குறள் 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] பொருள் அமிழ்தினும் - அமிர்தம், தேவருணவு, லஷ்மி, முத்தி ஆற்ற - அதைவிட இனிதே - இனிதானது தம் மக்கள் - தன்னுடைய மக்கள் சிறு கை - சிறு கையினால் அளாவிய - கையால்அளைதல்; துழாவுதல் கலத்தல் சென்றுபொறுந்துதல்; கலந்துபேசுதல். கூழ் - மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை முழுப்பொருள் வாழ்வில் கடவுளை விட, முத்தியை விட, தேவர்கள் பருகும் அமுதத்தை விட இனிதான ஒன்று உள்ளது. அது தன்னுடைய குழந்தைகள் தங்களில் பிஞ்சு கைகளினால் துழாவி சமைத்த கூழ்/உணவு என்கிறார் திருவள்ளுவர். மேலும்: அஷோக் உரை ஒப்புமை ”இன்னடிசில் புக்களையும் தாமரைக்கப் பூநாறும் செய்யவாய் மக்களை” (நளவெண்பா) ”வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன்” (பெருமாள் 7:6) எழுத்தாளர் ஜெயமோகனில் தளத்தில் இருந்து ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என்ற பெரும்புகழ்பெற்ற வரி ஒரு நீதியோ கருத்தோ எண்ணமோ ஏதுமல்ல. ஓர் அனுபவத்...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.