Skip to main content

Posts

Showing posts from June, 2020

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

குறள் 150 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று [அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]  பொருள் அறன் - அறம் -  வேள்விமுதல்வன்; அறக்கடவுள்.  அறம்  - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல். வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல். வரையான் - (அறத்தை) தனக்கு உரியதாக கொள்ளாமல்  அல்ல   - மற்ற / அறம் அல்லாதவற்றை / பாவத்தை  தீயதை  ; அறத்திற்கு புறம்பான பாவங்களைச் செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் பிறன் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். வரையாள் - உரிமையானவள்  பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை. நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்ட...

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

குறள் 149 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார் [அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை] பொருள் நலக்கு - நலக்கு-தல் - nalakku-   5 v. intr. prob. நலம்.To do good; நன்மைபயத்தல். உயிர்க்குயிராய்நலக்கு மிறை (திருவானைக். புராணவா. 41). உரியார் - உரி - உரி-மை கொண்டாடுபவர் யார் - யாவர் எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால் நாமநீர் - அச்சத்தைத் தரும் கடல்; விந்தைகள் பல நிறைந்த/சூழ்ந்த பெருங்கடல்  வைப்பில் - வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு. பிறற்கு - பிறர் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். உரியாள் - உரியவள்; உரிமையானவள்  தோள் - புயம்; கை; தொளை தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல். தோயாதார் - அணைக்காதர் ; முழுகாதார்  முழுப்பொருள் இல்லறத்தில் கணவன் மனைவி உறவென...

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

குறள் 147 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன் [அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை] பொருள் அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள்.  அறம் - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல். இயலான்  - இயலுதல் - கூடியதாதல்; நேர்தல் பொருந்துதல் தங்குதல் செய்யப்படுதல்; அசைதல் நடத்தல் உலாவுதல் உடன்படுதல் அணுகுதல் ஒத்தல் போட்டிபோடுதல்; சித்திரமுதலியனஎழுதுதல். இல்வாழ்க்கை - il-vāḻkkai   n. இல்¹ +.Domestic life; the order of domestic life; இல்லறத்தில் வாழ்க்கை (குறள், 5, அதி )  ; மனையாளோடு கூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை. இல்வாழ்வான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவன். il-vāḻvāṉ   n. id. +.Householder; இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).   என்பான் -  என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன். பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். இயலாள் - துணைவியை  பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்...

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

குறள் 140 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் [அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] பொருள் உலகத்தோடு - உலகம் -  உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் ஒட்ட - அடியோடு; கிட்ட; இறுக; அணுக; போல. ஒழுகல் - ஒ ழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல். ஒழுக்கம்  -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். பல - ஒன்றுக்குமேற்பட்டவை கற்றும் - கற்கை - படித்தல். கல்லார் - நெறிநூல்கள் கல்லாதவர் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இலாதார் - இல்லாதவர் அறிவிலாதார் - அறிவு இல்லாதவர்கள்  முழுப்பொருள் உலகம் என்றால் உயர்ந்தோர் என்று பொருள் கொள்ள வேண்டும்.  "உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்" என்று  திருமுருகாற்றுப்படையிலும் வருகிறது.   ஆதலால் உயர்ந்தோருடன் ஒட்டி அவர்கள்கடைப்பிடிக்கின்ற ஒழுக்கத்தை பின்பற்றி ஒருவர் வாழவேண்டும். அப்படி உயர்ந்தோருடன் ஒட்டி வாழாம...

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

குறள் 139 ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய  வழுக்கியும் வாயாற் சொலல் [அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] பொருள் ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். உடையவர்க்கு - உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள் உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395). ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல். ஒல்லாவே - பொருந்தாத ; உடன்படாத; தகாத;  தீய - தீமையான; போலியான. வழுக்கியும் - வழுக்குதல் - சறுக்குதல்; தவறுசெய்தல்; தப்புதல்; மறத்தல்; அசைதல்; ஒழிதல்; அடித்தல்; மோதுதல். வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்...

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

குறள் 137 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி [அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஒழுக்கத்தின் - ஒழுக்கம் -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். எய்துவர் - எய்து-தல் - eytu-   5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல்...

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

குறள் 130 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து [அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை] பொருள் கதம் - சினம்; பஞ்சம்; பாம்பு; அடைகை; சென்றது; ஓட்டம். காத்து - காத்தல் -  பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல். கற்று -  கற்கை - படித்தல் அடங்கல் - எல்லாம்முழுதும்; தங்குமிடம்; பயிர்செய்கைக்கணக்கு; செய்யத்தக்கது. அடங்கல் - அடக்கம் - மனமொழிமெய்கள்அடங்குகை; கீழ்ப்படிவு பணிவு அடங்கியபொருள்; மறைபொருள் கொள்முதல் பிணம்அடக்கம்செய்தல். ஆற்றுவான் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் செவ்வி - காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள். அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். பார்க்கும் - பார்த்தல்...

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

குறள் 129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு [அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை] பொருள் தீ -  ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை. தீயினால் - நெருப்பினால்  சுட்ட - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல். புண் - உடல்ஊறு; தசை; வடு; மனநோவு. உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. ஆறும் - ஆறுதல் - தணிதல்; சூடுதணிதல்; அமைதியாதல்; புண்காய்தல்; அடங்குதல் மனவமைதி. ஆறாதே - ஆறாது - தணியாது ; சூடுதணியாது ; அமைதியாகாது; அடங்காது; மனம் அமைதியடையாது  நாவினால் - நாக்கு - நாக்குஎன்னும்உறுப்பு; சொல்; நடு; துலைநா; மணியின்நாக்கு; தீயின்சுடர்; பூட்டின்தாள்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; அயல்; தானியக்கதிர்; படக...

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

குறள் 128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் [அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை] பொருள் ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. ஒன்றானும் - பேசியவற்றுள் ஒரு சொல்லே (நல்லவை பேசினாலும், அல்லவை பேசினாலும்) தீச்சொற் - தீச்சொல் - பழிச்சொல்  பொருட் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். உண்டாயின் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல் நன்று  - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. ஆகுதல் - ஆதல் ஆகாது - அல்ல ; நிகழாது; முடியாது; அமையாது;  ஆகிவிடும் -  ...