குறள் 266 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு [அறத்துப்பால், துறவறவியல், தவம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். தவஞ்செய்வார் - தவம் செய்வார்; பற்று அற்று வாழ்வோர்கள் கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில் வேத சம்பந்தமான சடங்கு; தொழில், இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி. தங்கருமஞ் - தம் கருமம் - தான் செய்ய வேண்டிய செயல்களை செய்வார் - செய்வார்கள் மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) மற் றல்லார் - மற்று அல்லார் - மற்றவர்கள் அவம் - வீண்; பயனின்மை; கேடு; ஆணை; அழைப்பு; வேள்வி; ஆகாயத்தாமரை ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.