பொருள்
கற்க - கற்றல்; படித்தல்; பயிலுதல்
கற்க - கற்கத் தகும் நூல்களைப் கற்க
கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு; பிழை
அற - அல்லாமல் கற்க
கற்பவை - நூல்களில் இருந்து கற்றவை, கற்ற அறங்கள்
கற்றபின் - கற்ற பிறகு
நிற்க - நடக்க வேண்டும், பயில வேண்டும்
அதற்குத் தக - அதற்குத் தகுந்தார்ப்போல்
முழுப்பொருள்
வாழ்வில் பிறந்து இறந்தோம் என்றால் இவ்வாழ்விற்கு ஏதாவது அர்த்தம் உண்டோ? இல்லை என்பதே பதில். வாழ்வின் மெய்ப்பொருள் கண்டு வீடு அடைவதே வாழ்வின் சிறப்பாகும். அத்தகைய மெய்ப்பொருளை அறிய நாம் பல நூல்களை கற்க வேண்டும். இந்த உலகில் பிறந்துவிட்டால் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆகவே தான் ”கற்க” என்று கட்டளையாக கூறுகிறார் திருவள்ளுவர். [
குறள் 356: கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் என்பதை நினைவில் கொள்க].
நாம் பல நூல்களை கற்றாலும் அவற்றை முறையாக கற்க வேண்டும். ஒரு ஆசான் அல்லது சான்றோரின் உதவியுடன் கற்றுக்கொள்ளுதல் உதவியாக இருக்கும். இங்கே நம்மிடம் இருக்கும் ஐயங்களை (கசடுகள்) நீக்கும் அளவிற்கு கற்தல் வேண்டும். நாளை நம்மை யாராவது வந்து உதவி கேட்டால் அவரிடம் இருக்கும் எத்தகைய ஐயங்களையும் களையும் அளவிற்கு கற்தல் வேண்டும். [
குறள் 353: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு என்பதை நினைவில் கொள்க].
பாலில் கொஞ்சம் மோர் ஊற்றி உறையவிட்டல் அது தன் நிலையை மாற்றித் தயிராகிவிடுகிறது. அதை நாம் கெட்டுப்போன பால் என்று சொல்லுவதில்லை. உறைந்த தயிரை கடைந்தால் மோரும் ஆகும். அப்பொழுது வெண்ணெய் மேலே மிதக்கிறது. வெண்ணையை காச்சினால் (உருக்கி காச்சினால்) நெய் கிடைக்கும். அப்படி உருக்கிய நெய்யின் அடியில் கசடுகள் இருக்கும். ஆதலால் பாலில் இருந்து நெய்யை பிரித்து எடுக்க நாம் பலவற்றை பிரித்து எடுக்க வேண்டும். அதுப்போலவே கற்றலும், நமது ஐயங்களை பிரித்து எடுத்து நீக்க வேண்டும்.
இப்படி கற்றால் நம்மிடம் இருக்கும் அறிவு சிறப்பானதாக அமையும். ஆனால் அப்படி கற்பதனால் மட்டும் என்ன பயன்? ஒன்றுமில்லை. அது அகந்தைக்கே வழி வகுக்கும். அந்த நூல்கள் சொன்ன அறம் படி வாழ்க்கையை வாழ்தலே அவ்வறிவிற்கு சிறப்பாகும். அதுவே படித்தவருக்கும் சிறப்பாகும். அப்படி கற்ற அறம் படி வாழ்தலே மெய்ப்பொருள் உணர்ந்து வீடு அடைய உதவும்.
வாழ்வில் எதைவேண்டுமானாலும் கற்கலாமா? இல்லை என்பதே பதில். வாழ்வின் கால அளவு மிக சிறியது. ”நிற்க அதற்கு தக” என்று கூறுகிறார். பிறர் நம்மை சான்றோன் என்று கூறும் அளவிற்கு நிற்க (வாழ) வேண்டும். அதற்கு தேவையான அறிவு தரும் நூல்களை கற்தல் வேண்டும். அதனால் தான் கற்றதை மறவாதே அதன்படி நில் (வாழ்) என்பதனை ”பொச்சாவமை” அதிகாரத்தில் கூறியுள்ளார்
“
குறள் 538
உதாரணமாக உடற்பயிற்சி செய்வது நல்லது, அதனை எப்படி செய்யவேண்டும் செய்யக்கூடாது என்று ஐயமற கற்றப்பின்பு அதனை செய்யவில்லை என்றால் கற்றதனால் என்ன பயன்? அதனை கடைப்பிடித்தால் தான் பயன். அதேப்போல் ஒருவர் பலபலக்கபட்ட அரிசி (polished rice) அதீத மாவு சத்துக்கொண்டாது (refined carbohydrates), சர்க்கரை உடம்பில் தேவைக்கு அதிகமான பசியை தூண்டக்கூடிய தன்மைக்கொண்ட அம்மிலம் (chemical) உடம்புக்கு கேடுவிளைவிப்பது என்று அறிந்துக்கொண்டப்பிறகும் அவற்றை முற்றிலும் நிராகரிக்கவிட்டாலும் குறைந்தது அவற்றின் உட்கொள் அளவை குறைக்கவில்லை என்றால் கற்றதனால் என்னப்பயன்?
மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஒரு குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.
நாலடியார் (135) பாடலொன்று, கற்றலின் சிறப்பை இவ்வாறு கூறுகிறது.
“கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைப்பிற் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலூண் குருகிற் றெரிந்து”
அறநெறிச் சாரப்பாடல் (141) கற்றலின் பெருமையை இவ்வாறு கூறுகிறது.
“எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவதற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை – அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்”
1) கல்லாப் பிழை - நாம் நமது முன்னோர்கள் பெருமையை, வரலாற்றைப் கற்க வேண்டும். கற்கவில்லையென்றால் அது கல்லாப் பிழை.
2) சொல்லாப் பிழை - நாம் நமது முன்னோர்கள் பெருமையைப் பற்றி வரலாற்றைப் பற்றி அடுத்த தலைமுறையினர்க்கு சொல்ல வேண்டும். அப்படி பெருமைகளை எடுத்துச் சொல்லவில்லையென்றால் அது சொல்லாப் பிழை
3) நில்லாப் பிழை - நாம் கற்றவற்றில் இருந்து அதற்கேற்ப நடக்கவில்லை என்றால், நமது முன்னோர்களின் பெருமையடைய காரணமாய் இருந்த வழி நிற்கவில்லையென்றால் அது நில்லாப் பிழை
நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
மூளையின் செரியாமை
நமது உடலால் அல்லது செரிமான உறுப்புகளால் எவ்வளவு செரிக்க முடியுமோ அவ்வளவு நாம் உண்பதில்லை. ஒருநாளும் அளவறிந்து உண்பதில்லை. நமக்கு அளவு தெரியவும் தெரியாது.
அளவறியாமல் உண்பதினாலே நாம் பிணிகளால் பின்னப்படுவது போல நாம் அளவறிந்து படிப்பதும், கேட்பதும், சிந்திப்பதும் இல்லை. நம்முடைய மூளையாலும், மனதாலும் எவ்வளவு வாங்கி செரிக்க முடியுமோ அந்த அளவுக்கு மூளைக்கு வேலை, செய்தி கொடுப்பதில்லை.
வயிற்றுக்கு எப்படி செரிக்க முடியாத அளவுக்கு உணவு கொடுத்து வயிற்றையும், உடலையும் கெடுக்கிறோமே அது போல மனதிற்கும் செரிக்க முடியாத அளவிற்கு செய்திகளை கொண்டு போய்க் கொட்டிக் கொண்டே இருக்கிறோம். எவ்வளவுதான் செரிக்க முடியும் நம் மனதால். அளவு நமக்குத் தெரியாது. வயிற்றுக்கே தெரியவில்லை என்றால் மனதிற்கு எப்படித் தெரியும்?
எப்படி வயிற்றில் செரிக்கா விட்டால் பேதி ஆகிறதோ, வாந்தி ஆகிறதோ அது போல மூளை செரிக்காவிட்டால் அவன் பேசிக் கொண்ஏ இருப்பான். எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். அப்புறம் பைத்தியமாகத் திரிவான். பைத்தியம் என்பது வேறொன்றும் இல்லை. மூளையின் செரியாமையினால் ஏற்பட்ட ஒரு எதிர் விளைவு.
மனதின் உள்வாங்கும் சக்திக்கேற்ப சரியான அளவு செய்திகளை, சிந்தனைகளை அளிக்க வேண்டும். வள்ளுவரும் கசடற கற்க, அதை அளவோடு கற்க, கற்றபின் எவ்வளவு உண்ணால் நிற்க முடியுமோ அதற்கேற்ப கற்க. கற்றலிலும் எந்த அளவிற்கு நம்மால் பின்பற்ற முடியுமோ அந்த அளவிற்குக் கற்க என்று வைத்துவிட்டால் படிக்க வேண்டிய நூல்கள் எவ்வளவு இருக்கும்? தெளிவான சிந்தனை ஒன்று இருந்தது என்றால் அவன் படிக்க வேண்டிய வேலையே இருக்காது. நாமே நூலாக மாறுகிறோம். ஆசிரியராக மாறுகிறோம். செயலாக மாறுகிறோம்.
பரிமேலழகர் உரை
[அஃதாவது , அவ்வரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல் , அவையாவன , அறநூலும் , நீதிநூலும் , யானை குதிரை தேர்படைக்கலம் என்ற இவற்றின் நூல்களும் முதலாயின . அரசன் அறிவுடையன் ஆயக்கால் தன்னுயிர்க்கே அன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி , இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும் பொதுப்படக் கூறுகின்றார் . மேல் ' தூங்காமை கல்வி ' (குறள் . 383 ) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின் , இஃது இறை மாட்சியின் பின் வைக்கப்பட்டது .]
கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
Thirukkural - Management - Learning
Learning is a lifelong process. It is a continuous process. One of the differences between human beings and animals is that human beings have the ability to learn and apply what they learn. “Learning is a relatively permanent change in behavior that occurs as a result of experience,” (Robbins, 2001). Learning is a relatively permanent change as no change is permanent. That relatively permanent change must occur because of experience. Experience can be through reading, doing, observing, and listening.
Valluvar has detailed on how to learn, the need to learn, and the challenges a person faces in the process of efficient and effective learning. Kurals reinforce the importance and advantages of learning for life. According to Valluvar, the process of effective learning involves two stages, as he presents in Kural 391.
Learn well what should be learnt, and then
Live your learning.
Stage one is to learn, whatever you learn, a thing thoroughly with involvement, concentration, and conviction. Learning should be holistic and faultless. Most of the time learning does not last long as people do not resort to purposeful learning. Purposeful learning is learning with an objective to assimilate and apply what one learns.
Stage two is to follow or practice what you have learned according to stage one. Any learning is incomplete without application or implementation of learning. In training language, this practice is called transfer of learning. So, just knowing is not learning. Learning includes both knowing and doing. Doing what one learns gives one experience. Experience in itself is learning. So, knowing and doing are interrelated in learning.
English Meaning - As I taught a kid - Rajesh
Learn well, learn good things, learn without mistakes and stand by what you have learnt and act accordingly.
Questions that I ask to the kid
How should you learn? What should you do after studying?