Skip to main content

Posts

Showing posts from July, 2016

இறைகாக்கும் வையகம் எல்லாம்

குறள் 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம். காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல். காக்கும் - பாதுகாக்கும், அரசாளும் வையகம் - மண்ணுலகம்; விலங்கு இழுக்கும் வண்டி; கூடாரவண்டி; சிவிகை; ஊர்தி; உரோகிணிநாள். எல்லாம் - அனைத்தும், முழுதும் அவனை - அந்த தலைவனை, அரசனை முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள் மாறி மாறி வேலை செய்யும் நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவு முறைப் பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ் ; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. முறை - ஊழ், நீதி காக்கும்  - பாதுகாக்கும், முட்டு - விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை; தடை ; தட்டுப்பாடு; சங்கடம்; குறைவு ; உட்சென்று கடத்தலருமை; ...

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க

குறள் 491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது [பொருட்பால், அரசியல், இடனறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தொடங்கு -  தொடங்கல் - n. தொடங்கு-.[Tu. toḍagelu.] 1. Beginning; ஆரம்பிக்கை 2.First creation; ஆதிசிருட்டி 3. Attempt; செய்யமுயலுகை. அற்க - எதிர்மறை ஏவலைக் குறிக்கும் ஒரு கடைநிலை. தொடங்கற்க -  செயலை தொடங்காதே / துவங்காதே வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக் குறிக்கும் குழூ உக்குறி. எவ் வினையும் -  எந்த ஒரு செயலையும் தொழிலையும் எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல். எள்ளற்க - செயலின் தன்மையையும் தெரியாமல் இகழலும் செய்யாதீர் முற்று - முழுமை; முழுமையானது; முதிர்ச்சி; முடிவு; வினைமுற்று; காண்க:முற்றுகை முற்றும் - முழுவதும் அறிந்து; இச்செயலை இப்படி செய்தால் இறுதியில் என்ன விளைவு வரும் அறிந்து இடம் - தானம்; வாய்ப்பு; வீடு; க...

ஆகாறு அளவிட்டி தாயினுங்

குறள் 478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை  போகாறு அகலாக் கடை [பொருட்பால், அரசியல், வலியறிதல்] பொருள் ஆகு - III. v. i. become, happen, take place, see ஆ, irr. verb. ஆறு - பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி, வழி, பாதை அளவு - வரையறை - s. Measure, degree, pro portion, quantity, magnitude, size, ca pacity, bound, limit, compass, number, standard, வரையறை இட்டிது - சிறிது; அண்மை. ஆயினும் - ஆனாலும் கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை போகு - நெடுமை; உயரம்; நீளம் போகுதல் - காண்க:போதல். ஆறு  - பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி, வழி, பாதை அகலம் - விரிவு; பரப்பு; இடம்; பூமி; மார்பு; விருத்தியுரை; வித்தாரகவி; பெருமை. கடை - s. a shop, market bazaar, அங் காடி; 2. place, இடம்; 3. way, வழி; 4. gate, வாயில்; 5. termination of a...

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

குறள் 138 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்  என்றும் இடும்பை தரும் [அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். நன்றிக்கு - நற்பயனுக்கு, அறத்திற்கு வித்து - மரஞ் செடி கொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம். வித்து ஆகும் - விதை யாகும் (நன்மை மரஞ் செடி கொடி போன்றதாகும். சில விதைகள் (உதாரணமாக மூங்கில்) முளைக்க பல நாட்கள்/வருடங்கள் ஆகும் ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம். நல் ஒழுக்கம் - நல்ல நன்னடத்தை தீ ஒழுக்கம் - தீய நடத்தை, தீய பண்புகள் என்றும் - என்றுமே, எக்காலத்திலும் இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம். இடும்பை தரும் - துன்பத்தை/ தீமை/ நோய்/ வறுமை/ அச்சம் தனையே தரும் முழுப்பொருள் ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல...

எவ்வ துறைவது உலகம்

குறள் 426 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு  அவ்வ துறைவ தறிவு [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] பொருள் எவ்வது - எவ்விதம், எவ்வாறு, adv. id. How? inwhat manner?  உறை - II. v. i. abide, live; தங்கு; 2. dwell or be in the natural element as fishes in water etc, இரு; 3. haunt, சஞ்சரி; உறைவது - இயங்குகிறதோ உலகம் -  இவ்வுலகம், இவ்வுலக மக்கள், நாம் சென்று வாழும் உலகம் உலகம் - உலகிலுள்ள உயர்ந்தோர் ஒழுக்கம்; உயர்ந்தோர்; உயர்குணம்; வானம், உலகு, உலகப்பொது, பூமி; நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு; மக்கள்தொகுதி;  உலகத்தொடு - அந்த உலகத்தோடு ஒன்று பட்டு அவ்வது - adv. id. In that way;அவ்வாறு  உறைவது - இயங்குவதே அறிவு - சிறந்த அறிவு முழுப்பொருள் இவ்வுலகத்தில் உயர்குணம் கொண்ட உயர்ந்தோர் ஒழுக்கத்துடன் எவ்வாறு இயங்குகிறார்களோ வாழ்கிறார்களோ அவ்வாறு அவ்வழியில் நம்மை ஒன்று பட்டு இயங்குவதே வாழ்வதே கற்ற அறிவுக்கு சிறப்பாகும். இதில் நான் அரசன் நான் தலைவன் எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் இல்லாமல் உயர்ந்தோர் வழி வாழ வேண்டும்.  அது மட்டும் இன்ற...

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை

குறள் 435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்  வைத்தூறு போலக் கெடும் [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வரும் முன்னர்க் - வருங்காலத்தில் / எதிர்க்காலத்தில் நிகழும் முன் (ஒரு செயலின் விளைவாகவோ அல்லது ஏதேர்ச்சையாகவோ) கா - பாதுகாப்பு, காப்பாற்ற,  காவாதான் - பாதுகாப்பாக இருத்தல் வாழ்க்கை  எரி - வால் நட்சத்திர வகை, நெருப்பு , அக்நி, நரகம் முன்னர் - முன்பாக வைத்தூறு - வைக்கோற் குவை, Straw-stack, வைக்கோற்போர், வைக்கோல் போல - போன்று கெடு - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; அழகின்மை. கெடும் - அழியும் முழுப்பொருள் வைக்கோலின் முன் நெருப்பு / தீ இருந்தால் அனலினாலோ, காற்றினாலோ தீ பற்றி வைக்கோல் எரிந்து விடும். இதற்கு வைக்கோலின் மேல் தீ வைக்க வேண்டும் என்றில்லை வைக்கோலின் அருகே தீ இருந்தால் கூட பற்றிக்கொள்ளும். வைக்கோலில் தீ மிக வேகமாக பரவிக்கொள்ளும். அருகே உள்ள மற்ற வைக்கோல்களுக்கும் பரவி விடும். கட்டுப்படுத்த முடியாது (அதற்கு நேரமே இருக்காது)...

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்

குறள் 415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே  ஒழுக்க முடையார்வாய்ச் சொல் [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் இழுக்கல் - வழுக்குகை; வழுக்குநிலம்; தளர்வு; தவறுதல் உடை - ஆடை; செல்வம்; உடைமை; குடைவேலமரம்:சூரியன்மனைவி. உழி - இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; அளவு.  3. A particle of place, a form of the seventh case, ஏழனுருபு. (p.) அவன்வந்துழி. Where he came- நான்நடப்புழி. Where I shall walk- மரபுழியுய்த்து. Conducting (him) with de corum- என்னுழிவா. Come to me. ஊற்றுக்கோல் - ஊன்றுகோல் அற்றே - அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். உடையார் - உடையவர்கள் வாய்ச் சொல் - சொல்லும் வாய்ச் சொல்லை கேட்பது (கற்றாலும் கல்லாத போதும்). இங்கே வாய்மையான சொற்கள், சிறப்பு; சிறப்புடையபொருள் முழுப்பொருள் வாழ்வில் நன்னடத்தை மூலம் உலகம் ஓம்பிய நெறியினை பின்பற்றி உயர்ச்சி அடைந்த மக்கள் பலர் (சிறு சதவிகிதம் எனிலும் கூட). அத்தகையவ...

உளரென்னும் மாத்திரையர் அல்லால்

குறள் 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்  களரனையர் கல்லா தவர் [பொருட்பால், அரசியல், கல்லாமை] பொருள் உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர். உளர்  என்னும் -  உடலோடு வாழ்கின்றோர்  மாத்திரை - அளவு, கணம், காலவிரைவு, எழுத்தினளவு, குளி கை (medicinal pill) மாத்திரையர் -  மாத்திரையார் - எதற்கு சமம் என்றால் அல்லால் - மற்றபட்டி, அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம் பயவாக் - பிறருக்கு பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத களர் - உவர்நிலம், களர்நிலம், உப்புமண்; பயிரிட உதவாத நிலம். அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons கல்லாதவர் - கல்வி கற்காதவர்கள் முழுப்பொருள் கல்வி கல்லாதோர் உயிர் உடமில் ஒட்டிக்கொண்டுள்ள ஒரு மிக சாதாரணமான/ கேவலமான உடம்பு என்கிறார் திருவள்ளுவர். இவர்கள் எதற்கு ஒப்பாவர்கள் என்றால் பயனே தராத விளைச்சலே தராத களர் நிலத்திற்கு. கல்வி இல்லாதவர்கள் மற்றவர் யாருக்கும் எவ்வித பயனையும் தர மாட்டார்கள். [அத்தகைய நிலம் இவ்வுலகத்திற்கு பாரம் போன்றே இந்த மனிதர்களும் உலகிற்கு பாரம்] . அதனையே திருவள்ளுவர் ...

தூங்காமை கல்வி துணிவுடைமை

குறள் 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்  நீங்கா நிலனான் பவர்க்கு [பொருட்பால், அரசியல், இறைமாட்சி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறைமாட்சி - அரசியல்; அரசனின் நற்குண நற்செயல்கள். தூங்காமை - செயலில் சோர்வில்லாமை; செயல்கள் ஆற்றுவதில் சோர்ந்து நில்லாது, காலம் தாழ்த்தாது, விரைந்து முடிக்கும் தன்மை கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, நூல் அறிவு, திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை துணிவு - n. துணி¹-. 1. Confidence,boldness, daring, bravery; ஆண்மை. தூங்காமைகல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383). 2.Strength of mind; மனத்திட்பம். செய்க துணிவாற்றி (குறள், 669). 3. Presumption, temerity,audacity; துணிச்சல். 4. Ascertainment, certainty; நிச்சயம். 5. Determination, decision;நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா.214, 3). 6. Conclusion; முடிவு. 7. Opinionfounded on facts, knowledge or evidence;கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18). 8.Belief, trust; நம்பிக்கை. (யாழ...

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

குறள் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பிறவி - பிறப்பு, சன்னத்துவம், புனர்சென்மம் (Transmigration, subjection of the soul to births) பிறவிக்கடல் - பிறவியாகிய சமுத்திரம் பிறவிப் பெருங் கடல் - பிறவியாகைய மிகப்பெரிய சமுத்திரம் நீந்துதல் - நீரில் மிதந்து செல்லுதல்; கடத்தல்; பெருகுதல்; வெல்லுதல்; கழித்தல். நீந்துவர் - (பிறவியில் / வாழ்வில்) வெல்லுவார் நீந்தார் - கடக்க மாட்டார்கள்  / வெல்ல மாட்டார்கள். கடக்க முடியாமல் மாண்டுவிடுவார்கள் இறைவன் - தலைவன்; கடவுள்; சிவன்; திருமால்; அரசன்; பிரமன்; குரு; மூத்தோன்; கணவன்; சிவனார்வேம்பு. அடி - கடவுள்; தலைவி; மூத்தோன்; பெரியோர்பெயருடன்வழங்கும்மொழி; முனிவர்; சுவாமி; குரு; பெருமாட்டி. சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துத...