Skip to main content

Posts

Showing posts from March, 2014

ஊதியம் என்பது ஒருவற்குப்

குறள் 797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் [பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்] பொருள் ஊதியம் - இலாபம்; கல்வி; பயன். என்பது - என்றென்பது ஒருவற்குப் - ஒரு மனிதனுக்கு பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். பேதையார் - அறிவில்லாதவர்கள் பேதையார் - பேதை - அறிவிலி. (பிங்.)பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத்.மந்திரப். 72) - a simpleton, an ignorant man, அறிவிலான், தரித்திரன் கேண்மை - கேள், நட்பு வினைதீயார் கேண்மை (நாலடி,172); கண்ணோட்டம்; உறவு.பழங்கேண்மை கண்டறியாதேன்போல் (கலித். 39, 39); வழக்கு. கிளைஞரி னெய்தாக்கேண்மையு முடைத்தே (நம்பியகப். 56). ஒரீஇ - ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு. இ - மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்ப...

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா

குறள் 1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல் சார்தல் -  சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல். அறஞ்சாரா - அறம் சாராமல் - அறத்தோடு பொருந்தாத நல்குரவு -நல்கூர் - வறுமை; வறுமையை ஒருவன் உடைவான் என்றால் ஈனுதல் -  கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல் ஈட்டுதல் -  கூட்டுதல்; சம்பாதித்தல் ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல். ஈன்றதா யானும் - தன்னை வயிற்றில் ஈன்ற தாயாக ஆனாலும் பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். போல - போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள். பிறன்போல - பிறர்களை / அன்னியர் / அயலார் / மற்றவர்கள் / உறவு அல்லாத முன் பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை போல நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்...

சலத்தால் பொருள்செய்தே

குறள் 660 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇயற்று. [பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை] பொருள் சலம் - அசைவு; நீர்; சீழ்நீர்; மூத்திரம்; நடுக்கம்; அசையும்அம்புக்குறி; இயங்குதிணை; சுழற்சி; தணியாக்கோபம்; கோபம்; பொய்ம்மை; வஞ்சனை; பட்சபாதம்; தீச்செயல்; மாறுபாடு; போட்டி; முள்ளம்பன்றியின்முள்இலாமிச்சை; பிடிவாதம். சலத்தால் - அறம் வழியில் அல்லாத வழியில் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. பொருள்செய்-தல் - poruḷ-cey-   v. id. +.tr. 1. To treat with regard, esteem highly;மதித்தல். நான் உன்னைப் பொருள் செய்யேன். 2.To comment on, explain; உரையிடுதல். Colloq.--intr. To acquire wealth; திரவியந் தேடுதல்.பொருள் செய்வார்க்கு மஃதிடம் (சீவக. 77). பொருள்செய்து - பொருள் உருவாக்கிய / செல்வம் ஈட்டிய ஏமார்-த்தல் - ēmār-   v...

நாணென்னும் நல்லாள்

குறள் 924 நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்  பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. [பொருட்பால், நட்பியல்,கள்ளுண்ணாமை] பொருள் நாண் -  பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்  நாணுதல் -  வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். என்னும் -  என்கிற குணத்தினை (உடைய); யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். நல்லாள் - குணத்திற் சிறந்த பெண், நற்குணமுடையவள்; தக்கவர். புறம் -  வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில் . கொடுத்தல் -  ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை. புறங்கொடுத்தல் - தோற்றோடுதல், புறங்காட்டுதல். கள் -...

கல்லா தவரும் நனிநல்லர்

குறள் 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் கல்லார் -   கல்வியறிவற்றவர், கீழ்மக்கள். கல்லா தவரும் - கல்வி கற்காதவர்கள். நனி - மிகுதியாய், naṉi   s. narrowness, நெருக்கம்; 2. adj. & adv. much, very greatly, intensely. நனி - நன்-மை, மிகுதியாய் (வந்து நனி வருந்தினைவாழியென் னெஞ்சே (அகநா. 19).), நெருக்கம், பெருமை நல்லர்   - நல்லவர் ஆவார்கள் கற்றார் -   கற்றவர்கள் ;சான்றோர் முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல். கற்றார்முன் - நன்கு கற்றவர்கள் முன்னே செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல் சொல்லாது  - பேசாமல் இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒர...

அளவளா வில்லாதான் வாழ்க்கை

குறள் 523 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று [பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்] பொருள் அளவளா - அளவளாவுதல் - கலந்துபேசுதல் இல்லாதான் - இல்லாதவன், வறியவன் வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர். குளம் - kuḷam   n. prob. கொள்-. cf. kūla. [T.kolanu, K. koḷa, M. kuḷam.] 1. Tank, pond,reservoir; தடாகம் (பிங்.) 2. Lake; ஏரி குளக்கீழ் விளைந்த . . . வெண்ணெல் (புறநா. 33, 5). 3.   அளவளாவல் - கலந்து பேசி மகிழ்தல்  குளவளாக் - குளப் பரப்பு  குலாவுதல் - நட்பாடுதல்; அளவளாவுதல்; உலாவுதல்; விளங்குதல்; மகிழ்தல்; நிலைபெருதல்; கொண்டாடுதல்; வளைதல்; வளைத்தல்; வயப்படுத்துதல். கோடு - வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வர...

பணியுமாம் என்றும் பெருமை

குறள் 978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. [பொருட்பால், குடியியல், பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம், எளிமை, பதுங்குகை என்றும் - எல்லா காலங்களிலும், என்றைக்கும், எந்நாளும், எப்போதும். பெருமை - மாட்சிமை, மிகுதி, வல்லமை, கீர்த்தி, அகந்தை, அருமை, புகழ், பருமை சிறுமை   - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. அணி -  வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு. அணிதல் - சூடல்; சாத்துதல் புனைதல் அழகாதல்; அலங்கரித்தல் உடுத்தல்; பூணுதல் பொருந்துதல் படைவகுத்தல்; சூழ்தல் அணியுமாம் - அலங்காரம் செய்த்துக்கொள்ளும் / பெருமை பேசிக்கொள்ளும்  தன்னை -  தலைவன்; தமையன்; தமக்கை; தாய். தன்னை - தன்னைப் பற்றி வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்;...