குறள் 650
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை ]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
இணர் - பூங்கொத்து [மெல்லிணர்க்கண்ணி], தொடர்ச்சி, குலை (bunch of fruit), ஒழுங்கு(arrangement), சுவாலை(flame), கிச்சிலிமரம், மாமரம்.
இணர்தல் - To pervade;வியாபித்தல்;
pervade: (especially of a smell) spread through and be perceived in every part of.
pervade: (of an influence, feeling, or quality) be present and apparent throughout.
இணர்தல் - To pervade;வியாபித்தல்;
pervade: (especially of a smell) spread through and be perceived in every part of.
pervade: (of an influence, feeling, or quality) be present and apparent throughout.
ஊழ் - நியதி, பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை
ஊழ்த்தும் - குணமுடைய; மலர்ந்தும்
நாறு - மணத்தல், தோன்றுதல், மோத்தல் (to smell),
நாறா - மணக்காத
மலர் - பூ
அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons
கற்றது - அறிவு, வித்தை, நூல் ஆகியவற்றை பயின்று
உணர - மற்றவர்களும் (தனக்குமே கூட) உணர படியாக, புரிந்துக்கொள்ளும் படியாக, கற்கும் படியாக
விரித்து -> விரித்துரை - அகலவுரை - விரிவாக எடுத்து
உரையாதார் - உரைக்க தெரியாதவர்கள்
(நாற்றம் இல்லாத காகித பூங்கொத்து)
முழுப்பொருள்
ஒரு பூ மலர்ந்தால் அதனுடைய நாற்றம் சுற்றி இருக்கும் இடங்களுக்கும் வியாபிக்கும். ஆனால் அப்படி நாற்றம் இல்லாத பூக்களும் உலகில் உண்டு. அவை பூங்கொத்துக்களாக பூத்தாலும் அல்லது பூங்கொத்தாக நாம் மாற்றினாலும் அவை மணம் தராது. அவை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட மலர்களால் மணம் என்கிற பயன் இல்லை. ஆதலால் நாம் அவற்றை நம் அருகில் வைத்துக்கொள்ள மாட்டோம். பெண்கள் அவற்றை பொதுவாக சூடிக்கொள்ள மாட்டார்கள். அவை காகித பூக்கள். வெறும் அலங்கார பூக்கள்.
அதேப்போல் ஒருவன் தான் கற்றவற்றை (பல நூல்கள், வித்தைகள், கல்வி) மற்றவர்களுக்கு தெளிவாக (மனம்) உணரும் படியாக விவரிக்க முடியவில்லை என்றால் அந்த கல்வியால் பயனில்லை. அவர்களை நாம் அருகில் வைத்துக்கொள்ள மாட்டோம். அவர்களின் படிப்பு வெறும் அலங்காரம் மட்டுமே. அத்தகையவர்கள் பெற்ற கல்வி காகித பூக்களை போன்றதாகும்.
"நீங்கள் நல்ல வாசகன் எனின் இன்னொருவனை வாசிக்க சொல்லாதீர்கள். வாசித்ததை சொல்லுங்கள் போதும் (வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்)" என்பதே அதற்காக தான்.
மேலும் அசோக் உரை (நன்றி)
பரிமேலழகர் உரை
கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர். (செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்ல மாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்.
இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்றது உணர விரித்து உரையாதார் - தாம் கற்று வைத்த நூற்பொருளைப் பிறர் தெளிவாக அறியும் வண்ணம் விளக்கிச் சொல்லும் ஆற்றல் இல்லாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தாக மலர்ந்திருந்தும் மணந்தராத பூவையொப்பர்.
நன்றாக விரிந்திருந்தும் மணமில்லாத பூப் பயன்படாததுபோல் விரிவாகக் கற்றிருந்தும் விளக்கிச் சொல்லும் திறமையில்லார் பிறர்க்குப் பயன்படார் என்பதாம். இணரூழ்த்தல் என்ற உவம அடை பல்துறைக்கல்வி யாகிய பொருளியல்பை யுணர்த்தும். மணமில்லா மலர்க்கு முருக்கம் (முள்முருங்கைப்) பூவை எடுத்துக்காட்டினர் பரிதியார். நாறுதல் என்னும் பொதுப்பொருள் வினைச்சொல், செய்யுள் வழக்கில் நறுநாற்றத்தையும் உலக வழக்கில் தீநாற்றத்தையும் உணர்த்தும். உம்மை எச்சம்.
"எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்துஞ்
சொல்வன்மை யின்றெனின் என்னாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து. (நீதிநெறி. 5)
என்பது சொல்வன்மையின் சிறப்பை எடுத்துக் காட்டும்.
மு.வ உரை
தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
எவன் ஒருவனுக்கு தான் கற்றதை சொல்ல தெரிகிறிதோ அவன் கற்றதே படிப்பு. அப்படி இல்லையெனில் அவை காகித பூப்போன்றது - மனம் இல்லாதவை. பின்பு படித்து என்ன பயன்.
Thirukkural - Management - Public Speaking - Lack of Expression
Kural, 650, uses a simile. A simile is a direct comparison. Though educated and well read, if a person cannot pass on to others what he has read is similar to the flower vaudeville. Even if the flower is in full bloom, it is of no use to others because it does not have fragrance.
The learned lacking expression
Are flowers without scent.
Every speaker must have the ability to read a complicated writing and interpret that to help his listeners understand the profound meaning. I call that intelligent communication. Moreover, one of the objectives of education is to read, understand what one reads, and communicate that to others so that they can understand and act.
English Meaning - As I taught a kid - Rajesh
When you cannot explain/lecture with clarity on the subject you learnt then it is like an artificial flower without any fragrances. It can be used only for decorative purposes without any other use. Whereas if one has learnt the subject properly, he or she would be able to explain/lecture it with clarity to others. That knowledge can be transmitted/transferred from one person to other.
Questions that I ask to the kid
How you describe with an example about communication with ease/clarity?