குறள் 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
பொருள்
அந்தணர் - அந்தணன் - வேதத்தின்அந்தத்தைஅறிபவன்; அழகியதட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன்
என்போர் - என்கிறவர்
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.
அறவோர் - தரும வழிகளின் படி நின்று வாழும் உயர் குணத்தோர் (பிரமத்தை அறிந்த ஞானிகள்)
மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
எவ் - எந்த
உயிர்க்கும் - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
தண்மை - குளிர்ச்சி; சாந்தம்; இன்பம்; மென்மை; தாழ்வு; விளைவுக்குறைவு; அறிவின்மை.
செந் தண்மை - அருள்
பூண்டு - பூண்(ணு)-தல் - pūṇ- 7 v. [T. pūnu, K.pūṇ.] tr. 1. To put on, wear; அணிதல்.பூண்பதுவும் பொங்கரவம் (திருவாச. 12, 1). 2. To befettered with, shackled with, yoked with;விலங்கு முதலியன தரித்தல். புனை பூணும் (குறள்,836). படுநுகம் பூணாய் பகடே (சிலப். 27, 228).3. To surround; சூழ்ந்துகொள்ளுதல். யாருமச்செங்கணானைப் பூண்டனர் (கம்பரா. இராவணன்கள.19). 4. To undertake, as a business; to as-sume duty; மேற்கொள்ளுதல். போர்த்தொழில்வேட்கை பூண்டு (கம்பரா. படைத்தலை. 1). 5. Tobecome possessed of, as knowledge, love;உடைத்தாதல். அன்பு பூண்டனை (கம்பரா. விபீடணடை. 2).--intr. 1. To become entangled, asa lock of hair; to be caught, as birds in asnare; சிக்கிக்கொள்ளுதல். (W.) 2. To be yoked;நுகத்திற் கட்டப்படுதல். பூண்டன புரவியோ (கம்பரா.இராவணன்வ. 38). 3. To come close together;to become inseparable; நெருங்கி யிறுகுதல். அவனுக்குப் பல் பூண்டுவிட்டது.
ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.
ஆன் - ஆன் - āṉ part. 1. An instr. ending,as in மண்ணானியன்ற குடம் மூன்றனுருபு. (தொல்சொல். 75, உரை ) 2. Ending common to nounsand verbs of the 3rd pers. masc. sing.; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி ஊரான், வந்தான். 3.An euphonic increment, used with a modification of பத்து `ten', as in இருபான் ஒரு சாரியை (நன். 244.)
ஒழுகலான் - நடந்துக்கொள்பவன்
முழுப்பொருள்
ஆதிகாலத்தில் யார் அந்தணன் ?
திருத்தொண்டத்தொகை புராணத்தில் "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்" என்று கூறப்பட்டு உள்ளது. தில்லை வாழ் அந்தணன் சிவன் ஆவான். அதாவது அந்தணன் என்பவன் கடவுள்.
புலன் அடக்கி யோக பயிற்சி செய்து தத்துவ உணர்வு பெற்று அதனால் அவா அறுத்து இறைவனோடு சில பேர் கலந்தார்கள். அவர்களே முற்றும் துறந்த முனிவர்கள். ஆதலால் இறைவனோடு சேர்ந்தவர்களையும் அந்தணன் என்று அழைத்தார்கள். இவர்கள் பெரும்பாலும் ரிஷிகள். இவர்கள் சில சமயம் உலக நன்மைக்காக பிள்ளைகளை பெற்றனர். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது. நாளடைவில் அவர்கள் ரிஷிகள் வழிவந்த குலங்களாக/கோத்திரங்களா கருந்திக்கொண்டனர்.
இந்த துறவிகள் அறங்களை அறிந்து உலக நுட்பங்களை உணர்ந்தவர்கள். இவர்கள் அறங்களை இவ்வுலக மக்களுக்கு சொல்வர்.
யார் அந்தணர்கள்?
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்களுள் முதன்மையாக விளங்குகின்றவர்கள் அதே போன்று விருப்பு வெறுப்பு இவை இல்லாமல், அல்லது அந்நிலையை அடைந்த, பிரமம் எனப்படும் பேருண்மை அறிந்தவர்கள். அவர்களே அந்தணர்கள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றதாலும், அந்தணன் என்பவருக்கு உண்டான தகுதி என்ன என்று வரையறுத்துச் சொல்வதாலும், பிறப்பால் எவரும் அந்தணராவதில்லை, குணத்தால், பேணுகின்ற அறத்தால் மட்டுமே ஆகிறார்கள் என்ற கருத்தை மிகவும் நயமாகச் சொல்லிவிடுகிறார் வள்ளுவர். நாம் ஒருபிறப்பில் செய்யும் நற்கருமங்களே, பின் வரும் பிறவிகளில், நமக்கு நல்ல குலத்தைத் தரும் என்பது உண்மையென்றாலும், நமது அறிவை, அறத்தை நோக்கிய பயணமே நம்மை அந்தணர் என்கிற நிலைக்கு உயர்த்தும்.
குறளின் பொருள்
அந்தணர்கள் என்பவர்கள் அறத்தை காப்பவர்கள். ஆதலால் அவர்களை அறவோர் என்று கூறுவர். அவர்கள் மற்ற எல்லா உயிர்களுக்கும் தீமை ஆற்றமாட்டேன் அருளை / கருணையை மட்டுமே ஆற்றுவேன் என்பதை விரதமாக பூண்டு அதன் படி வாழ்கின்றவர்கள்.
முந்தைய குறளில் (குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது) சான்றோர்க்கு துறவிகளுக்கும் கோபம் வராது என்று கூறப்பட்டது. அப்படி கோபம் வந்தாலும் அது ஒரு கணம் கூட இருக்காது என்று கூறப்பட்டது. அவர்களுடைய கோபம் அழிவை உண்டு பண்ணாது ஏனெனில் துறவிகள் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்வதையே விரதமாக கொண்டவர்கள்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”அறந்த வாநெறி யந்தணர் தன்மையை” (கம்ப.அகத்தியப் 19)
“அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர்” (திருமந் 234)
பரிமேலழகர் உரை
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அன்பும் பரிவும் அறம் வழுவாதோர் இயல்பு.