குறள் 759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
ஒருவன் தன்னுடைய செயலின் மூலம் அற வழியில் பொருளை ஈட்ட வேண்டும். செயல் செய்து பொருளை ஈட்டுவாய் என்றால் அதுப்போல் பகைவரின் செருக்கை (ஆணவத்தை) அறுக்கவல்ல மிக கூர்மையான ஆயுதம் வேறு இல்லை. செயலுக்கே இங்கு மதிப்பாகும்.
செயல் என்பது மனிதனின் தீய குணங்களான சோம்பல் மறதி அழுக்காறு ஆகியவற்றை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும். செயலாற்றுபவனுக்கு செயலில் மட்டுமே கவனம் இருக்கும்.
மேலும் பொருள்/பணம் கூர்மையான ஆயுதமும் ஆகும் என்பதையும் வள்ளுவர் கூறுகிறார். நாம் ஈட்டிய பொருளினால் நமக்கு செருக்கு வந்தால் அது நம்மையே அறுத்துவிடும் என்பதையும் நினைவில் கொள்க. பொருள் தான் பிறரின் செருக்கை அறுக்க வேண்டுமே தவிர. நாம் செருக்குக் கொண்டு மற்றவர்களை காயப்படுத்தவோ ஏளனம் செய்யவோ கூடாது. ஏனெனில் “குறள் 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்”.
பொருள் ஈட்டுவதை ஒரு ஆக்கசக்தியாக வைத்துக்கொண்டால் அதில் தவறில்லை. (வள்ளுவர் செய்க பொருளை என்றுதான் சொல்கிறார். மனிதனிடம் இருந்து பிடுங்கு என்று கூறவில்லை. )
பகைவரை வெல்ல பொருள் சேர்
கலித்தொகைப் 11:2-4 பாடலொன்று, “பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்…… தருமெனப் பிரிவெண்ணி பொருள்வயிற் சென்றநங் காதலர்” என்று இக்குறளின் கருத்தையொட்டி, காதலன் பிரிந்து சென்ற நோக்கத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாம் சீவக சிந்தாமணி 497, “செய்கபொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும் எஃகுபிறி தில்லை” என்று குறளின் சொற்களை ஒட்டியே சொல்லுகிறது.
கீழே மேற்கோளாக இடப்படும் பழமொழிப்பாடல், தன்னைத்தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்கச் செயல் என்கிறது; மேலும் அப்பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப் பொருளினைக் கொடுத்தால், அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாரே உளர் என்று வினவுகிறது! வேலாற் குத்துதலைவிட, காணிப்பொருளால் குத்துவதே வலிமையானது என்று சொல்லி, “பணம் பாதாளம் வரைக்கும் பாயும்” என்ற கூற்றை அடிக்கோடிடுகிறது. இன்றைய அரசியல் மற்றும் வணிக, மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளும் இக்கருத்தையொட்டியே அமைந்திருப்பதைக் காண்கிறோமே!
தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேல்குத்தின்
காணியின் குத்தே வலிது (பழமொழி 32)
”செறுவோர் செம்மல் வாட்டலும் ...
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
செய்க - செய்ய வேண்டும்
செய்க - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
பொருளைச் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
செறுநர் - பகைவர்
செருக்கு - cerukku s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.
அறுக்கும் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
எஃகு - மிக்க கூர்மை உடையதாம் (பகைவருக்கருளும் நன்னெஞ்சைப் பற்றி பாரதியும் கூறுவர்); கூர்மை; உருக்கு; ஆயுதப்பொது; வேற்படை; கத்தரிகை; கத்தி; மதிநுட்பம்; வேல்.
அதனிற் - அதனை விட ; அதை விட
கூரியது - கூர்மை - ஆயுதங்களின்கூர்; நுட்பம்; சிறப்பு; கல்லுப்பு; வெடியுப்பு.
இல் - வேறில்லை ; இல்லை
முழுப்பொருள்
பொருள், செல்வம் ஆகியவை நிலையற்றவை என்று நிலையாமை அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் அதே திருவள்ளுவர் இங்கு பொருளை ஈட்டு என்கிறார். ஆனால் திருவள்ளுவர் "செய்க பொருளை" என்ற ஒரு அழகான வலிமையான வார்த்தையை கட்டளையாக பயன்படுத்துகிறார்.
செய்க - செய்ய வேண்டும்
செய்க - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
பொருளைச் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
செறுநர் - பகைவர்
செருக்கு - cerukku s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.
அறுக்கும் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
அதனிற் - அதனை விட ; அதை விட
கூரியது - கூர்மை - ஆயுதங்களின்கூர்; நுட்பம்; சிறப்பு; கல்லுப்பு; வெடியுப்பு.
இல் - வேறில்லை ; இல்லை
முழுப்பொருள்
பொருள், செல்வம் ஆகியவை நிலையற்றவை என்று நிலையாமை அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் அதே திருவள்ளுவர் இங்கு பொருளை ஈட்டு என்கிறார். ஆனால் திருவள்ளுவர் "செய்க பொருளை" என்ற ஒரு அழகான வலிமையான வார்த்தையை கட்டளையாக பயன்படுத்துகிறார்.
ஒருவன் தன்னுடைய செயலின் மூலம் அற வழியில் பொருளை ஈட்ட வேண்டும். செயல் செய்து பொருளை ஈட்டுவாய் என்றால் அதுப்போல் பகைவரின் செருக்கை (ஆணவத்தை) அறுக்கவல்ல மிக கூர்மையான ஆயுதம் வேறு இல்லை. செயலுக்கே இங்கு மதிப்பாகும்.
செயல் என்பது மனிதனின் தீய குணங்களான சோம்பல் மறதி அழுக்காறு ஆகியவற்றை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும். செயலாற்றுபவனுக்கு செயலில் மட்டுமே கவனம் இருக்கும்.
மேலும் பொருள்/பணம் கூர்மையான ஆயுதமும் ஆகும் என்பதையும் வள்ளுவர் கூறுகிறார். நாம் ஈட்டிய பொருளினால் நமக்கு செருக்கு வந்தால் அது நம்மையே அறுத்துவிடும் என்பதையும் நினைவில் கொள்க. பொருள் தான் பிறரின் செருக்கை அறுக்க வேண்டுமே தவிர. நாம் செருக்குக் கொண்டு மற்றவர்களை காயப்படுத்தவோ ஏளனம் செய்யவோ கூடாது. ஏனெனில் “குறள் 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்”.
"அறம், பொருள், இன்பம், வீடு" என்பது மனிதன் தரிக்க வேண்டிய நான்கு வேடங்கள். அவன் தன் கடமையை (அறத்தை) செய்து, பொருளை ஈட்டினால் தான் அவனால் இன்பத்தை அனுபவிக்க முடியும், வீடுபேறு நோக்கி செல்ல முடியும். பொருள் இல்லையெனில் தன்னுடைய அறத்தையும் / கடமையையும் ஆற்ற முடியாது இன்பமும் பெறமுடியாது.
உங்கள் குடும்பத்தை பேணவும் நீங்கள் வழி நடத்தும் நிர்வாகத்தையும் குழுவையும் பேணவும் சீராக வழிநடத்தவும் பொருள் மிக அவசியம். அத்தியாவசியம். ஆதலால் பொருள் ஈட்டு என்கிறார் திருவள்ளுவர்.
உங்கள் குடும்பத்தை பேணவும் நீங்கள் வழி நடத்தும் நிர்வாகத்தையும் குழுவையும் பேணவும் சீராக வழிநடத்தவும் பொருள் மிக அவசியம். அத்தியாவசியம். ஆதலால் பொருள் ஈட்டு என்கிறார் திருவள்ளுவர்.
பொருள் ஈட்டுவதை ஒரு ஆக்கசக்தியாக வைத்துக்கொண்டால் அதில் தவறில்லை. (வள்ளுவர் செய்க பொருளை என்றுதான் சொல்கிறார். மனிதனிடம் இருந்து பிடுங்கு என்று கூறவில்லை. )
பகைவரை வெல்ல பொருள் சேர்
பெரிய செல்வம் இருந்தால், பெரிய இடங்களில் இருப்பவர் நட்பு கிடைக்கும். அப்படிப்பட்ட நம்மை , நம் பகைவர்கள் (இன்றைய காலகட்டங்களில் பொறாமைக்கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள்) ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
கத்தி இருக்கிறதே, அது பொருள்களை வெட்டும். குணத்தை வெட்டுமா? எதிரியின் பகை உணர்ச்சியை வெட்ட எந்தக் கத்தியைக் கொண்டு போவது? நம்மிடம் நிறைய பொருள் இருந்தால், அது எதிராளியின் செருக்கை, ஆணவத்தை அறுக்கும் என்பதால், செல்வத்தை கூரிய கத்தி என்றார் வள்ளுவர். செருக்கு என்ற குணத்தை அறுப்பதால் அது கூரிய கத்தி.
எதிராளியின் செருக்கை அடக்க வேண்டும் என்றால் நிறைய படி, பலப் பல பட்டங்கள் வாங்கு, படை திரட்டு, என்றெல்லாம் சொல்லவில்லை. செல்வத்தைச் சேர். பகை ஒடுங்கும் என்கிறார்.
நன்மக்கள் தம்மக்கள். ஆதலால் அவர்களும் நம் பொருள் என்று உணர்க.
நாம் எவ்வளவு பொருள் ஈட்டிப் எதிரியின் செறுக்கை அறுக்கலாம். ஆனால் அவை எல்லாம் சிறிது காலத்திற்கு மட்டும் தான் என்பதையும் நிலைவில் கொள்க. நமது உண்மையான பொருள் நமது பிள்ளைகளை. அவர்களை சான்றோன் ஆக்குவது நமது கடமை.
7/G ரெய்ன்போ காலனி (7/G Rainbow Colony) திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். “இனி எவனாவது கேப்பான் யேன் உன் பையன் தண்டமா இருக்கான்னு”. அந்தக் காட்சியையும், அதில் வரும் மேற்சொன்ன வசனத்தையும், “தம்பொருள் என்பதம் மக்கள்”, “செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்” திருக்குறள்களையும் தொடர்புப்படுத்திப் பார்த்தால் நமக்கான கடமைகளில் தெளிவுப் ஏற்படுவது உறுதி.
ஆனால் எவ்வளவு பொருள் சேர்த்தாலும் கீழ்க்காணுபவற்றை நினைவில் கொள்க
தோன்றுவதும் மறைவதும் புகழோடு வாழ்பவர்களே! மற்றெல்லாம் பிறப்பார், சாவார்
மற்ற மாந்தரின் மகிழ்வும் துன்பமும் தனக்கு நேர்ந்ததுபோல் உணர்பவனே வாழும் மனிதன். மற்றையான் செத்தவனும் நிகரானவன்
நாம் வாழ்வில் செய்கின்ற செயல்களினாலே அவற்றை செய்யும்விதத்தாலே அவற்றை செய்யும் நேர்மை, உழைப்பு, தொழில் நேர்த்தி, தரம் ஆகியவற்றால் நமது சிறப்பும், பெருமையும் மாறும். நமது மதிப்பு நாம் செய்யும் தொழிலில் உள்ள நேர்மையில், உழைப்பில், நேர்த்தியில், செயல் தரத்தில் அடங்கியுள்ளது.
கீழே மேற்கோளாக இடப்படும் பழமொழிப்பாடல், தன்னைத்தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்கச் செயல் என்கிறது; மேலும் அப்பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப் பொருளினைக் கொடுத்தால், அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாரே உளர் என்று வினவுகிறது! வேலாற் குத்துதலைவிட, காணிப்பொருளால் குத்துவதே வலிமையானது என்று சொல்லி, “பணம் பாதாளம் வரைக்கும் பாயும்” என்ற கூற்றை அடிக்கோடிடுகிறது. இன்றைய அரசியல் மற்றும் வணிக, மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளும் இக்கருத்தையொட்டியே அமைந்திருப்பதைக் காண்கிறோமே!
தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேல்குத்தின்
காணியின் குத்தே வலிது (பழமொழி 32)
”செறுவோர் செம்மல் வாட்டலும் ...
இல்லிருந் தமைவோர்க் கில்லென் றெண்ணி” (அகநா 231.1-3)
“நண்ணார்த் தெறுதலும்
தற்செய்வான் சென்றார்த் தரூஉம்” (கார் நாற்பது 7)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.).
மணக்குடவர் உரை
பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. இது பொருளீட்டல் வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.
மேலும்: அஷோக் உரை
"பணக்காரக் குண்டிக்குத் தடுக்குப் போடுவா” என்பர் ஊரில், செல்வந்தர்களைத் தாங்குவதைப் பார்த்து. ஆளாளே வந்து, ‘சாப்டாச்சா?’ என்பார். நல்வழியிலோ, புன் வழியிலோ செல்லும் சேர்த்தால் போதும். உலகமே கைகூப்பிப் பின்தொடரும். ஒதுக்கமாக ஒன்றுக்குப் போனால்கூட, வேட்டியை ஒதுக்கி, பிடித்துக் கொடுப்பார்கள். வயிறெரிந்து வள்ளுவர் சொல்கிறார்...
‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்'
என்று. பொருள் தேடுங்கள், எதிரிகளின் எகத்தாளத்தை அறுத்து எறியும் கூரிய ஆயுதம் அதனை விடச் சிறந்தது வேறு ஏதும் இல்லை என்பது விளக்கம்.
“அவ்வளவு தொலைவு சென்று அவர்கள் ஈட்டும் பொருள்தான் என்ன?” என்று தரையில் அமர்ந்திருந்த மேய்ப்பன் கேட்டான். பச்சைக்கண்களும் ஒடுங்கிய கன்னமும் சுருக்கங்கள் செறிந்த முகமும் கொண்டிருந்தான். முதுமைகொண்ட சோனக வணிகன் கையில் மதுக்குவளையுடன் “எந்த வணிகமும் பொருளை எண்ணி தொடங்கப்படுவதில்லை. நேர்நோக்கில் பொருள் மட்டுமே வணிகனின் எண்ணத்தில் உள்ளது. ஆனால் பொருள் என்பதற்கே மீறல், கடந்து செல்லல் என்பது உட்பொருள். எண்ணிப்பாருங்கள், உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் பொருள் தேவைகொண்டவன் பொருள் விழைவதே இல்லை. எவராயினும் பொருள் விழைவதே பிறிதொன்றென ஆகவும் தானும் பிறரும் வகுத்த எல்லைகளிலிருந்து வெளியேறவும்தான்” என்றான்.
எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் (எதற்கு இத்தனை நூல்கள்?)
எழுத்தாளர் ஜெயமோகன் அறம் பொருள் இன்பம் வீடு என்று சமநிலை பேணவேண்டும் என்று வலியுருத்துபவர். ஒருவர் தேவைக்கான பொருளை கண்டிப்பாக ஈட்டியாக வேண்டும் என்று கூறுபவர். அதுவே மற்ற செயல்களை செய்ய நமக்கு தேவையான் சுதந்திரத்தை கூறுபவர். அவர் இக்கட்டுரையில் கூறியுள்ள கீழ்க்காணும் கருத்து உவப்பாக உள்ளது. நாம் ஈட்டும் பணம், சந்தானம் (நன்மக்கள். நன்மக்கட் பேறு. தம்பொருள் என்பதம் மக்கள்) போன்றவற்றைப் போல அறிவையும் பொருளாக கருதி அதனையும் ஈட்டி செறுநர் செருக்கறுக்கும் விதமாக பயணித்தால் நாம் எவ்வளவும் முன்னேறுவோம். வாழ்வுக்கும் எவ்வளவு பொருள்.
”துளித்துளியாக மானுடம் தன் அறிவை சேர்த்து திரட்டி புறவயமாக ஒன்றாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த மானுட அறிவின் பிரம்மாண்டப் பெருக்கில் ஒரு துளியென தானும் சேர விரும்புவதைப்போல மகத்தான பிறிதொன்றுண்டா என்ன?
அன்றி, வேறு எது பொருள் உள்ள செயல்? திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து பொருளீட்டுவதா? அதை பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு செத்துத் தொலைவதா? அர்த்தமற்ற கட்டிடங்களைக் கட்டி எழுப்பி, அவற்றை வாழ்நாள் சாதனை என்று எண்ணிக்கொள்வதா? சேர்த்து வைத்த பணத்தை வங்கிக்கணக்கில் அடிக்கடி எடுத்துப்பார்த்து மனம் மலர்வதா? என் எதிரியைவிட நான் ஒரு படி மேலாக ஆகவேண்டும் என்னும் விழைவால் இரவுபகலாக வேலைசெய்வதா? வெல்ல வெல்ல புதிய எதிரியை கண்டடைந்து காரட்டை தொடரும் குதிரைபோல நெஞ்சடைக்க வாழ்நாள் முழுக்க ஓடி களைத்து விழுந்து சாவதா? வேறெதை அர்த்தமுள்ள செயல் என்று சொல்வீர்கள்?”
மேலும்
எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஓட்டல் முதலாலியாவும் மலையாளியாகவும் நடித்த முத்துராமன் ஒரு வசனம் பேசி இருப்பார்
ஏண்டா மாது! எந்தா கொள்கை எண்டேனு அறியானோ? பேராசைப் பிடிச்சவனை பணம் கொண்டு ஜெய்க்கோ
தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.
நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.
பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.
ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.
சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.
பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான். அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.
கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.
நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.
இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.
சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.
நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.
வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.
நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.
சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம். பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.
நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது, பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.
நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.
மனிதர் எதிலும் போய் அமைவதில்லை. அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது. பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு. இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார். காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.
பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.).
மணக்குடவர் உரை
பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. இது பொருளீட்டல் வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.
இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்.
English Meaning - As I taught a kid - Rajesh
We have studied that money, wealth, materials are not permanent. They are transient in nature. They can come and go anytime. So, one should not go behind wealth.
At the same time, in this Kural, Thiruvalluvar says that make money. But how much? Earn wealth as much as that your enemies, competitors, relatives ego is melted. There is no other sharp weapon other than money that can kill jealousy. In away it makes other humble and stay grounded. Also remember, this money has to be earned in ethical ways only.
It doesn't mean we can hurt others with our money. It doesn't mean, be pompous. Money is essential to have a balanced life and lead family. One has to do duties life and one has to do work in order to earn money. Only then, one will be able to lead a happy life.
Questions that I ask to the kid
How much wealth should you earn?