பால் - அறத்துப்பால் இயல் - அரசியல் அதிகாரம் - இறைமாட்சி சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 381 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு குறள் 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு குறள் 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு குறள் 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு குறள் 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு குறள் 386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் குறள் 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு குறள் 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் குறள் 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு குறள் 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி பதிவு வரிசை
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.