Search This Blog

Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தூங்குக தூங்கிச் செயற்பால

குறள் 672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள்
தூங்குதல் அசைதல்; தொங்குதல்; ஊசல்முதலியவற்றில்ஆடுதல்; சோம்பலாயிருத்தல்; வாடுதல்; சாதல்; இடையறாதுவிழுதல்; ஒலித்தல்; நிலையாகத்தங்குதல்; மெத்தெனநடத்தல்; செறிதல்; கூத்தாடுதல்; துயிலுதல்; தாமதித்தல்; அழுந்துதல்; மிகுதல்

தூங்குக - தொங்குதல், மந்தமாதல், தாமதி

செயற்பால - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

தூங்கிச் செயற்பால - தாமதமாக செய்யக்கூடிய செயல்களை

தூங்கற்க - மந்தமாக செய்யாதே

தூங்காது - விரைவாக செய்ய வேண்டிய

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

செய்யும் வினை - செயலை

முழுப்பொருள்
ஒருவற்கு  பல செயல்கள் வரும். அனைத்து செயல்களும் ஒன்றாக இருக்காது. ஒவ்வொன்றுக்கும் முன்னுரிமை வேறுபடும். சில செயல்களை உடனே முடித்தாக வேண்டும், சில செயல்களை நிதானமாக செய்யலாம். 

ஆதலால் விரைவாக முடித்தாக வேண்டிய செயல்களை சற்றும் தாமதிக்காமல் செய்ய வேண்டும். நிதானமாக செய்ய வேண்டிய செயல்களை நிதானமாக செய்யலாம்/செய்ய வேண்டும். 

விரைந்து முடிக்க வேண்டிய செயல்கள் இருக்கும் பொழுது நிதானமாக செய்ய வேண்டிய செயல்களை கண்டிப்பாக செய்யக்கூடாது ஏனெனில் அது தீமை உண்டாக்கும்.  

உதாரணமாக: 
1) நீதிமன்றங்களில் அவசர வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் அவசமில்லாத வழக்குகள் அதனை விட நிதானமாக தான் எடுத்துக்கொள்ளப்படும்.

2) அலுவகத்தில் முக்கியமான் வேலை இருக்கும் பொழுது இண்டர்னெட்டில் நண்பருடன் ஃபேஸ்புக்-இல் உரையாடுவது பிழையாகும். அலுவலுக வேலை முதன்மையான் ஒன்று. அதனை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். ஃபேஸ்புக் அப்படி ஒன்றும் முக்கியமானது அல்ல. அதனை எப்போது வேண்டும் மறுபடியும் வந்து பார்த்துக்கொள்ளலாம். 

இதனை தான் Time-Management என்று சொல்லுவார்கள்.
கீழ்காணும் படங்கள் ஒரு பயிற்சியரங்கில் நான் பெற்றவை/கற்றவை.












மேலும்: அஷோக்

ஒப்புமை
”மற்றிக்காலத் தல்லது மேற்சென்று
வெற்றிக் காலத்து வீட்டுதல் அரிதென” (பெருங் 4.8:53-4)

பரிமேலழகர் உரை
தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக.

விளக்கம் 
[இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவதை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார் (குறள் 383); ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.]

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தூங்கிச் செயல் பால தூங்குக-மெள்ளச் செய்ய வேண்டிய வினைகளை மெள்ளச் செய்க; தூங்காது செய்யும் வினைதூங்கற்க-விரைந்து செய்ய வேண்டிய வினைகளை விரைந்து செய்க.

மெள்ளச் செய்தல் காலந்தாழ்த்துச் செய்தலும் காலம் நீடச் செய்தலும் என இருவகை. இவற்றுள் முன்னது வினை தொடங்கலையும் பின்னது வினைசெயல் முழுவதையும் பற்றியனவாம். மெள்ளச் செய்ய வேண்டியதை விரைந்தும் விரைந்து செய்ய வேண்டியதை மெள்ளவும் செய்யின், அவற்றால் தீமையே விளையும் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

மு.வரதராசனார் உரை
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.

நன்றி: ஜெயமோகன்
தூங்கிக்கொண்டேசெய்ய வேண்டிய அலுவலக வேலையை அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால் வீட்டில் அதேபோல வேலைசெய்தால் வினையாக முடியும் என்பது இக்குறளின் சாரம்.


Thirukkural - Management - Decision Making
Any outcome of a person's action depends on the timing of execution. There are always right times and wrong times. These are not similar to so called good times and bad times. Certain decisions or actions demand us to delay. If delaying an execution is a necessity, it is wise to delay the execution of the decision taken, advises Kural 672.

Delay where delay is needed, but do not delay
When you must act.

On the contrary, certain decisions or actions demand us to execute immediately. When there is a need to execute an important  decision, delaying becomes costlier. It is similar to the act of sleeping when you need to and not sleeping when you do not need to. Both not sleeping when you are drowsy and trying to sleep when you are not sleepy result in loss of energy. It is wrong to delay carrying out an action when delay is not needed and it is also wrong to carry out an action when execution is not needed. Deciding when to delay and when to deliver is the art of decision-making.

No comments:

Post a Comment