Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label புகழ். Show all posts
Showing posts with label புகழ். Show all posts

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

குறள் 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வசை - நிந்தை; பழிப்பு; இகழ்ச்சி; வசைகூறும்பாடல்; குற்றம்; அகப்பை; மலட்டுப்பசு; பசு; பெண்யானை; கணவனுடன்பிறந்தாள்; பெண்; மகள்; நிணம்; மனைவி.

என்ப -  எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;

வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ்.

வையத்தார்க்கு - உலகத்தார்க்கு 

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

இசை - இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்.

பெறாஅவிடின் - பெறமுடியாவிடின் (அதாவது புகழுக்குக் காரணமான செயல்களை வாழ்நாளிலி செய்திராவிட்டால்)

முழுப்பொருள்
ஒருவர் வாழும் பொழுது அவரது செயல்களுக்கு ஏற்ப புகழ் உண்டு. அவர் வாழ்ந்து மடிந்த பிறகு இந்தப் பொய் உடம்பு அழிந்துவிடுகிறது. அதன்பிறகு அவருடைய புகழே இசையாக இவ்வுலகில் எஞ்சுகிறது. அதனால்தான் மஹாத்மா காந்தியின் புகழ் இன்றும் இருக்கிறது, வளர்கிறது.

அதுவே ஒருவர் புகழ்பட வாழவில்லையென்றால்  அவரை பற்றி ஏதும் எஞ்சாது. வாழும்பொழுது இருந்த அவரைப்பற்றிய வசைகளே இறந்தபின்பும் எஞ்சும். அதனால் தான் கொடுங்கோலன் ஹிட்லரை இன்றும் கொடுமையானவனாக இவ்வுலகம் ஏசுகிறது.

ஆதலால் ஒருவர் புகழ்பட வாழவேண்டும். இல்லையேல் இறந்தபின்பும் வசைக்கு ஆளாகவேண்டும். பழிச்சொல்லுக்கு அஞ்சி புகழ்பட வாழவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இசை என்னும் எச்சம் பெறாவிடின் - புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர். ( 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின்' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர். மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.

மு.வரதராசனார் உரை
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Reproach will remain for those who, with no fame, have no legacy to leave behind. While a person is living and does his dharma/duties well, he would earn fame (which is equated to music that is considered to pleasant to ears) accordingly for the actions he has done/ has been doing. His work (and his fame) is the legacy he leaves behind. For e.g. Mahatma Gandhi's leadership, and work/activities are heavily studied, remembered and replicated even 75 years after his death. His fame is always growing. However, for the person who didn't live a life properly, who didn't do his dharma didn't leave any legacy. Hence, even after their death, only their reproaches remained. For e.g. Hitler.
 
Questions that I ask to the kid
What is music? What music one should earn in life?
What is reproach? Who will end up with reproaches?
Can you build your music after your death? Why? So, what you have to do?

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

குறள் 237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

பட - paṭa   part. படு¹-. A particle of comparison; ஓர் உவமவுருபு மலைபட வரிந்து (சீவக.56).  

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்

வாழாதார் - வாழாதவர்கள்

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

நோவார் - நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

தம்மை -  tmmai   s. Mother, தாய். See தம்; ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு

இகழ்வாரை - இகழ்வார் - இகழ்-தல் - ikaḻ-   4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).  

நோவதுநோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

முழுப்பொருள்
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (குறள் 505)" அதாவது ஒருவருடைய பெருமைக்கு அவ்ருடைய நடவடிக்கைகளும் குணங்களும் செயல்களுமே காரணம். வேறு யாரும் அல்ல. வேறு ஏதும் அல்ல. 

ஒருவர் புகழ்பட வாழவில்லை என்றால் அவரை எல்லோரும் இகழ்வார்கள். அத்தகைய இகழ்ச்சிக்கு தன்னை தான் குறைக்கூறிக்கொள்ளவேண்டும் தவிர பிறரை கூறக்கூடாது. தன்னுடைய இகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தன்னுடைய செயல்கள்கள் தான் காரணம். தான் செய்ய தவறவிட்ட நற்செயல்களுக்கு பொறுப்பு அவரே. 

ஒருவர் புகழுடன் வாழத் அதற்கான தகுதியினை அவர்தான் வளர்த்துக்கொள்ளவேண்டும். தகுதியையும் புகழையும் வளர்த்துக்கொள்ளாமைக்கு தம்மையே நொந்துகொள்ள வேண்டுமே தவிர பிறரை அல்ல. 

ஆதலால் ஒருவரின் இகழ்ச்சிக்குத் தன்னை தான் கடிந்துக்கொள்ளவேண்டுமே தவிர பிறரை அல்ல. பிறரை கடிந்துகொள்வது எதற்காக? 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.).

மணக்குடவர் உரை
புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு? இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது

மு.வரதராசனார் உரை
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person doesn't earn growth/greatness/fame/respect etc, then that person should blame himself/herself for it. He/She should not blame others such as parents, friends, relatives, teachers, environment etc. Because (we already knew that) பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளை கல்.  Our (body of) work is the measuring yardstick of greatness. How much we work, how we work, how consistently and and for how long we work, what we work, how much sincere efforts we have put etc. all factor in the greatness.

Questions that I ask to the kid
Whom to blame if one doesn't achieve greatness? 
Is it fair to blame to others if doesn't achieve greatness?

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

குறள் 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
தோன்றின் - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

புகழொடு - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

தோன்றுக - தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.
 
அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
இலார் - இல்லை என்றால்; இல்லாதவர் 

தோன்றலின்  - தோன்றுவதை விட 

தோன்றாமை  - தோன்றாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
தோன்றுதல் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றில் இக்குறளுக்கு தகுந்த பொருள் கண்காணவெளிப்படுதல், அறியப்படுதல் மற்றும் உண்டாதல். 

பிறத்தல் என்ற பொருள் இக்குறளுக்கு அவ்வளவாக பொருந்தாது ஏனெனில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் புகழுடன் தோன்ற முடியாது. வெறும் அரசர்களின் குடும்பத்திலும் பிரபலங்களின் குடும்பத்திலும் பிறப்பதால் மட்டுமே புகழுடன் பிறக்க முடியும்.  

ஆதலால் தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார் என்ற பொருளும் சாலப் பொருந்தும். 

ஒருவர் இவ்வுலகில் வெளியே குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ கண்காணவெளிப்பட்டாலோ அல்லது அறியப்பட்டாலோ அவர் புகழுடன் தோன்றுக / அறியப்படுக என்று கூறுகிறார். அதாவது ஒருவர் அவருடைய குணத்திற்காக அறத்திற்காக தன் வேலையில் நிபுணத்துவத்திற்காக புகழுடனும் பெருமையுடனும் விளங்கவேண்டும். அதுவே அவருக்கு சிறந்தது. இந்நாட்டிற்கு சிறந்தது. அவரை பார்த்து பலர் (சிலராவது) மன உந்துதல் அடைந்து முன்னேறுவர். ஒருவர் புகழுடன் இருப்பதால் அவர் இவ்வுலகிற்கு நன்மை செய்தவராக இருப்பார். பொதுவான வழக்கிலிருக்கிறார்போல், “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்” என்கிற கதையாயிராமல் இருக்கவேண்டும்.

மாறாக ஒருவர் புகழ் இல்லாமல் இருக்கிறார் என்றால் அவர் இகழ்ச்சியுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அறத்திற்கு புறம்பான பாவங்களை தீச்செயல்களை செய்தல், சோம்பித் திரிதல், செயல்களைச் செவ்வெனச் செய்யாது இருந்தால், கடமையை ஆற்றாது இருத்தல் இகழ்ச்சியை பெற்றுத் தரும். ஆதலால் புகழ் இல்லாத ஒருவர் (இகழ்ச்சி உடைய ஒருவர்) இவ்வுலகத்தில் முன்னே கண்காணவெளிப்படாது அல்லது பிறர் முன் அறியப்படாத இருத்தலே சிறந்தது. ஏனெனில் இவர்கள் பலருக்கு கெடுதலை பரப்புவர். இவர்களை பார்த்து சிலர் தவறான பாதையில் செல்வர். செயல்களை, கடமைகளை புரியமாட்டார்கள். இவர்கள் இவ்வுலகத்திற்கு பாரமே. இவ்வுலகமக்களுக்கும் சுமையே. ஆதலால் தோன்றிக் கெடுதலை உருவாக்குவதைவிட தோன்றாமல் இருப்பது நன்மை.

அதனால் தான் திருவள்ளுவர் கூறுகிறார் தோன்றுவது என்றால் புகழுடன் தோன்ற வேண்டும். அப்படிப் புகழ் இல்லையேல் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பது நன்மை பயக்கும். அதனால் ஒருவர் வளரும் பருவத்தில் நூல்களைக் கற்று அறிந்துக் கடமைகளை ஆற்றி செயல்களைப் புரிந்துப் புகழ் பெரும் வண்ணம் தன்னை உண்டாக்கிக்கொள்ளவேண்டும். 

சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பதை மற்றுமோரு குறளில் காணலாம். ஆதலால் ஒருவர் தன் வேலையில் செவ்வென செய்யவில்லை என்றால் அவருக்கு புகழ் இல்லை. அவருக்கு இகழ்ச்சியே இருக்கும். அத்தகையவர் வெளியுலகில் நடமாடும் பொழுது அவர் இகழ்ச்சியை மேலும் சந்திக்கக்கூடும். பலர் அவரை ஒரு தவறான முன்னுதாரணமாக காண்பிக்க வாய்ப்பு உண்டு. அதனால் தோன்றாமல் இருப்பது நன்று. உதாரணமாக புகழ் இல்லாத ஒருவர் அவருடைய நண்பர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவரை தவறான விதத்தில் காண நிறைய வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக நண்பரின் மனைவி அல்லது பிள்ளைக்கள். ஏன் அவர் வாழ்வில் தோல்வியுற்று இருக்கிறார்? பெரிய ஆளாக வில்லை என்று பெற்றோர்களிடம் கேட்க வாய்ப்பு உண்டு. அடுத்த முறை செல்லும் பொழுது அவர்கள் இவருக்கு கொடுக்கும் மரியாதையில் மாற்றம் இருக்கலாம். அப்பொழுது மனம் வலிக்கும். அதனால் தோன்றாமல் இருப்பது நன்று எனலாம். 

வள்ளுவரே “குறள் 235 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்  வித்தகர்க் கல்லால் அரிது” என்று சொல்கிறார். ஒரு வேலையில், தன்மையில் திறனோடு அதாவது சிறப்போடு அல்லது புகழோடு இருக்கவேண்டும்.

மருத்துவத் துறையில் நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லா மருத்துவர்களும் எல்லா பண்டுவமும் பார்ப்பதில்லை. “இந்த நோயாளியை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு போய் விடுங்கள்” என்று மருத்துவர்கள் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம். அவர்களுக்கு நோய் பற்றித் தெரியாதென்பதல்ல. ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது புகழ் இல்லாமல் அந்த நோயாளியைக் குணப்படுத்த முடியாதபோது அவர் வேறு மருத்துவரை பார்க்கச் சொல்கிறார். அன்றி அவரே முயன்று நோயாளிக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் என்ன செய்வது. அதனால் தான் “புகழ்” இல்லாத அந்த மருத்துவர் தோன்ற மறுக்கிறார்.

“தோன்றலின் தோன்றாமை நன்று”. தோன்றாமல் இருப்பது இருவருக்குமே நன்மையைத் தரக்கூடும். தோன்றவே கூடாது என்று வள்ளுவர் சொல்லவில்லை. தோன்றாமை நன்று என்றுதான் சொல்கிறார். ஆனால் திருவள்ளுவர் ஒருவரை ஆமைஓட்டில் ஒழிந்துக்கொள்ள சொல்லவில்லை (i.e don't get into the shell). தோர்வடையாமல் நண்பர்களுடனும் நிபுணர்களுடம் பேசி நமது திறமைகளை வளர்த்துக்கொண்டு புகழை ஈட்டவேண்டும். ஏனென்றால் இன்னொரு இடத்தில் “மெய்வருத்தக் கூலி தரும்” என்று சொன்னவர்தானே வள்ளுவர். 

தாமாக முன்வந்து எதைச் செய்வதானாலும், அதற்குரிய திறனோடு முன் வருக. திறனில்லாதவர்கள் முன்வராமலிருப்பது அவருக்க்கும் அடுத்தவருக்கும் நன்மையே தரும். 
 
பிறக்கும் பொழுது எல்லோராலும் புகழுடன் தோன்ற முடியாது என்று முன்னர் கூறியிருந்தோம். ஆயினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெறும் முன் இவ்வுலகிற்கு நன்மை செய்யும் குழந்தை வேண்டி நற்பண்புகள் கொண்ட குழந்தை வேண்டி தவங்களை (நல் எண்ணங்களும், ஒழுக்கமும், அறமும் இங்கே தவம் எனக்கூறலாம்) செய்து (நல்ல எண்ணங்கள் நல்லவற்றை கொடுக்கும்) குழந்தை பெற வேண்டும். குழந்தைகளும் ஓரளவு வளர்ந்த பின்பு (அதுவரையில் பெற்றோர்கள் நன்கு வளர்க்க வேண்டும்) மறுமையில் (அடுத்த பிறவியில்) புகழுடன் தோன்ற இம்மையில் (இப்பிறவியில்) நற்செயல்களை செய்து நற்குணங்களை கொண்டுப் புகழுடன் சிறந்து விளங்க வேண்டும்.  இவ்வாழ்வு நெற்கதிர்ப் பயிர்கள் போன்று ஒரு தொடர் சங்கிலி என்று உணர வேண்டும். நல்ல விதைகளை உற்பத்தி செய்வது நமது கடமை என எண்ணவேண்டும். அதற்கு தான் முதலில் ஒழுங்காக/புகழுடன் இருத்தல் வேண்டும். 

ஒப்புமை
“துறந்தா யாகில் தூயையு மாதி யுலகத்தே
பிறந்தா யாதி யீதல தில்லைப் பிறிதென்றான்” (கம்ப. பள்ளிடை 86)

“மற்றில தாயினும் மலைந்த வானரம்”
இற்றில தாகிய தென்னும் வார்த்தையும்
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேரலால்
முற்றுவ தென்னினிப் பழியின் மூழ்கினோம்” (கம்ப.மந்திரப் 14)

“அறந்தலை...
மறந்தும்நன் புகழலால் வாழ்வு வேண்டலன்” (கம்ப. விபீடணன் 18)

மேலும்: அஷோக் உரை

கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்களின் ”அழிந்த பிறகு ...” (தமிழில் எம்.சித்தலிங்கையா) நாவலில் இப்படிச் சில வரிகள் வருகிறது 
அவர் (யசவந்தராயர்) என் வாழ்க்கையில் பொறித்துச் சென்ற நினைவு என்றென்றும் என் கைக்கு எட்டக்கூடியது. அதை நான் இருத்திக்கொள்ளலாம் அல்லது மறந்தும்விடலாம். ஒரு மனிதனின் அடையாளம் நீடிப்பதோ அல்லது அழிவதோ அவனுடைய வாழ்க்கையினால்தான். அந்த வாழ்க்கை நம்முடைய நினைவுகளுக்கு உயிர் ஊட்டி, நம் வாழ்க்கையின் மூலம் அழியாது நின்று, கலந்து தொடர்ந்தால், அதுவே மறுபிறப்பாகும் என்று எனக்குப் பட்டது. 

பரிமேலழகர் உரை
தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்).

மணக்குடவர் உரை
பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை
பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உரை (சுட்டியைத் தட்டவும்)
தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார். 

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

குறள் 235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
நத்தம் - இருள்; இரவு; ஆக்கம்; ஊர்; ஊரின்குடியிருப்பிடம்; மனைநிலம்; இடம்; நத்தை; சங்கு; வாழை; காண்க:எருக்கு; நத்தமாலம்; கடிகாரஊசி.

போல்  - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

கேடும் - கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

உளதாகும்  - உளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல்.

சாக்காடும் - சாக்காடு - இறப்பு; கெடுதி.

வித்தகர்க் - வித்தகன் -வியத்தகுதன்மையுடையவன்; வல்லவன்; வைரவன்; கம்மாளன்; தூதன்; இடையன்; பேரறிவாளன்.

கல்லால் - ஓர்ஆலமரம்; கல்லாலமரம்; குருக்கத்தி; பூவரசு.

அரிது - அருமை; பசுமை

முழுப்பொருள்
பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

நிலையிலில்லாத செல்வம் தேய நிலையான புகழ் வளரக்கவும், நிலையில்லாத உடம்பை அழித்து புகழ் உடம்பை வளர்க்கவும் தெரிந்து அதன்படி நடப்பவன் (புகழை வளர்ப்பவன்) வித்தகன் ஏனெனில் அது எளிது அல்ல. செல்வமும் உடம்பும் நாம் பகட்டுக்காக அணிந்துகொள்வது. நிலையில்லாதது. ஆகவே நிலையில்லாத வற்றை கொடுத்து நிலையானவாற்றை பெறுகிறமையால் அவன் வித்தகன்.

உலகிலே வாழ்க்கையிலே தோல்வி புகழிலே வெற்றி என்பதற்கு. உதாரணம் அரிச்சந்திரன். உலகியிலிலே தோற்றுக்கொண்டு இருப்பான் புகழில் வளர்த்துக்கொண்டு இருப்பான். புகழை நிறுத்திவிட்டு இந்த பூத உடம்பை அழித்தவர்களில் தசரதனை உதாரமனாக கூறலாம். "வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே" என்று தசரதனைப் பற்றி வாலி கூறுவதாக கம்பர் ராமாயணத்தில் கூறுகிறார். இப்படிப்பட்டவற்றை யாரால் செய்ய முடியும் என்றால் அது கெட்டிக்காரர்களால் மட்டுமே செய்ய முடியும். கெட்டிக்காரர் என்றால் வித்தகர்.

பொதுவாக சாமானியர்கள் உடம்பை பாதுக்காக்க புகழை அழிப்பார்கள். புகழை அழித்து செல்வத்தை வளர்ப்பார்கள். ஆனால் வித்தகர்கள் உடம்பை அழித்து புகழை வளர்ப்பர். இவற்றுக்கு காந்தியையும் உதாரணமாக கூறலாம். அவர் தன் உடம்பை நோன்புகளால் வருத்தி, இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தார். அவர் புகழ் வளர்ந்தது.

கோச்செங்கோட் சோழன் கதை
அக்காலத்தில் சோழ மன்னனாகிய சுபதேவனும்,அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள்.அதன் பின் கமலவதி கருவுற்றாள்.கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது,‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள்.அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது.கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன,ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’என அருமை தோன்ற அழைத்தார். இவனே கோச்செங்கோட் சோழர் ஆவார்.

திரிகடுகப் பாடலொன்று, ”மண்ணின்மேல் வாழ்புகழ் நட்டானும்..சாவுடம்பெய்தினார்.” என்கிறது. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்குசுட்டாலும் வெண்மைதரும்” என்னும் பாடல் வரிகளை நினைவுகூறலாம்.

மேலும்: அஷோக் உரை

புகழின் வளர்ச்சியால் அன்றாட சராசரி வாழ்வை கெடுத்துக கொள்ளலும், சராசரி வாழ்வு முடிந்து மரணமடையும்போது, அத்துடன் மறைந்துவிடாமல் புகழ் ஒளி என்றென்றும் ஒளி வீசுதலும் வித்தகர்களுக்கு மட்டுமே உரியது என்பது இதன் மேலோட்டமான பொருள்.

அன்றாட வாழ்வில் கவனம் செலுத்தி அதில் பெரு வெற்றி பெற்றவன், சாகும்போது ஏனைய புழுக்கள், விலங்குகள் போல மண்ணோடு மண்ணாகிறான். வித்தகர்கள் தமது, அன்றாட வாழ்வை சிதைத்துக் கொண்டாலும் அவர்களின் மரணத்துக்குப்பின் வாழ ஆரம்பிக்கின்றனர்;

ஒப்புமை
”மண்ணிமேல் வான்புகழ் நாட்டானும்
சாவா வுடம்பெய்தி நார்” (திரி 16)

“மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா
தேந்திய கைகொடிரந்தவ ரெந்தாய்
வீந்தவர் என்பவர் வீந்தவ ரேனும்
ஈந்தவ ரவல்ல திருந்தவர் யாரே” (கம்ப.வேளவி.30)

“பைந்தா ரெங்கள் இராமன் பத்தினி
செந்தாள் வஞ்சி திறத்தி றந்தவன்
மைந்தா வெம்பி வரம்பில் சீர்த்தியோ
டுய்ந்தா நல்ல துலந்த துண்மையோ’ (கம்ப.சம்பாதி 44)


பரிமேலழகர் உரை
நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது. இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.

மு.வரதராசனார் உரை
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.

பிச்சைகாரன் அவர்கள் தனது தளத்தில் இக்குறளை பற்றியும், ஜெயமோகனின் ”எண்ண எண்ணக் குறைவது” [சிறுகதை] பற்றியும் கீழ்க்கண்ட வாறு கூறியுள்ளார்

அப்போதுதான் ஜெயமோபாகனின் எண்ண எண்ணக் குறைவது கதையை படித்தேன்.

அந்த குறளுக்கும் கதைக்குமான ஒற்றுமை ஆச்சர்யப்படுத்தியது

அந்த கதையில் பல அழகான தருணங்கள். 

உதாரணமாக இந்த வரி
ஐம்பது வயதில்கூட நமக்கு எதிர்காலமே நமது மெய்யான ஆற்றல்கள் வெளிப்படும் இடம், நமது சாதனைகள் நிகழும் களம் என்று தோன்றுகிறது

வருங்காலத்தில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து எல்லாமே மாறப்போகிறது என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைக்கிறது. 

ஆனால் விரும்பியது அனைத்தும் கிடைத்தாலும் மனதின் நிறைவின்மை மாறுவதில்லை. நிறைவு எப்போதும் எதிர்காலத்தில் எங்கோ இருக்கிறது

கடைசியில் எதற்கோ ஆசைப்பட்டு,வாழக்கையை வீணடித்த வெறுமை தோன்றுகிறது

இந்த கதையில் அந்த குறளில் வரும் வித்தகர் ஒருவரின் கடைசி நாள் காட்சி வருகிறது. சக்தி மிகுந்த இளமைப்பருவத்தில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தன் ஆற்றலை செலவழிக்கிறார். ஒரு சராசரி மனிதன் பார்வையில் அவர் தன் வாழ்வை சிறுக சிறுக அழித்துக் கொள்வதாகவே தோன்றும்

அனைத்தும் நிறைவேறிய பின் அவர் எடுக்கும் முடிவு, சராசரி மனதால் தற்கொலை என்றே கருதப்படும்

எதிர்காலத்தில் மட்டுமே, எண்ணங்களாலும் கனவுகளாலும் வாழும் மக்களுக்கு வித்தகனின் வாழ்வு கிறுக்குத்தனமாக தோன்றலாம். அவனது மரணம் அதிர்ச்சி அளிக்கலாம்

எனக்கு வெகு மங்கலாகநினைவு தெரிந்த சின்ன வயதில், பேப்பரில் பெரியவர்கள் ஏதோ பரபரப்பாக படித்து,விவாதித்த காட்சி நினைவுக்கு வருகிறது.

இந்திரா காந்தியே கெஞ்சியும் கேட்க, மாட்டேங்கறார். சாப்பிட மறுக்கிறார் என கவலையுடன் பேசிக் கொண்டனர். கிழிஞ்ச சட்டையை பயன்படுத்துவது முட்டாள்தனமில்லையா. தூக்கிப்,போட்ருவோம்ல. அந்த மாதிரி வயசாகி தளரந்த உடம்ப தூக்கிப் போட்றனும்னு நினைக்கிறாரு என வினோபா பாவேயின் மரண உபவாசம் குறித்து சுருக்கமாக சொன்னார் என் தந்தை.

இந்த கதையை படிக்கையில் வினோபாவின் வாழ்வும்,மரணமும் இன்னும் துலக்கமாக புரிந்தது

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

குறள் 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
நில - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.

நீள் - நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

ஆற்றின் -  ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

புலவரைப் - புலவர் - புலமையோர்; பாவாணர்; ஞானிகள்; தேவர்; குறுநிலமன்னர்; கூத்தர்; கம்மியர்; ஓவியம்முதலியகலைவல்லார்; சாளுக்கியர்; ஒருவகைச்சாதியார்; சிலஇனத்தவரின்பட்டப்பெயர்.

போற்றுதல்  - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்

போற்றாது - வணங்காது, பாதுகாக்காது

புத்தேள் - புதுமை; புதியவள்; தெய்வம்; தேவர்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
இந்நில உலகத்தின் எல்லைவரை நெடுங்காலம் நீளுகின்ற புகழைப் பெற்றவன் (தன்னுடைய (இல்லறத்தில் ஈகை, ஒப்புரவு போன்ற) அறச்செயல்களினால் பெற்ற புகழ்) ஒரு ஞானியுடன் தேவர்கள் வாழும் வானுலகிற்குச் சென்றால் அந்த ஞானியை வணங்காது அறச்செயல்களைச் செய்து நெடுங்காலம் நீள்புகழ் ஈன்றவரைப் போற்றும்.

அதாவது துறவறம் பூண்டு ஞானத்தை ஈன்ற ஞானிக்கு மதிப்பு இல்லையா?  ஞானிகளுக்கு மேலுலகத்திற்கு சென்றால் தான் புகழ். ஆனால் இவ்வுலகிலேயே இல்லறத்தில் இருந்துக்கொண்டு அறச்செயல்களினால் புகழை ஈன்றவர்க்கு மேலுலகமே இவ்வுலகம் வந்து அவரை போற்றும். புகழுக்கு அவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை அறிக. ஞானிக்கு புத்தேலுடம்பும் (வானுலகத்தில் வாழுகின்ற) உடம்பு கிடைக்கும் ஆனால் புகழ் ஈன்றவருக்கு புகழுடம்பும் கிடைக்கும் புத்தேளுடம்பும் கிடைக்கும்.

ஆதலால் செயலாற்றி ஈன்ற புகழுக்கு மதிப்பு இவ்வுலகத்தில் மட்டும் அல்ல வானுலகத்திலும் அதிகம். அதுவே செயல்வழி ஞானத்தின் புகழ்.

ஒப்புமை
திரிகடுகப் (16) பாடல், “மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்” என்கிறது.

“தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப” (மலைபடு 70)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிலவரை நீள் புகழ் ஆற்றின் - ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.

மு.வரதராசனார் உரை
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

சாலமன் பாப்பையா உரை
தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
ஒன்றுதல் - பொருந்துதல், நெருங்குதல், ஒன்றாதல்; மனங்கலத்தல்; சம்மதித்தல்; உவமையாதல்; ஒருமுகப்படுதல்.

ஒன்றாதல் - ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்; முதலாதல்; இணையின்றாதல்.

ஒன்றா - ஒன்றாத ; ஒற்றுமையில்லாத ; உவமைப்படுத்தமுடியாத

உலகத்து - உலகத்தினுடைய.

உயரம் - அடியிலிருந்துமேல்நோக்கிஎழுந்தஅளவு; மிகுதி மேல் உயர்ச்சி உச்சம்

உயர்ந்தோர் -உயர்ந்தவர்; அறிஞர்; சான்றோர் வானோர் முனிவர்

உயர்ந்த - மேன்மையான

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை

அல்லால் - மற்றபட்டி, அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம்; Except, besides; தவிர

பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வைமுதலியனகுறைதல்.

பொன்றாது - அழியாது

நிற்பது - நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
இவ்வுலகத்தில் இணையில்லாத உயர்ந்த புகழை தவிர அழியாது நிற்பது ஒன்றும் (வேறேதும்) இல்லை. இக்குறளில் வெறுமென புகழ் என்று கூறி இருக்கலாம் வள்ளுவர். ஆனால் அப்படி கூறி இருந்தால் அவர் வள்ளுவராய் இன்று புகழ்பெற்றிருக்கமாட்டார். உயர்ந்த புகழ் என்ற புகழை வரையறை செய்கிறார் திருவள்ளுவர். உயர்ந்தோர் என்றால் அறிஞர்; சான்றோர் வானோர் முனிவர் என்று அர்த்தம். ஆதலால் உயர்ந்த புகழ் என்றால் சான்றோன்மை, உயர் அறிவு, வானோர் கொண்ட உயர் குணம், எல்லாம் துறந்த முனிவர்கள் கொண்ட புகழ். இப்படிப்பட்ட புகழுக்கு இவ்வுலகில் ஈடு இணையே இல்லை. அப்படிப்பட்ட புகழ் இவ்வுலகில் என்றும் அழியாது என்கிறார் திருவள்ளுவர். அப்படிப்பட்ட புகழை அடைவதே வீடுபேறு என்றும் நாம் கொள்ளலாம்.

நிலையாமையை பற்றி பேசும் திருவள்ளுவர் எப்படி புகழ் நிலைத்து நிற்கும் என்று கூறுகிறார் என்ற கேள்வி என்னிடம் உள்ளது. எனக்கு தோன்றும் பதில் என்னவென்றால் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும் அல்லது குன்றிவிடும். ஆனால் நாம் இறந்தபின்பும் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிறக்கக்கூடிய ஒன்றாக நம் புகழ் (சான்றாண்மை என்னும் பொருள் கொண்ட புகழ். பொருளில்லாத புகழ் அல்ல) மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் இங்கு உணர்கிறேன்.

அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில், “இனி ஒருவர்க்கு இம்மை மறுமைகட்கு  இன்பத்தைத் தந்து பூமி உள்ளளவும் நிற்பது புகழ் என்னலுமாம்” என்று இக்குறளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். பொன்றாமல் என்பதை தனி மனிதனுக்கு என்று கொள்ளாமல், இந்த பூமி இருந்து இயங்கும்வரை என்று பொருள் செய்துள்ளார்.

புகழைப் பற்றி பேசும் பொருநராற்றுப்படை (176) பாடல் “நில்லா உலகத்து நிலைமை தூக்கி” என்னும்.  புறநானூற்றுப் பாடல் (165:1-2), “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ நிறீஇத் தாம் மாய்ந்தனரே” என்ற ஒப்புமையைக் காட்டுகிறது. பெருங்கதை,(2:8-10) “பொன்றா இயற்கைப் புகழது பெருமையும்” என்கிறது.  பல இலக்கியங்களிலும் “புகழ் என்பது இறவாது, நிலைத்திருக்கக்கூடியது என்று காட்டப்படுகிறது.

“பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சில்” (குறுந் 143:2-4)

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே” (புறநா 165:1-2)

“பொன்றா இயற்கைப் புகழது பெருமையும்” (பெருங் 2:8:10)
“நிலையிலா வுலகில் நின்றவண் புகழை
வேட்டவன் நிதியமே போன்றும்” (சீவக 2107)

“ஒருவன திரண்டி யாக்கை ஊன்பயில் நரம்பு போர்த்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்றை யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் நிற்கு மன்றே” (சூளா.சீயவதை 204)

“பொன்று மிவ்வுட லின்பொருட்
டென்று நிற்கும் இரும்புகழ்
இன்று நீர்கழிந் தீர்களாற்
குன்றின் மேற்குடை வேந்திர்காள்” (சூளா.அரசியல் 226)

“பேதைமை யுரைத்தாய் மைந்த வுலகெலாம் பெயரப் பேராக்
காதையென் புகழினோடும் நிலைபெற” (கம்ப.இந்திரசித்து 9)

“வென்றில னென்ற போதும் வேதமுள் ளளவும் யானும்
நின்றுள னன்றோ மற்றவ விராமன்பேர் நிற்கு மாயின்
பொன்றுத லொருகா லத்தும் தவிருமோ பொதுமைத் தன்றோ
இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கு மிறுதி யுண்டோ” (கம்ப.இந்திரசித்து.10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

குறள் 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
உரை - urai   n. உரை&sup4;-. [K. ore, M. ura.]1. Speaking, utterance; உரைக்கை உரைமேற்கொண்டு (திவ். இயற். 1, 25). 2. Word, expression,saying; சொல் (திவா.) 3. Explanation, interpretation, commentary, exposition, gloss; வியாக்கியானம் உரையாமோ நூலிற்கு நன்கு (நாலடி, 319).4. Sound of a letter; எழுத்தொலி. (பிங்.) 5.Fame, reputation; புகழ் உரைசால் பத்தினிக்கு(சிலப். பதி 56). 6. Sacred writings, holy writ;ஆகமப்பிரமாணம். (சி. சி அளவை, 1.) 7. Roar,loud noise; முழக்கம் குன்றங் குமுறியவுரை (பரிபா.8, 35). 8. Mantra recited aloud; பிறருக்குக்கேட்கும்படி செபிக்கும் வாசக செபம் (சைவச.பொது. 151.)  

உரைப்பார் - உரைப்பவர்கள்; வியக்கியானம் செய்பவர்கள்; முழக்கமிடுவோர்

உரைப்பவை - உரைக்கை - விரித்துச்சொல்லுகை 

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரப்பார்க்கு - (பொருள்) வேண்டுபவர்க்கு

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

ஈவார் - கொடை அளிப்பவர்

மேல் - mēl   [T. K. mēlu, M. mēl.] n. 1.That which is above or over; upper side; surface; மேலிடம். ஒலை . . . தொட்டு மேற்பொறியை; மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

நிற்கும் - நிற்பது - niṟpatu   n. நில்-. The immoveables, as the vegetable kingdom; தாவரம் நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க (திருவாச. 3, 53).  

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

முழுப்பொருள்
உரைப்பவர்கள் என்றால் முழக்கமிடுபவர்கள், எழுத்தின் மூலமாகவும் பறைசாற்றுபவர்கள் என்று அர்த்தம். அத்தகையவர்கள் பிறரிடமும் ஊர்மக்களிடமும் வரும் சந்ததியினரிடமும் மற்றொருவரைப் பற்றி கூறுவது ஒன்றை மட்டும் தான். அவர் செய்த கொடையை பற்றி மட்டும் தான். ஒரு பொருள் அல்லது உதவி வேண்டி இரந்தவருக்கு (இரக்கும் முன்னரே கூட) உதவி செய்து (கொடை அளித்து) செய்யும் கொடை வள்ளல் பற்றியே உரைப்பவர்கள் புகழ் பாடுவார். ஆதலால் பிறருக்கு உதவி செய்பவர்களின் மேல் என்றும் புகழ் வானம் போல் நிற்கும்.

பரிபாடல் திரட்டில் ஈவார்மேல் புகழ் நிற்றலை இவ்வாறு கூறப்படுகிறது: “ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக்கூடல்”. “இருள் பொழியும் குற்றம் பலவரினும் யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ்”. தண்டியலங்காரத்தில் மேற்கோள் பாடலாகச் கீழ்கண்ட செய்யுள் சொல்வது இக்கருத்தைத்தான்.

“வெய்ய குரல்தோன்றி, வெஞ்சினஏறு உட்கொளினும்,
பெய்யும் மழைமுகிலைப் பேணுவரால்; – வையத்து,
 இருள்பொழியும் குற்றம் பலவரினும், யார்க்கும்
 பொருள்பொழிவார் மேற்றே புகழ்”

புகழ் என்பது “உரையும்,பாட்டுமென” இருவகைப்படும். “உரையும் பாட்டும் உடையோர் சிலரே” என்னும் புறநானூற்று வரியும் அதையே சொல்கிறது. சொல்வழக்கில் சொல்வதும், புலவோர் பாடிப் புகல்வதும் புகழே என்பதால், பரிமேலழகர், “பாடுவார் பாடுவன எல்லாம் புகழாம் என்பதூஉம் பெற்றாம்” என்பார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உரைப்பார் உரையுகந்து” (சுந்தரர்.அவிநாசி 4)

“ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும்
சேய்மாடக் கூடல்” (பரிபா.திரட்டு 11)

“கொடைப்பெரும் புகழார்” (திருவாய் 8.4:9)

“இருள்பொழியும் குற்றம் பலவரினும் யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ்” (தண்டி.47 மேற்)

பரிமேலழகர் உரை
உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.).

மணக்குடவர் உரை
சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

மு.வரதராசனார் உரை
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

சாலமன் பாப்பையா உரை
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார்

குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வசை - நிந்தை; பழிப்பு; இகழ்ச்சி; வசைகூறும்பாடல்; குற்றம்; அகப்பை; மலட்டுப்பசு; பசு; பெண்யானை; கணவனுடன்பிறந்தாள்; பெண்; மகள்; நிணம்; மனைவி.
ஒழிய - அழிய
ஒழி - oẕi   II. v. i. cease, ஓய்; 2. be over, முடி; 3. go off, நீங்கு; 4. die, சா; 5. be excepted, தவிரு; 6. clear off, தீரு; 7. be at leisure; 8. be empty, be unoccupied as in இந்த வீடு ஒழிந் திருக்கிறது.
வாழ்வாரே  - வாழ்பவர்களே
வாழ்வார் - வாழ்வோர்
இசை  - இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை
புகழ் - மேன் மை, கீர்த்தி, அருஞ்செயல்
ஒழிய - அழிய
வாழ்வாரே  - வாழ்பவர்களே
வாழாதவர் - வாழாதவர்கள்

முழுப்பொருள்
எது வாழ்க்கை? வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு இக்குறள் தரும் பொருள் மிக சிறப்பான ஒன்று.

இவ்வுலகில் எல்லோரும் பிறந்து இறக்கிறார்கள். ஆனால் எல்லோரும் வாழ்கிறார்களா? இல்லை என்பதே வருத்தமளிக்கும் உண்மை.

யார் வாழ்கிறார்கள்?
தன் மீது பழி, குற்றம், இகழ்ச்சி என ஏதும் வராத வண்ணம் வாழ்க்கையை நடத்துபவர்களே வாழ்பவர்கள் என்கிறார் திருவள்ளுவர். தன் மேன்மையை வளர்த்துக்கொண்டு முன்பு செய்த குற்றங்களை குறைத்துக்கொள்பவர்களே வாழ்பவர்கள். பழி வரமால் இருக்க தான் செய்யவேண்டிய அறத்தையும் (கடமைகளையும்) செய்து ஈட்டவேண்டிய பொருளையும் ஈட்ட வேண்டும்.

அப்படியானால் வால்மீகி வாழவில்லையா ? வாழ்ந்தார் என்றே சொல்லலாம். ஏன் என்றால் தன் மீது உள்ள திருட்டு என்கிற குற்றங்களை விட அவர் இராமாயணம் போன்ற ஒரு நூலை எழுதி ராமன் போன்றே வாழ்ந்து புகழ் பெற்றதாக (மேன்மை அடைந்ததாக) சொல்லபடுகிறது. அவர் மீது வசைகள் அழியும் அளவிற்கு அவர் புகழ் பெற்றார். [குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்]

யார் வாழாதவர்கள்?
இசை என்றால் புகழ். புகழ் என்றால் மேன்மை. வாழ்வில் தன் மேன்மையை அழித்துக்கொண்டு தன் மேன்மையை வளர்க்காமல் வாழ்வை நடத்திக்கொள்பவர்கள் எல்லாம் வாழ்க்கையை உணர்ந்து வாழாதவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.  வாழாதவர் என்றால் நடை பிணங்கள் என்று அர்த்தம். பிணங்கள் கிருமிகளை கொண்டது. அது எல்லொருக்கும் இன்னல்களையே கொடுக்கும். ஆதலால் (நடை) பிணங்கள் சமூகத்திற்கு கேடானது.

நான் சமீபத்தில் (May 2021) இல் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளியில் கல்லெழும் விதை என்ற நிகழ்வுக்காக ஆற்றிய உரையில் Idealism பற்றிப் பேசுகிறார். அதில் ஒரு உதாரணம் சொல்கிறார். அது இக்குறளுக்கு மிக நன்றாக பொருந்துகிறது.
சினிமால பார்த்தீர்கள் என்றால் எடிட்டர்/Editor லெனின் ஒரு வகையான மனிதர். பெரிய எடிட்டராக இருந்தவர். ஆனால் பெரும் பகுதி பணத்தை சம்பாத்தயத்தை charity க்கு தான் கொடுத்து இருக்கிறார். அவரிடம் காசே இருக்காது. எப்பொழுதும். பெரும்பாலான தருணங்களில் டீ குடித்தால் நீங்கள் தான் அவருக்கும் சேர்த்து காசுக்கொடுப்பதுப்போல் இருக்கும். செருப்புப் போடாமல் 15கிமி நடந்து வருவார். ஆனால் 15-25 வருடங்களாக அவர் திரைத்துறையில் இல்லை. எடிட் செய்வதில்லை.  ஆனால் ஒரு ஆயிரம் கோடி ரூபாய் சினிமா தயாரிப்பாளர் நடிகர் விஜயைப் பார்ப்பதற்கும் எடிட்டர் லெனினைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.  நடிகர் விஜயைப் பார்க்கும் பொழுது விஜய்க்கு என்ன மதிப்பு என்று தான் அந்த தயாரிப்பாளர் பார்ப்பார். அதுவே எடிட்டர் லெனினைப் பார்க்கும் பொழுது அவரை மதிப்பிட முடியாது என்று அந்த தயாரிப்பாளருக்கு தெரியும். அவர்கள் (நடிகர் விஜய்) என்ற உடன் தயாரிப்பாளர் எப்படி நடந்துக்கொள்கிறார் (behave செய்கிறார்) என்பது இங்கே முக்கியம். நடிகன் போனப்பின்பு இவனிடம்(தயாரிப்பாளனிடம்) வேறு ஒரு மொழி வரும்.  அதுவே எடிட்டர் லெனின் சென்றப் பிறகு அந்த பாஷை மாறாது. அது அப்படியே தான் இருக்கும். ஒருவன் நேர்மையாக இருப்பதனால் என்ன ஈட்டிக்கொள்கிறான் என்றுப் பார்த்தால் எங்கும் குன்றத் தேவையில்லாத ஒரு தோள்களை ஈட்டுக்கொள்கிறான். அது சாதாரண சம்பாத்தியம் கிடையாது. தன் வாழ்நாள் முழுக்க தன்னைப் பற்றி தான் பெருமிதத்துடன் நினைத்துக்கொள்ளக்கூடிய வாழ்க்கை இருக்கே அது சாதாரண வாழ்க்கை கிடையாது. அது ஒரு பெரியச்செல்வம். மேலும் நேர்மையற்ற ஒருவன் ஒருபொழுதும் தன் பிள்ளைகள் முன் நிமிர்வோடு இருந்ததாக நான் பார்த்ததே கிடையாது.  

சினிமா துரைக்கு ஏன் செல்ல வேண்டும்? நாம் நமது வீட்டிலேயே எடுத்துக்கொள்வோம், நாம், நமது பெற்றோர்கள், நமது உறவினர்கள், நமது நண்பர்கள் எல்லோரும் தத்தமது பெற்றோர்களையும், முன்னோர்களையும், சகோதர்களையும் ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டுவார்கள்/வசைப்பாடுவார்கள் - உதாரணமாக - எங்க அப்பன் ஒரு சோம்பெறி, எங்க அண்ணன் ஒரு சுயநலம், எங்க உறவுக்காரங்களான் காரியவாதிங்க, எங்க தாத்தா எங்க அப்பாக்கு ஒன்னும் செய்யல, அதனால அவுரு ரொம்ப கஷ்டப்பட்டாரு, எங்க பரம்பரையிலேயே இந்த விட்டுக்கொடுக்காத குணம், கோவம் லான் இருக்கு. குற்றம் சொல்லுபவர்கள் தங்கள் குற்றங்களை மறைக்க மற்றவர்கள்மீது குற்றம் கூறினாலும், இவ்வசைகளை மறுக்க முடியாது என்பதே பெரும்பாண்மையான நேரங்களில் உண்மை. ஆதலால் அத்தகைய வசை உண்டாக வாய்ப்புக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்வு.

மற்றவர்கள் ஒருவர் மீது வசை கூறமுடியாத அளவிற்கு ஒருவர் வாழ்வார் எனின் அதுவே உன்னத வாழ்வு. அதுவே புகழ். 

குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர்" என்ற குறளின் படி வாழ்ந்தால் “தன்னைத் தான் காதல்” கொள்ள முடியும்.


திருவாய்மொழிப் பாடல் (3,3:11) “வாழ்வார் வாழ்வெய்தி ஞாலம் புகழவே” என்னும். 

கம்பராமாயணப்பாடல் ஒன்றில், 
வழிகெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்திறினும் மார்பம் 
கிழிபட அயில்வேல் வந்து கிழிப்பினும் சான்றோர் கேட்கும் 
மொழிகொடு வாழ்வதல்லால், முறைகெடப் புற நின்றார்க்குப் 
பழிபட வாழ்கிற்பாரும் பார்த்திபருளரோ பாவம்”  என்பார் கம்பர். (கம்பராமாயணம் மாயாசனகப் 66)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார், இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார். (வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.).

மணக்குடவர் உரை
வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார். இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.

மு.வரதராசனார் உரை
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

சாலமன் பாப்பையா உரை
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who lives a life in which no one can blame, or point mistakes, or pin point wrongdoings even behind the screen is called the person  living. Whereas if a person lives a fancy life in front of others whereas earns the blame, etc behind screens is not actually living - he or she is either faking or considered dead

Questions that I ask to the kid
Who is considered living? Who is not considered living?
If someone pinpoints us about us from the behind, would that be considered a blame?

ஈதல் இசைபட வாழ்தல்

குறள் 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

இசைபட - இசைபடுதல் - இசைதல் - பொருந்துதல்; ஒத்துச்சேர்த்தல்; உடன்படுதல் கிடைத்தல் இயலுதல்

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

அதுவல்லது - அது அன்றி ,அது அல்லாமல் 

ஊதியம் - இலாபம்; கல்வி; பயன்.

இல்லை  - உண்டுஎன்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
இல்லாத எளிய ,வறியவருக்கு உதவி செய்து வாழ்ந்து,அவ்வாறு வாழ்வதனால் நமக்கு உண்டாகும் புகழை தவிர வேறு எதுவும் பெரிய ஊதியமோ லாபமோ இல்லை.
ஒருவன்புகழ் உச்சியினை அடைய பல்வேறு காரணங்கள் இருக்கலாம் . அவன் படித்த படிப்பினாலோ , செல்வத்தினாலோ ,தன துறையில் செய்த சாதனைகளினாலோ புகழ் அடையலாம் .அனால் அவை எல்லாவற்றையும் விட எளியவருக்கு உதவி செய்து அதன் மூலம் அடையும் புகழே மென்மையானது என உரைக்கிறார் வள்ளுவர் .

முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும் , கொடைக்கு மறு பெயரான கர்ணனும் இன்று வரை புகழ் பெற்று விளங்குவது ஈகையினால் மட்டுமே.

கண்ணதாசன் இதே கருத்தை அருமையாக "உன்னை அறிந்தால் " என்ற ஒரு சினிமாப் பாடலில் அழகாக  கூறி இருப்பார் .  "பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா"

ஒப்புமை
”ஈவார்மேல் நிற்கும் புகழ்” (குறல் 232)
“ஈதல் உள்ளமொ டிசைவேட் குவையே” (மதுரை 205)
“நசைதர வந்தோர் இரந்தவை
இசைபடப் பெய்தல் ஆற்று வோரே” (அகநா.377:14-5)
“இட்டிசை கொண்டறன் எய்த முயன்றோர்” (கம்ப.வேள்வி.32)

“எய்தற் கரிய தியன்றக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயலென்று - வையகத்து
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு” (யா.வி.60.மேற்)\

இன்று புகழ்வேண்டாதவர் என்றால் உலகியலில் பற்றற்றவர் என்று பொருள் வருகிறது.அது ஓர் உயர்ந்த பண்பாக கருதப்படுகிறது. ஒரு நற்செயலைச் செய்தபின் அதன் புகழை ஒருவர் நாடுவாரென்றால் அது செய்த நற்செயலுக்கு உலகியல் பிரதிபலனை தேடிச்செல்வதாகப் பொருள்படுகிறது.

ஆனால் சென்ற நிலவுடைமைச் சமூகத்தில் அப்படி அல்ல. புகழ் என்பது உருவாக்கப்படுவது அல்ல, தேடிவருவது. அன்றைய சூழலில் ஆன்றோரிடமும் மூதாதையரிடமும் சுற்றத்தோரிடமும் எளியோரிடமும் விண்ணுலகிலுள்ள தேவர்களிடமும் பெறப்படும் நற்பெயர்தான் புகழ். புகழால் எவருக்கும் உலகியல்நன்மை ஏதுமில்லை. அது முழுக்கமுழுக்க ஒரு ஆன்மிகச்செல்வம்தான். இன்று புண்ணியம் என்கிறோமே அதைப்போல.

அன்றைய விழுமியங்களின்படி இவ்வுலகில் ஈட்டவேண்டியது புகழ். மறுவுலகில் வீடுபேறு. இங்கு புகழை ஈட்டியவன் அங்கே வீடுபேறை அடைவான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான். உலகியல்புகழ் என்பது வீரம், கொடை, நோன்பு, கடமை, நெறிநிற்றல் ஆகியவற்றால் அடையப்படுவது.

புகழ் விரும்பப்பட்டதுபோலவே இழிபெயர் நரகத்திற்கு இணையாக அஞ்சப்பட்டது. வஞ்சினம் உரைப்பவர்கள் ‘என்னை புலவர் பாடாது ஒழிக’ என்று சொல்வதையும் நாம் பழைய பாடல்களில் பார்க்கிறோம். பெண்கொலைபுரிந்த நன்னன் என்பவனை புலவர் இழிபெயராக வரலாற்றில் நிறுத்திவிட்டதையும் காண்கிறோம்.

ஜெ


இன்றைய நமது இந்திய ஈதலில் எவ்வாறு விளங்குகின்றது என்பதற்கு ,சில புள்ளி விவரங்கள் கீழே
நன்றி : தினமணி 
"எந்த அளவிற்கு பரோபகார குணம் பல நாட்டு மக்களிடையே உள்ளது என்பது பற்றி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச நிறுவனம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கிறது. 2012 ஆம் வருட உலக ஈதல் குறியீட்டில் இந்தியாவின் நிலை 133. ஆசிய நாடுகளில் மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும் பின் தங்கிய நாடு இந்தியாதான்.
தெற்கு ஆசியாவில் முதல் நிலையில் இலங்கை, உலக அளவில் 15. அடுத்து ஆப்கானிஸ்தான் உலக அளவில் 48, பாகிஸ்தான் 85, வங்கதேசம் 109, நேபாளம் 115, ஒரே ஓர் ஆறுதல் என்ன வென்றால் சீனா நம்மைவிட இறுக்கம். அவர்களது நிலை உலக அளவில் 141.
மக்கள்தொகை அதிகமான நாடு நமது என்பதால், கொடுக்கும் குணம் படைத்தவர்கள் 16.5 கோடி இந்திய மக்கள். அது நமது மொத்த மக்கள்தொகையில் சுமார் 13 சதவீதம்தான், ஆனால் உலக அளவில் இது அதிகம் என்பது இன்னொரு ஆறுதலான நிலை.
ஈதல் என்பது நன்கொடையாகப் பணம் கொடுப்பது மட்டுமல்ல. நேரத்தையும் உழைப்பையும் கொடுப்பதும்கூட மிக சிறந்த தானம்தான். அதுதவிர, வழிப்போக்கர்களையும் முன்பின் தெரியாதவர்களையும் எவ்வாறு பேணுகிறோம், அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறோம் என்பதும் ஒருவரது இரக்க குணத்தையும் உயர்ந்த பரிவையும் உணர்த்துகிறது. பிறருக்கு உதவிட செலவிடும் நேரத்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் நிலை 10 சதவீதம் தான். மற்ற நாடுகளுக்குள் நமது நிலை 104. அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன."

பரிமேலழகர் உரை
[அஃதாவது, இல்வாழ்க்கை முதல் ஈகை ஈறாகச் சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனாகிய இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் , அதன்பின் வைக்கப்பட்டது.)

'ஈதல்' - வறியார்க்கு ஈக, இசைபட வாழ்தல் - அதனால் புகழ் உண்டாக வாழ்க, அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.்(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.).

மணக்குடவர் உரை
புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. இது புகழுண்டாமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
1) Helping others especially on food, 2) living a life which is praised (for the values, work done etc) without earning any defame/shame is the real living. There is no great wage than that for a life.

Questions that I ask to the kid
What is the real life which does not have a great wage than that real life?

வசையிலா வண்பயன் குன்றும்

குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம்
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]

பொருள்
வசை - நிந்தை; பழிப்பு; இகழ்ச்சி; வசைகூறும்பாடல்; குற்றம்; அகப்பை; மலட்டுப்பசு; பசு; பெண்யானை; கணவனுடன்பிறந்தாள்; பெண்; மகள்; நிணம்; மனைவி.

இலா - இல்லாமல்

வண் - வண்மை - வளப்பம்; ஈகை; குணம்; வாய்மை; வலிமை; அழகு; புகழ்; வாகைமரம்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; 
பால்; வாவி; அமுதம்; நீர்.

குன்றும் - குன்றுதல் - kuṉṟu-   5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல் 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல் குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல் அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.  

இசை - இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை

இலா  - இல்லாமல்

யாக்கை - கட்டுகை; உடம்பு.

பொறுத்த - பொறுத்தல் - தாங்குதல்; சகித்தல்; சுமத்தல்; அணிதல்; இளக்காரம்கொடுத்தல்; மன்னித்தல்; உத்தரவாதமாதல்; தாமதித்தல்; உவமையாகப்பெறுதல்; சாந்தமாயிருத்தல்.

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

முழுப்பொருள்
எந்த குறையும் இல்லாமல் வளமான, அதிக விளைச்சலை கொடுக்கும் நிலம் கூட, எப் புகழும் இல்லாமல் (அல்லது புகழுக்கு உரிய செயல்களை செய்யாமல்) வாழும் மனிதர்களின் உடலை தாங்கும் பொழுது வழமை குன்றி போகும்.

புகழை விரும்பாத மனம் தான் உண்டோ ? பெரும் செல்வந்தர்கள், பெரும் நிறுவனத்தின் முதலாளிகள் கூட, ஒரு நிலைக்கு அப்பால், பணத்தை விட புகழை நாடுவதை நாம் காணக் கூடும். அப் புகழானது  பணத்தின் மூலமோ அல்லது அவர்களின் வெற்றிகளின் மூலமாக மட்டும்  இல்லாமல், அந்நிலை அடைய அவர்கள் செய்த/செய்யும்  செயல்களின்  மூலமாக வந்தடையும் .

எப் புகழும் அடையாமல், அடைவதற்கு எந்த  எடுக்காமல் வாழும் மனிதர்களால், பூமிக்கு பாரமும், அழகாக எடுத்து உரைக்கிறது இக்குறள் .

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: இசை இ(ல்)லா(த) யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைத் தாங்கிய நிலத்தின்கண், வசை இ(ல்)லா(த) வண் பயன் குன்றும் - வசையில்லாத வளப்பமான விளைவு குறையும்.

அகலம்: இல்லாத என்பது இரண்டிடத்தும் லகர வொற்றும் ஈறும் கெட்டு நின்றன. நச்சர் பாடம் ‘வண்பயம்’.

கருத்து: புகழ் செய்யாதான் நாட்டில் விளைவு குன்றும்.

பரிமேலழகர் உரை
இசைஇலா யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம் , வசை இலா வண்பயன் குன்றும் - பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். ( உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும் அது நிலத்திற்குப் பொறையாகலின் 'பொறுத்த' எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. 'குன்றும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும். இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.

மு.வரதராசனார் உரை
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்

சாலமன் பாப்பையா உரை
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.