Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_076. Show all posts
Showing posts with label Athikaaram_076. Show all posts

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

 

குறள் 758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.

ஏறி - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

யானைப் - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம்

போர் - சண்டை; மல்யுத்தம்; இகல்; செறிந்துபொருந்துகை; குவியல்; சாணி; கதிர்வைக்கோல்களின்படப்பு; சதயநாள்; மரப்பொந்து

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
அற்றால் - தன்மை / போன்று 

கண்டற்றால் -   காணுவது போலாம் (அதனால் தமக்கு பயமும், வருத்தமுமில்லை)

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

கைத்து - கையிலுள்ளபொருள்; பொன்; செல்வம்; வெறுப்பு.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

உண்டாகச் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

செய்வான் -செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
செல்வம் தனை எப்படிச் செலவு செய்யக்கூடாது என்பதனை கூறுகிறார் திருவள்ளுவர்::
தன் கையில் சிறிது காசு / செல்வம் இருக்கிறது என்பதற்காக நாம் நினைத்தையெல்லாம் செய்யக்கூடாது. உதாரணமாக யானைகள் போரிடுவதை தரைதளத்தில் இருந்து கண்டாலும் ஒரே சண்டை தான் சற்று மேலே அமர்ந்து கண்டாலும் ஒரே சண்டை தான். 

ஆனால் தன் கையில் காசு இருப்பதற்காக செல்வத்தை செலவு செய்து (உதாரணமாக பல்லக்கில் இருவரை தூக்கிக்கொண்டு செல்ல செலவாகும் அல்லவா) ஒரு குன்றின் மேல் ஏறி யானைப் போரை காணுவதால் என்ன பயன்/இலாபம்? ஒன்றுமில்லை. செல்வம் விரையம் ஆனது தான் மிச்சம். மேலும் குன்றில் மேல் ஏறி பார்ப்பதால் அந்த யானைப்போரை முழுவதுமாக ரசிக்கவும் முடியாது. தரையில் சற்று அருகில் பாதுகாப்பாக இருந்து பார்த்தால் தான் அதன் போரை ரசிக்க முடியும். செலவு செய்து குன்றின் மேல் ஏறி பார்ப்பது வெற்று ஆணவித்தின் அறிவிப்பே. ஆதலால் செல்வத்தை அவசியமற்றதற்கு செலவு செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

எனக்கு ஒரு உதாரணம் நியாபகத்திற்கு வருகிறது. ஒரு (அமர்ந்துக்கொண்டு பாடும்) பாட்டுக் கச்சேரியை எங்கு அமர்ந்து பார்க்கலாம் என்று எனது வயலின் ஆசிரியரை கேட்டேன். அவர் சொன்ன பதில் “அன்று எல்லாம் வெட்டவெளியில் கச்சேரி நடக்கும். ஒலி பெருக்கிகள் இருக்காது. ஆதலால் முன்னர் அமர்ந்து கேட்டால் தான் நன்றாக கேட்கும். ஆனால் இன்றோ மைக் (ஒலி பெருக்கி) எல்லாம் இருக்கிறது, ஒரு சிறு அவையில் தான் கச்சேரியை கேட்கப்போகிறாய். அதனை எங்கு அமர்ந்து கெட்டாலும் ஒரே இசை தான். ஒரே அளவு ஒலி தான். அதற்கு ஏன் முன்வரிசையில் உட்கார அதிக செலவு செய்ய வேண்டும்? அதற்கெல்லாம் செலவு செய்யாதே.பின் வரிசை இருக்கையில் உட்கார்ந்து கேட்டாலே போதும். ஆனால் இதுவே ஒரு நடன நிகழ்ச்சியாக இருந்தாலோ அல்லது நாடக நிகழ்ச்சியாக இருந்தாலோ அதனை அருகில் இருந்து பார்க்கவே நன்றாக இருக்கும் (குறிப்பாக பாவனைகளை பார்க்க வேண்டும் என்றால்). ஆதலால் அவசியமெனில் மட்டும் செலவு செய்” 

இன்றைய நாட்களில் ஒரு இரண்டு மணிநேர சினிமாவை அதிக காசுகொடுத்து சொகுசு இருக்கையில் (recliner seat) பார்ப்பவர்களே நியாபகத்திற்கு வருகிறார்கள். 

ஒரு சொலவாடை உண்டு “துடைப்பகட்டைக்கு பட்டு குஞ்சம் கேக்குதா?” (அல்லது வெளக்கமாத்து-கட்டைக்கி-பட்டுக்குஞ்சம்-கேட்டுசாம்?)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். ('கைத்து உண்டாக ஒன்று செய்வான' எனக் கூட்டுக. 'ஒன்று'என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம்.குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம்.).

மணக்குடவர் உரை
குன்றின்மேல் ஏறியிருந்து யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும். தன் கையகத்து எய்திய பொருளுண்டாக ஒரு வினையை யெடுத்துக் கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை. இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினைசெய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது.

மு.வரதராசனார் உரை
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

 

குறள் 756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
உறு - மிகுதி; மிக்க; பகை; போர்; uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதிசெய்யும்பொருள்(தொல். சொல் 301).  .

பொருளும் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

உல்கு - தீர்வை, ஆயம் (வருவாய்), சுங்கவரி.

பொருளும் -பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

உல்கு பொருளும் – வர்த்தகம் மற்றும், மக்களிடமிருந்து பெறும் வரிப்பணமும்

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

ஒன்னார்த் - பகைவர்

தெறு - தெறு-தல் - teṟu-   6 v. tr. 1. To burn,scorch; சுடுதல் நீங்கிற் றெறூஉம் (குறள், 1104).2. To punish; தண்டஞ்செய்தல் கொடியோர்த்தெறுதலும் (புறநா. 29). 3. To destroy; அழித்தல் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் (கலித்.11). 4. To kill; சொல்லுதல் (பிங்.) முள்ளி னெய்தெற விழுக்கிய (மலைபடு. 301). 5. To trouble,plague; வருத்துதல் செம்முக மாத்தெறு கட்டழிய(திருக்கோ. 313). 6. To crush, bruise; நெரித்தல் (திவா.) 7. To boil down; காய்ச்சுதல். கரும்பினைத்தெற்ற கட்டியின் (காசிக. இல்ல. 3). 8. To beangry at or with; கோபித்தல் தெறலருந் கடுந்துப்பின் (மதுரைக். 32). 9. To sting, as a wasp;கொட்டுதல். கடிதாகத் தெறுதலையுடைய மிக்க குளவியினம் (பதிற்றுப். 71, 6, உரை). 10. To increase;மிகுத்தல். (பிங்.)--intr. 1. To tarry; தங்குதல் (W.) 2. To leave, forsake; நீங்குதல் பொய்ம்மைதெறுவது (திருநூற். 13).  

பொருளும் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
ஒரு நாட்டில் பொருட்செல்வம் ஈட்டக்கூடிய வழிகளை கீழ்வருமாறு கூறுகிறார் திருவள்ளுவர்:
1) மிகுதியாக உற்பத்திய செய்யப்பட்டு இயற்றிய பொருட்செல்வம் அரசுக்கு / நாட்டிற்கு சொந்தமாகும்
2) அரசு நடத்தும் தொழில்களில் இருந்து பெறப்படும் வருவாய் / இலாபம், வர்த்தகத்தில் இருந்து பெறப்படும் வரி, பொருள் போக்குவரத்தில் இருந்து பெறப்படும் சுங்கவரி
3) பகைவரை வென்று அவர்களிடம் இருந்து பெறப்படும் திறைப்பணம் 

பொய்கையாரின் இன்னிலைப் (17) பாடலொன்று, இக்குறளின் கருத்தையே இவ்வாறு கூறுகிறது,

கால்கலத்தால் சேர்பொருளும், கண்ணற்றார் தேர்பொருளும்
நாலிரண்டாற் கூடு நலப்பொருளும் – கோல்தாங்கிக்
கோடும் அரசிற்கு உரியாமே தொல்புவிக்கீழ்
ஆடும் பொருளோடு அணந்து.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உறுபொருளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள். (உறுபொருள்: வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம் - கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும் அரசனுக்குப் பொருளாம். உறுபொருள்- காவற் பொருள்.

மு.வரதராசனார் உரை
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

சாலமன் பாப்பையா உரை
வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

 

குறள் 757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

ஈன் - ஈன்(னு)-தல் - īṉ-   8 v. tr. [T. īnu, K. M.īn.] 1. To bear, bring forth, yean; கருவுயிர்த்தல் (நாலடி. 400.) 2. To produce, yield, bring intobeing; உண்டாக்குதல் நயனீன்று நன்றி பயக்கும்(குறள், 97).  

குழவி - கைக்குழந்தை; ஒருசார்விலங்கின்இளமைப்பெயர்; புல், மரம்முதலியஓரறிவுயிரின்இளமைப்பெயர்; அம்மிகல்லுரல்களில்அரைக்கும்கல்; பெருமை.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

செல்வச் - செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு

செவிலியால் - செவிலி - வளர்ப்புத்தாய்; முன்பிறந்தவள்

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

முழுப்பொருள்
அன்பே ஒருவருக்கு தாய் எனலாம். அன்பே ஆதார சக்தி. அன்பு ஈன்றெடுத்த கைக்குழந்தையே அருள் அதாவது கருணை. பிற உயிர்கள் மேல் அன்பிருந்தால் தான் அருள் பிறக்க முடியும். அருள் என்ற கைக்குழந்தையை வளர்த்தெடுத்து ஆளாக்க வல்லது பொருட்செல்வமே. ஆதலால் பொருட்செல்வம் என்பது செவிலித்தாய் (வளர்ப்புத்தாய்). வளர்ந்த அருளின் ஆற்றலால் பலருக்கு நன்கு உதவ முடியும். செல்வம் நிலையில்லாதது எனினும் செல்வத்தை முற்றிலும் நிராகரிக்காமல் அதன் அவசியத்தை அதன் வலிமையை கூறுயுள்ளார் திருவள்ளுவர். 

பொருள் இல்லை என்றால் நாம் ஒருவித கையறு நிலையில் பிறருக்கு உதவ முடியாம இருப்போம். ஆதலால் பொருள் அக்கையிறு நிலையை அறுத்து ஒருவித நிதி விடுதலையை தருகிறது. தர்சார்பு கொடுக்கிறது.

பொருள் இருப்போர்க்கே அறம் செய்தல் ஏதுவாகும் என்பதைச் சொல்லும் குறள். அரசானாலும், குடிமக்களானாலும், பொருள் ஈட்டுவதால் மட்டுமே, அவர்களின் அன்பின் காரணமாக வருங் கருணையால் பிறர்க்கு நன்மை செய்ய இயலும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“அருளொடும் அன்பொடும்” (குறள் 755)
“அருளும் அன்பும் நீக்கி’ (குறுந் 20:1)
“...........உண்ணீர்
அறியின் அருஞ்செவிலி மாண்பொருளே” (இன்னிலை 13)

பரிமேலழகர் உரை
அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும். (தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி, பொருளென்று சொல்லப்படும் செல்வத்தை யுடைய செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம். இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

குறள் 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
அருளொடும் - அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

அன்பொடும் - அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

வாராப் - இல்லாத 

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; 
ஒட்டுதல்; நட்புச்செய்தல்

புல்லார்  - தழுவாது , பகைவர் 

புரள - புரளுதல் - உருளுதல்; கழிதல்; அலைமறிதல்; நிரம்பிவழிதல்; அழுக்காதல்; நீரிற்கலத்தல்; சொற்பிறழுதல்; மிகுதல்; மாறிமாறிவருதல்; சாதல்.

விடல் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
அறம் அற்ற வழிகளில் அருளும் அன்பும் அல்லாத வழிகளில் ஈன்ற பொருளையும் செல்வத்தையும் பொருள் என கருத வேண்டாம். ஏனெனில் அத்தகைய பொருள் செல்வம் குற்றத்தினால் வந்தவை. அவை பகையை விளைவிக்கும். ஆதலால் அச்செல்வத்தை பகையென கருதி தழுவாது கழித்துவிட/நீக்கிவிட  வேண்டும். பொருள் செய்தாலும் அற வழியில் செய்தல் வேண்டும். பொருளை பெற்றுக்கொண்டாலும் அவை அறவழியில் ஈன்ற செல்வமாகவே இருக்க வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின்” (குறுந்.20:1-2)

பரிமேலழகர் உரை
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை; புல்லார் புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக. (அவற்றோடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல், அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர்போலத் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
அருளுடைமையோடும் அன்புடைமையோடும் வாராத பொருளால் வரும் ஆக்கத்தைப் பொருந்தாது போக விடுக. இது பொருள் தேடுங்கால் பிறர் வருத்தத்திற்கு உபகரியாதும் பயின்றார் மாட்டுக் காதலில்லாமலும் பொருள்தேடுதலைத் தவிர்கவென்றது.

மு.வரதராசனார் உரை
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

குறள் 759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செய்க - செய்ய வேண்டும்
செய்க - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

பொருளைச் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

செறுநர் - பகைவர்

செருக்கு - cerukku   s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.

அறுக்கும் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

எஃகு - மிக்க கூர்மை உடையதாம் (பகைவருக்கருளும் நன்னெஞ்சைப் பற்றி பாரதியும் கூறுவர்); கூர்மை; உருக்கு; ஆயுதப்பொது; வேற்படை; கத்தரிகை; கத்தி; மதிநுட்பம்; வேல்.

அதனிற் - அதனை விட ; அதை விட

கூரியது - கூர்மை - ஆயுதங்களின்கூர்; நுட்பம்; சிறப்பு; கல்லுப்பு; வெடியுப்பு.

இல் - வேறில்லை ; இல்லை

முழுப்பொருள்
பொருள், செல்வம் ஆகியவை நிலையற்றவை என்று நிலையாமை அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் அதே திருவள்ளுவர் இங்கு பொருளை ஈட்டு என்கிறார்.  ஆனால் திருவள்ளுவர் "செய்க பொருளை" என்ற ஒரு அழகான வலிமையான  வார்த்தையை கட்டளையாக பயன்படுத்துகிறார். 

ஒருவன் தன்னுடைய செயலின் மூலம் அற வழியில் பொருளை ஈட்ட வேண்டும். செயல் செய்து பொருளை ஈட்டுவாய் என்றால் அதுப்போல் பகைவரின் செருக்கை (ஆணவத்தை) அறுக்கவல்ல மிக கூர்மையான ஆயுதம் வேறு இல்லை. செயலுக்கே இங்கு மதிப்பாகும்.

செயல் என்பது மனிதனின் தீய குணங்களான சோம்பல் மறதி அழுக்காறு ஆகியவற்றை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும். செயலாற்றுபவனுக்கு செயலில் மட்டுமே கவனம் இருக்கும்.

மேலும் பொருள்/பணம் கூர்மையான ஆயுதமும் ஆகும் என்பதையும் வள்ளுவர் கூறுகிறார். நாம் ஈட்டிய பொருளினால் நமக்கு செருக்கு வந்தால் அது நம்மையே அறுத்துவிடும் என்பதையும் நினைவில் கொள்க. பொருள் தான் பிறரின் செருக்கை அறுக்க வேண்டுமே தவிர. நாம் செருக்குக் கொண்டு மற்றவர்களை காயப்படுத்தவோ ஏளனம் செய்யவோ கூடாது. ஏனெனில் “குறள் 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்”.

"அறம், பொருள், இன்பம், வீடு" என்பது மனிதன் தரிக்க வேண்டிய நான்கு வேடங்கள். அவன் தன் கடமையை (அறத்தை) செய்து, பொருளை ஈட்டினால் தான் அவனால் இன்பத்தை அனுபவிக்க முடியும், வீடுபேறு நோக்கி செல்ல முடியும். பொருள் இல்லையெனில் தன்னுடைய அறத்தையும் / கடமையையும்  ஆற்ற முடியாது  இன்பமும் பெறமுடியாது.

உங்கள் குடும்பத்தை பேணவும் நீங்கள் வழி நடத்தும் நிர்வாகத்தையும் குழுவையும் பேணவும் சீராக வழிநடத்தவும் பொருள் மிக அவசியம். அத்தியாவசியம். ஆதலால் பொருள் ஈட்டு என்கிறார் திருவள்ளுவர். 

பொருள் ஈட்டுவதை ஒரு ஆக்கசக்தியாக வைத்துக்கொண்டால் அதில் தவறில்லை. (வள்ளுவர் செய்க பொருளை என்றுதான் சொல்கிறார். மனிதனிடம் இருந்து பிடுங்கு என்று கூறவில்லை. )

பகைவரை வெல்ல பொருள் சேர்
பெரிய செல்வம் இருந்தால், பெரிய இடங்களில் இருப்பவர் நட்பு கிடைக்கும். அப்படிப்பட்ட நம்மை , நம் பகைவர்கள் (இன்றைய காலகட்டங்களில் பொறாமைக்கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள்) ஒன்றும் செய்ய மாட்டார்கள். 

கத்தி இருக்கிறதே, அது பொருள்களை வெட்டும். குணத்தை வெட்டுமா? எதிரியின் பகை உணர்ச்சியை வெட்ட  எந்தக் கத்தியைக் கொண்டு போவது? நம்மிடம் நிறைய பொருள் இருந்தால், அது எதிராளியின் செருக்கை, ஆணவத்தை அறுக்கும் என்பதால், செல்வத்தை கூரிய கத்தி என்றார் வள்ளுவர். செருக்கு என்ற குணத்தை அறுப்பதால் அது கூரிய கத்தி. 

எதிராளியின் செருக்கை அடக்க வேண்டும் என்றால் நிறைய படி, பலப் பல பட்டங்கள் வாங்கு, படை திரட்டு, என்றெல்லாம் சொல்லவில்லை. செல்வத்தைச் சேர்.  பகை ஒடுங்கும் என்கிறார். 


நன்மக்கள் தம்மக்கள். ஆதலால் அவர்களும் நம் பொருள் என்று உணர்க.
நாம் எவ்வளவு பொருள் ஈட்டிப் எதிரியின் செறுக்கை அறுக்கலாம். ஆனால் அவை எல்லாம் சிறிது காலத்திற்கு மட்டும் தான் என்பதையும் நிலைவில் கொள்க.  நமது உண்மையான பொருள் நமது பிள்ளைகளை. அவர்களை சான்றோன் ஆக்குவது நமது கடமை.


7/G ரெய்ன்போ காலனி (7/G Rainbow Colony) திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். “இனி எவனாவது கேப்பான் யேன் உன் பையன் தண்டமா இருக்கான்னு”. அந்தக் காட்சியையும், அதில் வரும் மேற்சொன்ன வசனத்தையும், “தம்பொருள் என்பதம் மக்கள்”, “செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்” திருக்குறள்களையும் தொடர்புப்படுத்திப் பார்த்தால் நமக்கான கடமைகளில் தெளிவுப் ஏற்படுவது உறுதி.




ஆனால் எவ்வளவு பொருள் சேர்த்தாலும் கீழ்க்காணுபவற்றை நினைவில் கொள்க
தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார்

மற்ற மாந்தரின் மகிழ்வும் துன்பமும் தனக்கு நேர்ந்ததுபோல் உணர்பவனே வாழும் மனிதன். மற்றையான் செத்தவனும் நிகரானவன்

நாம் வாழ்வில் செய்கின்ற செயல்களினாலே அவற்றை செய்யும்விதத்தாலே அவற்றை செய்யும் நேர்மை, உழைப்பு, தொழில் நேர்த்தி, தரம் ஆகியவற்றால் நமது சிறப்பும், பெருமையும் மாறும். நமது மதிப்பு நாம் செய்யும் தொழிலில் உள்ள நேர்மையில், உழைப்பில், நேர்த்தியில், செயல் தரத்தில் அடங்கியுள்ளது.

கலித்தொகைப் 11:2-4 பாடலொன்று, “பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்…… தருமெனப் பிரிவெண்ணி பொருள்வயிற் சென்றநங் காதலர்” என்று இக்குறளின் கருத்தையொட்டி, காதலன் பிரிந்து சென்ற நோக்கத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாம் சீவக சிந்தாமணி 497, “செய்கபொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும் எஃகுபிறி தில்லை” என்று குறளின் சொற்களை ஒட்டியே சொல்லுகிறது.

கீழே மேற்கோளாக இடப்படும் பழமொழிப்பாடல், தன்னைத்தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்கச் செயல் என்கிறது; மேலும் அப்பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப் பொருளினைக் கொடுத்தால், அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாரே உளர் என்று வினவுகிறது! வேலாற் குத்துதலைவிட, காணிப்பொருளால் குத்துவதே வலிமையானது என்று சொல்லி, “பணம் பாதாளம் வரைக்கும் பாயும்” என்ற கூற்றை அடிக்கோடிடுகிறது. இன்றைய அரசியல் மற்றும் வணிக, மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளும் இக்கருத்தையொட்டியே அமைந்திருப்பதைக் காண்கிறோமே!

தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேல்குத்தின்
காணியின் குத்தே வலிது (பழமொழி 32)

”செறுவோர் செம்மல் வாட்டலும் ...
இல்லிருந் தமைவோர்க் கில்லென் றெண்ணி” (அகநா 231.1-3)

“நண்ணார்த் தெறுதலும்
தற்செய்வான் சென்றார்த் தரூஉம்” (கார் நாற்பது 7)

மேலும்: அஷோக் உரை

"பணக்காரக் குண்டிக்குத் தடுக்குப் போடுவா” என்பர் ஊரில், செல்வந்தர்களைத் தாங்குவதைப் பார்த்து. ஆளாளே வந்து, ‘சாப்டாச்சா?’ என்பார். நல்வழியிலோ, புன் வழியிலோ செல்லும் சேர்த்தால் போதும். உலகமே கைகூப்பிப் பின்தொடரும். ஒதுக்கமாக ஒன்றுக்குப் போனால்கூட, வேட்டியை ஒதுக்கி, பிடித்துக் கொடுப்பார்கள். வயிறெரிந்து வள்ளுவர் சொல்கிறார்... 

‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்'

என்று. பொருள் தேடுங்கள், எதிரிகளின் எகத்தாளத்தை அறுத்து எறியும் கூரிய ஆயுதம் அதனை விடச் சிறந்தது வேறு ஏதும் இல்லை என்பது விளக்கம். 

“அவ்வளவு தொலைவு சென்று அவர்கள் ஈட்டும் பொருள்தான் என்ன?” என்று தரையில் அமர்ந்திருந்த மேய்ப்பன் கேட்டான். பச்சைக்கண்களும் ஒடுங்கிய கன்னமும் சுருக்கங்கள் செறிந்த முகமும் கொண்டிருந்தான். முதுமைகொண்ட சோனக வணிகன் கையில் மதுக்குவளையுடன் “எந்த வணிகமும் பொருளை எண்ணி தொடங்கப்படுவதில்லை. நேர்நோக்கில் பொருள் மட்டுமே வணிகனின் எண்ணத்தில் உள்ளது. ஆனால் பொருள் என்பதற்கே மீறல், கடந்து செல்லல் என்பது உட்பொருள். எண்ணிப்பாருங்கள், உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் பொருள் தேவைகொண்டவன் பொருள் விழைவதே இல்லை. எவராயினும் பொருள் விழைவதே பிறிதொன்றென ஆகவும் தானும் பிறரும் வகுத்த எல்லைகளிலிருந்து வெளியேறவும்தான்” என்றான்.

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் (எதற்கு இத்தனை நூல்கள்?
எழுத்தாளர் ஜெயமோகன் அறம் பொருள் இன்பம் வீடு என்று சமநிலை பேணவேண்டும் என்று வலியுருத்துபவர். ஒருவர் தேவைக்கான பொருளை கண்டிப்பாக ஈட்டியாக வேண்டும் என்று கூறுபவர். அதுவே மற்ற செயல்களை செய்ய நமக்கு தேவையான் சுதந்திரத்தை கூறுபவர். அவர் இக்கட்டுரையில் கூறியுள்ள கீழ்க்காணும் கருத்து உவப்பாக உள்ளது. நாம் ஈட்டும் பணம், சந்தானம் (நன்மக்கள். நன்மக்கட் பேறு. தம்பொருள் என்பதம் மக்கள்)  போன்றவற்றைப் போல அறிவையும் பொருளாக கருதி அதனையும் ஈட்டி செறுநர் செருக்கறுக்கும் விதமாக பயணித்தால் நாம் எவ்வளவும் முன்னேறுவோம். வாழ்வுக்கும் எவ்வளவு பொருள்.

”துளித்துளியாக மானுடம் தன் அறிவை சேர்த்து திரட்டி புறவயமாக ஒன்றாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த மானுட அறிவின் பிரம்மாண்டப் பெருக்கில் ஒரு துளியென தானும் சேர விரும்புவதைப்போல மகத்தான பிறிதொன்றுண்டா என்ன?

அன்றி, வேறு எது பொருள் உள்ள செயல்? திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து பொருளீட்டுவதா? அதை பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு செத்துத் தொலைவதா? அர்த்தமற்ற கட்டிடங்களைக் கட்டி எழுப்பி, அவற்றை வாழ்நாள் சாதனை என்று  எண்ணிக்கொள்வதா? சேர்த்து வைத்த பணத்தை வங்கிக்கணக்கில் அடிக்கடி எடுத்துப்பார்த்து மனம் மலர்வதா? என் எதிரியைவிட நான் ஒரு படி மேலாக ஆகவேண்டும் என்னும் விழைவால் இரவுபகலாக வேலைசெய்வதா? வெல்ல வெல்ல புதிய எதிரியை கண்டடைந்து காரட்டை தொடரும் குதிரைபோல நெஞ்சடைக்க வாழ்நாள் முழுக்க ஓடி களைத்து விழுந்து சாவதா? வேறெதை அர்த்தமுள்ள செயல் என்று சொல்வீர்கள்?”

மேலும்
எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஓட்டல் முதலாலியாவும் மலையாளியாகவும் நடித்த முத்துராமன் ஒரு வசனம் பேசி இருப்பார்

ஏண்டா மாது! எந்தா கொள்கை எண்டேனு அறியானோ? பேராசைப் பிடிச்சவனை பணம் கொண்டு ஜெய்க்கோ



தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான்அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம். பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது, பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை. அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது. பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு. இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார். காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.

பரிமேலழகர் உரை
பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. இது பொருளீட்டல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்.

English Meaning - As I taught a kid - Rajesh
We have studied that money, wealth, materials are not permanent. They are transient in nature. They can come and go anytime. So, one should not go behind wealth.

At the same time, in this Kural, Thiruvalluvar says that make money. But how much? Earn wealth as much as that your enemies, competitors, relatives ego is melted. There is no other sharp weapon other than money that can kill jealousy. In away it makes other humble and stay grounded. Also remember, this money has to be earned in ethical ways only.

It doesn't mean we can hurt others with our money. It doesn't mean, be pompous. Money is essential to have a balanced life and lead family. One has to do duties life and one has to do work in order to earn money. Only then, one will be able to lead a happy life.

Questions that I ask to the kid
How much wealth should you earn?

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

குறள் 754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

ஈனும் - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்
ஈனும் - இயன்று தரும்

இன்பமும் - இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

ஈனும் - இயன்று தரும்

திறன் - கூறுபாடு

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு

இன்றி - இல்லாமல்

வந்த - வருவதே

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
நேர்வழியில் அறவழியில் செயல்களின் மூலம் ஈன்று, செயலாற்றுவதாலும் அதன் விளைவுகளாலும் (செயலாற்றிய வழிகளை பற்றிய ஐயங்களும் குற்ற உணர்ச்சியும் அல்லாத) இன்பத்தையம் மகிழ்ச்சியையும் ஈன்று, செயலாற்றிய வழிகளில் குற்றமோ அல்லது தமக்கும் பிறருக்கும் இயற்கைக்கும் பொதுவாகவும் (இன்றும் என்றும்) தீமையளிக்காமல் ஈன்று வந்த பொருளே செல்வம் எனப்படும். அவற்றுக்கான வழிகளை திறம்பட ஆராய்ந்து அச்செயல்களை செய்துப் பொருள் ஈட்ட வேண்டும்.

கி.வா.ஜ-வின் ஆராய்ச்சிப் பதிப்பு காட்டும் சில இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் இங்கே!

அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் 
திறத்து வழிப்டூஉம் செய்கை போல்” என்கிறது மணிமேகலைப்  (17:3-4 பாடலொன்று.

அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்” (புறநா. 28:15-6)

நாலடியார் பாடலொன்று, “அறம் பொருள் இன்பம்” என்னும் வரிசை முறையை வைத்து, 
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் 
நடுவணதெய்த இருதலையும் எய்தும்” (நாலடி 114) என்று சொல்கிறது. 
அதாவது குற்றமில்லாது இவ்வுலகத்தே போற்றப்படும் மூன்றாகிய அறம், பொருள், இன்பமாகிய மூன்றில் நடுவண் இருக்கும் பொருள் எய்த முன்னும் பின்னுமுள்ள அறமும், இன்பமும் வந்து சேரும்.

சீவக சிந்தாமணிப் பாடல் இதே கருத்தை இன்னும் உறுதிபட இவ்வாறு கூறுகிறது: 
ஐயமில்லை இன்பம் அறனோடவையும் ஆக்கும் 
பொய்யில் பொருளே பொருள் – மற்றல்ல பிற பொருளே”. (சீவக.497)
“அப்பொருள், தன்னுங் காலைத்துன் னாதன வில்லையே” (சீவக.1923)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும். (செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல' என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.).

மணக்குடவர் உரை
அறத்தையும் தரும்: இன்பதையும் தரும்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள். இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடியபொருளாமாதலின் என்றது.

மு.வரதராசனார் உரை
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.

Thirukkural - Management - Ethical Behavior
Wealth is one of the sources of both happiness and misery. The benefits of wealth got through efforts and proper means are twofold. That sort of wealth provides the possessor with: 1) Blessings and 2) Happiness, assures Kural 754.

Wealth acquired sinless and well
Yields both virtue and happiness.

Blessings and happiness -  an outcome of blessings — are the ultimate objectives of a person's life. Let us remember Gandhi's one of the seven sins a person should avoid, “Weal% without work is a sin.” Let us not carry sin for generations.

பொருளென்னும் பொய்யா விளக்கம்

குறள் 753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111).

பொய்யா - என்றும் தவறாத; என்றும் அணையாத

விளக்கம்  -  தெளிவானபொருள்; தெளிவு; ஒளி; சந்திரகலை; மோதிரம்; புகழ்; விசாரணை; நீதிமன்றம்; அதிகம்; விளக்கு 

இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

அறுக்கும் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

எண்ணிய - எண்ணு - eṇṇu   III. v. t. think, consider, suppose, நினை; 2. intend, resolve, கருது; 3. conjecture, guess, உத்தேசி; 4. esteem, honour, respect, மதி; 5. be elated, proud, இறுமா; 6. count, number, கணக்கிடு; 7. set a price upon, value, விலைமதி; 8. enjoy, அனுபவி.

தேயத்துச் - தேயம் - நாடு; இடம்; உடல்; பொன்; பொருள்; களவு; அழகு; புகழ்; அறிவு; பெருமை; வீரியம்

சென்று - செல்லும்  

முழுப்பொருள்
செல்வம் என்றெனப்படுவது என்றும் தவறாத (அணையாத) நந்தா (பொய்யா) விளக்கினை போன்றது. ஏனெனில் நாம் நினைத்து செலுத்துகின்ற இடத்தில் அங்கு உள்ள துன்பம் என்னும் இருளை நீக்கும் தன்மை பெற்றதாகும். ஆதலால் பொருளுக்கும் மதிப்பு உண்டு. ஆனால் அது இருளை போக்கும் வகையில் பயனுற செலுத்த வேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை
பொருளென்னும் மெய்யாகிய ஒளி எண்ணப்பட்ட தேசமெல்லாவற்றினுஞ் சென்று பகையென்னும் இருளை அறுக்கும். இது, பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொருளுடையனானால் தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர்

குறள் 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு.
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
இல்லாரை  - பொருள் இல்லாதவர்
எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.
எள்ளுவர்  - இகழ்வார், கீழே தள்ளுவார்கள்
செல்வரை - பொருட்செல்வம் உள்ளவரை
எல்லாரும் - எல்லோரும், எல்லா மக்களும்
செய்வர் - செய்வார்கள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
சிறப்புச்செய்தல் - ஒப்பனைசெய்தல்; போற்றுதல்; விழாக்கொண்டாடுதல்.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

முழுப்பொருள்
இக்குறளுக்கு எல்லா உரைகளும் சொல்லும் பொருள் பொருள்/பணம்/செல்வம் இல்லாதவர்களை இவ்வுலகம் இகழும், கீழே தள்ளும். ஆனால் பணம் உள்ளவர்களை போற்றும். மேலோட்டமாக பார்த்தால் இதை சட்டென்று ஏற்றுக்கொள்ளத் தூண்டும். ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்தால் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. உதாரணமாக, ஊரில் உள்ள பணம் படைத்தவர்களை எல்லோரும் போற்றுவர். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு அயோக்கியர் என்று தெரிந்தால் அவர் செல்வந்தவர்களாக இருந்தாலும் அவரை நாம் இகழ்வோம். அதே போல ஒருவர் ஏழ்மை நிலையில் வாழலாம். ஆனால் அவரிடம் பேசி அவருடைய நற்பண்புகளையும் அப்படிப்பட்ட ஏழ்மையிலும் அவர் உழைப்பிலும் நேர்மையிலும் அன்பிலும் தவறாதவர் என்று அறிந்தால் எல்லோரும் அவரை போற்றுவர். ஆதலால் செல்வம் என்பது வெறும் பணம் ஆகாது.

பொருள் என்ற சொல்லுக்கு உண்மை, செயல், மெய்மை, நன்மதிப்பு, அறிவு, கொள்கை, அறம், வீடுபேறு, பொன் என்று பலவற்றை அர்த்தமாக கூறலாம். ஆதலால் இப்பொருள்களை இல்லாதவரை எல்லோரும் இகழ்வர். இப்பொருள்களை உள்ளவரை எல்லோரும் சிறப்பு செய்வர்.

சிறப்பு என்னும் சொல்லிற்கு பகட்டு என்ற பொருளும் உண்டு. அவ்வாறு எடுத்துக்கொண்டால் இக்குறளின் பொருள் ->  பொருள் (பணம்) இல்லை என்றால் எல்லோரும் முகத்து நேரே மட்டும் தான் இகழ்வார்கள். ஆனால் தீயவழியில் செல்வம் ஈட்டியவரை நன்மதிப்பு இல்லாத செல்வந்தரை எல்லோரும் பகட்டு செய்வர். அதாவது பெருமை செய்வது போன்று ஒப்பனை செய்வர். புறம் பேசுவர்.  அது இன்னும் கேவலம்.

கி.வா.ஜ-வின் ஆராய்ச்சிப் பதிப்பிலே பல இலக்கியப் பாடல்களில் ஒத்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதை சுட்டியுள்ளார். நாலடியார், அப்பர் தேவாரம், கம்ப இராமாயணம், பழமமொழி என்று பல இலக்கிய மேற்கோள்கள் இருந்தும், முற்றுக் கருத்தையும் கூறும், கீழ்வரும் பழமொழிப் பாடல் கவனிக்கத்தக்கது, படிக்கும் வழியே பொருள் விளங்க எழுதப்பட்ட பாடல்.

முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல் (பழமொழி 59)

(முட்டின்றி ஒருவர் – உச்சமிது என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகுதியாக, குறைவின்றி;
அட்டு இற்று – சமைக்கப் பட்ட உணவு தீருமட்டும்;
கெட்டார்க்கு – செல்வமிழந்து வறுமையுற்றவர்க்கு;
நட்டார் – நண்பர்கள்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இலாஅர்க் கில்லைத் தமர்” (நாலடி 283)

“வாழாதார்க் கில்லைத் தமர்” (நாலடி 290)

“மாடு தானது இல்லெனின் மானுடர்
பாடு தான்செல்வா ரில்லை” (அப்பர்.கொண்டீச்சரம் 3)

“மறுமை கண்டமெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்
வெறுமை கண்டபின் யாவரும் யாரென விரும்பார்” (கம்ப.வருணனை.14)

“அருளுடைய யாரும்மற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை” (பழமொழி 269)

“உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே - வண்டாய்த்
திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்” (நாலடி 284)

“முட்டின் றொருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்” (பழமொழி 59)

“பொருள்கை யுண்டாய்ச் செல்லக் காணின்
போற்றியென் றேற்றெழுவர்
இருள்கொள் துன்பத் தின்மை காணின்
என்னேஎன் பாரும் இல்லை” (திருவாய். 9.1:3)

“செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகல மாய வெல்லாம்
நல்கூர்ந்தார்க் கில்லை சுற்றம் என்றுநுண் ணுசுப்பு நைய
ஒல்கிப்போய் மாடம் சேர்ந்தா ரொருதடங் குடங்கைக் கண்ணார்” (சீவக.2535)

“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே” (ஆதி உலா.136)

பரிமேலழகர் உரை
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர். இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

சாலமன் பாப்பையா உரை
பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

குறள் 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்லது இல்லை பொருள்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொருள்சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

அல்லவரைப் -  இல்லாதவரை (மதிக்கத்தகாதவர்)

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

ஆக - ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

பொருளாகச் செய்யும் -  ஓர் பொருட்டாக (மதிக்கதக்க) கருதச் செய்ய தக்க

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அல்லது - தீவினை; தவிர

பொருள் அல்லது - வல்லமை பொருளுக்கு (பணம், நிலம், பொன் முதலியவை) அன்றி

இல்லை இருக்காது, தங்காது

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

இல்லை பொருள் - வேறு ஒன்றுக்கும் இல்லை

முழுப்பொருள்
ஒருவர் எத்தகைய தளத்திலும் (அறிவு, அறம், திறமை) மதிக்கதகாதவராக இருப்பார். ஆனால் அத்தகைய சிலரை இவ்வுலகில் மக்கள் மதிப்பர். அதற்கு காரணம் அவர்களிடம் உள்ள பொருட்செல்வம் காரணமாக இருக்கும். ஆக ஒருவரை மதிக்க செய்யக்கூடிய வல்லமை பொருள் (பணம், நிலம், பொன்) அன்றி வேறு எதுவுமில்லை. ஆதலால் பொருட்செல்வமும் மதிக்கத்தக்கதே. 

பொதுவாக ஆன்மீக வழியிலே வாழ விருப்பமுடையோரில் சிலரும், ஆன்மீகத் துறையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோரில் சிலரும், பொருட் செல்வத்தை அலட்சியம் செய்வதும், அவ்வாறே பேசுவதும் உண்டு. அதன் விளைவாக அத்தகையவர்கள் வாழ்வில் தாழ்வு அடைகிறார்கள். அவர்கள் முயற்சியில் வெற்றிக் காண முடியாமல் தோல்வியடைகிறார்கள். இந்த நிலைமையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆழ்ந்தச் சிந்தனையோ அனுபவ அறிவோ இல்லாதவர்கள் ஒரு தலைப்பட்சமாகப் பொருட் செல்வத்தை அலட்சியம் செய்யும் கருத்தை மாற்றி, ஆன்மீக வாழ்விற்குக் கூட பொருட்செல்வம் எவ்வளவு அடிப்படைத் தேவை என்பதை நடுநின்று ஆராய்ந்து கூறியுள்ளார் திருவள்ளுவர்.

ஒரு குறிப்பிட்ட (தேவையான) அளவு கையில் பொருள் இல்லையென்றால் அந்நபர்க்கு எதிர்மறை எண்ணங்கள் வர வாய்ப்புகள் அதிகம் ஏனெனில் அறம் பொருள் இன்பம் என்னும் சமநிலை குலைந்துள்ளது. (சோம்பல் உண்டாக கூட வாய்ப்புகள் அதிகம்).  கையில் பணம் இல்லாமல் ஒருவர் ஓயாது எதிர்மறை எண்ணங்களை சந்திக்க நேரிட்டால் அவருக்கு வாழ்வே சூன்யமாகக்கூடத் தோன்றக் கூடும். (உதாரணமாக ஒருவர் நன்கு சம்பாதித்துவிட்டோ அல்லது நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டோ, சில காலம் கையில் காசு இல்லாமல் ஒரு கையறு நிலையில் இருக்கும்பொழுது அவர் படும் எதிர்மறை எண்ணங்கள் ஏராளம்). அத்தகையவர் ஏதோ ஒரு வேலையில் உழைத்து தனது தேவைக்கு ஏற்ற வருவாயை ஈட்டுவார் என்றால் அவருக்கு இந்த எதிர்மறை எண்ணங்கள் குறைவாக வரக்கூடும். அவர் நல்ல ஒரு வேலையில் அல்லது அவருக்கு பிடித்த ஒரு வேலையில் உழைந்த்து தான் நினைக்கும் சம்பாத்தியத்தை ஈட்டினால் நேர்மறை எண்ணங்கள் வர வாய்ப்புகள் அதிகம். பொருள் இல்லாத சமயம் சமநிலை குலையும். அமைதி குறையும். அதுவே தேவையான அளவு பொருளை உழைத்து(/அறம் செய்து) ஈட்டினால் இன்பம் கிட்டும்.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்னும் வாக்கு, உறுதியான நாடும், அதைக் காக்கின்ற அரண் இருந்தாலும், பொருள் ஈட்டமும் தேவை என்பதைச் சொல்லும். தனிமனிதருக்கும், நாடு என்கிற ஒருங்கிணைந்த அமைப்புக்கும் இது பொருந்தும்.

கலித்தொகைப் பாடல் (14:10), “பொருளல்லால் பொருளும் உண்டோ” என்று இக்குறளின் கருத்தை ஒட்டியே வினவுகிறது.

வென்றி ஆக்கலும் மேதக வாக்கலும், 
அன்றி யும்கல்வி யோடழ காக்கலும்
குன்றி னார்களை குன்றென வாக்கலும்
பொன்றும் சாகத்தி னாய்பொருள் செய்யுமே” – என்கிறது சீவக சிந்தாமணிப் 1922 பாடல் எளிதாக எல்லோருக்கும் புரியும்படியாக.

”குலம்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்..........
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ” (வளையாபதி 751)

“அவ்வளவு தொலைவு சென்று அவர்கள் ஈட்டும் பொருள்தான் என்ன?” என்று தரையில் அமர்ந்திருந்த மேய்ப்பன் கேட்டான். பச்சைக்கண்களும் ஒடுங்கிய கன்னமும் சுருக்கங்கள் செறிந்த முகமும் கொண்டிருந்தான். முதுமைகொண்ட சோனக வணிகன் கையில் மதுக்குவளையுடன் “எந்த வணிகமும் பொருளை எண்ணி தொடங்கப்படுவதில்லை. நேர்நோக்கில் பொருள் மட்டுமே வணிகனின் எண்ணத்தில் உள்ளது. ஆனால் பொருள் என்பதற்கே மீறல், கடந்து செல்லல் என்பது உட்பொருள். எண்ணிப்பாருங்கள், உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் பொருள் தேவைகொண்டவன் பொருள் விழைவதே இல்லை. எவராயினும் பொருள் விழைவதே பிறிதொன்றென ஆகவும் தானும் பிறரும் வகுத்த எல்லைகளிலிருந்து வெளியேறவும்தான்” என்றான்.

மேலும்: கோவை ஞானி
ஒரு பொருட்டாக மதிப்பதற்கில்லாத தீயவரிடமும் செல்வம் சேர்ந்துவிடுகிறது. அப்பொருள் எதையும் சாதிக்கத்தக்க ஆற்றலுடையதாகவும் மாறிவிட்டது. இத்தகையவன் செல்வத்தைப் பிடித்த நோய் - பேய். செல்வச் சேர்க்கை, சமுதாயத்தைப் பிடித்தநோய் - பேய். செலவச் சேர்க்கையே ஒருவனைத் தீயவனாக்கிவிடுகிறது. மதிப்பற்றவனையும் மதிக்கத்தக்கவனாக்கிவிடுகிறது. நற்குணம் முதலியவை அவனுக்கு அலங்காரமாக்கப்படுகின்றன. இவ்வாறு வள்ளுவர் கருதுகிறார்.

வறுமையும் மனிதனைக் கெடுக்கிறது. செல்வமும் கெடுக்கிறது. எந்நிலையில் என்பது பற்றிய கருத்தும் இல்லை. வறுமையால் கெடுவதைக் குறிப்பிடுவர், செல்வத்தால் கெடுவதைக் குறிப்பிடவில்லை. வறுமை நிலையிலும் நற்குணத்தை முயன்றால் காத்துக்கொள்ள முடியும். மனித இயல்புக்கு அத்துனையாற்றல் வேண்டும். அதுபோல ஏற்கனவே தீயவனிடம் சேரும் செல்வம் தான் நோயாகிறது. பேயாகிறது. எனவே, தீக்குணமே வித்து. தீமை, விளைவே மனித இயல்புக்கே முதன்மை தருவது வள்ளுவர் சிந்தனைப் போக்கு.

எழுத்தாளர் ஜெயமோகன் மாயை என்ற கட்டுரையில் உலகியல் பொய் அல்ல. அதற்கு ஓர் இடம் உண்டு என்று ஆழமாக கூறுகிறார்.
உலகியல் செயல்பாடுகள் பொருளற்றவையா? அவ்வப்போது நமக்குத் தோன்றுவது அது. நமது பெரும்பாலான மனநிறைவுகள் மகிழ்ச்சிகளும் உலகச் செயல்பாடுகளில்தான் உள்ளன. ஒரு நல்ல வேலை கிடைத்தால், பணம் கிடைத்தால், நல்ல பொருள் வாங்கினால் உரியவர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் மகிழ்கிறோம். அம்மகிழ்ச்சி பொய்யானதா என்ன? அவ்வண்ணம் எண்ணியது நிகழாத போது இவை அனைத்தும் பொய் என எண்ணுவோம் எனில் அது நமது உளச்சோர்வுக்கான ஒரு காரணத்தை நாம் கண்டுபிடிப்பது தவிர மெய்யானதல்ல. மகிழ்ச்சி உண்மை, துயரம் மாயை என எண்ணுவீர்கள் என்றால் அது எப்படிப்பட்ட மடமை. உலகியல் என்பது பொய் என்று சொல்லவேண்டும் என்றால் அதன் மகிழ்ச்சிகளும் பொய் என உண்மையாகவே உணரும் மனநிலை இருக்கவேண்டும்.

பாரதி ஒருவேதாந்தியாக நின்று சொன்னதுதான் இது. இவ்வுலகத்திலுள்ள இன்பங்கள், கடமைகள், இலக்குகள் எவையும் பொய்யானவை அல்ல. அவற்றைத் துறந்துவிட்டு நாம் இங்கு வாழவும் இயலாது. உறவுகளும் கடமைகளும் தவிர்க்கக்கூடியவை அல்ல. ஆனால் அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்திருப்பதற்கு இத்தகைய சில தத்துவத் தெளிவுகள் பயன்படும். உலகியல் இலக்குகள் முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவு. ஆனால் அவை  மட்டுமே முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவின்மை.

அது ஒரு பொருளுக்கு அதற்கு தகுதியில்லாத பல மடங்கு விலை அளிப்பது போல. நூறு ரூபாய் மதிப்புள்ள சட்டையை நூறு ரூபாய்க்கு வாங்குவதென்பது பொருளுள்ள செயல். முழு வாழ்க்கையையும்  கொடுத்து அந்த சட்டையை ஒருவர் வாங்கினாரென்றால் அது அபத்தமானது. உலகியல் வாழ்க்கைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே அளிப்பவர் உலகியல் வாழ்க்கை பொருளற்றது என்ற இடத்துக்கு சென்று சேர்வதில்லை. அது அளிக்கும் இன்பங்கள் இவ்வளவுதான் என்பதை உணர்பவர்கள் அது அளிக்கும் துன்பமும் அவ்வளவுதான் என்பதை வகுத்துக்கொள்ள முடியும்.

உங்கள் உறவுகளில் ஒரு நன்று நடந்தால் அது முழு வாழ்க்கையின் வெற்றி என்று நீங்கள் துள்ளிக் கொண்டாடுவீர்கள் என்றால் உங்கள் உறவுகளில் ஒரு தீது நடந்தால் முழு வாழ்க்கையும் அழிந்துவிட்டதென்ற பெருந்துயரை அடைவீர்கள். முழு வாழ்க்கையின் அர்த்தமே உலகியல் சார்ந்ததென்று எண்ணுவீர்கள் என்றால் உலகியலில் அடையும் தோல்வி முழு வாழ்க்கையையும் பொருளற்றதாக்கிவிடும் என்றும் அறிவீர்கள்.

உலகியல் என்பது என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. அது மனமயக்கல்ல பொய்யல்ல.  மாயை அல்ல. இங்கு நாம் உடல்கொண்டு இருப்பதனாலேயே வேறு வழியில்லாமலேயே அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம்.  உணவுண்டால் தான் பசி தீருமே ஒழிய எந்த தத்துவத்தை வைத்தும் பசியை தீர்க்க முடியாது. பொருளீட்டினால் தான் வாழ்வே ஒழிய உள எழுச்சிகளைக்கொண்டு வாழ்ந்துவிட முடியாது. உணவுக்கும் உலகப்பொருளுக்கும் உகந்ததை இயற்றுவது எவ்வகையிலும் பொய்யல்ல. தேவையற்றதல்ல.

ஆனால் அதற்கப்பால் நமக்குரிய அகக்களங்கள் வேறு .நாம்  இங்கு ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன. நாம் அடையவேண்டிய நுண்ணிய இன்பங்கள் ,ஆழ்ந்த நிறைவுகள் பல உள்ளன. நமக்குள் அவற்றை நிகழ்த்திக்கொள்வதற்கு உரிய புறத்தை உருவாக்குவதே உலகியலில் நாம் செய்யவேண்டியது. நமது தெய்வத்தை நிலை நிறுத்தும் கல்பீடம் இது என்று கொள்க. இங்கிவற்றை இயற்றும்போது அகத்தை நம்மை ஆக்கிக்கொள்வதற்கான சில நிபந்தனைகளை நிறைவேற்றுகிறோம்.

ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை.  உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும் பூசையையும் கொடுப்போம். தலை கொடுக்க தகைமை கொண்ட பெருந்தெய்வம் நமக்குள் நமக்காக காத்திருக்கிறது.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
மனித சமுதாயத்தின் நலத்திற்கும், வளத்திற்கும் எந்த வகையிலும் பயனில்லாத அல்லது மதிப்பேயில்லாத ஒருவரை, பலரும் மதிக்கச் செய்வது பொருட்செல்வமாகும். 

எந்த இடத்திலும், எவராலும் ஒரு மனிதனை மதிக்கும் படி செய்வது பொருட் செல்வமல்லாது மற்றது ஏதுமில்லை. பொருட் செல்வமின்றி வேறு ஒரு பொருளுமில்லை என்று தெளிவுரை கூறுகிறது இந்தக் குறள்.

பொதுவாக ஆன்மீக வழியிலே வாழ விருப்பமுடையோரில் சிலரும், ஆன்மீகத் துறையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோரில் சிலரும், பொருட் செல்வத்தை அலட்சியம் செய்வதும், அவ்வாறே பேசுவதும் உண்டு. அதன் விளைவாக அத்தகையவர்கள் வாழ்வில் தாழ்வு அடைகிறார்கள். அவர்கள் முயற்சியில் வெற்றி காண முடியாமல் தோல்வியடைகிறார்கள். இந்த நிலைமையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆழ்ந்த சிந்தனையோ அனுபவ அறிவோ இல்லாதவர்கள் ஒரு தலைப்பட்சமாக பொருட் செல்வத்தை அலட்சியம் செய்யும் கருத்தை மாற்றி, ஆன்மீக வாழ்விற்குக் கூட பொருட்செல்வம் எவ்வளவு அடிப்படைத் தேவை என்பதை நடுநின்று ஆராய்ந்து கண்ட தெளிவை உலக மக்களுக்குப் பொருள் செயல்வகை என்ற அதிகாரத்தில் வரும் 10 குறட்பாக்கள் மூலம் பல கோணங்களில் விளக்கிக் கூறுகிறார் திருவள்ளுவர். 

அதிகாரத்தில் அடுத்துவரும் குறள்கள் இரண்டையும் நினைவிற் கொள்வோம்.

மேலும்: அஷோக் 

தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான். அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம். பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது, பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை. அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது. பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு. இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார். காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.

பரிமேலழகர் உரை
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. 
விளக்கம் (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார். இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற் சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருள் அல்லவரை-பிறரால் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும்; பொருளாகச் செய்யும் பொருள் அல்லது-மதிக்கப்படச் செய்யும் செல்வத்தையல்லாமல்; பொருள் இல்லை-சிறந்த பொருளொன்று இவ்வுலகத்தில் இல்லை.

மதிக்கப்படாதவர் கல்லாதார், இழிதொழிலார், உறுப்பறையர், ஒழுக்கமில்லார், நோயாளியர், இளஞ்சிறார் முதலியோர். மதிக்கப்படுவாராகச் செய்தலாவது கற்றோரும் அரசனுட்பட்ட அதிகாரிகளும் அவருதவியை நாடச்செய்தல். இழிவு சிறப்பும்மை தொக்கது. இதில் வந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை. பொருட்பின்வருநிலை வரையறைப்பட்டது.

மு. வரதராசன் உரை
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது. 

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்

English Meaning - As I taught a kid - Rajesh
On a spiritual sense, we have learnt that money is not the ultimate and money/wealth should not be the ultimate desire of life.
This kural says that, a person who doesn't have money would be considered significant in the society when he earns sufficient money for himself (and his family). And there is no other comparable thing like money which can given such a significance to him in the society. It means that money is essential in the society. Money is essential to have a balanced life and lead family. One has to do duties life and one has to do work in order to earn money ethically. Only then, one will be able to lead a happy life.

Questions that I ask to the kid
Why should we make money?
What are the advantages of money?

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு

குறள் 760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள்
ஒண்பொருள் - தன்னை வருத்தித் தேடிய/ ஈட்டிய செல்வம்
ஒண் - ஒண்மை நன்மை அல்லது ஒழுங்கு

காழ்ப்பு -> உறைப்பு; வயிரம்; மனவயிரம்; தழும்பு; சாரம்.
காழ்த்தல் -> முற்றுதல்; மனவயிரங்கொள்ளுதல்; அளவுகடந்துமிகுதல்; உறைத்தல்.
காழ்ப்பு -> முதிர்வு. அது இங்கு மிகுதியைக் குறித்தது.

இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.
இயற்றியார்க்கு  -> செல்வத்தை ஈட்டியவர்க்கு.

ஏனை  -> ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.

ஏனை இரண்டும் -> அறம், பொருள், இன்பம் (காதல்) - மூன்றும் முப்பொருள் அல்லது முப்பால் எனப்படுவதால், முதலில் ஒண் பொருள் என்று பொருளை குறிப்பிட்டதால், இங்கு ஏனை இரண்டும் என்று அறம், இன்பம் என சொல்லப்படுகிறது.

ஒருங்கு -> ஒரு சேர (ஒன்றாக / ஒருங்கே / ஒருகாலத்திலே ) எளிதாய்க் கிட்டும்.

எண்பொருள் ->  விளைவு  / விளைவாக.

முழுப் பொருள்
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு : 
நல்வழியில் நெறியாக வரும் செல்வத்தை நிரம்ப (பெரும் பொருள்) ஈட்டியவர்க்கு/படைத்தார்க்கு.

ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள்:
மற்ற அறனும் இன்பமும் ஒரு சேர எளிதாய்க் கிட்டும்.

நல்வழியில் நெறியாக வரும் செல்வத்தை நிரம்ப (பெரும் பொருள்) ஈட்டியவர்க்கு -> விளைவாக -> மற்ற அறனும் இன்பமும் ஒரு சேர எளிதாய்க் கிட்டும்.

---------------------------------------------------------------------------------------------------------

ஒண்மை நன்மை அல்லது ஒழுங்கு. காழ்ப்பு முதிர்வு. அது இங்கு மிகுதியைக் குறித்தது. அறம் பொருளின்பம் மூன்றும் முப்பொருள் அல்லது முப்பால் எனப்படுவதால், அறவின்பங்களை 'ஏனையிரண்டும்' என்றார். அறமும் இன்பமும் பொருளின் பயனாதலாலும், நல்வழியில் வந்த பெரும் பொருள் அவற்றைத் தப்பாது பயக்குமாதலாலும், அதுவும் எளிதாய் ஒருங்கு நிகழுமாதலாலும், 'ஒண்பொருள்' என்றும், 'எண்பொருள் ஏனையிரண்டு மொருங்கு' என்றும், கூறினார். இந்நான்கு குறளாலும் பொருளின் பயன் கூறப்பட்டது.

"வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் 
நடுவண தெய்த விருதலையு மெய்தும் 
நடுவண தெய்தாதா னெய்தும் உலைப்பெய் 
தடுவது போலுந் துயர். "
(நாலடியார், 114)

---------------------------------------------------------------------------------------------------------

இங்கு நான் உதாரணமாக எதை சொல்வது என்று சிந்திக்கையில் எனக்கு சட்டென்று நினைவிற்கு வருபவர்கள் சில தொழிலதிபர்கள் (டாடா, பில் கேட்ஸ், தியாகராச செட்டியார்). எனக்கு நடிகர் ரஜினிகாந்தும் நினைவுக்கு வந்தார்.

ஒப்புமை
“அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்” (புறநா. 28:15-6)

“வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் 
நடுவணதெய்த இருதலையும் எய்தும்” (நாலடி 114) 

“ஐயமில்லை இன்பம் அறனோடவையும் ஆக்கும் 
பொய்யில் பொருளே பொருள் – மற்றல்ல பிற பொருளே”. (சீவக.497)
“அப்பொருள், தன்னுங் காலைத்துன் னாதன வில்லையே” (சீவக.1923)

பரிமேலழகர் உரை
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தாரக்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள் - மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம். (காழ்த்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள'¢ என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு ஒழிந்த அறமும் காமமுமாகிய பொருளிரண்டும் ஒருங்கே எளியபொருளாக வெய்தலாம்.

மு.வரதராசனார் உரை
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.