Skip to main content

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இருந்து -  இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

ஓம்பி - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; tocherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch orgrasp tightly, as a miser; இவறுதல் பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626)

இல் வாழ்வது - இல்வாழ்க்கை வாழ்வது

எல்லாம் - எல்லாமே, அனைத்தும்

விருந்து - புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்;

ஓம்பி ஓம்புதல் 

வேளாண்மை - vēḷ-āṇmai   n. வேள் +ஆள்-. 1. Gift, bounty, liberality; கொடை. (பிங்.)2. Beneficence, help; உபகாரம். விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81). 3.Cultivation of the soil, agriculture, husbandry;பயிர்செய்யுந் தொழில். 4. Truth; சத்தியம். (பிங்.)வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84); 2. gift, bounty, liberality, ஈகை; 3. truth, மெய்.

செய்தற்பொருட்டு - செய்வதற்காக

முழுப்பொருள்
இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக வாழ்கிறவர்களுக்கு பல கடமைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று விருந்தோம்பல். கணவன் மனைவியாக வாழ்வது அவர்கள் இருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ற சுயநலத்திற்கு அன்று. அவர்கள் இல்வாழ்க்கை வாழ்வது என்பது ஈகை செய்வதற்காக. வந்த விருந்தினருக்கு இருக்க இடம் கொடுத்து உபசரித்து நன்கு வயிராற உணவளித்து அவர்களை பேணுவதே விருந்தோம்பல். இல்வாழ்க்கையே வாழ்வது என்பதே வரும் விருந்தினரை உபசரிக்கவே என்கிறார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக் உரை

சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்துள்ள கண்ணகி, அவன் (அவள் தலைவன் கோவலன்) இல்லாமல் தன்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறாள். அப்பாடல் கீழே
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற
-- இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ( / 2. மதுரைக் காண்டம் / 6. கொலைக்களக் காதை)

பொருள்
அறநெறியாளர்களுக்கு  அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும்  இல்லறம் பூண்டோர் கடமை. இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.  

இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து  அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர். 

அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன்.  - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.  
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்) 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார். 
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.

வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.

அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.

நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.

அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு,  இப்படி நிறைய்ய.

(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.

என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.




பரிமேலழகர் உரை
[அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடைநின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின்பின் வைக்கப்பட்டது.)

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.

மணக்குடவர் உரை
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

மு.வரதராசனார் உரை
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வந்தாரை உபசரிப்பதே வாழ்வின் பொருள்.

பொருள்: இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - (ஒருவன்) இல்லின்கண் தங்கி (பொருளைக்) காத்து வாழ்த லெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு- விருந்தினரைப் பேணி (அவருக்கு) உதவி செய்தற் பொருட்டு.

அகலம்: எல்லாம் என்பது ஈண்டு எஞ்சாப் பொருட்டாயதோர் உரிச்சொல். பொருள்+து = பொருட்டு. பொருட்டு ‡ பொருளையுடையது. ‘விருந்து’ ஆகுபெயர், அதனை உடையார்க்கு ஆயினமையால்.

கருத்து: இல்லின்கண் வாழ்வது விருந்தினரைப் பேணுதற்கே.

English Meaning - As I taught a kid - Rajesh
For the married couple, who "live" their lives, one of their duties is hospitality. They have to warmly receive guests (mainly sages, saints, elders, friends and whoever coming hungry) and serve them with food. The couple is engaged to themselves. But they shouldn't be selfish. They have to serve the needy with their hospitality.

Questions that I ask to the kid
What is the main duty of married couple? 
Is marriage meant to be a selfish, taking care of themselves?

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...