Skip to main content

ஒற்றும் உரைசான்ற நூலும்

குறள் 581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்
[பொருட்பால், அரசியல்,ஒற்றாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒற்றும் - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்

உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை

சான்ற - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்.

நீதிநூல் - அறம்பொருள்களைப் பற்றிக்கூறும் நூல்; சட்டக்கலை

நூலும் - நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.

இவை - அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டு தற்குரியசொல்.

இரண்டும் - இரண்டு

தெற்று - பின்னல்; வேலிஅடைப்பு; செறிவு; இடறுகை; மாறுபாடு; தவறு; தேற்றம்.
என்க -  என்கை - என்றுசொல்லுகை.

மன்னவன் - மன்னன்; இந்திரன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

ஒற்று- வேவு,உளவு 
உரை சான்ற - புகழ் கொன்ற 
இவையிரண்டும்  - இந்த இரு விஷயங்களும் 
தெற்றென்க மன்னவன் கண்- அரசனின் கண் போன்றது 

முழுப்பொருள்
ஒற்றும் அதாவது தன்னையும் தன நாட்டையும் நோக்கி வரும் ஆபத்துக்களை ஒற்றறிந்து, உளவு மூலமாக முன் கூற்றி தெரிந்து, அதற்கு தயார் நிலையில் இருப்பது, நாட்டை ஆழும் மன்னனுக்கு இன்றி அமையாதது ஆகும். நாட்டையும் நாடு மக்களையும் எவ்வாறு ஆள வேண்டும் என நல வழி படுத்தும் அற நூல்களும் அதற்கு இணையான முக்கியம் பெரும்.

இவை இரண்டுமே ஒரு மன்னனுக்கு கண்களை போன்று மிக இன்றி அமையாதது எனக் கூறுகிறார் வள்ளுவர் .

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இராணுவங்களிலும் உளவுத் துறை என்று ஒன்று தனியாக இருக்கும்.இது சரியாக செயல் படாமல் போனால் நாம் ஆபத்துகளை சரி வர கணிக்க இயலாது .

ஒப்புமை
”கடனறி காரியக் கண்ணவ ரோடு” (பரி.19:22)
“மண்ணியன் மன்னர்க்குக் கண்ணென வகுத்த
நீதி நன்னூல்” (பெருங்.4.10:13-4)
“காதிவேல் மன்னர் தங்கள் கண்ணென வைக்கப்பட்ட
நீதிமேற் சேரல் தேற்றாய்” (சீவக.233)

ஒற்றர்களும், தெளிந்த நூலறிவும் மன்னவனின் பார்வையைத் தெளிவாக்குகின்றன. நூலறிவு கண்போல் விளங்குகிறது என்றால், ஒற்றர்கள் தொலை நோக்கியாகவும் நுண்ணோக்கியாகவும் விளங்குகிறார்கள்.

இந்த ஒற்றர்களை நியமிப்பது குறித்து, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் விரிவான செய்திகளைச் சொல்கிறது.

காபாடிகன், உதாதித்தன், கிருகபதிகன், வைதேகன், தாபதன் என்று ஒற்றர்களை பலவகையினராகப் பிரித்துக் கூறுகிறது.

ஆசிரியர்த் தொழில் செய்து கொண்டு ஒற்று வேலையிலும் ஈடுபடுபவன் காபாடிகன். பிறர் உள்ளத்தை எளிதாக அறிந்து கொள்ளும் சக்திவாய்ந்தவன்.
உதாதித்தன் துறவு வேடத்தில் வாழ்பவன். துறவு வாழ்க்கையில் தோற்றுப் போனவன். ஆசிரமங்களை அமைத்துக் கொண்டும், பல சீடர்களை வைத்துக் கொண்டும் வாழ்பவன். சமண, பௌத்த வேடங்களிலும் உதாதித்தர்கள் இருப்பதுண்டு.

கிருபாதிகன் என்பவன் அறிவும், தூய்மையும் உடையவன். விவசாயத் தொழிலில் நஷ்டத்துக்கு உள்ளாகி, அரசருக்கு ஒற்று வேலை செய்து, வசதியை அடைந்தவன்.

வைதேகன் என்பவன், வணிகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒற்றன்.

தாபதன் என்பவன் அற்புதம் செய்யும் சாமியாராக வெளியே தோற்றம் தருபவன். சித்தர் என்று விளம்பரம் செய்து கொண்டவன். இவனுடைய மகிமையைக் கேள்விப்பட்டு, மக்கள் இவரிடத்தில் வந்து வழிபாடு செய்வார்கள். இவனோ தன்னை அண்டிவருகின்றவரை ஒற்று அறிந்து கொண்டிருப்பான்.

இவர்கள் அனைவரும் அரண்மனை வாழ்க்கையுடன் சம்பந்தப்படாதவர்கள் மாதிரி தோற்றம் அளிப்பார்கள். எவரும் சந்தேகப்பட முடியாது இவர்கள் ஒற்றர்கள்தாம் என்று.

இவர்களைத் தவிர, சத்திரிகள் என்னும் ஒருவகை ஒற்றர்களைப் பற்றியும் அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

ஆண்கள், பெண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கற்றவர்கள், சோதிடம், கைரேகை நிபுணத்துவம், பெற்றவர்கள். வசியம், இந்திரஜாலம், மறைதல், சகுணநூல், அறநூல், காமநூல் கற்றவர்கள் என்று இவர்களைப் பற்றி அந்நூல் கூறுகிறது.

ஒற்றர்கள் பல்வேறு வேடங்களில் அலைகிறவர்கள். அரண்மனைக்கு உள்ளும் அரண்மனைக்கு வெளியிலும் பிறநாட்டிலும் கூட வேவு பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.

இன்று அத்துறை நவீனமாகவும், வளர்ச்சி பெற்றும் இருக்கிறது. ஒவ்வொரு நாடும் உளவுத்துறை வைத்திருக்கிறது. விண்கோள்களும் வேவு பார்க்கின்றன. இது ஆட்சி செய்பவர்களுக்கு மிகவும் அவசியமும் கூட.


பரிமேலழகர் உரை
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.
(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

சாலமன் பாப்பையா உரை
ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

English Meaning - As I taught a kid - Rajesh
1) Espionage setup, 2) reputed books for knowledge with clarity that details what are the duties one king has to perform and about the administrates welfare of the country and people are like two eyes for a king. One eye (books) acts as a (internal) light what is to be done and one eye (espionage) acts as (external) light for what is going on around the king and the people. 

Questions that I ask to the kid
What are the two eyes of a king? why?



Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...