Skip to main content

Posts

Showing posts from January, 2018

035 துறவு

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - துறவு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்  அதனின் அதனின் இலன் குறள் 342 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்  ஈண்டுஇயற் பால பல குறள் 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு குறள் 344 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. குறள் 345 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை குறள் 346 யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் குறள் 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு குறள் 348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் குறள் 349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் குறள் 350 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்  பற்றுக பற்று விடற்கு பதிவு வரிசை

Kural 0343 - 💪 ஆசைகளை விட்டுவிடு வலிமை பெறு - Let go of desires, gain strength

Key Questions What must I give up to gain true power over myself? Socrates (via dialectic inquiry): Can a man be free if he is ruled by what he sees, hears, tastes, or touches? Aristotle (via ethics and virtue): Is not temperance a virtue, and does not the virtuous man restrain his appetites for the sake of reason and the good life? Immanuel Kant (via duty and reason): Should not the moral law within us demand mastery over the sensory inclinations that cloud our rational will? Werner Heisenberg (via uncertainty and inner clarity): If external knowledge is uncertain and the observer is never separate from the observed, must not clarity come from disciplining the inner senses first? Werner Heisenberg (via uncertainty and inner clarity):  Is not the act of perceiving shaped by what we desire to see — and thus, is self-mastery the foundation of true understanding? Laozi / Eastern Wisdom: Can you govern the world if you cannot govern yourself? Thiruvalluvar:  True strength is not ...

034 நிலையாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - நிலையாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை குறள் 332 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்  போக்கும் அதுவிளிந் தற்று குறள் 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் குறள் 334 நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் குறள் 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் குறள் 336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு குறள் 337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல குறள் 338 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு குறள் 339 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு குறள் 340 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு பதிவு வரிசை

நாளென ஒன்றுபோல் காட்டி

குறள் 334 நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் [அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு நாள் - nāḷ   n. 1. [T. nāḍu, M. nāḷ.] Dayof 24 hours; தினம் சாதலொருநா ளொருபொழுதைத் துன்பம் (நாலடி, 295). 2. [T. nāḍu, M. nāḷ.]Time; காலம் பண்டைநாள் (கம்பரா. நட்பு 43).3. Lifetime, life; ஆயுள் நாளோடு வாள்கொடுத்தநம்பன் றன்னை (தேவா. 219, 10). 4. Auspiciousday; நல்ல நாள் நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து(நாலடி, 86). 5. Early dawn; காலை நாண்மோர்மாறும் (பெரும்பாண். 160). 6. Forenoon; முற்பகல் நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை(நாலடி, 166). 7. Lunar asterism; நட்சத்திரம் திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286).8. Lunar day, period of the moon's passagethrough an asterism; திதி (W.) 9. Freshness,newness; புதுமை கோதையை நாணீராட்டி (சிலப்....

033 கொல்லாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - கொல்லாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் குறள் 322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை குறள் 323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று குறள் 324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி குறள் 325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை குறள் 326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று குறள் 327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை குறள் 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை குறள் 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து   குறள் 330 உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் பதிவு வரிசை

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

குறள் 324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி [அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை] பொருள் நல்லாறு -நல்வழி, நற்பயன்; nal-l-āṟuṭaiyāṉ   n. நல்¹ + ஆறு¹ + உடையான் A man of goodmorals, one whose conduct is unimpeachable,opp. to tī-y-āṟuṭaiyāṉ; நல்வழிசெல்வோன். (W.) எனப்படுவது - அறியப்படுவது, என்பது; என்பதின் பொருள் யாதெனின் யாது? - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால் யாது - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. ஒன்றும் -  சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing கொல்லாமை - kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை சூழும்   - அவதரித்து, தந்திரத்தால் சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல். நெறி -  வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ...

032 இன்னாசெய்யாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - இன்னாசெய்யாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா  செய்யாமை மாசற்றார் கோள் குறள் 312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் குறள் 313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும் குறள் 314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் குறள் 315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்  தந்நோய்போல் போற்றாக் கடை குறள் 316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் குறள் 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை குறள் 318 தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் குறள் 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் குறள் 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்  பதிவு வரிசை

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

குறள் 312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் [அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை] பொருள் கறு - மனவைரம், kaṟu   கறுவு, s. anger, malice, கோபம். வழக்கறுத்தல் - போக்கைத்தடுத்தல்; வழக்கைத்தீர்த்துவிடுதல். கறுத்தல் -> தடுத்தல்; தீர்த்துவிடுதல் கறுத்து - கோபித்து; கோபத்தால் இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு செய்த - செய்தாலும் அக்கண்ணும் -  அப்பொழுதிலும் மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல். மறுத்து - maṟuttu   adv. id. 1. In return;மீள. மறுத்தின்னா செய்யாமை (குறள், 312). 2.Again; மறுபடியும். மறுத்துக் கேள்வி கொள்ளவேண்டாதபடி (ஈடு, 1, 3, 3). 3. Moreover; மேலும்.மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு.சூழ்வி. 128). இன்னா - துன்பம் செய்யாமை - செய்யாது இருத்தல் மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்;...

031 வெகுளாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - வெகுளாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என் குறள் 302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற குறள் 303 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய  பிறத்தல் அதனான் வரும் குறள் 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற குறள் 305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் குறள் 306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்  ஏமப் புணையைச் சுடும் குறள் 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று குறள் 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று குறள் 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் குறள் 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை பதிவு வரிசை

சினத்தைப் பொருளென்று கொண்டவன்

குறள் 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று [அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை] பொருள் சினத்தைப் - சினம் -  கோபம்; நெருப்பு; போர்; வெம்மை. பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. என்று - eṉṟu   என்-. part. 1. That, usedas a relative part. when it ends a quotationand connects it with the following part of thesentence; என்றுசொல்லி. 2. In special orelliptical constructions, in which it is used as aconnective part. (a) between verbs, as in நரைவரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between anoun and a pronoun, as in பாரியென் றொருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: (d) between an imitative soundand a verb, as in ஒல்லென் றொலித்தது: (e) between an abstract noun and a verb, as in பச்ச...

பொய்மையும் வாய்மை யிடத்த

குறள் 292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின் [அறத்துப்பால், துறவறவியல், வாய்மை] பொருள் பொய்ம்மையும் - பொய்மை - poymai   s. Falsehood, falsity, பொய். 2. Unreality, illusion, மாயம். 3. That which is counterfeit, artificial, கரவடம். (p.) வாய்மை - vāymai   n. id. 1. Word;சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும்(தனிப்பா. i, 97, 19.) 2. Ever-truthful word;தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைகலொடு (கலித். 35). 3. Truth; உண்மை. வாய்மையெனப் படுவ தியாதெனின் (குறள், 291). 4.(Buddh.) Sublime truths, numbering four,viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam,tukka-nivāraṇa-mārkkam; துக்கம் துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் எனநால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188).5. Strength; வலி. (சூடா.) இடத்த - இடத்தல் - பிளவுபடுதல்; உரிதல் தோண்டுதல் பிளத்தல் பெயர்த்தல் குத்தியெடுத்தல்; உரித்தல் புரை - குற்றம்; உட்டுளைப்பொருள்; குரல்வளை; விளக்குமாடம்; உள்ளோடும்புண்; கண்ணோய்வகை; பொய...

030 வாய்மை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - வாய்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்  தீமை இலாத சொலல் குறள் 292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் குறள் 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்  தன்நெஞ்சே தன்னைச் சுடும் குறள் 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் குறள் 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு  தானஞ்செய் வரின் தலை குறள் 296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும் குறள் 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று குறள் 298 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் குறள் 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு குறள் 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற  பதிவு வரிசை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

குறள் 283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் [அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை] பொருள் களவினால் - களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி. ஆகிய - ஆக்கம் ; உருவாகிய ஆக்கம் - ākkam   n. ஆக்கு-. [M. ākkam.]1. See ஆக்கக்கிளவி செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல் (தொல். சொல் 20). 2. Creation;சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல் (சி.சி. 1, 37). 3. Increase, development; விருத்தி தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி. 301). 4. Gain,profit; இலாபம் ஆக்கங் கருதி முதலிழக்குஞ்செய்வினை (குறள், 463). 5. Accumulation; ஈட்டம் அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள்,755). 6. Wealth, prosperity, fortune; செல்வம் மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457). 7. Gold;  ākkam   n. ஆகு-. 1. Achievement, accomplishing; கைகூடுகை. (பு. வெ. 1, 4,உரை.) 2. Auspiciousness; மங்களகரம். Loc. அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி இறந்து - இறத்தல் - கடத...

029 கள்ளாமை

பால்  - அறத்துப்பால் இயல்  - துறவறவியல் அதிகாரம்  - கள்ளாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்  கள்ளாமை காக்கதன் நெஞ்சு குறள் 282 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்  கள்ளத்தால் கள்வேம் எனல் குறள் 283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் குறள் 284 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும் குறள் 285 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் குறள் 286 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர் குறள் 287 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல் குறள் 288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்  களவறிந்தார் நெஞ்சில் கரவு குறள் 289 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் குறள் 290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு பதிவு வரிசை