குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
பொருள்
நுண்ணிய - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.
பல - ஒன்றுக்குமேற்பட்டவை
கற்பினும் - கல் - கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி; kaṟkai n. கல்-. Learning; படிக்கை. கற்கை நன்றே. (நறுந்.).
மற்றும் - மேலும்; மீண்டும்.
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப்பெறும்திரிபு.
உண்மை - உள்ளது; இயல்பு உள்ளதன்மை; மெய்ம்மை நேர்மை ஊழ்
அறிவே - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
மிகும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்.
முழுப்பொருள்
ஒருவர் எவ்வளவு நுட்பமாக பல நூல்களை கற்றாலும் ஊழின் (தலைவிதியின்) படி எந்த அளவு அறிவு நம்மில் இருக்க வேண்டுமோ அந்த அளவே நம்மில் எஞ்சி இருக்கும் என்கிறது இக்குறள்.
அதற்கு உதாரணமாக கர்ணன் பரசுராமரிடம் பெற்ற சாபத்தைச் சொல்லலாம். அச்சாபத்தினால், பிரம்ம அத்திரத்தை தகுந்த நேரத்தில் மகாபாரதத்தில் தன்னுடைய எதிரியாம் அருச்சுனம் மேல் எறியமுடியாமல் போனது. கற்றுத் தேர்ந்தது ஊழ் வலியின் முன் பயனற்று போனது,
இரண்டாயிரம் வருடங்களுக்குள்ளான சரித்திரப்பதிவில், இளங்கோ அடிகள் தனக்குத்தான் என்று கணிக்கப்பட்ட மணிமுடியைத் துறந்து, துறவியான கதை நாமெல்லோரும் அறிவோம். இதில் கணித்தவருடைய அறிவை, மற்றவருக்கு விதிக்கப்பட்ட பாதை, மாற்றியது.
நாலடியாரின் (341) பாடல்

“கனம் பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும்” என்கிறது.
பழமொழிப்பாடல் (203),
“பொறியின் வகைய கருமம்
அதனால் அறிவினை யூழே அடும்” என்கிறது.
இப்பாடல் கல்வியினும் ஊழின் வலி பெரிது என்கிறது. இதற்கு மாற்றாக “விதியை மதியால் வெல்லலாம்” என்னும் கூற்றும் வழக்கத்தில் உண்டு.
மேலும்: அஷோக் உரை
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-6 இல் இப்படி வருகிறது

“ஊழ் என்பது ஒருகையில் வாளும் மறுகையில் மலரும் கொண்ட விந்தைப்பெருந்தெய்வம்” என்றார் தென்தமிழ்நிலத்து நிமித்திகர் சாத்தனார். “நஞ்சும் அமுதும்கொண்டு அது வாழ்வை நெய்கிறதென்கின்றன நூல்கள். எவருக்கும் அது முற்றாக கனிந்ததில்லை. எவரையும் கைவிட்டதுமில்லை.
பரிமேலழகர் உரை
நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.).
மணக்குடவர் உரை
நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).

Thirukkural - Management - Personality Development - Heredity
Kural 373 highlights the role of heredity in personality development.
This view is contrary to the belief that one's environment plays a major role in shaping one's personality. Even if a person has read and keeps reading the best of the books and learns a lot from that reading, education and training, what remains in him even after so much learning is his innate or natural quality.
A man may have studied many subtle
But what survives is his innate wisdom.
In other words, what is deep seated in one's psychophysical make up cannot be covered superficially because what is deeply ingrained in one keeps surfacing now and then. So, tuition is not superior to intuition.