Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Leadership_Change. Show all posts
Showing posts with label Leadership_Change. Show all posts

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

குறள் 474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]

பொருள்
அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை

ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

ஒழுகான் - ஒழுகாதவன் ; ஒத்து போகாதவன்

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அறியான் - அறியாதவன்

தன்னை - தன்னைப் பற்றி

வியந்தான் - வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல்.

விரைந்து - மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல்.

கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்;கெடுநினைவு; கேடு
கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

முழுப்பொருள்
ஒரு சூழ்நிலையில் பிறருடனும் (பிறர் நாட்டுடனும்) அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொருந்தி ஒழுக முடியாதவன், தன்னுடைய வலிமையையும் தான் செய்யக்கூடிய செயலின் வலிமையையும் அதன் பயனின் வலிமையையும் அறியாதவன், தன் வலிமையை வியக்கின்றவன் மிக விரைவாக அழிவான்.

ஏனெனில் பிறருடன் பொருந்தி வாழமுடியாதவன் சூழ்நிலைக்கு ஏற்றவாறுவாழ முடியாதவனைவிட்டு எல்லோரும் விலகியே நிற்பர். அதனால் இயல்பாக வலிமை குன்றிவிடும். தன் வலிமையையும் செயலின் வலிமையையும் அறியாதவன் அச்செயலை செவ்வென செய்யாது தோல்வியடைவான். அதனால் அவனுக்கு கேடு உண்டாகும். தன்னை வியக்கின்றவனுக்கு செருக்கு ஏற்படும் பொழுது 1) பிறரை மதிக்காது இருப்பான் - அப்படி இருக்கையில் எல்லோரும் அவரிடம் இருந்து விலகியிருப்பர் 2) சோம்பல் உண்டாகும்  - சோம்பலினால் செயல் கெடும் 3) செருக்கு கண்ணை மறைத்து செயலை செய்து முடிக்கும் திறன் குறைந்து செயலில் தோல்வியுண்டாகும். கேடு பிறக்கும். ஆதலால் விரைந்து அழிவர்.

பழமொழிப்பாடல் தன்னையே வியப்போரைப்பற்றி, “ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன் தன்னை எனைத்தும் வியவற்க” என்னும். பொருந்தார் தம்மோடு பொருதும் போது தம்முடைய வீரத்தை தானே மெச்சிக்கொண்டு, போரில் ஈடுபடுதல் நன்றன்று என்னும் பொருளில் சொல்லப்படுவது.

கம்பராமாயண மாரீசன் வதை படலத்தில், “அரக்கனஃ து உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் தருக்கினார் கெடுவரென்னும் தத்துவம் நிலையிற்றன்றோ?” என்கிறார் கம்பர். சம்பாதி படலத்திலே மேலும், “களித்தவர் கெடுதல் திண்ணம்” என்று உறுதியாகக் கூறுகிறார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது, அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது, தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரைந்து கெடும் - விரையக் கெடும்.
(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன். இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.

மு.வரதராசனார் உரை
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

Thirukkural - Management - Leadership - Change
A leader has to bring in changes to people, process, procedures,  and products. The most challenging  action for any leader is to introduce changes. People resist change initiatives since  they are always comfortable in the status quo, that is., current state or practices.

Comfort leads to complacency. When a person leaves his comfort zone and feels uncomfortable, he will grow. There is no growth without change. Lack of change brings degradation  and destruction. 

Kural 474 warns a leader of three actions that bring destructions to his leadership. A leader will disappear soon if he: 1) does not get along with others, 2) does not understand his present strengths and the limitations, his qualities and skills and the demands of the current position, and 3) praises his achievements a lot, conceited or self love. 

The unadaptable, ignorant and proud 
Have speedy ends. 

When we read the qualities in the reverse order, practicing these qualities becomes easier. If a person stops admiring his achievements,  self-admiration or narcissism, he will assess his qualities and skills objectively and will get along well with others. Many narcissistic leaders brought destructions to self and the organizations they have led.