Skip to main content

Posts

Showing posts from December, 2013

உரனென்னும் தோட்டியான்

குறள் 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. [அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] (For English meaning scroll to the bottom of this post) பொருள் உரனென்னும் -> உரன் + என்னும். உரன் -> திண்மை ((மன உறுதி) - Vigor / Density / Strength / Determination),  பற்றுக்கோடு வெற்றி வலி ஊக்கம், உள்ளமிகுதி மார்பு அறிவு என்னும் -> என்கிற, யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். தோட்டி - ஆணை; காவல்; கதவு; மனைவாயில்; காண்க:தோணாமுகம்; கட்டழகு; செங்காந்தள்மலர்; நெல்லிமரம்; அங்குசம்; கொக்கி; வெட்டியான்; குப்பைமுதலியனவாருவோன், துப்புரவாளன். தோட்டியான் -> அங்குசத்தால் (அங்குசம் : யானையை அடக்க கூடிய கருவி) ->. கருவியாகிய.   (அடக்கும்) அங்குசம் ஓரைந்தும் -> ஓர் ஐந்தும்; மெய், வாய்,கண், மூக்கு, செவி என்ற யானைப் போன்ற ஐம்புலன்கள். காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch;...

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

குறள் 1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் தாம் -  அவர்கள்; மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். தாம்வீழ்வார் -> தாமாக காதலுக்கு வீழ்வர் (தானும் அவளை/அவரை காதலிப்பர்). தம் - ஒருசாரியை இடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. தம்வீழப் -> தமக்காக அவரும்/அவளும் வீழ்வர் (அவரும்/அவளும் காதலிப்பர்). பெறுதல் -  அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பெற்றவர்  -> அப்படி பட்ட மனைவியையோ / கணவனையோ பெற்றவர். பெற்றாரே  -> பெறுவர். காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை காமத்துக் -> காமம் + அத்து -> இன்பத்து எல்லைகளில் (( உள்ள / மெய் ) புணர்ச்சியை  குறிக்கும்). அத்து - attu   s. (Tel.) boundary, limit, எல்லை. அத்துமீறிச்செல்ல, to transgress the boundary. ...

மணிநீரும் மண்ணும் மலையும்

குறள் 742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். [பொருட்பால், அரணியல், அரண்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மணி -  கோமேதகம்; நீலம்; பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம்என்னும்ஒன்பதுவகைஇரத்தினங்கள்; நீலமணி; காண்க:சிந்தாமணி; பளிங்கு; கண்மணி; உருத்திராக்கம்; தாமரைமணிமுதலியன; தானியமணிநஞ்சுநீக்குங்கல்; சந்திரகாந்தக்கல்; மணிமாலை; அணிகலன்; உருண்டைவடிவமாயுள்ளபொருள்; மீன்வலையின்முடிச்சு; ஆட்டினதர்; வீடுபெற்றஆன்மா; அழகு; சூரியன்; ஒளி; நன்மை; சிறந்தது; கருமை; கண்டை; அறுபதுநிமிடமுள்ளநேரம்; ஒன்பது; ஆண்குறியின்நுனி; பெண்குறியின்ஓர்உள்ளுறுப்பு. நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. மணிநீரும் -> மணி போலும் நிறத்தினையுடைய நீரும்; அதாவது மணிபோல் தெளிந்த நீர். மணிநீர் - மணிபோலும்நிறத்தினையுடையநீர்; இரத்தினத்திலுள்ளநீர். மண் -  நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திரும...

அவர்நெஞ்சு அவர்க்காதல்

குறள் 1291 அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்] பொருள் அவர் -  அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல். நெஞ்சு -  மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு அவர்நெஞ்சு -> அவருடைய நெஞ்சு / மனம். அவருக்கு -  அவர்  -  அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல். ஆதல் - ஆவதுஎனப் பொருள் படும் இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் அவர்க்காதல்   -> அவருக்கு ஆதல் -> அவருக்கு உடம்படுதல் -> அவர் சொன்னப்படி கேட்கிறது. அதாவது நம்மை நினைக்காது. கண்டும்  - காணுதல் -  அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் கண்டும்   -> பார்த்தும். எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். நெஞ்சு -  மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு எவன்நெஞ்சே -> ஆனால் எதற்கு நெஞ்சே ? நீ -  ஒர்...

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிருந் தொழும்

குறள் 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். [அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல். கொல்லான் - பிற உயிர்களைக் கொல்லாதவன்; குறிப்பாக தானோ அல்லது பிறர் இறைச்சி உண்பதற்காக பிற உயிரை கொல்லாதவன். புலால் - ஊன்முதலியன; புலால்நாற்றம்; தசைநரம்பு புலாலை -> பிறர் விற்கும்  / கொடுக்கும் இறைச்சியை கூட. மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல். மறுத்தானைக் -> மறுத்தவன். புலாலை மறுத்தானைக்  -> பிறர் கொன்று விற்கிற புலாலைக் கூட மறுப்பவன் என்பதையும் உள்ளடக்குவதற்காக திருவள்ளுவர் கொல்லான் என்று நிறுத்தாமல் புலாலை மறுத்தானைக்  என்று சேர்கிறார். கூப்புதல் - கைகுவித்தல்; குவித்தல்; சுருக்குதல். கைகூப்பி - கைகூப்புதல் - கைகூப்பிவணங்குதல். எல்லாம் - முழுதும் எல்லா உயிருந் -> உலகில் வாழும் அனைத்து உயிர்க...

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

குறள் 1053 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து. [பொருட்பால், குடியியல், இரவு] பொருள் கரப்பிலா - கரைகள் இல்லாத; ஒளிவு மறைவு இல்லாத. கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி. நெஞ்சின் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு. அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறிவார் - அறிவுள்ளவர்கள் கடனறிவார் -> தேவையான் செயலுக்கு கடன் கொடுப்பது தன் கடமை என்று நினைப்பவர் (அறிபவர்); கடமையுணர்ச்சி. முன்நின்று -> முன்பு நின்று இரப்புமோ ரேஎர் -> இரப்பும் + ஓர் + ஏஎர். இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இரப்பும்   -> இரத்தல் - ஒரு பொருளை (உதவியை / கடன்) தாழ்மையுடன் கேட்பது. ஏஎர் -> அழகு. ஓர் +ஏஎர் + உடைத்து ->  ...