Skip to main content

Posts

Showing posts from August, 2014

ஊழையும் உப்பக்கம் காண்பர்

குறள் 620 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] பொருள் ஊழ் - முதிர்தல். பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பனபோல்(சீவக. 1560). பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை. ஊழையும் -  தலைவிதியினையும் உப்பக்கம் - உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி(வள்ளுவமா. 21). 2. The back; பின்பக்கம், முதுகு. ஊழையுமுப்பக்கங் காண்பர் (குறள், 620). காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் காண்பர் - காண்பிப்பர் உலைவு - அழிவு; நடுக்கம்; வறுமை; கலக்கம்; தோல்வி; அலைவு; ஊக்கக்குறைவு இன்றி - இல்லாமல் உலைவின்றித் - உலைவு + இன்றி - நடுக்கமின்றி கலக்கமின்றி ஒருவித ஊக்கக்குறைவும் இன்றி தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல். தாழ்²-த்தல் - 11 v. Caus. of தாழ்¹-. tr.1. To bow down, let down; to deepen, depress;தாழச்செய்தல். நின்றலையை...

தம்மிற் பெரியார் தமரா

குறள் 444 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.  [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தம்மிற் - தம்மை விட ஞானத்திலும், அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் பெரியார் -  பெரியவர்கள், மேன்மக்கள், சான்றோர்கள்; மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர். தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி. தமரா - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். வன்மையுள் -  வன்மை  - வலிமை; கடினம்; வன்சொல்; ஆற்றல்; வலாற்காரம்; சொல்அழுத்தம்; கோபம்; கருத்து; வல்லெழுத்து. எல்லாம் - முழுதும் தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தல...

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்

குறள் 596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது  தள்ளினுந் தள்ளாமை நீர்த்து [பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை] பொருள் உள்ளுதல்  -  நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். உள்ளுவது - நாம் எண்ணுவது /சிந்திப்பது  எல்லாம் - முழுதும் உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி உள்ளல் - உள்ளான்குருவி; உள்ளான்மீன்; உள்ளுதல்; நினைத்தல், எண்ணுதல்; மகிழ்தல்; கருதல்; எண்ணியிரங்கல். உள்ளல் -  உள்ளுதல்   -  நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். உயர்வுள்ளல் - உயர்வான எண்ணங்களை மட்டுமே கொள்ளுதல்  மற்றது - மற்றவை, ஏனையது தள்ளு-தல் - taḷḷu-   5 v. [K. taḷḷu, M.taḷḷuka.] intr. 1. To be removed; விலகுதல் உறுநோய்கள் தள்ளிப்போக (தேவா.). 2. To belost; to fail; தவறுதல் கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை(குறள், 290). 3. To shrink, diminish; குன்றுதல் தள்ளா விளையுளும் (குறள், 731). 4. To be unconscious; to be forgetful; மறப்பாற் சோர்தல் தள...

பன்மாயக் கள்வன் பணிமொழி

குறள் 1258 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்  பெண்மை உடைக்கும் படை [காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] பொருள் பன் - பன்மை -  ஒன்றுக்குமேற்பட்டது; தொகுதி; ஒருதன்மையாய்இராமை:நேர்குறிப்பின்மை; பொதுமை; பார்த்தும்பாராமை. மாய - மாயம் -  மாயை; வஞ்சனை; பித்தளை; பாசாங்கு; அறியாமை; கனவு; பொய்; நிலையின்மை; வியப்பு; அழகு; தீமை; கயமைத்தன்மை; கறுப்பு; உயரம்; நீளம்; தொகை. கள்வன் - திருடன்; கரியவன்; நடுச்செல்வோன்; முசு; நண்டு; கற்கடகராசி; யானை. பணி - செயல்; தொழில்; தொண்டு; பணிகை; பரக்கை; பயன்தரும்வேலை; நுகர்பொருள்; அணிகலன்; மலர்களால்அலங்கரிக்கை; பட்டாடை; தோற்கருவி; வேலைப்பாடு; வகுப்பு; சொல்; கட்டளை; விதி; வில்வித்தைமுதலியவற்றைக்கற்பிக்குந்தொழில்; ஈகை; நாகம்; தாழ்ச்சி. மொழி - சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு. பணிமொழி - தாழ்ந்தசொல்; மென்மொழி; பெண்; கட்டளை. அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். அன்றோ - அதுவல்லவா  நம் - எல்லாம் என்னும் சொல் உயர் திணையாயின் அஃ...

எனைவகையான் தேறியக் கண்ணும்

குறள் 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். [ பொருட்பால்,  அரசியல், தெரிந்துவினையாடல்] பொருள் எனை -  என்ன; எவ்வளவு; எல்லாம். வகை -  கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். எனைவகையான் -  ஒரு செயலை செய்வதற்கு அனைத்து வகையிலும் ஆராய்ந்து தேர்-தல் -- tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, que...