குறள் 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். [பொருட்பால், அரசியல், கண்ணோட்டம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பெயக்கும் - நன்மை/தீமை பெயக்கும் என்று சொல்வோம். ஒரு செயலினால் நன்மையோ தீமையோ பலனாக உண்டாகும்/பெயக்கும் காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். பெயக்கண்டும் - பெயக்கும் + கண்டு - இச்செயலினால் வரும் பலன் என்னெவென்று அறிந்த பிறகும் நஞ்சு - விடம்; தீயது; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசைமுதலியன. உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் நஞ்சுண்டு - நஞ்சினை உண்டு. விஷம் உண்டு அமைவர் - அமைவு - 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை. (குறள்,956, உரை.) ஆறுதல். அவர்க் காணா தமைவில கண் (குறள், 1178). நிறைவு. ஆங்கமை வெய்தியக் கண்ணும் (குறள், 740) ; அமைதி; ஒப்பு; அமைவு; அமர்) நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.