Skip to main content

Posts

Showing posts with the label Index 109 தகையணங்குறுத்தல்

109 தகையணங்குறுத்தல்

பால்  - காமத்துப்பால் இயல்  - களவியல் அதிகாரம்  - தகையணங்குறுத்தல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு குறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து குறள் 1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு குறள் 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண் குறள் 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து குறள் 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண் குறள் 1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் குறள் 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு குறள் 1089 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து குறள் 1090 உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று பதிவு வரிசை