குறள் 660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇயற்று.
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]
பொருள்
சலம் - அசைவு; நீர்; சீழ்நீர்; மூத்திரம்; நடுக்கம்; அசையும்அம்புக்குறி; இயங்குதிணை; சுழற்சி; தணியாக்கோபம்; கோபம்; பொய்ம்மை; வஞ்சனை; பட்சபாதம்; தீச்செயல்; மாறுபாடு; போட்டி; முள்ளம்பன்றியின்முள்இலாமிச்சை; பிடிவாதம்.
சலத்தால் - அறம் வழியில் அல்லாத வழியில்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
பொருள்செய்-தல் - poruḷ-cey- v. id. +.tr. 1. To treat with regard, esteem highly;மதித்தல். நான் உன்னைப் பொருள் செய்யேன். 2.To comment on, explain; உரையிடுதல். Colloq.--intr. To acquire wealth; திரவியந் தேடுதல்.பொருள் செய்வார்க்கு மஃதிடம் (சீவக. 77).
பொருள்செய்து - பொருள் உருவாக்கிய / செல்வம் ஈட்டிய
ஏமார்-த்தல் - ēmār- v. tr. id. + ஆர்²-.To strengthen, establish firmly, make secure;பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல்(குறள், 660).
ஏமார்த்தல் - பலப்படுத்துதல்
ஏமார்-தல் - ēmār- v. intr. ஏமம் + ஆர்¹-To be confused, bewildered; மனங்கலங்குதல்.ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49).
பசு - pacu (with incremental `ம்' etc.) adj. from பசுமை, which see.
மண் - நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம் முதலியவற்றில் பூசும் மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.
பசுமண் - பச்சை மண்
பசுமண் கலம் உள் - பச்சை மண்ணினால் செய்த மண்பாண்டத்தில் உள்ளே
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை
பெய்தல் - pey- 1 v. [M. peyyuga.] intr.& tr. To rain, fall, as dew or hail; மேனின்றுபொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).--tr. 1. To pour down, pour into; வார்த்தல்.பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 2.To put, place, lay, put into, serve up, as foodin a dish; கலமுதலியவற்றில் இடுதல். உலைப்பெய்தடுவது போலுந் துயர் (நாலடி, 114). 3. To throwout, throw aside; எறிந்து போகடுதல். பார்த்துழிப்பெய்யிலென் (நாலடி, 26). 4. To insert, interpol-ate, as in a text; இடைச்செருகுதல். 5. To give,confer; கொடுத்தல். உயிர்க்கு . . . வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975, 7). 6. To make;to settle, appoint; அமைத்தல். பிரான் பெய்த காவுகண்டீர் . . . மூவுலகே (திவ். திருவாய். 6, 3, 5). 7.To spread; பரப்புதல். தருமணல் தாழப் பெய்து(கலித். 114). 8. To discharge; புகவிடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள் . . . . பெருங்கடலிடைப்பெய்து (கம்பரா. கும்ப. 248). 9. To write, draw;எழுதுதல். பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித்.143). 10. To put on, as harness; to
நீர் பெய்து - நீர் ஊற்றி
இர் - முன்னிலைப்பன்மை விகுதி; படர்க்கைப்பன்மை விகுதி; கேளிர் பெண்டிர்.
இயற்று - இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.
இரீஇயற்று - வைத்தது போல் ஆகும்.
முழுப்பொருள்
ஒருவர் அறவழியில் அல்லாது பொருள் ஈட்டி, பின்பு அதனை அனுபவிக்க அதனை சேர்த்து வைக்கிறேன் என்று பாதுகாத்து வைப்பர். தங்கள் சொத்து மதிப்பினை பலப்படுத்துகிறேன் என்று செய்வர். சொத்து சேர்பதில் மகிழ்ச்சியடைவர். ஆனால் அப்படி பொருள் ஈட்டி சேமிப்பது பசுமண்ணால் செய்த மண் பானையில் (பொதுவாக மண் பானையை சுடுவர். பின்பு மண் பாணை கனமாக இருக்கும். ஆனால் அதை பசு மண் என்று சொல்ல மாட்டார்) நீரை ஊற்றி சேமிப்பதற்கு ஈடாகும். ஏனெனில் பசுமண் பானையில் நீர் ஊற்றினால் மண் கரைந்து நீரும் ஒழுகிவிடும். இரண்டுமே நிலைக்காது. மகிழ்ச்சியும் நிலைக்காது பொருளும் நிலைக்காது.
சுட்டமண் கலயமே நீரை சேகரிக்கவல்லது என்பது சுட்டும் பொருளாக இருந்து, சுடுவது, நேர்மையான வழியிலே உழைப்பதையும், கடினப் பாதையை உணர்த்துவதையும் குறிப்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்
ஒப்புமை
”ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கேற் றாங்கு” (நற் 308:9-10)
“பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல” (குறுந். 29:2)
“எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்றுளி படநனைந் துருகி” (திருவிசைப்பா, கருவூர். திருவிடைமரு.7)
மேலும் - அஷோக்
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
சூதாலே அனைவரையும் ஏய்த்து ஏய்த்து
சொந்தங்கள் பந்தங்கள் தம்மை ஒய்த்து
தோதாக கொள்ளைகளால் பணத்தைச் சேர்த்து
துடிக்க வைத்து அனைவரையும் துவள வைத்து
மேதாவி போல் வாழ நினைப்பவரே
மேன்மையற்ற அறம் துறந்த அந்தச் செல்வம்
ஏதாகும் பச்சைமண் கலத்துள் விட்ட
ஏரியதன் நீராகும் இரண்டும் போகும்
குறட் கருத்து 2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஏய்ப்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து
எத்தனையோ கோடிகளைச சேர்த்து வைப்பார்
வாய்ப்பதெல்லாம் தமக்கென்று வளைத்திடுவார்
வகை வகையாய்ச சேர்த்திடுவார் உணர மாட்டார்
போய் அதனை மறைத்து வைத்தல் பச்சை மண்ணில்
பொதிந்து வைத்த பாத்திரத்தில் தண்ணீர் தன்னை
ஊற்றி வைத்தல் போலாகும் ஒழுகிப் போகும்
உதவாது உதவாது உணர்வீர் நீரே
பரிமேலழகர் உரை
சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று-பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும்.
விளக்கம்
[முன் ஆக்கம் பயப்பன்போல் தோன்றப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று. ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு. இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப்போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமாத்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார்; அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.]
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சலத்தான் பொருள் செய்து ஏமார்த்தல்-அமைச்சன் வஞ்சனையாற் பொருளீட்டி அதனால் அரசனுக்குப் பாதுகாப்புச் செய்தல்; பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - ஈரம் புலராத பச்சைமட் கலத்துள் நீரை வார்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்ததனோ டொக்கும்.
நீரோடு பசுமட்கலங் கெடுவது போல் வஞ்சனைப் பொருளோடு அரசன் கெடுவான் என்பதாம். ஆக்கஞ் செய்வது போல் முன் தோன்றிப் பின்பு அழிவைச் செய்வதால். 'சலத்தால்' என்றார். 'சலம்' வடசொல். ஏமாத்தல் என்பது ஏமாத்தல் என ரகரங்கெட்டு நின்றது. ஏமம்-பாதுகாப்பு. ஆர்தல்-பொருந்துதல், ஆர்த்தல்-பொருத்துதல். 'இரீஇ' இருத்தி யென்று பொருள் படும் சொல்லிசையளபெடை. இருத்துதல் நீண்டகாலம் இருக்கச் செய்தல்.
மணக்குடவர் உரை
வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்து
மு.வரதராசனார் உரை
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.
Thirukkural - Management - Ethical Behavior
Kural 660 contains an outstanding simile. Storing or hoarding — assuming hoarding is the right word — the wealth that someone has got through improper means or by cheating others or by fraudulent means is similar to storing water in an unburnt mud pot.
To stock ill-got wealth is to store
Water in unbumt clay.
Only a seasoned pot can retain water that is stored in that. It is everyone's knowledge that an unburnt mud pot cannot retain water that is stored in it. Water stored in unburnt mud pot is similar to the wealth earned through improper ways. Even though the wealth appears to be safe, that will disappear soon.
No comments:
Post a Comment