர் இக்காவா? தெரியாம இருக்குமா?’’ என்றார். அவர் பெயர் லத்தீஃப். அவரும் ஒரு கவிஞர், மூன்று தொகுதிகள் பிரசுரித்திருக்கிறார். ‘‘அதோ அந்தக்கடைதான். நானும் வருவேன்’’ என்றார்.

நாங்கள் மெல்லச் சென்றபோது சாலையோரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றிருந்த  ஷுக்கூர், எங்களை மறித்து கை காட்டி அழைத்தார். நாங்கள் கடந்து செல்லும்போதே அவர் பார்த்துவிட்டிருந்தார். என் பெயர் எழுதப்பட்ட தட்டி சாலையோரமாக இருந்தது. ‘‘இதுதான் என் கடை’’ என்றார் ஷுக்கூர். சின்னஞ்சிறிய டீக்கடை. நான் இன்னும் சற்று பெரிய கடையை எதிர்பார்த்தேன். அங்கே எப்படி கூட்டம் நடத்துவது என்று தெரியவில்லை. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை.

ஷுக்கூர் சைக்கிளில் மீன் வாங்கிக்கொண்டுவந்து தெருத்தெருவாகக் கூவி விற்கும் தொழிலைத்தான் இருபதாண்டுகளாகச் செய்துவந்தார். அதற்குமுன் மண்வெட்டும் கூலித்தொழிலை பத்தாண்டு காலம் செய்தார். அவரது மகன் துபாயில் வேலைக்குப் போனபின் ஓராண்டாகத்தான் டீக்கடை நடத்துகிறார். பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனால் எளிய வாழ்க்கைக்கு அது போதும் என்றார்.

ஷுக்கூருக்கு ஐந்தாம் வகுப்புதான் படிப்பு. சுயமாக வாசிக்கக் கற்று, அவரே இலக்கியத்தை வந்தடைந்தார். இலக்கியத்தின் அடிப்படைகளை அவருக்கு எவரும் சொல்லித் தரவில்லை, அவரே வாழ்க்கையைக் கொண்டு இலக்கியத்தை அடையாளம் கண்டார். வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.

‘‘நான் மீன் அளவுக்கே புத்தகங்களையும் விற்றிருக்கிறேன்’’ என்றார் ஷுக்கூர். ‘‘ஆரம்பத்தில் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள். ஆனால் என் ஆர்வத்தைப் பார்த்தபின் கம்யூனிஸ்ட்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்’’ என்றார். தான் விற்கும் எந்த நூலையும் முதலில் தானே வாசித்துவிடவேண்டும் என்பது ஷுக்கூரின் நெறி. அந்நூலைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்வார். நூலைப் பற்றி அவரே விரிவாக அறிமுகமும் செய்வார். அவருக்கென ஒரு சிறிய இலக்கிய வாசகர் கூட்டம் உருவாகி வந்தது. அதன்பின்னரே ஷுக்கூர் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.

அடித்தளத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தவர்கள், வழக்கமாக தங்கள் போராட்டங்களைப் பற்றிய கவிதைகளையும் அரசியல் கருத்துக்களையும்தான் எழுதுவது வழக்கம். ஷுக்கூர் எழுதியவை அவரது வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய ஆழமான தத்துவநோக்குள்ள கவிதைகள். நவீனகவிதைகள் அவை. டீக்கடை வைத்தபின் கூடவே பெடயங்கோட்டில் வீடு வீடாக இலக்கியத்தை அறிமுகம் செய்து வருகிறார் ஷுக்கூர்.  என் ‘நூறு சிம்ஹாசனங்ஙள்’ நூலை மட்டும் 450 பிரதிகள் அச்சிட்டு அந்த ஊரில் வெளியிட்டிருக்கிறார். இந்த டீக்கடை இலக்கியம் அவரது கனவுகளில் ஒன்று. இதை ஒரு வகை தனிப்பட்ட தவமாகவே அவர் நினைக்கிறார்.

ஷுக்கூர் இக்காவின் வீட்டுக்குச் சென்றோம். எங்களில் இருவர் சைவர்கள். ‘‘இங்கே அந்த மாதிரி நல்ல சாப்பாடு கிடைக்காதே’’ என்றார் ஷுக்குர். நான் சிரித்துவிட்டேன். நானும் நண்பர்களும் அவர் இல்லத்தில் நெய்ச்சோறும் சிக்கனும் சாப்பிட்டோம். அவரது மனைவியும் திருமணமான மகளும் வீட்டில் இருந்தனர். அவர்களின் சமையல் வடக்கு மலபாருக்கே உரிய மிதமான காரமுள்ள சுவை கொண்டது.
 
ஷுக்கூர் எங்களை அருகில் உள்ள வளைபட்டணம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். நதிக்கரையில் கோயில் கொண்டுள்ள பகவதியின் காவலாளிகளாகக் கருதப்படும் மிகப்பெரிய மீன்கள் நிறைந்த நீர்ப்பெருக்கைப் பார்த்தோம். ‘‘பாதுகாக்கப்பட்ட மீன்கள் இவை. இலக்கியமும் இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும்’’ என்றார் ஷுக்கூர் சிரித்தபடி.

அந்த நதிக்கரையில்தான் படகுகள் வந்து சேரும் படித்துறை இருந்தது. கடலில் இருந்து மீன், படகுகள் வழியாக அங்கே வந்துசேரும். அங்கே அதிகாலையிலேயே சென்று ஏலத்தில் மீனை எடுத்து சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விற்பதுதான் ஷுக்கூரின் வழக்கம். மழைக்காலத்தில் மீன் விற்பது மிகக்கடினம். முழுநேரமும் நனைந்தாகவேண்டும். ஆனால் மீன் சீக்கிரம் அழுகாது. வெயிலில் மீன் அழுகி நஷ்டம் ஏற்படும்.

‘‘அன்றைக்கெல்லாம் நல்ல மீன் சாப்பிட்டதே இல்லை. மிஞ்சிப் போன அழுகிய மீன்தான் எப்போதும் உணவு’’ என்று ஷுக்கூர் சிரித்தபடி சொன்னார். தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார். ஆகவே அவை எளிய கதைகளாக மாறிவிட்டன. கடந்து வருவதற்கு இலக்கியம் உதவியிருக்கிறது மதியம் இரண்டரை மணிக்குக் கூட்டம். வழக்கமாக முப்பது பேர்தான் வருவார்கள்.

ஆனால் அக்கூட்டம் பற்றி ‘மாத்ருபூமி’, ‘மலையாள மனோரமா’ நாளிதழ்களில் என் நண்பர்களான இதழியலாளர்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தமையால் அன்று நூறு பேர் வந்திருந்தனர். இரு சக்கர வண்டிகளிலும் கார்களிலும் வந்துகொண்டே இருந்தனர். கணிசமானவர்கள் கண்ணனூர், தலைச்சேரி முதலிய நகரங்களிலிருந்து வந்திருந்தனர். கடைக்குள் இடமில்லாமல் பாதிப் பேர் சாலையில் அமர்ந்திருக்க நேரிட்டது.

வாசகர்களுடன் பரவலாக அறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் பலர் கலந்துகொண்டனர். நால்வர் நூலைப் பற்றிப் பேசியபின், நான் சிற்றுரையாற்றி  கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அத்தனை பேரும் அந்நாவலை வாசித்திருந்தனர். அதற்குச் சமானமான பிற நாவல்களுடன் ஒப்பிட்டும் பேசினர். உற்சாகமான உரையாடல். கூரிய மதிப்பீடுகள். மாலை ஆறு மணிக்கு சந்திப்பு முடிந்த பின்னரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இல்லாமல் கேரளத்தில் இலக்கியக்கூட்டங்கள் முடிவடைவதில்லை.

‘‘நவீன இலக்கியத்தை நாங்கள் டீக்கடைகளில்தான் பேசிப் பேசி உருவாக்கினோம்’’ என்றேன். ‘‘முன்பு கேரளத்தில் கம்யூனிசமும் டீக்கடைகளில் உருவானதுதான்’’ என்றார் தாஹா மாடாயி என்னும் விமர்சகர். ‘சிங்கிள் டீ இலக்கியம்’ என்றுதான் நவீன இலக்கியத்தை பழைய இலக்கியவாதிகள் சொல்வார்கள்.

ஏழு மணி வரை அங்கே நின்றபடியே இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு விடைபெற்றுக் கிளம்பினேன். ஷுக்கூர் இக்கா என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘‘முதல் கூட்டத்தை கன்னட எழுத்தாளர் சிவராம காரந்தின் ‘சோமனதுடி’ பற்றி நடத்தினோம். அந்த அளவுக்கு தார்மீக வேகம் உள்ள நாவல் இது. எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என்றார். நான் சம்பிரதாயமாக ஏதும் சொல்ல விரும்பவில்லை. ‘‘இக்கா... மறுபடியும் சந்திப்போம்’’ என்று மட்டும் சொன்னேன்.‘

‘மாத்ருபூமி’ நாளிதழ் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் நிருபரையும் புகைப்படக்காரரையும் அனுப்பியிருந்தது. அவர்களின் காரிலேயே நான் கோழிக்கோடு கிளம்பினேன். அங்கிருந்து எர்ணாகுளம் வழியாக நாகர்கோவில் வந்தேன். திரும்பும் வழி முழுக்க ஒரே விஷயத்தைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இலக்கியமென்பது உணவும் உறைவிடமும் பிற வசதிகளும் அமைந்துவிட்டவர்களுக்கான ஒருவகை கேளிக்கை என்னும் எண்ணம் உள்ளது. மேலும் மேலும் உலகியல் லாபங்களைச் சம்பாதிப்பதற்கு இலக்கியம் எதிரானது என்னும் எண்ணம் உள்ளது.

ஆனால் ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது. இத்தனை வயதில் ஷுக்கூர் இக்கா எதற்காக இப்பணியைச் செய்கிறார்? அடையாளமோ, புகழோ தேடி அல்ல. அது அவர் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை அளிக்கிறது. வெற்றியோ, பணமோ, புகழோ அல்ல... லட்சியவாதமே வாழ்க்கைக்கு இலக்கையும் நிறைவையும் அளிக்கமுடியும். இலக்கியத்தின் சாராம்சமாக இருப்பது லட்சியவாதமே. அதைத்தான் ஷுக்கூர் இக்காவின் கனிந்த முகம் எனக்குக் காட்டியது.

வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.

தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார்.

ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது.

பரிமேலழகர் உரை
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து. ('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.).

மணக்குடவர் உரை
இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

Thirukkural - Management - Perseverance
Valluvar uses a simile in Kural 624. A person who marches ahead towards his goal by shattering or overcoming all the barriers on the way  is similar to a determined and powerful bull that pulls its cart in spite of obstacles, challenges, and hardships. Because of a person's determination to achieve his goals, that person's miseries will become miserable.

Trouble is troubled by him who bull like
Drags his cart through every hurdle.

Challenge your challenges to become a person of importance. We all know that a person who moved a mountain did that by cutting away small blocks of stones. Had he thought that the mountain was too big for him to remove, he would have been overwhelmed by that and that thought would have discouraged him from attempting that indomitable task. He achieved that with sheer persistence. Persistence always pays.