Search This Blog

Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label PublicSpeaking_Control_of_tongue. Show all posts
Showing posts with label PublicSpeaking_Control_of_tongue. Show all posts

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

குறள் 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள் 
ஆக்கமும் - செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்
ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல்

கேடும் -  கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

அதனால் - அதனால்

வருதலால் - வருவதனால் 
வரல், -  v. noun. A coming, வருகை. 2. As வராதே, come not. (p.) வரலாம். I, you or he may come.


காத்து - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்

ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல்,
ஓம்பல் - செய்யும் செயலை பேணவேண்டும்

சொல்தல் -கூறுதல் ; எடுத்துரைத்தல்

சொல்லுக - கூறுக; உரைக; மொழிக

சொல்லின் - கூறுபவற்றின்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்

முழுப்பொருள் 

சொற்களினால் ஆக்கமும் வரும் கேடும் / அழிவும் நிகழும். சொற்களுக்கு அவ்வலிமையுண்டு. ஆகையால் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் சொற்களை பேணி பாதுகாத்து பேசவேண்டும். ஆதலால் சொற்கள் தேர்ந்தெடுப்பதில் சோர்வு இருத்தல் கூடாது.

"மனிதர்களைப் புரிந்துகொள்ளதான் நிறைய வாசிக்க வேண்டும்; வெறுக்க சில வார்த்தைகள் போதும்" என்று ஒரு வாக்கியத்தை படித்த ஞாபகம் நினைவுக்கு வருகிறது.

இனியவை நாற்பது (35) “சொல்லுங்கால் சோர்வின்றி சொல்லுதல் மாண்பினிதே” என்று சொல்லும். சொற்குற்றமே எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை என்பதை, “ சொற் சோர்வுடைமையின் எச்சோர்வும் அறிப” என்று முதுமொழிக் காஞ்சி (2.8) சொல்கிறது. “சொற்சோர்வு படேல்” என்பது ஔவை ஆத்திச் சூடி வாக்கு

=சொல்=
சொல் காயப்படுத்தி வீழ்த்துகிறது ஒருவனை.
சொல் தட்டிப் பறிக்கிறது மற்றொருவனின் மணிமுடியை.
சொல்லை உய்த்துணரும் ஒருவனுக்கே
அனைத்தும் இனிதாக முடிகிறது.
-- கபீர் (புன்னைக்கும் பிரபஞ்சம்)

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க. (ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால் சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க வேண்டும். இது சோர்வுபடாமற் சொல்லல்வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.

Management - Public Speaking - Control of tongue
Any outcome, both personal and professional and both positive and negative, is the result of one’s speech. Empires were built and empires were destroyed by speeches. People are encouraged to perform beyond others’ expectations and people are discouraged to perform below their own expectations by speech.

Therefore, it is essential to gain control over one’s speech. Many opportunities are lost by speaking and many opportunities are lost by not speaking also. There must be a balance. We must know when to speak and when to keep our mouth shut. An effective and persuasive speaker knows when to speak and when to keep quiet. That is why it is said, ‘Speech is silver and silence is golden.’ 

Valluvar advises us through Kural 642 to have a commanding vocabulary so that there will not be chances to grope for words while expressing ideas and concepts. 

Speech can both make and mar, and 
hence Should be guarded well. 

Words have the power to create and destroy. Therefore, we need to create a strong base of words to protect our speech from destruction. Remember Rudyard Kipling’s “Language has been the medicine for mankind.”

English Meaning - As I taught a kid - Rajesh
Appropriate Words can have positive, productive, yielding results/impact as whereas wrong words can have negative, unproductive, disastrous consequences/effect. Hence, one should be careful and without lethargy prudently choose their words while speaking and writing. One should leave no scope for miscommunication or misunderstanding

Questions that I ask to the kid
What are the pros and cons of words/communication? So what is the lesson from that?

How can you avoid miscommunication? Why?