Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Management_Perseverance. Show all posts
Showing posts with label Management_Perseverance. Show all posts

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

குறள் 669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

உறவு - உறுகை; பொருத்தம்; சேர்க்கை; சம்பந்தம்; சுற்றம்; நட்பு; ஒற்றுமை; விருப்பம்.
உறவரினும் - உறவாடுதல் - உறவுகொண்டாடுதல்; நட்புச்செய்தல்.

செய்க - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று.

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

பயக்கும் - பயத்தல் - paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come into existence; to be made; உண்டாதல் (திவா.) 3.To take place; to be productive of good or evil; பலித்தல் நல்வினை பயந்த தென்னா (கம்பரா.கார்முக. 36). 4. To be obtained; கிடைத்தல் (சூடா.)--tr. 1. To produce, create; படைத்தல் தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும்(திருவாச. 5, 30). 2. To beget, generate, give birth to; பெறுதல் (திவா.) பராவரும் புதல்வரைப்பயக்க (கம்பரா. மந்தரை 47). 3. To give; கொடுத்தல் இன்னருள் பயந்து (தேவா. 775, 4). 4. To blossom; பூத்தல் தாமரை பயந்த வொண்கேழ்நூற்றித ழலரின் (புறநா. 27). 5. To compose;இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த . . . தமிழ்(தேவா. 201, 12).  ;;; paya-   12 v. intr. பச-. Tochange in hue or complexion, as the skinthrough love-sickness; to turn sallow throughaffliction; நிறம் வேறுபடுதல் மாமையொளி பயவாமை (திவ். இயற். திருவிருத். 50).  

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் பொழுது குறிக்கோளை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் பொழுது பல தடைகளும் துன்பங்களும் சுயசந்தேங்கங்களும் நிதி நெருக்கடியும் வறுமையும் மனசோர்வுகளும் சில சமயங்களில் உடலுக்கு நோய்களும் வரும். அத்துன்பங்கள் நம்மோடு தொடர்ந்து உறவாடும். ஆயினும் மனம் தளராமல் செயலின்கண் உறுதியுடன் (மனத்திட்பத்துடன் / வினைத்திட்பத்துடன்) அச்செயலை செய்து முடித்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் அச்செயலின் பலன் கிடைக்கும். அப்பலன் மனமகிழ்ச்சியாக இன்பமாக (புலன்களால் வரக்கூடியது இன்பம் அல்ல இருக்கும். தனக்கும் (தன் சுற்றத்தாருக்கும்) பயனுள்ளதாய் இருக்கும். 

மேலும், நாம் இங்கு காண வேண்டிய மற்றொன்று “செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை” என்று கூறுகிறார். பயன் தரக்கூடிய செயல்களை மட்டுமே செய்க. பயன் தராதவற்றை செய்யாதே என்றும் பொருள் கொள்ளலாம். மேலும் “செய்க” என்று உத்தரவு இடுகிறார் திருவள்ளுவர் அதாவது பயன் தரக்கூடிய செயல்களை மன உறுதியுடன் செய்க. மன உறுதி இன்றி, செய்யும் செயலின் கண் வினைத்திட்பம் இல்லாமல் சோம்பி திரியாதே என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு செயலை அரைகுறையாக ஏனோதானோ என்று செய்யாதே என்றும் பொருள் கொள்ளலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க. (துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.

மு.வரதராசனார் உரை
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

Thirukkural - Management - Perseverance
Keep working with perseverance, assures Valluvar through Kural 669, even if you face indomitable 
hardships and pains on your way up. The end of any determined effort is happiness.

However great the hardship,
Pursue with firmness the happy end.

Charles Darwin said, “Struggle is a biological necessity.” Struggle is not only a biological necessity, but it is also a neurological necessity. Many research works have established that myelin irresponsible for attention, concentration, retention, and recollection. Myelin is a fatty layer around nerve cells. Formation of myelin is called myelination. Myelination is the process by which a fatty layer, called myelin, accumulates around nerve cells. Myelination enables nerve cells to transmit information faster and allows for more complex brain processes. Superior performance can happen, if there is proper myelination. Myelination can happen when there are mental challenges. Mental challenges make you persevere. 

English Meaning - As I taught a kid - Rajesh
"When we do a work with a goal in mind, we would or we might come across many challenges expectedly or unexpectedly. Yet, one should persevere with the goal in mind and complete the task. The result of completing the task would make us happy and its payoffs will benefit us. The challenges can be financial, personal, medical, external, resources etc. These challenges could potentialy stick with us. Hence, one should understand that challenges are part of the work. 
Also, thiruvalluvar says ""செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை”. He orders us to do work which would benefit. Meaning don't do work that doesn't benefit anyone. Don't waste time. Do work. "

Questions that I ask to the kid
Challenges expectedly or unexpectedly stick to us. What should we do? 

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


குறள் 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை.

திருவினை - நல்வினை, அறச்செயல்; முற்பிறப்பிற்செய்தபுண்ணியச்செயல்.

ஆக்கும் - ஆக்குதல் - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல்

முயற்று - முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

புகுத்தி - புகு-த்தல் - puku-   11 v. tr. Caus. of புகு¹-.1. To cause to enter; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 2. To insert, put in;உட்செலுத்துதல்.

விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
ஊக்கத்தின் கூடிய இடைவிடாத முயற்சி (அதற்கேற்ற கர்ம பலனாக) திருவினையை, நல்வினையை, செல்வத்தை, ஆக்கத்தை, பயனை தந்து ஒருவரை அவர் எண்ணிய இடத்திற்கு உயர்த்தும். அதேப்போல ஒருவர் முயலாது வினை செய்யாது இருந்தால் அவர் தன்னிடம் இருக்கும் செல்வத்தை (அறிவு உட்பட) சிறுக சிறுக இழப்பார். அதனால் வறுமை அவரது வாழ்வில் புகுந்துவிடும். இதனால் அவர் துன்பத்தை அனுபவிப்பார். 


இதையே ஔவையும் கொன்றை வேந்தனில், “ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு” என்று ஊக்கமிருப்பதன் சிறப்பைச் சொல்லுகிறார் ஊக்கும் விதமாக.

”செய்வினை மடிந்தோர்ச் சேர்ந்துறை விலளே
மையறு தாமரை மலர்மகள்” (பெருங்.2.17:39-40)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

Thirukkural - Management - Hard Working
A determined effort will get us fruitful results. The fruitful results include health, wealth, personal satisfaction, and professional success. Lack of that determined effort will get us poverty for sure. Kural 616 commands us to put in our best efforts to achieve things of significance in the end. Kural 616 is explained in Practice 30 'Perseverance' to reinforce the importance of consistency for sustained success.

Exertion leads to wealth,
Lack of it to want.

Determination terminates poverty and makes all the things a person desires possible. The word 'determination’ has other related phrases as ‘sustained effort,' 'deliberate action,' ‘conscious commitment.' So, be committed to converting your conception to a possibility.

Thirukkural - Management - Perseverance
As any outcome is the result of a corresponding perseverance, lack of perseverance will lead us to poverty instead of wealth, warns Kural 616.

Extension leads to wealth, 
Lack of it to want.

Kural 616 is discussed in 'Hard working' to highlight the importance of hard working for personal and professional success.

English Meaning - As I taught a kid - Rajesh
With perseverance, a determined effort will fetch us fruitful results that include health, wealth, personal satisfaction, professional success etc. Consistent deliberate action/efforts would grow us. However, Lack of effort, inaction will deplete our resources, put us in poverty and give us pain and difficulties. 

Questions that I ask to the kid
What does efforts leads to? What does inaction lead to?

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

குறள் 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

அதர் - வழி; முறைமை புழுதி நுண்மணல் ஆட்டின்கழுத்திலேதொங்கும்உறுப்பு.

வினாய்ச் - வினவுதல் - உசாவுதல்; விசாரணைசெய்தல்; பிறர்சொல்லக்கேட்டல்; கேள்விப்படுதல்; நினைதல்.

செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

அசைவு - ஆட்டம்; சலனம், அசைதல் சஞ்சலம் சோர்வு, தளர்வு வருத்தம் உண்கை.

இலா -  இல்லாத / இல்லாமல்

ஊக்கம் -  மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்

உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

ழை - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.

முழுப்பொருள்
சற்றும் சலனனும் சோர்வும் தளர்வும் வருத்தமும் இல்லாமல் ஊக்கத்துடன் ஒருவன் ஒரு செயலில் (அல்லது வாழ்வில்) ஈடுபடுவான் என்றால் அச்செயலின் பலன் (பொன் /செல்வம்/ வினைப்பயன்) அவனுடைய வீட்டின் வழியை தேடிச்செல்லும். 

சலனமற்ற சோர்வற்ற ஊக்கத்துடன் செயல்படுவோர்க்கு பயன் நிச்சயமாக கிட்டும். ஒருவன் ஊக்கத்தோடு முன்நோக்கி செல்லும் பொழுது பயனும் (அவன் ஊக்கத்திற்காக) அவனை நோக்கி வந்தால் அவன் அடையவேண்டிய பயனை விரைவிலேயே அடைவான் என்பதையும் நாம் இங்கு காணலாம். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“அசைவில் நோன்தாள்” (அகநா.29:1)
“தாழ்வில் உள்ளம்” (அகநா.4)

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு” (குறள் 610)

“முயற்சி திருவினையாக்கும்” (குறள் 616)

“மடியிலான், தாள் உளாள் தாமரையினாள்” (குறள் 617)

“மடியிலான் செல்வம்போல் மரம்நந்த” (பெருங் 3.5:20)

“ஊக்க வேந்தன் ஆக்கம் போல” (பெருங் 3.5:20)

“பொருள் ஊர்க்கே, வரும்வழி வினாய் உழந்து” (சீவக.2556)


 “ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.


பரிமேலழகர் உரை
அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.
(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும். நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

Thirukkural - Management - Perseverance
“Perseverance,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 862), “is continued steady effort to achieve an aim.” 

Three challenges for a superior in an organization are: 1) to motivate his direct reports for superior performance,2) to sustain their motivation and 3) he himself has to stay motivated. All three challenges demand perseverance. What will happen to a piece of iron in a place where gold can rust? For sure, that piece of iron will be eroded fast. A superior is like gold and his direct report is similar to a piece of iron. At least to sustain the motivation of his direct reports, a superior has to persevere.

There are evidences to support the power of motivation and determination to achieve things of  significance. There are also many tools and techniques to motivate others for superior performance. This Practice has included eleven Kurals to help us understand the concepts and practices related to motivation, sustaining motivation and staying motivated.

Wealth goes in search of and knocks at the doors of a person who has high energy and unswerving determination to achieve greater things, assures Kural 594.

To a man of unshaken vigour 
Wealth will ask and find its may.

A motivated person need not go in search of wealth since wealth goes in search of him. He is motivated just for the sake of motivation. For him wealth is the byproduct of his persistent efforts. A great thing about wealth is wealth believes in cause and effect relationship. Motivation to persevere is the cause and obtaining wealth is the effect of that cause. 

The belief 'overnight success' is an illusion. Overnight success takes twenty years. It is true that behind the success of every person there are many unsuccessful years. Perseverance is the pedal that helps you push through those unsuccessful years. Look around there are hundreds of examples of people who succeeded with sheer perseverance. Perseverance is also called grit. Grit is the attitude of not giving up.


English Meaning - As I taught a kid - Rajesh
Results/ Wealth / Success would find a way and go towards the person who consistently puts efforts and does his job with perseverance and unshaken vigor to achieve greater things in life. The belief 'overnight success' is an illusion. Overnight success takes twenty years. One has to do his job like a penance. Also remember, wealth is the byproduct of persistent efforts 

Questions that I ask to the kid
Where does results/wealth/success find a way and go?

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

குறள் 1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குடி -பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்

செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்.

மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

மடிதற்றுத் - தன் இடையுடையை இறுகக் கட்டிக்கொண்டு

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.


முந்து  - muntu   III. v. i. be or go before the rest, precede, come in front, முன்போ; முந்த, v. a. To take precedence, precede, to pass before, take the lead, go to the head, முற் பட

உறும் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

முந்துறும் - முன்வந்து உய்யும் வகை செய்யும்

முழுப்பொருள்
தன்னுடைய குடும்பம் (தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதரர்கள், மற்ற உற்றார் உறவினர்கள்), குடியை/குலத்தை சேர்ந்த மக்கள், ஊரை சேர்ந்த மக்கள் ஆகியோரின் வாழ்வு மேம்பட / வலிமையானதாக ஆக்கவேண்டும் அது நம் கடமை என்றெண்ணி அதற்கான செயலில் ஈடுபடுவார் என்றால் அவருக்கு தெய்வங்கள் இடையாடையை கட்டிக்கொண்டுத், தானே செய்வோர் முன் வந்து உதவும். தெய்வங்களை அழைக்கவேண்டியதில்லை. 

களத்தில் இறங்கி வேலை செய்ய தன்னுடைய இடை உடையை இறுகக் கட்டிக்கொண்டு செல்கிறோம் அல்லவா. அதுபோல தெய்வங்களும் செயலுக்கு ஆயுத்தமாகின்றன என்பதை விளக்கவே "மடிதற்றுத் தான்முந் துறும்" என்கிறார் திருவள்ளுவர். 

தி அல்கெமிஸ்ட் (The Alchemist) என்கிற ஒரு குறுநாவலின் சாராம்சம் என்னவெனில் உனக்கு ஒன்று வேண்டும் என்று நீ அதற்கு உழைத்தால் அதனை நீ அடைய இந்த உலகமே உனக்கு முன்வந்து உதவும்.  When you want something all the universe conspires in helping you to achieve it - Paulo Coelho. அதுப்போல உன் குடி உயர நீ செயலாற்றினால் உனக்கு தெய்வங்கள் வந்து உதவும் என்கிறது இக்குறள். 


தன் குடியை, குடும்பத்தை (பெற்றோர்கள், கணவன்/ மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள்) அடுத்த உயரிய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற மன ஊக்கத்தோடு, எழுச்சியோடு அதற்கு தேவையான செயல்களை செய்யும் ஒருவருக்கு தெய்வமே (தெய்வ மனம் படைத்தவர்கள், சான்றோர்கள்) தானாக முன் வந்து உதவி செய்யும். ஆனால் அதற்கு எல்லாம் உயரிய எண்ணமும், அயராய உழைப்பும் தேவை. இங்கே உயரிய நிலை என்பது வறுமையில் இருந்து முன்னேற்றம் மட்டும் அல்ல, அறம், ஈகை, பொருள், கல்வி என்று பல தளத்திலும் பொருள் கொள்ளலாம்.

தனது குடியினை உயர்த்துவதற்காகப் பாடுபடுகின்றவனுக்குத் தெய்வம் தானாகச் சென்று  செய்யும். செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். தெய்வத்தை வேண்ட வேண்டியது இல்லை. தானாகச் சென்று உதவும். உதவ வேண்டும். அவ்வாறு உதவுவதுதான் தெய்வம் என்ற கருத்தும் இக்குறளில் அடங்கியுள்ளது. குடிசெய்வதற்கு மட்டுமன்று, பிற நல்ல சமுதாய நலச் செயல்களுக்கும் தெய்வம் விரைந்து உதவ வேண்டும் என்பது பொருள். நல்ல செயல்கள் முயற்சியால் நடைபெற வேண்டும் எனது இங்கு முதன்மை. தெய்வம் உதவி செய்தல் நல்லது. இல்லையென்றால் வருந்தியழைக்க வேண்டியது இல்லை. உண்மையான அறப்பற்றாளர்கள் சமூகப்  தீவிரமான சிந்தனைகள் தேவை. இவையில்லாவிட்டால், அவர் அறங்கூறுபவராக இருக்க வேண்டியதும் இல்லை. 

தெய்வத்தை வள்ளுவர் நேரடியாக மறுக்கவில்லை. ஆனால் சமூதாயத்தின் தேவையை ஒட்டி மறுக்கவும் துணிந்துவிடக்  கூடியவர்.

சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து (12-SEP -2023)
தோழர் கபிலன், ஸ்ருதி இலக்கியம் , வேண்டிய உதவி கிடைத்துவிட்டது, நன்றி எனப் பதிவிட்டிருந்தார். மனதுக்கு மிக நெகிழ்வாக இருந்தது.

சமூகம் எனும் மாபெரும் சமுத்திரத்தில் நாமெல்லாம் நீர்த்துமி. ஆனால் அந்தத் துமி சமுத்திரத்தில் இருந்தால் தான் அதற்கு வலிமை. ஒரு சமூகமாக நம்மை உணர்தல் என்பதும் காந்தியின் கோட்பாடு தான்.

காந்தி, இந்தியா திரும்பிய பின் தேர்ந்தெடுத்துக் கொண்டது ஆசிரம வாழ்வு. அதனோடு சேர்த்து மேற்கொண்ட ஏராளமான அமைப்புகள்.

அத்தனைக்கும் பொது நிதி தான் ஆதாரம். சல்லிக் காசு என்றாலும் அது மக்களிடம் இருந்து வரவேண்டும் என்பது தான் அவர் கொள்கை.

அதோடு, நல்ல மனங்களை இணைப்பது தான் நாம் செய்ய வேண்டியது. அதைச் செய்து விட்டால் நல்ல காரியங்கள் தானாகவே வெகு சிறப்பாகவே நடந்துவிடும் என்பதைக் காந்தி முழுமையாக நம்பினார்.

கையில் தம்பிடி இல்லாமல் அவர் தொடங்கிய செயல்கள் அனைத்திற்கும் மக்கள் வாரி வாரி வழங்கினார்கள். தெய்வம் உடன் நிற்கும் என்றும் அவர் நம்பினார். உடன் நிற்பதோடு மட்டுமல்ல, ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு கூடவே பணி செய்யவும் அது விரைந்தோடி வருமாம்.

"குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தட்டி தான் முந்துறும்" என்கிறது வள்ளுவம்.

நல்ல செயல்களை நினைப்போம். மற்றவை தாமாகவே நடக்கும்.
❤️

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
குடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.).

மணக்குடவர் உரை
குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்

மு.வரதராசனார் உரை
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

Thirukkural - Management - Perseverance
Persevere and put in your best efforts to make your family prosperous. If a person has concern for the welfare of his family, commitment to make his family prosperous, and fighting spirit in him, all the forces in the universe, that includes the Supreme Power, unconditionally extend a supporting and helping hand, confirms Kural 1023.

Fate itself girds up its loins and rashes 
To help one bent on social service.

A person who perseveres will have all the support at the right juncture. It is everyone's responsibility to develop one's family. Once families develop, the society develops. Once societies develop, a nation develops. So, in the interest and welfare of the development of the nation, let us develop our families.

English Meaning - As I taught a kid - Rajesh
For those who work tirelessly with the purpose of improving or strenghtening their family, all the Gods (the whole world) will come together (while gird up his robes) and help him as if it is their duty without even inviting those Gods. When we work on the field, we wear dresses in the hip as the first step of getting ready to get into the field.

The same thought is said in "The Alchemist" novel by Paulo Coelho - When you want something all the universe conspires in helping you to achieve it.

Questions that I ask to the kid
Who will God help? Why? How?

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

உடைத்து -  உடைதல் - இருக்கும், செல்வமாக கொண்டது

என்று - என்று 

அசாவாமை - தளராமை

வேண்டும் - vēṇṭum   imp. v. + dat. veeNum வேணும் want; should, need
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.

முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
ஒரு செயலை செய்வதற்கு முக்கியமான தேவை அச்செயல் நமக்கு நல்ல பலனை தரும் பெருமையை என்ற நம்பிக்கை. மேலும் அச்செயலை செய்வதற்கான தேவை (purpose). அப்படி அச்செயலின் மீது நம்பிக்கை (நம்பிக்கையும், அச்செயலின் தேவையின் மீது நம்பிக்கையும்) குன்றாமல் எப்பேர்ப்பட்ட இடர்கள் வந்தாலும் தளர்வடையாமால் சோம்பல்கொள்ளாமல் அச்செயலை செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்து கொண்டு இருந்தால் நம்முடைய முயற்சிக்கான பலனாக பெருமை எனப்படும் வல்லமை / மாட்சிமை நமக்கு கிட்டும். 

மேலும் ஆழ்ந்து யோசித்தால், நாம் ஒரு செயலை செய்யும் பொழுது அதன் குறிக்கோளைப் பற்றிய தெளிவு மிக அவசியம். அக்குறிக்கோள் அல்லது அச்செயலின் பலன் செறிவாக இருப்பின்  மனதிற்குள்ளே அதை அசைப்போட்டு கற்பனை செய்தால் நம் மனதிற்குள்ளே இயல்பாகவே ஒரு உத்வேகம் உண்டாகும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் (அதுவாய் வந்து மடியில் உட்காரும் என்று எதிர்ப்பார்க்காமல்) அப்பலனை எண்ணி ஊக்கத்துடன் தளராது உழைத்தால் அப்பலனை கண்டிப்பாய் பெறுவோம். ஆங்கிலத்தில் சொன்னால் It is worth dying for என்று கூறலாம். 

உதாரணமாக சொன்னால் -> சில நிமிடங்கள்/மணிநேரங்கள் (புத்தகம் வாசிப்பது (அறிவு திறனை வளர்க்கும்), உடற்பயிற்சி செய்வது (உடல் ஆரோக்கியத்தை பேணும்), இசை கற்பது (மனதிற்கு மகிழ்ச்சி தரும்), விளையாடுவது (உடல் ஆரோக்கியத்தை பேணும், நண்பர்களை பெற்றுத்தரும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கும்), சில நாட்கள் (நோன்பு இருப்பது மனதின் தவசக்தியை வளர்க்கும்) , சில வாரங்கள் (ஒரு படிப்பிற்குக்கோ தேர்விற்க்கோ படிப்பது நமது தொழில் சார் திறனை வளர்த்து வேலையை செறிவாய் செய்ய உதவும்), சில மாதங்கள் (உடலை சீர் அமைப்பது, நல்ல பழக்கங்களை வளர்ப்பது நெடுங்காலத்திற்கு உதவும்), சில வருடங்கள் (வீடு வாங்குவது (ஒரு வித நிதி சுதந்திரத்தை அள்ளிக்கும்), முதலீடு செய்வது, செமிப்பது, சிக்கனமாய் இருப்பது நெடுங்காலத்திற்கு நிதி தற்சார்பையும் நெருக்கடி வந்தால் சமாளிக்கும் வலிமையையும் தரும்). 

நாலடியார் பாடல் ஒன்றின் வரிகள் இயைந்த கருத்தைச் சொல்கின்றன. “இசையாதெனினும் இயற்றியோர் ஆற்றால், அசையாது நிற்பதாம் ஆண்மை“. பெருங்கதையிலும், “முயற்சியின் முடியாக் கருமம் இல்லென” என்று விடாமுயற்சியின் சிறப்புச் சொல்லப்படுகிறது.

கீழ்க்காணும் குறள்களையும் அருமை என்ற வார்த்தையுடன் தொடர்புபடுத்தி செயல்புரிக

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இசையாதெனினும் இயற்றியோ ராற்றான்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று” (நாலடி 194)

”பெருமை உடையதன் அருமை பழியார்” (முதுமொழிக் 3.3)
“முயற்ச்சியின் முடியாக் கருமம் இல்லென” (பெருங் 5.4:14)

காளன் அர்ஜுனன் அருகே  வந்ததும் “இவர்கள் காலகுடியின் மூத்தவர்கள். இவர்களின் அருள் பெற்றுவிட்டாயா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். அவன் கையிலிருந்த கூழாங்கல்லை நோக்கியபின் சிரித்து “பாசுபதம் அளித்துவிட்டார்களா?” என்றான் காளன். அர்ஜுனன் மெல்ல புன்னகைத்து “ஆம், ஆனால் அது இத்தனை எளிதென்று நான் அறிந்திருக்கவில்லை” என்றான்.

அரியவை, அடைதற்கரியவை என்பது எளியமானுடரின் எண்ணம்” என்றான் காளன். “ஆனால் மெய்நோக்கினால் அரியதொன்றை உணர்ந்த ஒருவன் அதை சென்றடையாமல் ஓய்வதில்லை. அவ்வுணர்வை அடைவதே அரிது” என்றபடி அங்கிருந்த உருளைக்கல் ஒன்றில் அமர்ந்தான்.

பரிமேலழகர் உரை
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

மு.வரதராசனார் உரை
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

Thirukkural - Management - Hard Working
An often used and a convincing sentence is 'Hard working has its own rewards.’ The belief in the relationship between cause and effect has been valid since time immemorial. Even in dictionary, hard working appears before success. “Hard working,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 543), 
“is working with energy and care.”. Therefore, it is not a surprise to know that Valluvar has written on the concept of hard working too. Kurals teach us invaluable lessons in hard working.

Kural 611 encourages us not to give up executing a task just because the task is difficult to execute. A persistent and sustained effort will get us all accolades in the long  run. We will be proud of taking the task to its end. Our sincere efforts will overcome all hardships. In addition, there is merit in those efforts. Kural 611 also comes under ‘Perseverance' to reinforce the importance of consistency for sustained success.

Do not give up saying, “It is impossible.”
Effort will overcome.

The saying that ‘Winners never quit and quitters never win’ must be a sequel to the philosophy of this Kural. Giving up executing a task is easy and any one can do that. The real purpose and challenge of living is to persist until the end and achieve what one aspires to achieve.

Thirukkural - Management - Perseverance
Giving up a task when the task becomes a little challenging and complicate is easy. Anyone can give up or surrender when the going gets tough. Toughness of your mind makes you tough and helps you destroy all barriers in front of you. One needs tremendous courage and energy when the given task demands enormous efforts. Kural 611 advises us never to give up a task thinking that the task is very difficult to execute.

Do not give up saying, “It is impossible.”
Effort will overcome.

When you are determined, persistent, and courageous, you will put in your best efforts and your best efforts will bring you honor and fame. Remember the wise saying 'A knotty timber demands strong wedges.' If life is a knotty timber, you are a strong wedge. Kural 611 is presented in the Practice 'Hard Working' as hard working and persistence are interrelated.

English Meaning - As I taught a kid - Rajesh
One should have and believe that their goal/work/purpose/task has greatness/great value. When one believes on that great value, determined and doesn't deviate from it, remains focused and relentlessly puts efforts and tries it, has perseverance then one would achieve that greatness

Questions that I ask to the kid
How to attain greatness? (by doing great work) What factor is necessary? (Trying/perseverance) What drives greatness? (அருமை/great purpose) What factor is necessary to continue pursuing?

மடுத்தவா யெல்லாம் பகடன்னான்

குறள் 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
[பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை]

பொருள் 
மடு - maṭu   n. prob. மடு-. Udder, especiallyof a cow; பசு முதலியவற்றின் முலையிடம்.
மடுத்த - மடுத்தல் -  உண்ணுதல்; நிறைத்தல்; சேர்த்தல்; அடக்கிக்கொள்ளுதல்; ஊட்டுதல்; தீமூட்டுதல்; அமிழ்த்துதல்; குத்துதல்; மோசம்பண்ணுதல்; விழுங்குதல்; மயக்குதல்; செலுத்துதல்; இடையூறுஎதிர்ப்படுதல்.
வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.
எல்லாம் - அனைத்தும்
பகடு - பெருமை; பரப்பு; வலிமை; எருது; எருமைக்கடா; ஏர்; ஆண்யானை; தெப்பம்; ஓடம்; சந்து.
அன்னான் - அன்னவன்; அவன், அத்தன்மையன், ஒத்தவன்
உற்ற - உற்று - வந்த
இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம்பட வரும் இரக்கம்; துன்பம் வறுமை
இடர்ப்பாடு - இடர்ப்படுதல்; துன்புறுகை.
உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
மடுத்த என்றால் இடையூறு ஏற்படுதல் என்று பொருள். வாய் என்றால் வழி என்று பொருள். பகடு என்றால் எருது என்று பொருள். வழியேல்லாம் மேடு பள்ளம் என்று இடையூறு ஏற்பட்டாலும் ஒரு எருது அல்லது மாடு அல்லது காளை எவ்வாறு அதனை பொருட்படுத்தாமல் தான் தூக்கிக்கொண்ட சுமையை சுமந்து சென்றுக்கொண்டே இருக்கிறதோ அதே போன்று ஒரு மனிதன் வாழ்வில் ஒரு வினையை செய்யும் பொழுது துன்பங்களும் இடர்களும் வரும்பொழுது அவ்விடர்ப்பாடுகளை தாண்டிச் சென்று அவற்றை உடைத்துச் சென்று இலக்கை அடைய வேண்டும். 

அதுமட்டும் இன்றி பொதுவாகவே துன்பத்தில் எண்ணம் குவியக் குவிய அது பெருகிக்கொண்டே செல்லும் ஆற்றல் உடையது. ஆதலால் அதில் எண்ணத்தை குவிக்காது அடுத்த காரியத்திற்கு செல்ல வேண்டும்.

தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெரு நாய்களைப் போல் நாமாகிவிடகூடாது. இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்க கூடாது. 

எருது இழுக்கும் வண்டிப்பாரத்தை வாழ்க்கைச் சுமைக்கு ஒப்பாய் சொன்னது, சங்கப்பாடல்கள் தொட்டு, இன்றுவரை தொடர்வது. கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பில் இப்பாடலுக்கான உரையிடலில் அவை சுட்டப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் சில:

“அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்கும்ஆர்ப்பே” (மதுரை.259-60)

“கானற் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், 
ஆரைச் சாகாட்டாழ்ச்சி போக்கும், 
உரனுடை நோன்பகட்டன்ன, எங்கோன்” (புறநானூறு: 60: 7-9)

“அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய 
பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய
வரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும் 
பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ” (புறநானூறு: 90: 6-9)

”குண்டுதுறை இடுமணல் கோடுற அழுந்திய
பண்டிதுறை ஏற்றும் பகட்டினைப் போல” (பெருங்.1.53:53-4)

“நிரம்பாத நீர்யாற் றிடுமணலுள் ஆழ்ந்து
பெரும்பார ஆடவர்போல் பெய்பண்டம் தாங்கி
மருங்கொற்றி மூக்கூன்றித் தாள்தவழ்ந்து வாங்கி
உரங்கெட்டு டுறுப்பழுகிப் புல்லுண்ணா பொன்றும்” (சீவக.2784)

மேலும்: அஷோக் உரை

வரி: 
துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான்
கதை:
 ‘நான் கடவுள்’ படத்தின் படப்பிடிப்பின்போது அதில் நடிக்க ஏராளமான துறவிகள் தேவைப்பட்டனர். துணை நடிகர்களை துறவிகளாகவோ அல்லது அதைப் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவோ நடிக்க வைக்க முடியாது. எத்தனை வேடம் போட்டாலும் அவர்களுடைய கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சினிமா ஒரு காட்சிக் கலை. ஒரு ஏழையை பணக்காரனாக சினிமாவில் நடிக்க வைப்பது மிகவும் கடினம். தோரணைக்கு அப்பால், கண்களுக்கு அப்பால், பாவனைக்கு அப்பால் நமது மனம் உணரக்கூடிய ஏதோ ஒன்று இவர் பணக்காரனல்ல என்று சொல்லிவிடும்.
......
......
......
‘நான் கடவுள்’ படத்தில் பெரும்பாலான துறவிகள் உண்மையிலேயே துறவு வாழ்க்கை கொண்டவர்கள். அவர்களுக்கு நடிப்பில் எந்த ஆர்வமும் இல்லை. பெரும்பாலான நேரம் சும்மாதான் இருந்தார்கள். பணமும் அவர்களுக்குப் பெரிதாக ஈர்ப்பை அளிக்கவில்லை. அவர்களை நடிக்கக் கொண்டு வரும் பொறுப்பை அன்றைய உதவி இயக்குநராக இருந்த தியாகராஜன் எடுத்துக்கொண்டார். தியாகராஜன் அவர்களைச் சந்தித்து பலவிதமாகப் பேசி அவர்களில் ஒருசிலரை நடிக்க கூட்டிக்கொண்டு வந்தார்.

அவர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்கள் பிறரை நடிக்க அழைத்துக்கொண்டு வந்தனர். பிச்சை எடுப்பதுதான் அவர்களுடைய தொழில். காசியின் பெரும்பாலான படித்துறைகளில் அவர்கள் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவர்களுக்கு உணவுக்கு பணம் தேவையில்லை. ஏனென்றால் காசி முழுக்க பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உணவு அளிக்கப்படும். அவர்கள் பிச்சை எடுப்பது பெரும்பாலும் கஞ்சா தேவைக்காக மட்டுமே.

மற்றபடி மருத்துவத் தேவையோ உடைத் தேவையோ உறைவிடத் தேவையோ அவர்களுக்குக் கிடையாது. அவர்களுடைய தேவைக்கு மேலேயே எப்போதும் பணம் கைக்கு வருவது வழக்கம். சினிமா என்ற துறையின் ஆர்வம் காரணமாகத்தான் பெரும்பாலும் அவர்கள் வந்தார்கள். அங்கென்ன நிகழ்கிறது என்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசி சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

படத்தில் அவர்களுடைய நடிப்பு என்பது ஆங்காங்கு அமர்ந்திருப்பதும் கஞ்சா குடிப்பதும் மட்டும்தான். படப்பிடிப்பு இடைவேளையிலே அவர்கள் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தமிழர். சைவ மடாதிபதிகளுக்கு உரிய முறையில் மிகப்பெரிய பாணியில் மிகப்பெரிய சடைமகுடம் ஒன்று வைத்திருந்தார். அந்தச் சடையை அவிழ்த்துவிடும்படி கோரியபோது எழுந்து அவிழ்த்துவிட்டார். அதன் நுனி தரையைத் தொட்டது. தடித்த புகையிலை சுருள்கள் போன்ற சடைமுடி. பாலா அவரை இடுப்பளவு நீரில் இறங்கி நிற்கச்செய்து குளிக்க வைத்தார்.

அவர் அந்த சடையை நீட்டி நீராடிக்கொண்டிருக்கும்போது கேமிரா அவரில் இருந்து தொடங்கி அந்தப் படிக்கட்டைக் காட்டி மேலெழுந்து சென்று படிக்கட்டில் ஏறிச்செல்லும் ருத்ரனைக் காட்டும் அந்தக் காட்சியை பலரும் அந்தப் படத்தில் நினைவு கூரலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் நீராடுவதே இல்லை. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் குளித்ததோடு சரி. அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அருகே இருந்த இன்னொரு துறவியிடம் எங்களுடன் இருந்த நடிகர் சிங்கம்புலி, ‘‘சாமி உங்க கதையை சொல்லுங்க’’ என்று கேட்டார்.

அவர் சாதாரணமாக “சொல்றதுக்கென்ன இருக்கிறது? எல்லாரையும் போலத்தான் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன்’’ என்றார். ‘‘இல்லை சாமி, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. சொல்லுங்கள்’’ என்று கேட்டபோது மிக உணர்ச்சியற்ற, ஆனால் புனைவுத்தன்மை மிகுந்த மொழியில் தன் கதையைச் சொன்னார். அவருக்குத் தென்னிந்தியாவின் ஐந்து மொழிகள் தெரியும். வட இந்தியாவின் இந்தியும் மராத்தியும் போஜ்புரியும் தெரியும். இந்தியா முழுக்க ஐம்பது முறைக்கு மேல் சுற்றி வந்திருக்கிறார்.

வயது எழுபதை ஒட்டி. சாமியாராக ஆகி நாற்பதாண்டு காலமாகிறது. சொந்த ஊர் கடப்பா அருகே ஒரு சின்ன இடம். அங்கே அவருக்கு நிறைய நிலம் இருந்தது. மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். குண்டூர் அருகே கிருஷ்ணா நதிப்பாசனத்தில் மிகவும் வளமான நிலம் அது. விவசாயம் செய்வது அவருடைய பரம்பரைத் தொழில் என்பதால் அதை மிகச்சிறப்பாகவே செய்து வந்திருந்தார். ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண். மனைவியிடம் இனிமையான உறவு இருந்தது. விவசாய வேலைகளைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.

இரண்டு முறை சிவசைலத்துக்குச் சென்று வந்திருக்கிறார். திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசை இருந்தது. ஆனால், விவசாய வேலைகளை விட்டு அதைச் செய்ய முடியாது என்பதனால் அது தட்டிப்போய்க் கொண்டே இருந்தது. மத விஷயங்களில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியலில் எதுவும் தெரிந்து கொள்வதில்லை. நன்றாக வயலில் காலை முதல் மாலை வரை வேலை செய்வதும், வயிறு புடைக்கும்படி சாப்பிடுவதும், தூங்குவதும்தான் அவருடைய வாழ்க்கை.

அதுதான் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமான விஷயம் என்று அவர் சொன்னார். வயிறு புடைக்கும்படி சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு வேலை செய்பவர்கள்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியானவர்கள் என்றார். அவருடைய நிலத்தில் பொன் விளையும் என்று சொன்னார். இன்றைக்கும் அந்த நிலத்தை கண்ணால் பார்க்க முடிகிறது என்றார். அந்த நிலத்தை அவர் நெய்க்கரிசல் என்று சொன்னார்.

‘‘மண்வெட்டியால வெண்ணையை வெட்டுவது போல புரட்டிப்போடலாம். உழுது போட்ட நிலம் ஆயுர்வேத வைத்தியர்கள் வைத்திருக்கும் லேகியம் போல இருக்கும். கால் புதைந்த இடமெல்லாம் வெண்ணையில் பதிந்தது போல். உழுது புரட்டும்போது ஒவ்வொரு அடிக்கும் மண்புழுக்கள் கத்தைகத்தையாக நெளியும். நீரூற்றி உழுது மண் மரமடித்துவிட்டு கரையில் ஏறி நின்று பார்த்தால் பளிங்கால் ஆனது போல் இருக்கும் வயல்’’ என்றார்.

அதன் மேல் சிறிய பறவைகள் வந்து அமர்ந்தால் கூட உடம்பு உலுக்கிக்கொள்ளும். வயலைப் பார்ப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வயல் அருகே சென்று பார்த்துக் கொண்டிருப்பார். வேலை இல்லை என்றாலும் கூட வரப்பிலேதான் அமர்ந்திருப்பார். பாயை அங்கேயே விரித்து படுத்து தூங்கிக்கொள்வதும் உண்டு. வயலை விரும்புகிறவன் அதில் விழுந்துவிடுவான். பெண்ணாசையைவிட பொன்னாசையைவிட மண்ணாசை மிகப்பெரியது என்றார் அவர். பசுமை தழைத்து மேலே வரும் பயிர் வேறு எதையுமே நினைக்கவிடாது.

இரவில் கனவில் கூட அதுதான் வந்து கொண்டிருக்கும். காலை எழுந்ததுமே தண்ணீர் கூட குடிக்காமல் வயலை நோக்கித்தான் ஓடத்தோன்றும். ஒருமுறை அவர் வயல் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. பொன்நிற மணிகள். ஒரு சாண் அளவுக்கு நீளமானவை அவை. மாலையில் காற்று கடந்து செல்லும்போது ஆயிரம் கொலுசுகள் குலுங்கும் ஒலி கேட்டது. அறுவடைக்குத் தயாரான வயல் என்பது பொன்னேதான். கரையில் இருந்து பார்க்கும்போது அந்தி வெயிலில் அது பொன்னைவிட அதிகமான வெளிச்சத்தை, பிரகாசத்தைக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

அறுவடைக்கு ஆட்கள் ராயலசீமாவில் இருந்துதான் வரவேண்டும். அவர்கள் ஒரு பகுதியிலிருந்து அறுவடை செய்துகொண்டே வருவார்கள் அவர்களுக்காக அவர் காத்திருந்தார். அந்த முறை அறுவடை செய்து முடித்த பிறகு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு திருப்பதி சென்று வரவேண்டுமென்று எண்ணியிருந்தார். ஆனால் யாரும் நினைத்திருக்காதபடி வானம் கறுத்து மழை வந்தது. அந்த வருடத்தின் மிகப்பெரிய புயல் அது. மழை வருவதை தெரிந்துகொண்டதும் அவர் மடைகளைத் திறந்துவிடுவதற்காக வயலுக்குச் சென்றார்.

வயலில் அனைத்து மடைகளையும் திறந்து விட்டபிறகு கூட அங்கிருந்து வர மனமில்லாமல் குடையுடன் வரப்பிலேயே நின்று கொண்டிருந்தார். வானமே கிழிந்து தலைமேல் விழுவது போல மழை பொழிந்தது. மிகப்பெரிய அருவிக்கு அடியில் நின்று கொண்டிருப்பது போல. கை நீட்டிப்பார்த்தால் அந்தக் கையைப் பார்க்க முடியாத அளவுக்கு மழைத்திரை. ஆனாலும், வீட்டுக்கு போகத் தோன்றவில்லை. இரவில் நெடுநேரம் வரை அங்கிருந்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்குச் சென்றார்.

பிள்ளைகளை வீட்டுக்குள் செல்லும்படி சொல்லிவிட்டு ஏரியைத் திறப்பதைப் பற்றி பேசுவதற்காக அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றார். கோயிலிலேயே பேச்சு முடிந்து விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏதோ ஓசை கேட்டது. பலர் அலறுவது போன்ற சத்தம். நல்ல இருள். ஓடிச் சென்று ஒரு மண்டபத்தின் மேலேறி பார்த்தபோது அருகிலிருந்த கல்மண்டபங்கள் அனைத்தும் மூழ்கும்வரை வெள்ளம் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தார். கிருஷ்ணா பெருகிக் கரைக்கு வந்துவிட்டது.

தன்னுடைய குடும்பம் என்ன ஆகும் என்று பயம் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. எந்த திசை என்பது கூடத் தெரியவில்லை. ஒவ்வொரு மின்னலுக்கும் தண்ணீர் கூடிக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அங்கேயே நின்று அலறித் துடித்தார். தண்ணீரில் பாய்ந்து நீந்திச் சென்றாலும் கூட தண்ணீரின் ஒழுக்கு அவரை அடித்துச் சென்றது. எங்கோ ஒரு பனைமரத்தில் தொற்றி ஏறி அமர்ந்து கொண்டார். காலையில் பார்த்தபோது பனைமரத்தின் முக்கால் பங்கு அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

சுற்றிலும் தண்ணீர் அன்றி எதுவுமே இல்லை. இரண்டு நாட்கள் பனைமரத்தின் உச்சியிலேயே தொற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார். மூன்றாவது நாள் அவரை படகில் வந்து மீட்டுக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தனர். தன்னுடைய பிள்ளைகள் என்ன ஆயினர் மனைவி குடும்பம் என்ன ஆயினர் என்று தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கூடங்கள் தோறும் கதறியபடி அலைந்தார். அவர்கள் தென்படவே இல்லை. ஏழு நாட்களுக்குப்பிறகு வெள்ளம் முழுமையாக வடிந்து நிலம் முழுக்க சேற்றுப்பரப்பாக மாறியது.

அவர் இறங்கி தன் வீடிருந்த இடத்திற்கு சென்றார். மண்ணில் கட்டப்பட்டிருந்த வீடு இருந்த தடமே தெரியாமல் கலைந்து அழிந்து சென்றுவிட்டிருந்தது. கன்றுகள் இல்லை. அவரது வயலும் சேறால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு ஊர் வயல் வாழ்க்கை இருந்ததற்கான ஒரு சான்றும் இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக சேறு இருப்பது போலிருந்தது அந்தப் பகுதி. அவர் அங்கே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். மனதுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று.

திரும்பி தன் இடுப்பில் கட்டியிருந்த ஆடையை எடுத்து கிழித்து அரை ஆடை மாதிரி கட்டிக் கொண்டார். வடக்கு நோக்கி நடந்தார். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு காசிக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை துறவிதான். திரும்பி ஊருக்குச் செல்லவோ அந்த வயலையோ மண்ணையோ பார்க்கவோ இல்லை.  இயல்பான குரலில் ‘‘இதுதான் தம்பி கதை’’ என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு மின்னல் அடித்தது. அவரை நான் முன்பு பார்த்திருக்கிறேன்.

‘‘நான் உங்களை முன்பு பார்த்திருக்கிறேன். இதே கதையை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ என்று சொன்னேன். ‘‘எப்போது?’’ என்றார். ‘‘நான் இளைஞனாக இருந்தபோது இதே போல வீட்டைவிட்டு வந்து காசியிலே ஒரு துறவி மாதிரி இருந்தேன். படிக்கட்டில் வாழ்ந்திருந்தபோது ஒருமுறை உங்களைப் பார்த்தேன். இதே கதையை சொன்னீர்கள்’’ என்றேன். ‘‘சொல்லியிருப்பேன்’’ என்று அவர் சொன்னார்.

அப்போது சொன்ன அதே உணர்வுகளும் அதே வார்த்தைகளுமாக அதைச் சொன்னார் என்று தோன்றியது. ஒரு தேர்ந்த புனைகதையாளனுக்குரிய கதை நுட்பத்துடன், விவரணைகளுடன் அந்தக் கதை இருந்தது. அதைச் சொல்லிச் சொல்லி அவர் பெரிது பண்ணிக் கொண்டாரா அல்லது அவருக்கு மனதில் வார்த்தை வார்த்தையாக அந்தக் கதை அப்படியே பதிந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது யோசிக்கும்போது அப்படி ஒரு கதையைத் துல்லியமாகச் சொல்ல ஆரம்பிக்கும்போதே அந்தக் கதையிலிருந்து அவர் விலகிவிட்டார் என்று தோன்றியது. அந்தக் கதையை சொல்லும்போது, அது ஒரு மனிதனுடைய கதையாகும்போது அது அவருடைய கதையாக அல்லாமல் ஆகிவிட்டது. துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான். அதைத்தான் இலக்கியம் இன்றுவரைக்கும் செய்து வருகிறது.


 சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. அப்துல் ஷுக்கூர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய ‘நூறு நாற்காலிகள்’ என்னும் நீள்கதை மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப் பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார்.

நான் அமைப்பு சார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப் போல வீண் வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. காரணம், அவர் நடத்தும் டீக்கடையிலேயே அந்தக் கூட்டம் நடக்கும் என்றார். சென்ற சில மாதங்களாக மாதம் ஒருமுறை அந்த டீக்கடையிலேயே ஷுக்கூர் இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்தி வருகிறார். கேரளத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் தலைச்சேரி - கண்ணூர் சாலையில் உள்ள பெடயங்கோடு என்னும் கிராமம் அது.

‘ஜனவரி மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறும். பயணச் செலவு ஏதும் தரமுடியாது. விற்கும் நூல்களின் பணத்தைக்கூட நோயுற்றிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு அளிக்கவிருக்கிறேன்’’ என்றார். அந்த லட்சியவாதம் எனக்குப் பிடித்திருந்தது. ‘‘வருகிறேன்’’ என்றேன். ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது.

என் வழக்கமான பயணத் தோழர்கள் கிருஷ்ணன், ராஜமாணிக்கம் இருவரையும் அழைத்தேன். திருப்பூர் நண்பர் கதிரின் காரிலேயே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதை ஒரு விரிவான பயணமாக ஆக்கிக்கொண்டோம். 2016 ஜனவரி இரண்டாம் தேதி கோவையிலிருந்து  கிளம்பி, மானந்தவாடி அருகே உள்ள இடைக்கல் என்னும் கற்கால பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்துவிட்டு மாலையில் கண்ணனூரில் தங்கினோம். காலையில் கண்ணனூர் கோட்டையைப் பார்த்துவிட்டு ஷுக்கூர் வாழும் பெடயங்கோடு என்னும் ஊரை விசாரித்து வழிதேடிச் சென்றோம்.

பெடயங்கோட்டை அணுகியபின் ஷுக்கூரைப் பற்றி கேட்கவேண்டுமே என நினைத்து பார்த்துக்கொண்டே வந்தோம். பெடயங்கோடு மிகச்சிறிய ஊர். ஆகவே கடந்து சென்றுவிட்டோம். மீண்டும் வழி விசாரித்துத் திரும்பி வந்தோம். அங்கே சாலையோரத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஷுக்கூர் பற்றி கேட்டோம். ஆச்சரியமாக, கடைக்காரர் முகம் மலர்ந்து ‘‘ஷுக்கூர் இக்காவா? தெரியாம இருக்குமா?’’ என்றார். அவர் பெயர் லத்தீஃப். அவரும் ஒரு கவிஞர், மூன்று தொகுதிகள் பிரசுரித்திருக்கிறார். ‘‘அதோ அந்தக்கடைதான். நானும் வருவேன்’’ என்றார்.

நாங்கள் மெல்லச் சென்றபோது சாலையோரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றிருந்த  ஷுக்கூர், எங்களை மறித்து கை காட்டி அழைத்தார். நாங்கள் கடந்து செல்லும்போதே அவர் பார்த்துவிட்டிருந்தார். என் பெயர் எழுதப்பட்ட தட்டி சாலையோரமாக இருந்தது. ‘‘இதுதான் என் கடை’’ என்றார் ஷுக்கூர். சின்னஞ்சிறிய டீக்கடை. நான் இன்னும் சற்று பெரிய கடையை எதிர்பார்த்தேன். அங்கே எப்படி கூட்டம் நடத்துவது என்று தெரியவில்லை. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை.

ஷுக்கூர் சைக்கிளில் மீன் வாங்கிக்கொண்டுவந்து தெருத்தெருவாகக் கூவி விற்கும் தொழிலைத்தான் இருபதாண்டுகளாகச் செய்துவந்தார். அதற்குமுன் மண்வெட்டும் கூலித்தொழிலை பத்தாண்டு காலம் செய்தார். அவரது மகன் துபாயில் வேலைக்குப் போனபின் ஓராண்டாகத்தான் டீக்கடை நடத்துகிறார். பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனால் எளிய வாழ்க்கைக்கு அது போதும் என்றார்.



ஷுக்கூருக்கு ஐந்தாம் வகுப்புதான் படிப்பு. சுயமாக வாசிக்கக் கற்று, அவரே இலக்கியத்தை வந்தடைந்தார். இலக்கியத்தின் அடிப்படைகளை அவருக்கு எவரும் சொல்லித் தரவில்லை, அவரே வாழ்க்கையைக் கொண்டு இலக்கியத்தை அடையாளம் கண்டார். வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.

‘‘நான் மீன் அளவுக்கே புத்தகங்களையும் விற்றிருக்கிறேன்’’ என்றார் ஷுக்கூர். ‘‘ஆரம்பத்தில் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள். ஆனால் என் ஆர்வத்தைப் பார்த்தபின் கம்யூனிஸ்ட்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்’’ என்றார். தான் விற்கும் எந்த நூலையும் முதலில் தானே வாசித்துவிடவேண்டும் என்பது ஷுக்கூரின் நெறி. அந்நூலைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்வார். நூலைப் பற்றி அவரே விரிவாக அறிமுகமும் செய்வார். அவருக்கென ஒரு சிறிய இலக்கிய வாசகர் கூட்டம் உருவாகி வந்தது. அதன்பின்னரே ஷுக்கூர் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.

அடித்தளத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தவர்கள், வழக்கமாக தங்கள் போராட்டங்களைப் பற்றிய கவிதைகளையும் அரசியல் கருத்துக்களையும்தான் எழுதுவது வழக்கம். ஷுக்கூர் எழுதியவை அவரது வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய ஆழமான தத்துவநோக்குள்ள கவிதைகள். நவீனகவிதைகள் அவை. டீக்கடை வைத்தபின் கூடவே பெடயங்கோட்டில் வீடு வீடாக இலக்கியத்தை அறிமுகம் செய்து வருகிறார் ஷுக்கூர்.  என் ‘நூறு சிம்ஹாசனங்ஙள்’ நூலை மட்டும் 450 பிரதிகள் அச்சிட்டு அந்த ஊரில் வெளியிட்டிருக்கிறார். இந்த டீக்கடை இலக்கியம் அவரது கனவுகளில் ஒன்று. இதை ஒரு வகை தனிப்பட்ட தவமாகவே அவர் நினைக்கிறார்.

ஷுக்கூர் இக்காவின் வீட்டுக்குச் சென்றோம். எங்களில் இருவர் சைவர்கள். ‘‘இங்கே அந்த மாதிரி நல்ல சாப்பாடு கிடைக்காதே’’ என்றார் ஷுக்குர். நான் சிரித்துவிட்டேன். நானும் நண்பர்களும் அவர் இல்லத்தில் நெய்ச்சோறும் சிக்கனும் சாப்பிட்டோம். அவரது மனைவியும் திருமணமான மகளும் வீட்டில் இருந்தனர். அவர்களின் சமையல் வடக்கு மலபாருக்கே உரிய மிதமான காரமுள்ள சுவை கொண்டது.
 
ஷுக்கூர் எங்களை அருகில் உள்ள வளைபட்டணம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். நதிக்கரையில் கோயில் கொண்டுள்ள பகவதியின் காவலாளிகளாகக் கருதப்படும் மிகப்பெரிய மீன்கள் நிறைந்த நீர்ப்பெருக்கைப் பார்த்தோம். ‘‘பாதுகாக்கப்பட்ட மீன்கள் இவை. இலக்கியமும் இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும்’’ என்றார் ஷுக்கூர் சிரித்தபடி.

அந்த நதிக்கரையில்தான் படகுகள் வந்து சேரும் படித்துறை இருந்தது. கடலில் இருந்து மீன், படகுகள் வழியாக அங்கே வந்துசேரும். அங்கே அதிகாலையிலேயே சென்று ஏலத்தில் மீனை எடுத்து சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விற்பதுதான் ஷுக்கூரின் வழக்கம். மழைக்காலத்தில் மீன் விற்பது மிகக்கடினம். முழுநேரமும் நனைந்தாகவேண்டும். ஆனால் மீன் சீக்கிரம் அழுகாது. வெயிலில் மீன் அழுகி நஷ்டம் ஏற்படும்.


‘‘அன்றைக்கெல்லாம் நல்ல மீன் சாப்பிட்டதே இல்லை. மிஞ்சிப் போன அழுகிய மீன்தான் எப்போதும் உணவு’’ என்று ஷுக்கூர் சிரித்தபடி சொன்னார். தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார். ஆகவே அவை எளிய கதைகளாக மாறிவிட்டன. கடந்து வருவதற்கு இலக்கியம் உதவியிருக்கிறது மதியம் இரண்டரை மணிக்குக் கூட்டம். வழக்கமாக முப்பது பேர்தான் வருவார்கள்.

ஆனால் அக்கூட்டம் பற்றி ‘மாத்ருபூமி’, ‘மலையாள மனோரமா’ நாளிதழ்களில் என் நண்பர்களான இதழியலாளர்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தமையால் அன்று நூறு பேர் வந்திருந்தனர். இரு சக்கர வண்டிகளிலும் கார்களிலும் வந்துகொண்டே இருந்தனர். கணிசமானவர்கள் கண்ணனூர், தலைச்சேரி முதலிய நகரங்களிலிருந்து வந்திருந்தனர். கடைக்குள் இடமில்லாமல் பாதிப் பேர் சாலையில் அமர்ந்திருக்க நேரிட்டது.

வாசகர்களுடன் பரவலாக அறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் பலர் கலந்துகொண்டனர். நால்வர் நூலைப் பற்றிப் பேசியபின், நான் சிற்றுரையாற்றி  கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அத்தனை பேரும் அந்நாவலை வாசித்திருந்தனர். அதற்குச் சமானமான பிற நாவல்களுடன் ஒப்பிட்டும் பேசினர். உற்சாகமான உரையாடல். கூரிய மதிப்பீடுகள். மாலை ஆறு மணிக்கு சந்திப்பு முடிந்த பின்னரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இல்லாமல் கேரளத்தில் இலக்கியக்கூட்டங்கள் முடிவடைவதில்லை.

‘‘நவீன இலக்கியத்தை நாங்கள் டீக்கடைகளில்தான் பேசிப் பேசி உருவாக்கினோம்’’ என்றேன். ‘‘முன்பு கேரளத்தில் கம்யூனிசமும் டீக்கடைகளில் உருவானதுதான்’’ என்றார் தாஹா மாடாயி என்னும் விமர்சகர். ‘சிங்கிள் டீ இலக்கியம்’ என்றுதான் நவீன இலக்கியத்தை பழைய இலக்கியவாதிகள் சொல்வார்கள்.

ஏழு மணி வரை அங்கே நின்றபடியே இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு விடைபெற்றுக் கிளம்பினேன். ஷுக்கூர் இக்கா என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘‘முதல் கூட்டத்தை கன்னட எழுத்தாளர் சிவராம காரந்தின் ‘சோமனதுடி’ பற்றி நடத்தினோம். அந்த அளவுக்கு தார்மீக வேகம் உள்ள நாவல் இது. எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என்றார். நான் சம்பிரதாயமாக ஏதும் சொல்ல விரும்பவில்லை. ‘‘இக்கா... மறுபடியும் சந்திப்போம்’’ என்று மட்டும் சொன்னேன்.‘

‘மாத்ருபூமி’ நாளிதழ் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் நிருபரையும் புகைப்படக்காரரையும் அனுப்பியிருந்தது. அவர்களின் காரிலேயே நான் கோழிக்கோடு கிளம்பினேன். அங்கிருந்து எர்ணாகுளம் வழியாக நாகர்கோவில் வந்தேன். திரும்பும் வழி முழுக்க ஒரே விஷயத்தைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இலக்கியமென்பது உணவும் உறைவிடமும் பிற வசதிகளும் அமைந்துவிட்டவர்களுக்கான ஒருவகை கேளிக்கை என்னும் எண்ணம் உள்ளது. மேலும் மேலும் உலகியல் லாபங்களைச் சம்பாதிப்பதற்கு இலக்கியம் எதிரானது என்னும் எண்ணம் உள்ளது.

ஆனால் ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது. இத்தனை வயதில் ஷுக்கூர் இக்கா எதற்காக இப்பணியைச் செய்கிறார்? அடையாளமோ, புகழோ தேடி அல்ல. அது அவர் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை அளிக்கிறது. வெற்றியோ, பணமோ, புகழோ அல்ல... லட்சியவாதமே வாழ்க்கைக்கு இலக்கையும் நிறைவையும் அளிக்கமுடியும். இலக்கியத்தின் சாராம்சமாக இருப்பது லட்சியவாதமே. அதைத்தான் ஷுக்கூர் இக்காவின் கனிந்த முகம் எனக்குக் காட்டியது.

வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.

தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார்.

ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது.

பரிமேலழகர் உரை
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து. ('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.).

மணக்குடவர் உரை
இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

Thirukkural - Management - Perseverance
Valluvar uses a simile in Kural 624. A person who marches ahead towards his goal by shattering or overcoming all the barriers on the way  is similar to a determined and powerful bull that pulls its cart in spite of obstacles, challenges, and hardships. Because of a person's determination to achieve his goals, that person's miseries will become miserable.

Trouble is troubled by him who bull like
Drags his cart through every hurdle.

Challenge your challenges to become a person of importance. We all know that a person who moved a mountain did that by cutting away small blocks of stones. Had he thought that the mountain was too big for him to remove, he would have been overwhelmed by that and that thought would have discouraged him from attempting that indomitable task. He achieved that with sheer persistence. Persistence always pays. 

கான முயலெய்த அம்பினில்

குறள் 772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள் -
கான - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

முயல் - போர்; சிறுவிலங்குவகை.
முயல் - வேகமாக ஓடும் முயல் ( வலிமையில் சிறிய விலங்கு) 

எய்த - எய்தல் -  அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

அம்பினில் - அம்பு - நீர்; கடல் மேகம் விண் உலகம் மூங்கில் கணை எலுமிச்சை பாதிரி திப்பிலி வெட்டிவேர் வளையல் சரகாண்டபாடாணம்.


யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம்.

பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.

ஏந்தல் - உயர்ச்சி; மலை; மேடு; பெருமையிற்சிறந்தோன்; தேக்கம்; அரசன்; ஆழமின்மை; முதல்; இளமை; எளிதில்செய்துமுடிக்கும்தன்மை, ஏந்துதல், தாங்குதல், கையேந்துதல்.
ஏந்து-தல் - ēntu-   5 v. [M. ēndu.] tr. 1.To stretch out the hands; கைநீட்டுதல் நீ தர நான்ஏந்தி வாங்கினேன். 2. To receive in the hands;கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 3. To holdin the hands; தாங்குதல் அடிமை படிக்கத்தைஏந்தி நின்றான். 4. To hold up, as an umbrella;to carry in the hand, as a weapon; தரித்தல் அங்குசபாசமேந்தி (சூடா.) 5. To support, as abeam; சுமத்தல் உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது.--intr. 1. To rise high; to be elevated; ஓங்குதல் நில னேந்திய விசும்பும் (புறநா. 2, 2). 2. To beeminent, excellent, exalted, of fine quality;சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 3.To be abundant; மிகுதல் (தொல். பொ 543, உரை )  

இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
தப்பி ஓடும் ஒரு சிறிய முயலினை குறி தவறாமல் எய்வது வீரம் அல்ல. ஓடும் முயலை குறி பார்ப்பது அவ்வளவு எளிதும் அல்ல. ஆனால் முயலின் வலிமை சிறியது. அதனால் ஒரு பயனும் இல்லை. ஓடிச்செல்லும் ஒரு விலங்கை வீழ்த்துவது வீரமும் இல்லை.  அத்தகைய வீரம் நம்மிடம் ஒரு தேக்க நிலையை உருவாக்கும். 

ஆனால் நம் முன்னே தைரியமாக வந்து நின்று நம்மை எதிர்த்து நிற்கின்ற யானை தனை குறி வைத்து வேல் எய்தி அது தவறினாலும் அது தோல்வி அல்ல. அது வெற்றியே ஆகும். ஆதலால் வெற்றி என்பது முடிவினால் அல்ல அது எதிரியின் வலிமையாலும் நமது உழைப்பாலும் நமது ஆற்றலாலும் நிறுவப்படுவது என்கிறார் திருவள்ளுவர்.  ஆதலால் ஷாத்ர குணத்தால் முயன்று தோற்பதும் வெற்றியே.

ஒரு முயலினை அம்பினால் எய்த ஒருவித திறமை (skill) வேண்டும் தான். ஆனால் திறமையை விட ஒரு யானையை கண்டு பயப்படாமல் போரிட மனதில் தைரியமும் அச்சமின்மையும் (courage / fearlessness), வெற்றியோ தோல்வியோ கடைசிவரைப்போராட விடாமுயற்சியும் ஊக்கமும் (perseverance) தேவை. 

எதற்கு தேவையின்றி யானையுடன் போராட வேண்டும், கிடைக்கும் முயலுடன் சந்தோஷமாக வாழலாமே என நினைப்போருக்கு உச்ச கட்ட வலியும் இல்லை. உச்சகட்ட அனுபவங்களும் இல்லை

ஒப்புமை
”நரிமா உளம்கிழித்த அம்பினில் தீதோ
அரிமாப் பிழைப்பெய்த கோல்” (நாலடி. 152)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் உரை (பதுங்குதல்)
இரண்டு விஷயங்கள். உலகியல்வாழ்க்கையில் அவசியமான ஒன்று ஷாத்ரம் என்னும் குணம். அதாவது தூய ரஜோகுணம். வென்றெடுக்க, கடந்துசெல்ல எப்போதும் உள்ள அக ஊக்கம் என அதைச் சொல்லலாம். அதை பேராசை என்று சொல்லக்கூடாது.

இருப்பது போதும் என்பது தமோகுணம். அதற்கு உலகியலில் இடமில்லை. அது தேக்கநிலை. துயரையே அளிக்கும். ஷாத்ர குணத்தால் முயன்று தோற்பதும் வெற்றியே. அதையே ‘யானைபிழைத்தவேல்’ என்றார் முனிவர்

தன்னறம் என்பது கூடவே இணைத்துப்பார்க்கவேண்டியது. ஒருவன் தன் செயல் மூலம் முழுமை பெறக்கூடிய துறையைத் தெரிவுசெய்யவேண்டும். தன் முழு ஆற்றலையும் அதில் செலுத்தவேண்டும். அதுவே அவனை விடுதலைசெய்யவைக்கும்

இவ்விரண்டிலும் உள்ள சோர்வே நீங்கள் சொல்லும் நிலைக்குக் காரணம். அது அச்சத்தால் சுயநலத்தால் வருவது. நம் நடுத்தரவர்க்க சமூகம் நம்மிடம் தேங்கி நிற்கவே சொல்லித்தந்து வளர்க்கிறது. அதைப்பாதுகாப்பாக இருத்தல் என நினைக்கிறது

‘பத்திரமா இருந்துக்க’ என்ற சொல்லைப்போல கேவலமான சொல் வேறு இல்லை. நான் எப்போதுமே பத்திரமாக இருந்ததில்லை. என் பையனிடமும் அதைச் சொன்னதில்லை

வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல

முழுப்பொருள்2 (by நண்பர் நாகமணி):
வலிமை குறைந்த முயலை குறி வைத்து எய்வதற்கு ஏந்தி நிற்கும் அம்பினை விட, யானைக்கு பெரிய தீங்கு ஏற்பட்டுத்தாவிட்டாலும் அதன் மேல் எறிவதற்கு வேலை ஏந்தி நிற்பதே சிறந்தது எனக் கூறுகிறார் வள்ளுவர் .

இக்குறளின் மூலம் வள்ளுவர் நாம் எதிர்த்து போராடும் எதிரி கூட பலம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்றும், எளியவனிடம் போரிட்டு/மோதி வெல்வதை காட்டிலும்,வலியவனிடம் போரிட்டு/மோதி சிறிது தீங்கு ஏற்படுத்தினாலும் சிறந்தது  என உரைக்கிறார்.
இதை சிறிது மாற்றி, அடைய முடியா விட்டாலும் நமது இலக்கு உயரமானதாக இருக்க வேண்டும் எனவும் கொள்ளலாம். 

இது "Aim for the sky and you will reach the treetop" என்னும் ஆங்கில மொழியையும் நியாபகப் படுத்துகிறது .

ஏனோ இக்குறள் எழுதும் நேரத்தில் , 2014 தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடியுடன் மோதும் கேஜ்ரிவாலும் நினைவுக்கு வருகிறார் .

பரிமேலழகர் உரை
கான முயல் எய்த அம்பினில் - கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று. ('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்¢றதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக்குத்தக எறிதலும் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் செல்லலுற்றானது கூற்று).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கான முயல் எய்த அம்பினில்-காட்டிலோடும் முயலின்மேல் தப்பாது எய்த அம்பை ஏந்துவதிலும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-திறந்த வெளியில் நின்ற யானைமே லெறிந்து தப்பிய வேலைப் பிடித்திருத்தல் பெருமை தருவதாம்.

இது, பகைவருள் ஒரு காலாட்படை மறவனைக் கொல்வதினும், ஓர் அரசனை அல்லது படைத்தலைவனை வெல்ல முயலும் முயற்சி சிறந்ததென்று கருதும் மறவன் கூற்று. மரஞ்செடி கொடியடர்ந்த கானம் என்றதனால் திறந்தவெளி யென்பதும், 'பிழைத்த' என்றதனால் தப்பாது என்பதும், சிறு விலங்கிற்கேற்ப 'எய்த' என்றதனால் பெருவிலங்கிற்கேற்ப எறிதல் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன.

மணக்குடவர் உரை
வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது. இதுமேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது

சாலமன் பாப்பையா உரை
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது

Thirukkural - Management - Perseverance
Motivation is to aim high and think of big dreams. Courageously throwing a spear at an elephant is far greater an achievement than shooting an arrow at a rabbit. Your spear may miss the elephant and your arrow may hit the rabbit. But your courage to attack a powerful elephant is laudable one, lauds Kural 772.

Better the spear that missed an elephant
Than the arrow that killed a hare.

Similarly aiming for a big achievement, even if you fail to accomplish, is greater than aiming for small acts and achieving them. Therefore, big aim and perseverance make big things happen. 

செயற்கரிய செய்வார் பெரியர்

குறள் 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
 [அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] 
(For English meaning scroll to the bottom of this post)

பொருள் 
செயல் தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

செயற்கு - செய்வதற்கு

அரிய அருமையான (rare); அரியவற்றை, கடினமானவற்றை, அருமையானவற்றை, பயனுள்ளவற்றை

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்வார்- செய்வார்கள்

பெரியர் - பெருமை, சான்றோர்

சிறியர் - சிறியவர், சிறியார்; ciṟiyr   --சிறியவர்--சிறியார்--சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செயற்கு - செய்வதற்கு

அரிய - அரியவற்றை, கடினமானவற்றை,  அருமையானவற்றை, பயனுள்ளவற்றை

செய்தல் இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்கலாதார் - செய்யமாட்டார்கள்

முழுப்பொருள்
மேன்மக்கள் தாம் செய்யும் செயல்களை மிகுந்த கவனுத்துடன் தேர்ந்தெடுத்து செய்வார்கள். இச்செயல் என்ன நன்மை பயக்குமோ என்று சிந்தனை செய்வார்கள். பயனற்ற எளிய செயல்களை செய்ய மாட்டார்கள். நேரத்தை வீணாக விரயம் செய்ய மாட்டார்கள். ஆதலால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் சான்றோர்களும் மேன்மக்களும் அருஞ்செயல்களையும் கடினமானவற்றையும் பிறருக்கு பயன் தருபவற்றையும் அறம் சார்ந்ததை மட்டுமே செய்வார்கள். அவ்வாறு ஒருவர் பெரிய செயலை செய்தால் அவருக்கு சிறிய செயல்களை செய்ய நேரம் இருக்காது. பெரிய செயல்களை செய்தப்பின்பு சிற்றின்பங்கள் உவக்காது. 

உதாரணமாக பாருங்கள் சான்றோர்கள் 60 வயது ஆனப்பின்பு ஓய்வு பெற மாட்டார்கள். தொடர்ந்து ஆக்கப்புர்வமான விஷயங்களில் ஈடுப்படுத்திக்கொண்டே இருப்பர் (உதாரணமாக டெல்லி மெட்ரோ ஈ.ஸ்ரீதரன், ரத்தன் டாட்டா, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் பலர்). 60 வயதில் கட்டாய ஓய்வுப் பெற்றவர்களை நான் குறைச்சொல்லவில்லை. சில உதாரணப்புருஷர்களை மட்டுமே நினைவுப்படுத்துகிறேன். 

ஆனால் சிறியவர்களோ எதற்கு உதவாத நேரத்தை விரயம் செய்யும் செயல்களை செய்து கொண்டு பொழுதை கழிப்பர். அவர்களை இவ்வுலகம் சிறுமை என்றே எண்ணும். 

கிருஷ்ணம்மாள் (நன்றி ஜெயமோகன்)
புகழ் என இரண்டு வகை உண்டு. ஒன்று அறியப்படுதல். இன்னொன்று வணங்கப்படுதல். ஊடகங்கள் தோறும் தென்படுபவர்கள் கொண்டிருப்பது முதல் வகையான புகழ். கிருஷ்ணம்மாள் போன்றவர்கள் அடைந்திருப்பது இரண்டாம் வகை புகழ். மரபின் மொழியில் சொல்லப்போனால் பொன்றாப்புகழ்.

”தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” , “செயற்கரிய செய்வார்” என்னும் இரண்டு வரிகளால் அவர்களை நம் மரபு வரையறை செய்கிறது. ’வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என வகுக்கிறது. அவர்களே புலவர் சொல்லில் எழவேண்டியவர்கள். தலைமுறைகளின் நினைவில் நின்றிருக்கவேண்டியவர்கள். கிருஷ்ணம்மாள் அவர்களில் ஒருவர். அவர்களை வணங்குகிறேன்



மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்” (பெரிய.இயற்பகை 29)

பரிமேலழகர் உரை
செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செயற்கு அரிய செய்வார் பெரியர் - உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர்; செயற்கு அரிய செய்கலாகாதார் சிறியர் - பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.

"செயற்கரியவாவன இயமம் நியமம் முதலாய எண்வகை யோக வுறுப்புகள்". என்பர் பரிமேலழகர். எண்வகை ஓக உறுப்புகள் கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை (சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும் நிறையுமான மனவடக்கம் சிறந்ததாம்.

"வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்
சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது"
என்றார் தாயுமான அடிகள். ஆதலால், மனமடக்குதலும் அவாவறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக.

செயற்கெளியவாவன உலகத்தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம். இல்லறம் துறவறத்தை நோக்க எளிதாயினும், அதையுஞ்செய்ய இயலாதவர் சிலர் உளர். அவரே சிறியர் என்னுங் கருத்தினர் "செயற்குரிய செய்கலாதார்" என்று பாட வேறுபாடு காட்டுவர். அவ்வேறுபாடு பெரியர் சிறியர் என்னும் இரு வகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரையும் வேண்டுதலின், அது அத்துணைச் சிறந்ததன்றாம்.

மணக்குடவர் உரை
செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர்.
செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

மு.வ உரை
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பிறரால் முடியாதவற்றைச் செய்வோரே சிறந்தவர்கள்

Thirukkural - Management - Perseverance
Meaningful and timely execution demand perseverance. Your entire success depends on the purpose and the persistence of the task you execute.

A great ship asks for deep waters. A great ship is built to explore the vast ocean. Similarly, great people do challenging tasks that are considered impossible by small people. Great people also attempt challenging tasks to explore themselves. One of the ways to identify whether a person is great in thinking is to measure the type of task he executes, explains Kural 26.

The great do the impossible:
The mean cannot.

Great people do not limit themselves by their limitations. Whereas small people make mountains out of molehills of their tasks and give up the thought of either doing them or persisting till the end. So, think great thoughts, challenge yourself to become a man of achievements. 

English Meaning - As I taught a kid - Rajesh
Great people do great things consistently whereas normal / trivial / mediocre people do average things / mundane stuffs and do not aim to be great or do great things consistently. Mediocre people don't even try to think about great stuffs or think about doing great stuffs

Questions that I ask to the kid
Who are great people? Who are mundane/trivial/mediocre people? By what do they differ?