Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இருள்நீங்கி இன்பம் பயக்கும்

குறள் 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
மாசறு காட்சி யவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்

நீங்கி - நீங்கல் - விலகுகை; பிளப்பு; புறம்பு.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு.

நீங்கி - - நீங்கல் - விலகுகை; பிளப்பு; புறம்பு.

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அறு - aṟu   II. v. i. break as a rope does be cut asunder; அறுக்கப்படு; 2. be decided, be ended, தீர்க்கப்படு., aṟu   IV. v. i. cease, end, தீரு; 2. vanish, become extinct, இல்லாமல் போ, aṟu   VI. v. t. cut off, part asunder, வெட்டு; 2. kill by cutting the throat; 3. reap, அரி; 4. root out; 5. distribute, பகிர், 6. tease, worry, வருத்து; v. i. become a widow.

அறுதல்- கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

அவர்க்கு - அவருக்கு

முழுப்பொருள்
இன்பம் பயக்கும் மெய்யறிவு, வீடுபேறு என்கிற காட்சியை வேண்டுபவர் தன்னுள் உள்ள இருள் (எனும் மயக்கம், அறியாமை, துன்பம், குற்றங்களை) நீக்கிக்கொள்ள வேண்டும், எதன் மேலும் மயக்கம் அல்லது வியப்பு கொண்டு இருந்தால் அதில் இருந்து நீங்க/விலக வேண்டும், தன்னுள் உள்ள எவ்வித ஒரு மாசு (அழுக்கு, தீமை, பாவம், குற்றம், இருள்) ஆகியவற்றை அறுத்தல் வேண்டும்.

(தன்னுள் உள்ள அறியாமை நீக்கி மயக்கத்தை நீக்கி மாசினை அறுத்தால்) அவ்வாறு செய்தால்  அவர் இன்பம் பயக்கும் மெய்யுணர்ச்சியை அடைவார்.

கீழ்காணும் கம்பனின் கார்காலப் படலப்  (105) பாடல், மெய்யுணர்வால் பொருள்கள் மீது பற்று நீங்கதலை பாடுகிறது.
தீவினை, நல்வினை, என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்தனைஅறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு அணுக, ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது -மாரிப் பேர் இருள்

பொருளாசையானது தீவினையை நல்வினை என எண்ணச் செய்யும். மெய் உணர்வால் பொருள் மீதுள்ள பற்றாகிய மாயை நீங்கும்.  அதுபோல முன்பனிப் பருவம் வந்தவுடன் மழைக்காலத்துச் செறிந்த இருள் நீங்கியது என்பது இவ்வுவமையின் கருத்து.

“மருளில் வண்குரு கூர்வண் சடகோபன்
தெருள்கொள்ளச் சொன்ன ஓரா யிரத்துள்” (திருவாய்.2.10:11)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மருள்நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும். (இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.

மு.வரதராசனார் உரை
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Darkness will give way to joy/happiness (that will lead to moksha), when delusion / deception / fantasy is replaced with a flawless (pure) vision. Many of us would have lots of impurities (impure thoughts), perform wrong actions, delusional thoughts. If one gets conscious of those and replaces them with a flawless vision, we can come out of the darkness and enjoy true happiness.

Questions that I ask to the kid
What to do to move out of darkness? 
Delusion vs flawless vision. Which one will you choose? Why?


No comments:

Post a Comment