நாளும் ஒரு திருக்குறள் - ஒவ்வொரு சொல்லாய் ஆழ் பொருள் - A sincere attempt at understanding the deeper meaning of Thirukkural by analyzing individual word meanings and holistic meaning. A new project is currently undertaken to add english meanings which can be of help to non-english readers. It also has questions that can be asked to kids who learn these kurals. P.S: Meanings in english are currently written
Search This Blog
Disclaimar
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
இனைத் - iṉai adj. of this degree (in respect of size or quantity) இன்ன; இத்தனை வருத்தம்
துணைத்து - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
என்பது - என்று அறியப்படுவதெல்லாம்
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.
இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.
விருந்தின் - விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.
துணைத் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).
வேள்விப் - யாகம்; ஓமகுண்டம்; பூசனை; கலியாணம்; ஈகை; புண்ணியம்; காண்க:களவேள்வி; மகநாள்.
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
முழுப்பொருள்
ஒரு இல்வாழ்வான் ஐந்து வேள்விகளை செய்யவேண்டும் என்று அறநூல்கள் கூறுகின்றன. 1. ப்ரம்ம/ப்ரஹ்ம வேள்வி (பரம்பொருளை (மூலக்கடவுள்) தேடிச் செய்யப்படுகிற வேள்வி) 2. தேவ வேள்வி (தேவர்களுக்காகச் செய்யப்படுகிற வேள்வி) (அக்னி வளர்த்து நவதானியம் வளர்த்து செய்ய படுவது. அக்நி மாசற்றது. ஆதலால் தான் அக்நி மூலம் தேவர்களுக்கு உணவு அளிக்கிறோம்) 3. பிதுர் வேள்வி (மூதாதையர்கள் செய்யப்படும் வேள்வி) 4. (பஞ்ச) பூத வேள்வி (காக்கை உணவளித்தால் கூட பஞ்ச பூதங்களுக்கு உணவளித்து திருப்தி பண்ணுவது போல் ஆகும் 5. மானுடர் வேள்வி (அதாவது விருந்து. மானுடர்களுக்கா செய்வது).
அதனால் தான் விருந்தை வேள்வி என்று கூறுகிறார் திருவள்ளுவர். மனிதனை பேணுபவன் மானுடத்தை பேணுகிறான். சமூகத்தை பேணுகிறான்.
மனிதன் எதை கொடுத்தாலும் போதும் என்று சொல்ல மாட்டான். பணம், புகழ், வீடு, வாசல் என்று எந்த ஒரு பொருட்ச்செல்வம் கொடுத்தாலும் அவன் மனம் அவ்வளவு எளிதாக நிறைவடையாத. ஆனால் மனிதன் நிறைவடையும் ஓர் இடம் உணவு. போதும் என்று வயிறும் மனமும் உணவிற்கு மட்டுமே சொல்லும். அதுவே உணவின் சிறப்பு என்றும் கூறலாம். ஆதலால் ஒருவரை மன நிறைவு அடைய செய்து பார்க்க கூடிய ஆற்றல் விருந்திற்கு உண்டு.
விருந்தினர்களுக்கு விருந்து அளித்து ஓம்புவது அறம். ஆனால் அவ்விருந்தின் பயன் இவ்வளவு தான் என்று வரையறை செய்யமுடியாத அளவிற்கு அதற்கு பயன் உண்டு. விருந்தும் ஒருவித வேள்வியே. வேள்வி எப்படி அதற்கான அவிஸ் மற்றும் நெய்யினை கொடுக்கும் தோறும் உண்டுகொண்டே இருக்கோமோ அதுபோல் விருந்தில் மக்கள் உண்டுகொண்டே இருப்பார்கள். உணவு வேண்டி நிற்கும் மக்களுக்கு உலகில் பஞ்சமில்லை. ஆதலால் விருந்தின் பயன் வேள்வியின் பயன் போன்றது. விருந்தில் உதவுவோன் பசியாக இருப்போர்க்கு உணவளித்து பசியாற்றி உதவுகிறானா என்பதை பொருத்தே விருந்தின் பயன் அமையும். விருந்தின் தகுதி அதாவது தேவையானவர்களுக்கு உணவளிக்கிறோமா என்பதை பொருத்தது ஆகும்.
விருந்தின் பயன் விருந்துக்கு வந்தோரின் தகுதியை பொருத்தே என்பது பொருந்தாது என்பது எண்ணம்.
ஆனால் மற்ற உரைகள் விருந்து பயன் விருந்தை பெறுபவனின் சால்பை பொருத்தது ஆகும் என்று கூறுகின்றன. அவ்வாறு எடுத்துக்கொண்டால் எப்படி என்று பார்ப்போம். இது எப்படி என்றால் உதவி செய்யும் பொழுது நாம் கொடுக்கும் ஐந்து ரூபாய் (அல்லது ஐந்து டாலர் / வோன்) அல்ல புண்ணியம். நாம் யாருக்கு கொடுக்கிறோம் அவரின் தகுதிக்கு ஏற்றவாறே புண்ணியம். அது விருந்துக்கும் பொருந்தும் என்கிறார் திருவள்ளுவர். விருந்தை பெறுவோரின் தகுதியை பொருத்தே விருந்தின் பயனும் அமையும்.
கிருஷ்ணன் ஒரு அரக்கியிடம் இருந்து தாய்ப்பால் உண்டப்பிறகு அவ்வரக்கிக்கு புகழ் கிட்டியது அல்லவா?
ஆதி சங்கரரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சி. அவர் ஒரு வயதான வறிய மூதாட்டிக்கு, அவள் வறியவளாக இருந்தாலும், வாயிலில் “ பிட்சை”க்காக நின்ற அந்தணச் சிறுவனுக்கு தன்னிடமிருந்த ஒரே நெல்லிக்கனியை ஈந்த கனிவுக்காக பொன்மாரி பொழிவித்ததும், அதன்காரணமாக கனகதாரை என்கிற கவியமுதம் பொழிந்ததும் நிகழ்ச்சி என்பதைவிட நெகிழ்ச்சி என்பதே சரி.
இது வாயிலில் உணவென்று வந்தவருக்கு, வறுமையிலும் தன்னிடமிருந்த ஒன்றைத் தந்த மூதாட்டியின் வரலாறு.
இராமாயணத்தில் வரும் சபரியின் விருந்தோம்பும் பண்பு அவளுக்கு வீட்டுப்பேற்றினை அளித்தது.
சிறுதொண்டர் சிவனடியாருக்குப் பிள்ளைக்கறி சமைத்த நிகழ்ச்சி. அவ்வில்லத்தினரின் விருந்தோம்பும் பண்பு அவர்களுக்கு இறைவனின் பதத்தினைத் தந்தது
கம்பராமாயணப்பாடல் மிக எளிதாக வாமன அவதாரத்தில் மகாபலிச் சக்ரவர்த்தியின் கொடைக்குச் சமமாக வாமனன் உயர்ந்து, வளர்ந்து நின்றதை குறிக்கும் விதமாக இவ்வாறு எழுதுகிறான்.
“கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே”
சமிபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “அன்னம்” சிறுகதை வாசித்தேன். அதில் ஒரு பகுதி கீழே. இப்பகுதிகளும் விருந்தோம்பலை வேள்விக்கு நிகராக விவரிக்கபட்டுள்ளது
ஒப்புமை
பரிமேலழகர் உரை
வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.
மு.வரதராசனார் உரை
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
சாலமன் பாப்பையா உரை
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மணக்குடவர் உரை
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.
அகனமர்ந்து செய்யாள் உறையும்
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
பொருள்
அகன் - akaṉ n. அகல். Breadth; அகற்சி.சிலம்பாற் றகன்றலை (சிலப். 11, 108).; இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
அமர்ந்து - அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்
செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார்.
செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு.
உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.
உறையும் - உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.
முகன் - mukaṉ s. poet, form of முகம், face; தலையில் நெற்றி முதல் மோவாய் வரையுள்ள முன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.
அமர்ந்து - அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்
நல் - நல்ல; வறுமை
விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.
ஓம்புவான் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
முழுப்பொருள்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
விருந்து - viruntu n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)
வைகல் - vaikal n. வைகு-. 1. Dwelling;staying; தங்குகை. (பிங்.) 2. Passing; கழிகை.மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ (பதிற்றுப்.71, 16). 3. See வைகறை, 1. (சூடா.) 4. Day;நாள். இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீமுன்னிய வினையே (புறநா. 363). 5. cf. vaikāla.Day that has passed away; கழிந்த நாள். (பிங்.)6. cf. vikala. Instant, moment; வேளை. மாதவிதன்னோ டணைவுறு வைகலி னயர்ந்தனன் (சிலப். 3,173).
வைகலும் - vaikalum adv. id. Daily,everyday; நாடோறும். அடிசில் பிறர்நுகர்க வைகலும் (பு. வெ. 10, 8).
ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
ஓம்புவான் - உபசரிப்பான், பேணுவான்
வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.
பரு - இயல்பாக இல்லாமல், சற்று பருத்து இருக்கும் நிலை
பரு - paru n. paru. cf. பரு-. 1. Pimple,as on the face; pustule; blotch; முகமுதலியவற்றிலுண்டாஞ் சிறு கட்டிவகை. Colloq. 2. Boil;சிலந்திப்புண். Loc. 3. Node; கணு (யாழ். அக.)4. Sea; கடல் (யாழ். அக.) 5. Mountain; மலை (யாழ். அக.) 6. Heaven; சுவர்க்கம் (யாழ். அக.)7. Sprout of paddy plant; நெல்லின் முளை Tj.
பரு - paru adj. great gross, see under பருமை.
பருமை - parumai n. cf. bṛh. [K. perme.]1. Thickness; bulkiness; corpulence; பருத்திருக்கை. 2. Greatness; பெருமை 3. Roughness,coarseness, grossness; பரும்படியான தன்மை 4.Seriousness, importance, gravity; முக்கியம் இதுபருங்காரியமாயிருக்கிறது. (W.)
பாழ்படுதல் - pāḻ n. பாழ்-. [K. hāḷ.] 1.Desolation, devastation, ruin; நாசம். நரகக்குழிபலவாயின பாழ்பட்டது (சடகோபரந். 5). 2.Damage, waste, loss; நட்டம். வெள்ளப்பாழ்,வறட்பாழ், குடிப்பாழ். 3. Corruption, decay,putrifaction; கெடுதி. ( W .) 4. Baseness, wretchedness, evil; இழிவு. ( W .) 5. That which isugly or graceless; அந்தக்கேடு. நீறில்லா நெற்றிபாழ் (நல்வழி, 24). 6. Profitlessness ..
இன்று - iṉṟu n. and adv. இ³. [K. indu,M. innu.] This day, to-day; இந்நாள். (நாலடி,36.)
இன்று - iṉṟu part. An expletive; ஓர்அசைச் சொல் (திவா.)
இன்று - iṉṟu id. part. No; இல்லை.--adv.See இன்றி. உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே (நன். 172, மயிலை.).
வாழ்க்கை என்ற சொல்லுக்கு செல்வநிலை என்ற பொருளும் உண்டு. ஆதலால் ஒவ்வொரு நாளும் வருகிறவர்களுக்கு எல்லாம் விருந்துதளித்து உபசரிப்பதனால் வறுமை வந்து அவன் செல்வத்தை நாசம் செய்யாது என்று கொள்ளாலாம். இதனையே நாம் "தருமம் தலைக்காக்கும்" என்றும் சொல்லலாம்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்
இல் வாழ்வது - இல்வாழ்க்கை வாழ்வது
எல்லாம் - எல்லாமே, அனைத்தும்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவின் ஆன்மா துறவில் உள்ளது என்று உணர்ந்ததாகவும், அதனை விவேகானந்தரும் சொன்னதாகவும் அவரின் “அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ் “ பயணக்கட்டுரையில் பதிவு செய்து இருக்கிறார்.
சுற்றிலும் பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டிடங்கள். அவை எல்லாமே தங்குமிடங்கள். பெரும்பாலும் காலியாகவே இருக்கவும் கூடும் என அங்கே பார்த்ததுமே தெரிந்துகொண்டேன். அது மெல்ல மெல்ல மனக்கொதிப்பை உருவாக்கியது. உடனே அங்கிருந்து சென்று விடவேண்டும், ஒரு சொல் கூட அந்தக் காவிதாரியிடம் பேசக்கூடாது என நினைத்தேன். அவரைப் பார்க்காமலேயே வெளியேறினேன்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது அவரிடம் கேட்டார்கள், அமெரிக்காவில் உங்களைக் கவர்ந்தது என்ன என்று. இங்குள்ள பொது அற அமைப்புகள்தான் என்று அவர் சொன்னார். பின்னர் எழுதினார், இந்தியா நூற்றாண்டுகளாகப் பெரும் அறநிலைகளை அறநெறிகளை உருவாக்கி நிலைநாட்டி வந்தது. அவையெல்லாம் நவீன காலகட்டத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன, நவீன அற அமைப்புகளை உருவாக்கி அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்று. அவ்வாறு அவர் உருவாக்கிய அமைப்புதான் ராமகிருஷ்ண மடம். அதற்கு அவருக்குத் தெளிவான நோக்கம் இருந்தது.
விவேகானந்தர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார், இந்த நாட்டின் பாரம்பரியமும் கலைகளும் ஆன்மீகமும் நிலை நிற்பதே உலகியலை உதறி இந்த நாட்டு நிலவெளி முழுக்க அலைந்து திரியும் அன்னியர்களால்தான் என. இங்குள்ள பெரும்பாலான ஆன்மீக வழிகளில் துறவி ஆவதற்கு முன் பிச்சை எடுத்து உண்டு அலையும் வாழ்க்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லௌகீகம் சம்பந்தமான பயமும் கவலையும்தான் ஆன்மீகமான சிந்தனைக்குப் பெரும் தடைகள். அவற்றில் இருந்து முற்றாக விடுபட்டவனே உண்மையில் எதையாவது ஆழத்தில் சென்று சிந்தித்தறிய முடியும். ராமகிருஷ்ணரே அவரது மாணவர்களைப் பிச்சை எடுக்க அனுப்பியிருக்கிறார். விவேகானந்தரும் அப்படி பவிராஜக வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.
ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, கலையிலும் கூடத்தான். இந்நாட்டின் முக்கியமான எல்லா எழுத்தாளர்களும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்த வாழ்க்கை கொண்டவர்களே. பஷீராக இருந்தாலும், காரந்தாக இருந்தாலும். அவர்களைப் பேணும் அமைப்புகள் இந்நாடெங்கும் இருந்தன. ஒவ்வொரு இந்துவும் சமணரும் பௌத்தரும் சீக்கியரும் அந்த மனநிலை கொண்டிருந்தார்கள். அன்னியர்களை ஐயப்படுவதற்கும் புறக்கணிப்பதற்கும் பதிலாக அவர்கள் அன்னியர்கள் என்பதற்காகவே அவர்களைப் பேணும் ஒரு பண்பாடு. இன்றும் அந்தப் பண்பாடு நம் கிராமங்களில் உள்ளது. சாவடிக்குச் சென்று இரவுணவுக்கு எவராவது உள்ளனரா என்று பார்த்து உணவிட்டபின்னரே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்ற மரபு இன்றும் கூட பல்லாயிரம் தமிழகக் கிராமங்களில் உள்ளது.
சென்ற நூற்றாண்டில் பிரம்மசமாஜம் இந்த விழுமியங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. அலைந்து திரிபவர்களை சோம்பேறிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் அது சொன்னது. அந்த மனநிலை பெருகி ஒருகாலத்தில் அலைந்து திரியும் அன்னியர்கள் பேணப்படாது போய்விடுவார்கள் என விவேகானந்தர் அஞ்சினார். ஒருநாட்டின் ஆன்மீக சாரம் அந்த அன்னியர்களால், நாடோடிகளால்தான் நிலைநிற்கும் என்று அவர் சொன்னார். ஆகவே அதற்கான நவீன அமைப்பை உருவாக்க வேண்டுமென விரும்பி அவர் ராமகிருஷ்ண மடங்களை உருவாக்கினார். ஓர் இளைஞன் இன்னதென்றறியாத மன எழுச்சியால் உந்தப்பட்டவனாகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் உதறி எங்கு செல்வதென்றில்லாமல் செல்லும் அந்தப் பயணத்தில் எந்நேரத்திலும் அடையா வாசலும் உணவும் தலைசாய்க்க இடமுமாக அந்த அமைப்பு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
அங்கேதான் இந்த ஆசாமிகள் காவிகளைக் கட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இன்று. இன்று இவர்கள் செய்யும் வேலை என்ன? விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பெயரைச்சொல்லி பெருநகர்களில் அமைப்புகளை உருவாக்குகிறார்கள். பெரும் பணக்காரர்களின் இல்லங்களைத் தேடிசென்று தொடர்புகளை உருவாக்குகிறார்கள். பல்லிளித்துப் பசப்பி நன்கொடைகளைப் பெற்று பெரும் கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். அவற்றுக்குள் நெய்விட்டு சோறு தின்று ஊன் வளர்த்து அமர்ந்திருக்கிறார்கள். சில வீணர்கள் சிலரை ஏமாற்றித் தின்று வாழ்வது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு இந்த தேசம் கண்ட விடிவெள்ளியின் பெயர் பயன்படுத்தப்படுவதே கொந்தளிக்கச் செய்கிறது.
என்னால் மிக எளிதாக ஓர் சிபாரிசைத் தொலைபேசியிலேயே ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் அது இன்றைய நான். முப்பதாண்டுகளுக்கு முன், பதறும் கண்களும் தயங்கும் நடையுமாக, கையில் பைசா இல்லாமல், பசித்துக் களைத்து நான் வந்து இந்த வாசலில் நின்றிருந்தால் என்னை இவர்கள் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். இந்த இடத்தில் இன்றும் என் அகம் அந்த அவமதிப்பை உணர்கிறது. இந்தக் காவி அணிந்த குமாஸ்தா ஒவ்வொரு அரசாங்க அமைப்பிலும் அமர்ந்திருந்து விதிகளைக்கொண்டு அந்த அமைப்பையே தோற்கடிக்கும் அதே ஆன்மாதான்.
நான் சென்ற ஒவ்வொரு முறையும் அரவணைத்து உணவிட்ட சமண நிலையங்களும் குருத்வாராக்களுமே எனக்கானவை. இது அல்ல. இது இந்து சமூகம் மேல் இருக்கும் ஒரு சீழ்க்கட்டி.
அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்
நான் சீனுவிடம் கேட்டேன், சிங்கப்பூரில் நான் ஆற்றிய உரையை வாசித்திருக்கிறீர்களா என. நானும் அதையேதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் சார் என்றார் அவர். நான் இந்தியா என்று ஆரம்பித்துப் பேசும்போது என்னிடம் பேசவருபவர்கள் ஒரு அரசியல் கட்டமைப்பை, ஒரு வரைபடத்தை இந்தியா என எண்ணிப் பேசவருகிறார்கள். இந்த தேசத்து நிலப்பரப்பில் அலைய ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. நான் இந்தியா என நினைப்பது எனக்கு அன்னமிட்ட ஆயிரக்கணக்கான கைகளை. நான் மிக அபூர்வமாகவே பட்டினி கிடந்திருக்கிறேன். அனேகமாக எங்கும் இல்லறத்தாரால் கனிவுடன் மட்டுமே உணவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு என் தேசம் மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்னபூரணிதான்.
கலை இலக்கியம் எதற்காக? (எழுத்தாளர் ஜெயமோகன்)
பதினைந்து வருடம் முன்பு ஒரு உயர்காவலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்தியக் காவல்துறை அமைப்பு என்பது உண்மையில் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. ஏறத்தாழ இருபதாயிரம் பேருக்கு ஒருகாவலர் வீதம் இங்குள்ளனர். உண்மையில் இந்தியாவில் உள்ள அமைதி என்பது போலீஸ் நோக்கில் ஓர் ஆச்சரியம்
”இங்க பசிச்சவன் கிட்ட கருணையும் நியாயமும் இருக்கு சார்” என்றார் அந்த அதிகாரி. அதை எப்படி புரிந்துகொள்வது என்பதில் நீங்கள் வேறுபடலாம். ஓயாது இந்திய நிலத்தில் அலைபவன் என்றமுறையில் இந்த மண்ணின் ஒவ்வொரு துளியிலும் ஊறிக் கொண்டிருக்கும் கருணையை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். இந்திய நிலத்தில் எங்கும் முலைகனிந்த அன்னையரும் அகம் கனிந்த தந்தையரும் காணக்கிடைக்கின்றனர்.
அவர்களின் வாழ்வின் சாரமாக உள்ள அறம்தான் என் கற்பனையின் ஈரம் சென்று தொடும் விதை. என் பத்தொன்பது வயதில் அம்மா அப்பா இருவரும் இறந்தபின் கையில் ஒரு பைசா இல்லாமல் வீட்டைவிட்டு கிளம்பி அலைந்திருக்கிறேன். என் நாட்டில் நான் ஒருவேளைக்குமேல் பட்டினிகிடக்க நேரவில்லை. ஒரு அன்னையை நான் இழந்தேன் . பல அன்னை முகங்கள் எனக்கு சோறூட்டின. அந்த முகங்களை இப்போது என்னிப்பார்க்கிறேன். அவைதான் இந்தியாவின் முகம்.
வ.உ.சிதம்பரனார் உரைபொருள்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்- (தன்பால் நின்று) செல்லும் விருந்தினரைப் பேணி (த் தன்பால்) வரும் விருந்தினரை (எதிர் நோக்கி) இருப்பவன், வானத்து அவர்க்கு நல் விருந்து - வானத்தின்கண் வாழும் தேவருக்கு நல்ல விருந்தினன் (ஆவன்).
அகலம்: செல், வரு என்பன வினைத் தொகைகள். அவை மேற்கூறிய பொருளன வாதலைத் ‘தருசொல் வருசொல்லாயிரு கிளவியுந், தன்மை முன்னிலை யாயீரிடத்த’, ‘ஏனை யிரண்டுமேனை யிடத்த’ என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் அறிக.
இச் சூத்திரங்களை அறியாதார் ‘செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்’ என்பதற்குத் ‘தன்கட் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ண இருப்பான்’ என்று உரைப்பார்.
கருத்து: விருந் தோம்புவான் தேவர்களால் சிறப்புச் செய்யப் பெறுவான்.