Skip to main content

Posts

Showing posts from September, 2014

சொல்லப் பயன்படுவர் சான்றோர்

குறள் 1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். [பொருட்பால்,  குடியியல்,  கயமை] பொருள் சொல்லுதல் -  பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். சொல்லப் - தெளிந்தோர் (கற்றோர்/ சான்றோர்) கூறும் அறிவுரைகளை கேட்டு பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். பயன்படுதல் - payaṉ-paṭu-   v. intr. id. +.To be of use or service; பிரயோசனப்படுதல்.சொல்லப் பயன்படுவர் சான்றோர் (குறள், 1078).   பயன்படுவர் - பயன்படுவார்கள் சான்றோர் - சான்றோர்கள், அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர். கரும்பு - karumpu   n. [K. kabbu, M. karimpu,Tu. karumbu.] 1. Sugar-cane, a saccharinegrass, Saccharum officinarum. கரும்புபோற்கொல்லப் பயன்படுங் கீழ் (குறள், 1078). 2. TheSeventh nakṣatra; புனர்பூசம் (திவா.)   கரும்புபோல்  - கரும்பினைப் போன்று (நசுங்கினால் தான் சாறு தரும்) கொல்லுதல் - வதைத்த...

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின்

குறள் 1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். தாம்வீழ்வார் - தாமாக காதலுக்கு வீழ்வர் (தானும் அவளை/அவரை காதலிப்பர்); தாம் விரும்பும் மகளிர் மென்றோள்   - மெல்லிய தோளுடைய மகளிர் துயிலுதல் - உறங்குதல்; தங்குதல்; இறத்தல்; மறைதல். துயிலின் - (அவளுடன்) உறங்குவது போல இனிது  - இனிமையானது (சொர்க்கமானது); இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக கொல் -   A poetic expletive--as in காணுங்கொல், he will see, அசைச்சொல். 2. A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி . 3. An imitative sound--as in கொல்லெனச்சிரித்தார்கள், they broke out into laughter, ஒலிக்குறிப்பு. 4. s. Suffering, distress, affliction, வருத்தம். (சது.) 5. [With suitable prefixes,] Gold or iron. 6. The blacksmith's caste; a blacksmith, கொல்லன். 7. A mas...

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

குறள் 521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்  சுற்றத்தார் கண்ணே உள [பொருட்பால், அரசியல்,சுற்றந்தழால்] பொருள் பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை. அற்ற - அல்லாத, அல்லாமல் கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். பழைமை -  தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு. பாராட்டுதல் - புகழ்தல்; அன்புகாட்டுதல்; பெருமிதம்உரைத்தல்; கொண்டாடுதல்; பலகாலம்சொல்லுதல்; விரித்துரைத்தல்; மனத்தில்வைத்தல். சுற...

ஈதல் இசைபட வாழ்தல்

குறள் 231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது  ஊதியம் இல்லை உயிர்க்கு [அறத்துப்பால், இல்லறவியல், புகழ்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் இசைபட - இசைபடுதல் - இசைதல் - பொருந்துதல்; ஒத்துச்சேர்த்தல்; உடன்படுதல் கிடைத்தல் இயலுதல் வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். அதுவல்லது - அது அன்றி ,அது அல்லாமல்  ஊதியம் - இலாபம்; கல்வி; பயன். இல்லை  - உண்டுஎன்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று. உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் முழுப்பொருள் இல்லாத எளிய ,வறியவருக்கு உதவி செய்து வாழ்ந்து,அவ்வாறு வாழ்வதனால் நமக்கு உண்டாகும் புகழை தவிர வேறு எதுவும் பெரிய ஊதியமோ லாபமோ இல்லை. ஒருவன்புகழ் உச்சியினை அடைய பல்வேற...

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

குறள் 169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அவ்வி - avvi   VI. v. i. become impatient; 2. pervert the mind, மனங்கோணு.   அவ்வித்தல் - பொறுமைஇழத்தல்; மனம்கோணச்செய்தல். அவ்விய   - பொறாமை, அழுக்காறு கொண்ட நெஞ்சம் - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. நெஞ்சத்தான் -  நெஞ்சம் (மனம்) உடையவனுக்கு ஆக்கம் -  ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து; உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு. ஆக்கமும் - செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம் செவ்வி - காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள். செவ்வியான் - நேர்மையுடையவன் கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்...

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

குறள் 751 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்  பொருளல்லது இல்லை பொருள் [பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. அல்லர் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) அல்லவரைப் -  இல்லாதவரை (மதிக்கத்தகாதவர்) பொருள்  -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. ஆக - ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல...