Skip to main content

Posts

Showing posts from July, 2014

வானோக்கி வாழும் உலகெல்லாம்

குறள் 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல்நோக்கி வாழுங் குடி. [பொருட்பால் , அரசியல், செங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வான் -  வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி. நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல். வான் நோக்கி - வானம் பொழிகின்ற மழையை நம்பி, அதன் கொடைக்கு காத்து, அதனை எதிர் நோக்கி  வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழும் - வாழ்கின்ற உலகு -  உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று எல்லாம் -   முழுதும் உலகெல்லாம் - எல்லா உயிர்களைப் போல மன்னவன்  -  maṉṉavaṉ   n. மன்னு-. 1.See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன்(குறள், 388). 2. Indra; இந்திரன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும...

வேண்டற்க வென்றிடினும் சூதினை

குறள் 931 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்  தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. [பொருட்பால்,நட்பியல், சூது] பொருள்  வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டற்க - வேண்டாம்  வென்று  -  வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல். இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை. வென்றிடினும் - வென்றாலும்  சூதினை - சூது  - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி. வென்றதூஉம் -  வெல்லுதல்  - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல். தூண்டுதல் - செலுத்துதல்; ஏவுதல்; தள்ளுதல்; விளக்கைத்தூண்டுதல்; நினைப்பூட்டுதல்; செலுத்துதல்; அனுப்புதல்; கிளப்பிவிடுதல். பொன் - சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம...

இகலென்ப எல்லா உயிர்க்கும்

குறள் 851 இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்  பண்பின்மை பாரிக்கும் நோய். [பொருட்பால்,  நட்பியல், இகல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி. இகலாட்டம் , s. Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை . எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing. என்ப - என்பது இகல் என்ப - மனவேறு பாடு என்பது யாது என்று நூலோர் சொல்வார்கள் என்றால் எல்லா - எல்லாம் ; முழுதும்; யாவும்  உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் எல்லா உயிர்க்கும்  - எல்லா உயிர்கள் இடத்திலும் பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு. பகல் - பகு - பிறரோடு ...

அறன்கடை நின்றாருள் எல்லாம்

குறள் 142 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை  நின்றாரின் பேதையார் இல். [அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை] [அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின்  பிறனில் விழையாமை   வைக்கப்பட்டது.) பொருள் அறம் - அறம் - அறன்,  Moral or religious duty, virtue; the performance of good works according to the shasters--includ ing justice, hospitality, liberality, &c., also what is prescribed as the duty to be prac tised by each particular caste. Compare தருமம் அறன்கடை - பாவம். அறன்கடை - பாவம் செய்து வாழ்வோர் ; அறத்தை தன் வாழ்வில் முதலாக வைக்காது, இறுதியாகயாக வைத்தல் (அறமில்லாதிருத்தல்) நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி. நின்று -  எப்பொழுதும்; ...

பேதைமையுள் எல்லாம் பேதைமை

குறள் 832 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை  கையல்ல தன்கட் செயல். [பொருட்பால், நட்பியல், பேதைமை] பொருள் பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை பேதைமையுள் - பேதைமைகளில் எல்லாம் - எல்லாம் பேதைமை - பேதைமை; கொடியது காதன்மை - காதல், 1.Affection, attachment; அன்பு. காதன்மை கந்தா (குறள்.507); 2.Desire; ஆசை, 3.lust, passion, விரகம் கை - கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம் ; ஒழுங்கு ; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம். கையல்ல - கையல்லது - தகாதது செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு தன்கட்செயல் - தன்னுடைய நேரத்தை அதில் ஈடுப்படுத்தி செயல்படுதல் முழுப்பொருள் ஒருவனுக்கு அறியாமையுள் எல்லாம் அறியாமை என்னவென்றால் தன் நிலை...

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு

குறள் 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்  பகலும்பாற் பட்டன்று இருள். [பொருட்பால், குடியியல்,  பண்புடைமை ] பொருள் நகல் - சிரிக்கை (சிரிப்பு), மகிழ்ச்சி (தம்முட் குழீஇ நகலி னினிதாயின்(நாலடி, 137)), நட்பு (நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860)) ; பரிகாசம், ஏளனம்; படி;  வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர். வல்லர் - வலிமை; habit of feasting or fasting for days at a time நகல்வல்லர் - பல மக்களுடன்/மனிதர்களுடன் நட்புறவாடிக் கூடி மகிழும் பண்பு / தன்மை உடையவர் அல்லார்க்கு - அல் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))  மாயிரு  - ஏகமாயிரு-த்தல் -> ஒன்றாயிருத்தல்; மிகுதியாய்இருத்தல். ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை. பகலும் - பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்...

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்

குறள் 913 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று.  [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. பொருள் - பொருடனைப்போற்றிவாழ் பெண்டிர் - பெண்கள் பொருட்பெண்டிர் -  வேசியர், பொருள் தனை மட்டும் நேசிக்கும் பெண் பொய்ம்மை - பொய், மாயம், போலி முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம். இருட்டு - இருள்; அறியாமை அறையில் - அறை - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை இருட்டறையில் -  இருட்டு + அறைDark, unlit place ஏதில் -  foreignness, அன்னியம்; 2. vicinity, அயல்; ஏதிலார், stran...

வகைமாண்ட வாழ்க்கையும்

குறள் 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்  தகைமாண்ட தக்கார் செறின். [பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வகை - வலிமை, வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன, வணிகமுதல் ( the principal stock in trade, முதல்.); இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள், கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை மாண் -  Beinggreat, being worthy; மாட்சியாகை; மாண்டூகம்(One of the thirty-two Upanishads. See உபநிடதம்.), மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல் வாழ்க்கை -  வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர். வகைமாண்ட வாழ்க்கையும்   - வலிமையாக, வாழ்க்கைக்குரிய பொருள்களை (மற்றும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின) ஆடம்பரமாக (முதல் ரகத்தில்) வைத்துக்கொள்வதை வாழ்க்கையின் மாட்சியாக கருத்துதல் வான் - s. air, ether, sky, ஆகாயம்; 2. rain, மழை; 3. cloud, மேகம்; 4. adj. great...

அகலாது அணுகாது தீக்காய்வார்

குறள் 691 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அகலாது - இடைவிடாது. அல்லும் எல்லும் அகலாது ஆகளமாயமர்ந்து நின்று (பெரியபு. புராணசா.20). அகல்தல் - நீங்குதல்,  பிரிதல், கடத்தல் அணுகுதல் - கிட்டுதல், நெருங்குதல் அணுகாது - நெருங்காமல் தீக்காய்தல் - tī-k-kāy-   v. intr. id. +.To warm oneself at the fire; குளிர்காய்தல் அகலா தணுகாது தீக்காய்வார் போல்க (குறள், 691).   தீக்காய்வார் - குளிர்காய்தல்; நெருப்பில் குளிர் காய்வது போல்க - அவர்களைப் போல இருக்க வேண்டும் இகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி. இகலாட்டம் , s. Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை. எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing. வேந்தர் - வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; ...

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்

குறள் 631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்  அருவினையும் மாண்டது அமைச்சு. [பொருட்பால், அமைச்சியல், அமைச்சு] பொருள் கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள். கருவியும் - ஒரு செயலை செய்வதற்கு தேவையான கருவிகள், துணை கருவிகள் - அறிவு, திறன் காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். காலமும் - சரியான நேரத்தில் சரியான ஒரு செயலை ஆற்றும் திறன் செய்கை -  தொழில்; செயல்; மனஉடல்செய்கைகள்; வேலைப்பாடு; ஒழுக்கம்; உடன்படிக்கை; செயறகைப்பொருள்; காண்க:செய்கைச்சூத்திரம்; பில்லிசூனியம்; வேளாண்மை; அரசாங்கஅனுமதிபெற்றுப்புதிதாகப்பண்படுத்தியநிலம். செய்கையும் - ஒரு செயலை செய்யும் விதம்/வகை செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செய்யும் - தான் செய்கின்ற செயலின்  அரு - அருமை - அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற...

அறிவினான் ஆகுவ துண்டோ

குறள் 315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்  தந்நோய்போல் போற்றாக் கடை. [ அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை ] பொருள் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அறிவினான் - அறிவுடையவன்  அறிவினான் - ஒருவருடைய கற்றறிவு, நோற்றறிவு இவற்றால் ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் உண்டு  -  உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் ஆகுவ துண்டோ - ஆகக்குடிய (ஆக்குவது), பெறக்கூடிய பயனேதும் உண்டா? பிறிது -  வேறானது நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. பிறிதின்நோய் - மற்றவர்களின் (பிற உயிர்களை சேர்த்து) துன்பத்தினை தந்நோய் - தன்னுடைய நோய்  போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள் தந்நோய்போல் -  தனக்கே உற்றார் போல எண்ணி போற...