குறள் 691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
[பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
அகலாது - இடைவிடாது. அல்லும் எல்லும் அகலாது ஆகளமாயமர்ந்து நின்று (பெரியபு. புராணசா.20).
அகல்தல் - நீங்குதல், பிரிதல், கடத்தல்
அணுகுதல் - கிட்டுதல், நெருங்குதல்
அணுகாது - நெருங்காமல்
தீக்காய்தல் - tī-k-kāy- v. intr. id. +.To warm oneself at the fire; குளிர்காய்தல் அகலா தணுகாது தீக்காய்வார் போல்க (குறள், 691).
தீக்காய்வார் - குளிர்காய்தல்; நெருப்பில் குளிர் காய்வது
போல்க - அவர்களைப் போல இருக்க வேண்டும்
இகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி.
இகலாட்டம், s. Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை. எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing.
வேந்தர் - வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.
வேந்தர்ச் - அரசர், முடிமன்னர், முதன்மையான
இகல்வேந்தர்ச் - முரண்படும், மாறுபடும் மனமுடைய அரசரிடம்
சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.
ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.
சேர்ந்தொழுகு வார் - சேர்ந்து + ஒழுகு + வார் - சேர்ந்து நெறிப்படிநடக்க வேண்டியவர்.
முழுப்பொருள்
நெருப்பில் குளிர்காயும் பொழுது இன்பமாய் உள்ளதே என்று அதன் மிக அருகே சென்றால் அது சுட்டு விடும். மிக விலகியும் சென்றால் அது கத கதப்பைத் தராது.
குளிர்காய்வதுப் போல மிக விலகியும் அல்லாமல் மிக நெருக்கமாகவும் அல்லாமல் மாறுபடும்/முரண்படும் மனமுடைய வலிமையான மன்னரிடம் சேர்ந்து நெறிப்படி பணிப்புரிய வேண்டிய அமைச்சர் செயல்படவேண்டும்.
மேலும்: அஷோக்
ஒப்புமை
”விடலைமை செய்ய வெருண்டகன்று நில்லா
துடலரு மன்னர் உவப்ப ஒழுகின்” (பழமொழி 225)
“அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய வெளிய பயின் றனவென் றெண்ணி
இகழின் இழுக்கம் தரும்” (ஆசாரக்.84)
“தீண்டி னார்தமைத் தீச்சுடும் மன்னர்தீ
ஈண்டு தங்கிளையோடும் எரித்திடும்” (சீவக.250)
“மன்னரென்பார்
எரியெனற் குரியார் என்றே எண்ணுதி” (கம்ப.வாலிவதைப் 187)
பரிமேலழகர் உரை
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - மாறுபாடுதலையுடைய அரசரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.
விளக்கம்
[கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல் வேந்தர்' என்றார். மிக அகலின் பயன் கெடாது, மிக அணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.]
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் -வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க- அவரினின்று மிக நீங்காமலும் அவரொடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்காய்வார் போல இடைப்பட்ட இடத்தில் நிற்பதும் இருப்பதும் செய்க.
'அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.'
"அருளு மேலர சாக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம்
மருளி மற்றவை வாழ்த்தினும் வையினும்
அருளி யாக்க லழித்தலங் காபவோ."
(சீவக. 247)
"தீண்டி னார்தமைத் தீச்சுடும் மன்னர் தீ
ஈண்டு தங்கிளை யோடுமெ ரித்திடும்
வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான்"
( சீவக.250)
'இகல் வேந்தர் ' என்றும் , 'அகலா தணுகாது தீக்காய்வார் போல்க' என்றும் கூறினார். அமைச்சர் முதலியோர் மிக நெருங்கின் மதியாமைக் குற்றம்பற்றித் தண்டிப்பவரும், மிக நீங்கின் மந்திரச் சூழ்வினைக்குப் பயன்படாத நிலைமையினருமான அரசர்க்கு; குளிர் காய்வார் மிக நெருங்கின் சுடுவதும் மிக நீங்கின் குளிர்போக்காதது மான தீயை, உவமித்தது மிகப் பொருந்தமான வினையுவமையாம்.
அஷோக்
அரசனொடு நெருக்கம் தீபோன்றதென்பதை ஆசாரக்கோவைப் பாடலொன்று இவ்வாறு சொல்கிறது.
“அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய வெளிய பயின்றெனவென் றெண்ணி இகழின் இழுக்கம் தரும்”
மணக்குடவர் உரை
மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.மு.வரதராசனார் உரை
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.
Thirukkural - Management - Relationship
An English saying is that 'Keep someone at arms distance,' complements Valluvar's mantra for a long lasting relationship. Kural 691 helps us get insights from the practice of sitting near a hearth, fireplace, to warm your body during winter.
There are incidents of people claiming that the two are inseparable and dependable and made for each other, suddenly they start claiming that they cannot be together, they cannot get along and they seek separation. A trustworthy person becomes unreliable. Why? Kural 691 provides the answer. The answer is too much attachment. The secret to a long lasting relationship is to practice detached attachment.
Courtiers round a King, like men before a fire,
Should be neither too far not too near.
When we sit near fire, we do not sit too close to it, as it will burn us. We do not sit far away from the fire as it will not give us warmth. If we get too close to people, we may have conflicts because of familiarity as familiarity breeds contempt. On the contrary, if we are far away from people, we will be forgotten, as anything out of sight will be out of mind. Though Valluvar's advice is for relationship with a King, his advice is applicable to relationship with everyone.
English Meaning - As I taught a kid - Rajesh
When we are sitting and warming before a fire, we are not too fair or not too near. Similarly, a minister has to be not too far or not too near while being with a rule/king. This doesn't mean not just physical distance between King and Minister, or King's office and Minister office but also in communication, relationship. Minister has to follow an attached detached principle.
Because,
1) when the minister is too near to the King, the minister looses being in touch with the ground realities. A minister has to understand people's problem for which he has to gather information, analyze the information, assess the situation, develop solutions, take it to King for his notice and approvals. When the minister is too nearer to the King, the people might suffer which will end up as a problem for the country and the King.
2) when the minister is too far from the King, the King looses being aware of the ground realities. Minister is the person who has to keep the King informed about the ground realities, suggest solutions and get approvals. When Minister is far away, this may not happen. Also, King might get doubt if the minister is doing against the minister. Also, the King has to assess the performance of the minister as well the welfare of the people. The King might have some doubts or ideas or secret/classified info to discuss with the minister in person. So, it is important for the minister to be meeting the King periodically.
Questions that I ask to the kid
At what distance a minister has to be with King? Why?
No comments:
Post a Comment