Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_039. Show all posts
Showing posts with label Athikaaram_039. Show all posts

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

குறள் 390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
கொடை - ஈகம், தியாகம், ஈகை; உதவிப்பொருள்; கைக்கொண்டஆநிரையைஇரவலர்க்குவரையாதுகொடுக்கும்புறத்துறை; ஊர்த்தேவதைக்குமூன்றுநாள்செய்யும்திருவிழா; வசவு; அடி.

அளி - அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்

செங்கோல் - அரசச்சின்னமாகியநேர்கோல்; நல்லரசாட்சி; நெருப்புச்சலாகை.

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

ஓம்பல் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

நான்கும் - மூன்றுக்குமேல்ஒன்றுகொண்டஎண்; நாலில்ஒருபங்கு; வட்டிக்காகச்சேர்த்துஅறுவடையானதும்கொடுப்பதாகச்சம்மதித்துப்பெறும்தானியக்கடன்.

உடையான் -  உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

வேந்தர்க்கு - வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

முழுப்பொருள்
ஒரு அரசருக்கு புகழையும் / ஒளியையும் சேர்ப்பது எது? (அல்லது ஒரு அரசர் புகழுடன் விளங்க என்ன செய்ய வேண்டும்?)

1. கொடை செய்ய வேண்டும். மக்களுக்கு தானங்களை கொடுத்து உதவ வேண்டும்

2. அளி செய்தல் வேண்டும். அதாவது அருள் செய்தல் வேண்டும். முகம் மலர்ந்து இனியவற்றை கூற வேண்டும்

3. செங்கோல் புரிய வேண்டும் - நீதி நூல்களும் அரசாட்சி நூல்களும் கூறியப்படி நாட்டை நிர்வகிக்க வேண்டும்

4. குடியினை ஓம்புதல் வேண்டும் - அதாவது மக்களையும் அவர்களது குடிமைகளையும் காக்கத்துப் பேண வேண்டும். அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும். அவர்கள் பிணிகளை போக்க வேண்டும். நாட்டில் குற்றங்கள் நடக்காது மக்களை நிம்மத்தியில் வைக்க வேண்டும்.

இவை நான்கையும் ஒரு அரசர் செய்தால் அவரின் புகழ் ஒரு விளக்கின் ஒளிப்போல் பிரகாசிக்கும். அவர் விளக்கு எப்படி ஒரு அரைக்கு இருளை நீக்கி வெளிச்சம் தருகிறதோ அதுப்போல அவ்வரசரும் அந்நாட்டு மக்களுக்கு பிணிகளை நீக்கி வெளிச்சமும் வாழ்க்கையும் தருகிறார். விளக்கை தெய்வத்தின் ரூபமாக பூஜிக்கும் மக்கள் அரசரையும் வணங்குவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”சாலக் குடியோம்பல் வல்லான் அரசன்” (திரி.13)

பரிமேலழகர் உரை
கொடை - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், அளி- யாவர்க்கும் தலையளி செய்தலும், செங்கோல் - முறை செய்தலும், குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணலும் ஆகிய, நான்கும் உடையான் -இந்நான்கு செயலையும் உடையான், வேந்தர்க்கு ஒளியாம் - வேந்தர்க்கு எல்லாம் விளக்கு ஆம்.
(தலையளி - முகம் மலர்ந்து இனிய கூறல், செவ்விய கோல்போறலின், 'செங்கோல்' எனப்பட்டது. 'குடி ஓம்பல்' எனஎடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது,ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின், 'விளக்கு'என்றார். ஒளி - ஆகுபெயர். இவை ஐந்து பாட்டானும் மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம்.
கொடுத்தல்-தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

சாலமன் பாப்பையா உரை
தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

குறள் 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை.

கைப்பச் - kai-, 11 v. [K. M. kai.] intr. 1.To be bitter, astringent, unpleasant; கசத்தல் தேனும் புளித்தறக் கைத்ததுவே (கந்தரலங். 6). 2. Tobe deeply afflicted; நைந்துவருந்துதல். கைத்தனளுள்ளம் (கம்பரா. மாயாசன. 30).--tr. 1. To dislike;to be angry with; to hate; கோபித்தல் மருவலரைக் கைக்கும் (தஞ்சைவா. 423). 2. To vex, trouble,harass, torment; அலைத்தல் (W.)  
kai  -, 11 v. tr. cf. உகை-. 1. Toproduce, as a sound; to propel, shoot, as anarrow; செலுத்துதல் சிலம்பிரங்கு மின்குரல் கைத்தெடுத்தலின் (சீவக. 2683). 2. To feed with thehand; ஊட்டுதல் காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப(மதுரைக். 659).  
kai  -, 11 v. tr. கை&sup5;. cf. தை-.To adorn, decorate; அலங்கரித்தல் மடமொழியோருங் கைஇ மெல்லிதி னொதுங்கி (மதுரைக். 419).  

சொற் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பொறுக்கும் - பொறுத்தல் -  தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

பண்பு-  வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

பண்புடை - குணமிக்க; இயல்புடைய; அழகுடைய 

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

கவிகைக் - வளைவு; குடை; நன்மைதீமை; ஈகம், தியாகம்

கீழ்த் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

தங்கும் - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
ஒரு அரசன் தன்னைப் பற்றி மிகவும் கீழாக மலிவாக கடுமையான சொற்களைக் கொண்டுப் பிறர் விமர்சித்தாலும் ஏசினாலும் அதனை பொறுத்துக்கொண்டு இருந்தால் அத்தகைய பண்புடைய வேந்தனின் அரச குடையின் கீழ் இவ்வுலகம் தங்கும்.

ஏன் பொறுக்க வேண்டும்? ஏனெனில் ஒரு செயலை செய்தால் அதனை விமர்சிக்க குறைக்கூற பத்துப்பேராவது இருப்பார்கள். அரசர் என்றால் ஆயிரம் என்ன லட்சத்தில் கூட இருப்பார்கள். ஆதலால் அவற்றுக்கு கோபட்டுக்கொண்டு இருந்தால் மனதில் மகிழ்ச்சி இருக்காது. நிம்மதியும் இருக்காது. நாம் செய்கிற காரியத்தில் ஐயப்பாடு வந்துவிடும். பின்பு செய்யவேண்டிய செயலை செவ்வென செய்ய முடியாது. ஆதலால் குறைகளை கேட்டு அவற்றில் நியாயமானவற்றை கண்டு எடுத்து அதற்கு நிவர்த்திகளை செய்யவேண்டும். அதற்கு பொறுமை மிக அவசியம். அப்பொழுது தான் சமநிலை இழக்காமல் செயலாற்ற முடியும். 

ஏன் அவ்வரசரின் குடையின் கீழ் இவ்வுலகம் தங்கும்? பொறுமையுடன் எல்லாவற்றையும் பொறுக்கும் மன்னர் அதனை நிவர்த்தியும் செய்கிறார். பகையை வளர்க்காமல் ஆக்கப்பூர்வமாக செயலாற்றுகிறார். அதனால் மக்கள் அவரை விரும்புவர். 

இதற்கு மிகப்பெரிய உதாரணம் மகாத்மா காந்தி அவர்கள். அவர் இந்தியாவின் சுதந்திரத்தை முன்னின்று வழிநடத்தியபொழுது அவர் பெறாத வசைகளே கிடையாது. (அவர் இறந்தும் இன்று வரை தொடர்கிறது). ஆனால் காந்தி அவற்றுக்கு செவி கொடுக்காமல் எல்லாவற்றையும் மனதார கேட்டார். காந்தி அவர்கள் எதிர் தரப்பில் இருந்தவருக்கும் சொல்வதற்கு ஒரு கருத்து இருக்கிறது என்று அவர்களை மதித்து அவர்களுடன் உரையாட அழைத்தார். காந்தி அவர்கள் சுவர்களை அமைக்காமல் பாலங்களை அமைத்தார். ஆதலால் அவரை எதிரி என கருதியவர்களும் பின்னாளில் நண்பர்களாக சக ஊழியராக மாறி அவருடன் பணியாற்றினர். உதாரணமாக சொன்னால் டாக்டர் அம்பேத்கருக்கும் காந்திக்கும் பல கருத்துமோதல்கள் இருப்பினும் அவர்கள் உரையாடிக்கொண்டே இருந்தனர் பின்னர் அம்பேத்கர் இந்தியாவின் சட்டத்தை வகுத்தார்.



மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்.
('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.

மு.வரதராசனார் உரை
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

சாலமன் பாப்பையா உரை
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

குறள் 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு

செய்து - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

காப்பாற்றும் - காப்பாற்று-தல் - kāppāṟṟu-   v. tr. id. +.[T. kāpāḍu.] To preserve, guard, watch, takecare of, protect, save; ஆதரித்து இரட்சித்தல். உன்னைக் கடவுள் காப்பாற்றுவார். Colloq.

மன்னவன் - maṉṉavaṉ   n. மன்னு-. 1.See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன்(குறள், 388). 2. Indra; இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173); அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

மக்கட்கு - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

இறை - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

வைக்கப்படும் -  உள்ளத்தில் வைத்து வணங்கப்படும்

முழுப்பொருள்
நீதி நூல்களும் அரசாட்சி நூல்களும் கூறியதுப்போல ஒரு அரசர் முறைமைகளையும் நியமங்களையும் செய்து அவற்றை காப்பாற்றியும், மக்களை வறுமை குற்றம் முதலிய பிணிகளிலிருந்து காப்பாற்றியும், நாட்டின் வளங்களை தவறான பயன்பாடுகளிலிருந்து காப்பாற்றியும், நாட்டை எதிர்களிடமிருந்தும் பகைவர்களிடம் இருந்து காப்பாற்றியும், அரசையும் நாட்டையும் நீதியும் அறமும் தவறாமல் காப்பாற்றியும், அரசாட்சி புரிந்தால் அந்த மன்னரை அந்நாட்டு மக்கள் தேவலோகத்தில் வாழும் வானோர்களுக்கும் இறைவனுக்கும் நிகராக வைத்து வணங்குவர்..

திரிகடுகப்பாடலொன்றும், “சாலக் குடியோம்பல் வல்லான் அரசன்” என்று கூறுகிறது.

ஒப்புமை
“அரசுமுறை செய்க” (ஐங்.8:2)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும். (முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.).

மணக்குடவர் உரை
குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.

மு.வரதராசனார் உரை
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

English Meaning - As I taught a kid - Rajesh
A king who 1) fulfils his (King's) responsibilities as per textbooks, 2) protects the people, country and its resources, 3) reduces and removes poverty, crime, diseases, etc, and 4) maintains Dharma and Law throughout his tenure would be considered in the ranks of God and Devas by his people

Questions that I ask to the kid
Which king is considered as a God or a Devas by people? Why?

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

குறள் 387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

ஆல்  - அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம்இவற்றைக்குறிக்கும்இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறைவியங்கோள்விகுதி; எதிர்காலவினையெச்சவிகுதி.

சொலால் - சொற்களால்

ஈத்து - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

அளிக்க - அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்

வல்லாற்குத் - வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

தன் - தன்னுடைய

சொலால் - சொற்களால்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கண்டுகாணுதல் - கவனமாய்ப்பார்த்தல்.
அணைத்து - aṇai-   11 v.tr. caus. of அணை¹-.1. To join, put close to, as earth to a tree;அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான். 2.To embrace, hold, clasp in the arms; தழுவுதல்அண்டமும் பார்ப்பு மாமென வணைக்கும் (கல்லா. 44). 3.To tie, fasten, as animals; கட்டுதல் களிறணைக்குங் கந்தாகும் (நாலடி. 192). 4. To quench, extinguish; அவித்தல் விளக்கணைத்தல். 5. To tie up ina bunch; கூட்டிமுடித்தல் அணைத்த கூந்தல் (திருமுரு.200). 6. To produce; உண்டாக்குதல் மம்மரேயணைக்குங் கள் (சேதுபு. திருநாட். 54).

இவ் - இந்த

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
பிறர் வாடா இனிய (கனிவான) சொற்களைப் பேசித் தேவையானவர்களுக்கு பொருட்களையும் செல்வத்தையும் கொடுக்க வல்ல அரசருக்கு/தலைவருக்கு தன்னுடைய சொற்களை போல் இவ்வுலகம் தான் கருதியதுப் போல் புகழுடன் அமையும். ஏனெனில் இனியவராகவும், கொடை தன்மை பெற்றவராகவும் இருக்கும் அரசர்/தலைவர் சொல்லை கேட்டு அதன் படி நாட்டிற்கு உழைத்து முன்னேற்ற மக்கள் தயாராக இருப்பர். ஆதலால் நாடு செழிப்படையும். அதுவே அரசர்/தலைவர் விரும்பியது.

“செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்” என்ற வாக்கின்படி, ஆள்வோர்க்கு தங்கள் குடியெல்லோருமே செழுங்கிளையென்பதும் (உறவினர்கள்) அவர்களை காப்பாற்றவேண்டியது (ஈகையினால்) ஆளுமையாகிய செல்வம் படைத்தவர்களுக்கும் கடனே.

கம்பராமாயணப்பாடலொன்றில் (மந்தரை சூழ்ச்சிப் படலம்:18), கம்பன் அரசனைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்:
இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி நெறி கடவான் எனில்,
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ?
இப்பாடலின் முதல்வரிகளே இக்குறளின் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்

ஈயுநர் இன்மொழிக் கம்பலும்” (பெருங் 2.2:75)
இன்னுரை அமிழ்தமொசு மன்னவன் ஈத்து” (பெருங் 4.3:31)
.....இனிய கூறல்
மெய்சொலல் வழங்கல்” (கம்ப.அரசியல்.31)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.
(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.).

மணக்குடவர் உரை
இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.


மு.வரதராசனார் உரை
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

குறள் 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
காட்சிக்கு - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

எளியன் - வறியவன்; இலகுவாய்அடையப்படுபவன்; வலியில்லாதவன்; அறிவில்லாதவன்; குணத்தில்தாழ்ந்தவன்.

கடுஞ்  - கடுமை - கொடுமை; கண்டிப்பு; கடினம்; வன்மை; மிகுதி; விரைவு; வெம்மை; மூர்க்கம்; சினம்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அன் - ஆண்பால்வினைவிகுதி; தன்மையொருமைவிகுதி; ஆண்பால்பெயர்விகுதி; ஆண்பால்வினையாலணையும்பெயர்விகுதி; சாரியை எதிர்மறைகாட்டும்வடமொழிமுனனொட்டுத்திரிபுசொல்.

அல்லனேல் - இல்லையென்றால் 

மீக்கூறு - புகழ்.
மீக்கூற்றம் - புகழ்; மேலாகமதிக்கப்படுஞ்சொல்.
மீக்கூறு-தல் - mī-k-kūṟu-   v. tr. மீ² +.To praise; உயர்த்துக்கூறுதல். மீக்கூறு மன்னனிலம் (குறள், 386).

மீக்கூறும் - புகழ் பேசப்படும்

மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

முழுப்பொருள்
அரசனிடம் அல்லது அரசனின் அமைச்சர்களிடம் அல்லது அரசாங்க அலுவலகத்திடம் நீதிக்கோ உதவிக்கோ வந்தால் வருபவர் காண்பதற்கு தோற்றத்தால் அறிவினால் வறியவராக (எளியவராக, அறிவில்லாதவராக) தோன்றினால் அவரிடம் மனம் வருந்தக்கூடிய கடுமையான வன்மையான சொற்களை பேசாது சினத்தை காண்பிக்காது இருந்தால் அவ்வரசரையும் அந்த அரசையும் அந்த நாட்டையும் போற்றி புகழ் பாடும் இவ்வுலகமும் இந்நாட்டு மக்களும்.

புறநானூற்றுச் செய்தியொன்று சங்கக்காலத்து சேரமன்னனான இரும்பொறை நாட்டினை இவ்வாறுப் போற்றுகிறது.
“மாந்தரல் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே 
புத்தேளுலுகத் தற்றெனக் கேட்டுவந்து” (புறம் 22:34-5).

ஆள்பவர்கள் காட்சிக்கு எளியராயும், இனியமொழி உடையராகவும் இருத்தலை, கீழ்காணும் புறநானூற்று வரிகள் தெரிவிக்கின்றன.
“முறைவேண்டும் பொழுதில் பதன் எளியேன்”, (புறம்: 35:15)
“இன்சொல் எண்பதத்தை யாகுமதிப் பெரும”  (புறம்: 40:9)

“காட்சிக்கெளியானும் ஆம்” (அப்பர்.கருகாவூர்.4)

“நகுதக் கனரே நாடுமீக்கூறுநர்” (புறநா.72:1)

மேலும்: அஷோக் உரை

‘ராஜாதி ராஜ வேஷா ராஜனுத லலித பாஷா” என்கிறார் தியாகராஜர். அரசனுக்கரசனாக தோற்றமளிப்பவன். அரசனுக்குரிய எளிமையான பேச்சு கொண்டவன்” ராமன் ஒரு கனவு. ஓர் இலட்சியம்.

பரிமேலழகர் உரை
காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் .
(முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.
இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

சாலமன் பாப்பையா உரை
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)

Thirukkural - Management - Leadership
People admire, appreicate, follow, and respect a leader who is: 1) easy to access by the people, that is., approachable and there are no barriers, physical and psychological, around him and 2) he never uses harsh and intimidating words, that is., he is always soft spoken irrespective of conditions and situations.

That King is to be extolled
Who is easy of access and soft-spoken.

When a leader practices these two principles with respect to the people he leads, he will make his institution, organization, society or nation prosperous. 


இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்

குறள் 385
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
இயற்றலும் - இயற்றல் - செய்தல்; முயற்சி

ஈட்டுதல் - கூட்டுதல்; சம்பாதித்தல்

ஈட்டலும் -  ஈட்டல் - īṭṭal   n. ஈட்டு-. Amassing wealth,a desirable quality of character in merchants;வணிகர்குணங்களு ளொன்று. (பிங்.) 

காத்தலும் - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்

காத்த - பாதுகாத்தவை

வகுத்தலும் - வகுத்தல் - கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்; பகுத்துக்கணக்கிடல்; அமர்த்துதல்; வகைப்படுத்தல்; நியமத்தோடுசெலவிடுதல்; பூசுதல்; படைத்தல்.

வல்லது - வல்ல - வலிமையுள்ள; திறமையுள்ள.

அரசு - அரசன்; இராச்சியம் அரசியல், அரசாட்சி அரசமரம் திருநாவுக்கரசநாயனார்.

முழுப்பொருள்
எது வலிமையான திறமையுடைய அரசு ?
1. பொருளை ஈட்டும் வழிகளை வகுத்தல்/இயற்ற வேண்டும்
2. இயற்றிய வழிகளில் (தொழில்களை செய்து, அதற்கு தேவையானவற்றை செய்து) பொருள்களை ஈட்டவேண்டும்
3. ஈட்டிய பொருளை காப்பாற்ற வேண்டும் - தேவையில்லாமல் விரையம் செய்யக்கூடாது, பிறர் கொள்ளையடிக்க அனுமதிக்கக்கூடாது, இயற்கை பேரிடர்காலங்களில் பொருள் சேதம் அடையாமல் பாதுக்காக்க வேண்டும் 
(இவ்வளவும் யாருக்கு? இந்த நாட்டிற்கும் இந்த நாட்டு மக்களும்)
4. பாதுகாத்தப் பொருளை / செல்வத்தை முறையே மக்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கும் வகுத்து வழங்கி (அமல்படுத்த) வேண்டும்.

மேற்சொன்ன நான்கையும் செய்யத்தக்கவல்லதே அரசாகும். 

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு-சொல்வளர்காடு-33-இல் இப்படி ஒரு வரி வருகிறது
உணவை வீணாக்கலாகாது. அரசன் என்றான பின்னர் ஒவ்வொரு கூலமணியையும் ஓர் உழவனின் உழைப்பாக மட்டுமே பார்க்க அது எனக்கு கற்பித்தது.

பரிமேலழகர் உரை
இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது அரசு - வல்லவனே அரசன்.
(ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலைஇன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலியதவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார்.
இவை நான்கு பாட்டானும் மாட்சியேகூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான்.

பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

சாலமன் பாப்பையா உரை
பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.

Thirukkural - Management - Leadership
Shareholders and stakeholders expect returns on their investments from their business leaders. According to Kural 385, a person must do four actions to become an acceptable business leader.

He is a King who can do these-
Produce, acquire, conserve and dispense.

The functions of an influential leader are: 1) to create wealth, 2) to accumulate the created wealth, 3) to protect the accumulated wealth, and 4) to spend the protected wealth judiciously to benefit all the people concerned. This thought  on leadership is assertively the best on business leadership. These four functions are essential not only for leaders who lead businesses, but also for leaders who lead nations. States and nations will suffer when the leaders do not carry out these functions. Hence, political leaders must carry out these functions to give proper directions to their nations.

அறனிழுக்கா தல்லவை நீக்கி

குறள் 384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 
மானம் உடைய தரசு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
அறன் -  அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம்

இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்
இழுக்காது - தவறவிடாதல், கைவிடாதல்

அல்லவை - அறம் அல்லாதவை; பாவச் செயல்கள்; பயன் அல்லாத செயல்கள்; allavai   n. அல்¹. 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.) 

நீக்கி - விலக்கல்
நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

மறன் - மறம் - வீரம்; கோபம்; பகை; வலிமை; வெற்றி; போர்; கொலைத்தொழில்; யமன்; கெடுதி; பாவம்; கலம்பகத்தின்ஓர்உறுப்பு; மறவர்குலம்; மயக்கம்.

இழுக்கா - குறையாமல்

மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.

உடையது - கொண்டது

அரசு - அரசன்; இராச்சியம் அரசியல், அரசாட்சி அரசமரம் திருநாவுக்கரசநாயனார்.

முழுப்பொருள்
ஒரு அரசு (அரசன்) என்றால் எப்படி இருக்க வேண்டும்? 1) தனக்கு விதிக்கப்பட்ட அறத்தில் இருந்து விலகாமல், தவறாமல் இருக்க வேண்டும். தன்னுடைய அறம் எனில் கடமை என்பது ஆகும். 2) தனது ஆட்சிக்குடியின் கீழ் அறம் அல்லாதவை  நடந்தால் அதனை முற்றிலும் விலக்கிட வேண்டும். 3) ஒரு அரசுக்கு எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வீரம் / வலிமை இன்றியமையாதது ஆகும். ஆதலால் எப்பொழுதும் தன்னுடைய நாட்டின் (படை)வீரம் குறையாமல் இருக்க செயல்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தன்னுடைய நாட்டின் (உணவு உற்பத்தி, பொருள், ஆயுதங்கள் மற்றும் பலவற்றில்) வலிமை குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவை மூன்றும் உடைய அரசு மானம் உடை அரசாகும். அதாவது பெருமை, வலிமை உடைய அரசாகும். அதுவே அரசாகும்.

எது அரசின் அறம்  என்பதற்கு முன்னரே திருவள்ளுவர் பதில் அளித்துள்ளார்

குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு

குறள் 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு

புறநானூற்று வரிகள் சொல்வது: “மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55:9-10).

கம்பராமாயணப்பாடல் வீரம் சற்றும் குறையாத மானத்தை இவ்வாறு சொல்கிறது.
“மின்போன் மிளிர்வா ளொடு தோள் விழவும் 
தன்போர் தவிரா தவனைச் சலியா
என்போலி யர்போ ரெனினன் றிதுவோர் 
புன்போ ரென்நின் றயில்போ யினனால்” (கம்ப.படைத்தலைவர்.83)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனவல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன். 
(அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது,
வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான் 
ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் 
மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் 
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.).

மணக்குடவர் உரை
அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

மு.வரதராசனார் உரை
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண்

குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிட
கூழ் - மாவினாற் சமைத்த உணவு; பல வகை உணவு; பொருள்; பொன்.
அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்; மந்திரித்தொழில்.
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்
ஆறும் - ஆறு 
உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள்
அரசருள் - அரசர்களில் 
ஏறு - எருது; இடபராசி; எருமைக்கடா; சங்கு; அசுவினிநட்சத்திரம்; விலங்கின்ஆண்; உயர்ச்சி; ஆண்சுறா; ஆண்சங்கு; பனைமுதலியமரத்தின்ஆண்; கவரி; பன்றி, மான்இவற்றின்ஆண்; விலங்கேற்றின்பொது; நந்திதேவர்; தழும்பு.

முழுப்பொருள்
பொருட்பாலில் ஏழு இயல்கள் உள்ளன - அவை அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல். பொருட்பாலின் முதல் இயல் அரசியலில் முதல் அதிகாரம் இறைமாட்சி. முதல் குறளிலேயே அரசருக்கு சிறப்பு சேர்ப்பது என்பது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

இக்குறளில் நாட்டைப் பாதுக்காக்கின்ற வீரமிக்க படை, நல்ல குடிமக்கள், பொருளாதார வசதிகளுக்கான வலிமையான அடித்தளம் (அதாவது எடுக்கக் குறையாத செல்வம் - இயற்கை செல்வங்களும் அடங்கும்), அரசரை எல்லாத்துறைகளிலும் நல்வழி நடத்தும் அமைச்சர்கள், அண்டை நாடுகளுடனான நல்ல நட்பு, நாட்டின் எல்லைகளை பாதுக்காக்கும் வலிமையான அரண் ஆகியவை அரசருக்கு சிறப்பு சேர்க்கும், உயர்ச்சித் தரும். இந்த ஆறு அம்சங்களையும் சிறப்பாக அமைத்துக்கொள்ளும் பொறுப்பு அரசருக்கும் உண்டு.

நல்ல குடிமக்கள் எனில் நாட்டின் நலன் கருதி நாட்டின் இயற்கை வளங்களை போற்றி பாதுக்காத்தல் (மாசு படுத்தாது இருத்தல், சூறையாடாது இருத்தல்), விதிகளை பின்பற்றுதல், வரிகளை முறையே கட்டுதல், நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், சக குடிமக்களுடன் இயந்து வாழ்தல் என்று பலவற்றை கூறலாம்.

கி.வா.ஜவின் ஆராய்ச்சிப் பதிப்பில் அவர் ஒப்புமையாக இரண்டு திரிகடுகப்பாடல்களை மேற்கோளாக இடுகிறார். அவை இவ்வாறையும் மும்மூன்றாய் பிரித்துக் கூறுகின்றன.

ஆள்பவர் கைவிடலாகதவை யாவை? நல்லத்தனார் கூறுவது:
கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் – வேலின்
கடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம்மூன்றும்
படைவேந்தன் மற்று விடல். (திரி.33)

ஆளுபவருக்குரிய உறுப்புகள் எவை? நல்லத்தனார் கூறுவது:
பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்துஅமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு. (திரி.100)

”தாழுஞ்செய லின்றொரு மன்னவன் தாங்க வேண்டும்
கூழுங்குடியும் முதலாயின கொள்கைத் தேனும்
சூழும் படைமன்னவன் தோளினைக் காவலின்றி
வாழும் தகைத்தன்றிந்த வையகம் என்று சொன்னார்” (பெரிய.மூர்த்தி.28)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது அவன்றன் நற்குண நற்செய்கைகள் , உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் , ' இறை ' என்றார் : 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் , '(திருவாய் 4,4,8) - (திருவாய் 34,8) என்று பெரியாரும் பணித்தார்.]
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான். 
(ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.
இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன்.
ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.

மு.வரதராசனார் உரை
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

சாலமன் பாப்பையா உரை
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

தூங்காமை கல்வி துணிவுடைமை

குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இறைமாட்சி - அரசியல்; அரசனின் நற்குண நற்செயல்கள்.
தூங்காமை - செயலில் சோர்வில்லாமை; செயல்கள் ஆற்றுவதில் சோர்ந்து நில்லாது, காலம் தாழ்த்தாது, விரைந்து முடிக்கும் தன்மை

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, நூல் அறிவு, திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை

துணிவு - n. துணி¹-. 1. Confidence,boldness, daring, bravery; ஆண்மை. தூங்காமைகல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383). 2.Strength of mind; மனத்திட்பம். செய்க துணிவாற்றி (குறள், 669). 3. Presumption, temerity,audacity; துணிச்சல். 4. Ascertainment, certainty; நிச்சயம். 5. Determination, decision;நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா.214, 3). 6. Conclusion; முடிவு. 7. Opinionfounded on facts, knowledge or evidence;கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18). 8.Belief, trust; நம்பிக்கை. (யாழ். அக.) 9. Branch,department; பகுதி. கலைகளின் றுணிவும் (மணி. 2,29). 10. Purpose, design, aim; நோக்கம். (W.)11. (Mus.) Time-measure; தாளம். தூக்குந் துணிவும் (மணி. 2, 19). 12. (Akap.) Theme in whichthe hero of a poem who meets the heroine forthe first time in a lonely place and doubts thatshe must be a celestial nymph, resolves hisdoubts and finally realises that she is but amortal; தனியிடை எதிர்ப்பட்ட தலைவன்

துணிவுடைமை  - மனத்திட்பத்துடன் முடிவு எடுக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், எதைக் கண்டும் உறுதி குலைந்து விடாமல் துணிவுடன் நன்மை செய்கின்ற தெளிவு 

இம் மூன்றும் - இம் மூன்று பண்புகளும், ஆற்றல்களும், குணங்களும் உடையவர்

நீங்கு - III. v. i. leave, depart, go off, wear off, பிரி; 2. come off, get out, be released from, விலகு; 3. be expiated, removed, கழி; 4. be turned away, be warded off, மாறு.
நீங்காமை, neg. v. n. that which is inseparable; 2. unchangeableness.
நீங்கா -நீங்காமை, பிரியாமை
நிலன் - நிலம்
ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன்; காலாள்; கணவன்; தொண்டன்; ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம்; அரசு; தொட்டால்வாடி; பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி..
ஆள்பவற்கு - அரசருக்கு, வீரருக்கு

முழுப்பொருள்
நிலத்தை / நாட்டை / மக்களை / நிர்வாகத்தை ஆளும்  மன்னருக்கு மூன்று பண்புகள் எக்காலத்திலும் நீங்காமல் இருத்தல் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அவை யாதெனின் பார்ப்போம்.

தூங்காமை - காலம் தாழ்த்தாது விழிப்புடன் செயல்களை செய்தல். அதாவது பருவத்தே பயிர் செய், சோம்பித் திரியேல் என்று ஒளவையார் சொன்னது போல். ஏன் என்றால் காலம் தாழ்த்தினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் அல்லது யாருக்கும் பயனில்லாமல் போகும் அதனால் நேரமும் வளமும் விரையம் தான் ஆகும்.  இதனை Bias for Action என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 

கல்வி - நாட்டையோ / நிர்வாகத்தையோ ஆள பல தளங்களில் அறிவு வேண்டும் உதாரணமாக மக்கள் நலன், கல்வி, போர், படை, நிதி, நீதி, சூழல் (குறள் 742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்), வெளிநாட்டு உறவு, வர்த்தகம், கலை, இலக்கியம் ஆகிய வற்றில் அடிப்படையைத் தாண்டி அவை மக்களின் நலனுக்கு எவ்வளவு முக்கியம். அவை வாழ்வில் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று உடன்பட்டுள்ளது, பிணைக்கப்பட்டுள்ளது என்று அறிந்து இருத்தல் வேண்டும். கலை இலக்கியம் மக்களை முன்னேற்ற மனதளவில் மேம்படுத்த எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்திருத்தல் வேண்டும். ஆக நாட்டை ஆள பல கல்வி அறிவு முக்கியம்.

துணிவுடைமை - துணிவு என்றால் மனத்திட்பம். மனத்திட்பம் என்பது பல தளங்களில் வேண்டும். நாம் இச்செயலை முடித்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை மிக அவசியம். அதுவே துணிவு. அத்தன்னம்பிக்கை தெளிவில் இருந்து வரும். அத்தெளிவு நாம் ஒரு செயலினை செய்வதற்கு முன்பு செய்யும் ஆராய்ச்சியாலும், திறத்தாலும், அறிவாலும் வரும். இக்கட்டான மோசமான சூழ்நிலைகளில் (போர், இயற்கை பேரழிவு, வர்த்தக சரிவு, நோய்களின் அபாயம்) அதனை கண்டு அஞ்சாமல் இருக்கும் ஊக்கம் வேண்டும். இக்கட்டான நிலை மட்டும் அல்லாது நாட்டின் நலத்திற்கும் வளத்திற்கும் தேவையான முக்கிய முடிவுகளை அச்சமின்றி தீர்க்கமாக முடிவு எடுக்கும் திறன் ஒர் அரசனுக்கு தேவை.

இம்மூன்று பண்புகளும் ஆள்வோருக்கு எக்காலத்திலும் நீங்காமல் இருத்தல் வேண்டும்.

மேலும்: அஷோக் உரை
மேலும்: கோவை வணிகம்
மேலும்: பெட்டகம்

பரிமேலழகர் உரை
நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க)

மணக்குடவர் உரை
மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நிலன் ஆள்பவற்கு - நாட்டையாளும் அரசனுக்கு; தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா - அரசக்கருமங்களை விரைந்து செய்யுந்தன்மையும் அவற்றை யறிதற்கேற்ற கல்வியறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காதிருத்தல் வேண்டும்.

கல்வியறிவினால் வினை வெற்றியாக முடியும் வகை தீர்மானிக்கும் திறமும், துணிவினால் தீர்மானித்ததை நெஞ்சுரத்துடன் நிறைவேற்றுவதும், தூங்காமையால் உரியகாலத்தில் தொடங்கி முடிப்பதும், கூடும் என்பதாம். இவற்றுட் கல்வி ஏழுறுப்புக்களையும் நோக்கியது. ஏனையிரண்டும் வினைக்குரியன. உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.

மு.வ உரை
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை

சாலமன் பாப்பையா உரை
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

நன்றி: தினமணி
சோம்பல் கொள்ளக் கூடாது
காலம் தாழ்த்தக் கூடாது
தூங்கும் ஆசை இல்லாமல்
விழிப்பான செயல்கள் வேண்டுமே

கல்வி அறிவு வேண்டுமே
துணிந்து வாழ வேண்டுமே
நாட்டை ஆளும் மன்னருக்கு
மூன்றும் முக்கியத் தேவையே
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

நன்றி: Indian Finance Bazaar.com
காலம் தாழ்த்தாமல் வேகமாக முடிவெடுக்கும் குணம், துணிவு, முதலீட்டை பற்றிய தேர்ந்த கல்வி ஞானம் இந்த மூன்று பண்புகளும் அதிக இடர்பாடுகள் நிறைந்த முதலீட்டில் முதலீடு செய்யும் பொழுது இந்த குணங்கள் நீங்காமல் இருத்தல் வேண்டும்.

அதிக இடர்பாடுகள் நிறைந்த முதலீட்டில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும், எவ்விதமான சங்கடங்கள் ஏற்படும் என்று உணர்ந்து தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல், விரைவாகத்  தீர்மானங்களை இயற்றி அவற்றை செயல்படுத்தவும் வேண்டும். ஆகையால் ஓர் முதலீட்டாளாருக்கு விழிப்புணர்வு, விரைவாக முடிவுகள் எடுக்கும் திறமை இவை கட்டாயமாக இருத்தல் வேண்டும்.

Thirukkural - Management - Leadership
Leadership is more than and beyond these qualities. A leader is known for his actions. A leader should never delay in action. Kural 383 presents three actions of a leader.

A ruler should never lack these three:
Diligence, learning and boldness.

A leader must: 1) never delay in taking actions,  2) continue to possess the right knowledge to take actions, and 3) take decisions courageously.  An inspiring leader is known by and for his decision- making skill. The ability to take right decisions at the right time makes a leader an everlasting ruler. 

English Meaning - As I taught a kid - Rajesh
Not being lethargic or not procrastinating, education, courage are three things a king / leader should always posses. 
1. Lethargy is the root for procrastination. If one is lethargic, one does things late. A work will not have desired impact if not started and completed on appropriate time. 
2. Education is an important things in learning about various stuffs, planning and executing things. Only then a work can be done effectively. Only then one can prevent bad things
3. Courage is essential because if one fears then it leads to inaction which impacts the results. Courage comes form learning and researching about stuffs. I.e. courage comes from being prepared.

Questions that I ask to the kid
What are three things a king / leader should always posses?

அஞ்சாமை ஈகை அறிவூக்கம்

குறள் 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
அஞ்சாமை - பயப்படாமை, திண்மை (மன உறுதி, வலிமை, கலங்காநிலைமை, பருமன்; உண்மை, நிதானம், பாரம், மெய்), ஒன்றை அஞ்சாமல் எதிர் கொள்ளுதல், ஒன்றை பயம் இல்லாமல் சந்தித்தல்; பயமின்மை, அச்சமின்மை
தைரியம், துணிச்சல், துணிவு

ஈகை - கொடை; பொன்; கற்பகம்; இண்டு; புலிதொடக்கி; காடை; காற்று; மேகம்; கற்பகமரம்; இல்லாமை; ஈதல்; கொடுத்தல்; பகிர்ந்துகொடு

அறிவூக்கம் - அறிவு + ஊக்கம்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்

இந்நான்கும் -

எஞ்சாமை -குறையாமை, ஒழியாமை, முழுமை.
எஞ்சு - சுருங்கு, குறை; சேஷமா யிரு;  கட; செய்யாதொழி.

வேந்தர்க் கியல்பு - வேந்தர்க்கு + இயல்பு

வேந்தர் - வேந்தன் - இராசா, எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன், முடிசூடியமன்னர், முதன்மையான

இயல்பு - இயல்பு என்றென்பது இயற்கை. இயற்கை என்பது அறம் சார்ந்தது. அறத்திற்கு புரம்பாக இயற்கை இருக்காது 
- தன்மை; இலக்கணம்; ஒழுக்கம்; நற்குணம்; நேர்மை; முறை; வரலாறு; பிரமாணம்பத்தனுள்ஒன்று.

முழுப்பொருள்
ஒரு மன்னருக்கு (அல்லது தலைவருக்கு) குறைவில்லாத(எஞ்சாமை) நான்கு குணங்களை / கோட்பாடுகளை திருவள்ளுவர் கூறியுள்ளார். அவை:

1) அஞ்சாமை - பகைவர்கள், பகைவர்களின் பலம் கண்டு பயப்படாத / அஞ்சாத மன திடம் வேண்டும்.

அஞ்சாமை என்றெனபடுவது நீதி வழங்குவதிலும் இருக்க வேண்டும். எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நீதி வழங்க வேண்டும்.
உதாரணம்: மனுநீதி சோழன். கன்று குட்டியை கொன்ற தன் பிள்ளை அவர் அதே தண்டைனையை கொடுத்து தண்டித்தார்.

ஏன் ஒருவருக்கு அஞ்சாமை வேண்டும் என்றும் ஏன் அதனை முதலாவதாக வரிசையில் திருவள்ளுவர் சொன்னார்?
அ) ஏனெனில் அச்சம் என்பது வாழ்வில் மிகப்பெரிய ஒரு மனத்தடை. அது நம்மை செயலாற்ற விடாமல் குட்டையில் இருக்கும் நீர்ப்போல் தேங்கச்செய்யும். செயலாற்றாமல் வாழ்நாள் முழுக்க அச்சத்திலும் கழிவிரக்கத்திலும் வாழ்வோம். அச்சம் இருந்தால் நாம் செயலில் இருந்து விலகி ஓடுவோம். செயலை தள்ளிப்போடுவோம். Procrastination என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். மேலும் மறதி, சோம்பல் ஆகிய குணங்கள் நம்மிடம் குடிக்கொள்ளும். செய்யவேண்டிய செயல்களை விட்டுவிட்டு சின்ன சின்ன சில்லறை செயல்களை செய்து பொய் மகிழ்ச்சிக்கொள்வோம். பலகாலம் கழித்து பலச்செயல்களை அச்சத்தால் செய்யமால் போனதற்காக குற்றவுணர்ச்சியில் கழிவிரக்கம் கொள்வோம்.

அச்சத்திற்கு இடம் கொடுக்காமல் ஒருவர் செயலை மேற்கொண்டால் அதில் இரண்டு விளைவுகளில் ஒன்றைப் பெறக்கூடும். ஒன்று வெற்றி. அது நமக்கு நம்பிக்கையை கொடுக்கும். மேலும் புதிய செயல்களை செய்ய உத்வேகத்தை கொடுக்கும். பெரும் செயல்கள் பெருமையை தரும். இரண்டு தோல்வி. தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளலாம். இரண்டுமே விலைமதிப்பில்லாதது. ஏனெனில் இவை அனுபவப்பாடங்கள். 

அதுவே அச்சத்தினால் செயலாற்றாமல் இருந்தால் ஒரு இலாபமும் இல்லை. தேங்கிய நீர்ப்போல் தூர்நாற்றம் வீசுவோம்.

”தொடர்ச்சியாக பாதுகாப்பு தேவைப்படுவது நம்மை உண்மையில் பலவீனப்படுத்துவது. பயம் இன்மையிலேயே பலம் இருக்கிறது. நம் உடலின் சதைப் பற்றிலும் எலும்புத் திரட்சியிலும் அல்ல” என்று காந்தியடிகள் கூறுகிறார்.

சோர்வுடன் அதை கீழே உதிர்த்துவிட்டு அமர்ந்த பிரபாவனிடம் “காலைமுதல் இதை கண்டுபிடித்தேன். இந்நாள் வரை நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான். அதில் திளைக்கிறேன். உன் கூரலகைக் கண்டுதான் உன் அருகே வந்தேன்” என்றது பூச்சி.


அச்சம் கொண்டவனும், அறிவு இல்லாதவனும், பிறரோடு ஒத்துப்போகாதவனும், கொடை அளிக்காதவனும், பகைவரால் எளிதாக வீழ்த்தபடுவார்கள். அச்சப்படுகின்றவனை பகைவர்கள் எளிதாக வென்றுவிடுவார்கள்.

அதனால் தான் அஞ்சாமை தலைவனுக்கு வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.


இ) ஒருவரை நாம் அஞ்சத்தொடங்கினால் நம் ஆற்றல் குறைவது மட்டுமல்லாது நமது அச்சத்தை எதிரிக்கு ஆற்றலென சமைத்து அளிக்கவும் செய்வோம். (#ஜெயமோகன் #தீயின்எடை). ஆதலால் ஒரு தலைவன் அஞ்சக்கூடாது. 

ஈ). அச்சம் இல்லை என்றால் ஒருவரால் அவரது கனவுகளை நோக்கி முயற்சி செய்து கண்டிப்பாக வெற்றிப் பெறக் கூடும்.
”All our dreams can come true, if we have the courage to pursue them.” என்பது Walt Disney யின் கூற்று



உ) ஒரு புதிய வணிக நிர்வாகம் பல ஆண்டுகள் களத்தில் சிறந்து விளங்கும் பல மடங்கு ஒரு மிக பெரிய நிறுவனத்துடன் மோதவோ போட்டியிடவோ தேவைப்படும். அப்பொழுது பெரிய நிறுவனங்களைக்கண்டு அச்சம் கொள்ளக்கூடாது. உதாரணமாக Tesla போன்ற மின் ஊர்தி வண்டிகள் (Electric Car) தயாரிக்கும் நிர்வாகங்கள் ஏற்கனவே களத்தில் இருக்கும் பெரிய நிர்வாகங்களான Ford, Honda, Hyundai, BMW, Audi, Toyota போன்ற நிர்வாகங்களை கண்டு பயப்பட்டால் அவர்களால் வளர முடியாது. இங்கு நிர்வாகங்கள் என்றில்லை, மக்களின் பழக்க வழக்கங்களைக் கண்டும் பயப்படக்கூடாது. ஏனெனில் மக்கள் Electric Car போன்ற வற்றிற்கு மாறுவார்களா அல்லது அதன் செயல்பாட்டை, அதனை charge செய்யும் இடங்களை கண்டு சந்தேகிப்பார்களா என்று துவக்கத்திலேயே அச்சம் கொள்ளக்கூடாது. தேவையானவற்றை Growth-mindset கொண்டு வாய்ப்புகளை எண்ணிச் செய்ய வேண்டும். 

ஊ) நம் அக பகைகளான காமம், கோரொதம் மோகம் ஆகியவை நம்முடன் பல ஆண்டு காலம் நம்முடன் இருந்திருக்கும். அவற்றை வெல்ல அஞ்சாமை வேண்டும். நாம் அவற்று எவ்வளவு அடிமையாய் இருப்பினும் அவற்றின் வலிமை கண்டு அஞ்சாமல், அவற்றை எதிர்க்கொண்டு வெல்ல வேண்டும்.

சரி, நாம் வாழ்வில் எப்பொழுதெல்லாம் அச்சம் கொள்கிறோம்?
1) நாம் வாழ்வில் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையில்? 
2) சில புதிய முயற்சிகளை மேற்கொள்ள
3) நம் வாழ்வு சிக்கலாக இருக்கும் பொழுது
4) அலுவகத்தில் அல்லது வீட்டில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்
5) பிறரிடம் வாக்கும் வாதமோ அல்லது முரணோ வரும் பொழுது
6) நம்மை யாராவது ஒதுக்கி விடுவார்களோ என்னும் பொழுது, அல்லது நம்மை யாராவது அடிப்பார்களோ என்னும் பொழுது
7) நாம் மற்றவர்களை மனநிறைவு செய்ய தவறிவிடுவோமா எனும் பொழுது

எ) மன்னிப்பு கேட்க துணிவு வேண்டும். மன்னிப்பு கேட்க அஞ்சக்கூடாது.
நாம் ஒரு தவறு செய்தால், அதை உணர்ந்து, அத்தவறை துணிவுடன் ஒப்புக்கொள்வதே தவறை திருத்திக்கொள்ள முதல் படி. அத்துணிவு இல்லை எனில் தவறை திருத்திக்கொள்வது இயலாது. தவறை உணர்ந்து மன்னிப்பு கெட்டு உறவுகளை சீர் செய்ய வேண்டும். மன்னிப்பு கேட்க துணிவு வேண்டும். அவர்கள் என்னை திட்டுவார்கள் என்று அஞ்சினால் மன்னிப்பு கேட்க முடியாது. நாம் மன்னிப்பு கேட்டல் எதிராலி திட்டுவார் அடிப்பார். ஆனால் மன்னிப்பு கேட்டவர் ஒரு அடி முன்னே சென்று உள்ளார். அது தான் முக்கியம். 
நான் படித்த ஞாபகம் - மகாகவி பாரதியார் தனது மனைவி செல்லாமாளிடம் மன்னிப்பு கேட்டதாக. 

நாம் பல சமயம் தவறை ஒத்துக்கொள்ளாததற்கு காரணம் நமது ஆணவம் தான். என் மேல் தவறு இல்லை. பிறர் மீது தான் தவறு. சூழ்நிலையில் தவறு என்று பல காரணங்களை கூறுவோம். ஆனால் உண்மை என்னவெனில் we dropped the ball. அத்தகைய நேரங்களில் நாம் ஒன்றை கேட்டுக்கொள்ளலாம். If the same thing is to happen again, will you let it happen? (அந்நிகழ்வு மறுபடியும் நிழந்தால் நீ அதை(அத்தவறை) நடக்க அனுமதிப்பாயா?) பெரும்பாலும் இதற்கு ஆம் என்று பதில் வரும். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் 1. நாம் தான் அத்தவறு நடக்க காரணமாக இருந்து இருக்கலாம் (பிறர் காரணம் இல்லை) அல்லது நாம் அலட்சியமாக இருந்து இருக்கலாம் அல்லது நாம் திட்டமிடாமல் இருந்து இருக்கலாம் 2. நாம் அத்தவறில் இருந்து கற்றுக்கொண்டு இருக்கலாம் அல்லது அதை செயலை வெற்றிகரமாய் செய்ய வேறு வழிகளை ஆராய்ந்து இருக்கலாம். 

ஏ) 

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது. ஏனெனில் ஒரு முயலினை அம்பினால் எய்த ஒருவித திறமை (skill) வேண்டும் தான். ஆனால் திறமையை விட ஒரு யானையை கண்டு பயப்படாமல் போரிட மனதில் தைரியமும் அச்சமின்மையும் (courage / fearlessness), வெற்றியோ தோல்வியோ கடைசிவரைப்போராட விடாமுயற்சியும் ஊக்கமும் (perseverance) தேவை. 

ஐ) அச்சமில்லாதபோது நம் ஆற்றல் குறைவதில்லை. 

///===////
சரி, ஏன் நாம் அச்சம் கொள்ளும் பொழுது என்ன தவறு செய்கிறோம்?
1) அளவு அதிகமாக யோசிப்பது. செயல்புரியாமல் தள்ளிவைப்பது. Overthinking / Over analyzing. Stuck
2) முயற்சிசெய்யாமல் இருப்பது. 
3) வீட்டை, அலுவலகம், furniture, garage, E-Mail inbox, Hard Drive, Office, போன்றவற்றை ஒழுங்கு செய்வது அல்லது சுத்தம் செய்வது. புற உலகு நம் கட்டுக்குள் இருந்தால் அக உலகு கட்டுக்குள் இருக்கும் என்று நம்புவது.
4) தனித்து இருப்பது. வெளியே செல்லாமல் கூட்டுக்குள்ளேயே இருப்பது
5)  அமைதியாக இருப்பது. குறிப்பாக வேலையில்
6) மோசமான நிலைக்கு தயார் செய்துக்கொள்வது அல்லது பழகிக்கொள்வது, பிறரிடம் குற்றம் காண்பது.
7) பச்சோந்திப்போன்று சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுவது.

அச்சத்தினால் நாம் பலவற்றை செய்யாது இருப்போம். ஆனால் இந்த (தொடர்) பழக்கங்களை உடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி செயலாற்ற வேண்டும். செயல் ஒன்றே அச்சத்தை தவிர்க்க சிறந்த வழி. அதற்கு முன் நாம் ஏன் அச்சம் கொள்கிறோம், நமது உடலில் தெரிய கூடிய மாற்றங்கள் (நெஞ்சு துடிப்பது, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது, மார்பு இருகுவது) என்பதை நோக்க வேண்டும். அவை தெரிய ஆரம்பித்த 5-10 விநாடிகளில் நாம் செயலாற்றினால் அச்சத்தை நம் கட்டுக்குள் வைக்கலாம்.

அஞ்சாமை என்பது தலைமைப் பண்பு. அது எல்லோருக்கும் தேவை. அப்படியெனில் வேந்தர்க்கு மிக மிக அவசியம் ஏனெனில் வேந்தர் என்பவர் பல முடிவுகளையும் திட்டங்களையும் அச்சமில்லாமல் எடுத்து நாட்டையும் மக்களையும் பாதுகாத்து வளப்படுத்தவேண்டும். அச்சம் செயலுக்கு தடைக்கள். அஞ்சாமை செயலாற்ற வைக்கும்.

(துணிவு பற்றி கல்யாண்ஜி(எ)வண்ணதாசனின் ஒரு கவிதை இங்கு
நேற்றை இன்று வாங்குதற்கு 
வழியே இல்லை.
நினைவை  நன
வாக்குதற்கு
வகையே இல்லை.
ஆற்று நறும்
புனல் மலையில்
ஏறி ஆதி
அருவியிலே கலப்பதற்கு
விசையே இல்லை.
காற்றிலுதிர் சருகிலைகள்
கிளையில் மீண்டும்
காம்பினிலே துளிர்ப்பதற்கு
விதியே இல்லை.
தோற்றவர்கள் வெல்வதற்கு மட்டும்
நெஞ்சில்
துணிவிருந்தால் 
புது  எழுச்சி என்றும் உண்டு.
-- கல்யாண்ஜி(எ)வண்ணதாசன்

மேலும் 
சுதந்திரம் என்பதே 
உண்மையில்
 'பயத்திலிருந்து விடுதலை'
என்பதுதான். 
- ஜெயாபுதீன்


2) ஈகை - மக்களுக்கு வாரி வாரி வழங்கும் கொடையுள்ளம். ”மாரி ஈகை” ஏன்று புறநானூறில் சொல்லப்பட்டு உள்ளது.

அஞ்சாமையும் ஈகையும் படைகளையும் ஈகையையும் குறிப்பிடனவாம். 

இன்றைய காலகட்டத்தில் அஞ்சாமை எனப்படடுவது படைகளுக்கு மட்டும் பொருந்தாது என்றென்பது எனது கருத்து. அது மக்களுக்கு (இயற்கைக்கு கேடு விளைவிக்காத, அறம் சார்ந்த) நலம் சேர்க்கும் செயல் திட்டங்களை துணிவுடன் எடுத்து செயல்படுத்தும் மனதிடம் வேண்டும் என்பதையும் குறிக்கும். மற்றும் அண்டை நாடுகளில் ஏற்படும் அநீதிகளை கண்மூடிக்கொண்டு இல்லாமல் தட்டிக்கேட்டும் அஞ்சாமை வேண்டும்.

3) அறிவு  - எல்லா போர் வித்தைகள், அற நெறி நூல்கள், மற்றும் அரசருக்கு தேவையான அனைத்தையும் கற்க வேண்டும். அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். அதனை எப்போழுதும் வளப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். தன்னையும் தன் நாட்டை சுற்றியும் இவ்வுலகத்தில் நிகழ்ந்துக்கொண்டு இருக்கும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் கற்றுக்கொண்டு இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். மக்களை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான வற்றை நிறைவேற்ற வேண்டும். ஒரு மன்னன் நாட்டின் எல்லா துறைகளை பற்றியும் நன்கு அறிந்தவராக அல்லது நன்கு அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அது மட்டுமின்றி இயற்கைக்கு  கேடு விளைவிக்காத திட்டங்களை செயல்படுத்தும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறம் தார்ந்த செயல்களை செய்வதில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனால் மேலே குறிப்பிட்டுள்ள அஞ்சாமையில் மேற்சொன்னா குறளில் “குறள் 863 அஞ்சம் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சும் எளியன் பகைக்கு” என்றார். அறிவில்லாதவனை பகைவர் வெல்வர்.

அஞ்சுவதற்கு அஞ்சாது இருப்பது முட்டாள்த்தனம். அஞ்சவேண்டியதற்கு அஞ்சி செய்யவேண்டியவற்றை அறிவதே அறிவு. அதனை அறிந்தவர்கள் அறிவுடையோர். அவர்கள் அத்தொழிலை/செயலை நன்கு செய்வர்.


அஞ்சாமை எனப்படுவது தெளிவு பிறக்கும் பொழுது வரும். தெளிவு என்பது அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது வரும்.

“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தை போராடாலம்” என்று ஒரு திரைப்பாடல் கூட உண்டு. நீ உன்னை அறிந்து, உனக்கு தேவையான அறிவை பெறவேண்டும் என்பதே அதன் உட்கருத்து. அது அச்சம் இல்லாமல் போராட மிக மிக அவசியம். 

4) ஊக்கம் - எல்லா செயல்களுக்கு ஊக்கம் மிக முதன்மையான் ஒன்று. இது தொடங்கிய செயலினை, வினையினை முழுமையாக முடிப்பதற்கு தேவையா ஒன்று. ஒரு செயலை பாதியில் மலைத்துப்போய் பாதியில் விடக்கூடாது. ஒரு செயலை ஊக்கம் இல்லாமல் செய்யக்கூடாது. ஊக்கம் இருந்தால் மற்றவையெல்லாம் தானாய் நடக்கும். படைகளைக்கண்டு அஞ்சாமல் ஊக்கத்துடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் மன ஏழுச்சியுடன் செயல்பட வேண்டும்.

அறிவும், ஊக்கமும் நாம் செய்யும் செயல் சார்ந்தது. அறிவு என்பது செய்யும் செயலில் இருந்து கற்பனவாம். ஊக்கம் என்பது செய்யும் செயலில் கொண்டனவாம்.

ஆக, இந்நான்கு குணங்களும் படையை சந்திக்கும் பொழுது, மக்களுக்கு கொடுக்கும் பொழுது, அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது, எச்செயலை செய்யும் பொழுது குறைவில்லாத அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய குணங்களுடன் இருக்க வேண்டும். இவை அவர்களுக்கு இயற்கை அமைந்த வண்ணம் இருக்கும் அளவிற்கு தங்களை தகுதிப் படுத்தி கொள்ள வேண்டும். இல்லை இப்படி சொல்லலாம், இக்குணங்களை இயற்கையாய் பெற்றவர்ப் போல தன்னை வளர்துக்கொண்ட, செயலாற்றிய மன்னர் வெற்றிகளை குவிக்கும், மக்கள் வணங்கும் வேந்தர் ஆவார்.

ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை என்று திருவள்ளுவர் மூன்று குணங்களுக்கும் தனித் தனி அதிகாரம் வைத்து இலக்கணம் வகுத்துள்ளார்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின் (குறள் 497)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சும் எளியன் பகைக்கு (குறள் 863)

ஆதிம் மதியும் அருளும் அறனும் அமைவும்
ஏதின் மிடல்வீரமும் ஈகையும் எண்ணில் யாவும்
நீதிந் நிலையும் இவை நேமியி னோர்க்கு நின்ற
பாதிம் முழுதும் இவற்கே பணிகேட்ப மன்னோ (கம்ப. அரசியல் 2)


நன்றி புகாரி
பகைமை கண்டு அஞ்சாத நெஞ்சுரம்
கொடுத்துக் கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
அறம் போற்றும் தெளிந்த நல் அறிவு
சிகரம் தொடும் தளராத ஊக்கம்
இவை நான்கும்
சிறந்ததோர் ஆட்சியாளனின்
இயல்புகளாம்

தலைமுறை தலைமுறையாக வெற்றியென்பதற்கு அப்பால் ஏதுமறியாத மாவீரர்கள் அவர்கள். வெற்றி மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை ஐயமில்லாது செயல்படச் செய்கிறது. ஐயமின்மை முடிவெடுப்பதில் விரைவை அளிக்கிறது. விரைந்து முடிவெடுப்பவர்கள் வெல்கிறார்கள்.

எழுத்தாளர் மற்றும் ஆயுர்வேத மருத்துவர் சுனில் கிருஷ்ணன் ”விஷாத யோகம்” என்னும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்
விஷாதத்திலிருந்து அச்சத்தின் வழியாக செயலின்மைக்குள் எளிதாக விழுந்துவிடலாம். வாழ்வை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் அந்நிலையை ஆன்மீக அனுபூதி என வேடமிட்டுக்கொள்ளலாம். முற்றிலும் தன்னலமும் துணிவின்மையும் மட்டுமே இந்நிலைக்குக் காரணம். ஆன்மீகவாதிகளின் மீதான பெரும்பாலான விமர்சனங்கள் இந்தத் தளத்திலிருந்தே எழுகின்றன. ஆனால் மெய்யான ஆன்மீகத்தில் துணிவின்மைக்கு இடமில்லை. தன்னலத்திற்கும் வேலையில்லை. 

எழுத்தாளர் ஜெயமோகன் - இன் - சிந்தே சிறுகதையில் இவ்வாறு சில வரிகள் வருகின்றன
என் வாழ்க்கை சிந்தேயின் (சிங்கம்) அருள். என் வாழ்க்கையில் நான் எப்படி வெற்றி பெற்றேன் என்று கேட்பார்கள். நான் அந்தக்கூண்டில் சிந்தேயின் முன்னால் இருந்தது போல பொறுமையுடன் இருந்தேன். என்னை மீறியவற்றின் முன் பதற்றம் கொள்ளாமலிருக்க பழகினேன். குறைந்த சேதத்துடன் பெரிய தீங்குகளில் இருந்து வெளிவந்திருக்கிறேன். அறுபத்தாறில் ஒரு கலவரத்தில் என் ஓட்டல்கள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. நான் அமைதியாக இருந்தேன். சிதல்புற்றுபோல மீண்டும் கட்டி எழுப்பினேன், நான் தோல்வியே அடைவதில்லை. சிதல்புற்று தோல்வியடையுமா என்ன? ஆயிரமாண்டுகள் அது வந்துகொண்டே தானே இருக்கும். மலைப்பாறைகளை தூக்கி வைத்தாலும் அது முளைத்துக் கிளம்பும் அல்லவா?

“பாறைகளுக்குக் கண்கள் இல்லை” என்றான் துரியோதனன். “அதனால்தான் அவை அத்தனை ஆற்றலுடன் இருக்கின்றன. கண்ணற்றவை எதிரிகளைப் பார்ப்பதில்லை. ஆகவே அச்சம் கொள்வதில்லை. அச்சமில்லாதபோது நம் ஆற்றல் குறைவதில்லை” என்றான்.


மூன்று பெரும்பள்ளங்களை அவன் கடந்தான். விலக்கம், ஐயம், அருவருப்பு என மூன்றுருக்கொண்டது அச்சமே. இளையோனே, அச்சமென்பது என்ன? மானுடன் முடிவிலியை அஞ்சுகிறான். முடிவிலி நோக்கி எழும் இறப்பை அஞ்சுகிறான். இறப்பென்றாகும் நோயை அஞ்சுகிறான். நோய்கொள்ளும் உடலை அஞ்சுகிறான். உடலென்றான தன்னை அஞ்சுகிறான். அச்சத்தை அளவையாக்கி அவன் இப்புவியை அறிகிறான். எனவே அவன் அறிவதெல்லாம் அச்சம் ஒன்றையே.”

“அச்சத்தை அறுத்தவனுக்கு அறிவு இனிதாகிறது. அகம் இனிதாகிறது. அனைத்தும் இனிதாகின்றன. இனிக்கின்றது எல்லையின்மை. இனிப்பிலிருந்து தொடங்குக! சுவையாகி வருக சிவம்!” பிச்சாண்டவர் சொன்னார். “இனியவனே, அன்னம் இனிது. அன்னத்தை உண்ணும் அன்னம் அறிவது அவ்வினிமை. அறிக, தன் குட்டியை மென்று உண்ணும் அன்னைஓநாயின் கண்கள் சொக்கும் சுவையை. தன் அன்னை உடலை உண்டு வளரும் குஞ்சுநண்டுகளின் கால்கள் கொள்ளும் துள்ளலை. தான் வாழும் இல்லத்தை உண்டு திளைக்கும் மலப்புழுக்களின் களியாடலை. சிவமாகுக அன்னம்!”

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”


ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.

விடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.

புறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.

அறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.

பாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.


 ‘‘எத்தனை அபாயங்கள் வழியாக வண்டி சென்றிருக்கிறது என்று தெரிந்தால் தொழிலையே விட்டுவிடுவீர்கள்’’ என உரிமையாளரிடம் சொன்னேன். அவர் சிரித்தபடி, ‘‘ஒவ்வொரு நாளும் நிகழ்வதுதான் சார். வேறுவழியில்லை. எல்லாம் பழகிவிட்டது. வயிற்றை நினைத்தால் பயம் போய்விடும்’’ என்றார்.

பரிமேலழகர் உரை
வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - தீமையும் கொடையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். 

விளக்கம் 

(ஊக்கம்: வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு குரித்து; ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.) 

மணக்குடவர் உரை
அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

சாலமன் பாப்பையா உரை
அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வேந்தற்கு இயல்பு-அரசனுக்கு இயல்பான தன்மையாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை-அஞ்சாமையும் கொடைத்தன்மையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் குறையாதிருத்தலாம்.

இவற்றுள் அறிவு ஏழுறுப்புக்களையும், ஈகை படையையும் குடியையும் நோக்கியனவாம். ஏனையிரண்டும் வினைக்குரியனவாம். ஊக்கம் என்பது வினைசெய்தற்கண் உண்டாகும் மனவெழுச்சி. இவற்றுள் ஒன்று குறையினும் பகையினாலேனும் படையினாலேனும் குடியினாலேனும் கேடுநேருமாகலின், 'எஞ்சாமைவேந்தற்கியல்பு' என்றார். வள்ளுவர் காலத்தமிழகம் மூவேந்தராட்சிக் குட்பட்டதாகலின் அரசன் வேந்தன் எனப்பட்டான். முடியணியும் உரிமையுடைய சேர சோழ பாண்டியர் மூவரே வேந்தர். வேய்தல் முடியணிதல். வேய்ந்தான்-வேந்தன். உம்மை முற்றும்மை.

நன்றி அம்மன் தரிசனம்
அரச பதவிக்கு வருகிறவர்களுக்கு மிகவும் துணிச்சல் தேவை. கொடை கொடுக்கும் குணம் தேவை. அறிவு தேவை. ஊக்கம் தேவை.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

என்கிறது அடுத்த குறள். ஒரு நாட்டின் உள்ளேயிருந்தும், வெளியே இருந்தும் மிரட்டல்கள் எப்போதும் ஒரு மன்னனுக்கு இருக்கவே செய்யும். அஞ்சியவன் அந்நாட்டிற்குத் தக்க நல்லமுடிவை எடுக்கத் தயங்குவான். சிறந்த திட்டங்களையும் செயல்களையும் நிறைவேற்ற அஞ்சாமை தேவை. ஈகை என்பது வெறும் கொடை மட்டுமல்ல. மக்களுக்கு வழங்கும் சலுகைகளும் இதில் அடங்கும். இது உள்நாட்டில் மன்னனின் சக்தியைப் பெருக்க உதவும். இதையெல்லாம் கடந்து தெளிந்த அறிவு வேண்டும்.

ஒரு நாட்டு மக்களின் இயல்பறிந்து செயல்படுத்தாத திட்டங்கள், நல்ல திட்டமாகவே இருந்தாலும் அது கேடுகளைத் தந்துவிடும். இந்திய மக்களின் மனோதர்மங்களையும் மனப்போக்குகளையும் தெளிவாய் அறிந்த மகாத்மாவின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்திருக்குமேயானால், நாட்டில் புதிதாய்த் தோன்றி பல பிரச்னைகள் தோன்றாமலே வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். ஆட்சி செய்வோருக்கு அது மிக அவசியம்.

இன்று இந்த நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன? நாட்டின் வருவாய் என்ன? செலவு என்ன? என்பதை சற்றும் அறியாதவர்கள் கூட பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஆகிவிடமுடிகிறது.

ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார், தேசிய கீதத்தைக் கூடத் தவறாகப் பாடுகிறவர்கள் மேலே வந்துவிடுகிறார்கள் என்று. தேசிய கீதம் தெரியாதவர்களுக்கு தேசத்தைப் பற்றி என்ன தெரியும்? தேசத்தைப் பற்றித் தெரியாதவர்கள் அதன் நலத்திற்கு என்ன முடிவெடுப்பார்கள்?

அறிவு தேவை. சகலவிதமான விஷயங்களிலும் தெளிந்த பார்வை அரசனுக்குத் தேவை. இன்று கட்டவுட்களில் மட்டுமே சிங்கமே, புலியே, அஞ்சாமையே, அறிவே என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

கட்டவுட்களில், பேனர்களில் வள்ளல்கள் என்று சித்திரிக்கப்படுகிறவர்கள் நடைமுறையில் ஓட்டை நாணயத்தைக் கூட பிறருக்கு உதவக் கூடியவர்களாக இருப்பதில்லை. வள்ளுவர் சொல்லும் இலக்கணப்படியே ஆள்வோர்கள் அமைந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று மனக்கோட்டைதான் கட்ட முடிகிறது நம்மால்.

நன்றி: Indian Finance Bazaar
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தைரியம், ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கு பண்புகளும் சிறிதும் குறைவில்லாமல் இருப்பது நன்மை தரும். அதுபோல் முதலீட்டாளருக்கு இருக்க வேண்டிய முக்கிய மூன்று பண்பு, முதலீட்டை பற்றிய நல்ல அறிவு, அதை அணுகின்ற தைரியம் மற்றும் செயல்படுத்துகின்ற ஊக்கம் மிகவும் அவசியமானதாகும். இந்த குணங்கள் எந்த நிலையிலும் கடைபிடிக்க வேண்டிய ஓர் அம்சமாகும். பெரும்பாலானோர் இந்த குணங்களை பின்பற்றாமல் தவறு செய்து விட்டு, பெரும் மண உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளபடுகிறார்கள். இந்த போக்கை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.

Thirukkural - Management - Leadership
In  addition to the quality of impartiality, four other qualities make a person a leader, as per Kural 382. Valluvar has attributed these qualities to a king. A king is a leader. Therefore, those qualities are included in leadership. These qualities are courage, charity, knowledge, and motivation.

These four unfailing mark a King:
Courage, liberality, wisdom and energy.

A leader should constantly sustain these four qualities to demonstrate powerful leadership.


Also, about FEAR
Fear: 
The reason many people fail to achieve the results they want is due to fear. Jumping from one opportunity to the other serves as an excuse to avoid the hard work. This is like people who spend hours looking for the best productivity hacks while putting off the most important tasks they should be focusing on. You may feel stuck because you’re trying to move away from your fears. This is one reason you see many people who, after having read countless books, are still stuck in the exact same situation they started in. 

Remember this: action cures fear. 

While there are other techniques to overcome your fears, Nike’s motto, “Just do it,” might be one of the most effective ones. Although it might sound like a cliché, it really does work. What about you? Are you taking all the actions you should be taking right now?



கர்ணன் கால்மடித்து அமர்ந்துகொண்டு தலையை தாழ்த்தினான். பெருமூச்சுகள் அவன் நெஞ்சை உலைத்தபடி எழுந்தன. இளைய யாதவர் அவன் முகத்தை நோக்கியபடி புன்னகை மாறா முகத்துடன் சொல்லலானார். மிக அண்மையில் செவிக்குள் என அவர் சொற்கள் ஒலிக்க அவன் கைகளைக் கோத்தபடி கேட்டிருந்தான்.

அங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.

தனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக! தனித்திருந்தறிக! யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.

யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

கொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா? அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா? அறத்தோனுக்கு அனைத்துயிரும் நிகரல்லவா?

நீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்?

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.

அங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.

வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.

விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக! தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.

அங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது! தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.

இல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள்? இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.

தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.

இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.

பேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.

அங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக! அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.

அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.

இவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.

முன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.

பிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.

பறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக! அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.

பற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.

முற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.

இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக!

உணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக! அதை அடைபவர் வெல்வர்.

ஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக! கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.

அவ்வறிதலை செயலென்றாக்குக! செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க! அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும்! கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.

வெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள்! சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது!

அங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.

நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.

எழுக! உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.

இறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!

இளைய யாதவர் சொல்லி முடித்த பின்னரும் கைகட்டி அமர்ந்திருந்த கர்ணன் நெடுநேரம் உளம் மீளாமல் தலை குனிந்திருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் எழுந்து கைகூப்பினான். “ஒரு வினாவும் எஞ்சாது நிறைவுற்றேன், யாதவரே. விடுதலை நோக்கிய நேர்ப்பாதையை என்முன் காண்கிறேன்” என்றபின் திரும்பி முதற்புலரி எழுந்துவிட்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தகன்றான்.


என் மூதாதையான மரு அன்னையின் சிறுமுலைக்காம்பில் சொட்டிநின்ற பால்துளி ஒன்றைக் கண்டு இளங்கன்று ஒன்று வாழ்த்துவதை ஒருநாள் கேட்டார். ‘பரம்பொருள் பள்ளிகொள்ள முடிவிலியென விரிந்தவளே, என் பசிக்கென துளிவடிவில் ஊறும் உன் பெருங்கனிவுக்கு அப்பால் பொருள் என ஒன்று கொண்டிருக்கிறாயா?’ அவர் இங்கு நிகழும் பெருங்களியாட்டில் தன்னை நிறைத்துக்கொண்டார்.

பொருளென்று அங்கிருந்தும் அறிவென்று இங்கிருந்தும் சந்திக்கும் புள்ளியிலேயே அனைத்தும் நிலைகொள்கின்றன. நிகர்விசைகொண்ட இரு களிறுகளால் இழுக்கப்படும் வடத்தின் மையம் அது.

அறியப்படும் இவையனைத்தும் அறிவென்பதனால் அறியப்படுவதனால் அறிவு உருவாகவில்லை என்றே பொருள். அறிவன்றி இங்கு பிறிதேதுமில்லை. அறிவுக்குள் அறிவென்று அமைந்தவையே அனைத்தும். தனித்தன்மைகள் அறிதலினால் எழுகின்றன. அறிதலுக்கு அப்பால் பெரும்பொதுமையின் அமைதலும் அறிவே.

அறியப்படாமையும் அறியவொண்ணாமையும் அறிவுகடந்தமையும் அறிவே. அறிவிலமர்ந்தவர் அறிவென அதையே கொள்வர். அறிபொருள் அறிவோன் அறிவு எனும் மும்மையழிந்த நிலையில் அது நிலைகொள்கிறது.

சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.



ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.

விடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.

புறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.

அறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.

பாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.

“அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை?” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா?”

“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”


அழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.

பிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.

அறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.

“அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க! அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர்



 இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.

முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.

“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”

“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”

ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”

“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”

...............
..............
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”

“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர்.

அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.

அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.

அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.

அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.

ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.

அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.

எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.

புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் வியாசர் கூறினார் “யாதவரே, என் வினாவை இப்போதுதான் சொல்தீட்டிக்கொண்டேன். என் இடர் என்ன என்று அவ்வினா திரண்டதுமே உணர்ந்தேன். காவிய ஆசிரியனின் கைக்குறை அது. இக்கணம் வரை என் வினாக்களை உணர்வுகளாகவும் கனவுகளாகவும் பெருநோக்குகளாகவும்தான் தொகுத்துக்கொண்டேன். அவை ஒவ்வொன்றும் சொல்லுக்கரியவை என்பதனால் சொல்பெருக்கினேன். சொற்கள் பெருகுகையில் அவற்றுக்கு ஒழுங்கு தேவையாகிறது. ஒழுங்கு அழகென்றாகிறது. காவிய ஆசிரியனின் தப்பவியலாத் தீயூழ் என்பது அவன் சொல்லணியாக மட்டுமே பார்க்கப்படுவது.”

“அரசித்தேனீயை அதன் சுற்றம் என உணர்வுகளையும் கனவுகளையும் பெருநோக்குகளையும் சொற்கள் மொய்த்திருக்கின்றன. தேன்நிறை அறைகளில் தவம்கொள்கின்றன. சிறகுமுளைத்தெழுகின்றன. ரீங்கரிக்கின்றன. நச்சுக்கொடுக்குகளுடன் காவல் காக்கின்றன. சொல்தொடுத்து அல்ல சொல் விலக்கியே என் வினாவை எழுப்பமுடியும் என இப்போது கண்டுகொண்டேன். இதோ என் வினாவை பசிக்குரல்போல், வலியலறல்போல் நேரடியாக சொல்லாக்கிக்கொள்கிறேன்” என்றார் வியாசர் .

“இங்கு உயிர்க்குலங்கள் பிறக்கின்றன, போராடுகின்றன, பிறப்பித்துப் பெருக்கிய பின் மடிகின்றன. இதன் பொருள் என்ன?” தலையசைத்து முகத்தசைகள் இறுக “ஆம், இவ்வாறு எளிமையாகக் கேட்டாலொழிய இதற்கு விடை தேடமுடியாது. இதை கேட்கும் எவரும் ஆம், இதுவே என் வினா என்று சொல்லவேண்டும். இவ்வினாவின் முன் எந்த இலக்கியமும் தத்துவமும் மெய்யுரையும் அணிகொண்டு நின்றிருக்க முடியாது. இதற்கான விடையும் இவ்வாறே எளிமையாக அமையவேண்டும், உணவுபோல, உழுபடைபோல, வாள்போல வெளிப்படையாக, பிறிதொன்றிலாததாக” என்றார்.

இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அவரை மலர்ந்த விழிகளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டிருந்தார். வியாசர் மேலும் சொல்வார் என அவர் அறிந்திருந்தார். வியாசர் இளைய யாதவரின் விழிகளை நோக்கியதும் சீண்டப்பட்டு சினம்கொண்டார். “நீர் என்னிடம் மெய்யை மட்டுமே உரைக்கமுடியும். அரசன் என்றோ, கவிஞன் என்றோ, அறிஞன் என்றோ, மெய்யுசாவி என்றோ அல்ல தெய்வமென்று நின்று கூறுக! உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன? மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா? இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது? யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா?”

“அனைத்து விடைகளையும் நீங்களே அறிந்திருப்பீர்கள், வியாசரே” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அறிவேன். சொற்கடல்அலை நான். என்னில் இல்லாத எண்ணமே இல்லை. யாதவரே, அவற்றின் மெய்யான பெறுமதி என்னவென்றும் நான் அறிவேன். இறப்புக்கு மாற்றில்லை என்று அறிந்த பின்னர் நோய்க்கு மருந்து அளிக்கும் மருத்துவன் நான்” என்றார் வியாசர். “செவிகொள்வீர் என்றால் சொல்கிறேன். நான் கேட்ட வினாவுடன் ஒவ்வொருநாளும் என் நூலை அணுகுகிறார்கள் மானுடர். விடைகளை அவரவர் தேவைக்கும் தகுதிக்கும் ஒப்ப நான் அளிக்கிறேன். ஒவ்வொரு துயருக்கும் தவிப்புக்கும் தனிமைக்கும் அதற்குரிய வகையில் வகுக்கிறேன்.”

“ஒன்றை மறுப்பவர் பிறிதொன்றை கொள்வார், ஒன்றை மறுப்பதனாலேயே பிறிதொன்றை ஏற்றாகவேண்டும் என அவர் உளப்பழக்கம் கொண்டிருப்பதனால். சிலவற்றை மறுத்தமையாலேயே சரியானதை ஏற்கும் நுண்மை தன்னிடம் உள்ளது என எண்ணிக்கொள்வார். தான் மறுத்தவற்றை ஏற்றுக்கொண்டவர்களைவிட தான் மேலென்றும் ஆகவே ஏற்றது தானறிந்த உண்மை என்றும் கருதிக்கொள்வார். அதன்பொருட்டு பிறருடன் சொல்லாடுவதன் வழியாக அனைத்து ஐயங்களுக்கும் விடைகண்டு அதை தனக்கென உறுதி செய்துகொள்வார். அறிவுக்கான விழைவை அறிகிறேன் என்னும் ஆணவம் ஓர் அடி முந்திச் செல்கிறது, விடையை தான் பற்றிக்கொள்கிறது.”

“அனைத்துக்கும் மேலாக ஒன்றை ஏற்று தன் துயரிலிருந்து மீளவேண்டும் என முன்னரே முடிவுசெய்த பின்னரே என்னிடம் வருகிறார். எளிதில் கிடைப்பது தூண்டில் புழு என எண்ணும் மீன் இது. எளிதில் ஏற்கலாகாதென்னும் அவருடைய ஆணவத்தின்பொருட்டு அணிகளில் மறைத்து, ஆயிரம் முறை மறுத்து, ஊடுசுழற்பாதைகளுக்கு அப்பால் அதை சமைத்து வைத்திருக்கிறேன்.”

“தேடிவந்து கொள்பவர் இவ்விடைகளினூடாக துயர் நீப்பார், இந்தப் புணை பற்றி நீந்தி உலகியலை கடப்பார். எவரையும்போல் இயற்றி ஓய்ந்து மடிவார். காலத் துயரும் கருத்துத் துயரும் கோடியில் சிலருக்கே உரியவை. அவர்கள் உள்ளிருக்கும் அறியாத் துளியை அறிந்து, நோற்று, பெருக்கி, சூழப்பரப்பி அதில் திளைப்பவர். தேடி, எழுந்து, கடந்து கண்டடைபவர். பிறர் வாழ்க்கை நிகழ்வதன் அலைகளால் அறியாமல் அவற்றின் நுனியை தொடநேர்ந்தவர். தெய்வத் துயரால் அறைபட்டு சித்தம் சிதறி பெருவினாக்களைச் சென்று முட்டியவர்கள்.”

“அவர்களுக்குத் தேவை விடை அல்ல. அவ்வினாவிலிருந்து திசைதிருப்பி கொண்டுசெல்லும் சொற்கள். மீண்டும் அவர்களின் உலகியல் அலைகளுக்கே சென்றமையச் செய்யும் ஆற்றுப்படுத்தல். நான் அளிப்பது அதையே” என்று வியாசர் சொன்னார். “பல்லாயிரம் பூக்களில் சிலவே காய்க்கின்றன. அவற்றில் சிலவே கனிகின்றன. அவற்றில் சிலவே விதைமுளைக்கச் செய்கின்றன. மலர்கள் வண்ணமும் இனிமையும் நறுமணமும் கொண்டு இங்கே அழகு நிறைக்கின்றன, அனைத்தையும் இனிதெனக் காட்டுகின்றன. கவிதை என்பது மலர்.”

“நன்கு மலர்ந்த நான்கு விடைகள் என்னிடம் உள்ளன” என்றார் வியாசர். “இது ஒரு தேர்வுக்களம் என்பது முதல் எளிய விடை. எங்கோ தந்தையே ஆசிரியரென அமைந்து நம்மை மதிப்பிடுகிறார். நன்று செய்க, நலம் கொள்க. தீதியற்றுக, துயர் பெறுக. இன்று பெறுவது நேற்று இழைத்தவற்றின் நிகரி. இன்று ஈட்டுவது நாளைக்கென உடன் வரும். பிறவிச்சுழலின் ஒரு களம் இவ்வாழ்க்கை. பிறந்து பிறந்து முதிர்ந்து சென்றடைவது முழுமை. இலக்கு அது. வீடுபேறென்பது பிறப்பொழிதல். முன்வினை நிகழ்வினை வருவினையின் முச்சுழற்சியால் ஆனது வாழ்க்கை. துயர் வருகையில் கடன் தீர்ந்ததென்று கொள்க. இன்பம் நிகழ்கையில் ஈட்டியதைப் பெற்றோம் என்று நிறைக. நன்றுசெய்து தீதுநீக்கி நல்வாழ்வு பெறுக. தீதும் நன்றும் பிறர் தர வாரா.”

“இது ஒரு சுழல் என்பது இரண்டாவது விடை” என்று வியாசர் தொடர்ந்தார். “ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர் வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”

“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.”

“இங்கு நிகழ்வன அனைத்தும் அறிதல்களே என்பது மூன்றாவது விடை” என்றார் வியாசர். “துயரும் மகிழ்வும், இழப்பும் பெறுகையும், கசப்பும் இனிப்பும் அறிதல்கள் மட்டுமே. அறிபவனுக்கு அறிபடுபொருள் அனைத்தும் நிகரே. அறிவை அளிப்பதனால் நிகழ்வன அனைத்தும் நன்று. அனைத்தும் அறிவாவதை உணர்ந்தவன் ஏற்றலும் விலக்கலும் என வாழ்வைப் பகுத்து இடருறுவதில்லை. கசக்கும் அருமருந்துகள் உண்டு. இனிக்கும் நஞ்சுகளும் உண்டு. இருமையகற்றியவன் இவ்வாழ்வை அவ்வண்ணமே ஏற்கும் நடுநிலை கொள்கிறான். அறிந்தறிந்து முதிர்வதே வாழ்க்கை. முற்றறிந்து நிறைவதே வீடுபேறு. முழுதறிந்த பின் நோக்குபவன் சிற்றறிவுகள் அனைத்தும் முழுதறிவின் படிநிலைகளே என்று உணர்வான்.”

“நான்காவது விடை இவையனைத்தும் கனவே என்பது. கனவின் துயர்களும் அச்சங்களும் அலைக்கழிவுகளும் விழித்தெழுந்ததும் பொருளிழந்துவிடுகின்றன. கனவில் பெற்றவை அனைத்தும் இல்லையென்றாகின்றன. ஆனால் நனவிலிருந்தே கனவுகள் எழுகின்றன. நனவின் ஒலிகளே கனவில் பொருள்மாறு கொண்டு துயரும் மகிழ்வுமென நிகழ்கின்றன. கனவினூடாக நனவின் மெய்மையை அறிக. விழித்தெழுதலே விடுதலை” என்றார் வியாசர்.

“யாதவரே, உலகியலானுக்கு முதல் விடை. தேடுபவனுக்கு இரண்டாவது விடை. அறிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. இந்நான்குக்குமேல் சென்று எவரும் கேட்பதில்லை. இந்நான்கும் நால்வகை அறிவின் வழிகள். ஒருவன் முற்றிலும் பின்திரும்பி நின்று அறிவின்மையால் என் வாழ்வுக்கென்ன பொருள் என்று கேட்பான் என்றால் அவனிடம் சொல்ல என்னிடம் விடை ஏதுமில்லை. நான் கேட்பது நான்கென சொல்திரளாதவனின் அக்கேள்வியையே. சொல்க, இங்கு வாழ்வு நிகழ்வது எதனால்?” என்று வியாசர் கேட்டார்.

இளைய யாதவர் “வியாசரே, துறவியிடமன்றி மெய்மை உரைக்கப்படலாகாது” என்றார். “யோகமே துறவெனப்படும். அனலோம்பாதவனும் சடங்குகளைச் செய்யாதவனும் துறவி அல்ல. தன் கொள்கைகளை துறத்தலே துறவை யோகமென்றாக்குகிறது. கற்பவன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவேண்டும். நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து. தன்னை இழிவுறுத்திக்கொள்பவன் கவிழ்த்தப்பட்ட கலம் கொண்டவன். தன்னை தான் வெல்லாதவன். தன்னை தனக்கே பகைவனாக்கிக் கொண்டவன்” என்றார்.

இருவகை அறிதல்களினூடாக மானுட உள்ளம் பின்னிச் செல்கிறது. இவ்வுலகில் நலம்பெறும் முறையை அறிதல் சாங்கியம். இவ்வுலகு என்னவென்று அறிதல் விஞ்ஞானம். இவையனைத்தையும் முழுமையில் அறிதல் ஞானம். விஞ்ஞானமும் ஞானமும் ஒன்றுபிறிதை விலக்கா நிலையே யோகம். ஞானம் விஞ்ஞானத்திற்கு மறுமொழியென்றாகவேண்டும். விஞ்ஞானம் ஞானம்நோக்கி கொண்டுசெல்லவேண்டும்.

வாள்முனை நடையே யோகிக்குரியது. விழிப்போனும் துயில்வோனும் உண்மையை காண்பதில்லை. உண்போனும் நோற்போனும் மெய்யை சுவைப்பதில்லை. அகன்றோனும் உழல்வோனும் அதை உணர்வதில்லை.

அசைவிலாச் சுடரால் படித்தறிக. நிலைகொண்ட உள்ளத்தால் வாழ்ந்தறிக. இவையனைத்திலும் இறையுறைகிறது. எங்கும் அதை காண்கிறவன் அனைத்தையும் அதில் காண்கிறான். அவனுக்கு அது அழிவற்றது. அதற்கு அவன் அழிவற்றவன்.

முதலாசிரியரே, நீங்கள் முன்னர் கூறிய நால்வகை விளக்கங்களும் பொய்களல்ல, அவை நால்வகை உண்மைகள். நான்கு நிலைகளில் நிற்பவர்களுக்கு மெய்யமைவு அவ்வண்ணம் வெளிப்படுகிறது. யார் எவ்வடிவில் எண்ணுகிறார்களோ அவ்வகையில் அவர்களுக்கு தோற்றமளிப்பது அது. தன் பேரளியால் அது திரிபுறவும் குறைவுறவும்கூடும். தன் ஆடலால் உருவுறவும் உறவாடவும்கூடும். மைந்தரின் சிறுகைகளுக்கு ஏற்ப சிறுதேர் செய்து அளிக்கிறான் பெருந்தச்சன்.

அதன் வடிவங்கள் முடிவிலாதவை. துன்பம்கொள்பவருக்கு அன்பென. ஒடுக்கப்பட்டோருக்கு அறம் என. தனியருக்கு துணை என. வெறுமையிலமர்ந்தோருக்கு விழுப்பொருள் என. எதுவும் அது அல்லாதது அல்ல. அறிவு மட்டுமல்ல அறியாமையும் அதுவே. தெளிவும் மயக்கமும் அதுவே.

உங்கள் வினாக்கள் விடைகளை வாங்கும் கலங்கள். அறிவோனால் வகுக்கப்படாத விடை அறியப்படுவதில்லை. முதல் முழுமையெனும் விடை இன்மையெனும் பெருங்கலத்திலேயே இறங்கியமைய இயலும்.

நான்கு விடைகளை சொன்னீர்கள். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள்.

மானுடர் கேட்பதில்லை, கோருகிறார்கள். கோரும் வடிவில் பெறுகிறார்கள். தன் அளியின்மையால் அது முழுமையை மறைத்துக்கொள்ளவில்லை. இங்கு வாழும் உயிர்களின் மீதான பேரளியாலேயே கரந்துறைகிறது. அறிந்தமையாலேயே அளந்து அளிக்கிறது. அருள்வதனால் அளித்தவற்றில் நிறைகிறது.

வியாசரே, நீங்கள் கவிஞர். ஒருபுறம் எளியோனாய் உலகாடி, மறுபுறம் ஞானியென மெய்நாடி, இரண்டுக்கும் நடுவே உழல்பவர். நலம்பயக்கும், மகிழ்வளிக்கும், காக்கும், புரக்கும் ஒன்றை மண்ணில் நின்று விழைகிறீர்கள். இரண்டற்ற ஒன்றை நோக்கி ஞானத்தால் எழுகிறீர்கள்.

இன்மையின் கலமேந்தி நின்றால் அறிவீர்கள். அது நலம்பயப்பதல்ல. அளிகொண்டதல்ல. அழகும் ஒழுங்கும் இசைவும் அதில் இல்லை. அது உண்மை அல்ல. உள்கடந்த ஒருமை அல்ல. அது மானுடர் எண்ணும் எவ்வியல்பையும் தான் கொண்டது அல்ல. இன்மையென விரியும் யோகியின் உள்ளத்தில் இன்மையென எழுவது. இன்மையின்மேல் மட்டுமே முடிவிலா இயல்புகளை ஏற்றமுடியும்.

பல்லாயிரம்கோடியினரில் ஒருவரே அதை அறிய முயல்கிறார்கள். பிறர் அதை விடையெனக் கொண்டு வாழ்ந்து கடக்க விழைபவர்கள் மட்டுமே. முயல்பவர்களில் மிகச் சிலரே அதை முழுதுணர்கிறார்கள்.

உயிர்க்குலங்களை படைத்தாளும் பெருநெறி என்று கொண்டால் தொழுவீர் எனில் அதை அறியமாட்டீர். உயிர்க்குலங்களை கொன்று களியாடும் கட்டின்மை என்று கொண்டால் அஞ்சுவீர் எனில் அதை அறியமாட்டீர். ஒளியென்று வணங்குவீரென்றால் இருளென்று விலக்குவீரென்றால் அதை அறியவேமாட்டீர். விழிநீருக்கு இரங்கும் என்றும் விளித்தால் அணுகும் என்றும் எண்ணுவீரென்றால் அதுவல்ல உங்களுக்குரியது.

விழிதிறந்துவிட்டீர் என்பதனால் காண்க. உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம். உங்கள்மேல் வஞ்சம் கொண்டதை உங்களை அழிப்பதை, உங்கள்மேல் கனிவற்றதை அங்கே எதிர்பார்க்கவேண்டாம்.

உங்களை அது அறியாதென்றே கொள்க. உங்கள் இருப்பு அதற்கு ஒரு பொருட்டில்லை என்றே கொள்க. உங்களுக்கு இரங்குவதோ உங்களை அணுகுவதோ அல்ல என்றே கொள்க. உங்களால் அறியப்பட இயலாததென்றே கொள்க. அவ்வெறுமையை எதிர்நிலையென கொள்ளாதிருக்க பழகுக. வெறுமை இயல்பென அமைதலே இன்மை. இன்மையே அறிவோன் ஏந்தவேண்டிய கலம்.

அங்குளது பிறிதொன்று. இங்குள எதனாலும் விளக்கப்படாதது. ஆகவே இங்குள எதற்கும் விடையல்லாதது. இங்குள அனைத்திலிருந்தும் அகன்றாலொழிய அணுகவொண்ணாதது. அதுவே இங்குள அனைத்துமென்றாகி சூழ்ந்துள்ளது. மறைவும் வெளிப்பாடும் கொண்டது அது என்பதே மெய்மயக்கம்.

பருவென, பொருளென இங்குள்ள அனைத்துமே நூலில் மணிகள் என அதன்மேல் கோக்கப்பட்டவை. அனைத்துக்கும் பொருளென்றமைவது ஒன்றே. அதை அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார். இயல்பற்றது மூவியல்பால் இயக்கம்கொண்டு தன் முழுமையை மறைத்தாடுகிறது. அதன் மாயை கடத்தற்கரியது.

பிறந்திறந்து பெருகிச்செல்லும் இவ்வொழுக்கின் பொருளே புடவியென்றாகி சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு கணத்திலும் விளங்காத பொருள் என்று ஒன்று காலமுடிவிலியில் இல்லை. ஒவ்வொரு பருவிலும் திகழாத பொருள் என்று ஒன்று கடுவெளியில் இல்லை.

பிறப்பின் வாழ்வின் இறப்பின் பொருளை ஒவ்வொரு கணத்திலும் உணராத ஒருவர் எப்போதும் உணரப்போவதில்லை. தன் உடலில் ககனத்தை உணராதவர் வானில் எதையும் காண்பதில்லை. முழைத்து முனைகொண்டு எவரும் அறிவதில்லை. இயல்தலும் இசைதலுமே அறிவின் நெறி.

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில், இடத்தில், கருத்தில் விளையும் விடைகளை. நம்மால் கோரப்படுவது காலமும் இடமும் கருத்தும் கடந்த ஒன்று. அது துளித்துச் சொட்டும் ஒரு துளி இப்புவியை ஆயிரம் துண்டுகளென சிதறடிக்க வல்லது.”

ஆயிரம் மடங்கு எடைகொண்டுவிட்டதென தன் உடலை உணர்ந்தபடி அமர்ந்திருந்த வியாசரிடம் இளைய யாதவர் சொன்னார் “அறியவேண்டுமென்றல்ல, வாழவேண்டுமென்றே மானுடர் விழைகிறார்கள். வாழ்வுக்கு உதவுவது என தன்னை அளிக்கும் இரக்கம் கொண்டிருப்பதனாலேயே அது மேலும் முழுமைகொள்கிறது.”

வடிவங்களால் ஆனது இவ்வுலகு. அதன் உட்பொருட்களாலானது. அதன்மேல் எழுந்த ஒலியாலானது. யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே யோகிகள் ஒலியுலகத்தைக் கடந்து செல்கிறார்கள். அதை ஒலியென்று குறைக்கிறார்கள். பொருளென்று சமைக்கிறார்கள். வடிவென்று புனைகிறார்கள். முனிவரும் அறிஞரும் கவிஞரும் அமைத்த இவ்வனைத்தும் அதுவே.

அது அறியப்படாமை. அறியப்படுவன அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. இரவிலிருந்து புலரியில் பொருட்கள் முளைத்தெழுவதுபோல. இரவில் அவை மூழ்கியணைவதுபோல. அறிவால் அறியப்படுவதும் அறிபுலன்கள் அனைத்தையும் கடந்தமைந்ததுமான அறிவே அது. மண், நீர், தீ, காற்று, வான், உளம், மதி, தன்னிலை என்னும் எட்டு வகையாக பிரிந்து இயற்கை என்றாகிறது.

அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். அழிவிலாத அறிவைப் பற்றியது தேவ ஞானம். உடலுக்குள் அதை அறிதல் யாக ஞானம். நீங்களே அது என்றுணர்க! நான் எனச் சொல்லி விரிக! உங்கள் வடிவுகொண்டவனை அறிக! கவிஞனை, பழையோனை, ஆள்வோனை, அணுவின் அணுவை, அண்டப்பேரண்டத்தை, அனைத்தையும் சூடுபவனை, அலகிலா வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிர்என நிற்பவனை வாழ்த்துக! உங்களுடையது சொல்வேள்வி.

இங்கு என்றுமுளது ஒளிவழியும் இருள்வழியும். மீளாதது முதல் வழி. மீள்வது இன்னொன்று. உங்கள் வழி இங்கு மீள்வதே. அது அழகின், அளியின் வழி. அள்ளி அணைப்பது, ஆடி மகிழ்வது. இங்கு என்றுமிருக்கும் பூமரக் காடு உங்கள் சொற்கள். தன் வழியை அறிந்தவனே யோகி. வேதங்களிலும், தவங்களிலும், கொடைகளிலும் இயலும் தூய்மை வழியல்ல உங்களுடையது. சொல்லில் எழுவது. அது முதல்பெருநிலையே.

வாழ்வுக்குப் பொருள் தேடுபவன் கவிஞனல்ல. பொருள் அளிப்பவன் அவன். வினாக்களால் ஆனதல்ல காவியம், அழியா விடைகளாலானது. உசாவவேண்டாம், புனைந்தளியுங்கள். சுருக்கவேண்டாம், விளக்குங்கள். உளம்விரிந்து நீங்கள் புனைவதெல்லாம் மெய்யே. தன் சொல்லில் எழுந்த மெய்யை கவிஞன் தன் கனவால் ஒப்புகையில் அதுவே முதற்சான்றாகும். ஆம் ஆம் ஆம் என மும்முறை ஒப்பி பிரம்மம் மறுசான்றுரைக்கும்.

விண்ணுக்கெழும் ஆணையை அனலுக்கு அளித்ததே மண்ணில்வீழும் ஆணையை மழைக்கு அளித்தது. உங்கள் சொற்களாலேயே இங்கு மானுடம் வாழ்வை பொருள்கொள்ளும், கனவுகளை விரித்தெடுக்கும், கண்டடையும், கடந்துசெல்லும். ஆம், அவ்வாறே ஆகுக!


நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு தருணத்தில் தோன்றியது நான் இந்திரன் அல்லவா என்று. அக்கணத்தில் ஏற்பட்ட நடுக்கில் நான் அவனென்றே ஆனேன். அவனென நின்று அனைத்தையும் நோக்கி மீண்டேன்.”

“விஸ்வஃபுக் ஏன் மேலும் விழைவுகொண்டான்? பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு அப்பாற்பட்ட அறிதல் என்று முனிவர் நவில்வதை அறிந்தவன். அவனுக்கு ஏன் விழைவெழுந்தது? ஏன் அவன் கணமொழியாமல் ஆட்டுவிக்கப்பட்டான்?” என்றார் யுதிஷ்டிரர்.

“அவன் அரசன் என்பதனால்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். “அரசன் பெருவிழைவால் ஆற்றல் கொள்பவன். இந்திரன் அரசர்களுக்கு முன்வடிவான அரசன். கணம் என தோன்றி விண் முழுதளக்கும் மின்படை கொண்டவன். அரசன் கற்பதும் முழுமைகொள்வதும் விழைவின் பாதையிலேயே. அவர்களுக்கான வழியை அரசமெய்மை என்றனர் நூலோர்.”

யுதிஷ்டிரர் தன்னுள் எழுந்த வினாக்களால் மேலும் மேலுமென சீற்றம் கொண்டபடியே சென்றார். “எளிய விடைகளுக்காக நான் இங்கே வரவில்லை, யாதவனே. நான் யுதிஷ்டிரனல்ல, நான் பெரும்பசி கொண்ட விஸ்வஃபுக். இந்திரனென்றமைந்து நான் கேட்பதற்கு மறுமொழி சொல்க!” என்றார்.

மூன்று முதற்தெய்வங்களும் எண்ணியறிய முடியாத அதன் எல்லையின்மையை நான் அறிவேன். ஒரு முழு பால்வழியே துகளென நொறுங்கியழிந்தாலும் அதற்கு கணத்திலும் கணத்திலும் கணமென்றமையும் துளியினும் துளியினும் துளியான நிகழ்வல்ல அது. அதன் விரிவில் நிகழ்வது நிகழாமைக்கு சற்றும் மாறுபட்டதே அல்ல.

அது இரக்கமற்றது. தன் அலகிலா பேருருப் பெருக்கினாலேயே நோக்கும் விழியற்றது. கேட்கும் செவியற்றது. அறியும் உளமற்றது. ஆனால் சிற்றெறும்புக் கூட்டுக்குள்ளே ஆற்றலின் நெறி ஒன்று இலங்குகிறது. பெருங்கரி மந்தையையும் அன்னையே ஆள்கிறது. நெறியிலாத ஒரு துளி இடத்தையும் எங்கும் காணமுடிவதில்லை. நீரில் கலப்பதில்லை எண்ணை. அனலில் எரிவதில்லை கல். முறை வகுக்கப்படாத எதுவுமில்லை இங்கே.

அவை எவருடைய ஆணை? எவருடைய விழைவை சூடியிருக்கின்றன இங்கெனத் திரண்டிருக்கும் இவையனைத்தும்? வினாக்களென நம்முள் எழுவன அனைத்தும் இங்கிருக்கும் நெறிமேல் நம் சித்தம் சென்றுமுட்டுவதனால் எழுவன. விடையென அமையவேண்டிய அது அப்பாலென பேருருக்கொண்டு நின்று அஞ்ச வைக்கிறது. சித்தம் பேதலிக்கச் செய்து விலகிச் செல்கிறது.

இதோ போர்ச்சூழல் இறுகி விம்முகிறது. பல லட்சம் மக்கள் செத்துக் குவியவிருக்கிறார்கள். அவ்விருளில் நின்றபோது என் நெஞ்சு அச்சம்கொண்டு உறைய ஒருகணத்தில் அனைத்தையும் உணர்ந்தேன். தலைமுறை தலைமுறையென பிறந்து பிறந்து பெருகிப்பெருகி இப்போர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றது பாரதவர்ஷத்தின் மக்கள்திரள். போர்வெறியும் போரின்மீதான அச்சமும் அங்கே செல்வதற்கான விசையே. வஞ்சமும் அமைதிக்கான விழைவும் அதை நோக்கிய நகர்வே.

அங்கு நிகழவிருப்பதென்ன? வில்வல்லமையும் எண்ணிக்கைவல்லமையும் உளவல்லமையும் ஊழ்வல்லமையும் நின்று மோதிக்கொள்ளும். வெல்வர், தோற்பர். அதற்கேற்ப பாரதவர்ஷத்தின் எதிர்காலம் மாறும். இன்னமும் கருபுகாத கோடிமக்களின் ஊழை இங்கு முடிவுசெய்யவிருக்கிறோம். யாதவனே, இவ்விசையின் ஊற்று எது? இங்கு இதை ஆற்றுவது அது என்றால் அந்த அலகிலி சொல்லவேண்டும் இவனையனைத்துக்கும் என்ன பொருள் என்று. இவற்றுக்கெல்லாம் அந்த அறியமுடியாமை வரை செல்லும் ஒரு நெறி இருக்கவேண்டும்.

நாளை அக்களத்தில் இளமைந்தர் நெஞ்சுபிளந்து செத்துக்கிடப்பார்கள். இறப்பை அஞ்சி, வலியில் துடித்து வான்நோக்கி கைவிரித்து ஓலமிடுவார்கள் சிலர். அன்னையரும் மனைவியரும் குழல் விரித்திட்டு ஓடிவந்து களம்பட்டோர் மீது விழுந்து அலறியழுவார்கள். தலையை நிலத்தில் அறைந்து கூவி கதறி மயங்கி விழுந்து மண்ணில் புரள்வார்கள்.

இல்லங்களெங்கும் இருள்பரவும். கைம்பெண்கள் மூலைகளில் ஒடுங்குவர். இளமைந்தர் தந்தையைத் தேடி அழுதுதிரிவர். பெருந்துயர் நிறைந்த நகரில் நகையெழ ஆண்டுகளாகும். குருதிமண்மீது மீள மீள மழைபொழிந்து பசுமையெழவேண்டும்.

அத்தனைபேரும் விண்ணை நோக்கியே கூவுவர். இரக்கம் கோரி. விளக்கம்கோரி. அப்பெருவெளிநோக்கி இதுவே உன் நெறியா, அளியே உனக்கில்லையா என்ற குரலெழாத ஒருகணமேனும் இம்மண்ணில் உண்டா?

இரக்கமற்ற பெருவிரிவு. இங்கிருக்கும் எவற்றுக்கும் பொருள் அலாத அலகிலாமை. எச்சொல்லும் எவ்வெண்ணமும் எவ்வுணர்வும் எவ்வூழ்கமும் சென்றடைய முடியாத ஆழிப்பேராழி. ஆனால் அங்கிருந்து வருகின்றன இங்கிருக்கும் ஒவ்வொரு கணத்தையும் ஆளும் நெறிகள். என்றால் அது பொறுப்பேற்கட்டும் அறத்திற்கு. அதுவே அறமழிவுக்கும் பொறுப்பேற்கட்டும். இருளுக்கும் ஒளிக்கும் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் அடிப்படையென வந்து நிற்கட்டும்.

அதன் முன் எளியோர் நாம் ஏன் நம் செயல்களுக்கு பொறுப்பேற்கவேண்டும்? நாம் ஏன் குற்றவுணர்வு கொண்டு கலுழவேண்டும்? நன்றென்றும் தீதென்றும் அறமென்றும் அலவென்றும் ஏன் உசாவவேண்டும்? ஏன் அளிகொள்ளவேண்டும்? எதன்பொருட்டு நாம் கட்டுண்டிருக்கவேண்டும்?

என் ஆணவமே அறமென்று என்னைச் சூழ்ந்தது என்று இன்று அறிகிறேன். நான் அரியவன் என்று பிறர்முன் காட்ட விழைந்தேன். பிறர் வகுத்த களத்தில் ஆடி முதன்மை பெற்று அவர்களின் பாராட்டைப் பெற விழைந்தேன். அறமென்பது பொய்யென்று அறிந்திருந்தமையால் என்னுள் நிறைவிழந்திருந்தேன். பொய்யென அறிந்த ஒன்றுக்காக என் இன்பங்களை கையளிக்கிறேனா என எண்ணி துயர்கொண்டிருந்தேன்.

அதுவே அடிப்படை. அது அறமிலாதது எனில் இங்கு எதுவும் அறமிலாததே. அது அளியிலாதது எனில் இங்கு அளி என்பதே தேவையில்லை. அது அறியமுடியாதது எனில் இங்கு எதையும் அறியமுடியாது. யாதவனே, அது பொருளில்லாதது என்றால் இங்கே பொருள்தேடி பேசுவதெல்லாம் பசப்பே.

நான் கேட்பது ஒன்றே. மிக எளிய சொற்களில் இதுவே. யாதவனே, இங்குள்ள அறங்கள் அனைத்தும் தெய்வங்கள் பெயரைச் சொல்லி நிறுத்தப்படுவன. அவை தெய்வங்களால் அளிக்கப்படுவனவா? இருமையற்றது அது என்றால் எதுவும் அதன் உச்சத்தில் இருமையற்றதே. அவ்வாறென்றால் இங்கே நன்றும் தீதும், அறமும் மறமும் இல்லையென்றே ஆகுமல்லவா?

இளைய யாதவர் புன்னகையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு யுதிஷ்டிரர் சினம்கொண்டு குரலுயர்த்தினார். “சொல்க, அறமென்பதும் அளியென்பதும் வெறும் உளமயக்குகளன்றி வேறென்ன? அவற்றை உதறிவிட்டு வாழ்ந்தால் வென்றாலும் இழந்தாலும் குற்றவுணர்விலாது, உளக்குழப்பமில்லாது இங்கு வாழமுடியும் அல்லவா?”

“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவ்வாறு இயலுமென்றால் அது நல்லதுதான்.” யுதிஷ்டிரர் கையை வீசி “ஏன் இயலாது? விலங்குகள் வாழ்கின்றன. பூச்சிகள், செடிகள் அவ்வாறே வாழ்கின்றன” என்றார். “காமமும் குரோதமும் மோகமும் மட்டுமே அவற்றை இயக்குகின்றன. வேறெந்த நெறியுமில்லை.”

இளைய யாதவர் அதே புன்னகையுடன் “இல்லை. அவ்வாறென்றால் ஒரு தலைமுறையுடன் உயிர்கள் அழியும். வேட்டைக்கு எளியதும் உண்பதற்கு இனியதும் இளங்குழவிதான்” என்றார்.

யுதிஷ்டிரர் திகைக்க “ஆனால் இங்கு குழவிகளே அரசர்களுக்கு நிகராக பேணப்படுகின்றன. அன்னையரின் குருதியை உண்கின்றன. தந்தையர் மீதேறி மறுசொல்லெழா ஆணைகளை இடுகின்றன. குழவிகளின் பொருட்டே அனைத்துக் குலநெறிகளும் அமைந்துள்ளன. குழவிகளின்பொருட்டு அனைத்துயிரும் தங்கள் உயிரை அளிக்கவும் சித்தமாகின்றன” என்றார் இளைய யாதவர்.

எப்போதும் எங்கும் நெறியே ஆள்கிறது, யுதிஷ்டிரரே. அரிதாக சில உயிர்த்தொகைகளில் நெறிகள் அழிகின்றன. அனைத்தும் நிலைகுலைந்து சரிய அந்த அழிவினூடாக கற்றுக்கொண்டு அறத்தை மீட்டுக்கொள்கின்றது அந்த உயிர்த்தொகை.

அறத்தை ஐயப்படாத மானுடனே இல்லை, ஏனென்றால் அதன் வழிகள் மறைவானவை. அறத்தை நம்பாத மானுடனும் இல்லை. ஏனென்றால் அது இன்றி அவன் வாழவியலாது. அறத்தை ஐயம்கொள்பவனே அதை உள்ளூர சார்ந்திருக்கிறான். அறத்தை மறுப்பவன் அதை அஞ்சுகிறான். அறத்தைக் கூவுபவன் அதன்மேல் ஐயம்கொண்டிருக்கிறான்.

உயிர் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான அறம் உள்ளது. மானுடருக்குரிய அறம் மானுடரால் உருவாக்கப்பட்டது. குடிகள், குலங்கள், நாடுகள் போல. இல்லங்கள், நகரங்கள் போல. ஆடை போல, அணி போல. அது இனிதென்றும் நன்றென்றும் கண்டமையால் பேணப்பட்டது. அது பல்லென்றும் நகமென்றும் ஆகுமென்பதனால் பூணப்பட்டது.

அறங்கள் மண்ணில் கண்டடைந்து பெருக்கப்பட்டவை. முன்பொருநாள் ஒரு துளிச் செம்பு மண்ணில் மானுடனால் கண்டெடுக்கப்பட்டது. அது நன்றென்று உணரப்பட்டது. மீண்டும் மீண்டுமென செம்பைத் தேடி சேர்த்தனர் மானுடர். அது படைக்கலமும் மனைக்கலமும் அணிகலமும் ஆகியது. அவர்களைக் காத்தது, ஊட்டியது, அவர்கள் உள்ளத்தின் அழகு ஆகியது.

மண்ணிலிருந்தும் அது பிரித்தெடுக்கப்படுகிறது. ஆழங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்டது ஒருபோதும் மீள மண்ணுக்கு செல்வதில்லை. அது தொழில் மாறக்கூடும். அதற்கேற்ப உரு மாறக்கூடும். ஒன்றோடொன்று கலந்து ஒளிமாறக்கூடும். ஆனால் ஒருபோதும் கைவிடப்படாமல் என்றும் இங்கிருக்கும்.

செம்பு மென்மையானது. இரும்பு வன்மையானது. வெள்ளி ஒளி கொண்டது. பொன் அரிதானது. செம்பை இரும்பு வெல்லும். வெள்ளியை பொன் மிஞ்சும். மென்மையான பொன் வன்மையான இரும்பை ஆளும். செம்பு பொன்னுடன் கலந்து விலைமிகும். உலோகங்கள் போரிடுகின்றன. உலோகங்கள் வென்றும் தோற்றும் உலகு சமைக்கின்றன.

உலோகங்கள் ஒன்றே. இரும்பு வேர். செம்பு தண்டு. வெள்ளி இலை. யுதிஷ்டிரரே, தங்கம் மலர். ரசக்கலை அறிந்த யோகி ஒருவன் இரும்பை பொன்னாக்கினான். பின்னர் பொன்னை இரும்பாக்கிக்கொண்டான். இரண்டையும் சாம்பலாக்கி காற்றில் கரைத்துவிட்டு அமர்ந்திருந்தான்.

மானுடனின் அனைத்து தெய்வங்களும் மானுடனால் உருவாக்கப்பட்டவை என்பதே வேதச்சொல். நற்செயல்கள் நெறியென ஆற்றப்படுகையில் வேள்விகளாகின்றன. வேள்வியால் தேவர்கள் உருவாகிறார்கள். அவிகொண்டு ஆற்றல் பெறுகிறார்கள். தேவர்களால் தெய்வங்கள் விண்ணில் நிறுத்தப்படுகின்றன. மண்ணில் வேள்வி அழியும்போது தெய்வங்கள் நீர்பெறாத செடிகள் என வாடிக் கருகி அழிகின்றன.

ஆகவேதான் நீங்கள் தெய்வங்களை கைவிடாதிருங்கள், உங்களை தெய்வங்கள் கைவிடாதிருக்கட்டும் என்கின்றன வேதங்கள். தெய்வங்களைக் கைவிடும் குடிகள் தங்களை அழித்துக்கொள்கின்றன. தெய்வங்கள் மானுடனால் ஆற்றல்பெற்று மானுடனை ஆள்கின்றன. அரசன் வரிகொண்டு குடிகளை ஆள்வதுபோல.

கடுவெளியும் காலமும், பொருளும் ஆற்றலும், இன்மையும் இருப்பும் முடிவிலியும் இரண்டிலியும் ஆன அது எதற்கும் விடையல்ல. அது எதையும் ஆற்றுவதில்லை. அது எதற்கும் பொறுப்பல்ல. மானுடவினாக்களுக்கு மானுட தெய்வங்களே விடைகள். மானுடரை மானுட தெய்வங்களே ஆக்கி புரந்து அழிக்கின்றன. அவையே மானுடனுக்கு பொறுப்பேற்கின்றன.

நோக்கிலாததன் நோக்கே தெய்வங்கள். அளியற்றதன் அளி. அலகிலாததன் அறிவடிவு. முடிவிலாததன் கருத்துரு. தெய்வங்களால் ஆளப்படுகின்றது புடவி. எறும்பும் ஈயும் புழுவும் பறவையும் தங்கள் வேள்விகளால் தங்களுக்குரிய தெய்வங்களை சமைக்கின்றன. தங்கள் தெய்வங்களால் படைத்துக் காத்து அழிக்கப்படுகின்றன.

நேர்கொண்ட பார்வையில் தொகுத்து முன்சென்று இதை அறியவியலாது. ஊசலென ஆடி, முரண்கொண்டு திரும்பி அறியவேண்டியது இது. சொல்லடுக்கை கற்பனையால், அறிவை ஊழ்கத்தால், தெளிவை பித்தால் நிரப்பிக்கொண்டு சென்றடையவேண்டியது. கருத்தென அல்ல புதிரென அறியப்படவேண்டியது. அறிந்தவற்றை அறியாமையால், கூர்மையை பேதைமையால் எழுப்பாதவன் இதை உணரமுடியாது.

இந்த முரணே ராஜவித்யை எனப்படுகிறது. அறிதற்கரிதென்பதனால் ராஜகுஹ்யம் எனப்படுகிறது. இது தூய்மையளிப்பதில் மாண்புடையது. கண்முன் என காண்பதற்குரியது. அறத்துக்கு இயைந்தது. இயற்றுதற்கெளியது. அழிவற்றது.

அறியா நுண்மையாய் அது இவ்வுலகை தாங்கியிருக்கிறது. அதிலமைகின்றன ஐம்பெரும் பருக்களும். ஆனால் முற்றிலும் கடந்துறைகிறது அது. பருவெளியை ஆக்கி பருப்பொருட்களின் நெறிகளுக்கே அவற்றை அளித்து தான் அப்பாலிருக்கிறது.

முதலியற்கையின் மூவியல்புகளின் முடிவிலா நிகராடலுக்கு விடப்பட்டுள்ளன அனைத்தும். நிகர்கொண்டு, நிகரழிந்து, புணர்ந்து, பிரிந்து, திரிந்து, திரண்டு, எழுந்து, அமைந்து, குவிந்து, பரந்து இங்கு பருப்பொருள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீரலைகள் மேல், துளிகள் மேல், துமிகள் மேல் விண்கதிரோன் என அது பருப்பொருளில்  தன்னை நிகழ்த்தி விளையாடுகிறது.

இப்பருவெளியை ஆள்வது பருப்பொருள் தன்னுள் கொண்ட நெறியே. பருப்பொருள் என்பது அந்நெறியின் பொருள்விளக்கம். அந்நெறி அப்பொருளின் கருத்துறைவு. உலகியலின் நெறிகள் உலகை ஆள்கின்றன. உலகியல் நெறிகளை அந்நெறிகளுக்குரிய தெய்வங்கள் ஆள்கின்றன. நெறிபுரப்போரால் அவை அவியிட்டு வளர்க்கப்படுகின்றன.

அனைத்துக்கும் அப்பாலிருக்கும் அதுவே அனைத்துக்கும் முதல் விசை. அதுவே முதல் விதை. அதுவே வயல். அதுவே விளை. அதுவே களை. அதுவே பசி. அதுவே உடல். அதுவே உயிர். ஆயினும் முற்றிலும் அகன்றது. வேள்வி அது. எரிகொடை அது. எரியும் அது. நுண்சொல்லும் அதுவே. உடல் அது. நோய் அது. மருந்து அது. நெய்யும் அனலும் அதுவே. அதுவே ஒளி. ஒளியிருள் என்றிலாததும் அதுவே.

யோகத்திலமைந்தவர் அதை ஒன்றென உணர்கிறார்கள். ஞானத்தில் செல்பவர்கள் அதை பலவென அறிகிறார்கள். செயலில் இருப்பவர் அதை செயல்தருணங்களில் காண்கிறார்கள்.

கவிதையெனும் சோம மது உண்டவர்கள், அரசமைந்து பழிகள் அகன்றோர், வேதமறிந்தோர் எனும் மூன்று தரப்பினர் தங்களுக்குரிய வேள்விகளால் அதை வேட்டு விண்ணுலகு கொள்கிறார்கள். இந்திரநிலை அடைந்து அமைகிறார்கள். விண்ணின்பம் நிறைந்தவுடன் அழிவுடைய மண்ணுலகுக்கே மீள்கிறார்கள். விழைவுகொண்டவர் விழைவிலேயே உழல்வதே நெறி. அவர்களின் தெய்வங்கள் அவர்களை காக்கின்றன, வழிநடத்துகின்றன.

தேவரை வேட்போர் தேவரை எய்துவர். மூதாதையரை நோற்பவர் தென்புலத்தை வெல்வர். பருவுலகை தொழுவோர் செல்வங்களை அடைவார்கள். அதை மட்டுமே நாடுவோர் அதை அடைவார்கள். மங்கலம் மங்கலமின்மை கொண்ட இருபால் பயன்களைத் தருவனவாகிய செயற்சுழலிலிருந்து அவர்களே விடுபடுகிறார்கள்.

wild-west-clipart-rodeo-31இளைய யாதவரின் சொல்கேட்டு திகைத்து அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க! வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா?” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது?” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.”

“எளிய மானுடர் அவர்கள். வாழப்பிறந்தவர்” என யுதிஷ்டிரர் குரல் அடைக்க சொன்னார். நெஞ்சு நெகிழ விழிநீர் வடித்தபடி “மைந்தர், தந்தையர், உடன்பிறந்தார்…” என்றார். “என் நெஞ்சு தாளவில்லை. எதன்பொருட்டு என்ன பொருள் என என் உள்ளம் ஏங்கித் தவிக்கிறது.” “பொருளறிந்தால் துயர் மீள்வீரா, யுதிஷ்டிரரே?” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர்.

“மெய்மை நான்கு வகை துயர்களுக்கு மாற்று என்கின்றன நூல்கள். தெய்வம், பொருள், மானுடர் என்னும் மூன்று வகையில் எழும் உலகத்துயர் அனைவருக்கும் உரியது. இருத்தலை எண்ணும் எளியோன் நிலையாமை கண்டு துயர்கொள்கிறான். அறிஞன் அறியமுடியாமையின் துயரை அடைகிறான். இருமையின் துயர் அடைகிறான் ஞானி.”

“நீங்கள் கொண்டிருப்பது எளியோரின் துயர். அதை நீக்கினால் அறிஞனுக்குரிய துயரையே சென்றடைவீர்கள். யுதிஷ்டிரரே, இங்கிருக்கையில் துயரிலிருந்து துயருக்கே சென்றடைய முடியும். முற்றிலும் துயரற்றவன் இருமை கடந்தவன் மட்டுமே.”

“நான் கோருவது என் துயரை நீக்குவதற்காக அல்ல. இங்கு நிகழும் இப்பேரழிவு என்னும் துயரை நீக்கும்பொருட்டே” என்றார் யுதிஷ்டிரர். “அதன் பொறுப்பை என்னிடமிருந்து அகற்றும் மெய்மை எது என்று மட்டுமே.”

“இவ்வொரு பயணத்தில் வழிநடந்தபோது நீங்கள் பன்னீராயிரம் சிற்றுயிர்களை மிதித்துக் கொன்றீர், யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். சினம் கொண்ட யுதிஷ்டிரர் “என்னிடம் அணிச்சொல்லெடுக்க வேண்டாம். நான் மானுடரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றார். “உயிர்களில் வேறுபாடு நோக்கும் ஒரு தெய்வத்திடம் எதை கோருகிறீர், தர்மரே?” என்றார் இளைய யாதவர்.

மறுமொழி சொல்லாமல் தலையை அசைத்த யுதிஷ்டிரர் “என் நாவை அடக்குதல் எளிது. கண்ணெதிரே அழிவு நிகழ்கையில் அறிவுக்கு மட்டுமே உகக்கும் கொள்கை பேசி அமர்ந்திருத்தல் அதனினும் எளிது” என்றார். “அரசன் என, தந்தை என நான் உனது விழிநோக்கி கேட்பது இதுவே, அறமென கனியாத மெய்மையால் என்ன பயன்?”

“இமயத்தால் என்ன பயன்?” என்று இளைய யாதவர் கேட்டார். “அம்மியென சமைந்தால் அடுமனைக்காகும். தூணென்று நின்றால் கூரையைத் தாங்கும். சிலையென ஆனால் தெய்வமேயாகும். வடதிசை எழுந்தது தேவதாத்மா என்று முனிவரால் வணங்கப்படுவதோ வெறுமனே வான்தொட்டு நின்றிருப்பதனால்.”

யுதிஷ்டிரர் திகைத்து நோக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “அறிக, ஆயிரம் பல்லாயிரம் கோடி அம்மிகளும் தூண்களும் தெய்வச்சிலைகளுமாக உருமாறிக்கொண்டே இருக்கையிலும் முகில்சூடி நின்றிருக்கும் இமயமே அனைத்துக் கற்களுக்கும் பொருள் அளிக்கிறது. அனைத்துக் கல்லும் இமயமே என்று உணர்ந்தவனே கல்லை அறிகிறான்.”

“விழிதூக்கி நோக்கி இமயத்தைப் பார்க்கையில் புலன்தொட்டறியும் பிரம்மம் என்று உளமெழாதவர் பாரதவர்ஷத்தில் எவர்?” என்றார் இளைய யாதவர். “கல் தேவையென்றால் கல்லை எடுங்கள். மலை தேவையென்றால் மலை கொள்க! கல்லும் மலையே என்று உணர்வதே யோகம்.”

யுதிஷ்டிரர் “அளியின்மை… அதை ஆயிரம்கோடி சொற்களைக் கொண்டும் எவரும் மறைத்துவிட முடியாது” என்றார். பின்னர் எழுந்துகொண்டு “போதும், இந்தத் தத்துவங்களன்றி எதையும் நீ என்னிடம் சொல்லிவிடமுடியாதென்று உணர்கிறேன். நான் கிளம்புகிறேன்” என்றார். “நான் எவரையும் அருகழைப்பதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். உடனே “ஆனால் தூண்டிலிட்டு அமர்ந்திருக்கிறேன்” என உரக்க நகைத்தார்.

புரிந்துகொள்ளா விழிகளுடன் நோக்கிய யுதிஷ்டிரர் “நான் விடைகொள்கிறேன், யாதவனே” என தன் மேலாடையை சீரமைத்தார். இளைய யாதவர் எழுந்து நின்று “நன்று யுதிஷ்டிரரே, நற்சொற்களை உரைக்கும் வாய்ப்பு அளித்தீர்கள்” என்றார்.



நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடில்முற்றத்திற்கு மீண்டு வந்ததுமே யுதிஷ்டிரர் உரத்த குரலில் “எனக்கு ஐயமென ஏதுமில்லை, இத்தெளிவை நான் எப்போதும் அடைந்ததில்லை. யாதவனே, இந்தக் கசப்பு நிறைந்த கனவின்பொருட்டு நான் உனக்கு நன்றியுடையவன்” என்றார். “இங்கு அறமென்றும் நெறியென்றும் மாறாத ஏதுமில்லை. அவையனைத்தும் மானுட உருவாக்கங்களே. அவரவர் இலக்குக்கும் இயல்புக்கும் ஏற்ப கண்டடைவன. அந்தந்த சூழலுக்கேற்ப விளைவன. ஆற்றலுக்கேற்ப நிலைகொள்வன” என்றார்.

“கணமொரு அறம். தருணத்திற்கு ஒன்று. உள்ளத்திற்கு ஏற்ப. இங்கு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருப்பது அறங்களின் மோதல். நாம் கொண்டுள்ள அறம் எதுவோ அதன்பொருட்டு நிற்பதும் களமாடுவதும் வெல்வதும் மடிவதுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. என் வழியின்மேல் ஐயம்கொண்டேன், என் எதிரிமேல் கனிவென்று வெளிப்பட்டது அதுவே. ஐயமில்லாது ஆற்றப்படும் அறமே வெல்கிறது. வெல்லும் அறமே அறமென்று நிலைகொள்கிறது. இப்புவியில் வெல்லும் அறம் தோற்கும் அறம் என இரண்டே உள்ளன.”

“அரசன் என்று நான் என் குடியை, என் நாட்டை, என் கொடிவழியினரை காக்கும் பொறுப்பு மட்டும் கொண்டவன். உலகுக்குப் பொறுப்பென என்னை எண்ணிக்கொண்டதே என் பிழை. இவ்வுலகின் கோடானுகோடி அறங்களை எத்தனை தவம் செய்தாலும் நம்மால் எண்ண முடியாது. ஒரு தருணத்தின் அறங்களை எண்ணி வகுக்கக்கூட எவராலும் இயலாது” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

“மாறாத பொதுஅறம் ஒன்றைச் சார்ந்துள்ளது இப்புவிச்செயல் என நம்பியதே என் பிழை. அறிந்தோ அறியாமலோ ஒவ்வொருவரும் அதிலேயே அமைந்துள்ளனர் என்று எண்ணினேன். என்னுள் அமைந்த அவ்வறத்தைக்கொண்டு பிறருள் அமைந்த அவ்வறத்தை நோக்கி பேசமுடியும் என கனவுகண்டேன். அது வெற்றாணவம் என்று அறிந்தேன். யாதவனே, ஓர் அறம் பிறிதொன்றை எவ்வகையிலும் விழிநோக்கி அறிவதில்லை.”

“கல்லுடன் கல் மோதுவதுபோல அறங்கள் மோதிக்கொள்கின்றன” என்றார் யுதிஷ்டிரர். “அங்கே நெகிழ்வுக்கே இடமில்லை. அனைத்துச் சொல்லமர்வுகளும் உளம்பகிர்தல்களும் அறங்களை மூடியிருக்கும் அந்தந்தத் தருணத்து உணர்வுகளை அகற்றி உள்ளிருக்கும் மெய்யான அறத்தை மட்டும் வெளியே எடுப்பதற்காகவே. அனைத்தும் விலகிக்கொண்டபின் இரு அறங்கள் மட்டுமே எதிரெதிர் நின்றிருக்கின்றன. ஒன்று வெல்லும். இன்னொன்று முற்றழியும். வெல்வது வரும்காலத்தில் தானே அறமென்று ஓங்கி நிலைகொள்ளும்.”

“நான் நம்புவதே மெய்யறம் என்று நம்பியதே என் பிழை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “ஆகவே பிற அறங்கள் பிழையென்று கருதினேன். என் அறத்துக்கு தெய்வங்கள் துணைநிற்குமென்றும் பிறவற்றை அவை கைவிடுமென்றும் கற்பனை செய்தேன். என் நிலை அறமென்பதனால் அது இரும்பு செடிகளை என பிறவற்றை அரிந்து செல்லும் என்று தருக்கினேன். என் உள்ளத்தால் எதிரறங்களை எல்லாம் சிறுமைசெய்தேன். பழித்தேன். ஆகவேதான் அவற்றை திருத்த முயன்றேன். நான் பேச்சென்றும் உளம்பகிர்தலென்றும் சொன்னதெல்லாம் பிற அறங்களை சிறுமைசெய்தல் மட்டுமே.”

“இன்று தெளிந்தேன். முதலியற்கை மூவியல்புகளின் நிகரழிய நிலைகுலைந்து நிலைமீண்டு தன்னை நிகழ்த்திச் செல்லும் இப்பயணத்தின் ஒவ்வொரு தருணமும் பலநூறு அறங்களின் முடிச்சுப்புள்ளி என்று. எனக்கு ஆணையிடப்பட்டதை ஆற்றுவதற்கு அப்பால் நான் நோக்கவேண்டியது பிறிதில்லை” என்று சொல்லி யுதிஷ்டிரர் நீள்மூச்செறிந்தார். “நன்று யாதவனே, நான் நிறைவடைந்தேன்” என்றார்.

“பாண்டவரே, ஒவ்வொரு உயிரும் தன் தனியறத்தின்பொருட்டு போராடுகையில் அனைத்துக்கும் உரிய பொது அறத்தைப் பேணுபவர் எவர்?” என்றார் இளைய யாதவர். “குடித்தலைவர் ஒவ்வொருவரும் தங்கள் குடியறங்களை ஓம்புகையில் அவர்களின் பொது அறத்தைப் பேணிநிற்கின்றது அரசனின் கோல். இங்கு வாழும் அனைத்துயிர்கள் மீதும், இப்புடவியின் அனைத்துப் பொருட்கள்மீதும் நிலைகொள்வது எந்தச் செங்கோல்? எது கடுவெளிப்பெருக்கின் அறங்களின் முடிவிலியை ஆள்கிறது?”

யுதிஷ்டிரர் திகைத்தவர்போல் கை எழுந்து அசைவிழந்து காற்றில் நிலைக்க சொல்லிலாது நின்றார். “அவ்வண்ணம் ஒன்று இருக்குமென்றால் அது இங்கிருக்கும் ஒவ்வொரு துளியிலும் வெளிப்பட்டாகவேண்டும் அல்லவா? அதற்கும் உங்கள் தனியறத்துக்கும் என்ன உறவு? நீங்கள் உங்கள் கடமையால், விழைவால் கொள்ளும் அறம் அந்த அறத்துடன் போரிடுமென்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு கணத்திலும் ஒன்றுடன் ஒன்று மோதும் அறங்களில் எது அப்பேரறத்தின் முகம்?”

யுதிஷ்டிரரின் கை கீழே சரிந்தது. அவர் இருளை திரும்பிபார்த்தார். “பேரறம் என்று ஒன்று இல்லையேல் எந்த அறத்திற்கும் பொருளில்லை. இவையனைத்தும் முட்டிமோதித் திரண்டெழும் ஒரு மையமில்லையேல் இங்கு நிகழ்வது அழிவென்றே பொருள்” என்றார் இளைய யாதவர். “இப்புடவி இங்கிருப்பதே இது அழிவை நோக்கி செல்லவில்லை என்பதற்கான சான்று. இது வாழ்வதே இது ஆளப்படுகிறது என்பதை காட்டுகிறது.”

ஆள்வது ஒன்று உண்டு. அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும் இங்ஙனம் பலமிடும் இயல்புகளெல்லாம் அதனிடமிருந்தே உயிர்கள் அடைகின்றன.

வஞ்சகரின் சூது, ஒளியுடையோரின் ஒளி, ஆள்வோரிடத்தே கோல், வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி, மறைமெய்களில் அது அமைதி. ஞானமுடையோரிடத்தே ஞானம். உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா அது. அவ்வுயிர்களின் முதல் அது. இடையும் அவற்றின் இறுதியும் அதுவே.

அதன் வழிகள் அறியமுடியாதவை. அறியமுடிவது ஒன்றே, அது இங்கே இதை நிகழ்த்துகிறது. இது நிகழவேண்டுமென விழைகிறது. இதில் திகழ எண்ணுகிறது. ஒவ்வொரு துளியிலும் தன் முழுமை திரளும்படி செய்கிறது. விரியும் மலரிலும் வாடும் மலரிலும் அழிவிலாத வண்ணமென நிறைகிறது.

பாண்டவரே, படைப்பழிவினூடாக, நன்மைதீமைகளினூடாக, இருளொளியினூடாக அதன் விழைவெனத் திரண்டு வருவது பொலிக என்னும் செய்தியே. விளங்குக, வாழ்க, வெல்க என்பதே அதன் சொல். இப்புவி ஒவ்வொருநாளும் கதிரெழுகையில் பொலிந்து விரிகிறதென்பதே அதற்குச் சான்று. இங்கு விதைகள் முளைப்பதே அதற்கு உறுதி.

ஒவ்வொரு அணுவிலும் திகழும் அச்செய்திக்கு எதிரான எதுவும் தீமையே. அதனுடன் ஒவ்வாத அனைத்தும் மாசே. எதன்பொருட்டென்றாலும் அழிவை நோக்கும் அனைத்தும் பிழையே. மண்கட்டிகளை பெருநதி என அதன் ஆணை அவற்றை அழித்து பெருகிச்செல்கிறது.

தான் என எழுபவரே அம்முழுமையின் செய்திக்கு எதிர்நிற்கிறார்கள். எழுபவர் வீழ்வர். கொள்ள எழுவோர் விட்டு விலகுவர். வெல்வது தானென்போர் வீழ்ச்சியில் தன்னை அறிவர். பாண்டவரே, முரண்படுபவர் முற்றழிவார்கள்.

தானென்பதை விட்டவர் அதில் அமைகிறார். இவையென்றும் இவ்வாறென்றும் நிற்பதில் தன்னையும் உணர்பவர் அந்த முழுமையை அறிகிறார். அவர் நெஞ்சில் வாழ்க என்ற எண்ணமே வாழும். அவர் வாயில் நா எரிகுளத்தில் வேள்வித்தீ என தழல்கொண்டிருக்கும்.

உயிர்க்குலத்தை வாழ்த்துக! புவிப்பெருக்கை வாழ்த்துக! நீரை காற்றை ஒளியை வானை வாழ்த்துக! வாழ்த்தப்படும் அனைத்தும் அதுவே. வணங்கப்படும் அதுவும் அதுவே. வாழ்த்துபவன் வாழ்த்தப்படுகிறான். நலம் நாடுபவன் நிறைவடைகிறான்.

பொலிக பொலிக என உளமெழாத எந்த எண்ணமும் பழிசேர்ப்பதே. பொலிக என கொள்ளுங்கள். பொலிக என அளியுங்கள். பொலிக என வெல்லுங்கள். பொலிக என அடிபணியுங்கள். பொலிக என வாழுங்கள். பொலிக என்றே மடியுங்கள்.

முழுமையில் நின்று நோக்குபவரிடம் அது சொல்கிறது இணைந்த நலன் என்னால் பேணப்படுகிறது என. அதை அறிந்த யோகிகள் எங்கிருந்தாலும் நிறைநிலை கொள்கிறார்கள். எதுவரினும் மகிழ்கிறார்கள்.

English Meaning - As I taught a kid - Rajesh
Fearlessness / Courage, Genorosity / Chairty, In-depth knowledge,   Perseverance / Tenacity are the four qualities (required in abundance), without dipping, are a leader/king’s necessary qualities. In general required for everyone to display leadership in their path of life. Fearlessness is very important because when in fear we are in stagnated and afraid to take steps so we run away from problems. Fear leads to inaction. Hence, fearlessness is necessary for action (or work to be done). Fear can be overcome by knowledge and action. (Being courageous to admit (and apologize for) mistakes is essential to learn from mistakes and take next steps). Knowledge is essential for clarity on what we have to do. Perseverance is necessary to consistently do a work despite facing challenges. Generosity is necessary for contribution to the society which is the ultimate purpose

Questions that I ask to the kid
What are the four qualities essential for a leader or king?
Why is fearlessness the first thing required in a leader? (Fear leads to inaction)