நாளும் ஒரு திருக்குறள் - ஒவ்வொரு சொல்லாய் ஆழ்
பொருள் - A sincere attempt at understanding the deeper meaning of Thirukkural by analyzing individual word meanings and holistic meaning. A new project is currently undertaken to add english meanings which can be of help to non-english readers. It also has questions that can be asked to kids who learn these kurals.
P.S: Meanings in english are currently written
Search This Blog
Disclaimar
This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label நாணுத்துறவுரைத்தல். Show all posts
Showing posts with label நாணுத்துறவுரைத்தல். Show all posts
தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.
படாவாறு - படாததினாலே
முழுப்பொருள்
காதலி கூறுகிறாள், என் கண் முன்னே என்னை காணும் பொழுது என்னை கண்டு சிரிக்கின்றனர் அறிவில்லாதவர்கள். அவர்கள் அறியாமையில் சிரிக்கிறார்கள். ஏனெனில் நான் இக்காதலால் படும் துன்பத்தை அனுபவிக்காதவர்கள் அல்லது அறியாதவர்கள் அவர்கள்.
காமம் அளவு மீறும் பொழுது நாணத்தை மீறி அது வெளிக்காட்டிவிடுகிறது. ஆதலால் காதலியை கண்டு பிறர் நகைப்பதால், காதலிப் பிறர் மேல் சினந்துக்கொள்கிறாள். உண்மையில் காதலி சினந்தது அவளுடைய நாணத்தை மீறி காமம் வெளிப்பட்டதற்காகும்.
மறுகில் - மறுகு - தெரு; குறுந்தெரு; அறுத்ததாளினின்று உண்டாகும் இரண்டாம் விளைச்சல்.
மறுகும் - மறுகுதல் - maṟuku- 5 v. intr. மறி¹-. 1.To whirl; சுழலுதல். மறுகக் கடல்கடைந்தான் (திவ்.இயற். 2, 68). 2. To go about often; to wander;பலகாலுந் திரிதல். மலிவன மறுகி (குறிஞ்சிப். 97).3. To be bewildered, confused; to be unsteady,unsettled; மனங்கலங்குதல். நெஞ்சின் மறுகல் நீ(சீவக. 946). 4. To be distressed; வருந்துதல்.கிடந்துயிர் மறுகுவதாயினும் (அகநா. 29). 5. To beshattered, torn up; சிதைதல். குடன் மறுகிட(கம்பரா. இந்திரசித். 19). 6. To be ground intopaste, as sandalwood; அரைபடுதல். நறுஞ்சாந்துமறுக (மதுரைக். 553).--tr. To carry; கொண்டுபோதல். அவல் வகுத்தோர் . . . மது மறுகவும்(பொருந. 217).
நான் மனவடக்கத்தினால் என் காதலை இவ்வூர் மக்கள் அறியாமல் தடுத்திருக்கிறேன் என்று என் காமம்/காதல் நினைகிறது. ஆதலால் நான் வாழும் தெருவில் நான் வாழும் இவ்வூர் மக்கள் முன்பு என் காதல் மேலும் பெருகி வளர்ந்து (நான் படும் துன்பத்தின் மூலமாகவோ அல்லது மனவடக்கத்தை மீறிய எனது வித்தியாசமான உடல்மொழியாலோ அல்லது குறிப்புகளாளோ பிறர் அறிய நேரிட்டு) அம்பலும் அலருமாய்(பழிச்சொல், புறங்கூற்று) என்னை சுழன்று சுழன்று வருகிறது. அதனால் என் நாணத்தை மீறி காமம் இவ்வுலக மக்களிடம் என் காதலை அறிவிக்கிறது.
(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.).
மணக்குடவர் உரை
என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.
மு.வரதராசனார் உரை
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
சாலமன் பாப்பையா உரை
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.
அரி - வண்டு; மென்மை கண்வரி கண் சிலம்பினுட்பரல்; சிலம்பு உள்துளை; மூங்கில் சோலை தேர் மக்கள்துயிலிடம்; கட்டில் கடல் தகட்டுவடிவு; கூர்மை வலிமை மரவயிரம்; அரியப்பட்டகைப்பிடிக்கதிர்; அரிசி கள் குற்றம் நீர்த்திவலை; ஆயுதம் பகை நிறம் அழகு பொன்னிறம்; திருமால் சிவன் இந்திரன் யமன் காற்று ஒளி சூரியன் சந்திரன் சிங்கம் குதிரை குரங்கு பாம்பு தவளை கிளி திருவோணம் துளசி நெல் நெற்கதிர்.
காமத்தின் இயல்பு என்ன தெரியுமா? இவர் (பெண்ணுக்கு நாணம் பொதுவாக கூறப்பட்டாலும், ஆண்மகனும் காதலை மன்றத்தில் தேவையில்லாமல் வெளிப்படுத்தமாட்டான்) மனவடக்கம் உடைய அரிதானவர் என்றோ அல்லது குடியின் பெருமையை காப்பவர் என்றோ எண்ணாமல் (பாவம் பார்க்காமல்) இக்காமநோய் ஆனது எங்கள் காதல் இரகசியத்தை கொன்று மன்றத்தில் அதாவது இவ்வூர் மக்கள் முன்பு வெளிப்பட்டுவிடும். அதாவது நாணம் அற்றது காமநோய்.
(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது. ('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ).
மணக்குடவர் உரை
நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது. இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
மு.வரதராசனார் உரை
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.
சாலமன் பாப்பையா உரை
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
உழ - uẕa VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை.
இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
முழுப்பொருள்
கடல் என்பது மிக பெரிய உப்புநீர்நிலை. அதன் ஆழமும், பரந்த பரப்பும் மிக பெரியது. அதனை வியந்தாலும் அவ்வுப்பு நீரை யாரும் பருகமாட்டார்கள். கடலில் அலைகள் எழும் சில நேரங்களில் கொந்தளிக்கும். அதுப்போல காதல் பிரிவால் வாடும் என் தலைவி கடல் போன்ற துன்பத்தால் வருந்துகிறாள். அது துன்பம் ஆயினும் உவர் நீர் மழை தருவதற்கும் ஒரு காரணம் போன்று எங்கள் காதல் வளர்வதற்கு இந்த துன்பம் ஒரு காரணம்(காரணமோ?) . தனி ஒருவன் நீந்தி கடப்பதற்கு அரிய கடலை போன்று இந்த காதல் துன்பத்தையும் தனியே கடக்க முடியாது. தலைவன் படகில் வந்து கடத்திச்சென்றால் தான் முடியும்.
ஆனால் இவ்வளவு பெரிய துன்பத்தை வருத்தத்துடன் அனுபவிக்கும் என் தலைவி எந்நிலையிலும் மடல் ஏற மாட்டாள். ஏனெனில் அவள் நாணம் அவளை தடுக்கிறது. இதுவே தலைவன் நானாக இருந்தால் பிரிவு தாங்காமல் மடல் ஏறி இக்காதலை இவ்வுலகிற்கு பறைசாற்றி இருப்பேன். ஆதலால் இத்தனை துன்பத்தையும் நாணத்தால் பொறுத்து கொண்டு இருக்கும் இவளை போன்ற பெருமைவாய்ந்த பெண் பிறவி இவ்வுலகில் வேறு இல்லை.
இக்குறளின் கருத்தை வழிமொழிந்திருக்கின்றன சீவக சிந்தாமணியும், சூளாமணியும்.
“கண்ணும் வாளற கைவளை சோருமால்
புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ
எண்ணில் காமம் எரிப்பினும் மேல்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே” (சீவக சிந்தாமணி)
('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.).
மணக்குடவர் உரை
கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை. இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.
மு.வரதராசனார் உரை
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
சாலமன் பாப்பையா உரை
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
உழக்கும் - uḻa- 4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).
துயர் - துன்பம்; அரசர்க்குஉரியசூதுமுதலாகியவிதனம். முழுப்பொருள் பூமாலைப்போல் தொடர்வரிசையாக கையில் வளையல்கள் அணிந்திருக்கும் என் தலைவி எனக்கு மடல் என்ற காதல் நோய்யை தந்தாள் மேலும் அந்திமாலைப்பொழுது எண்ணில் உழக்கும் துயருக்கும் காரணமானாள். அதாவது பகல் பொழுதில் மடலால் தவிக்கிறான் தலைவன். மாலை மற்றும் இரவு பொழுதில் மாலை தரும் துயரால் தவிக்கிறான். பகலும் மாலையும் தொடர் சங்கிலியாக அவனை வருத்துகிறது. அதனை தந்தவள் தலைவி.
இதே கருத்தை கலித்தொகை (138:12-3) வரிகள் கூறுவதையும் பார்க்கலாமே!
“படரும் பனையீன்ற மாவும் சுடரிழை நல்கியாள் நல்கியவை” என்பார் அப்பாடலாசிரியர்; இதற்கு உரை ஈந்த நச்சினார்க்கினியர் இவ்வாறு கூறுவார் – “விளங்குகின்ற இழையினையுடைய, என்னாலே காமிக்கப்பட்டவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும் வருத்தத்தாலுண்டான பனையீன்ற மடலாற் செய்த குதிரையும்.”
('இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன'? என்றாட்குச் சொல்லியது.) மாலை உழக்கும் துயர் மடலொடு - மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும், முன் அறியேன்; தொடலைக் குறுந்தொடி தந்தாள் - இது பொழுது எனக்கு மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள். (காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அது பற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள் தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்' என்பது கருத்து.).
மணக்குடவர் உரை
மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள். தொடலை யென்பதற்குச் சோர்ந்த வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.
மு.வரதராசனார் உரை
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
சாலமன் பாப்பையா உரை
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
தலைவனின் சிறப்பையும் அவன் காதலினால் இன்றுபடும் அவதியையும் கூறுகிறது இக்குறள்.
தொன்றுதொட்டுத் தலைவன் வலிமையானவன் வெற்றிவாகை சூடியவன். எச்செயல் செய்தாலும் பிறர் பழிச்சொல்லுக்கு வெட்கி (அஞ்சி) நாணத்தோடு வாழ்வை நடத்துபவன். நற்குடியில் பிறந்து வருவதால் பழைமையின் பெருமையும் காத்துவருகிறவன்.
தலைவன் நினைக்கிறான், நாணத்துடன் நல்ல ஆண்மையும் பழைமையும் அதனுடன் வந்த பெருமையை காத்துவந்தேன் இன்று வரையில். ஆனால் தலைவிமீது காதல் கொண்டதனால் காதலர்கள் கொண்டவர்கள் ஏறும் மடலை நானும் ஏறினேன்.
தன்னுடைய சிறப்புகள் இவ்வளவு இருப்பினும் மற்றவர்கள் (சராசரி) போன்று தானும் காமநோயின் வேட்கையில் அவதிப்படுகிறேன் என்று தலைவன் வருந்துகிறான். காதல் வந்துவிட்டால் வலிமையானவர் வலிமையில்லாதவன் என்று எல்லாம் பேதமில்லை. எல்லோரும் காதலின் இன்பத்துன்பங்களை சமமாக பாரபட்சமில்லாமல் அனுபவித்தாக வேண்டும்.
உழ - uẕa VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை உழத்தல் - செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.
வருந்தி - வருந்து - vruntu -கிறேன், வருந்தினேன், வேன், வரு ந்த, v. n. To suffer, to be distressed, to be grieved, துன்புற. 2. v. a. To take pains, முயல. (நீதி.) 3. To beg earnestly, கெஞ்ச. வருந்திக்கேட்கிறது. Soliciting, entreating. யாவருக்கும்வருந்தின்றாக. Without molest ing any. (p.)
முழுப்பொருள்
காமம் உழந்து என்றால் வெறும் காதலித்தவர்கள் அல்ல மிக தீவிரமாக காதலித்தவர்கள் என்று பொருள். அப்படி மிக தீவிரமாக காதலித்தவர்கள் பிரிவு அல்லது ஊடல் போன்று எதோ ஒரு காரணத்தினால் (அல்லது வேறு ஒருவர்க்கு கல்யாணம் செய்ய முனையும் பொழுது) வருத்தம் உண்டாகுமாயின் அவர்களுக்கு காவலாக இருப்பது மடலூர்தல் என்னும் ஆயுதம் தான் அதனை தவிர வேறு வலிமையான ஆயுதம் இல்லை. மடலூர்தால் என்றால் இருவருக்கிடையே உள்ள காதலை தலைவன் உலகிற்கு அறிவுக்கும் ஒரு முறை. (மடலூர்தலை பற்றி கீழே காண்க. )
அப்படி தலைவன் உலகுக்கு அறிவிக்கும் பொழுது தலைவி நாணத்தினால் காதலை ஏற்றுக்கொள்வாள். ஆதலால் தலைவன் இதனை ஆயுதமாக பயன்படுத்தி தோழிகளிடம் சொல்லி அனுப்புவார் தலைவிக்கு. தலைவி உலகுக்கு தெரிந்துவிடும் என்று நாணம் கொண்டு ஊடலை முடித்துக்கொள்ள வருவார். மடலேறுதலை விக்கிமூலம் இவ்வாறு விளக்குகிறது.
“மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.
தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திறுநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர். தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் ’மடல்’ ஆகும்.
இந்நிகழ்வால் தலைவன் தலைவியை அடைய முடியாமல் தவிப்பது ஊராருக்குத் தெரிய வந்து, தலைவனின் துயர் காணும் ஊரார், அவனுடன் தலைவியைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியால் தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு ஏற்படும்.
மடல் கூறல், மடல் விலக்கு என இருநிலைகளை நம்பி அகப்பொருள் முன் வைக்கிறது. தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூறல். தலைவனை மடல் ஏறவேண்டாம் எனத் தடுப்பது மடல் விலக்கு”
திருக்குறளில் பல இடங்களில் மடலூர்தலைப் பற்றி பேசப்படுகிறது
மேலும்: அஷோக் உரை பரிமேலழகர் உரை
[அஃதாவது , சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும் , அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம் . இது காதல் மிக்குழி நிகழ்வது ஆகலின் , காதற்சிறப்புஉரைத்தலின் பின் வைக்கப்பட்டது.]
(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.).
மணக்குடவர் உரை
காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.
மு.வரதராசனார் உரை
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
காமக் - kāmam n. kāma. 1. Desire; விருப்பம் காமம் வெகுளி மயக்கம் (குறள், 360). 2. Happiness in love, one of four kinds of puruṣārttam,q.v.; உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம் காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம் (திவ். இயற்.பெரியதி. ம 37). 3. Sexual pleasure; புணர்ச்சியின்பம். காமத்திற் செம்பாக மன்று (குறள், 1092). 4.Venereal secretion; காமநீர் மெய்பொடித் திருங்காமமிக்கொழுக்கும் (உபதேசகா. அயமுகி. 25). 5. Objectof desire; விரும்பிய பொருள் தாம்வேண்டுங் காமமேகாட்டுங் கடிது (திவ். இயற். 2, 92). 6. (Astrol.) Theseventh house from the ascendant; இலக்கினத்துக்கு ஏழாமிடம். (சங். அக.) 7. See காமமரம் (மூ. அ )
கடும்புனல் - kaṭu-m-puṉal n. கடு-மை +.1. Swift current of water; வேகமாயோடும் நீர் கடும்புனன் மலிந்த காவிரி (அகநா. 62). 2. Sea,from its abundance of water; கடல் காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167).
நல் - nal நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச).
ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
முழுப்பொருள்
ஒரு தலைவன் தான் தோல்வியுற்றான் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவான். தோல்வியென்பது அவனை நாணம் அடையச்செய்யும். ஆதலால் தோல்வியில் தழுவாதிருக்க தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வான். அதுப்போல தன்னுடைய ஆண்மை என்று சொல்லப்படுகின்ற ஆளுந்தன்மை என்பது சிக்கலான நேரங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள பல வழிகளை கொடுத்து உதவும். இவை இரண்டும் வாழ்வு என்னும் கடலில் ஒரு படகில் செல்லும் பொழுது தலைவனின் கையில் இருக்கும் இரண்டு தெப்பம் / மரக்கலம் போன்றது. பொதுவாக இந்த மரக்கலங்களை வைத்துக்கொண்டு கடலை கடந்து வருவார்கள்.
ஆனால் காமம் (புணர்ச்சி, ஆசை நோய்) என்பது மிக பரந்து விரிந்த கடுமையான கடலைப்போன்றது. ஒரு கட்டற்ற வெள்ளாறு போன்றது. அதன் முன் தலைவனின் நாணமும் ஆளுந்தன்மையும் படகில் உள்ள மரக்கலங்கள் போன்ற சிறுமையான விஷயங்கள் ஆகிவிடும். காமம் நாணத்தையும் ஆளுந்தன்மையும் உய்த்துவிடும்.
இக்குறளை இருவகையில் எடுத்துக்கொள்ளலாம். 1) காதலின் முன் யாவரும் சிறியவர்களே. காமத்தின் சக்தி கடலைப்போன்றது. அதன் சீற்றதை மனிதனால் எதிர்க்கொள்ள முடியாது 2) காமம் மிக கடுமையானதும் கூட. காமத்தினால் மனிதன் தன்னிலை இழந்து தவறும் செய்யக்கூடும். கம்பராமயணத்தில் i) சூர்பனையிடம் சற்று காமம் கொண்ட இராமன் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சூர்பனையிடம் சொல்லி இருக்க மாட்டான். அந்த சமயத்தில் சூர்பனைக்கு இராமன் மீது காமம் இருக்கும். [ஒரு வேளை ராமன் தனக்கு கல்யாணம் ஆகியுள்ளது என்று சொல்லி இருந்தால் சூர்பனையின் காமம் அடிபட்டுப் போய் இருக்கும்]. இராமனை கட்டிக்கொள்ள இராவணனிடம் சீதையின் அழகைச் சொல்லி அவன் காமத்தை சீண்டுகிறாள். ஆக இங்கே சூர்பனகை எடுத்த ஆயுதம் காமம். ஏனெனில் சீதையை இராவணன் எடுத்துக்கொள்ளட்டும் இராமனை சூர்பனகை எடுத்துக்கொள்வாள். அதுவரையில் யாருடைய காலின் வீழாத இராவணன் சீதையின் மீது இருந்த காமத்தினால் தன்னிலையிழந்து அவளை சிறைப்பிடித்து. பின்பு அனைத்தையும் இழந்தான் இராவணன்.
ஒல்லா - கூடாத / இணங்காத ஒல்லு - III. v. i. join. combine, கூடு; 2. agree, suit, இணங்கு; 3. be possible practicable, இயலு; 4. happen, take place, சம்பவி; v. t. tolerate, சகி, பொறு; 2. braid as a basket, mend as a net. ஒல்லாமை, neg. v. n. inability, contempt. 1, friends x ஒல்லார், enemies.
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்
என் - என்னுடைய
கண் - கண்
பொருள்
பேதைக்கென் கண் - பேதையை நினைத்து என் கண்கள் படல்ஒல்லா பேதைக்கென் கண் - பனையோலையில் படுத்துக்கொண்டிருக்கும் பொழுது இமைமூடாது என் கண்கள் பேதையை நினைத்துக்கொண்டிருந்தது.
மடலூர்தல் யாமத்தும் - மடலூர்தலைப் பற்றி (பகல் அல்லாது) நள்ளிரவிலும் மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் - மடலூர்தலைப் பற்றி (பகல் அல்லாது) நள்ளிரவிலும் மனதில் நினைத்துக்கொண்டிருப்பேன் மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற- மடலூர்தலைப் பற்றி (பகல் அல்லாது) நள்ளிரவிலும் மனதில் தெளிவாக நினைத்துக்கொண்டிருப்பேன்
முழுப்பொருள்
நான் பகல் வேளையில் மடலூர்தலை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பேன் இரவில் நினைக்க மாட்டேன் என்று நினைக்கும் அறிவில்லா பேதையே! நான் நள்ளிரவிலும் இமை மூடாமல் கண்விழித்து உன்னை எண்ணி எண்ணி மிக தெளிவாகவும் உறுதியாகவும் மனதில் நினைத்து கொண்டிருப்பது என்ன தெரியுமா ? (நாளை பகலில்) மடலூர்தலை(உன்னை அடைவதற்காக ஊர் மக்கள் முன்பு வெளிப்படையாக ஒரு குறீயிட்டின் (மன் குதிரையில் ஏறுவது) மூலம் தெரிவிப்பது) பற்றியே!
நம் காதலை இன்னும் சபைக்கு கொண்டுவராத குற்றவுணர்வு உனக்கில்லையா ?
பகலில்தானே மடலூர்தல் என்று நினைந்து, இரவுதான் வந்ததே என்று அறியாப் பெண் நினைப்பாளேயாயின், அவளுக்காக தலைமகன் இவ்வாறு கூறுகிறானாம். மடலூர்தல் என்பதைப் பற்றி, காமத்துழன்று தாம் நள்ளிரவிலும் மிகவும் நினைத்து கொண்டிருக்கிறேன் என்று தலைவி அறியவேண்டி கூறுகிறான் தலைவன்.
தன்மேலுள்ள காதலால், பகலில் மடலேறுதல் மட்டுமன்றி இரவிலும் தூக்கமுமற்று, மடலூர்தலையே நினைந்தானே என்று, தலைவியை மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறான் தலைவன்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே” (சூளா.குமாரகாலச் 14)
பரிமேலழகர் உரை
('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)
மு.வ உரை
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
சாலமன் பாப்பையா உரை
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
மணக்குடவர் உரை
பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்.
இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
( மடலூரும் நேரம் இன்றைக்குக் கழிந்துவிட்டதென்ற தோழிக்குச்சொல்லியது .)
பேதைக்கு என் கண் படல் ஒல்லா - பேதைத் தன்மையுள்ள என் தலைவி கரணியமாக எனக்கு இராமுழுதுங் கண்ணடைப்பதேயில்லை ; யாமத்தும் மடல் ஊர்தல் உள்ளுவேன் மன்ற - அதனால் எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் நான் மடலேறக் கருதுவது உறுதி .
இனி , நாளைக் குறைமுடிப்பே னென்று கடத்தி வைக்க வேண்டாமென்பதாம் . ' பேதை ' யென்பது இங்குப் பருவங்குறியாது இளமையும் மடமையுங் குறித்து நின்றது . ' மன்ற ' தேற்றப் பொருளிடைச்சொல் .
பி.கு: இப்பாடலை நான் இன்று எழுத தூண்டிய பாடல் இதோ (சுட்டியைத் தட்டவும்)
Geetha Govind / Astapathi | Song : Rati Sukha Sare | Composer: Sri Jayadev
Singer: Niranjana Srinivasan
Other Details: Chembai Concert 2011 || Guruvayoor
Note:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் [Thirukkural Link at the end]:
Is it time? This weekend I learnt about this song ‘Rati Sukha Sare’ (translation in comments, video in comments) (of Poet Jayadev’s Geeta Govind /Astapathi / Krishna’s Love songs) from my favorite writer Jeyamohan. I found a soulful rendition of that song by Mrs.Niranjana Srinivasan in youtube. When I was wandering in that paradise, thought about getting immersed in the ocean of love (Kammathuppaal of Thirukkural by Thiruvalluvar). When I was neck deep in it wrote a prose of this couplet (meaning in comments) thinking about the charming girl.
இது தான் நேரமோ தெரியவில்லை. பிறந்தநாளிற்கு ஓர் நாள் முன்பு எனது ஆஸ்தான எழுத்தாளர் ஜெயமோகன் மூலமாக (ஜெயதேவ-இன் கீத்கோவிந்தில் / அஷ்டபதியில்) “ரதி சுக சாரே கதம் அபி சாரே” என்ற பாடலை பற்றி அறிந்தேன். பின்பு யூட்யூபில் தேடி கடைசியில் ஸ்ரீமதி நிரஞ்சனா ஸ்ரீனிவாசன் ஆத்மாத்மார்த்தமாக நன்கு பாடிய நல்ல அப்பாடலை கேட்டேன். அவ்வின்ப வெள்ளத்தில் தத்தளிக்கும் நான் ஏன் நாம் வள்ளுவனின் இன்பத்துப்பாலில் திளைக்கக்கூடாது என்று என் மங்கல் ராதையை மிகுதியாக உள்ளியதால் ஒரு குறள் எடுத்து எழுத முற்பட்டேன்!
பரிமேலழகர் உரை
நாணுடைய நுமக்கு அது முடியாது,' என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது. நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாதா உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன, நாணினை நீக்கி நிறுத்து.
விளக்கம்
('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், அதனை விலக்குவதாய நாணினை அகற்றி, செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகு பெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. 'அதுவும் இது பொழுது நீங்கிற்று' என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதான் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற் குறை நேர்தல் நோக்கி.)
மணக்குடவர் உரை
பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறும்: நாணினை நீக்கி நின்று. இஃது உடம்போடு உயிரும் மடலேறுமெனத் தலைமகன் கூறியது
மு.வரதராசனார் உரை
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
சாலமன் பாப்பையா உரை
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
நன்றி: கூடல்
காதலியின் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைப் பொறுக்காத உடம்பும் உயிரும் நாணத்தை நீக்கி வேறிடத்தே நிறுத்திவிட்டு மடல் ஏறும்.
நாணினை நீக்கி நிறுத்து - நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு.
'ஊராரின் மதிப்பில் உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர். அந்த மதிப்பை இழக்கும் படி உமது நாணத்தை விட்டுவிட்டு உம்மால் மடல் ஏற இயலாது' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறியது இது.
'காதல் மிகுதியால் பிரிவுத்துன்பம் மேலிட்டு என் உடலுடன் உயிர் நிற்காது போலிருக்கிறது. அதனால் எனது நாணத்தை தனியே நீக்கி நிறுத்திவிட்டு உயிரும் தூண்ட உயிரும் உடலும் இரண்டுமே சேர்ந்து மடல் ஏறும். இது உறுதி' என்றான் காதலன்.
நாணம் உடலைக் கூனிக் குறுகச் செய்யும். ஆனால் உயிரும் இங்கே துன்பப்படுவதால் அந்த உயிரின் தூண்டுதலால் துன்பத்தைப் பொறுக்காத உடலும் உயிரும் ஒருங்கே மடல் ஏறத் துணிந்துவிட்டன என்கிறான் காதலன்.
காதல்பிரிவில் உயிரும்
காமப்பிரிவில் உடலும்
காதலியைப் பிரிந்து
வாடித்தவிப்பதால்
நாணத்தை நீக்கி
நாணலாய் வளைத்து
மடல் ஏற* எண்ணுகிறது
மனம்.
மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான். தன்னை விரும்பாத பெண்ணுக்காக மடலூர்வேன் என்று தலைவன் சொன்னால், அது கைக்கிளை ஒழுக்கம். மடலூர்ந்து வந்து ஒருத்தியைப் பெறுவது பெருந்திணை ஒழுக்கம். மடலூர்தல் என்பது தலைவனும் தலைவியும் விரும்பி, பெற்றோர் பெண்ணைத் தர மறுக்கும்போதும் நிகழ்வது.
குறுந்தொகை
சங்கால இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. இதில் மடலூர்-தல் பற்றி பல பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்களை இங்கு பதிவு செய்து உள்ளேன்.
ஓடும் குதிரை என ஓடாத பனைமடல் குதிரையில் ஏறுவர், சூடக்கூடிய மாலை என மலராத மொட்டு எருக்கமாலையை சூடுவார்,அப்படியே வீதியில் தோன்றி பிறரால் நகைக்கபடுவர், அப்படியும் வெற்றி ஆகாதபோது சாகவும் துணிவர், காதல் நோய் கொண்டவர்கள்
32. குறிஞ்சி - தலைவன் கூற்று
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
-அள்ளூர் நன்முல்லையார்.
காலைப்பொழுதும், உச்சிப் பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும், ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியலும் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோற்று மாயின், அத்தகையோருடைய காமம் உண்மை அன்று; பிரிவு வருமாயின், அப்போது, பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து, தெருவில் வெளிப்பட்டு, யாவரும் இன்னாளால் இவன் இச் செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும்; அது செய்யாது உயிரோடு வாழ்ந்திருத்தலும் பழிக்குக் காரணமாகும்.