குறள் 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று
பரிமேலழகர் உரை
நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான். ('நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.).
மணக்குடவர் உரை
நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது. எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று
மு.வரதராசனார் உரை
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
சாலமன் பாப்பையா உரை
நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
நா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ); சொல்; நடு; மணிமுதலியவற்றின்நாக்கு; தீயின்சுடர்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; துலைநாக்கு; அயல்; பொலிவு; நாவு, நாக்கு
நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
நலன் - நலம்; நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.
உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை
அந் - அந்த

யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம்.
நலத்து - நலம்; நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.
உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.
உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி
அன்று - அல்ல
முழுப்பொருள்
நாவின் (என்னும் நாக்கு) நலமானது அதனுடைய குணத்தையும் அது ஆற்றும் பயனையும் இனிமையையும் பொறுத்ததாகும். நம் நாவை நாம் நல்லவகையாகவும் கெட்டவகையாகவும் பயன்படுத்தலாம். அத்தகைய நாவை நல்லவழில் பயன்படுத்துவது மிகச்சிறப்பானதாகும். நாவை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய திறனே சொல்வன்மை. அது ஒருவருக்கு அணிகலன் ஆகும்.
சொல்வன்மை சிறந்த எண்ணச் செறிவினாலும் (இது கல்வி மற்றும் பட்டறிவினால் வரக்கூடியது), அவற்றை உரிய நேரத்தில், உரியவாறு சொல்லும் திறமையாலும் அளவிடப்படுவது. கல்வியும், சிறந்த அறிவும் இதை உறுதி செய்யமுடியாது. அதனாலேயே இச்செல்வத்தை மற்ற செல்வங்களின் வரிசையில் வைக்கக்கூடாது என்கிறார் திருவள்ளுவர். சொல்வண்மை தனிச்சிறப்புவாய்ந்தது.
இராமாயணத்தில் அனுமன் சொல்லின் செல்வன் என்று போற்றப்படுகிறான். மஹாபாரதத்தின் விதுரரும் தேர்ந்த மொழிகளைப் பேசுகிறவானகத்தான் உருவகிக்கப்படுகிறான் ஆயினும் அவனைச் சார்ந்த கெளரவர்களுக்குப் ஏற்றவகையிலே பேசவில்லை. அதனால் அவனுடைய நாவன்மை சிறப்பித்துப் பேசப்படவில்லை.
மேலும் அஷோக் உரை

=சொல்=
சொல் காயப்படுத்தி வீழ்த்துகிறது ஒருவனை.
சொல் தட்டிப் பறிக்கிறது மற்றொருவனின் மணிமுடியை.
சொல்லை உய்த்துணரும் ஒருவனுக்கே
அனைத்தும் இனிதாக முடிகிறது.
-- கபீர் (புன்னைக்கும் பிரபஞ்சம்)
மேலும் அஷோக் உரை
ஒப்புமை
”மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு” (சிறுபஞ்ச 36)
பரிமேலழகர் உரை
நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான். ('நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.).
மணக்குடவர் உரை
நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது. எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று
மு.வரதராசனார் உரை
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
சாலமன் பாப்பையா உரை
நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.
Management - Public Speaking - Benefits of Speech
In Kural, 641, Valluvar highlights the importance of speech as a skill. The benefit that comes out of a speech is the best benefit among all the other benefits in the world. Speech is a source, resource and a kind of wealth. This wealth is incomparable. A powerful speech accommodates all the benefits within that. There is no other benefit in the world that is greater than the benefit of speech. Therefore, one’s speech can open opportunities, as every conversation is an opportunity. Use the available opportunities to speak to your advantage and create opportunities to speak so that you can gain the best of the benefits by speaking inspiringly.
Persuasiveness is a great gift
Rich beyond all else
English Meaning - As I taught a kid - Rajesh
The character and benfits of a tongue depends on its sweetness (sweetness/pleasantness of words it speaks) and the benefits it yields throughs it words (which translate into action in him and others. through words one can take advantage of the situation and create opportunities). We can use our words for both good and bad. Hence, the benefits of a gifted tongue outshines the benefits of anything else in this world.
Questions that I ask to the kid
What outshines the benefits of anything else in this world? Why?