குறள் 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
[பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
பழையம் - பழைமை - பழமை - தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; வெகுநாட்பழக்கம்; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு; பழங்கதை; மரபு.
எனக் - என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
கருதி - கருதுதல் - ண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை
அல்ல - இல்லை
செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
கெழுதகைமை - Intimacy, உரிமை, நட்பு
கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.
தரும் - கொடுக்கும் , உண்டாக்கும்
முழுப்பொருள்
அரசருடன் எனக்கு வெகுநாட்பழக்கம் இருக்கிறது அவர் நன்மதிப்பை பெற்றவன் நான் என்று எண்ணி பண்பல்லாத இயல்பற்ற முறையற்ற தீய செயல்களை ஒருவர் (வெகுநாட்பழக்கத்தினால் கொண்ட) மன உரிமையினால் செய்தால் அவ்வுறவு முறிந்துவிடும். மேலும் தீய செயல்களை அல்லது ஒவ்வாதவற்றை செய்வதாலும் தீமை வறுமை அழிவு உண்டாகும்.
"Do not take it for granted. Do not take things or relationships for granted". எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதே.
இது அமைச்சருக்கு மட்டும் பொருந்தாது. இன்றைய காலக்கட்டங்களில் எல்லா உறவுகளுக்கும் குறிப்பாக நண்பர்களுக்கு பொருந்தும். வெகுநாள் நண்பர்தானே என்று செய்யவேண்டிய முக்கியகடமைகளை ஆற்றவில்லையென்றால் எதிரே உள்ள நண்பரின் நன்மதிப்பை இழந்து கடினமான கேள்விகளை எதிர்க்கொள்ளநேரிடும். அதற்கு தக்க பதில்சொல்வதும் கஷ்டம். நம் வெகுநாள் நண்பன் நம்மை ஒன்றும் கேட்கமாட்டான் என்ற அலட்சியம் கூடாது. அப்படி அலட்சியம் செய்து செயலில் முக்கியமானவற்றில் அலட்சியமாக இருந்தால் அது தீமையை தரும்.
இக்குறளின் கருத்தையொட்டிய கம்பராமாயணப் பாடல் (சுந்தர காண்டம், ஊர்த் தேடு படலம்) இதோ கூறுகிறது.
‘விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும்,
கீழ்மையர் வெகுள்வுற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது?’என்று ஐயுறு
பீழையால்,பெருந்தென்றல்,
உழையர் கூவ, புக்கு, ‘ஏகு’ என, பெயர்வது ஓர்
ஊசலின் உளதாகும்-
‘பழையம் யாம்’ என, பண்பில செய்வரோ
பருணிதர், பயன் ஓர்வார்? (கம்ப.ஊர்தேடு 198)
இது கம்பனின் கற்பனை நயத்தைக் காட்டுவதாகவும் உள்ளது. மண்டோதரி அரண்மனையில் அனுமன் சீதையை தேடுகையில், அங்கு வீசும் தென்றலைப்பற்றி வர்ணனையாக, “தம் வேலையால் தமக்கு வரும் பயனை ஆராய்ந்து அறிந்த அறிவாளிகள், நாம் நெடுநாள் பழக்கம் உடையேம் என்று பண்புக்குப் பொருந்தாதவற்றைச் செய்வார்களோ?. அதே போலே பெருமை மிக்கத் தென்றல் காற்று, தூங்கும் மங்கையரின் தோழியர் அழைக்கச் சென்று, கட்டளை யாது? என்று கேட்டு அதற்கேற்ப மீள்வதாகி, ஒரு ஊஞ்சல் போல வருவதும் போவதுமாக இருக்கிறது” என்கிறார் கம்பர்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும். (அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.
மு.வரதராசனார் உரை
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.
சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.
Thirukkural - Management - Relationships
There is a connection between a person’s level of knowledge and the quality of his relationships with others. Knowledge of the importance and methods of relationships leads to relationships that last longer.
Though a person has a long association, strong and bonding or respectable relationship with a long lasting King, he should not take undue advantage of that relationship. If he takes advantage and resorts to wrongdoing, he will spoil the long lasting relationship and create further problems, warns Kural 700. The reference to the word King must not be taken literally. King can mean any superior.
To presume on an old friendship and do wrong
Is to court disaster.
So, taking undue advantage of familiarity or close relationship with a superior will lead to the breaking of the same bonding and long lasting relationship. It is wise to separate task and relationship. Any wrongdoing will lead to parting of ways even if people are related to each other closely.
English Meaning - As I taught a kid - Rajesh
A minister/employee/friend might have a long relationship with his king/superior/friend. That relationship might be a strong long lasting one. But one should not take undue advantage of the relationship, should not take a task for granted and should not resort to any wrong doing. Because it will spoil the long lasting relationship, create problems and disastrous results. Remember, It is hard to earn trust but easy to loose trust. So, it is wise to separate task and relationship
Questions that I ask to the kid
In a longtime relationship with a friend/boss/king, can we take a task for granted or take undue advantage? Why?
How should one keep task and relationship? Why?