குறள் 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.
நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.
-> ஒழுக்கம் (பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் (திருக்குறள்))
-> நன்மை, சிறப்பு, நயம் (பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது (திருக்குறள்)
இலன் - இல்லாதவன்
நயனிலன் - நயன் இல்லாத; நளினம் இல்லாதல் ஒழுக்கம் இல்லாத; முறை இல்லாத; அறம் இல்லாத ஒருவன்.
என்பது - eṉpatu n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )
என்பது - என்று என்பதை.
சொல்லும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.
சொல்லும் - சுட்டிக்காட்டும் / எடுத்துக் காட்டும் / காட்டிக் கொடுத்து விடும்.
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
பயனில - பயன் இல்லாத / உதவாத (கருத்து / பொருள் / பேச்சு) பற்றி.
பாரித்து - பாரி-த்தல் - pāri- 11 v. cf. sphāri. intr.1. To spread, expand; to abound; பரவுதல்.இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706). 2. Tobe bulky, huge; பருத்தல். Colloq. 3. To increase; மிகுதியாதல். தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து (பெரியபு. இளையான். 9). 4. Toarise, appear, come into being; தோன்றுதல்.பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442).5. To prepare; ஆயத்தப்படுதல். பாயிய வெழுந்தவேங்கை பாரிக்குமளவில் (சூளா. துற. 19).--tr. 1.To foster; வளர்த்தல். பண்பின்மை பாரிக்கு நோய்(குறள், 851). 2. To cause to appear; தோன்றச்செய்தல். 3. To cause to be obtained;அமைத்துக்கொடுத்தல். பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால் (அரிசமய. பத்திசா. 98). 4. Tomake, form, construct, create, constitute; உண்டாக்குதல். (W.) 5. To fill up, complete;நிறைத்தல். பாரித்துள்ள இப்பண்டமும் (திருவிளை.குண்டோ. 16). 6. To wear, as ornaments; அணிதல். கைவளை பாரித்தார் (இராமநா. பால. 21). 7.To worship with flowers; அருச்சித்தல். தடமலரெட
உரைக்கும் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
பயனில உரைக்கும் - வீணலப்பு (வெட்டிப் பேச்சே)
உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை
முழுப்பொருள்
கருத்துக்கள் எதுவும் இல்லாத நன்மை விளைவிக்காத, பயன் இல்லாத, உதவாத, களர் நிலைப் பொருளை பற்றி விரிவாக விரித்துரைக்கும் வீணரின் வீணலப்பு (வெட்டிப் பேச்சே) காட்டி கொடுத்துவிடும் அவர் எத்தகையவர் அவரின் போக்கு எத்தகையவை என்று.
அத்தகைய வீணன் அவர் உணர்வினில் ஒழுக்கமில்லாத, முறையில்லாத, அறமில்லாத, நளினமில்லாத ஒருவன் என்று. அத்தகையவன் அறத்தை, ஒழுக்கத்தை பேணித் தரத்தோடு வாழ்வைத் வாழ்வும் தகுதியோடு இல்லாதவர்.
அதுமட்டும் இன்றி அத்தகைய வீணின் பேசுபவருடைய முழு அறிவின்மையும், பேதமையும் வெளிபடும்.
ஒருவர் பேசுவது மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அது வீண் பேச்சு தான். அது மற்றவருக்கு நேரம் விடயம் தான்.
ஒளவையார் இதையே ஒரு சில வார்த்தைகளில் சொல்லுக்கு
ஆத்திச்சூடியில் இலக்கணம் வகுத்துள்ளார்.
ஆத்திச்சூடி |
உரை |
மிகைபடச் சொல்லேல் |
உரையாடும்
போது எதையும் மிகைப்படுத்திக் கூறாதே |
சித்திரம் பேசேல் |
பொய்யான
வார்தைகளை மெய் போல் பேசாதே |
ஞயம்பட உரை |
பிறர் மகிழும்படி பேசு |
வல்லமை பேசேல் |
உன்னுடைய
திறமையை நீயே புகழ்ந்து கொள்ளக் கூடாது. |
வஞ்சகம் பேசேல் |
கபடச் சொற்களை பேசாதே |
கண்டொன்று சொல்லேல் |
கண்ணாற் கண்டதற்கு மாறாக சொல்லாதே |
நொய்ய உரையேல் |
இழிவான
மொழிகளைப் பேசாதே |
பிழைபடச் சொல்லேல் |
குற்றம்
உண்டாகும் படி எதையும் பேசாதே. |
மொழிவது அற மொழி |
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல் |
வெட்டெனப் பேசேல் |
யாரிடமும்
கடுமையான சொற்களைக் கூறக்கூடாது. |
அழகு அலாதன செய்யேல் |
இழிவான
செயல்களை செய்யாதே |
மேலும்: நன்றி
அவனிவன் பக்கங்கள் அஷோக்
மேலும்: நன்றி (
Moving Moon)
கருத்தென ஏதும் இல்லாக்
.. களர்நிலைப் பொருளை ஒட்டி
விரித்துரை செய்யும் அந்த
.. வீணரின் வெட்டிப் பேச்சே
உரைத்திடும் அவர்தம் போக்கை,
.. உணர்வினில் அறத்தைப் பேணித்
தரத்தொடு வாழ்வைத் தாங்கும்
.. தகுதியோ டில்லார் என்றே
மேலும்
எளிமையா சொன்னாத்தான் நன்னாச் சொல்லறதா அர்த்தம். பாக்கியெல்லாம் வெறும் சொல் விரயம்தான்.
ஒப்புமை ”பாரித்தேன் தரும நுண்ணூல்” (சீவக.214)
உதாரணம்
(நன்றி:
அம்மன் தரிசனம்)
பயனில்லாதவற்றை ஒருவன் பேசிக் கொண்டிருந்தால் அப்பேச்சு அவன் இங்கிதமற்றவன் என்பதையே சொல்லும் என்கிறார் அவர்.
ஒரு பொதுக்கூட்டம். அதற்கு தலைமை தாங்குபவர் மிகவும் முக்கியமான நபர். அங்கும் இங்கும் விமானத்தில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபர்.
அவருடைய தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பலர் பேசினார்கள். அதில் ஒருவர் கடுகளவு விஷயத்தைக் கடலளவாக விரித்துப் பேசிக்கொண்டே இருந்தார். தலைமை தாங்கும் நபருக்கு சீக்கிரம் மேடையை விட்டு இறங்கி விமானத்தைச் சரியான நேரத்தில் அடைய வேண்டிய அவசரம். அந்த அவசரத்தின் அவஸ்தை புரியாமல், பேசுகிறவர் தன் வித்தகத்தைக் காட்டுவதாக நினைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.
சிரிக்கும்போது முகத்தில் பல் ஒளி விடுவது மாதிரி, வீட்டில் ஒளிவிடும் விளக்கிற்கு பல்பு என்று பெயர் வைத்தான் தமிழன் என்ற ரீதியில் அவருடைய சொல் ஆராய்ச்சி வேறு... நீண்டு கொண்டிருந்தது.
தலைமைப் பொறுப்பை ஏற்றவருக்கு முகம் சிவந்துவிட்டது. எப்படியோ தப்பினால் போதும் என்று இடையிலேயே ஓடிவிட்டார்.
மறுநாள் விழா ஏற்பாட்டாளருக்கு அவர் தொலைபேசியில் பேசிச் சொன்ன செய்தி இதுதான்:
“என்னய்யா இது? அந்த ஆளைப் புலவர் என்று சொல்லுகிறீர்கள். அவருக்கு உடனிருப்பவர்களின் உணர்வும், சபை நாகரிகமும் கூடப் புலப்படவில்லையே! அந்த ஆள் என்னை மேடையில் வைத்துக்கொண்டே ஒரு மணி நேரம் பேசிவிட்டான். ‘நான் ஒரு முட்டாள்’ என்பதை இவ்வளவு விரிவாகப் பேசிய முதல் ஆள் அந்த நபர்தான்” என்றார்.
நயம் என்ற சொல்லுக்கு வேதசாஸ்திரம் என்ற ஒரு பொருளும் உண்டு.
பயனற்ற பேச்சைப் பேசும் போது இவன் சாஸ்திரமறியாதவன் என்பதும் புலப்படும் என்ற கருத்து இக்குறளில் உள்ளது. நயம் என்பதற்கு மேன்மை என்ற பொருளும் உண்டு. வீண்பேச்சு பேசுகிறவன் மேன்மையற்றவன்தான். அவனை ‘நயனிலன்’ என்பது பொருத்தம்தானே!
வ.உ.சிதம்பரனார் உ ரை
பொருள்: பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன இல்லாத சொற்களை விரித்துப் பேசும் பேச்சு, நயன் இலன் என்பது சொல்லும் - (அவ்வாறு பேசுவோன்) நன்மை இல்லாதவன் என்பதைக் கூறும்.
கருத்து: பயனில சொல்லுவான் நல்லவன் அல்லன் என்று கருதப்படுவான்.
பரிமேலழகர் உரை
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே; நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன்' என்பதனை உரைக்கும்.
விளக்கம்
(உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)
மணக்குடவர் உரை
நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.
மு.வ உரை
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
several kinds of உரை, or modes of explanation are given by Tamil Gram marians. The author of காரிகை has given four, viz.: 1. கருத்துரை, the main sentiment or scope of the text explained, also called தாற்பரியவுரை. 2. பதவுரை, verbal explana tion, or interpretation, word by word, or clause by clause, also called கண்ணழிவுரை. 3. பொழிப்புரை, the substance of the text omitting rhetorical ornament, and ad juncts, or a free rendering of the text without interruption, also called பொழிப்புத் திரட்டுரை and பிண்டவுரை. --Note. The latter is the same as பதவுரை would be without the words of the text interspersed. 4. விரித்துரை, explanation at large, comment or exposition with proofs, illustrations, &c., also called அலகவுரை and விரியுரை; any of the preceding three, or any other kind of explanation may be included in this last.
According to நன்னூல், உரை is divided into tow general classes, viz.: காண்டிகையுரை and விருத்தியுரை. 1. காண்டிகையுரை, brief exposition, or explanation of the text embracing five sub-divisions. (a) கருத்துரை, the scope of the text. (b) பதப்பொருள், verbal rendering being either as பதவுரை or as the scope and definition of பொழிப்புரை, given above, (c) உதாரணம், example for illustration. (d) வினா, anticipating objections, (lit.) proposing questions. (e) விடை, answering such objec tions or questions as may possibly occur. 2. விருத்தியுரை, copious or complete explana tion embracing fourteen sub-divisions. 1. பாடம், giving the text or verse to be ex plained with different readings and choice exposition. 2. கருத்துரை, the general scope, or import of the text, as in காண்டிகை. 3. சொல்வகை, giving the parts of speech, or showing the grammatical connection when necessary to clear away obscurities. 4. சொ ற்பொருள், giving equivalent, literal words, or clauses as பதப்பொருள், in காண்டிகை, verb al renderings, &c. 5. தொகுத்துரை, a free rendering of the text as பொழிப்புரை, above. 6. உதாரணம், illustration by examples, as above. 7. வினா, anticipating objections, or raising questions as before. 8. விடை, an swering such objections or giving reasons in support of the statements in the text. 9. விசேடம், special explanation, particular remarks. 1. விரிவு, supplying ellipses as of cases or otherwise. 11. அதிகாரம், determin ing the meaning of doubtful terms by refer ence to the subjects under discussion, as be longing to such a head, &c., or according to another exposition pointing out the be ginning and ending of the discussion of the different subjects respectively, the opinions of different commentators. 12. துணிவு, de ciding the meaning of terms concerning which there may be diversity of opinion. 13. பயன், inference, applications or recapi tulation to show what is to be learnt by the text. 14. ஆசிரியவசனம், quotations, or textuary proofs from other authors. (p.)