Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_018. Show all posts
Showing posts with label Athikaaram_018. Show all posts

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இறல் - ஒடிதல்; கெடுதல் இறுதி சிறுதூறு கிளிஞ்சில்

ஈனும் - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்
ஈனும் - இயன்று தரும்-

எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

எண்ணாது - நினைக்காது 

வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை; 

வெஃகின் - வெஃகு-தல் - veḵku-   5 v. tr. 1. To desireardently; மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள்,176). 2. To covet; பிறர்பொருளை இச்சித்தல்.இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174).

விறல் - வெற்றி; பெருமை; வலிமை; வீரம்; சிறப்பு; உடல்வேறுபாடு.

ஈனும் - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்
ஈனும் - இயன்று தரும்-

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டாமை - வேண்டாது இருத்தல் 

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

செருக்கு - cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

முழுப்பொருள்
பிறர் பொருள் மீது ஆசைப்பட்டு அதனை கவர முயன்றாலோ அல்லது கவர்ந்தாலோ அதனால் கேடு விளையும். இதைப் பற்றி இவ்வதிகாரத்தின் மற்ற குறள்களில் விரிவாக பார்த்தோம். சுருக்கமாக சொன்னால் தன்நெஞ்சே தன்னைச்சுடும், உறவுகளை இழப்போம், மகிழ்ச்சியை இழப்போம், நிம்மதியை இழப்போம், சுற்றத்தை இழப்போம், பெருமை புகழ் ஆகியவற்றை இழப்போம். 

அதுவே பிறர் பொருள் மீது ஆசைக்கொள்ளாமல் அது எனக்கு வேண்டாம் என்று ஒருவர் சொல்வார் என்றால் அவரே அங்கு அரசன். முடிவு எடுக்கும் நிலையில் அவர் இருக்கிறார். பொருள் முடிவை எடுக்கவில்லை. ஆதலால் அவர் அங்கு வெற்றிபெறுகிறார். இவ்வெற்றி உள்ளார்ந்த ஒரு வெற்றி என்பதால் வெறுமென வெற்றி என்று கூறாமல் விறல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். அவ்வாறு பிறர் பொருள் வேண்டாம் என்று முடிவு எடுக்கும் பக்குவம் ஒருவர்க்கு இருக்கும் எனில் அவருக்கு உள்ளார்ந்த ஒரு செருக்கு உண்டு. அதுவே ஆண்மை. அதுவே விறல் தரும். 

ஆக இக்குறளின் கருத்து தீயவிளைவுகளை எண்ணாது பிறர் பொருள் மீது ஆசைப்பட்டால் நமக்கு கேடு உண்டாகும். அதுவே பிறர் பொருள் வேண்டாம் என்னும் செருக்குடன் (ஆண்மையுடன்) இருந்தால் நமக்கு விறல் (உள்ளார்ந்த வெற்றி, பெருமை, புகழ்) உண்டாகும். 

திருமந்திரப்பாடல் மூன்றாம் தந்திரத்தில் துறவோருக்கான இயமங்களைப் பற்றிக் கூறும் போது, வள்ளுவர் துறவறவியலில் வைத்த அதிகாரக்கருத்துக்களையே பெரும்பாலும் திருமூலரும் வரிசைப்படுத்தியுள்ளதைப் பார்க்கலாம்.
கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே. 


விறல் பற்றி
பெரிய புராணம் - அன்பினால் வணங்கினார்

ஒரு நாள் இறைவன் பக்தன் முன் தோன்றி, "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்றான்.

பக்தன்: ஒண்ணும் வேண்டாம் இறைவா 

இறைவன்: என்ன, ஒண்ணும் வேண்டாமா ?

பக்தன்: ஆம், ஒண்ணும் வேண்டாம். 

இறைவன்: உனக்கு எவ்வளவு செல்வம் வேண்டுமானாலும் தருகிறேன்...கேள் 

பக்தன்: தங்கமும், வைர வைடூரிய செல்வங்களும், வீடு கட்டும் ஓடும் ஒண்ணு தான் எனக்கு. அதெல்லாம் வேண்டாம் இறைவா. 

இறைவன்: ஹ்ம்ம்...சரி அதை விடு, உனக்கு சொர்க்கம் வேண்டுமா...தருகிறேன். 

பக்தன்: அதுவும் வேண்டாம்

இறைவன்: ஒண்ணுமே வேண்டாம் என்றால், பின்ன எதற்க்காக என்னை வணங்குகிறாய்?

பக்தன்: ஓ...அதுவா...எனக்கு உன் மேல் அன்பு, காதல்....உன்னை வணங்கனும் போல இருந்தது...மத்தபடி எனக்கு ஒண்ணும் வேண்டாம்....

திருமலைச் சருக்கம் -- திருக்கூட்டச் சிறப்பு
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம் பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

பொருள்;
கேடு மாக்கமுங் = கேடும் + ஆக்கமும் = நல்லதும், கெட்டதும்
கெட்ட திருவினார் = இல்லாத சிறந்தவர்கள். இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
ஓடுஞ் = வீடு கட்டும் ஓடும்
செம்பொனும் = செம்மையான பொன்னும் (தங்கம்)
ஒக்கவே நோக்குவார் = ஒன்றாக நினைப்பார்கள்
கூடும் அன்பினில் = மனதில் கூடி வரும் அன்பினால்
கும்பிட லேயன்றி = கும்பிடுவார்களே அன்றி 
வீடும் = வீடு பேறும் (சொர்கமும்)
வேண்டா = வேண்டாத
விறலின் = வெற்றியில், 
விளங்கினார் = இருந்தார்கள்.

வீடுபேறு என்பதை எல்லோரும் விரும்பும் உயர்ந்தபட்ச குறிக்கோளாகும். ஆனால் இறைவன் மீது அன்பு மட்டும் போதும் வீடுபேறு வேண்டாம் என்றென்பது உள்ளார்ந்த வெற்றி. அதனால் அது விறல் எனப்பட்டது. (வீடுபேறு போன்ற) பயன்களில் மேல் பற்றற்ற மெய்யான இறைப்பற்று. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன..

மணக்குடவர் உரை
விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.

மு.வரதராசனார் உரை
வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை
பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.

Thirukkural - Management - Not Being Envious
The desire to earn wealth without thinking of the negative consequences of the wealth earned that way will bring disaster to one who earns, warns Kural 180.

Thoughtless greed leads to ruin,
Sublime content to triumph.

A person succeeds personally and professionally, if he does not covet others' possessions. So let us give up the thought of longing for things that do not belong to us and amassing wealth by unfair means.

English Meaning - As I taught a kid - Rajesh
When one desires on other's wealth and injudiciously coverts it, then it will result in dire consequences such as 1) our conscience killing us, 2) losing relationships, 3) losing happiness, 4) loosing peace 5) loosing our circle of friends/network, 6) fame and glory etc. 

A person who takes pride in not desiring will earn success, exultation, mettle because one who has the freedom to say NO to others wealth without yielding to desires automatically gets the pride. It is an internal victory because the decision was taken by self rather than the other's wealth. Thiruvalluvar particular uses the word விறல்  to highlight internal exultation/happiness.

Questions that I ask to the kid
What yields internal exultation?

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

குறள் 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
அறன் -  அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

வெஃகா - வெஃகாமை - அவாவின்மை; பிறர்பொருளைக்கவர்ந்துகொள்ளவிரும்பாமை; வெறுப்பு.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையார்ச்  -உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

சேரும் - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

திறன்திறம் - கூறுபாடு;  வகை; சார்பு; மிகுதி; கூட்டம்; நிலைபெறுதல்; வலிமை; திறமை; மேன்மை; கற்பு; நேர்மைமருத்துவத்தொழில்; வழி; வரலாறு; குலம்; ஒழுக்கம்; கூட்டம்; ஆடு80, பசு80, எருமை80கூடினகூற்றம்; கோட்பாடு; விரகு; உபாயம்; ஐந்துசுரமுள்ளஇசை; பாதி; உடம்பு; வேடம்; இயல்பு; செய்தி; காரணம்; பேறு.

அறிந்துஅறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

ஆங்கே - ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்


முழுப்பொருள்
பிறர் பொருளை விரும்புவது அதனை கவர்வது தீச்செயலாகும். அது அறம் அல்லாதது. ஆதலால் பிறர் பொருளை விரும்பாது இருப்பதே அறம். அவ்வறத்தை அறிந்து உணர்ந்து பிறர் பொருள்களை விரும்பாத அறிவுடையோர்களிடம் சென்று சேருவாள் செல்வத்தை தரும் திருமகள் மஹாலக்ஷ்மி. எப்படி சேர்வாள்? வெஃகாதவர்களின் இயல்பறிந்து அவர்களுடன் சேர தக்க காலத்தை(/வழியை) நோக்கி காத்திருந்து சேருவாள். 

உனக்கு செல்வம் வேண்டுமா? உன்னிடம் இருக்கும் செல்வம் குறையாது இருக்க வேண்டுமா? நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பிறர் பொருள் மீது ஆசைப்படாத. செல்வம் தக்க காலத்திற்காக காத்திருந்து தானாய் வந்து சேரும். 

ஏன் தக்க காலத்திற்காக செல்வம் காத்திருக்கிறது? ஏனெனில் நம்முடைய உழைப்பும் வேண்டும் அல்லவா. சும்மா சோம்பி உட்காந்திருந்தால் செல்வம் ஏது? உழைப்பில்லாமல் பயன் ஏது? பயனின் ரூபத்தில் செல்வம் வந்து சேரும். ஆதலால் அதற்கு நாமும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதாவது உழைக்க வேண்டும்.

பிறர்பொருள் கவருதல் என்பது அழுக்காறு (பொறாமை), மற்றும் பேராசை இவற்றினாலே நிகழ்வது. பேராசையும், பொறாமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தீக்குணங்கள். ஒன்று மற்றொன்றை வளர்க்கும். அழுக்காறு அதிகாரத்தின் இரு குறள்கள் வழியாக இக்குணங்கள் உடையவரிடம் திருமகள் உறையாள் என்று சொல்லியிருப்பார் வள்ளுவர். நினைவு படுத்திக்கொள்ளுவோம்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.’ (அழுக்காறாமை- குறள் எண்- 167)

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.(அழுக்காறாமை- குறள் எண்- 168)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

குறள் 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
வேண்டுதல் விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டற்க -  வேண்டாது இருக்க ,விரும்பாது இருக்க

வெஃகி - வெஃகு -  வெஃகல் - மிகுவிருப்பம்; பேராசை

வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை; 

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல்

விளைவயின் - விளைவு - நிகழ்ச்சி; விளைகை; முதுமை; விளைபொருள்; பழம்; பயன்; கைகூடுகை; ஆக்கம்; விளையுமிடம்; வயல்; மேகம்; நாடகச்சந்திஐந்தனுள்ஒன்று.

மாண்டற்கு - மாண்(ணு)-தல் - māṇ-   7 v. intr. 1. Tobecome excellent, glorious; மாட்சிமைப்படுதல்.மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665). 2. To begood, worthy; நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன்(குறள், 177). 3. To be full, abundant; நிறைதல்.மாணாப் பிறப்பு (குறள், 1002). 4. To be great; மிகுதல். மாணப் பெரிது (குறள், 124).

மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல்.

அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

முழுப்பொருள்
திருவள்ளுவர் கூறுகிறார் பிறர் பொருள் மீது ஆசைப்படாத. ஏன் ? என்று கேட்டால் அதற்கு இப்படி சொல்கிறார். ஏனெனில், நீ பிறர் பொருளை விரும்பி அவருடைய ஆக்கத்தை(செல்வத்தை) அபகரித்தாய் என்றால் அதன் பயன் மாட்சிமை அற்றது ஆகும். அதாவது அதன் பயனை நீ சுவைக்க முடியாது. அது நீ நினைத்த சுவையாக இருக்காது.  நீ நினைத்த மகிழ்ச்சியை தராது. 

முதலாவதாக தன்நெஞ்சே தன்னை சுடும். நீயே நீ செய்த காரியத்தை நினைத்து ஒருநாள் அல்ல ஒருநாள் மனம் வருந்துவாய். இரண்டாவதாக நீ யாரிடம் அபகரித்தாயோ அவருடன் உறவை இழப்பாய். உறவை இழப்பது செல்வத்தை போல் ஆகும். மகிழ்ச்சியை இழப்பாய். மூன்றாவதாக நீ பிறர் பொருள் மீது ஆசைப்படுவன் என்று அறிந்து உன்னிடம் யாரும் நெருங்க மாட்டார்கள். நான்காவதாக இவ்வுலகம் உன்னை ஏசும். தாழ்த்திப்பேசும். உன் சுற்றமே உன்னை மதிக்காது. 

நிலையில்லாத பொருளை தவறாக கவர்ந்ததற்காக உன் பெயரையும் புகழையும் இழப்பாய். ஆதலால் வெஃகி கவர்வதால் நீ அடைவதைவிட இழப்பதே அதிகம் என்று ஒருநாள் நீ உணர்வாய். ஆதலால் அதை இப்பொழுது நினைத்து பிறர் பொருள் மீது வெஃகாதே(ஆசைப்படாதே).

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை
பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.

மு.வரதராசனார் உரை
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.

Thirukkural - Management - Not Being Envious
Valluvar strongly advises us through Kural 177 to avoid earning wealth by means of greed. Wealth earned by exploiting others is not your wealth. Moreover, that sort of 
wealth will never bring any good things to your life. 

Avoid wealth through greed: 
Out of it comes no good.

We cannot be proud of the wealth earned through improper ways and claim ownership of that wealth. Wealth earned through improper way does more harm and does not do any good to us.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

குறள் 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

வெஃகி - வெஃகு வெஃகல் - மிகுவிருப்பம்; பேராசை

வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை; 

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்றின் - ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நின்றான்நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

பொருள்சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வெஃகிப் வெஃகல் - மிகுவிருப்பம்; பேராசை

பொல்லாத  - தீமையான; கடுமையான.

சூழ - சூழ்தல்  - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.

கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்

முழுப்பொருள்
தீவழியில் செல்லாமல் இருக்க ஐம்புலன்களையும் தடுப்பது இல்லறத்தானின் கடமையாகும். ஐம்புலனையும் கடப்பது துறவியின் கடமையாதும். இவற்றை முன்பு பார்த்தோம்.  அருள் என்பது துறவறத்தாரின் பண்பு. அன்பு என்பது இல்லறத்தாரின் பண்பு. அன்பென்பது தொடர்புடையவர் மாட்டுச் செய்யப்படுவது. அருளென்பது தொடர்பல்லாதவர் மாட்டுச் செய்யப்பதுவது. துறவி அப்படிப்பட்டவன். 

இக்குறள் இல்லறவியலில் வருவதால் அருள் என்பது அறம் என்ற பொருளையே குறிக்கும். துறவறத்தை (அல்லது துறவறத்தின் பலனை) அடைய இல்லறம் ஒரு வழி.  இல்லறத்தை செவ்வென நடத்தினால் எளிதாக துறவறத்திற்குள் செல்லறமுடியும். துறவறத்தில் அருளை நோக்கியே செல்லுவார்கள். 

அருளை விரும்பி அதாவது துறவறத்திற்கு நுழைய முனைபவன் (துறவறத்திற்கான தகுதியை வேண்டி) இல்லறத்தின் வழியே நிற்பவன் மற்றவர் பொருள்கள் மீது ஆசைப்பட்டு பொல்லாத செயல்களை செய்வான் என்றால் அவனுடைய நோக்கம் (அதாவது அருள்) கெடும். துறவறத்திற்கான பாதை தடை பெறும். துறவத்திற்கு அடுத்து வீடு. ஆதலால் தவறுகள் செய்து வீடுபேறினை இழக்க கூடாது. பிற பொருள் மீது ஆசைப்பட்டு தீய செயல்களை செய்யக்கூடாது. இல்லறம் கேட்டால் துறவறம் கெடும். இரண்டு அறமும் கெடும். ஆதலால் கவனம் தேவை என்கிறார் திருவள்ளுவர். 

சூழ்தல் என்றால் கருதுதல் அதாவது நினைத்தல். ஆதலால் பிறர் பொருள் மீது ஆசைப்பட நினைத்தாலே கேடு நமக்கு ஏற்படும். நினைப்பு தான் செயலின் வேர்.  வேர் கேட்டால் மரமும் கெடும். 

நாம் ஒரு  மிக பெரிய பயணத்தை செய்கிறோம். அதில் ஒன்று இப்பிறவி. இப்பிறவியின் நோக்கம் உயிர் வீடுபேறு (அல்லது சிலருக்கு கடவுள்) அடைவது. மனித பிறவி எடுத்தால் வீடுபேறின் இலக்கை அடைய நெருங்கி விட்டாய் என்று அர்த்தம். மனித பிறவி என்பது அருமை, அரிதானது. மனித பிறவியில் இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் அனுபவத்துடன் பெறலாம். சொர்க்கத்தில் இன்பம் மட்டுமே. நரகத்தில் துன்பம் மட்டுமே. இன்பம் துன்பம் மாறி மாறி அடித்து ஞானத்தை உருவாக்குவது மனித பிறவியில் மட்டுமே. அதனால்தான் மாணிக்கவாசகர் சொன்னார் "புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி" அதாவது பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள், ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று தேவர் வருந்துகின்றனர். ஆதலால் நாம் பெற்றுள்ள வாய்ப்பின் பெருமதியை நாம் உணரவேண்டும். வைக்கற்களை வைத்துக்கொண்டு அதன் பெருமதி தெரியவில்லையென்றால் அதனை குளத்தில் வீசும் பேதையராய் இருப்போம். மேலும் மாணிக்கவாசகர் சொன்னார் "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்" அதாவது பல உயிர் பிறவிகளை எடுத்து கடைசியாக மனிதப் பிறவி  கடவுள் அருகில் இருக்கிறோம். இந்த பிறவியை நாம் வீணாக்க கூடாது. இல்லறத்திற்கு அடுத்து துறவறம். துறவறத்திற்கு அடுத்து வீடு. ஆதலால் பிறர் பொருள் மீது ஆசைப்பட்டு அவ்வாய்ப்பை இழக்கக்கூடாது. புலன்களின் அலைக்கழிப்பாள் சின்ன சின்ன அற்பப் பொருள்களுக்கு  ஆசைப்பட்டு மேலான மெய்ப்பொருளை இழக்க கூடாது. 

மேற்கோள் காட்டப்பட்ட பாடல்கள் 
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
- மாணிக்கவாசகர் 


(பொருள்: திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
- மாணிக்கவாசகர் 

(எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப்பொருள்), சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை இக்காலத்தாரும் உடன்படுவர். ‘மிருகம்’ என்பது ‘விருகம்’ என மருவியது. உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கிறது.

இனி, உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களிற்கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன என்பன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்பாம். இவற்றை,

"தோற்றியிடு மண்டசங்கள் சிவேதசங்கள் பாரிற் றுதைந்துவரு முற்பீசஞ் சராயுசங்க ணான்கின் ஊற்றமிகு தாவரங்கள் பத்தொன்ப தென்றும் ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா

மாற்றருநீ ருறைவனநற் பறவைகணாற் காலி மன்னியிடும் பப்பத்து மானுடரோன் பதுமா ஏற்றியொரு தொகையதனி லியம்புவர்கள் யோனி எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே."

(சிவப்பிரகாசம்)

என்பதனால் அறிக. உயிர்கள் இத்தனை வகைப் பிறப்புகளை எடுத்து உழல்கின்றன என்பதை விளக்க, "பிறந்து இளைத்தேன்," என்றார்.

இவற்றால் உயிர்களின் பிறப்பு வகைகள் கூறப்பட்டன.)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை

அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது

மு.வரதராசனார் உரை
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

குறள் 175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அஃகிஅஃகுதல் - குறைதல்; சுருங்குதல் நுணுகுதல் குவிதல் நெருங்குதல் வற்றுதல் கழிதல்
நுணுகுதல் - நுட்பமாதல்; மெலிதல்; கூர்மையாதல்

அகன்ற அகலுதல் - நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

என்னாம் - என்ன - என்ன பயன் ?

யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)

வெஃகி
வெஃகல் - veḵkal   n. வெஃகு-. 1. Excessivedesire; மிகுவிருப்பம். (பிங்.) 2. Avarice, greed;பேராசை. (சது.
வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்.

வெறிய வெறி - பயித்தியம்; மதம்; சினம்; கலக்கம்; ஒழுங்கு; வட்டம்; கள்; குடிமயக்கம்; விரைவு; மணம்; காண்க:வெறியாட்டு; வெறிப்பாட்டு; மூர்க்கத்தனம்; பேய்; தெய்வம்; ஆடு; பேதமை; அச்சம்; நோய்; ஆள்களின்றிவெறுமையாகை.

செயின் - செய்தால்

முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலில் அல்லது ஒரு களத்தில் மட்டும் நுட்பமாக பயின்று இருக்கலாம். அல்லது பல செயல்களில் அல்லது பல களங்களில் பயின்ற அகன்ற அறிவுப் பெற்று இருக்கலாம். அதேப்போல் நுட்பமான அறிவை பல தளங்களில் பெற்று நுட்பமான அகன்ற அறிவைப்பெற்றிருக்கலாம்.  ஆனால் இவ்வளவு கற்றும் பிறர் பொருள்மீது மயங்கி அதை விரும்பினால் (அல்லது  களவாடினால்) அவ்வளவு கற்ற அக்கல்விக்கு என்ன பயன் ? இவர்கள் உயர்ந்தோரிடம் சூழ்ச்சி செய்து வஞ்சித்து களவு செய்வர் எளியோரிடம் கடிந்து களவு செய்வர். 

ஆதலால் களவென்பது எளியோரிடம் தான் இருக்குமென்பது தவறான கருத்தாகும். நுட்பமான அகன்ற அறிவைப்பெற்றிருந்தாலும் ஒருவன் களவு செய்யக்கூடும். படித்தவர்கள் களவு செய்வார்களா? செய்வார்கள். ஏனெனில் மனம் ஒரு பைத்தியம். உதாரணமாக மளிகை கடைகள் (சூப்பர்மார்கெட்/பலப்பொருள் அங்காடி) போன்ற இடங்களுக்குச் சென்றால் அங்குத் திருடும் படித்தவர்களை பணம் படைத்தவர்களை கண்காணிப்பு கேமரா' (CCTV Camera) க்களில் அதிகம் காணலாம்.


பி.கு:
அஃகுதல் என்ற சொல்லுக்கு நுணுகுதல் என்ற பொருள்,  அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்ற ஒரு வாக்கு உண்டு. படிக்கும் போது உணர்ந்து, ஆழ்ந்து படிப்பதுதான் நுண்ணிய அறிவை வளர்க்கும். ஒருபொருளைப் பற்றி நுணுகிப்படித்து தெரிந்து கொள்ளுவதில், மற்ற துறைகள் என்று கருதப்படும் பல திசைகளிலும் உள்ள பொருள்களும் தானாகப் புலப்படும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.).

மணக்குடவர் உரை
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.

English Meaning - As I taught a kid - Rajesh.
A person might have deep wisdom and broad knowledge from books and experience. But what is the use of it or how does it make sense if that wise knowledge person gets jealous of others wealth and indiscreetly indulges to covet his/her wealth. Jealousy or any act because of jealousy to covet others wealth is not a sensible act. 

Questions that I ask to the kid
A knowledgably person is found to be jealous? Remark about it

இலமென்று வெஃகுதல் செய்யார்

குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
இலம் - இல்லம்; இல்லறம் வறுமை

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்; ஆசைப்படுதல் 

செய்யார் - செய்யமாட்டார்கள் ; பகைவர்

புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.

வென்ற - வென்றோன் - வெற்றியடைந்தோன்; புலனடங்கப்பெற்றோன்; அருகக்கடவுள்

புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

யில் - இல் - இல்லாத

காட்சி - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

யவர் - அவர் 

முழுப்பொருள்
ஐந்து புலன்களை வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர்கள் சான்றோர் எனலாம். அத்தகையவர்கள் எப்பேர்ப்பட்ட வறுமையிலும் பிறர் பொருள்கள் மீது ஆசைப்படமாட்டார்கள். ஏனெனில் ஆசை பொறாமையாக மாறி நம்மை தவறான வழியில் நடத்தும். ஐந்து புலங்களை வென்றவர்கள் பிறர் பொருள் மீது ஆசைப்பட மாட்டார்கள் என்று கூறி இருக்க்கலாம். ஆனால் அப்படி கூறியிருந்தால் அது துறவு வாழ்க்கை தேர்ந்தெடுத்த துறவிகளை மட்டும் குறிக்கும். இது இல்லறவியலில் குறிப்பிட்டுள்ளதால் இல்லறத்தில் வாழ்ந்தும் ஐந்து புலன்களை வென்றவர்களை பற்றி கூறப்படுகிறது. மேலும் எல்லா வசதியும் இருக்கும் பொழுது பிறர் பொருள் மீது ஆசைப்படாது இருப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால் வறுமையில் நமது மனம் தவியாய் தவிக்கும் பொழுது பிறர் பொருள் மீது ஆசை படாது இருத்தலே கடினம் அதனாலே  அப்படி ஆசைப்படாது இருத்தல் சிறந்தது. ஐந்து புலன்களை வென்றவர்கள் தனது வறுமையை நினைத்து கழிவிரக்கம் கொள்ளமாட்டார்கள் பிறர் பொருள்கள் மீதும் ஆசைப்படமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.).

மணக்குடவர் உரை
வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். இது தெளிவுடையார் செய்யா ரென்றது.

மு.வரதராசனார் உரை
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவன்மை நாணு பவர்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்

வெஃகி
வெஃகல் - veḵkal   n. வெஃகு-. 1. Excessivedesire; மிகுவிருப்பம். (பிங்.) 2. Avarice, greed;பேராசை. (சது.
வெஃகுதல் - மிகவிரும்புதல்; பிறர்பொருளைஇச்சித்தல்.

பழிப்படுவ

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

படு - (வி)படுத்துக்கொள்; விழு; கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

பழிப்படுவ - பழி விழும்

செய்யார்- காரியம் செய்ய மாட்டார்கள்

நடுவு - naṭuvu   n. id. [T. naḍumu. K.naḍuvu.] 1. Middle, that which is intermediate; இடை 2. Impartiality, uprightness; நடுவுநிலைமை நன்பல் லூழி நடுவுநின் றொழுக (பதிற்றுப்.89, 8). 3. Justice; நீதி (W.) 4. Loins or waist,especially of a woman; மாதரிடை. நடுவு துய்யன(கம்பரா. நகரப். 31).  

அன்மை - aṉmai   n. அல்-மை. 1. Reciprocal negation or difference, negation ofidentity, dist. fr. இன்மை அல்லாமை (தொல்.சொல். 25.) 2. Evil; தீமை அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு. முத்தீர். 8).

நாணுபவர் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

முழுப்பொருள்
படுபயன் என்றால் பெரிய பயன், பெரிய செல்வம். வெஃகி என்றால் பேராசைக் கொள்ளுதல் - அளவுக்கு மேலான ஆசை. ஆக எவன் ஒருவன் மிக பெரிய ஒரு செல்வத்தின் மீது ஆசைக்கொண்டு அறம் (நடுவுநிலைமை) தவறி தவறான வழியில் சென்று அப்பொருளை அடைய வேண்டும் என்று அதற்கான அறமற்ற செயல்களை செய்கிறானோ அவன் மீது பழி (குற்றம்) வந்து விழும். அதனை அவன் சுமந்தாக வேண்டும்.

ஆதலால் நடுவுநிலைமை தவறுவதால், தவறான வழியில் செல்லுவதால், செய்யக்கூடாதச் செயல்களைச் செய்வதால் வரும் பழிப் பாவங்களுக்கு அஞ்சுபவர், நாணுபவர் பெரியப் பயன்கள் (பேராசைகளுக்கு) மீது பேராசை கொண்டு தவறான செயல்களை செய்யாமாட்டார்கள்.

’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று சொல்லும் திருவள்ளுவர் ஆசைக்கொள்வதை தவறு என்று சொல்ல மாட்டார். ஆனால் பேராசை கொள்வதே தவறு என்கிறார். உயர்வான எண்ணங்கள் இருக்கலாம். அதற்கான நேர்மையான உழைப்பு இருக்க வேண்டும். நேர்மையான செயல்கள் மூலம் அதனை அறுவடை செய்யவேண்டும்.

இங்கே மற்றொன்று காண வேண்டும். ”வெஃகிப் பழிப்படுவ” என்று சொல்கிறார். பேராசையே தவறு செய்ய தூண்டுகிறது என்று பொருள். ஆதலால் பேராசை தனை அறுக்க வேண்டும்

மேலும்:
பிறர்குரிய பொருளைக் கவர்வதற்கும், நடுவு நிலைமைக்கும் என்ன தொடர்பு? வள்ளுவரைப் படிக்கும் போது, பல்வேறு குணநலன்களையும், குணக்குற்றங்களையும் அவற்றிற்கு இணையான செயல்களோடு பொருத்தி, செய்வதை வலியுறுத்துதலும், விலக்குதலை வலிந்துச் சொல்லியிருப்பதையும் காணலாம். குணநலன்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவையோ, அதேபோல்தான் குணக்குற்றங்களும்.  நடுவு நிலை நின்றவர், பிறர் பொருளை கவர்தல் பயனே தந்தாலும், அது ஒழுக்கக்கேடு என்பதையும் உணர்வதால், அதாவது ஒருபக்கமாக சிந்தியாமல், நல்லது, அல்லது இரண்டையும் ஆராய்ந்து, அச்செயலை செய்யவும், ஏன் நினைக்கவுமே நாணுவார்.

வெஃகல் என்பது மிக்கவிரும்பி கவர்தல், பேராசை கொண்டு வவ்வல் என்ற பொருளிலேயே இவ்வதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. வவ்வல், வவ்வுதல், அவ்வுதல், கவ்வுதல், இணுக்கம், பறித்தல் எல்லாமே தங்களுகுடமையில்லாத ஒன்றை தனக்குரியதாக்கிக் கொள்ள விழைதல்.

வள்ளுவர் ஆசையை விலக்கச் சொல்லவில்லை, பேராசையும் அதன்காரணமாக எவ்வழியிலேனும் தமக்குரியதாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்கிற தீக்குணத்தைக் கண்டிக்கத்தான் இவ்வதிகாரத்தைச் செய்துள்ளார்.

சூர்பனகை இராமனைக்கண்டு இச்சைகொண்டு கவர நினைத்ததும், இராவணன் சீதையழகிலே மதிமயங்கி அவளைக்கவர்ந்து சென்றதும், வாலி தன்னுடைய தம்பியின் மனையாளைக் கவர்ந்து சென்றதும், கௌரவர்கள் பாண்டவருக்குச் சொந்தமான நாட்டினை முறையற்ற வழியிலே கவர்ந்துகொண்டதும் வெஃகலின் நிகழ்வுகள்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.).

மணக்குடவர் உரை
தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

நடுவின்றி நன்பொருள் வெஃகின்

குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]

பொருள்
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை;

நடுவு - இடை; நடுவுநிலைமை; மாதரிடுப்பு; நீதி; equity, justice, impartiality.

இன்றி - iṉṟi   adv. இன்-மை. Without;இல்லாமல். தனக்கொரு பயனின்றியிருக்க (கலித். 96,30, உரை).

நன் - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வெஃகின் - வெஃகு-தல் -  veḵku-   5 v. tr. 1. To desire ardently; மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள்,176). 2. To covet; பிறர்பொருளை இச்சித்தல்.இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174).

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பொன்றி - அழியும்

குற்றமும் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

ஆங்கே - அங்கே

தரும் - ஈன்றும்

முழுப்பொருள்
நடுவு என்றால் நீதி. நீதி என்றால் அறம். நடுவின்றி என்றால் நேர்மையில்லாத, அறமில்லாத, உழைப்பில்லாத, நேர்மையான உழைப்பில்லாத என்று பொருள். 

நாம் ஒரு பொருளின் மீது விருப்பம் கொள்கிறோம் என்றால் அதன் மீது ஒரு நியாயம் வேண்டும். அப்பொருளை விரும்புவதற்கான நேர்மையான எண்ணங்களும் உழைப்பும் வேண்டும். இல்லையென்றால் அது அறமாகது. 

இங்கே திருவள்ளுவர் ஒரு பொருளை உடைமையாக்கிக்கொள்வது தவறு என்று மட்டும் சொல்லவில்லை. அறமில்லாமல் ஒரு பொருளை விரும்புவதுக் கூட தவறு என்கிறார் திருவள்ளுவர். 

அப்படி ஒருவர் நேர்மையான உழைப்பில்லாமல் நல்ல எண்ணங்கள் இல்லாமல் ஒரு பொருளை விரும்பினால் அஃது அவருடைய புகழையும் அவரது குடும்பத்தின் புகழையும் அழிக்கும். அது மட்டும் அல்லாது குற்றங்களையும் (குற்றங்கள் செய்யத் தூண்டும்) தரும் என்கிறார் திருவள்ளுவர்.


Image result for ravana sita

(Ravana Abducting Sita)

உதாரணம்:
இச்சைக்கு ராவணனே நல்ல உதாரணமாகும். சீதா மீது கொண்ட இச்சையினால் தான் அவன் எல்லா தவறுகளை செய்தால். பிறர் (ராமரின்) மனைவி சீதா என்று தெரிந்தும், பிறர் மனைவி மீது இச்சைக்கொள்வது தவறு என்று தெரிந்தும் இச்சைக்கொண்டான். அதுவே அவனை பல குற்றங்களை செய்ய வைத்தது. அதுவே அவனது அனைத்து புகழையும் (சிவ பக்தன், வீணை வித்வான், நல்ல ஆட்சியாளன் என்ற பல புகழ்கள்) அழித்தது. ஆதலால் தான் கம்பர் இராமாயணத்தில் சொல்லி இருப்பார்  "கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி எத்தனை உயர்ந்தது என்று கீழே காணவும்.

மேற்சொன்ன கம்பராமாயண வரிகளின் ஜெயமோகனின் விரிவுரை கீழே

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.

இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.


பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.

மேலும்:
இன்னா நாற்பது பாடலொன்று, “அடைக்கலம் வவ்வுதல் இன்னா” என்று பிறரிடம் அடைக்கலமாகிய பொருளைக் கவருதல் துன்பம் தரும் என்கிறது. மாவலி வானகத்தையும் வையகத்தையும் பறித்து என்ற பொருளிலே கம்பர் “திறல் மாவலி என்பான் வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்” என்பார். மாவலி என்பான் திறமுடையவந்தான் ஆனால் தேவருக்கு உரிய வானகத்தையும், மனிதருக்குரிய வையகத்தையும் அவன் முறையற்று கவர்ந்ததை “வவ்வுதல்” என்ற சொல்லிலே கம்பர் உணர்த்துகிறார்.
அபிராமி பட்டரோ உமை சிவனாரின் இடப்பாகம் பற்றியதை உணர்த்துவிதமாக இருபாடல்களில் வவ்வுதலைக் குறிக்கிறார். இக்குறள் கருத்துக்கு மாறாக இருந்தாலும், பற்றினை நல்விதமாகக் கூறுதலுக்கும் வவ்வுதல் பயனாகியுள்ளது. “வவ்வியபாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே” என்பார் பட்டர்.  அந்தாதியானதால், முந்தைய பாடலில், “மதிசய மாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே?” என்ற வினாவோடு முடித்திருப்பார்.
மற்றொரு முத்தொள்ளாயிரப்பாடல், தலைவனிடம் மயங்கி அவனிடம் மனதை பறிகொடுத்த பெண்கள் அதனால், அழகு குன்றினராம். அவ்வாறு பெண்களின்  அழகைத் திருடிகொண்டு போனமன்னன் எப்படி செங்கோல் செலுத்தும் மன்னனாக இருக்கமுடியும் என்கிறது. கவிதை நயத்தில் தலைவனை ஏற்றிச் சொன்னாலும் வவ்வுதல் என்ற சொல் “திருடலுக்கு ஒப்பானதாகவும், அது செங்கோல் ஏந்தும் தகுதியை மன்னனுக்கு அளிக்காது” என்றும் சொல்வது கவனிக்கத்தக்கது. அப்பாடல்:

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! – நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை. பிறர் உடைமை கண்ட வழிப் பொறாமையே அன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றம் என்றற்கு, இஃது அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.)

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.).

மணக்குடவர் உரை
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

குறள் 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்
[அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சிற்றின்பம் -  சிறிது நேரம் மட்டுமே நிலைக்கின்ற இன்பம்
வெஃகு - ஆசைப்படு
வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை; 
அறன் அல்ல -  அறநெறிகளுக்குப் புறம்பான செயல்களை
செய்யாரே - செய்யமாட்டார்க

மற்று -  ஓர்அசைநிலை
மற்று இன்பம்  -  சிற்றின்பத்திற்கு மாற்றான பேரின்பம் அதாவது வீடு
வேண்டுபவர் - வேண்டுபவர்கள்

முழுப்பொருள்
எண்ணி எண்ணித் திளைக்கக் கூடிய, பலநாள் நிலைத்து நிற்க கூடிய, பிறரிடம் கூறி மகிழக்கூடிய நிலையான பேரின்பத்தை, வீடு தனை வேண்டுபவர் புறம்பான எந்த செயல்களையும் செய்யாமல் அறநெறிகளுக்கு உட்பட்ட செயலகளை செய்வர். அத்தகையவர்கள் சிறிது நேரம் மட்டுமே இன்பம் பயக்கும் செயல்களை செய்யமாட்டார்கள். சிற்றின்பம் இங்கு பிறர் பொருளை கவர்வதனால் வரும் இன்பமாகும் - நிலைத்து நிற்காது. 

அறன் வலியுறுத்தல் அதிகாரத்திலும், “குறள் 39 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல” என்று சொல்லியிருப்பார் வள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை


வைவஸ்வத மனுவும் சிரத்தையும் அவனை முகமன் சொல்லி அமர்த்தினர். “உங்கள் மைந்தன் இல்லையா இங்கு?” என்றான் புதன். “அவன் வெளியே சென்றுள்ளான். உங்கள் விழைவை சொல்க!” என்றார் வைவஸ்வத மனு. “உங்கள் மகளை மணம்கொள்ள விழைகிறேன்” என்றான் புதன். வைவஸ்வத மனு “எவரும் விழையும் அழகி இவள் என்று நான் அறிவேன். இவள் கைகோரி நாளும் ஒரு தேவன் வந்து என் வாயிலை முட்டுகிறான். ஆனால் இவளை மணப்பவனுக்கு ஒரு தெரிவுமுறைமையை நான் வகுத்துள்ளேன்” என்றார். “சொல்க!” என்றான் புதன்.

“எவர் பிறிதொருவர் கூறாத பெரும்செல்வம் ஒன்றை அவளுக்கு கன்னிப்பரிசென்று அளிக்கிறார்களோ அவனுக்குரியவள் அவள்” என்றார் வைவஸ்வத மனு. இளையை நோக்கித்திரும்பி “அது எத்தகைய பரிசு?” என்றான் புதன். “இங்கு அமர்ந்திருக்கிறாள் என் தாய், அவள் உரைக்கவேண்டும் அப்பரிசு நிகரற்றதென்று” என்றாள் இளை. புதன் “அத்தகைய பரிசுடன் வருகிறேன்” என எழுந்தான்.

புதன் தன் அன்னையிடம் சென்று “நிகரற்ற பெண் பரிசு எது? அன்னையே, சொல்க!” என்றான். முதுமகளாகிவிட்டிருந்த தாரை சொன்னாள் “எந்தப் பெண்ணும் விழைவது ஒருபோதும் அறம்பிறழா மைந்தனை மட்டுமே.” புதன் அன்னையை கூர்ந்துநோக்கி நின்றான். “ஆம் மைந்தா, அன்னையர் காமுறுவது அதன்பொருட்டு மட்டுமே. நான் விழைந்தவண்ணம் பிறந்தவன் நீ. நான் எண்ணியதும் இயற்றியதும் உன்பொருட்டே.”

புதன் திரும்பிச்சென்று வைவஸ்வத மனுவின் வாயிலை முட்டினான். அதைத் திறந்து “வருக!” என்ற வைவஸ்வத மனு அவன் வெறும் கைகளை நோக்கி  குழப்பத்துடன் “அந்நிகரற்ற பரிசை கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்றார். “ஆம். அதை அக்கன்னியிடம் மட்டுமே சொல்வேன்” என்றான். தன் முன் வந்து நின்ற இளையிடம் “தேவி, ஒருபோதும் அறம் வழுவா மைந்தனொருவனை என் குருதியில் நீ பெறுவாய். அறம் காக்கும் குலப்பெருக்கு அவனிலிருந்து இம்மண்ணில் எழும். இதுவே என் பரிசு!” என்றான்.

நெஞ்சு விம்ம கைகோத்து அதில் முகம் சேர்த்து விழிநீர் உகுத்தாள் இளை. அவள் பின் வந்துநின்று அவள் அன்னை “நன்று கூறினாய்! பெண் விரும்பும் பெரும்பரிசை அளித்தாய். இவள் கைகொள்க!” என்றாள். அவன் அவள் கைகளைப்பற்றி “இச்சொற்கள் மெய்யாகுக! சந்திரகுலம் மண்ணில் எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

பரிமேலழகர் உரை
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.].

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார்; மற்றின்பம் வேண்டுபவர் - அறத்தால் வருவதும் நிலையானதும் பேரள வினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடையோர்.

இன்பத்தின் சிறுமை காலமும் அளவும் தீமையும் பற்றியது. மற்று வேறு. ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர் உரை
சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

மு.வரதராசனார் உரை
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

சாலமன் பாப்பையா உரை
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையார் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்.

வாசவனோர் ஆசைகொள வந்த பலனைஇந்தத்
தேசம்அறி யாதோ? சிவசிவா! - பேசுங்கால்
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

இதன் பொழிப்புரை ---

இந்திரன் ஒரு ஆசையை மனத்தில் கொள்ளவும், அதனால் வந்த பயனை இந்த உலகம் அறியுமே. சொல்லப்போனால், நிலையான இடப்த்தை விரும்புகின்றவர்கள், சிற்றின்பத்தை விரும்பி அறம் அல்லாத செய்களைச் செயமாட்டார்கள்.

கவுதம முனிவரின் மனைவி அகலிகை அழகில் சிறந்தவள். கற்புக்கரசி. அவளது அழகை வர்ணிக்காதவர்கள் யாருமில்லை. நாரதர் ஒருமுறை இந்திரனைக் கண்டபோது, அகலிகையின் அழகை அவனுக்கு எடுத்து உரைத்தார். அகலிகையை எப்படியாவது அடைய வேண்டும் என்று விரும்பினான் இந்திரன். பதிவிரதையான அகலிகையைச் சூழ்ச்சியின் மூலமே அடைய முடியும் என்று நினைத்து பூலோகத்துக்கு வந்தான்.

அதிகாலையில் ஆற்றில் நீராடி ஜபதபங்கள் செய்வது முனிவர்களுக்கு வழக்கம். இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கருதி, கவுதம முனிவரின் ஆசிரமம் முன்பு வந்து நடுஇரவில் சேவல் போல் கூவினான். அதிகாலைப் பொழுது  புலர்ந்து விட்டது என்றெண்ணிய கவுதம முனிவர் ஆற்றங்கரைக்குக் காலைக் கடன் கழிக்கச் சென்றார். அகலிகையும் உடன் எழுந்து தனது காலைப் பணிகளை செய்யத் தொடங்கினாள். அந் நேரத்தில் இந்திரன் கவுதம முனிவர் வேடத்தில் உள்ளே நுழைந்தான். ”ஆற்றங்கரைக்கு சென்று இவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டீர்களா?” என்று கேட்டாள்.. ”இல்லை, ஏதோ பறவையின் ஒலியை கேட்டு சேவல் என்று நினைத்து எழுந்துவிட்டேன். இன்னும் பொழுது புலரவில்லை. வா படுக்கலாம்"  என்று அருகில் அழைத்து இன்பம் கொண்டான்.

ஆற்றங்கரை சென்ற முனிவர் இருள் விடியாதது கண்டு, குழப்பம் அடைந்து, தன் ஞானப் பார்வையால் நடந்ததை அறிந்து, வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். திடுக்கிட்ட அகலிகை அருகில் இருந்த இந்திரனை பார்த்தாள். அகலிகை தலைவிரி கோலமாக முனிவரின் காலில் விழுந்து ”தவறு நேர்ந்துவிட்டது” என்று கதறினாள். இந்திரன் அஞ்சி, பூனை உரு எடுத்துப் போனான்.

இந்திரனை கோபமாக அழைத்தார் கவுதம முனிவர். "மாற்றான் மனைவியின் மீது மையல் கொண்டு செய்யத் தகாத காரியத்தைச் செய்ததால் உனது உடம்பெல்லாம் பெண் குறியாக மாறட்டும்” என்று சாபம் கொடுத்தார். அகலிகையை நோக்கி ”கட்டிய கணவனுக்கும் அயலானுக்கும் வித்தியாசம் தெரியாத நீ கல்லாக மாறுவாய்” என்று சாபமிட்டார். ”நான் தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனமே கிடையாதா” என்று கதறினாள் அகலிகை.  இராமபிரான் இவ்விடத்துக்கு வரும்போது அவர் திருப்பாதம் பட்டு விமோசனம் பெறுவாய்” என்று வெளியேறினார் கவுதம முனிவர்.

பெண்குறிகளோடு வெளியில் வர அசிங்கப்பட்டு மறைந்து வாழ்ந்தான் இந்திரன். தேவலோகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இந்திரனுக்காக கவுதம முனிவரிடம் சென்று முறையிட்டனர். சாபத்தை திரும்ப பெற இயலாது. இந்திரன், தேவகுருவிடம் சென்று விநாயக பெருமானுடைய மந்திரத்தைக் கேட்டு உபதேசம் பெற்றான்.  இந்திரன் உடலில் இருந்த பெண்குறிகள் எல்லாம் கண்களாக மாறியது. அதனால்  அவனுக்கு ஆயிரம் கண்கள் ஏற்பட்டது. ஆயிரம் கண்ணான் என்று இந்திரனுக்குப் பெயர் உண்டானது.

பின்வரும் கம்பராமாயணப் பாடல்களைக் காண்க....

மா இரு விசும்பில் கங்கை மண் மிசை இழித்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீ வினை நயந்து செய்த தேவர் கோன் தனக்குச் செங்கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி, அகலிகை ஆகும், என்றான்

பொன்னை ஏர் சடையான் கூறக் கேட்டலும் பூமின், கேள்வன்,
என்னையே! என்னையே! இவ் உலகியல் இருந்த வண்ணம்;
முன்னை ஊழ் வினையினாலோ? நடுவு ஒன்று முடிந்தது உண்டோ?
‘அன்னையே அனையாட்கு இவ்வாறு அடுத்த ஆறு அருளுக ‘என்றான்.

அவ் உரை இராமன் கூற, அறிவனும் அவனை நோக்கிச்
செவ்வியோய்! கேட்டி, மேல் நாள் செறி சுடர்க் குலிசத்து அண்ணல்,
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்வி போல் விழியினாள் தன் வனமுலை நணுகல் உற்றான்.

தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்

புக்கு, அவேளாடும் காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்.

சரம் தரு சாபம் அல்லால் தடுப்பு அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்,
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசையாய்ப் போகல் உற்றான

தீ விழி சிந்த நோக்கிச், செய்ததை உணர்ந்து, செய்ய,
தூயவன், அவனை நின்கைச் சுடுசரம் அனைய சொல்லால்,
‘ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக‘ என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம்.

எல்லையில் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
மெல்லியலாளை நோக்கி, விலை  மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி என்றான்; கரும் கல் ஆய் மருங்கு வீழ்வாள்.

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே என்பர்,
‘அழல் தரும் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக ‘என்னத்,
‘தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரத ராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி‘ என்றான்.

அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்கத்,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள் கல்லாய்.

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரின் மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

தீது இலா உதவி செய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு,
‘மாதவன் அருள் உண்டாக வழிபடு, படர் உறாதே
போது நீ அன்னை ‘என்று பொன் அடி வணங்கிப் போனான்.

அருந்தவன் உறையுள் தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர் தம்மைக் காணா விம்மலால் வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்குக் கடன் முறை பழுது உறாமல்
புரிந்த பின், காதி செம்மல், புனித மாதவனை நோக்கி.

‘அஞ்சன வண்ணத்தான் தன் அடித் துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழை இலாளை, நீ அழைத்திடுக‘ என்னக்,
கஞ்ச நாள் மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான்.

குணங்களால் உயர்ந்த வள்ளல், கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந்தவனொடும் வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார்.

வாசவன் --- இந்திரன். ஆசை --- அகலிகைமேல் கொண்ட காதல்.

சான்றோர் சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாத செயல்களைச் செய்யமாட்டார் என்பது பின்வரும் பாடலால் விளங்கும்....

சிற்றின்பம் சில்நீரது ஆயினும் அஃதுஉற்றார்
மற்றுஇன்பம் யாவையும் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில். 
---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

சிற்றின்பம் சில் நீரது ஆயினும் --- சிற்றின்பம் சிறுமை உடையதாயினும், அது உற்றார் --- அவ்வின்பத்திற்கு ஆளானோர், மற்று இன்பம் யாவையும் கை விடுப --- மற்ற எல்லா இன்பங்களையும் கைவிடுவார்கள். பேரின்பம் மா கடல் --- பேரின்பம் என்னும் பெரிய கடலிலே முற்றும் ஆடுவார் தாம் ---எப்போதும் முழுகுபவர்கள்; பார் இன்பப் பாழ் கும்பியில்  வீழ்பவோ --- உலகவின்பமாகிய நரகத்தில் வீழ்வரோ? (வீழார்)

பேரின்பம் விரும்பினோர் சிற்றின்பத்தை விரும்பார்; சிற்றின்பம் விரும்பினோர் மற்ற இன்பம் எல்லாவற்றையும் கைவிடுவர் என்பது கருத்து.     

English Meaning - As I taught a kid - Rajesh
We should not get jealous and try to snatch others items for short term happiness because it is against Integrity/Dharma. Instead of focusing on short term happiness, one should focus on attaining long term happiness i.e greatness through consistent great work

Questions that I ask to the kid
What would one person avoid doing when he wants long term happiness/ greatness? 
How will jealousy or snatching thoughts affect you ??